Search This Blog

7.11.09

ஜாதி வெறித்தனத்துக்கு சமாதி கட்டுவோம்!



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறீபிரியா, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பத்ரகாளி ஆகியோர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர் என்றும், ஜாதி வெறிபிடித்த சிறீபிரியாவின் தந்தை மகளைக் கொன்றதாகவும் வெளிவந்த ஒரு செய்தி திடுக்கிடக் கூடியது. குருதியை உறைய வைக்கும் கொடூரமானதாகும்.

ஜாதி ஒழிப்புக்காகவே தம் உயிரைப் பணயம் வைத்துப் பாடுபட்டவர் தந்தை பெரியார்; அவர்தம் மறைவுக்குப் பிறகு ஜாதி ஒழிப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பது திராவிடர் கழகம்! இதுபோன்ற செய்திகளை அறியும்போது குமுறும் நெஞ்சத்துடன் பிரச்சினையைப் பார்க்கிறது.

என்னதான் திராவிடர் கழகம் ஜாதியை ஒழிப்பதாகக் கூறினாலும், ஜாதியை ஒழிக்க முடியாது என்று ஏளனம் பேசுவோர்கள் உண்டு.

இதுபோன்ற நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழும்போது இதுபோன்ற சக்திகள் இவ்வாறு விமர்சிப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இத்தகைய விமர்சனங்கள் ஜாதி ஒழிக்கப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முகிழ்த்தவையாக இருந்தால், அதனை வரவேற்கக்கூடச் செய்யலாம்; ஆனால், ஜாதி ஒழிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலே ஆசையோடு இருக்கக் கூடியவர்களின் வெளிப்பாடுதான் அது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இலைகளையும், கிளைகளையும் கழிக்கும் ஒரு விகடத்தனமான வேலையில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைக்கூட ஒழுங்காகச் செய்வதும் கிடையாது.
இந்தியாவில் நிலவிவரும் ஜாதி அமைப்பை ஒழித்துக் கட்ட கடுமையான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற சுவீடன் நாட்டு அறிஞர் குன்னார் மிர்தால் மிக அழுத்தமாகவே கூறினார். (ஆசியன் டிராமா எனும் நூல்)

தந்தை பெரியார் அவர்கள் இந்த மிர்தால்கள் சொல்லுவதற்கு வெகுநீண்ட காலத்திற்கு முன்பே காரணா காரியத்துடன் இதனைக் கூறியிருக்கிறார். அந்த வகையில் சொல்லப்போனால், தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கு குன்னார் மிர்தால் மூலம் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்றே கூறவேண்டும்.
நாம் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஜாதி ஒழிப்புச் சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டுவரும் நிலையில், அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாட்டில் நடத்தப்படும் தேர்தல்கள் மீண்டும் ஜாதிக்குப் புத்துயிரூட்டி விடுகின்றனவே என்று வேதனையுடன் தந்தை பெரியார் குறிப்பிடுவது உண்டு.

ஜாதி ஒழிப்பு என்பது மிக நீண்டகால நோய்க்கான ஒரு அறுவை மருத்துவம்; அந்தப் பணியை மேற்கொண்ட புத்தமார்க்கம் இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது. சித்தர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் கூறியிருந்தாலும், மக்கள் மத்தியில் அவர்கள் நடமாட முடியவில்லை; ‘கந்த மூலாதிகளை’த் தின்று காடுகளில் அலைந்து திரிந்தனர்.

தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கம்தான் மக்கள் மத்தியிலே தீவிரப் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின்மூலம் ஜாதி ஒழிப்புக்கான புதிய சிந்தனைகளை மிகுந்த தீவிர உணர்ச்சியுடன் பரப்பி ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தது. ஜாதி மறுப்புத் திருமணங்கள் பரவலாக நடக்க ஆரம்பித்தன.

