Search This Blog

15.11.09

சிதம்பரம் கோயில் தீட்சதப் பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை எப்படிப்பட்டது?


‘சிதம்பர ரகசியம்’

சிதம்பர ரகசியம் என்பதற்கு வெவ்வேறு பொருள்கள் இருந்து விட்டுப் போகட்டும்; ஒரு இரகசியம் இப்பொழுது வெளி உலகத்திற்குத் தெரிந்து விட்டது.

அதுதான் சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதப் பார்ப்பனர்கள் அடித்து வந்த கொள்ளை எப்படிப்பட்டது என்பது.

கோயில் வருமானம் போதுமானதல்ல; உண்டியல் வசூல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றெல்லாம் அவர்கள் புலம்பினார்களே நினைவிருக்கிறதா?

நீதிமன்றத்திலேயே என்ன கூறினார்கள்? கோயில் ஆண்டு வருமானமே ரூ.37,199 மட்டுமே என்றனர் (‘பாட்டா’ செருப்பு விலை போல இருக்கிறதல்லவா!)

மலை விழுங்கி மகாதேவன்களாயிற்றே! பொய் பேசுவதுபற்றிக் கொஞ்சம்கூட வெட்கப்படாதவர்கள் ஆயிற்றே!

அக்கோயில் இந்து அறநிலையத் துறையின் நேரடிப் பார்வையின் கீழ் வந்ததற்குப் பிறகு அறநிலையத் துறையின் சார்பில் முதன் முதலாக இவ்வாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி உண்டியல் வைக்கப்பட்டது.

இதுவரை நான்கு முறை உண்டில் பணம் எண்ணப்பட்டது. எண்ணியவர்கள் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி ஊழியர்கள். இந்த ஒன்பது மாதங்களில் மட்டும் உண்டியல் வருமானம் என்ன தெரியுமா? ரூ.8,51,996 ஆகும்.

ஆனால் தீட்சதர்கள் ஆண்டு ஒன்றுக்கு வருமானம் என்று சொன்ன தொகை எவ்வளவு? வெறும் ரூ.37,199.

தீட்சதர்களின் நாணயமற்ற தன்மைக்கும், பித்தலாட்டத்திற்கும் வேறு என்ன எடுத்துக்காட்டு தேவை?

எத்தனை நூறு ஆண்டு காலமாக இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது? அதற்கெல்லாம் யார் பொறுப்பு? இதன்மீது, தீட்சதப் பார்ப்பனர்கள்மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாமா?

இவ்வளவுக்கும் இவர்கள் யாராம்? கைலாயத்திலிருந்து சாட்சாத் நடராஜ பெருமானே இவர்களை சிதம்பரத்திற்கு அழைத்து வந்தாராம்!

இதில் “கடவுள் நடராசனின்” பித்தலாட்டக் கூட்டணியும் சேர்ந்து கொண்டது போலும்!

--------------- மயிலாடன் அவர்கள் 15-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

2 comments:

shankar said...

Please stop posting this false news against Brahmins?? What do you know about Indian History??? Did Brahmins hold high post before Independence?? Learn about tamilnadu history and publish this blog. In earlier days Brahmins had proffession of poojari in temples and there is no instance of brahmin being a landlord. Only the Naickers, Pillaimars, Nadars had owned the post of Naatamai etc in villages. They only enforced some laws against some caste people. Now without knowing the history you are propagating false news against brahmins?? I dont know why the useless DK had turned against only the brahmins who did nothing wrong to anyone. Do you think what you are doing is right???

நம்பி said...

//shankar said...

Please stop posting this false news against Brahmins?? What do you know about Indian History??? Did Brahmins hold high post before Independence?? Learn about tamilnadu history and publish this blog. In earlier days Brahmins had proffession of poojari in temples and there is no instance of brahmin being a landlord. Only the Naickers, Pillaimars, Nadars had owned the post of Naatamai etc in villages. They only enforced some laws against some caste people. Now without knowing the history you are propagating false news against brahmins?? I dont know why the useless DK had turned against only the brahmins who did nothing wrong to anyone. Do you think what you are doing is right???//

