Search This Blog

5.11.09

மதம் பிடித்தது யாருக்கு? யானைக்கா? மனிதனுக்கா?


அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில், கவிஞர் கண்ணதாசன் எழுதினார்: அதற்குரிய மறுப்பினை பகுத்தறிவாளர் மஞ்சை வசந்தன் (எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்) அர்த்தமற்ற இந்துமதம் எழுதினார். பல பதிப்புகள் வெளிவந்து உலகம் முழுவதும் இதுவும் சென்றடைந்துள்ளது!

இந்து மதம் அர்த்தமுள்ளதா? அனர்த்தம் உள்ளதா? என்று பக்தகோடிகள் கேள்வி கேட்கும் அளவுக்கு பக்த கேடிகளைப் போன்று, வடகலைப் பார்ப்பனர், தென்கலைப் பார்ப்பனர் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலில் நடந்துகொண்டவிதம், மந்திரங்களை உச்சரிப்பதைவிட ஆபாசமான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு அடிதடியில் இறங்கியுள்ள செய்தி, பார்ப்பன ஏடான ஜூனியர் விகடனே 1.11.2009 அன்று தேதியிட்டு நேற்று (28.10.2009 அன்று) வெளிவந்த இதழிலேயே கட்டுரை வடிவில் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது.

இந்த காஞ்சி வரதராஜபெருமாள் சன்னதியில்தான், சங்கராச்சாரிகளை முதல், இரண்டாவது குற்றவாளிகளாகக் கொண்டு நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்குக்குரிய கொலை சில ஆண்டுகளுக்குமுன் நடந்தது!

வரதராஜப்பெருமாள் அப்படியே ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்; தனது கோயில் நிருவாகி இப்படி அநியாயமாகக் கொல்லப்படுவதற்காக ஒரு சிறு அனுதாபத்தைக்கூட தெரிவிக்காதது மட்டுமல்ல; ஒவ்வொரு சாட்சியாகக் கலைக்கும் பகவத் காரியங்கள் நடைபெறுகின்றன.

பல சாட்சிகள் தலைகீழ் அந்தர்பல்டி அடிக்கிறார்கள்; ஆனால் அந்த வரதராஜப் பெருமாளோ அன்று எப்படி குத்துக்கல்லாய் கிடந்து வேடிக்கை பார்த்தாரோ, அதேபோல இன்றும் உள்ளார்!

இப்போது அதே கோயிலில் அடிதடி ஆபாச வார்த்தைகள் பரிமாற்றம்; ரத்தக் காயங்கள். பகவான் வரதராஜனோ சிவனேன்னு வேடிக்கை பார்த்துண்டிருக்கான்.

பிரச்சினை என்ன சாதாரணமா? அற்ப தேசியப் பிரச்சினையா அல்லது சர்வதேசப் பிரச்சினையா? மிகப்பெரிய தீர்வு காண முடியாத பிரச்சினை அல்லவோ!

அங்குள்ள கடவுள்களுக்கு யார் மரியாதை செய்வது என்பதில் போட்டி! பகவான்கள் மரியாதை இழந்து பரிதாபமான நிலையில் இருப்பதால் ஜூ.விகடனுக்கு எஸ்.ஓ.எஸ். (S.O.S) கொடுத்துள்ளார்கள் போலும்!

நம்மாழ்வார் சந்நிதி அர்ச்சகர் எப்படி ஆரத்தி காட்டலாம், என்று வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரச்சினை கிளப்பி, பகவான்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டார்கள். அதோடு மட்டுமா? தென்கலைப் பிரிவினர் நையப் புடைத்துவிட்டார்களாம்!

அதென்னய்யா வடகலைப் பிரிவு, தென்கலைப் பிரிவு என்று புதிதாக, அர்த்தமுள்ள ஹிந்துமதம்பற்றி அறியாதார் கேட்கக்கூடும்!

பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில் இந்த வழக்கை பல ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்தது (நம் ஊரில் உச்சநீதிமன்றங்கள் வருவதற்குமுன் கடைசி அப்பீல் செய்யும் பெரிய கோர்ட் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்தான்).

எல்லோரும் வெள்ளைக்கார நீதிபதிகள்தான் அங்கு. அவாளுக்கு வடகலை, தென்கலை சண்டை என்னவென்று விளங்காததால், அவாள் கேட்டள்,“What is Vadkalai and Thenkalai” தென்கலை என்றால் என்னவென்று.