சமுதாய இயக்கம் இந்த அடிப்படைப் பணிகளைச் செய்யும்போது, சமதர்மம் பேசும் அரசியல் அமைப்புகளும், ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஆளும் சக்திகளும் இதற்குத் துணை புரிந்தால் ஓர் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்.
இன்னும் பூணூலைப் புதுப்பிக்கும் ஆவணி அவிட்டங்களும், ஜாதியை ஏதோ ஒரு வகையில் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அமைப்புகள், ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டால், ஜாதியை ஒழிப்பது எக்காலம் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

ஜாதி அடிப்படையில் குற்றம் செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அப்படி தண்டிக்கப்படுபவர்கள் குறித்து மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம் மற்றவர்கள் மத்தியில் ஜாதி என்ற அமைப்பின்மீது ஒரு அருவருப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதில் சமூகம், அரசியல், நிருவாகம் இவற்றோடு நீதிமன்றங்களின் பங்களிப்பும்கூட முக்கியமானதே!

உடுமலைப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட இந்த அவலம் குறித்து அந்தப் பகுதியில் ஒரு பிரச்சார ஏற்பாட்டைக் கழகம் செய்யும்; பொதுமக்களும் ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

--------------------"விடுதலை" தலையங்கம் 7-11-2009

1 comments:

passerby said...

ம்ம்.....நேக்கு நம்பிக்கையில்ல..!

நும்மோட பேச்சே நம்பும்படியில்லேண்ணா..

நீங்க எழுதினதை சித்த படிக்கிறேளா..

//இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இலைகளையும், கிளைகளையும் கழிக்கும் ஒரு விகடத்தனமான வேலையில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைக்கூட ஒழுங்காகச் செய்வதும் கிடையாது.//

அபத்தமா இருக்கு. உங்க வாயிலேயிருந்த வர்ரனாலே...சித்த யோஜனை பண்ணூங்கோ...நீங்கதானே ரிஜர்வேஜன் ஓபிசிக்கு கொடு..கொடுன்னு சண்டைபோரேள். சர்க்காரும் உஙக்ளுக்கு பயந்த்துதானே கொடுக்கிறா...நீங்கள் அப்படி கொடுக்காதேடா அபிஸ்டுன்னு...ஜாதி வளரும்டான்னு சொன்னேளா? இல்லையே...இப்போ மட்டும் என்ன் இப்படி?

மக்களை செயிலே புடிச்சுப்போட்டுட்டாள் போய்விடும்கிறேள். இதெல்லாம் மனசு சமபந்தப்பட்ட் விசய்ம் சுவாமி. செயிலுக்குப்போனால் பய்ந்து ப்ள்ளி, பறையை நேராத் திட்டமாட்டாங்க..வேற வழி தேடுவாங்க..

நாங்க இல்லையா...பள்ளி, பறைகிட்ட நேரா போய், ‘டே...ஒத்திப்போடான்னு சொல்லமாட்டோம்..போலிசு உதைப்பால்லியோ! அதனாலே..நாங்க பெருமாளேன்னு தனியா இருந்துபோம்..

இதேபோல் ம்த்தவாளும் செய்வா...! வீட்டுப்பக்கம் வந்தா ஊத்தக்காரா போனப்ப வீட்டைக்கழுவி விட்டுடுவோம். என்ன் செய்வேள். செய்ல்லே போட்டுடுவேளா? ஏன் வீட்டை நான் கழுவுறேன். அதைக்கேட்க் நீர் யாரு? எங்களை மாதிரி மத்தவாளும் சொல்லுவா? என்ன செய்வேள்?

பள்ளி, பறைக்கு எல்லா கத்துக்கொடுத்து எங்கவா மாதிரி மாத்திட்டு எல்லாரும் சமம்னு சொல்லுங்கோ! என்னத்தையோ தின்னுப்புட்டு எங்கேயோ படுத்து தூங்க்றவாளும் நாங்களும் ஒன்னா?

முதல்லே அவாள மாத்துங்கோண்ணா...அப்புற்ம் ஜாதி ஓடிப்போய்விடும்.

புதுசா வேற வழி சொல்லுங்கோ..உங்க மண்டேல எவ்வளுவு மசாலா இருக்குன்னு பாத்துப்போம்.

பாப்பாங்களை நீங்க ஒன்னும் செய்யமுடியாது. அவாள் மனசை நீங்க ஒன்னும் செய்ய முடியாது. அதே போல மததவாள் மன்சையும் ஒன்னும் செய்ய முடியாது.

ந்ன்னா யோஜனை பண்ணி ஒரு வழி சொல்லுங்கோ...பாத்தூபுடுறேன் மத்தொரு பின்னூட்டத்தில!