Search This Blog

15.7.09

கடவுள் மதம் மக்களை நல்வழிப் படுத்துகிறதா?


மற்றவர்களைப் புண்படுத்துவது ஒரு கொள்கையா? என்ற தலைப்பில் நண்பர் கபிலன் அவர்கள் எழுதிய பதிவை இன்றுதான் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. (http://localtamilan.blogspot.com/2009/07/blog-post_06.html). ஆரோக்கியமான எந்த விவாதத்தையும் கருத்து மோதல்களையும் எப்போதும் எதிர் கொள்ள பெரியாரின் தொண்டர்கள் தயாராகவே இருப்பார்கள். அந்த வகையில் நண்பர் கபிலன் கருத்துக்களில் அப்படி என்னதான் உள்ளது என்பதைப் பார்ப்போம்.

நம்மைப் பார்த்து கபிலன் சொல்கிறார்:-

“நண்பரே, நிரூபிக்க கூடிய விஷயங்களைக் கொண்டவையை, அறிவியல்(Science) என்போம். உதாரணமாக, Nuclear Science,Computer Science இப்படி. ஆனால் சமயங்களை நம்பிக்கைகள்( Religious Belief) என்று சொல்கிறோம் அதாவது hindu belief, Islam and christian faith என்று சொல்லுவோம். நிரூபிக்கப் படாத விஷயங்கள், மனிதனின் அறிவுக் கண்களுக்கு எட்டாத விஷயங்கள் அனைத்தும் பொய்யாகாது !

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை ! ஒவ்வொரு மாதிரியான வழிபாடுகள் ! நம்ம இங்க இட்லி சாப்பிடுறோம், அமெரிக்காவுல பர்கர், பீட்சா சாப்பிடுறாங்க, கொரியாவில் மாமிசத்தை அரை வேக்காட்டில் சாப்பிடுவாங்க...ஏன் நாய்களைக் கூட உணவாக உண்ணும் இடங்கள் உண்டு. வெவ்வேறு உணவாக இருந்தாலும், கடைசியில், அனைத்தும் நம் பசியைத் தீர்க்கத் தான் பயன்படுகிறது. அதே போல தான் சமயங்களும். வெவ்வேறு சமங்களின் வழிபாடுகள், முறைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், அனைவரும் அன்பு செலுத்தி, நல்வழியில் நடந்து, இன்புற வேண்டும் என்பதைத் தான் எல்லா சமயங்களும் வற்புறுத்துகின்றன.”


நிரூபிக்கப்பட்ட விசயங்கள் அறிவியல் என்றும் அதாவது உண்மை என்றும் நிரூபிக்கப்படாத விசயங்கள் அனைத்தும் பொய்யாகாது என்றும் சொல்கிறார் கபிலன்.

நாமும் அதைத்தான் சொல்கிறோம். நிரூபிக்கப்படாத விசயங்கள் அனைத்தும் உண்மையானதாக இல்லாமலும் இருக்கலாம். உலகம் தட்டை என்று சொல்லிய காலத்தில் உலகம் உருண்டை என்று உண்மையைச் சொல்லிய கலிலியோவை என்ன பாடு படுத்தியது இந்த உலகம் என்பதை வரலாறு மறக்காது. சில ஆண்டுகளுக்கு முன்னால் தான் நாங்கள் தப்புச் செய்து விட்டோம் என்று போப் ஒத்துக் கோண்டிருக்கிறார்.

அறிவியல் பூர்வமாகச் சொன்னாலும் உங்கள் மதங்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறதோடல்லாமல் ,சொன்னவர்களை கொல்லவும் செய்கிறது. இதில் எல்லா மதங்களும் அன்பை போதிக்கிறது என்ற புருடா வேறு?

அன்பைப் போதிக்கும் மதங்கள் ஒன்றையொன்று ஒத்துக் கொள்ளாமல் சண்டையிட்டுக் கொள்வது ஏன் கபிலன்?

அன்பே தெய்வம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்து மதக் கடவுள்கள் ஆயுதம் இல்லாமல் ஒரு கடவுளையாவது உண்டாக்கியிருக்கிறீர்களா?

