Search This Blog

24.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் வின்சன்ட் மற்றும் கிரனடைன்ஸ்-சமோவா-சான் மரினோ


செயின்ட் வின்சன்ட் மற்றும் கிரனடைன்ஸ்

கரிபியன் கடலில் உள்ள தீவுகளில் செயின்ட் வின்சன்ட் மற்றும் கிரனடைன்ஸ் தீவுகளுக்கு 1763 இல் பிரிட்டிஷார் குடியேறித் தங்கள் நாட்டின் குடியேற்றப் பகுதியாக ஆக்கிக் கொண்டு விட்டனர். மேற்கு இந்தியக் கூட்டமைப்பில் இந்தத் தீவுகள் 1958 முதல் 1962 வரை அங்கம் வகித்தன. பின்னர் 27-.10.1979இல் விடுதலை பெற்றன.

என்றாலும், பிரிட்டிஷ் அரசியின் கீழ் கவர்னர் ஜெனரல் ஆட்சித் தலைவராக உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரும் உள்ளார். அந்த வகையில் குடிக்கோனாட்சி முறை உள்ளது.

கரிபியன் கடலுக்கும் வட அட்லான்டிக் பெருங் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள இத் தீவுகளில் வின்சன்ட் தீவு 344 சதுர கி. மீ. பரப்பும், கிரனடைன்ஸ் தீவு 45 சதுர கி.மீ. பரப்பும் கொண்டு மொத்தத்தில் 389 சதுர கி.மீ. மட்டுமே கொண்ட நாடாக உள்ளது. இதன் மக்கள் தொகை ஒரு லட்சத்து 18 ஆயிரம். கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோர். இங்கிலீஷ் மொழி பேசுபவர்கள். 96 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள். காமன்வெல்த் உறுப்பு நாடு. 15 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

சமோவா

ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கே தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள் சமோவா. இத் தீவுகளை அமெரிக்காவும் ஜெர்மனியும் 1899 வரை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டு ஆட்சி செய்து வந்தன. பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய மூன்றும் போட்டி போட்டன.

இந்நிலையில் 1914இல் மேற்கு சமோவாப் பகுதியை நியுஜிலாந்து நாடு கைப்பற்றிக் கொண்டது. 1962இல் விடுதலை அளிக்கப்பட்ட நாடு. 1997இல் மேற்கு சமோவா என்பதில் மேற்கை நீக்கி சமோவா என்றாகிவிட்டது.

2944 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 78 ஆயிரம்ஆகும். மக்கள் முழுவதுமே கிறித்துவர்கள். சமோவன் மொழியும் இங்கிலீஷும் பேசுகின்றனர்.

நியுஜிலாந்திலிருந்து 1-.1-.1962 இல் விடுதலை பெற்ற இந்நாட்டில் குடிக்கோனாட்சி நடந்து வருகிறது. நாட்டின் பூர்வகுடித் தலைவர்தான் நாட்டின் அதிபர். ஆட்சியின் தலைவராக பிரதமர் உள்ளார். மீன், தேங்காய் எண்ணெய், தேங்காய் கொப்பறை, பீர், துணி வகைகள் போன்றவற்றை சமோவா ஏற்றுமதி செய்கிறது.

நாட்டில் இருப்புப் பாதை கிடையாது. 790 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சான் மரினோ

கிறித்துவரான மரினஸ் என்பவர் கல்தச்சர். அவர்தான் 301ஆம் ஆண்டில் சான் மரினோ நாட்டை உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. 1463இல் ரோமன் கத்தோலிக்க மதத் தலைவரான போப் இந்நாட்டுக்கு பிளோரன்டினோ, மான்ட்டிகார்டினோ மற்றும் செர்ராவில்லி ஆகிய தீவுகளைக் கொடுத்தார் (தீவுகளை யாரிடம் இருந்து போப் பெற்றார் என்பது தெரியவில்லை. அவரே கடவுள் எனக் கருதப்பட்டதால், அவர் படைத்த தீவுகளோ?)

1464ஆம் ஆண்டில் இந்நாட்டுடன் பீடனோ நகரம் இணைந்துகொண்டது. 1631இல் கத்தோலிக்கத் தலைமைப் பீடம் சான் மரினோவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. 1863இல் இத்தாலி நாட்டுடன் சான் மரினோ நட்புணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. (இத்தாலியில் ரோம் நகருக்கு அருகில்தான் கத்தோலிக்கத் தலைமைப் பீடமான வாடிகன் உள்ளது. ஆகவே இத்தாலியுடன் ஒப்பந்தம்.) இத்தாலியின் மத்தியப் பகுதியில்தான் மரினோ இருப்பதால் ஒப்பந்தம் அவசியம்.

சான்மரினோ குடியரசின் பரப்பு 61.2 சதுர கி.மீ. மட்டுமே. இதன் மக்கள் தொகை 30 ஆயிரம். அனைவரும் ரோமன் கத்தோலிகர். இத்தாலி மொழி பேசுபவர்கள். 96 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்கள்.

3.-9.-30இல் விடுதலை நாளாகக் கொண்டாடப் படுகிறது. போர்ப்படைத் தளபதிகள் இருவர் கூட்டாக அதிபராக உள்ளனர். வெளியுறவு மற்றும் அரசியல் விவகார அமைச்சர் ஆட்சித் தலைவராக உள்ளார். யூரோ நாணயத்தையே இந்நாடும் கடைப் பிடிக்கிறது. நாட்டில் 3 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

நாட்டில் இருப்புப் பாதை கிடையாது.

---------------------"விடுதலை" 24-7-2009

1 comments:

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/