Search This Blog

25.7.09

சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கும் இடையே நடைபெற்ற குஸ்தி!


ஜெயேந்திர சீலம்!

இராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் குடமுழுக்கு!


சிருங்கேரி சங்கராச்சாரியார், திருவண்ணாமலை ஆதீனம், மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆதீன கர்த்தாக்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மட்டும் பங்கேற்கவில்லை ஏன்? அழைப்பு கிடையாது.

கிரிமினல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை அழைப்பதில்லை என்பது அரசின் முடிவு என்று கூறப்பட்டது. இதை மீறி கும்பகோணத்திற்குப் போனவர் கோயில் குடமுழுக்கில் எப்படிக் கலந்துகொண்டார் என்ப கேள்விக்குறி

அதற்குக் காரணமான அதிகாரிகளை இந்து அறநிலையத்துறை விளக்கம் கேட்க வேண்டும்.

2001 ஆம் ஆண்டில் இராமேசுவரம் ராமநாதசாமி கோயில் குடமுழுக்குக்கு வந்தபோது பிரதான மனிதராகக் காட்சி அளித்த ஜெயேந்திரர் இந்த முறை ஓர் அழைப்புக்காக ஏங்கி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இராமேசுவரத்தில் ஜெயேந்திரர் புறக்கணிக்கப்பட்டது ஒன்றும் புதிதல்ல.

2001 குடமுழுக்குக்குப் பிறகு சில நாள்கள் கழித்து ராமநாதசாமி கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களின் கட்டுமானப் பணிகளைக் காஞ்சி மடத்தின் சார்பில் தொடங்கியதும் ஜெயேந்திரர்தான். இடையில் சங்கரராமன் கொலைவழக்கில் குற்றவாளியாகி வேலூர் சிறையில் கம்பி எண்ணினார். பிணையில் வெளிவந்த நிலையில், இராமேசுவரம் வந்தார். வழக்கம்போல கோயில் கருவறைக்குள் நுழைந்தபோது அதிர்ச்சி அவருக்குக் காத்திருந்தது.

உள்ளே நுழையாதே! என்ற உத்தரவுதான் அது. மனுஷர் ஆடிப்போய் விட்டார். வேறுவழியில்லை; வந்த வேகத்திலேயே காஞ்சிபுரம் திரும்பினார். இதெல்லாம் ஊருக்குத் தெரியாது, இந்த நிலையில் குடமுழுக்கில் கலந்துகொண்டால் பூர்ணகும்ப வரவேற்பு எப்படிக் கிடைக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?


2001ஆம் ஆண்டில் நடைபெற்ற இராமேசுவரம் ராமநாதசாமி கோயில் குடமுழுக்கின்போது ஒரு குஸ்தி நடந்தது.

யார் யாருக்கு? சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கும் இடையே நடைபெற்ற குஸ்திதான் அது!

விழாக்குழுவினர் சிறப்பு செய்வதில் யாருக்கு முதல் மரியாதை என்ற பிரச்சினை புயலாக வெடித்தது. ஆன்றவிந்து அடங்கிய

ஜெகத்குருக்களின் தன் முனைப்பும், ஆணவமும் எந்த டிகிரியில் இருந்தன என்பது இதன்மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

சூத்திர மடத்தைச் சார்ந்த மதுரை ஆதீன கர்த்தர் தான் இரவு முழுவதும் இருவருக்கும் இடையே பேசிப் பேசி பஞ்சாயத்து நடத்தி, ஒரு வழியாகப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இந்த நிகழ்ச்சி பற்றி தவத்திரு குன்றக்குடி அடிகளார் பொன்னம்பல அடிகளார் மதுரையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் மனம் நொந்து பேசினார். (இராமேசுவரம் குடமுழுக்கு நடைபெற்ற சில நாள்கள் கழித்து)

ஆன்மிகத்தைப் பற்றிக் கூற வேண்டுமானால் அதிலும் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. என்றாலும் மனசாட்சிப்படி பேசித்தான் ஆக வேண்டியுள்ளது. இங்கே பேசியவர்கள் எல்லாம் முற்றும் துறந்தவர்கள் என்றனர். ஆனால் நான் சமீபத்தில் பிரபலமான கோயிலின் குடமுழுக்கு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே யார் பெரியவர் என்று மடாதிபதிகளுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டதைப் பார்த்தேன்.

