Search This Blog

9.11.09

சாயிபாபாவிடம் ஆசி பெற்றவர் பலன் அடைந்தாரா?


அசோக் சவான்

கேள்வி: மகாராட்டிர மாநிலத்தில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்து வெற்றி பெற்றிருந்தாலும் அமைச்சரவை அமைப்பதிலோ சிக்கலோ சிக்கல் - இடியாப்பச் சிக்கலாகும்.

முதல் அமைச்சராக அறிவிக்கப்பட்ட அசோக் சவான் குறுக்கு வழியிலே இதற்குத் தீர்வு காண முயற்சித்தார். படித்தவர் அல்லவா? அவருக்குத் தெரியாத யோசனையா?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியாலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாராலும் தீர்க்க முடியாத இந்த அரசியல் சிக்கலைத் தீர்க்கக் கூடிய ஒருவரை அசோக் சவான் திடுக்கென்று கண்டுபிடித்து விட்டார்.

அவர் யார் தெரியுமா? சாட்சாத் சாயிபாபா! அவரிடம் ஆசி பெற்று விட்டால் அக்கணமே அறுபட்டு விடும் சிக்கல் என்பது அவரது நினைப்பு.

ஆனால் அதிலும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு விட்டார் முதலமைச்சர். பிரச்சினையைக் கிளப்பியவர் நாத்திகர் அல்லர். பிரபலமான ஆஸ்திகர்! ஆம், ராஜ்தாக்கரே. மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் தான் அவர். என்ன சொல்கிறார் ராஜ்தாக்கரே? முதல் அமைச்சர் சவான் சாயிபாபாவை அழைத்து ஆசீர்வாதம் வாங்கிய இடம் அரசுக்குச் சொந்தமான முதல் அமைச்சரின் அதிகாரப்பூர்வமான பங்களாவான “வார்ஷா” வாகும்.

சாயிபாபாவின் மீது முதல் அமைச்சருக்குப் பக்தி விசுவாசம் இருக்குமேயானால், அவரை எங்கே அழைத்திருக்க வேண்டும்? முதல் அமைச்சரின் தனிப்பட்ட சொந்த வீட்டுக்கு அல்லவா அழைத்திருக்க வேண்டும்?

அரசின் அதிகார பூர்வ பங்களாவில் எப்படி அழைக்கலாம்? அவர் ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்ச்சியை பிரபல மத சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியான ‘ஆஸ்தா’ நேரிடையாக ஒளிபரப்பியதன் மூலம் ஓர் அரசு பங்களா மத நடவடிக்கைகளுக்குப் பயன்பட்டிருக்கிறது என்று கண்டனம் செய்துள்ளார்.

மத்தளத்துக்கு இருபக்கம் இடி என்ற நிலையில் திணறி விட்டார் அசோக் சவான்.

அது சரி, ஆசிர்வாதம் நடந்து பத்து நாளாயிற்றே - பயன் இல்லையே!

குளியலறையில் வழுக்கி விழுந்து கால் எலும்பு உடைந்து வைத்தியம் செய்து கொண்டவர் ஒரு கொலை முயற்சியில் தப்பிக்க ஓடிப் போய் அறையில் புகுந்து கொண்டு கதவைச் சாத்திக் கொண்டு உயிர் தப்பியவர் சாயிபாபா!

‘கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைக் கிழித்து வைகுண்டத்தையா காட்டப் போகிறான்’ என்பது பழமொழி.

(குறிப்பு: ‘‘ஹிந்துஸ்தான் ஏட்டில் வெளிவந்த தகவலை அனுப்பி உதவியவர்: மும்பை சு. குமணராசன்.)

-------------- மயிலாடன் அவர்கள் 8-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

3 comments:

கோவி.கண்ணன் said...

:)

சாயிபாபாவிடம் மோதிரம் பெற்ற திராவிடப் போர்வா(லி)ளில் ஒன்றான திரு துரைமுருகனை விட்டுவிட்டீர்களே ஐயா.

RR said...

இந்தியாவில் வேலை தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/

தமிழ் ஓவியா said...

துரை முருகனாக இருந்தாலும் சாதா முருகனாக இருந்தாலும் பல்ன் என்னமோ பூஜ்ஜியம்தான் தோழரே.

ஆசி பெற்ற துரைமுருகன் இலாகாவே கைமாறி விட்டது எல்லாம் உங்களுக்கு தெரியாததல்லவே