Search This Blog
30.9.09
கடவுள் நம்பிக்கையாளர்களை கடுமையாக விமர்சிப்பது சரியா?
கடவுள் நம்பிக்கையாளர்களை கடுமையாக விமர்சிப்பது சரியா? கடவுள் இருக்கிறது என்பவர்களை எல்லாம் கடுமையாகப் பேசுகின்றீர்களே, இது சரியா என்று கேட்கலாம்!
நியாயம்தான்.
அதே நேரத்தில், உங்கள் புராணங்களில் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களை எவ்வளவு கேவலமாக - இழிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லை என்பவன் மனைவியை எல்லாம் கற்பழிக்க வேண்டும் தலையை வெட்ட வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்துள்ளார்களே! அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
கடவுள் இருக்கிறது என்பவனைத் தான் கேட்கின்றேன். கடவுள் இருக்கிறது என்று கருதுகிறவன் எல்லாம் மற்றவன் சொல்லி நம்புகிறானே தவிர, அவனுக்கே – அவன் சொந்தப்புத்திக்குப் பட்டு ஏற்றுக் கொண்டு இருக்கிறானா? கடவுளுக்கு ஏன் இவ்வளவு கோயில்கள், உருவங்கள்? கடவுள் அன்பே உருவானவன் என்கிறான். அவன் கையில் ஏன் அரிவாள், கொடுவாள் ஈட்டி எல்லாம்? இவை எல்லாம் கொலைக்காரன் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்கள் அல்லவா? உருவமே இல்லாத கடவுளுக்குப் பொண்டாட்டி ஏன்? வைப்பாட்டி ஏன்? வருஷா வருஷம் கலியாணம் ஏன்? போன வருடம் பண்ணின கல்யாணம் என்ன ஆச்சு? எவன் அவளை அடித்துக் கொண்டு போனான் என்று பக்தன் சிந்திக்க வேண்டாமா? இவற்றையெல்லாம் நம்புவதால் யாருக்கு என்ன பிரயோசனம்? மனித சமூதாயத்திற்கு என்ன லாபம்? பார்ப்பான் இடுப்பில் காசு சேருவதுதான் மிச்சம்.
----------------தந்தைபெரியார் -"விடுதலை" 20-1-1973
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
சூடான கேள்விகள் - சம்மட்டி அடி!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
மனித சமூதாயத்திற்கு என்ன லாபம்? பார்ப்பான் இடுப்பில் காசு சேருவதுதான் மிச்சம்.//
அல்லா , ஏசு, ஜெஹோவா , எஹிப்திய கடவுள்கள், பஹாய் கடவுள்கள் நம்பினாலும் பார்ப்பனர் இடுப்பில் காசு சேருமா அய்யா.
//அல்லா , ஏசு, ஜெஹோவா , எஹிப்திய கடவுள்கள், பஹாய் கடவுள்கள் நம்பினாலும் பார்ப்பனர் இடுப்பில் காசு சேருமா அய்யா.//
இங்குள்ள பிரச்சினையைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பேசப்படுகிறது.
எஹிப்திய கடவுள்கள், பஹாய் கடவுள்கள் பற்றி பேசி திசை திருப்பது எந்தவகையில் நியாயம்?
குடுகுடுப்பை
இங்குள்ள பிரச்சினையைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பேசப்படுகிறது.
எஹிப்திய கடவுள்கள், பஹாய் கடவுள்கள் பற்றி பேசி திசை திருப்பது எந்தவகையில் நியாயம்?
//
இந்து மத கடவுள் நம்பிக்கையாளர் அப்படின்னு தலைப்பு இருக்கனும்.
இந்தியாவில் இஸ்லாம்,கிறிஸ்தவம் ,பஹாய் வழிபாடு உள்ளது. அதனால் கேட்ட கேள்வி அது. நீங்கள் பாதிக்கு மட்டும் பதில் சொன்னீர்களே ஏன்? அதிலும் பஹாய் இந்தியாவில் இருக்கிறது.
கடவுள் மறுப்பு / மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பது பொதுவாக இருக்கவேண்டும், இல்லையென்றால் இந்து மத வழிபாடுகளை / மூட நம்பிக்கைகளை விமர்சிக்க தனி தலைப்போடு இருந்தால் நலம்.மற்றபடி விமர்சிக்கும் உரிமை உங்களுடையது.விமர்சனம் நல்ல விளைவுகளையே தரும் என்று நம்புகிறேன் மற்றபடி நான் எதையும் திசை திருப்பவில்லை.
//கடவுள் மறுப்பு / மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பது பொதுவாக இருக்கவேண்டும்,//
எந்த கடவுளாக இருந்தாலும்,மதமாக இருந்தாலும் மூடநம்பிக்கையாக இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டியதுதான் எனக்கு ஒன்றும் கருத்து வேறுபாடு இல்லை.
//விமர்சனம் நல்ல விளைவுகளையே தரும் என்று நம்புகிறேன் மற்றபடி நான் எதையும் திசை திருப்பவில்லை.//
ஆரோக்கியமான விமர்சனம் நல்ல மனிதர்களை ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு எனவே உங்களின் இந்தக் கருத்திலும் எனக்கு மாறுபாடு இல்லை.
திசைதிருப்பவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். நானும் அதை வரவேற்கிறேன். நன்றி
இந்த பதிவை தங்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கிறேன். படியுங்கள்
"உங்கள் புராணங்களில் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களை எவ்வளவு கேவலமாக - இழிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லை என்பவன் மனைவியை எல்லாம் கற்பழிக்க வேண்டும் தலையை வெட்ட வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்துள்ளார்களே! அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
கடவுள் இருக்கிறது என்பவனைத் தான் கேட்கின்றேன். கடவுள் இருக்கிறது என்று கருதுகிறவன் எல்லாம் மற்றவன் சொல்லி நம்புகிறானே தவிர, அவனுக்கே – அவன் சொந்தப்புத்திக்குப் பட்டு ஏற்றுக் கொண்டு இருக்கிறானா? கடவுளுக்கு ஏன் இவ்வளவு கோயில்கள், உருவங்கள்? கடவுள் அன்பே உருவானவன் என்கிறான். அவன் கையில் ஏன் அரிவாள், கொடுவாள் ஈட்டி எல்லாம்? இவை எல்லாம் கொலைக்காரன் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்கள் அல்லவா? உருவமே இல்லாத கடவுளுக்குப் பொண்டாட்டி ஏன்? வைப்பாட்டி ஏன்? வருஷா வருஷம் கலியாணம் ஏன்? போன வருடம் பண்ணின கல்யாணம் என்ன ஆச்சு? எவன் அவளை அடித்துக் கொண்டு போனான் என்று பக்தன் சிந்திக்க வேண்டாமா? இவற்றையெல்லாம் நம்புவதால் யாருக்கு என்ன பிரயோசனம்? மனித சமூதாயத்திற்கு என்ன லாபம்? பார்ப்பான் இடுப்பில் காசு சேருவதுதான் மிச்சம்."
----------------தந்தைபெரியார் -"விடுதலை" 20-1-1973
அல்லா , ஏசு, ஜெஹோவா , எஹிப்திய கடவுள்கள், பஹாய் கடவுள்கள் மற்றும் எந்தக்கடவுளாக இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டியதுதான் குடுகுடுப்பை.
கடவுள் இல்லை என்பது அறியாமை என்ற காட்டில் இருப்பதற்கு சமம்
Post a Comment