உடனே அவாளுக்கு எளிதில் புரிய வைக்க,“These two partites fight for our English Alphapet) Y and U” (அதாவது பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம்) சண்டை என்றவுடன், வெள்ளைக்கார நீதிபதிகள் கேட்டு சிரி சிரியென்று சிரித்துவிட்டு, அந்தக் கோயில் யானையின் நெற்றியில் எந்த நாமம் வடகலையா, தென்கலையா போடுவது என்பதற்குத்தானே அப்பீல் வழக்கு. அதுவும் நீச்ச பாஷை பேசும் மிலேச்ச ஜட்ஜ்கள்முன்!

யானையின் கருத்தை இதில் கேட்க முடியாதே! அதனால் ஆறு மாதம் வடகலை என்று போடுங்கள்; மற்றொரு ஆறு மாதம் தென்கலை என்று போடுங்கள் என்று விசித்திரத் தீர்ப்பு வழங்கினார்கள்.

நம் நாட்டின் கோர்ட்டுகளைத் தாண்டி வழக்கு பிரிட்டிஷ் பிரிவி கவுன்சிலுக்குச் சென்றபோதிலும், முடிந்தபாடில்லை இன்றுவரை! நேற்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் யானைக்குள்ள நாமப் பிரச்சினைபற்றி ஜூனியர் விகடன் செய்தியாளர் தரும் சுவையான தகவல் இதோ:

வடகலை, தென்கலை பிரிவினை பேதத்தின் காரணமாக யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று இருதரப்பினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டது தனிக்கதை (மேலே சுருக்கமாக சொல்லப்பட்டது).

.... பின்னரும் பிரச்சினை தொடரவே, இரண்டு பிரிவுக்கும் தனித்தனியே யானைகள் வைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கிறார்கள்.

அத்துடனாவது பிரச்சினை முடிவுக்கு வந்ததா? அதுதான் இல்லை.

இருந்தும் திருவிழாக்காலங்களில் யானைகள் வீதியுலா வரும் சமயத்தில், எங்கள் யானைதான் முன்னால் நடந்து வரவேண்டும் என்று மீண்டும் இருதரப்பினரும் வாய்ச்சண்டை போட்டனர். ஆகவே, இரண்டு யானைகளும் ஒரே வரிசையில் ஒன்றுபோல் நடந்து வரவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்!

நம் நாடு 21 ஆம் நூற்றாண்டில் எவ்வளவு முக்கியப் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது பார்த்தேளா?

இவ்வளவுக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் வரதராஜப்பெருமாள் வாயே திறக்கல்லே!

மதம் பிடித்தலைவது இந்த ஆறறிவுள்ள பக்தர்களா? அல்லது ஆறறிவு இல்லாத யானைகளா? இதைக் கண்டுபிடித்துச் சொல்பவருக்கு அந்த யானைமேல் சவாரி! வடகலை யானைமீது ஒருமுறை; தென்கலை யானைமீது ஒருமுறை. ஆனால், ஏககாலத்தில் எப்படி ஏறி அமர்வது? அதுதான் புரியாத புதிர்! அய்யய்யோ, சொல்ல வெட்கமாகுதே!


--------------அகப்பையார் அவர்கள் 29-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

5 comments:

nagoreismail said...

எனக்கு பல சந்தேகம் வலுக்கிறது, உதாரணமாக பகவான் நெற்றியிலிருந்து பிறந்தது பிராமணர்கள் என்கிறது வேதம். சரி ஒத்து தொலைக்கிறோம்னு வையுங்கள்.

அந்த பிராமணர்களில் இரு பிரிவினர் அதாவது வடகலை, தென்கலை என்று இருக்கிறார்கள்.

என் சந்தேகம் இது தான், இவர்கள் இருவரும் இரட்டை பிள்ளைகளா? அல்லது நெற்றியில் பிறந்த இரு சகோதரர்களா? அப்டின்னா யாரு மூத்த பிள்ளை? யாரு இளைய பிள்ளை?

நான் யாரையும் கிண்டல் பண்ணுவதற்காக கேக்க வில்லை, நிஜமாகவே என்ன கருத்து சொல்லப் படுகிறது என்று தெரிந்து கொள்ள ஆவல்.

தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்.

தமிழ் ஓவியா said...

நாம் பதில் சொலுவதை விட பார்ப்பனர்கள் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்லுகிறார்கள்? என்பதை முதலில் பார்ப்போம் nagoreismail .

நம்பி said...

Blogger nagoreismail said...

//அந்த பிராமணர்களில் இரு பிரிவினர் அதாவது வடகலை, தென்கலை என்று இருக்கிறார்கள்.

................................

