Search This Blog

13.11.09

பெரியார் - அண்ணா உறவு எப்படிப்பட்டதென்றால்!!


நாங்கள் சுற்றுப் பயணம் புறப்படும்பொழுது
தலைபோகும், தாடி போகும்,உயிர் போகும் என்று மிரட்டல் வரும்


நான் அய்யா அவர்களுடன் சுற்று பயணம் செய்யும்பொழுது தலைபோகும், தாடி போகும், உயிர் போகும் என்று மிரட்டல் வரும் என்று அண்ணா அவர்கள் கூறியதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்..

சென்னை பெரியார் திடலில் அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி ‘‘அறிஞர் அண்ணாவின் நிலைத்த எழுத்தோவியங்கள்’’ என்ற தலைப்பில் 1.9.2009 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

ஆச்சாரியார் சொல்லி அண்ணா கேட்கவில்லை

ஆச்சாரியார் ஆசீர்வாதத்தோடு வெற்றி பெற்று வந்திருக்கின்றார்கள். எனவே ஆச்சாரியாருடைய ஆட்சி தான் நடக்கப் போகிறது. என்றெல்லாம் ஆசையோடு வந்த நேரத்திலே ஆச்சாரியார் மேடையிலே பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலை. மேடையில் இருந்த ஆச்சாரியார் அண்ணா அவர்களைப் பார்த்து ‘‘முதலில் நீங்கள் பேசுங்கள், பிறகு நான் பேசுகிறேன்’’ என்று சொல்லுகிறார்.

ஆனால், அண்ணா அவர்கள் சொல்லுகிறார் ‘‘இல்லை, இல்லை நீங்கள் முதலில் பேசுங்கள்; பிறகு நான் பேசுகிறேன்’’ என்று சொல்லுகிறார்.

ஆச்சாரியார் அவர்களுக்கு அப்பொழுதே புரிந்துவிட்டது. தன்னுடைய ஆதங்கத்தை ஆச்சாரியார் ரொம்ப நாசுக்காக வெளியிட்டார். இங்கே நான் முதலில் அண்ணாதுரை அவர்களை பேசச் சொன்னேன். அவர், இல்லை, இல்லை நீங்கள் முதலில் பேசுங்கள். பிறகு நான் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கின்றார். அவருக்கு அப்பொழுதே புரிந்து போய்விட்டது.

இதை ‘‘விடுதலை’’யிலேயே நாங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றோம். ஆச்சாரியார் சொல்லுகிறார். நீங்கள் முதலில் பேசுங்கள் அண்ணாதுரை அவர்களிடம் சொன்னதற்கு, இல்லை இல்லை, நீங்கள் முதலில் பேசுங்கள் என்று என்னை பேசச்சொல்லிவிட்டார்.

இப்பொழுது, இங்கேயே, இதிலேயே என் பேச்சை கேட்காத அண்ணாதுரையா இனிமேல் என் பேச்சை கேட்கப் போகிறார் என்று ஆச்சாரியார் சொன்னார். (பலத்த கைதட்டல்)

அடுத்து அண்ணா அவர்களிடம் செய்தியாளர்கள் சென்று கேட்டார்கள்.

இன்றைக்குப் போல் தலைவர்கள் அன்றைக்கு இல்லை

என்ன உங்களுடைய தேன் நிலவு முடிந்து விட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்; இருந்தாலும் இது தொடர்பாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லுகிறேன்.

உடனே மற்றவர்களாக இருந்தாலும் கொஞ்சம் ஆவேசமாகப் பேசியிருப்பார்கள். அது மட்டுமல்ல, தலைவர்களும் ரொம்பப் பக்குவமான தலைவர்களாக இருந்தார்கள். இன்றைக்கு இருப்பது போல இல்லாத ஒரு சூழல் அப்பொழுது. அண்ணா அவர்கள் அவருக்கே உரிய நனி நாகரிகத்தோடு, பண்போடு சொன்னார்.தேன்நிலவு முடிந்து விட்டது என்றால் குடும்ப வாழ்க்கை தொடங்கியது என்று அர்த்தம் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

அண்ணா அவர்களை நச்சரித்துவிட்டேன்

ஆகவேதான் அப்படிப்பட்ட ஒரு நிலையிலே அய்யா அவர்களிடத்திலே அவர்களைப் பற்றி விடுதலை மலருக்குக் கட்டுரை வேண்டும் என்று நான் அண்ணா அவர்களை ஓரளவுக்கு நச்சரித்துவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.

