Search This Blog

18.7.09

தமிழ் பேசினால் எனக்கு தீட்டு மறுபடியும் ஸ்நானம் பண்ணணும்!

"பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" - 9


ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

------------------------------------------------------------------------------

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும்(காஞ்சி சங்கராச்சாரியார்) ஒரு நாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து வைத்தார். "ஏன் தாத்தாச்சாரியாரே - நாம எவ்வளவோ சபை நடத்துகிறோம் உபன்யாஸம் பண்றோம் ஹோமம் பண்றோம் ஆனா.. பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே.. அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிற மாதிரி ஏதாவது பண்ணணுமே" என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.

நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி? ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம்.

தமிழ்தானே!

ஆழ்வார்களோ பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள் இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?”

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவருடைய கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

"இதப்பாரும் எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம் இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச் சேரும் ஏன்னா - நாம எடுத்துண்டதும் தமிழ் சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?”

என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

நாங்கள் இப்படி பெரிய திட்டம்பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும் சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.

அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.

"ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன? என்று மகாபெரியவர் நகர்ந்த பிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.

"உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்துகொள்... என்றேன.; அப்போதும் அந்த கேள்வியைக் கேட்டவர்களுக்குப் புரியவில்லை.


உங்களுக்கு...?
"நீங்களும் மகா பெரியவரும் ஏன் சமஸ்கிருத்திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்.. ஸ்நானத்தை முடிச்சுப் போடுகிறீர்கள் பேசிக் கொண்டிருப்பதற்கும் குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்?”


மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள்
சத்திரத்தில் இருந்த சிலர் அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன் அந்த பதிலை உங்களுக்குச் சொல்வதற்கு முன்.. மகாபெரியவர் திருப்பாவை .திருவெம்பாவை என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்ட வழியில் சொல்கிறேன்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும் அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்குப் பொருள் (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்.!

தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும் அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.

தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாகவும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும். உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல் பொழுது விஸ்தாரமாகும்.

இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடிகாலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிலுசிலு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு 'பாவை" தெய்வம் பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.

இப்பண்பாடு நீட்சியாகி.. தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள்.

இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து 'நமது கோரிக்கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம் நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ அவரை முதலில் எழுப்ப வேண்டும் என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.

கடவுளை மனித வழியில் அணுகுவது என்ற கலாச்சாரம் இது பிற்பாடு.. கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற 'நாயக நாயகி பாவம்" வரை வளர்ந்தது இந்தப் பண்பாடு.

தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு, அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர் பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு, ஆதலால் 'பாவை" நோன்பு ஆயிற்று.

இத்தகைய தூய தமிழ் கலாச்சாரத்தைத் தான் சைவத்தின் மாணிக்கவாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள்.

திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள். இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத்துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.

தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக்கியத்தை 'பாவைமாநாடு" என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகா பெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்திருக்கும்.

இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடை மருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன 'ஸ்நான" பதில் அவர்களுக்கு புரியவில்லை.

அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக.. மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன் அது...

கும்பகோண மடம். சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிறக் கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட 'மடி" அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளிக்கவேண்டும். அந்த வகையில் குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில் நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர் மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால் அருணாசலத்திடம் சொன்னேன 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது நாளை வாயேன" என்றேன்.

'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்" என்றார் பக்தர்.

எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர் விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.

போனேன் கேட்டார் சொன்னேன். 'இதோ பாரும் தாத்தாச்சாரி அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே? தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். ப+ஜைக்கு நேரமாயிடுத்துல்யோ, அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ" என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன் "நான் சொன்னதுதானப்பா சுவாமிகள் மௌனத்தில் இருக்கார் நாளைக்கு வாயேன்" என்றேன்.

'அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன் சரி.. நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்"; என தாய்மொழியாம் தமிழில் மகாபெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.


------------- நன்றி:- 'நக்கீரன்’இதழில் அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் எழுதிய "இந்துமதம் எங்கே போகிறது?" என்ற நூலிலிருந்து

6 comments:

Unknown said...

// 'இதோ பாரும் தாத்தாச்சாரி அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே? தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும்.//

தமிழ் பேசினால் எனக்கு தீட்டு என்று கூறிய சங்கராச்சாரியை ...
த்தூத்தேரி

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ரவி said...

தாத்தாச்சாரியாரின் புத்தகம் என்னிடமும் இருக்கிறது. சிந்திக்க உண்மைகள் என்ற பதிவர் வலையேற்றமும் செய்துள்ளார்...

மத்தபடி இதுக்கு அந்த பதிவர் என்ன பதில் சொல்லப்போறாரோ தெரியல.

ஆனால் அந்த பதிவில் ஒருவர் பிரச்சினையை திசைதிருப்பும் விதமாக பேசிக்கொண்டிருக்கிறார்...

Thamizhan said...

தமிழ்,தமிழர்களின் முதல் எதிரி சங்கரமடம் எனும் திருட்டு சுவிஸ் வங்கி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
படித்த,பணக்கார,பதவியில் இருக்கும் நன்றி கெட்டத் தமிழர்கள் அங்கே சென்று தங்கள் மானம்,மரியாதை,பொருள் எல்லாவற்றையும் இழந்து வருவது எதற்காக?அந்தப் பணம் முழுவதும் பார்ப்பனர்கள் முன்னேற்றத்திற்குத் தான் என்பது புரியவில்லையா?
சுப்புணி என்ன கடவுளின் தரகரா?
அவரை இன்னும் மதிக்க வைப்பதற்காக அவரது கும்பல் போடும் வேடங்களில் ஏமாறும் இளிச்ச வாயர்களை என்ன் சொல்வது.
கடவுள் நம்பிக்கை உள்ள தமிழர்களும் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணட்டும்,ஏமாற்றும் சாமியார்களிடம் ஒன்றுமில்லை,எல்லாம் பொய், மாயை என்பதை உணரட்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செந்தழல் ரவி.

தமிழ் ஓவியா said...

//அந்த பதிவில் ஒருவர் பிரச்சினையை திசைதிருப்பும் விதமாக பேசிக்கொண்டிருக்கிறார்..//

கீழ்வெண்மனி தொடர்பாக பெரியார் விடுத்த அறிக்கையை அந்த வலைப்பூவில் பதிவு செய்துள்ளேன் தோழர் செந்தழல்ரவி. வாய்ப்பு இருப்பின் படிக்கவும்.

சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி