Search This Blog

30.9.09

பொது இடங்களில் உள்ள கோவில்களை இடிப்பதை முடிவு செய்ய வேண்டும்-உச்சநீதிமன்றம் உத்தரவு


மதச்சார்பற்ற தன்மையில் புதிய மைல்கல்
பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் புதிய கட்டுமானம் கூடாது

ஏற்கெனவே உள்ள கோவில்களையும் இடிப்பதை
மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும்

உச்சநீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் புதிதாகக் கட்டுமானப் பணி எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை செவ்வாய்க்கிழமை (29.9.2009) பிறப்பித்தது. நாடு முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் இதர மதத்தை சார்ந்த வழிபாட்டுத்தலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை இந்த இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அனைத்து மாநகரங்களிலும் பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் உள்பட அனைத்துக் கட்டடங்களையும் இடிப்பதற்கு 2006 ஆம் ஆண்டு அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், வழிபாட்டுத்தலங்களுக்காக பொது இடங்களை ஆக்கிரமிப்பது தடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, அதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு ஜூலை 31 ஆம் தேதி மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால்சுப்பிரமணியம், பொது இடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டுத்தலங்களை கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் புதிதாகக் கட்டுமானப் பணி ஏதும் மேற்கொள்ளப்படாது என்று உறுதி அளித்தார். இதைக் கேட்டறிந்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் புதிய கட்டுமானப் பணிக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

ஜூலை 31 ஆம் தேதிய தீர்ப்பு

இதே நீதிபதிகள் 2009,ஜூலை 31 ஆம் தேதி பிறப்பித்த ஆணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் என எந்த வழிபாட்டுத் தலமும் இடம் பெறக் கூடாது. தற்போது உள்ள வழிபாட்டுத் தலங்களை அகற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என வாதிடுவதை ஏற்க முடியும். இருப்பினும், மத்திய அரசு எதிர்காலத்தில் பொது இடங்களில் எந்தவிதமான வழிபாட்டுத் தலமும் இடம் பெறாமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது இடத்தில் யாராவது ஒருவர் வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்தினாலும் கூட அதை அனுமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து அரசு சொலிசிட்டர் ஜெனரல் கோபால்சுப்பிரமணியம் நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசின் கருத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதற்குப் பதிலளித்த கோபால் சுப்ரமணியம், மத்திய அரசு இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுடன் பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயலும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து வழக்கு செப்டம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி மேற்கண்ட தடை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.


---------------------நன்றி:-"விடுதலை" 30-9-2009

4 comments:

பித்தனின் வாக்கு said...

பொது இடங்களிலும், தெருவேர கோவில்களையும் இடிப்பதை நான் வரவேற்க்கின்றேன். அப்படியே திராவிடக் கலாச்சாரத்தின் படி கண்ட கண்ட இடங்களில் நிறுவியுள்ள சாலை நடுவில் உள்ள கண்ட கண்ட சிலைகளையும் இடிச்சா ரொம்ப நல்லா இருக்கும்.

தமிழ் ஓவியா said...

//பொது இடங்களிலும், தெருவேர கோவில்களையும் இடிப்பதை நான் வரவேற்க்கின்றேன்.//

மிக்க நன்றி

//திராவிடக் கலாச்சாரத்தின் படி கண்ட கண்ட இடங்களில் நிறுவியுள்ள சாலை நடுவில் உள்ள கண்ட கண்ட சிலைகளையும் இடிச்சா ரொம்ப நல்லா இருக்கும்.//

கோயில்கள் (விபச்சாரம்)குச்சிக்காரிகள் விடுதி என்று காந்தியார் சொல்லியுள்ளார். அதனால் அந்த விடுதிகள் எல்லாமும் இடிக்கப்பட வேண்டியது தான்.அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

இப்போது கூட ஒரு அர்ச்சகப் பார்ப்பான் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் கருவரைக்குள்ளேயே மன்மத லீலையை அரங்கேற்றியதை ஜூனியர் விகன் விளியிட்டுள்ளது. இணையத்திலும் பதிவுகள் கிடைக்கிறது படித்துப்பாருங்கள்.

இதுமட்டுமல்லாமல் பல கோயில்களில் இப்படித்தான் நடந்து வருகிறது
எனவே கோயில்கள் கண்டிப்பாக இடிக்கப்பட வேண்டும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை

ஆனால் உங்கள் வாதப்படி திராவிடக் கலாச்சாரத்தின் படி சிலைகள் நிறுவுபது என்பது வணங்குவதற்கல்ல.

நமக்காக உழைத்த பாடுப்பட்ட தலைவர்களை வருங்கால தலை முறையினருக்கு அவர் எப்படி இருப்பார் என்பதற்காக அவரின் சிலைகள் நிறுவப்படுகிறதே தவிர அவரை பூஜிப்பதற்கல்ல.

அந்த சிலைகள் நிறுவப்படும் போது அந்த நகராட்சி மாநகராட்சி நிறுவாகத்தினரின் எழுத்துப் பூர்வமாக அரசு அனுமதியோடு நிறுவப்படுகிறது.
என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

கோயில்கள் என்பது நம்மை இழிவுபடுத்த உருவாக்கப்பட்டது.

தலைவர்களின் சிலைகள் என்பது அவர்கள் மக்களுக்கு பாடுபட்ட காரணத்தினால் வருங்கால் தலை முறையினருக்கு எடுத்துக் காடுவதற்காகத்தானே தவிர அவரை பூஜிப்பதற்காக அல்ல.

நிறுவப்படுள்ள சிலைகள் உண்மையிலேயே மக்களுக்கு இடையூறாக இருப்பின் அகற்றுவதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு முன் உதாரணங்கள் உண்டு பித்தன்.

நன்றி

payapulla said...

மிக சிறந்த தீர்ப்பு. அப்படியே வெங்காயம் பெரியார் சிலைகளையும் நாடு முழுவதிலும் இருந்து அகற்றிவிட்டால் தீர்ப்பு முழுமையானதாகிவிடும்.
-பயபுள்ள.

தமிழ் ஓவியா said...

//பெரியார் சிலைகளையும் நாடு முழுவதிலும் இருந்து அகற்றிவிட்டால் தீர்ப்பு முழுமையானதாகிவிடும்.
-பயபுள்ள.//

கோயில்கள் என்பது நம்மை இழிவுபடுத்த உருவாக்கப்பட்டது.

தலைவர்களின் சிலைகள் என்பது அவர்கள் மக்களுக்கு பாடுபட்ட காரணத்தினால் வருங்கால் தலை முறையினருக்கு எடுத்துக் காடுவதற்காகத்தானே தவிர அவரை பூஜிப்பதற்காக அல்ல.

நிறுவப்படுள்ள சிலைகள் உண்மையிலேயே மக்களுக்கு இடையூறாக இருப்பின் அகற்றுவதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு முன் உதாரணங்கள் உண்டு

பயபுள்ள