Search This Blog

18.7.09

யாகப் புரோகிதனுக்குப் பிறந்தவர்களே ராமனின் சகோதரர்கள்


அதிகப்பிரசங்கி


தசரதன் யாகம் செய்து ராமனைப் பெற்றான். விஸ்வாமித்திரர் தனது யாகத்தைக் காக்க ராமனை அழைத்துச் சென்றார். தாடகையை வதம் செய்து யாகத்தைக் காத்த ராமன் பின் அகலிகைக்குச் சாப விமோசனம் அளித்தார். பின் மிதிலை சென்றார்.

ஜனகன் வைத்திருந்த சிவதனுசை வளைத்தார். தன் மகளைவிட உயர்வை ராமனை மணமகனாக பெற்ற ஜனகன், சீதையை ராமனிடம் ஒப்படைக்கும்போது இவள் உள் நிழலைப் போல தொடர்வாள் என்றார்.

கணவனும், மனைவியும் இல்லறத்திலே ஒருவருக்கொருவர் புரிந்து-கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை. கல்வி, பொருள், அந்தஸ்து, மேன்மை இவையெல்லாம் அமையவேண்டும் என்றால் கணவன், மனைவி நண்பர்களைப் போல் வாழவேண்டும் என சொல்கிறது ராமாயணம்.

அப்படி வாழ்ந்து காட்டியவர்கள்தான் ராமனும், சீதையும். நாமும் அதை கடைப்பிடித்தால் நிம்மதியாக வாழலாம் இப்படியெல்லாம் மானாவாரியாக உபந்நியாசம் செய்திருப்பவர் திருச்சி கல்யாண ராமன் அய்யர் என்னும் பிரசங்கி.

ராமனும், சீதையும் நிழல்போல தொடர்ந்து வாழ்ந்தார்களா? காட்டுக்குப் போனது இருக்கட்டும்; காட்டிலிருந்து மீண்டும் அயோத்திக்கு வந்த ராமன் ராஜ்ஜிய பரிபாலனம் செய்த நிலையில், யாரோ ஏதோ சொன்னார் என்பதற்காக நிறைக் கர்ப்பிணியான சீதையை மிருகங்கள் உலவிடும் காட்டிலே கொண்டுபோய் சீதையைவிடச் சொன்னானே ராமன் _ இதுதான் கணவன், மனைவி என்பவர்கள் நண்பர்களாக வாழவேண்டும் என்பதற்கு அடையாளமா?

நீ என் எதிரியிடம் இருந்தாய் ஒழுக்கம் தவறவில்லை என்று எப்படி நம்புவது? நீ தீயில் நடந்து மெய்யை மெய்யாக நிரூபிக்கவேண்டும் என்று கேட்டானே ராமன் அவ்வாறு செய்யவும் செய்தானே இதுதான் லட்சுமியின் அவதாரமான சீதா பிராட்டியார் மீது ராமன் வைத்திருந்த அந்தரங்கச் சுத்தியான மதிப்பீடா?

சீதையைப் பிரிந்திருந்த நேரத்தில் ராமன் மெய்யாக நடந்துகொண்டான் என்பதற்கு ருஜு என்னவாம்?

தசரதன் யாகம் செய்து ராமனைப் பெற்றதாகக் கூறுகிறாரே அந்த யாகத்தின் யோக்கியதை என்ன? விரித்து சொன்னால் வெட்கக்-கேடு அல்லவா?

யாகப் புரோகிதனுக்குப் பிறந்தவர்களே ராமனின் சகோதரர்கள்!

எந்தத் தைரியத்தில் இந்த அதிகப் பிரசங்கிகள் கதை விடுகிறார்கள். பக்திப் போதையில் பக்தர்கள் மிதக்கிறார்கள் என்ற எண்ணத்தாலா?

------------------- மயிலாடன் அவர்கள் 17-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: