Search This Blog

17.7.09

முகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்



அய்யரின் திரிபுவாதங்களுக்குச் சாவுமணி


மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.

பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.
சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாதவர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தியாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது. இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.

வேதங்களை இயற்றிவர்கள் பார்ப்பனரா? வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் ஷத்திரியர்களால் இயற்றப்பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை (3.280)

முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).

முகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்

நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்கத்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)

நானூறு தலைமுறையாக
வேதத்தை தொடாத பார்ப்பனர்கள்


இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை. கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)

--------------------சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் என்ற நூல் (சுவாமி விபுலானந்தர் மொழி பெயர்ப்பு) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மயிலாப்பூர் சென்னை -4 (1965) வெளியீடு.

4 comments:

Vernia said...

வணக்கம் தமிழோவியா...
தங்கள் வலைப்பூவில் விவேகானந்தர் கருத்துக்கள் இடம் பெற்றதை எண்ணி மகிழ்கிறேன். எப்படி பார்த்தாலும் விவேகானந்தர் ஓர் ஆன்மீகவாதி, அதுவும் இந்து மதம் சார்ந்தவர். உங்கள் இயக்க தலைவர் பெரியார், விவேகானந்தரை பற்றி எதிர்ப்பு விமர்சனம்தான் செய்திருக்கிறார். இந்து மதத்தை வேரோடு அறுக்க விரும்பும் ஒரு சமூகநல இயக்கத்தில் இருந்து கொண்டு ஏன் விவேகானந்தர் கருத்துக்களை வெளியிடுகிறீர்கள்?
எல்லோருக்கும் சொல்வது போல எனக்கும் எல்லா கட்டுரைகளையும் படிக்க சொல்லி அறிவுரை எதிர்பார்க்கவில்லை. என் கேள்விக்கு பொருத்தமான விடை ஒரு வரியாவது எதிர்பார்க்கிறேன். விடை கட்டுரை அளவையின் "லிங்க்" அனுப்பவும்.

நம்பி said...

//விவேகானந்தர் ஓர் ஆன்மீகவாதி, அதுவும் இந்து மதம் சார்ந்தவர். உங்கள் இயக்க தலைவர் பெரியார், விவேகானந்தரை பற்றி எதிர்ப்பு விமர்சனம்தான் செய்திருக்கிறார். இந்து மதத்தை வேரோடு அறுக்க விரும்பும் ஒரு சமூகநல இயக்கத்தில் இருந்து கொண்டு ஏன் விவேகானந்தர் கருத்துக்களை வெளியிடுகிறீர்கள்? //

எல்லா கட்டுரையும் படிக்கத்தேவையில்லை...விவேகானந்தர் கட்டுரைகளில் சிலவற்றை படித்தால் கூட போதும்...

இந்தியாவில் கடும் உணவுப்பஞ்சம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலமது...நாட்டில் பலர் பட்டினியால் செத்துக்கொண்டிருந்தனர்...ஆடுமாடுகளுக்கு தீவனம் வைக்கவும் முடியாத காலம்...உலக நாடுகள் முதல் உலகப்போரின் எதிர்வை நோக்கி முனைப்புடன் பனிப்போர் நடத்திக்கொண்டிருந்த காலகட்டமது...அந்த நேரத்தில்...விவேகானந்தரிடம் நிதி திரட்ட கோரி ஒரு இந்துமதவாதி இந்துத்துவா அமைப்பின் சார்பில் நிதி கேட்டார்...எதற்காக மனிதர்கள் சாவதற்காக அல்ல...பார்ப்பன இந்துக்களின் புனிதமாக கருதப்படும் மாடுகள் செத்து மடிவத்றாக...ஐயா மாடுகள் செத்து மடிவதற்காக...வருகிறீர்களே...ஏன் மனிதர்கள் செத்து மடிவதை பற்றி கவலைப்படவில்லையா...என்றால் அது அவர்கள் விதி...மாடுகள் செத்து மடிவது நாட்டிற்கு ஆகாது...என்று கூறியவுடன்...மிகக்கடுமையான கோபம் வந்துவிட்டது...மாடு தனக்கு வேண்டிய இரையை எங்காவது திரிந்து பெற்று கொள்ளும்...சகமனிதனை பற்றி நினைக்காத உன்னுடைய மனிதநேயமற்ற செயலுக்காக என்னை உடன்பட வைக்க நினைக்கிறீர்களே...வெளியே பாங்கள் என்று அனுப்பிவிட்டார். இதை பாராட்டமால் இருக்க முடியுமா...அதுவும் அந்த மௌடிகமான காலத்தில்....பெரியாரின் தத்துவத்தின் மூலமாக கருதுவது..சாக்ரட்டீசின் தத்துவம்..அவரும் மக்களை கேள்வி கேட்டார்....சாக்ரட்டீஸ் காலத்தில் அதாவது கிமு வில் சாக்ரட்டீஸ் பேசியது தான் பெரிய விஷயம்..அதுவும் அவருடைய மாணவர்கள் மூலமாக அறிவது....அவரும் முழுவதுமாக கடவுளை மறுக்கவில்லை...ஆனால் அன்றைய காலத்தில் அந்தளவுக்குதான் பகுத்தறிவு...அவ்வளவு வெளிப்படுத்தியது பெரிய விஷயம்...அலெக்சாண்டர் கிராகம்பெல் தானே தொலைபேசியின் தந்தை...இந்த கைப்பேசிக்கு முன் அது தானே...

விவேகானந்தரும் இதை கூறியிருக்கிறார்...கடவுள் இருக்கு இருக்கு மனிதநேயமற்று திரிபவனை விட...கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு மனிதநேயத்துடன் இருப்பவனே மேலானவன்...இப்போது நல்ல விஷயமா? கெட்ட விஷயமா...? இது போதுமா...? இன்னும் வேண்டுமா...?

சிக்காக்கோ பேச்சை கேட்ட பிறகுமா...?
......

நம்பி said...

......2

இந்து மதம் சாக்கிய முனிவரை துரத்தியது...(புத்தர்)...யூதமதம் இயேசுபிரானை விரட்டியது...

இன்னும் சில..

இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது..ஒன்று கர்ம காண்டம்...ஞான காண்டம்...ஞானகாண்டத்தை துறவிகள் சிறப்பாக கற்கின்றனர்...இதில் ஜாதி கிடையாது..மிக உயர்ந்த ஜாதியில் பிறந்தவரும் மிக தாழ்ந்த ?ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம்; அப்போது இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகிறது...

(இதன்படி தாழ்ந்த ஜாதி என்று இந்து மதத்தில் பார்ப்பனரால் உருவாக்கப்பட்டிருக்கறது)

தொடர்ந்து வருவது...

மதத்திற்கு ஜாதியில்லை...ஜாதி என்பது சமூதாய ஏற்பாடு....சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை உலகம் முழுதும் பரவச்செய்த பெருமைக்குரியவர்...உலகத்திலேயே முதன்முதலாக சமயப்பிரச்சாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன் மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர் தான்...

இப்படி தான் விவேகானந்தர் சிகாகோவில் பேசினார்...அன்றைய அளவில் இதுவே பெரிய பகுத்தறிவு...ஏன் எனக்கேட்கிறீரா...இந்து மத புராணத்தின் படி புத்தர் ஒரு நாத்திகர்...விவேகானந்தர் என்ன சொல்லயிருக்கிறார் பாருங்கள்...விஷ்ணுவின் தலைமுடியில் பிறந்தவர் புத்தர்.பூலோகத்தில் பிறப்பவர்களை அதிகமாக நரகலோகத்தில் அனுப்புவதற்காக படைக்கப்பட்டவுர் புத்தர்...இது தான் பார்ப்பன கட்டுக்கதை...இதை விவேகானந்தரால் துணிந்து சொல்ல முடியவில்லை...அவ்வளவு தான் அவரால் அன்றைய நிலையில் புத்தரை பாதுகாக்க முடிந்தது......பார்ப்பன இந்து புராணம் என்ன சொல்லியிருக்கிறது... ஆனால் விவேகானந்தர் என்ன? சொல்லியிருக்கிறார் பாருங்கள்...

அதற்காக நாம் சொல்லாமல் இருக்க முடியாது..ஏற்றுக்கொள்வும் முடியாது...யாரும் ஏற்று பின்பற்றுவதுமில்லை.....அவரே அந்த காலத்தில் அவ்வளவு சொல்லி விட்டார்....அவரே தாழ்த்தப்பட்டவர் இருப்பதாக சிகாகோவில் பேசிவிட்டாரே...இதை இந்து மதத்தின் துணை கொண்டு கடவுளின் துணை கொண்டு மாற்ற முடியாது...அதனால் பெரியார் கடவுளை மறக்கவைத்தார் மனிதனை நினைக்கவைத்தார்.

நீங்கள் விவேகானந்தர் சொல்லிய அளவுக்கே மாறவில்லை அப்புறம் என்ன விவேகானந்தரை கையில் எடுக்கிறீர்கள்...அவரையே பார்ப்பன துவேஷி என்று தானே பட்டமளிக்கப்பட்டது.

பார்ப்பனன் பஞ்சமரை விட கேவலமானவன் என்று விவேகானந்தர் தன் மொழியில் ஆக்கிரோஷத்தில் குறிப்பிட்டார். இதில் விவேகானந்தருடன் உடன்பாடு கிடையாது...ஏன்? பஞ்சமர் என்பதை அவரும் தடுக்காமல் பேசிவிட்டாரே, ஏற்றுக் கொண்டுவிட்டாரே என்ற வருத்தம் இருந்தாலும் கூட..அவர் காலத்தில் இந்தளவுக்கு வெளியிடுவதற்கு அவருக்காவது துணிவு இருந்ததை தான் வரவேற்கிறோம்.

அதேதான் இராமலிங்க அடிகளாரும்....கடவுளுக்கு உனக்கும் எந்த புரோக்கரும் தேவையில்லை....வேதங்கள் தேவையில்லை என்பது ராமலிங்க அடிகளாரின் கருத்து. அதில் அதிக முரண்பாடுகள்...மனித நேயத்திற்கு எதிரானவைகள் அதிகம் என்று தான் குறிப்பிடுகிறார். உருவமில்லா வழிபாடு...ஜோதி வழிபாடு....உலகிலேயே தீர்க்கவேண்டிய பிணி பசிப்பிணி...என்ற உரைத்தவர்.

விவேகானந்தர் பெண்ணுரிமையை போற்றவில்லை காரணம் அக்கலத்தில் இருந்த கட்டுபெட்டித்தனத்திற்கேற்ற மாதிரியே எழுதியிருக்கிறார். அது மாதிரி அவரை பின்பற்றுபவர்கள் வீட்டு பெண்கள் நடப்பார்களா...? விவேகானந்தர் சொல்லிவிட்டார் நாமும் அப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று...

பெண்களை நாடகங்களையோ, நாடகக் கலையோ பார்க்க அனுமதிப்பது நல்லதல்ல...விவேகானந்தர் ஏற்றுக்கொள்கிறீர்களா...இதை பெண்கள் ஏற்றுக்கொள்வார்களா...?

........3

நம்பி said...

.....3
நம்மிடம் பெரும் குறை என்ன..?இது தான்...

நிலவை யார் தொட்டது தேர்வில் கேட்கப்படும் கேள்வி இது...?

இதற்கு பதில் என்ன எழுதுகிறோம்....நீல் ஆம்ஸ்டராங்....

அப்புறம் சந்திரபகவானை போற்றுவோம், கடவுளை பழிக்காதே என்று இங்கு வந்து மூடத்தனமாக விவாதிப்பது...? ஏன்? நீ தான் இந்து மதத்தை விரும்புவராயிற்றே, அதிலிருந்து சிறிதும் விலகாதவராயிற்றே!...தேர்வில் கேட்கபட்ட கேள்விக்கு பதிலாக சந்திரனை யாரும் தொடமுடியாது...அவர் கடவுள் என்று எழுதலாமே...இரண்டு வாத்து முட்டை மதிப்பெண்ணாக கொடுத்திருப்பார்களே, ஆசிரியர்கள்....அப்படி பெற்ற அந்த மதிப்பெண்ணை வைத்துகொண்டு இன்று சாப்ட்வேர்...ஹார்டுவேர் கம்பெனியில் வேலைக்கு எடுக்கிறார்களா என்று முயற்சித்து பார்க்கலாமே....? இலைல அங்கே நேரகாணலில் கேள்வி கேட்டாலும் இதே பதிலைக்கூறலாம்..? பணத்துக்கு, உமது வாழ்வாதரத்துக்கு அறிவியல் உண்மை வேண்டும்....ஆதிக்கத்திற்கு, பிறரை அடிமைப்படுத்துவதற்கு உமது மூடநம்பிக்கைகள் வேண்டும். என்ன இழவுடா இது.