நான் யாரையும் கிண்டல் பண்ணுவதற்காக கேக்க வில்லை, நிஜமாகவே என்ன கருத்து சொல்லப் படுகிறது என்று தெரிந்து கொள்ள ஆவல்.

தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்.//

//Blogger தமிழ் ஓவியா said...

நாம் பதில் சொலுவதை விட பார்ப்பனர்கள் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்லுகிறார்கள்? என்பதை முதலில் பார்ப்போம் nagoreismail .

November 6, 2009 2:48 PM//

.....................
....................

வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு சின்னம்.ஆமாம்... காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான் லிங்கத்தின் தத்துவம்.

ஆணும்... பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.

...................
...................

லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின் மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான் லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.

இப்படி லிங்க வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேத வழி வந்த பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன் சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகி விடுகிறான்.

விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த தேசிகர்.‘நசூத்ரஜா பகவத் பக்தாஜாலிப்ரா பாகவதா’என போகும் ஸ்லோகத்தில்தான் இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப் பட்டிருக்கிறது.
....................
..................

சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள...

வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட...

சைவ... வைணவ வாத, பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர். -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

.......;நன்றி....தாத்தாச்சாரியார் வலைத்தளம்.....இந்துமதம் எங்கே போகிறது?....அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

***************************


தொடரும்....1

நம்பி said...

தொடர்ச்சி...1

இந்து மதம் சொல்வதும் செய்வதும் அனைத்தும் பெண்களுக்கு எதிரானதே.

இந்த மதத்தில் பெண்ணை வைத்து ஒரு பிளவு ஏற்பட்டதாக சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இப்பொழுது பார்ப்போம்.
இந்து மதத்தில் பல பிரிவுகள் இருப்பதாக சொல்வார்கள். அதிலே சைவம், வைணவம் போன்றவைகள் முக்கியமானவை. சைவத்திலும் வீரசைவம், சிந்தாந்த சைவம் என்ற பிரிவுகள் இருக்கின்றன. வைணவத்தில் தென்கலை, வடகலை என்று பிரிவுகள் இருக்கின்றன.

வீரசைவம், சைவசிந்தாந்தம் போன்ற பிரிவுகளுக்கிடையில் பெரியளவில் சச்சரவுகள் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் வடகலைக்கும் தென்கலைக்கும் நடந்த பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். இன்றுவரை பல இடங்களில் இவர்களுக்குள் சர்ச்சைகள், பகையுணர்வுகள் உண்டு. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது வெகு வெகு குறைவு.

வடகலை, தென்கலை பிரிவுகளை நாமங்களை வைத்துத்தான் இனம் காண்பார்கள். வடகலையினர் “Y” வடிவத்திலே நாமம் கீறி நடுவில் ஒரு கோடு போடுவார்கள். தென்கலையினர் “U” வடிவத்தில் நாமம் கீறி ஒரு கோடு போடுவார்கள்.
இந்த நாமம் பற்றி இரு தரப்பும் தருகின்ற விளக்கம் ஒன்றுதான்.

நாமத்தின் இரு கரையும் உள்ள கோடுகள் பெருமாளின் பாதங்களாம். இரண்டு கோடுகளும் பெருமாளின் பாதங்கள் என்றால், நடுவில் சிவப்புக் வண்ணத்தில் உள்ள குறி எதுவென்று உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

சைவர்கள் ஆண்குறியை லிங்கம் என்று வணங்குவார்கள். வைணவர்கள் நெற்றியில் பூசுவார்கள். இதை பின்பு சந்தர்ப்பம் வரும் போது தனியாகப் பார்ப்போம்.

இந்த வடகலை, தென்கலை நாமம் பற்றிய ஒரு சர்ச்சை வெகுபிரசித்தம். சிறிரங்கம், காஞ்சிபுரம் பெருமாள் கோயில்களில் நின்ற யானைகளுக்கு எந்த நாமம் போடுவது என்ற பிரச்சனை வந்து அது நீதிமன்றத்தில் நீண்ட காலம் இழுபட்டது.

வெள்ளைக்காரர் காலத்தில் தொடங்கிய வழக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் தொடர்ந்தது. சில நேரங்களில் ஒரு நாமத்திற்கு சார்பாக தீர்ப்பு வரும். ஆனால் அதற்குள் அந்த யானை இறந்து போயிருக்கும். இப்பொழுது புதிய யானைக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி நாமம் சாத்த மறு தரப்பு விடாது. அது பழைய யானைக்குத்தான் பொருந்தும், புதிய யானைக்கு எமது நாமத்தை சாத்தத்தான் வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றம் போவார்கள். அனேகமாக தீர்ப்பு வருவதற்கு முதல் அந்த யானையும் இறந்து போயிருக்கும்.