இயேசு தான் ஈராக் மீது படையெடுக்கச் சொன்னார் என்று புஸ் கூறினாரே. அப்போது எங்கே போனது அன்பு மதம்?

அல்லா சொன்னால் என் அம்மா இருக்கும் இடத்தில் கூட குண்டு வைப்பேன் என்று சொன்னானே ஒரு இஸ்லாமியன் . இது தான் அன்பைப் போதிக்கும் லட்சணமா?

அன்பைப் போதித்த அம்மாவையே கொல்லத்துடிப்பதுதான் மதம் என்றால் அந்த மதங்கள் இல்லாமல் இருப்பதே நல்லது என்பது தான் பெரியார் தொண்டர்களின் நிலை.


அடுத்து கபிலன் நம்மைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்கிறார் :-

“கடவுள் இருக்கிறார். இவ்வாறாக இருக்கிறார். அனைவரையும் நல்வழிப் படுத்துகிறார் என்பது நம்பிக்கை ! நம்முடைய நம்பிக்கைகள் அடுத்தவரை பாதிக்காதவரை, அடுத்தவரை புன்படுத்தாதவரை, நம் நம்பிக்கைளின்படி நடப்பதில் என்ன தவறு இருக்கிறது ?”

கடவுள் இருக்கிறார் என்ற நம்பி செயல் பட்டால் அனைவரையும் கடவுள் நல்வழிப் புடுத்துகிறாராம். சொல்கிறார் கபிலன். அய்யா அனைவரும் நல்வழியில் நடக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆவல் ஆசை எல்லாம். ஆனால் நல் வழியில் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமே கடவுள் என்ற கற்பிதம் தானய்யா கபிலன். எப்படி என்று யோசிக்கிறீகளா? அந்த யோசனையெல்லாம் வேண்டாம். நடைமுறையில் நடக்கும் செயல்பாடுகளை பகுத்தறிவுக் கண்ணோடும் பாருங்கள் .உண்மை புரியும்.

இங்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் தருகிறேன். நல்வழிப்படுத்தும் கடவுள்களின் யோக்கியதை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த செய்தியைப் படிக்கும் போது உங்களுக்கு மதத்தை புண்படுத்து கிறார்களே என்ற கோபம் வேண்டுமானல் வரலாம் .ஆனால் எமக்கு எமது கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது . இதயம் விம்முகிறது கபிலன்.. இதோ அந்தச் செய்தி…

“மதம் எங்கே செல்கிறது?

ஆஸ்திரேலியாவில் போப் பங்கேற்ற நிகழ்ச்சியில் 3 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பாவ மன்னிப்பு பெற்றனர்.
ஆஸ்திரேலியாவில் உலக இளைஞர்கள் தின விழா 15.7.2008 அன்று தொடங்கியது. போப் 16_ஆம் பெனடிக் பங்கேற்ற அந்த நிகழ்ச்சிகளில் 170 நாடுகளைச் சேர்ந்த 3 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிட்னி நகரில் உள்ள புனித மேரி ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையில் போப் பங்கேற்றார்.சிறுமிகளை கத்தோலிக்கப் பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, அவர்கள் சார்பில் அப்போது போப் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

சிட்னி நகரில் தேவாலயங்கள், பள்ளிகள் உட்பட 250க்கும் மேற்பட்ட இடங்களில் பாவ மன்னிப்பு அளிக்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. போப் பெனடிக் மற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கலந்து கொண்டு பாவ மன்னிப்பு அளித்தனர்.

சிறிய மறைவிடம் அமைத்து, பல்வேறு மொழி பேசுபவர்களுக்கு அந்தந்த மொழிகளில் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அதில் 3 லட்சம் பேர் பாவ மன்னிப்பு பெற்றனர்.
(ஆதாரம்: தினகரன் 21.7.2008 பக்.9)


குறிப்பு: சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக லட்சக்கணக்கான கிறித்துவர்களுக்குப் பாவமன்னிப்பாம்! மதம் ஒழுக்கத்தை வளர்க்கிறதா? “

இந்த மதத்தில் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா மதங்களுமே இந்த நிலையில் தான் இருக்கிறது.

இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள்கள் உண்டா? இரண்டு பெண்டாட்டி கட்டாத கடவுள்களை விரல் விட்டு எண்ணி விடலாம்? சாமியார்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தனை கொடுமைகள் செய்து வருகின்றனர் என்பதை செய்திதாள்கள் அம்பலப்படுத்தத்தான் செய்கின்றன. ஏன்? நடமாடும் கடவுள் லோககுரு? காஞ்சி சங்கராச்சாரிகளின் யோக்கியதைகள் பற்றி எல்லாம் பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் எல்லாம் அம்பலப் படுத்தினார்களே.

கல்லுக்கடவுள்களும் சரி, ‘உயிருள்ள’நடமாடும் கடவுள்களும் சரி எந்தக் கடவுள் நல் வழிப்படுத்தியது கபிலன்? .

--------------------தொடரும்

8 comments:

Robin said...

இது பகுத்தறிவுடன் எழுதப்பட்ட பதிவாகத் தெரியவில்லை.
பாதிரியார்களை பாலியல் பலாத்காரம் செய்யும்படி கிறிஸ்தவம் போதிக்கிறதா?
கண்டிப்பாக இல்லை. அப்படி மதம் சொல்வதை மீறி ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அது யாருடைய குற்றம்? மதத்தின் குற்றமா அல்லது தவறு செய்பவரின் குற்றமா? உங்கள் பகுத்தறிவை பயன்படுத்தி சிந்திக்கவும்.

தவறு செய்தால் தண்டனை உண்டு. இந்த உலக வாழ்க்கையில் கிடைக்காவிட்டாலும் மரணத்திற்கு பிறகு நிச்சயம் உண்டு என்பதால்தான் பெரும்பாலான மனிதர்கள் தவறு செய்ய அஞ்சுகின்றனர். அதையும் மீறி செய்பவர்களை அதற்குரிய பலனை அடைவார்கள். நாத்திகர்களுக்கு இப்படிப்பட்ட பயம் ஏதும் இல்லாததால்தான் சீனா போன்ற நாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கானோர் ரகசியமாக கொல்லப்படுகின்றனர்.

நாத்திகர்களுக்கு மரண பயம் அதிகம். ஏனென்றால் நாத்திகர்களை பொறுத்தவரை உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுகிறது. உண்மையான ஆத்திகர்களுக்கு மரண பயம் இல்லை. ஏனென்றால் மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்று நம்புகிறான்.

Robin said...

நன்மை எது தீமை எது என்று பகுத்து அறியும் அறிவுதான் பகுத்தறிவே தவிர கடவுள் மறுப்பு அல்ல.

தமிழ் ஓவியா said...

//பாதிரியார்களை பாலியல் பலாத்காரம் செய்யும்படி கிறிஸ்தவம் போதிக்கிறதா?//

பாதிரியார்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள். ஏதோ ஒன்றும் தெரியாத சாதாரனக் கிறித்துவன் செய்திருந்தால் கூட குறைந்த பட்சம் மன்னித்து தண்டிக்கலாம். ஆனால் இயேசுவின் தூதர்களான பாதிரிகளே செய்யும் போது அந்த மதத்திற்கு மரியாதை எப்படிக் கிடைக்கும் ராபின்?

மக்களை நல்வழிபடுத்துவதற்குத்தான் மதமும் கடவுள் என்று சொல்லுகிறீர்களே?
இல்லை என்பதுதான் எனது வாதம்.

ஒரு சாதாரண மனிதனுக்கு நல்லது எது,கெட்டது எது என்று தெரியும் போது மதத்தை போதிக்கும் பாதிரிகளுக்கு தெரிய வேண்டாமா? ராபின்.

கபிலன் said...
This comment has been removed by the author.
கபிலன் said...

தவறுகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கையால் தான் நடக்கிறது என்பது போல சொல்லுவது சரி ஆகாது. கடவுள் நம்பிக்கை உடையவர்களும் தவறு செய்கிறார்கள் என்று வேண்டுமானால் கூறுங்கள். அதற்கு சமயங்கள் பொறுப்பாகாது. எத்தனையோ பேர் மருத்துவம் படிக்கிறார்கள், அவர்கள் அனைவரும் சிறப்பான மருத்துவர்களா? சிலர் தவறான அறுவை சிகிச்சை செய்வதில்லை ? அதே போல தான் கட்டிட நிபுணர், அரசியல் வாதி இப்படி அனைவரையும் சொல்லலாம். இதற்காக அவர் படித்த மருத்துவப் படிப்பையோ, பொறியியல் படிப்பையோ குறை கூறுவீர்களா ஐயா?

கடவுளை ஒழித்தால் சண்டை இல்லாத உலகை உங்களால் படைக்க முடியுமா? வேறு எந்த சண்டையும் இருக்காத உலகில்?

கடவுளே இல்லை என்கிற இயக்கத்தில் ஏற்பட்ட உட்கட்சி சண்டையில் தான் பெரியாரும் அண்ணாவும் பிரிந்தனர் என்பதை மறக்க வேண்டாம்.

தற்போது சமோவா தீவில் இருப்பதால், தொடர் மறுமொழிகள் கொடுக்க இயலாத நிலை.

நம்பி said...

//நாத்திகர்களுக்கு மரண பயம் அதிகம். ஏனென்றால் நாத்திகர்களை பொறுத்தவரை உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுகிறது. உண்மையான ஆத்திகர்களுக்கு மரண பயம் இல்லை. ஏனென்றால் மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்று நம்புகிறான்.//

இது புதுக்கதை நம்பிக்கைகளே மரண பயத்தின் விளைவே...முதலில் தீர்க்கமாக புரிந்து கொள்ளுங்கள்....நீங்கள் கடவுளை கும்பிட்டாலும் மரணம் தான் கும்பிடாவிட்டாலும் மரணம் தான்...மரணத்திற்கு பின் அய்யோ என்ன ஆகுமோ.?..நமக்கு பிறர் பேசுவது கேட்குமோ? என்ற தேடலில் விடை கிடைக்காமல் தங்களை திருப்பதி படுத்திக்கொள்வதற்காக கண்டுபிடிக்கபட்டவைகள் இந்த நரகம், சாத்தான்...எல்லாம் வந்தது...செத்த நாய் மேல எத்தனை நாய் ஏறினா என்ன..? ஒன்றும் இல்லை...இருக்கிறவங்களை பாருங்க போதும்...மரணத்தை பற்றி நினைப்பே வராது..அது வந்தா சொல்லிக்காம கிளம்பிட்டா போகுது...

1991 மனிதனின் சராசரி ஆயுள்...80..2001 இல் சராசரி ஆயுள் 60 இப்போது 50...அதற்கப்புறம்...40..அப்படியே ஒரு நாள் வாழும் ஈசலாக கூட மாறலாம்...அதற்குள் வேற்று கிரகத்துக்காரர்கள் கூட வருகைபுரியலாம்...அப்புறம் சாத்தான், வேதம் எல்லாம் தவிடு பொடியாக கூட ஆகலாம்.

சீனா, இந்தியா இது இரண்டையும் வைத்து எதனோடு ஒப்பிடாதீர்கள்...இந்த இரண்டு நாட்டின மக்கள தொகையின் கூட்டே உலக மக்கள் தொகையின் 40 சதவீதம் இரண்டே நாடு கால் வாசிக்எகும் மேல ஆக்கரமித்து விட்டது...பாக்கியுள்ள 60 சதவீதம் தான் 182..(தோராயமாக) நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.

நான் என்ன செய்தாலும், சிறு தவறு செய்தாலும் கடவுள் தண்டித்துவிடுவார் என்று நம்புவதில் நாட்டிற்கு ஆதாயம் உள்ளது. நான் என்ன செய்தாலும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்பதில் தான் நாட்டிற்கு பேராபத்து உள்ளது. இதில் இரண்டாம் வகை நபர்கள் தான் அதிகம். இந்த நம்பிக்கையை நாத்திகம் என்பீர்களா...ஆத்திகம் என்பீர்களா...?


