Search This Blog

23.9.09

புளுகுவதில் பார்ப்பனர்களை விஞ்ச முடியாது!


சிதம்பரம் கோயில்:சிந்திப்பீர் பக்தர்களே!

தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேர்களாம். அவர்களை கைலையில் இருந்து அழைத்து வந்தாராம் சிவபெருமான். தலையை எண்ணிப் பார்த்தபோது ஒருவர் குறைந்தாராம். கவலை கொண்டார்களாம். அந்த நேரத்தில் ஆடிய பாதமான திருவாளர் நடராசன் சொன்னாராம், அந்த ஒரு ஆள் நான்தான் என்றாராம்.

புளுகுவதில் இந்து மதப் பார்ப்பனர்களை விஞ்சிட இனிமேலும் யாரும் பிறக்க முடியாது.

இந்த சிதம்பரம் நடராசன் திவ்விய பிரதாபங்களை எடுத்தோத சிதம்பர புராணம், கோயிற் புராணம் திருப்புலியூர்ப் புராணம், சபநாதபுராணம் என்று ஒரு படை வரிசையே உண்டு.

சேக்கிழார் பெரிய புராணம் எனும் சிவனடியார் பற்றி எழுதிய நூலுக்கு இந்தச் சிதம்பரம் நடராசன்தான் உலகெலாமென முதல் அடி எடுத்துக் கொடுத்ததாகவும் கதையளப்பதும் உண்டு.

இந்த சிவமூர்த்தி, பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலிய மகருஷிகளுக்கு ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தாராம்.

இந்தக் கோயிலில் உள்ள புலிச்சுர தீர்த்தம், குய்ய தீர்த்தம், புலிமேடு, வியாக்கிரபாதம், அநந்தம், பிரமம், நாகேசரி, சிவப்பிரியை திருப்பாற்கடல், பரமானந்த கூபம் முதலிய தீர்த்தங்கள் பிரபலமாம். இதில் முத்தி பெற்றவர்கள், சாதாரணமானவர்கள் அல்லவாம். துன்மதன் துச்சகன், துற்றெரிசனன் முதலியவர்கள் இந்தப் பேறு பெற்றவர்களாம். இக்கோயில் ஆகாச பூதத்தலமாம்.

இவ்வளவு சக்தியும், பிரஸ்தாபமும் பெற்ற இந்தச் சிதம்பரம் நடராசன் கோயில் கதை சிரிப்பாய் சிரிக்கிறது. கோயில் தீட்சிதர்களின் திருட்டுக்குப் பஞ்சம் இல்லை; முன்குடுமி தில்லை தீட்சிதர்ப் பார்ப்பன இளவெட்டுகளின் காமக் களியாட்டங்களின் கூத்து வெட்கக்கேடானது. (கோயிலில் குடி கொண்டிருப்பவர் என்னப்பன் கூத்தன் அல்லவா!)

கோயில் கோபுரக் கலசங்களின் மேலிருந்த 30 பவுன் மதிப்புள்ள தங்கப் பூக்களைத் திருடியவர்கள் யார்? 1994_இல் சங்கர தீட்சிதர் என்ற கோயில் புரோகிதப் பார்ப்பான் மீது திருட்டுப் புகார் மனு கொடுக்கப்பட்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லையா? (42/94)

கோயிலுக்குள்ளேயே 2 கிலோ நகையை இதே தீட்சிதப் பார்ப்பனர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் உண்டு. இதுபோல எத்தனை எத்தனையோ.

இந்தக் கோயிலுக்கு வரும் வருமானம் கோடி கோடி ரூபாய். ஆனால் இவர்கள் கணக்குக் காட்டுவது என்ன? எடுத்துக்காட்டாக 2007_ஆம் ஆண்டில் கோயிலுக்குக் கிடைத்த மொத்த வருவாய் ரூ.37199_ஆம். (பேட்டா செருப்பு விலை மாதிரி இருக்கிறதல்லவா!) அதில் செலவு ரூ.37,000 என்றும் மீதி ரூ. 199 என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கணக்குக் காட்டினார்கள்.