ஷ்ஷ்ஷ்ஷங்கர் முதலில் நீங்கள் உங்கள் ஜாதி இதுதான் என்று வெளிப்படுத்திக்கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்...போய் பழையத் தமிழ் திரைப்படம் பாருங்கள் (சபாபதி) என்ற படத்தில் அதில் வரும் ஒரு காட்சியில் ஒரு தர்ம சத்திரத்தில்...எழுதி வைக்கப்பட்டிருக்கும் போர்டை பார்த்திருக்கிறீர்களா? ''பார்ப்பனர்கள் சாப்பிடும் இடம்'' அதாவது ''பிராமாணர்...கள் சாப்பிடுமிடம்'' என்று பிரித்து எழுதப்பட்டிருக்கும் அதை ''நடிகர் டி.ஆர் ராமச்சந்திரன்'' வாசித்து காட்டுவார். அடிக்கடி தொலைக்காட்சியில் இத்திரைப்படத்தை காட்டுகிறார்கள்..பார்க்கலம்...அதே போன்று அதில் வரும் ஒரு பரதநாட்டியத்தின் பழையப் பெயர் வசனம்...அந்த படத்தில் வரும்...''மேலே என்ன ''தேவடியா கச்சேரி'' நடக்கிறது போலிருக்கிறதே ''என்று தான் வசனம் வரும். அதையும் ஒரு பெண்தான் இன்னொரு பெண்ணிடம் கூறுவதைப் பார்க்கலாம்... இதையெல்லாம் பார்த்துமா வக்காலத்து வாங்குகிறீர்கள்.

தமிழ் தென்றல் திரு.வி.க எப்படி பார்ப்பனர்களால் உதாசீனப்படுத்தப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார் என்பதாவது தெரியுமா..? ஒரு பார்ப்பனர் அவரை வீட்டுக்குள்ளே அழைத்தால் தீட்டு என்று வீட்டுத் திண்ணையிலேயே வைத்து சாப்பாடு போட்டார்.

காங்கிரஸ் பேரியக்கத்தில் அவரை (திரு.வி.க.வை) பார்ப்பனர்கள் உண்டுவிட்டு வீசியெறியும் எச்சில் இலைகள் பக்கத்தில் சாப்பாடு போட்டனர். அப்போது மட்டுமல்ல இப்போதும் இம்மாதிரி கொடுமைகள் உண்டு, கண்ணை அகல விரிச்சிகிட்டு போய் ஒவ்வொரு கிராமத்திலும் போய் பார்க்கலாம்..நகரத்திலும் பார்க்கலாம்.

மனிதர்கள் எதிரி அல்ல..மனிதநேயமற்றவர்கள் தான் எதிரிகள். இந்த போனாப்போகுது என்பதெல்லாம் எங்களுக்கு தேவையேயில்லை. கொஞ்சமாவது செஞ்சிலே ஈரம் இருந்தால் இதெல்லாம் பாவம் என்றாவது பதியலாமே. அப்படி ஒருவரும் பதிவதில்லையே. பார்ப்பனர்கள் பலர் பெரியாரிசத்தை பின்பற்றுகின்றனர். சிலர் பாதி, கால் என்று பின்பற்றுகின்றனர்...அவர்களே இது மனிதநேயமற்றது இதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று தானே பதிந்திருக்கிறார்கள்.

நீங்கள் முதலில் வரலாறு புவியியல் எல்லாம் படியுங்கள் அதற்கு பிறகு வக்காலத்து வாங்கலாம்.

சுதந்திர போராட்டத்தை காட்டும் திரைப்படத்தில் வருகின்ற காட்சிகளில் கூட பார்ப்பனர்கள் தான் உயர்ந்த பதவிகளில் இருந்ததாக காட்டப்பட்டிருக்கும்...அதையே எடுத்துக்கொள்ளலாம்...கப்பலோட்டிய தமிழன். ரசிக்கும் பொழுது ரசித்துவிட்டு..இப்பொழுது குறைப்பட்டு கொண்டால் எப்படி...?

இந்த வேற்றுமைகள் எல்லாம் இல்லை என்றிருந்தால் இதற்கான போராட்டத்தின் பலனாக ''நீதிக்கட்சி''...எல்லாம் தோன்றியிருக்காது.

மனிதநேயத்தையே போனாப்போகுது என்று எண்ணுகிறீர்கள்...மனிதனாக பிறந்தால் மனிதநேயத்துடன் கட்டாயம் எல்லோரும் இருந்து தான் ஆகவேண்டும். அது தான் மனிதவுரிமை ஆணையத்தின் நோக்கம்.