சராசரி மனிதர்களைப் பல துறவிகளும் இன்று பதவிக்காகப் போட்டியிடுகிறார்களே, சராசரி மனிதர்களைப் போல சண்டையிடும் இவர்களா சமுதாயத்திற்கு வழிகாட்டப் போகிறார்கள்? இன்று ஆன்மிகப் பாதை எங்கோ சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.
(தினபூமி 15.2.2001)

அதுவும் காஞ்சி ஜெயேந்திரரைப் பற்றி கேட்கவே வேண்டாம் விளம்பரப் பிரியர்.

ஒருமுறை ஆனந்தவிகடன் (30.3.2003) பூக்கடையே ஆனாலும்... என்ற ஒரு செய்தியை வெளியிட்டது.

சென்னையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகே பேனரில் ஜெயேந்திரர் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருக்கிறார். பக்கத்துப் பேனரிலேயே லேசா லேசா படத்துக்கு ஷாம் மற்றும் த்ரிஷா.

மகா பெரியவர் எண்பது வருடங்களுக்கும் மேலாக காமகோடி பீடத்தை அலங்கரித்தவர். நடமாடும் தெய்வமாக விளங்கிய அந்த மகானுக்கு பொன்விழா, பவழவிழா என்று விளம்பரத்துக்காகப் பொதுவிழாக்கள் எல்லாம் கொண்டாடப்படவில்லை. இன்று காலம் மாறிவிட்டது. பூக்கடைக்கு விளம்பரம் தேவைப்படுகிறதே! என்ற ஜெயேந்திரரின் மலிவான விளம்பர வெறியை நாசூக்காக வெளியிட்டது.

பத்திரிகைகாரர்களிடத்தில் ஜெயேந்திரர் குழைவதைப் பார்த்தால் ஆசை வெட்கமறியாது என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்தும்.

விளம்பரத்தில் மட்டுமா? தான் என்கிற ஆணவத்திலும் அப்படித்தான். நான் நூறு விவேகானந்தருக்கும் மேல் போய்விட்டேன் எனக் கொக்கரிக்கவில்லையா?


ஆகமம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்றெல்லாம் பீற்றுவார்கள் அடுத்தவர்கள் விஷயத்தில்.

ஆனால், இவர்கள் யார்? திருப்பதியில் தோமாலை சேவையின்போது (3.11.2000)குலசேகரன்படியில் அமர்ந்து, அங்கு அர்ச்சகர்கள் ஆட்சேபித்தும், ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி) காஞ்சி ஜெயேந்திரர் அர்ச்சனை செய்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் என்ன சொல்லும் இந்தப் பிரகஸ்பதிகள்?

பிராமணர்களாக இருந்தாலும் அர்ச்சகர்கள் தவிர, கருவறைக்குள் நுழைய யாருக்கும் ஆகமம் அனுமதி தரவில்லை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று உறுமுவார்கள்.

கொலைக் குற்றவாளிகளாக நடமாடுபவர்கள்தான் சாட்சாத் காஞ்சி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும். அவர்கள் மீதான குற்றப் பிரிவுகளும் சாதாரணமானவையல்ல. இபிகோ 302, 120பி, 34, 201, கொலைசெய்யத் தூண்டுதல், கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை.

இத்தனைக் குற்றங்கள் சுமத்தப்பட்டு, இவற்றிற்கு அடிப்படை ஆதாரங்கள் உண்டு என நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டு, குற்றப் பத்திரிகையும் பதிவாகி ஜெயேந்திரர் வேலூர் மத்திய சிறைச்சாலையில் 61 நாள்களும், ஜுனியர் விஜயேந்திரர் சென்னை மத்தியச் சிறைச்-சாலையிலும் (31 நாள்கள்) கம்பியை எண்ணிக் கொண்டிருந்தவர்கள்.

இப்பொழுது வெளியில் திரிவதும்கூட ஜாமீனில்தான்! சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நாள்தோறும் கையொப்பம் போட்டு வந்தவர்தான் ஜூனியர் சங்கராச்சாரியார்.


இந்த லட்சணத்தில் உள்ளவர்கள் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி, கூனிக் குறுகாமல் நாட்டில் நடமாடுவதும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், ஆசிகள் வழங்குவதும் சகஜமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதே நிலை ஒரு சூத்திர மடாதிபதிக்கு நேர்ந்திருந்தால், அடேயப்பா எப்படியெல்லாம் கெக்கலி கொட்டி ஊர் சிரிக்க வைத்திருக்கும் இந்த அக்ரகாரக் கூட்டம்.

அனுராதா ரமணன் என்ற பார்ப்பனப் பெண் எழுத்தாளர் தன்னிடம் ஜெயேந்திர சரஸ்வதி தவறாக நடக்க முயன்றார் என்று கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சியில் வெளியிட்ட போதுகூட, சோ ராமசாமியும், குருமூர்த்தி அய்யரும் அந்த அம்மையார்மீதுதான் அபாண்டம் சுமத்தினார்களே தவிர காம கோடியின்மீது கணை தொடுக்கவில்லை இந்தச் சமத்து தமிழர்களுக்கு வருமா?