அதே நேரத்தில் இந்து அறநிலையத்துறை அக்கோயிலை தன் கட்டுப்பாட்டுக்குக்கீழ் கொண்டு வந்த நிலையில் மூன்றாவது முறையாக உண்டியல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.2 லட்சத்து 23,678 ஆகும். கடந்த ஆறு மாதத்தில் வசூல் 6 லட்சத்து 28,415 ரூபாய் ஆகும்.

அப்படியென்றால் இந்த தீட்சிதப் பார்ப்பனர் கூட்டம் பக்தர்கள் கொட்டிக் கொடுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை எத்தனை ஆண்டு காலமாக சுவாஹா செய்திருக்கின்றனர் என்பதைப் பக்தர்களேகூட எண்ணிப் பார்க்க வேண்டாமா?

சிதம்பரம் நடராசன் கோயிலை அரசு தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டதற்கான நியாயம் இதன் மூலம் அப்பட்டமாக விளங்கவில்லையா? இந்த நிலையில் அக்கோயில் தங்களுக்கே சொந்தம் என்றும், இந்து அறநிலையத்துறை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது சட்ட விரோதம் என்றும், கோயில் தீட்சிதப் பார்ப்பனர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, அதன்பின் அவர்கள் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கு இரண்டும் செல்லாது என்றும் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை சரியானதே என்றும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.

ஆனாலும் அனுபவித்த இனம் அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா? உச்சநீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள்.

பக்தகோடிகள் மற்றவற்றையெல்லாம் புறந்தள்ளி சிதம்பரம் கோயில், தீட்சிதப் பார்ப்பனர்களின் வேட்டைக்காடாக யிருப்பதை உணர வேண்டாமா?

சிதம்பரம் நடராசன் கோயில் பற்றியும், அதன் மூலவர் நடராசன் சக்தி குறித்தும் வானாளவ எழுதிக் குவித்து வைத்துள்ளனரே அது உண்மையென்றால் இந்தப் பித்தலாட்டங்களை நடராஜக் கடவுள் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டாமா? சிந்திப்பீர்!

------------------ "விடுதலை" தலையங்கம் 21-9-2009

10 comments:

பித்தனின் வாக்கு said...

நான் கடவுளை நம்புகிறவன், ஆனால் பதிவில் மொக்கை என்ற பெயரில் அவரை நினைப்பவன் இல்லை, ஆனால் கடவுளை எதிர்க்கின்றேன் என்ற பெயரில் தினமும் கடவுள் பேரைச் சொல்லி இரண்டு பதிவுகளாது போடும் நீர்தான் உன்மையில் ஒரு பக்திமான். வாழ்க உங்கள் சேவை. தமிழ் நாட்டுல கொஞ்சமாதான் கோவில் இருந்தது.பெரியார் எதிர்க்க ஆரம்பிச்ச உடனதான் தெருவுக்கு தெரு கோவில் வந்தது. அதுபோல உங்களாலும் எதாது நன்மை நடந்தால் சரி.

சுதாகர் said...

பகுத்தறிவுன்னா இந்து மதத்தை மட்டும் ஏதாவது சொல்லிட்டே இருக்கணுமா? இப்போதான், ரமலான் முடிஞ்சது. அதப்பத்தி ஒண்ணுமே காணோமே?

செலக்டிவ் அம்னீஷியாவா?

Darren said...

//பித்தன் said... ஆனால் கடவுளை எதிர்க்கின்றேன் என்ற பெயரில் தினமும் கடவுள் பேரைச் சொல்லி இரண்டு பதிவுகளாது போடும் நீர்தான் உன்மையில் ஒரு பக்திமான். //

பாப்பார பசங்கல்லாம் கடவுளா, நல்ல காமெடி. பெயருக்கு(பித்தன்) ஏத்த மாதிரிதான் இருக்கேள்..பேஷ் பேஷ்.

