Search This Blog

28.7.09

அப்பம் பெருகிய அதிசயம்! பகுத்தறிவுக்கு ஒவ்வக் கூடியதுதானா?


நிரூபிப்பார்களா?

அப்பம் பெருகிய அதிசயம்!

மலையின்மேல் பகுதி. இயேசு கிறிஸ்துவின் சொற்பொழிவில் ஆழ்ந்து ஒன்றியிருந்தனர் ஆயிரமாயிரம் பேர்.

அவர்களது ஆன்மீகத் தேவையை மட்டுமல்ல; உடல் ரீதியான குறைகளையும் இயேசு களைந்தார். பார்வையற்றோர் பார்வை அடைந்தனர். காது கேளாதோர் காது கேட்கும் சக்தி பெற்றனர். வாய் பேசாதவர்கள் பேசினர். முடவர்கள் நடந்தனர். இப்படி அவரது அற்புதங்கள் ஏராளம்!

நேரம் கடந்து கொண்டே இருந்தது. அனைவருக்கும் பசி உண்டாயிற்று. இயேசு தன் சீடர்களை அழைத்தார். என்ன செய்யலாம்? என்று கேட்டார்.

பிலிப் என்பவர், இத்தனை பேருக்கும் வெளியில் உணவு வாங்கினாலும் போதாதே! என்றார்.
இன்னொரு சீடரான அந்திரேயா என்பவர், இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் 5 அப்பங்களும், 2 மீன்களும் இருக்கின்றன. ஆனாலும் இத்தனை பேருக்கும் அவை போதாதே என்று கூறினார்.

அதைக் கேட்ட இயேசு பெருமான், அனைவரையும் பந்தியில் அரும்படி சொன்னார். சிறுவன் தன்னிடம் இருந்தவற்றை அவரிடம் கொடுத்தான். இயேசு கிறிஸ்து அதை வாங்கி ஆசீர்வதித்தார்.

என்னே ஆச்சர்யம்! அந்த அய்ந்து அப்பங்களும் ஆயிரமாயிரம் அப்பங்களாக மாறின. பந்தியில் அமர்ந்திருந்த அனைவரும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர். அதோடு மாத்திரமல்ல, 12 கூடை அப்பங்கள் மீதியாயின.

------------------பால்மர் பரமதாஸ்

இந்த வாரம் வெளிவந்த ஓர் இதழில் இந்தச் செய்தி இடம் பிடித்திருந்தது.
இது அந்த இதழின் கற்பனையல்ல பைபிளில் இருக்கும் ஒன்றுதான்.
கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கும் இதனை நம்பிக் கொண்டுதானிருக்கின்றனர்.
ஆனாலும் இது பகுத்தறிவுக்கு ஒவ்வக் கூடியதுதானா? நடக்கும் என்று நம்புவார்களேயானால் ஞாயிறன்று கூடும் திருச்சபையில் இயேசுவிடம் மன்றாடி, நிரூபித்துக் காட்டுவார்களா?


---------------------"விடுதலை" ஞாயிறுமலர் 4-7-2009

10 comments:

Robin said...

மனித அறிவுக்கு எட்டாததுதான் அதிசயம் என்பது. இயேசு நாதர் செய்தது அதிசயம். இதில் அவருடைய இறைதன்மை வெளிப்படுகிறது. இது சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதது மற்றும் நிருபிக்க முடியாதது. அப்படி மனித அறிவால் நிருபிக்க முடிந்தால் அதன் பெயர் அதிசயம் அல்ல, வித்தை. பகுத்தறிவுக்கு எட்டாத விஷயங்கள் உலகத்தில் உண்டு, அதில் சிலவற்றை ஏற்கனவே முந்தைய பதிவொன்றில் பின்னூட்டமாக எழுதியிருக்கிறேன்.

ttpian said...

where were Jesus on May.16th&17th?
was HE on leave?
why he did not save the tamil community?

Robin said...

ttpian,

Jesus is not your servant. He will function according to His will and plan.

ரவி said...

அப்பம் பெருகியது மட்டுமல்ல,

முடவர் நடப்பதும் குருடர் பார்ப்பதும் ஹம்பக்.


Jesus is not your servant. He will function according to His will and plan.

ஹி ஹி

இதனை படித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தேன்.

Robin said...

//ஹி ஹி

இதனை படித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தேன்.// ஏன்? அப்படி சிரிப்பதுபோல என்ன எழுதியிருக்கிறேன்?

ரவி said...

ராபின்

சிரிப்பதுபோலத்தான் எழுதியுள்ளீர்கள். அய்ம்பதாயிரம் மக்கள் வல்லாதிக்க சக்திகளால் டாங்கிகளை ஏற்றி நசுக்கப்பட்டபோது வராத ஜீசஸ் இருந்தாலென்ன இறந்தாலென்ன உயிர்ந்தெழுந்து ஒயின் பருகினால் என்ன ?

Unknown said...

இன்னும் இயேசு "அப்பம் குடுத்தார், ஆப்பாம் குடுத்தார்"ன்னு பேசிகிட்டு திரியரதுல இவனுங்க என்னத்த சாதிச்சானுங்கன்னு தெரியல.
அப்பமோ, ஆப்பமோ அது எப்படி பெருகுதுன்னு இயேசு யாருக்காவது சொல்லிட்டு போயிருந்தா எல்லா நாட்டுக்கும் அத சொல்லி குடுத்து உலகத்துல பசியே இல்லாம செஞ்சுருக்கலாம்.
ராபின்.... நீ சோறு திங்க நீ வேலை நீதான் வேலை செய்யற. இதை நீ ஒத்துக்குவியா?
// Jesus is not your servant. He will function according to His will and plan.//
ராபின் சொல்ல வருவது இதைத்தான் என்று நினைக்கிறேன்.
""இயேசு எல்லோருக்கும் பாசு (Boss)""
"church"ல அப்பம் குடுக்கும்போது அடியில பீஸ் புடுங்கிட்டாங்க போல. அதனால்தான் இப்டியெல்லாம் பேசிகிட்டு திரியறான்.

Anonymous said...

appa vungalukku ellam evalavu mulai irukku, arivialai karaichi kudichirukkeengalae. arivukku ettadha visayathai neengal parthathey illayae.Vunga munnadi jesus enna sir pannuvar pavam, avarukku enna vungala mathiriya mulai irukku. Pinnareengalae sir neenga pagutharivulla.

நம்பி said...

Blogger Robin said...
//இயேசு நாதர் செய்தது அதிசயம். இதில் அவருடைய இறைதன்மை வெளிப்படுகிறது. இது சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதது மற்றும் நிருபிக்க முடியாதது.//

இதை ஏசுநாதர் உண்மையில் சொன்னாரா? (சொன்னதாக குறிப்பிட்டு இருப்பார்கள்)

அப்படியென்றால் அவரால் மட்டும் எப்படி முடிந்தது? அவர் சாதாரண மனிதராகத்தானே, சாதாரணமான மனிதர்களிடையே தானேப் பிறந்தார்.

சாதாரண மனிதர்கள் செய்யமுடியாது என்று தெரிந்தும் அதை ஏன்? சாதாரண மக்களிடம் (அவருடைய கொள்கைகளாக) பரப்ப வேண்டும். அதனால் அவருக்கு கிடைத்த இலாபம் என்ன?..... நஷ்டம் என்ன?

Blogger Robin said...
//பகுத்தறிவுக்கு எட்டாத விஷயங்கள் உலகத்தில் உண்டு//

இது அவரவர் சிந்தினைக்கு சிந்திக்கும் ஆற்றலுக்கும் வைத்துக் கொண்ட முற்றுப் புள்ளி.

நம்பி said...

Blogger DINAKARAN said...
//arivukku ettadha visayathai neengal parthathey illayae.//

ஏன்? பார்க்கல...தோ தான் பார்த்துகிட்டு இருக்கோமே...அதுல ஒன்னு இந்த அப்பம் மேட்டர்.