நான் ஒரு முறை கடிதம் கொடுத்தேன். பிறகு அண்ணா அவர்கள் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிகள், பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பொழுது அண்ணா அவர்களைப் பார்த்தேன்.

ஏனென்றால், குறிப்பிட்ட நாளில் விடுதலை மலர் வருவது வழக்கம். ஆகவே அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள். ‘‘என்னப்பா மலர்தானே? மலருக்கு எழுத வேண்டும் என்று நினைவூட்டத்தானே வந்திருக்கிறாய்’’ என்று அண்ணா அவர்கள் சொல்லுவார்கள்.

மதுரையிலிருந்து ஒரு ஆள்மூலமாக

பிறகு அண்ணா அவர்கள் மதுரையிலே தனியே ஆதித்தனார் இல்லத்திற்குச் சென்றார்கள். அவருடன் வந்த கான்வாய் கார்களை எல்லாம் தனியே செல்லச் சொல்லிவிட்டு, அண்ணா அவர்கள் மட்டும் ஆதித்தனார் இல்லத்திற்கு வந்தார். அவர் சர்க்கியூட் ஹவுசிற்குப் போகவில்லை.

அண்ணா அவர்கள் ஆதித்தனார் இல்லத்தில் தனியே உட்கார்ந்து அங்கேயே எழுதினார். அரசாங்கத் தாள் கூட அல்ல; கிடைத்த அரைத்தாள்களில் எல்லாம் நேரத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு வேக வேகமாக எழுதினார்கள்.

அந்தக் கட்டுரையை மதுரையிலிருந்து ஒரு நபர் மூலமாக கொடுத்து நேரே பெரியார் திடலுக்குச் சென்று இதை வீரமணியிடம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை நேராக எனக்கு வந்தது. அதுதான் ‘‘அந்த வசந்தம்’’ என்ற கட்டுரை இது.

நாங்கள் எல்லாம் எதிர் பார்க்கவே இல்லை. அண்ணா அவர்களுடைய எழுத்தோவியம் என்பது சாதாரணமானதல்ல.

அய்யா-அண்ணா உறவு

அண்ணா அவர்கள் அரசியலுக்குச் சென்றார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடுமையாகத் தொடர்ந்து கோப்புகளைப் பார்க்க வேண்டிய கட்டம், மற்றும் பல்வேறு அரசியல் சம்பிரதாய நிகழ்ச்சிகள்.

அண்ணா அவர்கள் எழுத்து என்றென்றைக்கும் பதிவு செய்யப்பட வேண்டிய எழுத்துகள். அய்யா அவர்களுக்கும், அண்ணா அவர்களுக்கும் இருக்கின்ற உறவு தந்தை_தனயனுக்கும் உள்ள உறவு போன்றதாகும். அது எப்படிப்பட்டதென்றால், உள்ளத்தை பிரதிபலிக்கக் கூடிய எழுத்துகள்.

எழுத்துகளில் வசீகரமான எழுத்துகள் உண்டு. அலங்காரமான எழுத்துகள் உண்டு. எதுகை, மோனை எதிர்பார்க்காமலே அவர்களிடத்திலே வந்து விழுவதுண்டு. அவைகளை எல்லாம் விட, இது அண்ணா அவர்களுடைய உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டக் கூடிய அளவிற்கு இருந்தது. அதுவும் நீண்ட ஒரு பிரிவு என்று மற்றவர்கள் கருதிய காலம். அந்த நிலையிலே அண்ணா அவர்கள் அந்த வசந்தம் என்று கட்டுரையை எழுதினார்கள்.

