Search This Blog

16.7.09

துரியோதனனும் தர்மனும் குற்றவாளிகளே! ஏன்? எப்படி?

பகுத்தறிவுச் சரவெடி

அப்புடு
: ஏன் அத்திம்பேர், நம்ம துரியோதனனையும், தர்மனையும் கையில காப்பு மாட்டி போலிஸ் இழுத்துண்டுப் போறா?

சுப்புடு: அந்தக் கர்மத்த ஏண்டா கேக்குற....? தன்னோட பொடவையை அவிழ்த்ததா துரியோதனன் மேலயும், அத தடுக்காம தேமேன்னு வேடிக்கை பார்த்துண்டு இருந்ததா தன்னோட ஆம்படையான் தர்மன் மேலயும், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் போய் பாஞ்சாலி கம்ளையின்ட் பண்ணிட்டாளாம்.

---------------நன்றி:"உண்மை" ஜூன் 16-31_2009

7 comments:

மணிகண்டன் said...

kalakkal.

Muhammad Ismail .H, PHD., said...

நீர் ஒரு பகுத்தறிவு வியாதி என்பதை நிரூபித்து விட்டீர். பாஞ்சாலியின் சேலையை உருவியது துரியோதனன் அல்ல. மாறாக அந்த காரியத்தை செய்தது துச்சாதனன் தான். கீழே முழு விவரமும் உள்ளது.

http://ta.wikipedia.org/wiki/துச்சாதனன்

அது சரி. நீங்கள் தான் மகா பாரதமே பொய்யானது என்று கூறிவிட்டு பிறகு அதில் ஏன் உங்களது பொய்யை அதில் கலக்கி உள்ளீர்? இது தான் உங்களுக்கு தந்தை பெரியார் கற்று தந்த பகுத்தறிவு பாடமா?

ஒரு நிகழ்வில் நடந்த உண்மையை மறைத்துவிட்டு அதில் உங்களது பொய்யை கலந்து, பிறகு அந்த உண்மை நிகழ்வை முழு பொய்யாக மக்களிடம் கூறுவது தான் பகுத்தறிவா? பதில் தாருங்கள்.


with care and love,

Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

தமிழ் ஓவியா said...

அய்யா எம்.இஸ்மாயில் என்னமோ அதிசயத்தை கண்டுபிடித்த மாதிரி துள்ளி குதித்து மகாபாரதத்துக்கு வக்காலத்து வங்குகிறீர்கள்.

திருதராட்டிரனுக்கு பிறந்த கவுரவர்கள் 100 பேரில் துரியோதனன் மூத்தவன். அவன் தம்பி தான் துச்சாதனன்.


மகாபாரத்த்தை அக்கு வேறு ஆணி வேறாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல்களை எல்லாம் படித்து தான் அதன் உண்மையை வெளியிடுகிறோம்.அண்ணனின் முன்பு தான் இந்த அசிங்கங்கள் எல்லாம் நடந்ததாக புனையப்பட்டுள்ளது. 100 பேரையும் சொல்ல முடியாததால் தான் மூத்தவனைச் சொல்கிறோம்உங்களைப் போல் முனைவர் பட்டம் பெற்று மூளை மழுங்கி போனவர்கள் அல்ல நாங்கள்.

உங்களைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதும் மேதாவித்தனமெல்லாம் எங்களுக்கு இல்லை.

கையாலாகதவுக்குத்தான் கடவுள் அருள்

தமிழ் ஓவியா said...

எம். இஸ்மாயிலால் கொடுக்கப்பட்ட சுட்டியிலிருந்து எடுக்கப்பட்ட செய்தியை கீழே கொடுக்கிறேன். படியுங்கள்.மகாபாரதத்தின் யோக்கியதையையும் அதன் உண்மைத்தன்மையைம் அறிந்து கொள்ளலாம்.

"துச்சாதனன் பிறப்பு

காந்தாரி கர்ப்பமுற்றாளாயினும் அது நீண்டகாலம் நீடித்துச் சென்றதேயன்றிப் பிள்ளை பிறக்கவில்லை. வெறுப்புற்ற காந்தாரி தனது வயிற்றில் அடித்துக்கொண்டாள். திருதராட்டிரனின் தம்பியான பாண்டுவின் மனைவி ஏற்கெனவே மூன்று பிள்ளைகளைப் பெற்றிருந்ததும் அவளுக்குப் பொறாமையை ஊட்டியிருந்தது. அவள் வயிற்றில் அடித்துக்கொண்டதனால் அவள் வயிற்றிலிருந்து சாம்பல் நிறமான தசைப் பிண்டம் ஒன்று அவள் வயிற்றிலிருந்து வெளிவந்தது. காந்தாரி மிகுந்த துயருற்றாள். அவளுக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என வாழ்த்திய பெரியவரான வியாசரிடம் அவள் முறையிட்டாள். வியாசர் அப் பிண்டத்தை நூறு பாகங்களாகப் பிரித்து, நெய் நிறைந்த பானைகளிலே இட்டு மூடி அவற்றை மண்ணிலே புதைத்து வைத்தார். ஓராண்டின் பின் முதல் பானை திறக்கப்பட்டபோது அதிலிருந்து துரியோதனன் வெளிப்பட்டான். இரண்டாவது பானையில் இருந்து வெளிவந்தவனே துச்சாதனன் ஆவான். துச்சாதனன் துரியோதனன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தான். அவனுடன் இணைந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் பல திட்டங்களையும் தீட்டினான்."
--http://ta.wikipedia.org/wiki/துச்சாதனன்

பானையிலிருந்து பிறந்தது என்ற கருத்தை உண்மை என்று ஏற்றுக் கொண்ட முனைவருக்கு புதிதாக ஏதாவது பட்டம் கொடுக்கலாம்?

அவரின் விடை கண்டு..

கவரவர்களில் கடைசிப் பானையில் இருந்து பிறந்தவனின் பெயர் என்ன? முனைவர் இஸ்மாயில்

பதில் அளியுங்கள். விவாதத்தை தொட்ர்வோம்....

இதன் மூலம் பல உண்மைகள் உலாவர உதவும்...

நன்றி

தமிழ் ஓவியா said...

அடுத்து துகிலுரிப்பு என்ற தலைப்பில் உள்ள செய்திகளையும் வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

"துகிலுரிப்பு

பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமன் துரியோதனன் ஆகியோரின் சதிவலையில் வீழ்ந்து தனது பொருளெல்லாம் சூதிலே தோற்றான். பின்னர் தனது தம்பியரையும், மனைவியான திரௌபதி (பாஞ்சாலி)யையும் கூடப் பணயம் வைத்துச் சூதாடினான் அவர்களையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து, துரியோதனன் ஆணைப்படி திரௌபதியை அவைக்கு இழுத்துவந்த துச்சாதனன், அவளது சேலையை உரிய முற்பட்டான். கண்ணனுடைய சக்தியால் இழுக்க இழுக்கத் பாஞ்சாலியின் சேலை நீண்டுகொண்டே இருந்தது. இதனால் பாஞ்சாலி காப்பாற்றப்பட்டாலும் சினம் கொண்ட அவள், துச்சாதனனின் இரத்தத்தைக் கூந்தலில் தடவினாலன்றித் தனது கலைந்த கூந்தலை முடிப்பதில்லை எனச் சபதம் எடுத்தாள். பீமனும் அவனது நெஞ்சைப் பிளந்து இரத்தத்தைக் குடிப்பேன் எனச் சூழுரைத்தான்."

-------------http://ta.wikipedia.org/wiki/

துரியோதனின் ஆணைப்படிதான் துச்சாதனன் சேலையை உருவினான்.

இப்பொழுது சொல்லுங்கள் இஸ்மாயில் புடைவையை உருவனது துச்சாதனனாக இருக்கலாம், உருவச் சொன்னது துரியோதன் என்ற உண்மையை மறைத்த நீங்கள் யோக்கியரா?

பகுத்தறிவு வியாதி என்று எல்லாம் எங்களை ஏளனம் செய்தீரே.இது சரியா?
முனைவர் பட்டம் பெற்றும் உங்களுக்கு மூளை வளரவில்லையே என்றுதான் நாங்கள் ஆதங்கப் படுகிறோம்.

பொறுப்புணர்வுடன் செயல் படுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....விவாதத்தை தொடர்வோம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

மணிகண்டன்
$
முனைவர் முகமது இஸ்மாயில்