ஒரு தீபாவளி நாள் (23.11.2004) கொலைக் குற்றத்திற்காக ஆந்திராவில் கைது செய்யப்பட்டவர் இந்த ஜெயேந்திர சரஸ்வதி. ஆண்டுகள் அய்ந்து ஓடி விட்டன. ஆனாலும் வழக்கோ இன்னும் ஆரம்ப கட்டம் என்கிற படியை மிதிக்கவில்லை. சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து காலத்தைக் கடத்தும் கடைந்தெடுத்த தந்திரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றம் வரை செல்கிறார். அங்குள்ள ஒரு பார்ப்பன நீதிபதியோ நான் காஞ்சி சங்கராச்சாரியாரின் சீடன்; அவர் மீதுள்ள வழக்கை விசாரிக்க மாட்டேன் என்கிறார் (6.8.2007).


எப்படியிருக்கிறது உச்சிக் குடுமி மன்றம்?

புதுச்சேரி நீதிமன்றத்தின் நிலை என்ன? அங்கிருக்கும் நீதிபதிக்கு வேறு இடத்தில் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. திடீரென்று அந்த ஆணை ரத்து செய்யப்படுகிறது.

அரசு வழக்கறிஞர் மாற்றப்படுகிறார்; நாட்டில் என்ன நடக்கிறது?

தொடர்ந்து திராவிடர் கழகம் குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. போராடிக் கொண்டேதானிருக்கிறது. 30.11.2006, 5.8.2007, 1.7.2009 என்று தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வந்திருக்கிறது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று குரல் கொடுத்து வந்திருக்கிறது. விரைவுபடுத்து! விரைவுபடுத்து!! சங்கராச்சாரியார்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவுப்படுத்து என்று வீதிக்கு வந்து போராடிக் கொண்டும் இருக்கிறது!

இந்த நிலையில் பார்ப்பனக் கூட்டம், சங்பரிவார்க் கூட்டம் இராமேசுவரம் ராமநாதசாமி கோயில் குட முழுக்குக்கு காஞ்சி சங்கராச்சாரியாரை ஏன் அழைக்கவில்லை என்று கூச்சல் போடுகிறது என்றால்.. பார்ப்பனர்கள் குற்றம் பரம்பரையினர் என்று தந்தை பெரியார் கணித்துச் சொன்ன வார்த்தைகளின் மேன்மையைத் தெரிந்து கொள்ளலாமே!


---------------------மின்சாரம் அவர்கள் 25-7-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

6 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

தமிழ் ஓவியா said...

நன்றி

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/

தமிழ் ஓவியா said...

தமிழ் ஓவியா said...

"அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது."

என்று சொல்லியுள்ள இவர்

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_2111.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_9855.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_24.html

மேற்கண்ட சுட்டிகளைப் படித்துப் பாருங்கள் தமிழ் ஓவியா வலைப்பூவிலிருந்து பதிவு செய்யப்பட்ட பதிவுகளை அப்படியே எடுத்து பயன் படுத்தியுள்ளர்.

ஆனால்

பின்னூட்டத்தில் தமிழ் ஓவியா என்ற வலைப்பு இருப்ப்து தெரியாது என்கிறார்.இது சரியா?

இது குறித்து வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மீண்டும் சொல்கிறேன்:

உங்கள் வலைப்பூவில் சிறப்பாக செயல்படுங்கள். இப்போதுதான் நீங்கள்
http://thamizhovia.blogspot.com/ என்று ஆரம்பித்துள்ளீர்கள். நான் 2007 முதல் செயல் பட்டு வருகிறேன். எனவே தாங்கள் அருள்கூர்ந்து வேறு பெயரில் செயல்பட வேண்டுகிறேன்.

எனவே அரூள்கூர்ந்து இதில் ஈகோ எதுவும் பார்க்காமல் வேறு பெயரில் செயல் படுமாறு வேண்டுகிறேன்.

இது எனது அன்பான வேண்டுகோள்.


பல் தோழர்கள் தொலைபேசிமூலமூம், திரு டோண்டு அவர்கள் பின்னூட்டம் மூலம் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி

அடுத்த நடவடிக்கை தங்களின் பதில் கண்டு ....AyyA

tavincy said...

Tha sexmaniac Jayendirar is a fraud and criminal. He should be castrated and send to Africa along with Swamy Nithiyananda.N.D.Tiwari should be also sent along with them.