இங்கிலாந்து நீதிமன்றங்கள் வரை இந்தப் பிரச்சனை போனது. வெள்ளைக்கார நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இதை “Y,U” பிரச்சனை என்றுதான் அழைப்பார்கள்.

இப்படி பல வேடிக்கைகளையும் பகைகளையும் உருவாக்கிய இந்த “Y,U” பிரிவுகள் ஏன் உருவாகின என்று தெரியுமா? இதற்கு காரணம் பெண் என்றால் நீங்கள் நம்புவீர்களா? - SOURCE: http://www.webeelam.net/archives/256

இந்து மதமும் பெண்களும் (பாகம் 7)
இந்து மதம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறது என்று சிலர் புருடா விட்டுக் கொண்டு திரிவார்கள்.

இன்றைக்கு உள்ள பெரிய மதங்களில் பெண் வழிபாடு உள்ள ஒரே மதம் இந்து மதம் என்று பெருமை வேறு பேசுவார்கள். இவர்கள் வணங்குகின்ற இந்தப் பெண் தெய்வங்களையே இந்து மதம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை அறிந்தால் இவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.
(.........நன்றி தாத்தாச்சாரியார் வலைத்தளம், வெப்ஈலம் இணையத்தளம்....பகுத்தறிவாளர் சபேசன்)

நம்பி said...

தொடர்ச்சி...2
வடகலை, தென்கலை என்கின்ற இந்த இரண்டு பிரிவுகளிலும் ஏறக்குறைய 40 விதமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த இரண்டு பிரிவினரும் நிறத்தில் கூட சற்று வேறுபட்டிருப்பார்கள் என்று கூட சிலர் சொல்வது உண்டு.
வடகலை, தென்கலை வேறுபாடுகள் உருவாவதற்கான காரணங்களாக பிரபந்தங்கள் பற்றிய சர்ச்சை, ராமானுஜர் மற்றைய சாதியனரையும் பூணுல் அணிவித்து பார்ப்பனர் ஆக்கியதால் உருவாகிய வேறுபாடுகள் போன்றவைகளை காரணங்களாக சொல்வார்கள்.

ஆனால் இவைகளை விட இவர்களுக்குள் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பெருமாளின் துணைவியாராகிய பிராட்டியார் பற்றிய சர்ச்சைதான்.
வைணவர்கள் வணங்கும் பெருமாளோடு பக்கத்திலேயே பிராட்டியார் அமர்ந்திருக்கிறார்.

இந்தப் பிராட்டியாருக்கு பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்கும் சக்தி இருக்கிறாதா என்பதில்தான் வைணவர்களுக்குள் சர்ச்சை ஆரம்பமானது.

"பரமாத்மா", "ஜீவாத்மா" போன்ற சொற்களை கேள்விப் பட்டிருப்பீர்கள். இராமாயணத்தை போதிக்கின்ற சிலர் இராமனை "பரமாத்மா" என்றும் சீதையை "ஜீவாத்மா" என்றும் கூறுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

பரமாத்மா என்று கடவுளையும் ஜீவாத்மா என்று மனிதப்பிறப்பையும் சொல்வார்கள். பெருமாளின் துணைவியாக இருந்தாலும், பிராட்டியார் ஒரு ஜீவாத்மா மட்டுமே என்பது ஒரு பிரிவினரின் வாதம்.

"பிராட்டியாரால் பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்க முடியாது, அவர் ஒரு பெண், பெண்ணிற்கு மோட்சம் வழங்கும் சக்தி இல்லை, வேண்டுமென்றால் பக்தருக்கு மோட்சம் வழங்கச் சொல்லி பெருமாளிடம் சிபாரிசு செய்யலாம்" என்ற கருத்தோடு அவர்கள் உறுதியாக நின்றார்கள்.

கடவுளின் மனைவியாக இருப்பதால், அவருக்கும் கடவுளின் அம்சம் வந்துவிடுகிறது என்றும், அதனால் அவராலும் பக்தர்களுக்கு மோட்சம் வழங்க முடியும் என்று மறுபிரிவினர் வாதிட்டார்கள். இப்படி ஆரம்பித்த பிரச்சனை வடகலை, தென்கலை என்று பிளவில் போய் முடிந்தது.

....நன்றி பகுத்தறிவாளர் சபேசன், வெப் ஈலம் மற்றும் தாத்தாச்சாரியார் இணையத்தளம்...