சனிப்பெயர்ச்சியாம்
சனி என்பது ஒரு கோள். வியாழனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கோள். இதன் குறுக்களவு மட்டும் சுமார் 73,000 மைல். இக்கிரகம் மிக இலேசான பொருள்களால் ஆனதால் இதன் அடர்த்தி பூஜ்யம் புள்ளி 715 ஆகும். பூமிக்கும், சனிக்கும் இடையில் உள்ள தொலைவு 75 கோடி மைலாகும்.
விஞ்ஞான உண்மைகள் இவ்வாறு இருக்க, இந்தச் சனிக்கிரகம் சாயை என்ற பெண்ணுக்கும், சூரியனுக்கும் பிறந்தான் என்பது எத்தனை காட்டுவிலங்காண்டித்தன சிந்தனை!
சனி என்னும் கிரகத்தை கடவுள் பட்டியலில் சேர்த்து, விஞ்ஞானத்துக்கு விரோதமாக படித்தவர்கள்கூட மடமையில் மூழ்கி, சனிப் பெயர்ச்சிக்காக திருநள்ளாறு சென்று தோஷம் கழிக்றார்கள் என்றால், இதனைவிடக் கேவலம் வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?
நீதிபதிகள் என்கிற நிலையில் உள்ளவர்கள் உள்பட, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் அரசு முறையில் முகாம் போட்டு (camp) அதன் சாக்கில் திருநள்ளாறு சென்று சனீஸ்வரனுக்குக் கும்பிடு போடுவது என்பது சர்வ சாதாரணம்.
திருநள்ளாறில் சனீஸ்வரனுக்குக் கோயில் கட்டியவர் கலிங்க நாட்டு அரசன் நளமகராஜனாம். நளனை சனி பிடித்ததால் அவன் நாடு நகரத்தை இழந்து அரச போகம் அகன்று, மனைவி, மக்களைப் பிரிந்து, உருக்குலைந்து அவதிப்பட்டான். அதன் காரணமாக திருநள்ளாறு வந்து வழிபாடு செய்யக் கோயிலுக்குள் நுழைந்தான்.
நளனைத் தொற்றிக் கொண்டிருந்த சனி துணுக்குற்றதாம். கடவுள் சன்னதிக்குள் சென்றால் கடவுள் சாபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று அஞ்சி, நள்ளாற்றுக் கோயில் மடத்தில் சனி போய் ஒளிந்துகொண்டானாம் (என்னே, வீரம்!).
தர்ப்பாரண்யேஸ்வர சுவாமியிடம் நளன் ஒரு வரம் பெற்றானாம். நான் வெளியே செல்லும்போது ஒளிந்துகொண்டிருக்கும் சனி பகவான் என்னை மீண்டும் பிடித்து ஆட்டக்கூடாது என்பதுதான் அந்த வரமாம். ஆண்டவனும் அந்த வரத்தை அளித்தானாம்.
இந்தக் கோயிலில் சனி தோஷம் நீங்கியதால் நளமகராஜன் சனிக்குத் தனிக் கோயில் அமைத்தானாம்.
சனி தேஷம் நீங்கிட இக்கோயிலில் உள்ள நள தீர்த்தத்தில் மூழ்கி, சனி பகவானை வழிபட்டு, வஸ்திரதானம், அன்னதானம், சொர்ண தானம் (தங்கம்) வழங்கினால் பீடை விலகுமாம்.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும், பரப்பியவன் அயோக்கியன் என்றும், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவியல் ரீதியான, பகுத்தறிவு ரீதியான கருத்தினை எடுத்துச் சொன்னால், அவரின் தொண்டர்கள் பிரச்சாரம் செய்தால், மனம் மிகவும் புண்பட்டு இரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்றும், செந்நீர் வடிப்போர் ஒரு கிரகத்தை ஆண், பெண் உடலுறவோடு சம்பந்தப்படுத்திப் பிறந்த குழந்தை என்றெல்லாம் எழுதுவதும், பேசுவதும், நம்புவதும், அதற்காகக் கோயில் கட்டுவதும், அக்கோயிலுக்குச் சென்று தீர்த்தத்தில் முழுக்குப் போடுவதும், நேர்த்திக் கடன்கள் கழிப்பதும் எந்த அட்டவணையைச் சேர்ந்தது?