எனக்கு இந்த சொற்பொழிவுகளைப் பொறுத்த வரையிலே, எனக்கிருக்கின்ற ஒருதனி சிக்கல் என்னவென்றால், மளமளமென்று மேடையிலே பேசுவதைப் போல பேசிவிடக் கூடாது என்று நான் கருதுகின்றேன்.

அண்ணா அவர்களுடைய மறுவாசிப்பாகத் தான் என்னுடைய உரை இருக்குமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

சுவை குன்றி விடக் கூடாதே!

நாம் எல்லோரும் சேர்ந்து வாசிக்கிறோம். இடையிலே காலட்சேபம் மாதிரி ஆக்கி, விளக்கங்களை சொல்லி அதனுடைய சுவையை குறைக்கக் கூடாது என்று எனக்கு நானே எடுத்துக்கொண்ட உறுதி.

ஆகவே அண்ணா அவர்களுடைய எழுத்தை உங்கள் முன்னாலே அப்படியே வைக்கின்றேன்.

அண்ணா அவர்கள் ‘‘அந்த வசந்தம்’’ என்பதை அடைப்புக்குரியிலே போட்டார்.

எனக்கென்று ஒரு வசந்தகாலம்

எனக்கென்று ஒரு வசந்த காலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஆண்டு பலவற்றுக்குப் பிறகு
(எவ்வளவு அழகாக சொற்களைப் போட்டு அண்ணா அவர்கள் எழுதியிருக்கிறார் பாருங்கள். ஒவ்வொரு சொல்லும் இதில் கவனிக்க வேண்டியது. அண்ணா அவர்களின் எழுத்தோவியங்கள். ஓவியத்திலே தூரிகையை எடுத்துப் பயன்படுத்துகின்றவர்கள் கடைசியில் கூட அந்த இடம் சரியாக இருக்கிறதா? இந்த இடம் சரியாக இருக்கிறதா என்று கவனத்தோடு பார்ப்பார்கள். அண்ணா அவர்களுடைய சொற்களே அப்படியே இடம் பெற வேண்டும் என்பதற்காகத் தான் மறுவாசிப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்).

அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றைய கவலை மிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக்கொள்ளுகிறேன்.

(அண்ணா அவர்களுடைய நிலை எண்ணிப் பாருங்கள். முதலமைச்சரான பிற்பாடு எல்லோரும், மகிழ்ச்சியிலே கூத்தாடுவார்கள். அதுதான் சிறந்த வசந்த காலம் என்று நினைப்பார்கள். வராத பொழுதே அடுத்த முதலமைச்சர் என்ற கனவு வசந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த நாட்டிலே வந்த பதவியை பயத்தோடு பார்த்து இவ்வளவு பெரிய பொறுப்பை நாம் சுமக்கப் போகிறோமே. இதில் நாம் வெற்றியடைய வேண்டாமா? மக்கள் நம்மீது வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்த வேண்டாமா?

என்றெல்லாம் கவலையோடு சிந்தித்த ஒரு மாமனிதர் இருந்தார் என்றால், இந்திய அரசியல் வரலாற்றிலேயே அண்ணாவுக்கு நிகர் அண்ணாதான்.

கவலையோடு பொறுப்பை அணுக வேண்டியவர்கள்

அதற்கடுத்து கலைஞரை சொல்லலாம். அவ்வளவு தானே தவிர, வேறு யாரையும் சொல்ல முடியாது. ஏனென்றால், அவ்வளவு கவலையோடு அந்தப் பொறுப்பை அணுக வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அண்ணா அவர்கள், ‘‘புன்னகை எனக்கு இயல்பாக வருவதில்லை’’ என்று சொல்லுகிறார். அதை மனப்பூர்வமாகச் சொல்லுகின்றார்).

அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றைய கவலை மிக்க நாள்களிலே எழமுடியாத புன்னகையைத் (அந்தச் சொற்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்) தெரிவித்துக்கொள்கின்றேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும். இன்று நான் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

வசந்தகாலம் என்பது

வசந்தகாலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி அவருடன் காடு மேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய பொழுது வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வதைக் கண்டேன்.

நறுமணம் எங்கும் பரவக் கண்டேன். எதிர்ப்புகள், ஏளனங்கள், செருப்புத் தோரணங்கள் இன்னும் பல்வேறு கல்வீச்சுகள் (இவைகளை எல்லாம் பூத்த மலர்கள் என்று அண்ணா அவர்கள் சொல்லுகின்றார். அந்த எதிர்நீச்சல் இருக்கிறதே, அந்த சுயமரியாதை இயக்க வாழ்க்கையை எப்படி வர்ணிக்கிறார்கள் என்று பாருங்கள்.

நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன். ‘அய்யா அவர்களுடன் சென்ற பொழுது ஏற்பட்ட எதிர்நீச்சல் இருக்கிறதே’ அதை அவர்கள் வர்ணிக்கிறார் பாருங்கள்.

பெரிய வெற்றி

எதிர்ப்பையும் மீறி அய்யா அவர்களுடைய கொள்கை பரவுகிறது. பாதையில்லாத ஊருக்கெல்லாம் ஈரோட்டுப் பாதையை அமைக்கிறார்கள். ஆகவே அந்த சூழலைப் பார்க்கின்ற பொழுது மிகத் தெளிவாக அதை சொல்லுகின்றார்கள்.)

அப்பொழுது கலவரம் எழாமல் ஒரு பொதுக்கூட்டத்தை ஒழுங்காக நடத்திட முடிந்தால் போதும். அது பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். ( கலவரம் இல்லாது ஒரு கூட்டம் நடந்து முடிந்தாலே அதுதான் பெரிய வெற்றி.)

தலைபோகும், தாடி போகும்

கொள்கையை ஏற்றுக்கொண்டாலே அது பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படும் முன்னர் (அய்யா, அண்ணா அவர்கள் எல்லாம் புறப்படுவதற்கு முன்னாலே) தலைபோகும், தாடி போகும், தடி போகும், உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண்டிய நிலை.

நாங்கள் கற்றுப் பயணத்திற்குப் புறப்படுவதற்கு முன்னாலே இது போன்ற கடிதங்கள் தான் எங்களுக்கு வரவேற்புக் கடிதங்கள் மாதிரி. எங்களை வரவேற்பதற்கு இந்தக் கடிதங்கள் முன்னாலே வரும் எச்சரிக்கை இவைகள்.

உடனே அய்யா என்ன செய்வாராம். ரொம்ப அழகாக இருக்கிறது பாருங்கள் இந்தக் காட்சி. நாமெல்லாம் அந்தக் காலத்தில் பார்க்க முடியாத காட்சியை அண்ணா அவர்கள் நமக்குக் கண்முன்னாலே கொண்டு வந்து எழுத்தோவியம் மூலம் காட்டுகிறார்.

அண்ணாதுரை இதைப் பார்த்தாயா? (அண்ணா அவர்கள் அடக்கத்திற்காக இப்படி எழுதியிருக்கின்றார். பார்த்தீர்களா? என்று தான் அய்யா அவர்கள் சொல்லுவார். பார்த்தாயா? என்று சொல்லமாட்டார். ஆனால், அண்ணா அவர்கள் தன்னைத் தாழ்த்திக் கொண்டு தலைவனுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லுகின்றார்.

‘‘அண்ணாதுரை இதைப் பார்த்தாயா?’’ என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாம் அய்யா! என்ற ஒரு பொருளற்ற பதில் தருவேன் (சிரிப்பு கைதட்டல்). அதாவது இந்தச் சொல் நயத்தைப் பாருங்கள்.

