தலபுராணங்களின் யோக்கியதை!
இது வேதாரண்யம் தலவரலாறு. இதனை வெளியிட்டது சிறீ வேதாரண்-யேஸ்வரசுவாமி தேவஸ்தானம். இதன் 45-46ஆம் பக்கத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.
"வேதாரண்யத்திற்கு அண்மையிலுள்ள ராமச்சந்திரபுரத்திலே ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். தன் மகன் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தான். மகன் பதினாறாவது வயதில் தாயைப் புணர்தல், பசுக் கொலை, கள் குடித்தல் முதலிய பாவங்களைச் செய்வான் என்றிருந்தது. இதே கவலையுடன் இருந்து பிராமணன் இறந்தான். மகன் கண்ணில் தந்தை எழுதி வைத்திருந்த சாதகக் குறிப்பு அகப்பட்டது. அதனைப் படித்துப் பார்த்த மகன் அஞ்சியழுது, தேறி, இவ்வளவு பாவங்களையும் நான் இங்கிருந்தாலல்லவா செய்யக் கூடும். எங்காவது தேசாந்திரம் போய்விடுவோம் எனப் புறப்பட்டு கங்கை வரை சென்று பல ஆண்டுகளைக் கழித்தான். தனக்குப் பதினாறு வயது கழிந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டு ஊருக்குத் திரும்பினான். இரவு நேரம் வழக்கம்போல ஊரில் பிச்சை எடுத்து அதனை உண்பதற்காக ஒரு வீட்டுத் திண்ணையை அடைந்தான். அங்கே ஓரிளம் விதவை வேலைக்காரியாக இருந்தாள். இவனைக் கண்டதும் இவன் இளமையிலும் அழகிலும் மயங்கி அவன் விருப்பப்படி இடமும், பிறவும் அளித்து உபசரித்தாள். எப்படியாவது இவனைக் கூடவேண்டும் என்று துடித்தாள். அவன் குடிப்பதற்காக நீர் கேட்டான். அவளோ, இவன் தன் வலையிலே சிக்கமாட்டான் என்பதையறிந்து மதுவையே நீரென்று கொடுத்தாள். அவனும் மதுவை இதுவரையறியாதவனாகையாலே உண்டான். மதி மயங்கினான். பக்கத்-திலிருந்த பசுவைக் கொன்றான். காமம் தலைக்கேறி, அவ்விதவையைப் புணர்ந்தான். பொழுதும் விடிந்தது; மது மயக்கமும் தெளிந்தது. தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அவ் விதவையைப் பார்த்து நீ யார்? உன் வரலாறு என்ன? என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவன் விதிவலி கொடிது, வெல்லுதற்கரியது என வருந்தினான். இப்பழி தொலையும் வழி யாது என அலைந்தான். ஒன்றும் புலப்படவில்லை. துணிந்து வாளால் கழுத்தை அறுத்துக் கொண்டாவது இறப்போம் எனத் துணிந்து வாளால் கழுத்தையறுத்துக் கொண்டான். அப்போது வேதாரண்யேசர் திருமுன் சென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்து, ஏ, அந்தணா! இதற்குத் தற்கொலையும் செய்து கொண்டு அப்பாவத்தையும் சுமக்க எண்ணுகிறாயா? திருமறைக்காட்டில் மணிகர்ணிகையில் மூழ்கி வேதவனேசரை வழிபட்டால் எல்லாப் பாவங்களும் நீங்கும். அப்படியே செய் என்றருளினார்.
பிரம்மச்சாரியும் அப்படியே மூழ்கி உய்ந்தான்; அவன் தாய் வழிபட்டுச் சத்தி பதம் பெற்றாள்."
இதை எழுதுவதற்கே கூடக் கை கூசுகிறது. ஆனால், வேதாரண்யேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் இத்தலத்தின் பெருமையும் தீர்த்தத்தின் (குளத்துநீர்) மகிமையும் எத்தகையது என்பதற்கு அளவுகோலை, தாயைப் புணர்ந்த பாவமும் தலை தெறிக்க ஓடியது என்பதிலே கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்றால், இது ஒரு நாடு, இங்கு ஒரு மதம்; இதனைக் கட்டியழ சங்கராச்சாரிகள் என்றால், இந்தக் கேவலத்தின் தொகுப்பை - எல்லையை - பக்தி மார்க்கத்தில் ஒழுக்கச் சீலர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள்தான் சீர்தூக்கி எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.