சுரேஷ்குமார் said...

//
பகுத்தறிவுன்னா இந்து மதத்தை மட்டும் ஏதாவது சொல்லிட்டே இருக்கணுமா? இப்போதான், ரமலான் முடிஞ்சது. அதப்பத்தி ஒண்ணுமே காணோமே?

செலக்டிவ் அம்னீஷியாவா?//

என்ன கேள்வி கேட்டதற்க்கு பதிலே காணம்?.நன்பரே இவங்க கிறிஸ்ட்ன்ஸ் பத்தியும் எதுவும் சொல்ல மாட்டாங்க...?

தமிழ் ஓவியா said...

//இவங்க கிறிஸ்ட்ன்ஸ் பத்தியும் எதுவும் சொல்ல மாட்டாங்க...?//கிறித்தும மதத்தை மட்டுமல்ல, இஸ்லாமைப் பற்றியும் விமர்சித்து தமிழ் ஓவிய வலைப் பூவில் எழுதப்பட்டுள்ளது சுரேஸ்குமார்.

அனைத்து மதங்களும் ஒழிக்கப்ப்ட வேண்டும் என்பதுதான் எங்களது நிலை. இதில் விதி விலக்கெல்லாம் இல்லை சுதாகர்

பித்தன் உங்களின் கருத்துப்படி கோயில்கள் அதிகமானது என்பது பற்றிக்கூட ஏற்கனவே பதில் எழுதப்பட்டுள்ளது. தேடிப் படிக்கவும்.

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி Dharan

தமிழ் ஓவியா said...

//இவங்க கிறிஸ்ட்ன்ஸ் பத்தியும் எதுவும் சொல்ல மாட்டாங்க...?//கிறித்தும மதத்தை மட்டுமல்ல, இஸ்லாமைப் பற்றியும் விமர்சித்து தமிழ் ஓவிய வலைப் பூவில் எழுதப்பட்டுள்ளது சுரேஸ்குமார்.

அனைத்து மதங்களும் ஒழிக்கப்ப்ட வேண்டும் என்பதுதான் எங்களது நிலை. இதில் விதி விலக்கெல்லாம் இல்லை சுதாகர்

பித்தன் உங்களின் கருத்துப்படி கோயில்கள் அதிகமானது என்பது பற்றிக்கூட ஏற்கனவே பதில் எழுதப்பட்டுள்ளது. தேடிப் படிக்கவும்.

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி Dharan

தமிழ் ஓவியா said...

//இவங்க கிறிஸ்ட்ன்ஸ் பத்தியும் எதுவும் சொல்ல மாட்டாங்க...?//
கிறித்தும மதத்தை மட்டுமல்ல, இஸ்லாமைப் பற்றியும் விமர்சித்து தமிழ் ஓவிய வலைப் பூவில் எழுதப்பட்டுள்ளது சுரேஸ்குமார்.

அனைத்து மதங்களும் ஒழிக்கப்ப்ட வேண்டும் என்பதுதான் எங்களது நிலை. இதில் விதி விலக்கெல்லாம் இல்லை சுதாகர்

பித்தன் உங்களின் கருத்துப்படி கோயில்கள் அதிகமானது என்பது பற்றிக்கூட ஏற்கனவே பதில் எழுதப்பட்டுள்ளது. தேடிப் படிக்கவும்.

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி Dharan

தமிழ் ஓவியா said...
This comment has been removed by the author.
சுதாகர் said...

//அனைத்து மதங்களும் ஒழிக்கப்ப்ட வேண்டும் என்பதுதான் எங்களது நிலை. இதில் விதி விலக்கெல்லாம் இல்லை சுதாகர்//

இது பூசி முழுகும் வேலை. கேட்டதற்கு நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

நம்பி said...

//இது பூசி முழுகும் வேலை. கேட்டதற்கு நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.//

இதில் தான் அதிக அழுக்குகள்..அதிக உயிர் கொல்லி கிருமிகள்..... இதை ஒழித்தால் எல்லாம் ஒழிந்து விடும். இது நேரடியான பதிலா...? இதுவும் இல்லையா..?