-----------------தொடரும் ..."விடுதலை" 13-11-2009

8 comments:

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

vijayan said...

ellam sari,periyar kadavul illavey illai endrar,mr.annadurai ondrey kulam oruvaney devan endrar.naam pogevendiya padhai erode-a or kanchypurama.VIZZY.

vijayan said...

ellaam sery,kadavul illavey illai endru peryar karpithar.mr.annadurai ondrey kulam oruvaney devan endru jally vittar.naam therivu seivathu erode or kaanchypuram.VIZZY.

அஹோரி said...

சமீப காலமா தமிழ் ஓவியாவின் "ஒரு நாளைக்கு பத்து பதிவு" திட்டத்தால் பெரியாரின் மீது வெறுப்பு வளர தொடங்கி உள்ளது.

என் மகனுக்கு பெரியாரை ஒரு "கொள்ள கூட்ட பாஸ்" லெவல் ல நான் அறிமுகபடுத்தினாலும் , ஆச்சர்யபடுவதற்கில்லை.

தமிழ் ஓவியா said...

அண்ண்ண இறுதி வரை ஈரோட்டுப் பாதையிலேயே (கடவுள் இல்லை) பயணத்தைத் தொடர்ந்தார் Vijayan

தமிழ் ஓவியா said...

அஹோரி என்றால் மனிதப்பிணம் தின்னுபவன் என்பது தான் எங்களுக்கு ஞாபகம் வருகிறது. இதற்கு என்ன செய்ய.

பெரியாரைப் பெரியாராகப் பாருங்கள். நீங்களாக கற்பனை செய்து கொண்டு உளறாதீர்கள்

அஹோரி said...

நீங்க என்மேல கடுப்பாவதை பார்த்தால்... நீங்கள் பெரியாரை கடவுளாக நினைப்பவர் போல் உள்ளது.

நான் நீங்க கடவுளா பெரியாரை பற்றி எதாவது சொன்னால் ... நான் உளறுகிறேன் என்கிறீர்கள்.
எங்க நம்பிக்கையை நீங்க நக்கல் அடிக்கும் போது ... நான் என்ன சொல்ல ?


'பகுத்தறிவு' ங்கிறது கொஞ்சம் பெரிய மேட்டர். கருப்பு சட்ட போட்ட அல்லக்கையிங்க எல்லாம் பெரியார் இல்ல.

அம்புட்டுதேன் .

நம்பி said...

//'பகுத்தறிவு' ங்கிறது கொஞ்சம் பெரிய மேட்டர். கருப்பு சட்ட போட்ட அல்லக்கையிங்க எல்லாம் பெரியார் இல்ல.

அம்புட்டுதேன் . //

இல்லாவிட்டால் போகுது..... காவியுடை பிண்ந்திண்ணிகளை எல்லாம் கொலைகாரர்கள் என்றாவது எடுத்துக்கொள்வியா...?

கொலைக்குத்தான் மரணதண்டனை...!

"அயிட்டங்காரன்களை" மனிதனாகவே ஏற்றுக் கொள்ளவே முடியாது...அப்புறம் தானே பகுத்தறிவுவாதி என்பதற்கே வேலை!

//எங்க நம்பிக்கையை நீங்க நக்கல் அடிக்கும் போது ... நான் என்ன சொல்ல ?//

பொணந்திண்ணிகளின் நம்பிக்கை, நக்கலடிக்கிற அளவுக்கு இருக்கிறது என்பது பொணந்திண்ணிகளுக்கே தெரிகிறதே...? தெரிந்துமா?

//என் மகனுக்கு பெரியாரை ஒரு "கொள்ள கூட்ட பாஸ்" லெவல் ல நான் அறிமுகபடுத்தினாலும் , ஆச்சர்யபடுவதற்கில்லை.//

உன் மகனுக்கு உன்னை எப்படி அறிமுகப்படுத்திக்கப் போற...?

மனிதாபிமானமற்ற பொணந்திண்ணி என்றா..? "அயிட்டங்காரன்" என்றா? "கானிபாலிசம்" என்றா?...