திருநள்ளாற்றில் வாழ்நாள் முழுவதும் குடியிருக்கும் மக்கள், அந்தச் சனீஸ்வர பகவானை அன்றாடம் வழிபட்டும் கண்ட பலன் என்ன? அவர்கள் தோஷம் எல்லாம் நீக்கப்படாததால்தான் அந்த ஊரில் புதுச்சேரி அரசாங்கம் மருத்துவமனைகளைக் கட்டி வைத்துள்ளதா?
அவ்வூர் மக்கள் மற்ற பகுதிகளில் வாழ்வோரைவிட சேம நலனுடன், எவ்விதக் கழிப்பிணி, கஷ்டம், நஷ்டம் இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்களா?
முதலில் தம்மைத் தேடிவரும் பக்தர்களின் பொருள்களை, உடைமைகளைத் திருடு போகாமல் சனீஸ்வர பகவான் காப்பாற்றிக் கொடுக்கட்டும்.
பக்தர்களின் பொருள்கள் அதிகமாகத் திருடு போவதால், 12 நவீன கேமராக்களைப் பொருத்தி வேவு பார்க்கப்படுகிறது என்கிற சேதியும், சனீஸ்வர பகவான்பற்றி பக்கம் பக்கமாக சிறப்பிதழ் போடும் ஏடுகளிலும் இடம்பெறத்தான் செய்கிறது.
இரண்டில் எது உண்மை? பக்தர்கள் சிந்திக்கவேண்டாமா?
நாய் விற்ற காசு குரைக்காது என்பது ஏடு நடத்தும் வியாபாரிகளின் தொழில் மனப்பான்மை. மக்கள் மடையர்களாக இருக்கும்வரை அவர்களின் பிழைப்பும், பார்ப்பனியத்தின் பிழைப்பும் ஓகோ என்று நடக்கத்தான் செய்யும்.
ஆனாலும், பகுத்தறிவுக் கணையின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.
--------------நன்றி:-விடுதலை"தலையங்கம் 25-9-2009
6 comments:
அந்த கால்த்தில் விரும்பியவருடன் பெண்கள் உறவு கொள்வது ரொம்ப சுலபம் போல!
கர்ப்பம் ஆயிட்டா சூரியனை நினைச்சிகிட்டே படுத்துகிட்டு இருந்தேன் நைட்டு வந்து செஞ்சிட்டு போயிட்டாருன்னு சொல்லிரலாம் பாருங்க!
எது எப்படியே ஒரு வகையில் இந்து புண்ணாக்கு மதம் பெண்களுக்கு உதவியா இருந்திருக்கு!
என்ன நான் சொல்றது!
நீங்க இந்த மாதிரி எத்தனை எழுதினாலும் இந்து மதம் வாழ்வியல் என்று சொல்லி பல குழுக்கள் வளர்ந்துக் கிட்டு தான் இருக்கு.
நன்றாக உள்ளது... என்று தான் நம்மினத்தவர் மூடநம்பிக்கையில் இருந்து மீளுவார்களோ???
இன்னும் லட்சம் பெரியார் வந்தாலும் இவர்களை திருத்துவது எளிதல்ல...
ஏன் இந்திய ல மட்டும் சனி பகவான் இருக்கிறார் ? அமெரிக்க போன்ற நாடுகளுக் கெல்லாம் சனி பகவான் கிடையாதா ? ஒரு வெள்ளை காரனையும் அங்கு பார்க்க முடியவில்லையே ??
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வால்பையன்
நாளும் நலமே விளையட்டும்
என் இதயத்திலிருந்து....
&
கலாட்டாப்பையன்
சகோதரா!
பெரியார் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற புத்தகத்தை படித்துப்பாருங்கள்.அவர் நமது இந்து மதத்தைச் சீர்திருத்தவே நாத்திக இயக்கம் ஆரம்பித்தார்.இந்துமதத்தின் ஒவ்வொரு செயலும் விஞ்ஞானபூர்வமானது என்பதை இன்று ஐரோப்பியநாடுகள் நிரூபித்துவருகின்றன.அதுவும் நீண்ட ஆய்வுகளுக்குப்பிறகு.அல்வாவைப் பார்க்கலாம்.ஆனால் அதனுள் இருக்கும் இனிப்பை உணரத்தான் முடியும்.அதுபோலத்தான் கடவுளும்,இந்துதர்மக்கோட்பாடுகளும்!
Post a Comment