Search This Blog

29.7.09

கோயில்- விபச்சாரிகளின் விடுதி என்றார் காந்தியார்! அப்படி சொன்னது ஏன்?கோயில்- விபச்சாரிகளின் விடுதி என்றார் காந்தியார்! அப்படி சொன்னது ஏன்?

ஜூனியர் விகடனில் வெளிவந்த (26.7.2009) இக்கட்டுரையைப் படியுங்கள்


திருவொற்றியூரின் அழகிய அடையாளமே வடிவுடையம்மன் கோயில்தான். ஆனால், கோயில் வாசலில் நடக்கும் கூத்துகளை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கோயில் இருக்கிற இடம் என்றுகூட எண்ணாமல், சில கும்பல்கள் நடத்தும் சகிக்க முடியாத வேதனைகளை எழுதி, அரசின் கவனத்தை திருப்புங்களேன் சார்....

பக்தர் ஒருவர் ஆதங்கத்தோடு நம்முடைய ஆக்ஷன் செல்லில் இப்படி வேண்டினார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் வாசலில் கடை விரித்திருந்த சிலரிடம் நாம் பேசியபோதுதான், அந்த ஆதங்கத்தின் அடர்த்தி நமக்குப் புரிந்தது.

வெளியூர்ல இருந்து இந்தக் கோயிலுக்கு வர்றவங்க, முதல் நாள் இரவே வந்து அக்கம்பக்க பகுதிகள்ல தங்கிடுவாங்க. கோயில் வாசல்லயும் தூங்குவாங்க. இது தெரிஞ்சு, லோக்கல் ஏரியாவில் இருக்கிற நாலஞ்சு கும்பல்கள் திருட்டு வேலைகளில் இறங்கிடுச்சுங்க. பணத்தையும், பொருளையும் பறிகொடுத்த பக்தர்கள் போலீஸ்கிட்ட போய் புகார் கொடுத்து, எவ்வித நடவடிக்கையும் இல்லாம சோகத்தோட ஊருக்குத் திரும்புற கதை தொடர்ச்சியா நடந்துகிட்டு இருக்கு. இதுக்கிடையில, காமவெறி பிடிச்சு அலையிற சிலரும், வடிவுடையம்மன் கோயில் பக்கத்தில இருக்கிற கடைகளையே பெஸ்ட் ஸ்பாட்டா நினைச்சு சல்லாபக் கூத்து நடத்துறாங்க. தண்ணி, கஞ்சான்னு முழு போதையில அந்த ஏரியாவையே நாசப்படுத்துறாங்க. முன்னால எல்லாம் பஸ் ஸ்டாண்ட் கிராக்கிகளை அழைச்சு வந்து இந்தப் பகுதிகள்ல கூத்து நடத்தியவங்க, இப்போ அடுத்த நாள் வழிபாட்டுக்காக வந்து தங்கியிருக்கிற பெண் பக்தர்கள்கிட்டயும் வம்புதும்பு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நாலஞ்சு பெண்கள் இந்த மாதிரி சம்பவங்களால பாதிக்கப்பட்ட விஷயம் இங்கே இருக்கிற எல்லோருக்கும் தெரிஞ்சும், எந்த நடவடிக்கையும் இல்லை... என்றவர்கள், சமீபத்தில் அங்கு நடந்த துயர நிகழ்வையும் கூறினார்கள்.

கடல் அரிப்பில் வீடு வாசலை இழந்த ஒரு பெண், வடிவுடையம்மன் கோயில் வாசல்ல இருக்கிற ஒரு கட்டடத்திலே தங்கி இருந்தாங்க... அவங்களுக்கு மூன்று கைக்குழந்தைங்க வேற... ஆண் துணை இல்லாம அவங்க தங்கி இருக்கிறது தெரிஞ்சு, ராத்திரி நேரத்தில அவங்களை நெருங்கிய சல்லாபக் கும்பல், குழந்தைகளோட அழுகையைக்கூட பொருட்படுத்தாமல், கந்தல் கோலமா சீரழிச்சிட்டுப் போயிடுச்சு. அஞ்சாறு பேர் வெறித்தனமா நடந்துக்கிட்டதால, கிட்டத்தட்ட அந்தப் பெண்ணோட மனநிலையே கெட்டுப் போயிடுச்சு. கலைச்சுப் போட்ட துணியைப் போர்த்தக்கூட நினைக்காமல், அடுத்த நாள் காலையில அந்தப் பொண்ணு கந்தலா நின்ன கோலத்தை ஊரே பார்த்துச்சு. அதுக்கப்புறம்தான், இங்கே கடை வச்சுருக்கிற எல்லாரும் சேர்ந்து லோக்கல் ஸ்டேஷன்ல போய் புகார் பண்ணினோம். சில நாள்கள் மட்டும் ராத்திரில போலீஸ் ரவுண்ட் வந்துச்சு. ஆனா, அதுக்கப்புறம் போலீஸ் வரலை. ஆடிய காலு அடங்குமாங்கிற மாதிரி இப்போ சல்லாபக் கும்பல்கள் மறுபடியும் கோயில் வாசல்ல கூத்து நடத்த ஆரம்பிச்சிட்டாங்க... என்றார்கள் வேதனையின் உச்சத்தில்.

போலீஸ் தரப்பிலோ, இப்போ, அப்படியெல்லாம் ஏதும் நடக்கலையே சார். நைட்ல போலீஸ் கண்காணிப்பை பலப்படுத்தி இருக்கிறோம்... என்றார்கள்.

காவல்துறை கைகழுவிவிட்டால்... அம்மன்தான் ஆக்ஷன் எடுக்கவேண்டுமோ?

-------------------நன்றி:"விடுதலை" 29-7-2009

2 comments:

AMMA said...

தமிழ் ஓவியாவுக்கு வணக்கம்,
அருமையான படைப்பு,எதில் பின்னூட்டம் இடுவது என்று குழப்பம்.முதலாவதில் இடுகிறேன்!!!!
கோவில்களை வியாபார ஸ்தலம் என்றும் கூறலாம்!!கோவில்களில் என்று வரவு செலவு கணக்கு பார்க்க தொடங்கினார்களோ அப்போதிலிருந்தே வணிகம் ஆகிவிட்டது!
எந்த மதமோ ,சமயமோ,மார்க்கங்களோ வாழுவதற்கான நம்பிக்கை வழிகளை தான் சொல்லியிருக்கிறது,பாழாய் போன நம்மில் சிலதுகள் தான் அவற்றை எல்லாம் மூட நம்பிக்கை ஆக்கி விட்டார்கள்.
விவேகானந்தரும்,பாரதியாரும்,பெரியாரும்.....வாழ்ந்து வளி சொன்ன திரு நாட்டில் தானே பிரேமானந்தாவும்,ஜெஜெந்திரரும் வாழ்ந்தது?
என்னை பொறுத்தவரை கடவுள் இருக்கிறார்?இல்லை?என்ற வாதத்துக்கு அப்பால்,அடிப்படையில் தப்பு இருந்தததே இல்லை,அதை அடுத்த தலை முறைக்கு தவறான தகவல்களுடன் எடுத்து சென்றவர்களும்,பின்பற்றும் நாங்களுமே தான் காரணம்....?

உங்களுடைய பணி இனிதே தொடர,
என்றும் உங்கள் கருத்தோட்டத்தோடு
ஈழத்து சகோதரன் சேகுவேரா

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சேகுவேரா