Search This Blog

27.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - செனகல்-செஷல்ஸ்


செனகல்

செனகல் ஆறு கடலில் இணையும் முகத்துவாரத்திற்கு 1440களில் வந்து சேர்ந்தனர் போர்த்துகல் நாட்டினர். இந்தப் பகுதியில் உள்ள கோரீ எனும் தீவிலிருந்து அடிமை வணிகத்தை 16ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்தனர் ஹாலந்து நாட்டினர். 17ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் குடியேற்றத்தை இப்பகுதியில் அமைத்துக் கொண்டனர். இப்படிப் பல அய்ரோப்பிய நாடுகளும் தங்களது வேட்டைக் காடாக செனகலைக் கருதி நடந்து கொண்டனர்.

இங்கிலாந்துக்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர் களுக்கும் நீண்ட நாள் நடைபெற்ற சண்டை ஏழு ஆண்டுப்போர் என்று வரலாறு கூறும். 756 முதல் 1763 வரை நடந்த அப்போரின் விளைவாக பிரான்சு நாட்டின் பல குடியேற்றப் பகுதிகளை இங்கிலாந்து நாடு கைப்பற்றிக் கொண்டது. செனகலும் அதில் ஒன்று. செனகாம்பியா எனும் பகுதியில் இங்கிலாந்து தன் குடியேற்றப் பகுதியை நிறுவியது. பிரான்சு சும்மா இருக்குமா? அமெரிக்காவின் விடுதலை உணர்வை நசுக்கிட இங்கிலாந்து முனைந்து போரிட்டுக் கொண்டிருந்தபோது, பிரான்சு தாக்குதல் நடத்தி செனல் பகுதிகளை மீளவும் கைப்பற்றியது. 1775 முதல் 1783 வரை நடைபெற்ற அமெரிக்கப் புரட்சிப் போர்க் காலத்தில் இங்கிலாந்து செனகலை இழந்தது.

1895இல் பிரெஞ்சு மேற்கு ஆப்ரிக்கா எனும் நாட்டின் பகுதியாக செனகல் ஆனது. 1960இல் செனகலுக்கு விடுதலை வழங்கப்பட்டு மாலி கூட்டரசின் அங்கமாகியது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாலி கூட்டரசிலிருந்து செனகல் பிரிந்து கொண்டது. தனி குடியரசு நாடானது. லியோபோல்ட் செங்கோர் குடியரசுத் தலைவரானார். ழிமீரீக்ஷீவீபீமீ எனும் நீக்ரோவிய அமைப்பை உருவாக்கி, கறுப்பின மக்களிடையே விழப்புணர்வை எற்பத்திய பெருமகன் லியோபோல்ட் செங்கோர்.

1982 இல் செனகலும் ஜாம்பியாவும் இணைந்து செனகாம்பியா எனும் கூட்டரசை உருவாக்கின. அதுவும் 1989 இல் கலைக்கப்பட்டுவிட்டது.

வடஅட்லான்டிக் பெருங்கடல் ஓரத்தில் ஆப்ரிகாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பு ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 190 சதுர கி.மீ. மக்கள் தொகை 1 கோடியே 20 லட்சம். மக்களில் 95 விழுக்காட்டினர் இசுலாமியர். கிறித்துவர் 5 விழுக்காடு. பிரெஞ்சு மொழி ஆட்சி மொழி. இனக் குழு மொழிகளான ஒலோப், பலார், ஜோலா, மன்டின்கா போன்றவை பேச்சு மொழிகள். 40 விழுக்காட்டினர் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்.

4.4.1960இல் பிரான்சு நாட்டிலிருந்து விடுதலை பெற்ற நாளைக் கொண்டாடும் குடியரசு நாடு. குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர்.

54 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 48 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர் உள்ளனர். 906 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

செஷல்ஸ்

மடகாஸ்கர் தீவுக்கு வடகிழக்கே இந்திய மாக்கடலில் ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவு செஷல்ஸ். 1903 இல் பிரிட்டிஷ் அரசின் காலனி நாடானது. 1975 இல் இந்நாட்டுக்குச் சுயாட்சி அதிகாரத்தை பிரிட்டன் வழங்கியது. மறு ஆண்டில் முழு விடுதலை அளிக்கப்பட்டது.

455 சதுர கி.மீ. மட்டுமே பரப்புள்ள இத்தீவின் மாஹே பகுதி மட்டுமே பாறை நிறைந்த பகுதி. மற்றவையெல்லாம் மணல் மேடுகள், பவளப் பாறைகள் - ஆதாம் பாலம் போல!

மக்கள் தொகை 82 ஆயிரம் மட்டுமே. இவர்களில் 87 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிகர், மற்றைய கிறித்துவப் பிரிவுகளை மீதிப்பேர் பின்பற்றுகின்றனர். இங்கிலீஷ் ஆட்சி மொழி. 92 விழுக்காட்டினர் படிப்பறிவு உள்ளோர்.

29.-6.-1976இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இக்குடியரசு நாட்டின் அதிபராகவும் ஆட்சித் தலைவராகவும் குடியரசுத் தலைவரே உள்ளார்.

280 கி.மீ. தூரத்திற்கு இருப்புப் பாதை உண்டு. அதே அளவுக்குத்தான் சாலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன

-----------------------"விடுதலை" 26-7-2009

3 comments:

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/

தமிழ் ஓவியா said...
This comment has been removed by the author.
தமிழ் ஓவியா said...

"அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது."

என்று சொல்லியுள்ள இவர்

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_2111.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_9855.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_24.html

மேற்கண்ட சுட்டிகளைப் படித்துப் பாருங்கள் தமிழ் ஓவியா வலைப்பூவிலிருந்து பதிவு செய்யப்பட்ட பதிவுகளை அப்படியே எடுத்து பயன் படுத்தியுள்ளர்.

ஆனால்

பின்னூட்டத்தில் தமிழ் ஓவியா என்ற வலைப்பு இருப்ப்து தெரியாது என்கிறார்.இது சரியா?

இது குறித்து வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மீண்டும் சொல்கிறேன்:

உங்கள் வலைப்பூவில் சிறப்பாக செயல்படுங்கள். இப்போதுதான் நீங்கள்
http://thamizhovia.blogspot.com/ என்று ஆரம்பித்துள்ளீர்கள். நான் 2007 முதல் செயல் பட்டு வருகிறேன். எனவே தாங்கள் அருள்கூர்ந்து வேறு பெயரில் செயல்பட வேண்டுகிறேன்.

எனவே அரூள்கூர்ந்து இதில் ஈகோ எதுவும் பார்க்காமல் வேறு பெயரில் செயல் படுமாறு வேண்டுகிறேன்.

இது எனது அன்பான வேண்டுகோள்.


பல் தோழர்கள் தொலைபேசிமூலமூம், திரு டோண்டு அவர்கள் பின்னூட்டம் மூலம் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி

அடுத்த நடவடிக்கை தங்களின் பதில் கண்டு ....AyyA