பெரியார் தான் பகுத்தறிவை முழுமைப்படுத்தியவர்....சமரசம் செய்துகொள்ளாதவர்..பகுத்தறிவு என்பது பெரியாரோடு நின்றுவிடுவதில்லை..அவரையும் தாண்டி போய்கொண்டேயிருக்கும்...இதை தான் பெரியார் வலியுறுத்தினார் என்னிலும் ஒருவன் பகுத்தறிவை சிறந்ததாக புகட்டுவாயின் அதுவே சிறந்தது...பெரியாருக்கு முன்...பெரியாருக்குப்பின் என்று தான் பகுத்தறிவு மாறும்.

.இன்று ஆன்மீகவாதிகளும் பகுத்தறிவு என்ற சொல்லை பயன்படுத்த அவர் தான் காரணம்....தவளைக்கும் சிறுமிக்கும் கல்யாணம் இது கூட ஆன்மீகம் எங்க ஏத்துக்கங்களே பார்ப்போம்....சுகி சிவம் இது பகுத்தறிவுடன் செய்யும் செயலல்ல...ஊடகத்தில் வாயிலாக குறிப்பிடுகிறார்....அந்த கிராம மக்கள் நீ ஒரு ஆன்மீகவாதியா...? என்னை வந்து தடுக்கவர்ற...? எங்க நம்பிக்கை இதை யாரும் தடுக்கமுடியாது...என்று கிராம மக்கள் கூறுகிறார்களே இதை ஆத்திகம் என்று எடுத்துகொள்வீர்களா?

இப்போ யார் தேவை....திராவிடர் கழக கருஞ்சட்டைக்காரர்கள் தான் இதற்கு தேவை...போய் வேற யாராவது அந்த கிராமத்திறகுள் நுழையுங்களே பார்ப்போம்....


அதற்குத்தான் பெரியார் கடவுள் இல்லை...கடவுள் இல்லை...கவுள் என்பது இல்லவே இல்லை என்று ஒரே போடா போட்டார்...கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றும் இரண்டாவது போடு போட்டார். இஷ்டம் இருந்தா ஏத்துக்க இல்ல அதிலேயே விழுந்து சாக்கடையிலே உருண்டு பிரளு....இதான் பெரியாரிசம்...
.

(தமிழகத்தில் ஒரு (இரண்டு மூன்று உண்டு) கிராமமே கருஞ்சட்டைக்கிராமம்...அனைவரும் பெரியாரின் தொண்டர்கள், பெரியார் படம் தான் வீட்டில் (கிராமத்தின் பெயர் உடனடியாக நினைவுக்கு வரவில்லை) நோ கடவுள்...நோ தீபாவளி...நோ இந்து புண்ணாக்கு, இதர எந்த மத பண்டிகையும் நோ...நோ சிகரேட்..பீடி...பான்பராக்...குடி என்று எதுவுமே கிடையாது. (தீபாவளி கொண்டாடாத பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தமிழக திருவாருர் மாவட்டத்தை ஒட்டி உள்ளது...கிட்டதட்ட 58 வருடங்களாக தீபாவளி கொண்டாடுவதில்லை...அது தமிழர்களின் பண்டிகை இல்லை எனபதால் அது வேறு விஷயம்...) படித்துவிட்டு அனைவரும் ராணுவப்பணிக்குதான் அனைவரும் செல்வார்கள்....என்ன அதிசயமாக இருக்கிறதா...? தொலைக்காட்சியில் இதை செய்தியாகவே காண்பித்தார்கள்)
******