நீ குத்தவாளி என்றால் அவனும்தான் குற்றவாளி எனபது போல் சுட்டிக்காட்டுவது தான் நேரடியான, ஞாயமான கேள்வியா...? நீதிமன்றத்தில் நீ செஞ்சியா இல்லையா....?

செஞ்ச...அப்ப உள்ள போ...

நீ குத்தவாளி ஏற்றுக்கொள்கிறாயா...? ரைட் முடிஞ்சது.

கடவுள்! கடவுள்! என்பது இல்லவே இல்லை...கடவுளை கற்பித்தவன் முட்டாள்... என்று சொல்லிவிட்டபொழுது..இந்த சமயக் கடவுள் இல்லை இந்த சமயக் கடவுள் இருக்கிறதாகவா? பெரியார் சொன்னார். ஆரம்பத்திலேய ஒரே போடா போட்டுட்டாரே....

கடவுளை வைத்து அதிக பித்தலாட்டமும் அடிமைத்தனத்தையும், சாதியையும் உருவாக்குவது இந்த இந்து மதக்கடவுள்கள் தான்...அதுவும் ஆரியப்பார்ப்பனன் உருவாக்கிய கடவுள்கள் தான்.

பித்தன்...எழுதியது...//ஆனால் கடவுளை எதிர்க்கின்றேன் என்ற பெயரில் தினமும் கடவுள் பேரைச் சொல்லி இரண்டு பதிவுகளாது போடும் நீர்தான் உன்மையில் ஒரு பக்திமான்.//

அப்படியென்றால் நீர் நாத்திகன்....ஏனென்றால் கடவுள் கருவறையை பெட்ரூம் ஆக்கி காமலீலை நடத்தும் பார்ப்பன நபர்கள், கடவுள் இருப்பிடத்தை கொலைக்களமாக்கி கடவுளின் முன்னாலேயே சங்கரராமனை போட்டுத்தள்ளியது, எழுத்தாளர் அனுராதா ரமணனை காமலீலைக்கு அழைத்த (நான் தான் கடவுள் என்று சொல்லிக்கொள்ளும்) சங்கராச்சாரியார் எல்லாம் கடவுள் ஒன்றும் செய்யமாட்டார் சும்மா உளுஉளுவாங்காட்டியும்..காட்டுவது எல்லாம் பிறரை ஏமாற்றுவதற்குத்தானே

(இந்த பித்தலாட்டங்கள் தினம் தினம் நாட்டில் நடைபெற்றுக்கொண்டுதானிருக்கிறது எல்லா இடங்களிலும் ஆதாரங்களுடன் இருக்கிறது...எல்லாம் பார்த்துகிட்டுத்தானே இருக்கிறோம்)....

கடவுள் என்பது ஒன்று இல்லை அவர் முன்னாடி எது செய்தாலும் கடவுள் ஒன்றும் செய்யமாட்டார் என்று முன்பே தெரிந்த உம்மை போன்றாரும், ஆரியப் பார்ப்பனர்களும் அப்பட்டமான நாத்திகர்கள் தானே....

....சொன்னது போல் பகுத்தறிவுவாதிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது...அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற நம்பிக்கை...ஆகையால் ஆத்திகவாதிகள் என்று கூறினீரோ என்னவோ தெரியாது.

இவர்களுக்குப் பிறகு மூன்றாவதாகத் தானே உமது கண்டுபிடிப்பான கற்சிலைக்கடவுள்கள் வருகின்றன...அது எந்த சமயக்கடவுளாகட்டும் இவர்கள் (தாய் தந்தை...அதற்குப்பிறகு ஆசிரியர்) இவர்களுக்குப்பிறகு தான் எல்லா கண்டுபிடிப்பு கடவுள்களும்.

இப்படி உண்மையை போட்டு அப்பப்ப உடைக்கணும்...