திருநீறு அணியாத நெற்றியைச் சுடு
சிவாலயம் இல்லாத ஊரைக் கொளுத்து
என்று உபநிடதத் திருமொழி கூறுகின்றது என்று சமஸ்கிருதத்தில் கரைகண்ட மறைமலை அடிகளார் கூறுகிறார்கள். (அறிவுரைக் கொத்து, பக்கம்-17)
மாற்றுக் கருத்துள்ளவர்களை இவர்கள் மதிக்கும் பாங்கு, நடத்தும் வன்முறை எப்படியோ ஒருபுறம் இருக்கட்டும். திருநீறுக்கு அவ்வளவு சிறப்பா என்று திகைக்கின்ற நேரத்தில் திருநீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சொல்கின்ற வைதீகத்தின் வாசகங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.
திருநீறணிந்த நெற்றியாளர்களைக் காணும் போதெல்லாம் இவர் என்ன பாதகத்தைச் செய்தாரோ என்ற நினைவுதானே நியாயவாதிகளுக்கு தோன்ற முடியும்- தோன்ற வேண்டும்.
-------------------நன்றி:-"விடுதலை" 18-9-2009
3 comments:
இப்படி ஒரு கதையை ஆன்மீக இந்துக்கள் கூட அறிந்து இருக்க மாட்டார்கள், ஏன் எனில் அவர்கள் தெடல் வேறு. ஆனால் நீங்கள் அனைவரும் அறிந்துவைத்து இருக்கீறீர்கள். அதுசரி
யார் யாரு என்ன பண்ணறாங்களே அவங்க அதுக்குதான முக்கியத்துவம் குடுப்பாங்க. அந்த வகையில தி க காரங்க இந்த கதை படிக்கிறது சரிதான். இது மாதிரி நிறைய பாவக்கதை எளுதுங்க. உங்க இயக்கதிற்கு நல்லது.
//பித்தன் said...
இப்படி ஒரு கதையை ஆன்மீக இந்துக்கள் கூட அறிந்து இருக்க மாட்டார்கள், ஏன் எனில் அவர்கள் தெடல் வேறு. ஆனால் நீங்கள் அனைவரும் அறிந்துவைத்து இருக்கீறீர்கள். அதுசரி
யார் யாரு என்ன பண்ணறாங்களே அவங்க அதுக்குதான முக்கியத்துவம் குடுப்பாங்க. அந்த வகையில தி க காரங்க இந்த கதை படிக்கிறது சரிதான். இது மாதிரி நிறைய பாவக்கதை எளுதுங்க. உங்க இயக்கதிற்கு நல்லது.
September 22, 2009 7:17 AM //
ஆன்மீகமல்லாத இந்துக்கள் யாரு? ஆன்மீகமில்லையென்றால்...அதாவது கடவுள் இல்லையென்றால் இந்துக்கள் எப்படி வரும்?
ஆன்மீகத்துடன் எதை தேடறாங்க....? காஞ்சிபுரத்துல மச்சேசுவர கோயில்ல தேடினாங்களே அது மாதிரியா?
இல்லை காஞ்சி மடத்தில தேடினாங்களே! சங்கரராமனை போட்டுத்தள்ளிட்டு அது மாதிரியா...?
இந்த மாதிரி தேடல்கள் தான் ஆன்மீக இயக்குத்துக்கா...? யாருக்காக இந்த தேடல்கள்...? கடவுளுக்காகவா...? கொஞ்சம் கூட ஈனமானங்கிடையாதா?
எதை தின்னா "பித்தம்" தெளியும்...?
வேதாரண்யேஸ்வரரை வழிபாடு செய்ய வரும் பக்தனை இவனும் இவ்வாறான பாபம் செய்து பரிகாரம் தேடுவதாக மக்களுக்கு சந்தேகம் வருமா?
Post a Comment