மரகத லிங்கத்துக்கு மறுவாழ்வா?
திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயிலில் மரகத லிங்கம் திருட்டுப்போன கதை ஊர் சிரித்தது. அதன் மதிப்பு ரூ.50 கோடி என்றெல்லாம் கூறப்பட்டது.
முகூந்த சக்ரவர்த்தியால் தேவர்களின் தலைவரான இந்திரனிடம் கொடுக்கப்பட்டது என்றும், இந்திரனே வழிபட்ட மரகதலிங்கம் என்றும் பெருமையாகவும் பேசப்பட்டது.
2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 நாள்கள் சிறப்புப் பூஜைகள் எல்லாம் தடபுடலாக நடத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி இரவு (கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட எட்டாம் நாளில்) அக்கோயிலின் மரகதலிங்கம் களவு போய்விட்டது. ஆமாம், இந்திரனால் வழிபட்ட சக்தி வாய்ந்த லிங்கம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட அதிக விலைமதிப்புள்ள அந்த மரகதலிங்கத்தை இருவர் திருடிச் சென்றுவிட்டனர். சர்வசக்தி வாய்ந்த சாமியை சாதாரண ஆசாமிகள் திருடிக்கொண்டு சென்றுவிட்டனர்.
எட்டு மாதங்கள் கழித்து காவல்துறையின் திறமையால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு; மூலச் சரக்கான மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டது.
கடவுள் சக்தி என்பதெல்லாம் கவைக்குதவாதது. அது அடித்து வைக்கப்பட்ட சிலை. அவ்வளவுதான் என்று பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரம் செய்ததெல்லாம் மாபெரும் உண்மையென்று பாமர மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.
வெட்கம் கெட்டவன் வெறுமனே உடலோடு செல்லத் தயங்கமாட்டான் என்பதுபோல, காவல்துறையினரால் திரும்பக் கொடுக்கப்பட்ட அந்தப் பொம்மையான மரகதலிங்கத்தை மேளதாளத்துடன் வீதிஉலா நடத்தி கோயிலுக்குக் கொண்டு சென்றார்களாம். வெள்ளிப் பெட்டியில் வைத்து 24 மணிநேரமும் துப்பாக்கி சகிதத்துடன் காவல்துறை பாதுகாப்பாம்!
மரகதலிங்கத்துக்குச் சக்தியில்லை காவல்துறைக்கும், துப்பாக்கிக்கும் தான் சக்தி உண்டு என்பதற்கு இதைவிட அப்பட்டமான ஆதாரம் வேறு ஒன்றும் தேவையோ!
இது ஒரு பச்சையான நாத்திகச் செயல்தானே? கடவுளை மற, மனிதனை நினை என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இப்பொழுது கோயிலில் தர்மகர்த்தாக்களே தங்கள் கோயில் கடவுள் சிலையைக் காப்பாற்ற காவல்துறையை அதாவது மனிதர்களை நாடிவிட்டனரா இல்லையா?
இதில் இன்னொரு கோமாளித்தனத்தையும் கவனிக்கத் தவறக்கூடாது.
சிலை திருடப்பட்டுச் சென்றதால் தோஷம் ஏற்பட்டுவிட்டதாம். யாருக்கு? கடவுளுக்கு! அப்படியென்றால் தோஷம் பெரியதா? கடவுள் பெரியதா? என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?
சரி, தோஷம் நீக்கப்படுவதற்குப் பரிகாரங்கள் செய்யப்படவேண்டாமா? அதன்மூலம் புரோகிதப் பார்ப்பனர்களின் தொப்பை நிரம்பவேண்டாமா? சுரண்டல் வியாபாரம் ஜாம்ஜாமென்று நடக்கவேண்டாமா?
வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அவற்றின் பலாபலன் என்பது பார்ப்பனர்களுக்கு இலாபம் வரும்படி என்கிற ஒரு வட்டத்துக்குள் பக்தி, கோயில், மதச் சமாச்சாரங்கள் அடங்கிவிடும். இது பார்ப்பனியத்தின் அலாதியான சூட்சுமமான ஏற்பாடாகும்.
அந்த முறையில் திருடப்பட்டு கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள மரகதலிங்கத்தின் தோஷம் கழிப்பதற்காக பூஜை புனஷ்காரங்கள், பரிகார செயல்கள் தொடங்கப்பட்டுவிட்டன. 108 லிட்டர் பாலாபிஷேகமாம்! தேனாபிஷேகமாம். சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதிட ருத்ர ஹோமமாம்.
ஹோமம் (யாகம்) என்றால் பார்ப்பனர்களுக்கு எல்லா வகையான தானங்களும் தடபுடலாக நடக்குமே!
பக்தி ஒரு வியாபாரம். அதுவும் பார்ப்பனர்களுக்கு மூலதனம் தேவையில்லாத ஒரு வியாபாரம் என்பதைத் தமிழர்கள் என்றைக்கு உணரப் போகிறார்களோ!
------------------- "விடுதலை" தலையங்கம் 4-11-2009
5 comments:
விடுதலை பத்திரிகையில் வந்ததை நீங்கள் இங்கு பதித்து உங்கள் ப்ளாக்கை நிரப்புவது மட்டும் மூலதனம் உள்ள செயலோ? சொந்தமாக யோசித்து அறிவுபூர்வமாக ஆக்கபூர்வமாக செயல்படுங்களேன்.
இந்த வலைப்பூவின் நோக்கம் பெரியார் கொள்கைப் பரப்பல் மட்டுமே.
இதன் மூலம் நான் எந்த லாபமும் அடையவில்லை. இன்னும் கேட்டால் தொலைபேசிக் கட்டனம் சுமார் 1000 ரூபாய் செலுத்துகிறேன்.
சொந்தப் பனத்தை செலவலித்து பெரியார் கொள்கையைப் பரப்பி வருகிறோம். பல தோழர்கள் இவ்வாறு செய்து வருகின்றார்கள் எந்த எதிர்பார்ப்புமின்றி என்பதை தங்களின் மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும் எனக்குத் தோன்றிய கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறேன் முரளி.
நன்றி
// பக்தி ஒரு வியாபாரம். அதுவும் பார்ப்பனர்களுக்கு மூலதனம் தேவையில்லாத ஒரு வியாபாரம் //
அப்ப திராவிடர்க்கு மூலதனம் என்ன பகுத்தறிவா? ( சம்பாதிப்பதற்க்கு அல்ல ஆள் பிடிக்க, ஆட்சியைப் பிடிக்க )
நன்றி அய்யா.
சிவலிங்க படம் அருமை. உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி அருமையான படங்கள் கிடைக்குது. வழக்கம் போல சேமித்துக் கொண்டேன். நன்றி.
பொது தொண்டு செய்கிறவனுக்கு ஏற்படக்கூடிய அவமானமும் இழப்பும் அவன் தன் லட்சியத்திற்கு கொடுக்கும் விலையே ஆகும்.
மானம் பாராது தொண்டாற்றுவதே சமூக தொண்டர்களுக்கு இலக்கணமாகும்.
பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு சிந்தனை செய்வதாலும்,எனது திட்டங்களை வகுப்பதாலும் நான் அந்த தொண்டுக்கு முழு தகுதி உடையவனாகிறேன்.
என்னுடைய கருத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் .ஆனால் நான் அந்த கருத்தை வெளியிடுவதை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை......
.....................தந்தை பெரியார்....
Post a Comment