Search This Blog

6.9.09

கடவுளாவது! பக்தியாவது !! மண்ணாங்கட்டியாவது!!!




பக்தீ

5.9.2009 நக்கீரன் இதழ் பக்கம் 21 இல் இடம் பெற்ற செய்தி இதோ:

திருவண்ணாமலை:

கடவுள் செய்த பாவம்!

திருவண்ணாமலை அருளாட்சி நடத்தும் அருணாச்சலேஸ்வரரைத் தரிசிப்பதற்காக, கொடைக்கானலில் இருந்து பிரபு, பாலாஜி, முரளி, கார்த்தி, பால்பாண்டி, பாண்டியராஜன், வீரமணி என ஒருகுழு வந்தது.

எங்கள்ல 5 பேர் உண்டியலில் காசு போட்டோம். 2 பேர் அய்யரின் தீபத்தட்டில் போட்டாங்க. தீபத்தட்டில் காசு போட்ட 2 பேருக்கு மட்டும் திருநீறு கொடுத்த குருக்கள், எங்களை முறைத்தபடி போய்விட்டார். திருநீறு கேட்டும் கொடுக்கவில்லை. கொடிமரக் குருக்கள் கேட்கிற பணத்தைக் கொடுத்தால், அவர் கருவறை வாசலுக்கே கூட்டிப் போறதாச் சொல்றார். என்ன கோயிலோ, என்ன நிர்வாகமோ, அண்ணாமலையாருக்குத்தான் வெளிச்சம்? புலம்பிவிட்டுப் போனார்கள் கொடைக்கானல் பக்தர்கள். கோயில் இணை ஆணையர் புகழேந்தியோ... நிச்சயமாக இதைப் போன்ற எல்லா குறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்துவிடுவோம் என்கிறார்.

------------------------- து.ராஜா

பார்ப்பனர்களை அதுவும் அர்ச்சகப் பார்ப்பனர்களை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமானதாக இருக்காது. காரணம் கடவுளாவது பக்தியாவது மண்ணாங்கட்டியாவது பணத்தின்மீதுதான் அவர்களின் குறியெல்லாம்.

சும்மாவா சொன்னான் பார்ப்பன பாரதி? பேராசைக்காரனடா பார்ப்பான். பெரிய துரை எனில் வேர்ப்பான் என்றானே மற்றவர்களை விட பாரதிக்கு அதிகம் தெரித்திருக்கும் அல்லவா!


சிதம்பரம் நடராசர் கோயில் இந்து அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த நிலையில், உண்டியல் பணம் கறாராக அரசு கஜானாவுக்குச் செல்லுவதைப் பொறுக்க மாட்டாத தீட்சிதப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்?

அந்த உண்டியலில் எண்ணெய்யையும், நெய்யையும் ஊற்றி ரூபாய் நோட்டுகள் நாசமாகப் போகட்டும் என்ற பரந்த எண்ணத்தில் செயல்பட வில்லையா?


தமக்குப் பயன்படாதது மற்ற யாருக்கும் பயன்படக் கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின் தாரக மந்திரம். திருவண்ணாமலையிலும் அதுதான் நடந்திருக்கிறது.

கோவிலுக்குச் செல்லுவது, காணிக்கைக் கொடுப்பது, கடவுளிடம் பேர் ராசிக்கு அர்ச்சனை செய்வது எல்லாமே ஒரு வகையான கொடுக்கல் _ வாங்கல் வியாபாரம்தானே!

பக்தர் இன்னது செய்தால், பகவான் இன்னது செய்வான் என்பது ஒரு வகையான பண்டமாற்று முறைதானே!


உண்மையிலே கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் என்றால், பக்தனின் தேவையை உணர்ந்து அதன் அடிப்படையில் அருள்புரிய மாட்டானா? இடையில் இந்தத் தரகர்கள் அர்ச்சகர்கள் எதற்கு?

பக்தியில் புத்தியைச் செலுத்தக் கூடாது என்று வைராக்கியமாக இருந்தாலும், இந்த ஒரே ஒரு இடத்திலாவது ஓர் எள் மூக்குமுனை அளவுக்காவது சிந்திக்கக் கூடாதா?

----------------- மயிலாடன் அவர்கள் 6-9-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

1 comments:

மணிகண்டன் said...

கோபுரம் ஸ்ரீரங்கம் மாதிரி இருக்கே ?