Search This Blog

26.7.09

வாலிக்கும் சக்ரீவனுக்கும் தாய் (?) ஒன்று, தகப்பன்கள் இரண்டு !


சூரியகிரகணம்

புதன்கிழமை சூரியகிரகணம் வந்தாலும் வந்தது நம் நாட்டுப் பத்திரிகைகள் இருக்கின்றனவே... அவை மூட நம்பிக்கைச் செய்திகளைப் போட்டுக் குழப்பிக் குட்டைப் புழுதியாக்கிவிட்டன. இந்த ஆண்டு வானவியல் ஆண்டு. அறிவியல் ஆண்டு. அந்த ஆண்டில் மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு சூரிய ஒளிக் குறைவைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கும் போது கோபம் கொப்பளித்துக் கொண்டு வருகிறது.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் நிலைதான் இது முழுச் சூரிய ஒளிக் குறைவு இனி இந்தியாவில் 2,132 ஆம் ஆண்டுதான் நிகழும். எனவே நூறு ஆண்டுகளுக்-குத் தாங்கும்படியாக மூடநம்பிக்கை மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர் ஜோதிடர்களும், அதனை வெளியிட்டுப் பிழைக்கும் ஏடுகளும்! கலிலியோ தொலை நோக்காடியைக் கண்டு பிடித்துப் பயன்படுத்திய நிகழ்வு நடந்த 400 ஆம் ஆண்டு இந்த ஆண்டு! அப்பேர்ப்பட்ட ஆண்டில் இப்படிப்பட்ட மூடக்கருத்துப் பரப்புரைகள்.

இது அபசகுனமாம். எனவே கடவுள்களுக்குக் கூட ஆகாதாம். திருப்பதி கோயிலும் கூட அதனால் சாத்தப்படுகிறதாம். நிரம்பப் பயத்துடன் செவ்வாய் இரவு 9 முதல் புதன் காலை 8 முடிய 11 மணி நேரக் கதவடைப்பு கடவுளுக்குக் கூட! அதற்குப் பிறகும் விடாமல் சிறப்புப் பூஜையாம். பகல் 12 மணிக்குதான் கதவுகள் திறக்கப்பட்டு கடவுள் சிலை காற்றோட்டத்தைச் சந்திக்குமாம்.

தருமமிகு சென்னை நகரிலும் கோயில்களில் இதே கதவடைப்புதான். கிரகணத்தின் பலன்கள் என்று கூட ஓர் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. கோயில் அர்சகர்களுக்கு கெடுதி ஏற்படும் எனச் செய்தி கூறுகிறது. கிரகண தோஷம் படாமல் கதவைச் சாத்திக் கடவுளைக்காத்து, பிறகு தீட்டுக் கழித்துப் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கே கெடுதி என்றால் என்னய்யா ஞாயம்?

கிரகணத்திற்கு முன்னதாகவும், கிரகணத்தின் போதும் சாப்பிடக் கூடாது என்று மகான்கள் சொல்கின்றனராம்! சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்! எதை ஏற்பது? பக்தியுள்ளவர்கள் அஞ்ஞான மகான்களையும் புத்தியுள்ளவர்கள் விஞ்ஞான மகான்களையும் நம்பிக் கொள்ளுங்கள் என விட்டு விடலாம் என்றால் - இந்திய அரசமைப்புச் சட்டப் படிக்கான அடிப்-படைக் கடமைகள் முன்னாலே நிற்கின்றனவே!

அதற்கான செயல் விளக்கமாகத்தான் தமிழர் தலைவர் காலை 6.45க்கு உண்ணும் செயல் விளக்க நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து நடத்திக் காட்டினார். அதன் பிறகாவது ஏடு நடத்துவோரும் ஜோதிடம் கூறுவோரும் புருடா விடுவதை நிறுத்திக் கொள்வார்களா?


காஷ்யப் எனும் ரிஷியாம். அவனுக்கு 13 மனைவிகளாம். மூத்த மனைவியான அதிதி பெற்ற மகன்தான் சூரியன் என்ற கதையை ஒரு தமிழ் ஏடு எழுதுகிறது. கண்டதற்கும் டவுட் வரும் இந்த ஏட்டுக்கு இதில் டவுட் வரவில்லையே, ஏன்? இவர் ஜாதிகாரனுக்குத் துட்டு வருதோல்லியோ, அதனாலோ?

இந்திரன் எனும் கடவுளர்களின் தலைவன், பெண்வேடம் போட்டிருந்த சூரியனின் தேரோட்டியை (Sodomy) ப் புணர்ந்ததால் வாலி பிறந்தானாம். இதைக் கேட்ட சூரியன், அருணனின் பெண்வேடத்தைப் பார்த்து மோகித்துக் கலவி செய்ததால் (வேறு எப்படி கலவி? மிறிசி 377 தான்) சுக்ரீவன் பிறந்தானாம். ஆக வாலிக்கும் சக்ரீவனுக்கும் தாய் (?) ஒன்று, தகப்பன்கள் இரண்டு !


ஆணுக்கும் ஆண்களுக்கும் வாலி, சுக்ரீவர்கள் பிறந்திருக்கும் கதையை நம்பி, ஏற்றி, போற்றிப் புகழும் இந்து முன்னணிக்காரர்கள் இபிகோ 377 பிரிவைத் திருத்து என்று உயர்நீதி மன்றம் கூறினால், உச்சிக் குடுமி விடைக்-கக் கத்துகிறார்களே, சரியா?

------------------25-7-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

10 comments:

அது சரி(18185106603874041862) said...

//
மூத்த மனைவியான அதிதி பெற்ற மகன்தான் சூரியன் என்ற கதையை ஒரு தமிழ் ஏடு எழுதுகிறது. கண்டதற்கும் டவுட் வரும் இந்த ஏட்டுக்கு இதில் டவுட் வரவில்லையே, ஏன்?
//

சூரியனே அப்ப தான் பிறந்தாருன்னா...அதுக்கு முன்னாடி ஒலகத்துல சூரியனே இல்லியா?? சூரிய ஒளியே இல்லாம தான் பூமி இருந்துச்சா?? எல்லா உணவுக்கும் அடிப்படை தாவரங்கள்...அந்த தாவரங்களுக்கு அடிப்படை சூரிய ஒளி...அப்ப பூமியில் தாவரங்களே இல்லியா??

அப்ப அதிதி, காஷ்யப் எல்லாம் எங்க இருந்தாங்க?? எப்படி இருந்தாங்க??

இது என்னோட டவுட்!

ரிஷி said...

ராமாயணக் கதைதான் சரியில்லை என்று தெரிகிறதே.. அப்புறம் ஏன் உங்கள் தலைவர் கருணாநிதி சமீபத்தில் வீரப்ப மொய்லி எழுதிய ராமாயணக் கதை தொடர்புடைய புத்தகம் ஒன்றை வெளியிட்டார்?

தமிழ் ஓவியா said...

//ராமாயணக் கதைதான் சரியில்லை என்று தெரிகிறதே.. அப்புறம் ஏன் உங்கள் தலைவர் கருணாநிதி சமீபத்தில் வீரப்ப மொய்லி எழுதிய ராமாயணக் கதை தொடர்புடைய புத்தகம் ஒன்றை வெளியிட்டார்?//

ஏன் வெளியிட்டார் என்பது பற்றிய பதிவு இந்த வலைபூவில் விளக்கம் உள்ளது. படியுங்கள் தெளியுங்கள்

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/

தமிழ் ஓவியா said...
This comment has been removed by the author.
தமிழ் ஓவியா said...

"அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது."

என்று சொல்லியுள்ள இவர்

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_2111.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_9855.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_24.html

மேற்கண்ட சுட்டிகளைப் படித்துப் பாருங்கள் தமிழ் ஓவியா வலைப்பூவிலிருந்து பதிவு செய்யப்பட்ட பதிவுகளை அப்படியே எடுத்து பயன் படுத்தியுள்ளர்.

ஆனால்

பின்னூட்டத்தில் தமிழ் ஓவியா என்ற வலைப்பு இருப்ப்து தெரியாது என்கிறார்.இது சரியா?

இது குறித்து வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மீண்டும் சொல்கிறேன்:

உங்கள் வலைப்பூவில் சிறப்பாக செயல்படுங்கள். இப்போதுதான் நீங்கள்
http://thamizhovia.blogspot.com/ என்று ஆரம்பித்துள்ளீர்கள். நான் 2007 முதல் செயல் பட்டு வருகிறேன். எனவே தாங்கள் அருள்கூர்ந்து வேறு பெயரில் செயல்பட வேண்டுகிறேன்.

எனவே அரூள்கூர்ந்து இதில் ஈகோ எதுவும் பார்க்காமல் வேறு பெயரில் செயல் படுமாறு வேண்டுகிறேன்.

இது எனது அன்பான வேண்டுகோள்.


பல் தோழர்கள் தொலைபேசிமூலமூம், திரு டோண்டு அவர்கள் பின்னூட்டம் மூலம் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி

அடுத்த நடவடிக்கை தங்களின் பதில் கண்டு ....AyyA

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழ் ஓவியாவின் வலைப்பூ ஆனந்த விகடன் மூலமாக இணையம் பற்றியே தெரியாதவர்களுக்குக் கூட அறிமுகமான தளம்.


எனவே புதிய நபர் குழப்பம் இல்லாமல் வேறொரு முகவரிக்கு மாறிக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி SUREஷ் (பழனியிலிருந்து) சார்.

Unknown said...

Oviya

just because you are a mean black shirt wearing dravidian tamil should you behave like a compulsive son of a bitch?