Search This Blog

21.7.09

கொடிது கொடிது கோவிலுக்குப் போதல்!


கொடிது கொடிது

கொடிது கொடிது கோவிலுக்குப் போதல்
அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும்
கோவிலுக்குப் போதல்
அதனினும் கொடிது (குழவிக்) கல்லையும் செம்பையும் கும்பிடுதல்
அதனினும் கொடிது தேர் திருவிழா உற்சவத்திற்குப் போதல்
அதனினும் கொடிது பெண்களை
அங்கு கூட்டிப் போதல்
அதனினும் கொடிது கோவில் கட்டுதல்
அதனினும் கொடிது காணிக்கை போடுதல்
அதனினும் கொடிது (அர்ச்சகப்)
பார்ப்பனர்க்கு ஈதல்

------------- தந்தைபெரியார் - "விடுதலை" 2.11.1957

11 comments:

அஹோரி said...

அதனினும் கொடியது "இதை சொல்லியே"
காலம் காலமாக "பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்தல்"

தி. க . நண்பர்களே ...
கடவுள் , பார்பனர் எதிர்ப்பு என்று வெட்டி வேலை செய்யும் நீங்கள் ...
தனி மனித ( குடும்ப ) அராஜகத்திர்ர்க்கு எதிராகவும் போராடுங்கள் ...
மக்கள் பணத்தை கோடி .. கோடியா கொள்ளை அடிச்சிட்டு சாதாரணமா "ஊழல்" ன்னு சொல்லி கிட்டு திரியரானுன்களே ... அதை எதிர்த்து போராடுங்கள் ...
இன்றைய சூழலுக்கு அதுதான் தேவை ...

அஹோரி said...
This comment has been removed by the author.
Maheswaran Nallasamy said...

Nandru...

தமிழ் ஓவியா said...

//தி. க . நண்பர்களே ...
கடவுள் , பார்பனர் எதிர்ப்பு என்று வெட்டி வேலை செய்யும் நீங்கள் ...
தனி மனித ( குடும்ப ) அராஜகத்திர்ர்க்கு எதிராகவும் போராடுங்கள் ...
மக்கள் பணத்தை கோடி .. கோடியா கொள்ளை அடிச்சிட்டு சாதாரணமா "ஊழல்" ன்னு சொல்லி கிட்டு திரியரானுன்களே ... அதை எதிர்த்து போராடுங்கள் ...
இன்றைய சூழலுக்கு அதுதான் தேவை ...//

அட அஹாரி அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே கடவுள் தானே!

எனக்கு இதைச் செய்தால் இவ்வளவு காணிக்கை போடுகிறேன், என்று லஞ்சலாவண்யத்தை தொடக்கிய இடமே கடவுளின் கோயில் தானே.
அதற்கு புரோக்கராக இருப்பவன் அதாவது கடவுளுக்கும் கையூட்டு கொடுப்பவனுக்கும் புரோக்கராக இருப்பவன் பார்ப்பான் தானே.


லஞ்சலாவண்யத்தையும் ஊழலையும் எதிர்க்க வேண்டுமானால் கடவுளையும் பார்ப்பானையும் எதிர்க்க வேண்டும். நாங்கள் அதைச் செய்தால் வெட்டி வேலையா?

நேரு அமைச்சரவையில் நிதி அமச்சராக இருந்த டி.டி. கிருஸ்ணாமாச்சாரி செய்த ஊழல பற்றி ஊழல் பற்றி தெரியுமா? அஹோரி

முன்னால் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் HDW என்னும் நீர்மூழ்கி கப்பல் வாங்கியதில் ஊழல் செய்துள்ளாராம் அது பற்றி தெரியுமா அஹோரி

ராச கோபாலாச்சாரியின் ஊழல்கள் பிரசித்தி பெற்றவை அதாவது தெரிமா? அஹோரி
இது போல் அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒரு பார்ப்பன நீதிபதி தனது வயதை பொய்யாக கொடுத்து அதிக நாள் வேலை பார்த்த விபரங்கள் தெரியுமா அஹோரி.

வாஜ்பாய் ஆட்சியில் நடந்த ஊழலக்ள் பற்றியெல்லாம் எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கலாம்,

சரி அஹோரி இவர்களின் அயோக்கியத் தனங்களை ஆதாரங்களை கொண்டு ஒரு நூல் வெளியிடலாம். உங்களின் பங்களிப்பு என்ன?

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
Maheswaran Nallasamy

Suddi said...

Hi,

Argument sake, let's accept that there is no God..

Why the Egyptians worshipped God?.
Why the early Indian rulers (Cheran, Cholan, Pandian etc) worshipped God?.

If worshipping God is wrong, you should also talk about other religions and their beliefs.. Holy water to 5 times Namas.

With reference to corruption, there is no seperation sir.. Brahmins only corrupted, non-brahmins are clean..You are wrong. Corruption has no religion, gender, caste.

I like your Tamil very much, but I do not support your viewpoints.
You talk only against Brahmin, Brahminism.

And whoever talks in TN on pagutharivu, they go to periyar silai, anna samathi, put garlands on birthdays and deathdays, wear specific color shawls, shirts etc.,

I am against caste based seperation, plastic cups for lower caste people has to be eliminated,
but this has to be done by the govt. It's the govt's responsibility, to treat all people equal.

Your words are more against brahmins. Brahmana Dwesham is the right word.

How many hindus have converted to christianity / muslim religions?. What about these people?.

Sudharsan

தமிழ் ஓவியா said...

அனைத்து மதங்களைப் பற்றியும் விமர்சிக்கப்பட்டுள்ளது இந்த வலைப்பூவில். ஊன்றிப் படிக்கவும்

அஹோரி said...

இந்த தலைமுறைக்கு பழங்கால சமுதாயத்தை நினைவு படுத்தி , அவர்கள் எண்ணங்களில் விஷத்தை ஊட்டதீர்கள்.

தி க காரர்களே பகுத்தறிவு வாதிகளாக நடிக்காதீர்கள். அபார்ட்மென்டில் பக்கத்து வீட்டுக்காரன் பெயர் கூட தெரியாமல் வாழும் காலம் இது, எப்போதோ இருந்த மத, சாதி வேறுபாட்டை நினைவு படுத்தி புலம்பி கொண்டு இருக்காதீர்கள்.

பெரியார் மீண்டும் பிறப்பெடுத்தால் "அரசாங்க ஊழியர்களின் அராஜகத்திற்கு" எதிராகத்தான் போராடுவார். இன்றைய தேவையும் அதுதான்.

தமிழ் ஓவியா said...

//எப்போதோ இருந்த மத, சாதி வேறுபாட்டை நினைவு படுத்தி புலம்பி கொண்டு இருக்காதீர்கள். //

எப்போதோ இருந்த மதம் ஜாதியா?
அப்ப இப்ப மதம் ஜாதி இல்லையென்று சொல்கிறீர்களா?

உங்களைப் பார்த்து பரிதாபப் படத்தான் முடிகிறது அஹோரி.

தமிழ் ஓவியா said...

இன்று வரை மதமும் ஜாதியும் மக்களை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்திவருகிறது என்பதை செய்தி ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றன. ஆனால் நீங்கள்....
செத்த மாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட தோழர்களின் நிலை பற்றியெல்லாம் அறிந்து தான் பெசுகிறீர்களா?
இன்னும் டீக்கடையில் இரட்டை குவளை முறை உள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒடுக்கப்பட்டவர்கள் படும் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல அஹோரி

Anonymous said...

Correct. Cinema vukkum kazhagangal manattirkkum povadhu dhan nalladhu