முதலில் உள்ளவன் விளம்பரபடுத்திக்கொள்ளவே மாட்டான்...கடவுள் விளம்பர பிரியரா.?..அவரே படைத்தான் எனகிறீர்கள் அவர் எதற்கு தன்னை விளம்பர படுத்த மனிதனை படைக்கவேண்டும். அவருக்கு வேறு வேலை இல்லையா..? அதற்கு ஏதாவது அத்தாட்சி கொடுத்திருக்கிறாரா...? விளம்பரபடுத்தாம அவரிடம் போய் நின்று (செத்த பிறகு தானே போகப்போறே) விளம்பர படுத்த முடியாது...நீ வைச்ச ஆளா நான் என்று கடவுளிடம் கேள்...பயமா இருக்கா ? என்ன சார்? உயிரோட இருக்கிற மனிசனை சகட்டுமேனிக்கு திட்டறீங்க...இழிவு படுத்திறீங்க....பார்க்காத கடவுளுக்கு அதுவும் செத்த பிறகுதான் பாக்கப்போறீங்க (புராண புருடா கருத்துப்படி)..பார்த்தீங்களா இல்லையா என்பதற்கு புரூப்பே இல்லை...அதற்கு போய் இப்படி பயப்படுறீங்களே...

நம்பி said...

அதிபர் புஷ் ஈராக் மீது படையெடுக்கும் கொழுது...கடவுளிடம் பர்மிசன் (இயேசு) வாங்கிட்டுத்தான் போர் தொடுத்தேன்,,,பதிலுக்கு பின்லேடன் நான் அல்லாவிடம் பர்மிசன் வாங்கிட்டுதன் டிவின் டவர் மேலே பிளைட்டு விட்டேன்...இப்போ மேலே குறிப்பிட்ட இரண்டாம் நபர்கள் பட்டியல் வந்துவிட்டதா...என்ன செய்தாலும் கடவுள் பார்த்துக்கொள்வார், என்ன பாவம் செய்தாலும் மன்னித்துவிடுவார் கடவுள்...இதற்கு பெயர் ஆத்திகமா? நாத்திகமா..?

நம்பி said...

//Blogger Robin said...

இது பகுத்தறிவுடன் எழுதப்பட்ட பதிவாகத் தெரியவில்லை.
பாதிரியார்களை பாலியல் பலாத்காரம் செய்யும்படி கிறிஸ்தவம் போதிக்கிறதா?//............உங்கள் பகுத்தறிவை பயன்படுத்தி சிந்திக்கவும். //

பாலியல் பலாத்காரம் என்பது போதனையா? இது போதித்து வரக்கூடிய செயலா? இல்லை உணர்வு தூண்டுதலால் ஹார்மோன்களின் தூண்டுதலால், இயற்கையாக உருவாகக்கூடியப் பிரச்சினையா....?

இதை பகுத்தறிவுடன் யோசித்துமா? இந்த மாதிரி பின்னூட்டம் வருகிறது.

இது ஒரு மனக்கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட பிரிச்சினைதானே! அதாவது அந்த (இன்னொரு பாலின) துணைத் தொடர்பையே, நினைப்பையே அடி\யோடு வரவிடாமல், சூழ்நிலையையும் மாற்றவேண்டும்.

(மனிதனால் முடியாது என்பதினாலும் இயற்கைக்கு மாறான செயல் ''துறவு'' என்பதினாலும் தான், துறவு வாழ்க்கைக்கான சூழ்நிலையே, இந்த பாதிரியார்களுக்கு பயிற்சியின் போது உருவாக்குகிறார்கள்...அதுவும் நிரந்தரமானது அல்ல...)

உணவுப் பழக்கத்தையும் மாற்றவேண்டும். அடிக்கடி மனோதத்துவ மருத்துவரையும் ஆலோசிக்கவேண்டும். அப்படியே ஆலசித்தாலும் இந்த ஹார்மோன் சுரப்பதை தடுக்க முடியாது. மூளையின் பின்பகுதியில் ஒட்டிக்கொண்டு இருப்பது...இதை எப்படி? கழட்டி வைப்பது? இருபாலருக்கும் தான்.

இதனால் தான் இன்னொரு கிருத்துவப் பிரிவினர் இதைக் கிண்டல் செய்கின்றனர்....யார்?

''பெந்தகொஸ்தே'' நாங்கள் இந்த கட்டுப்பாடுகளை போலியாக விதித்து கொள்வதில்லை, திருமணம் புரிந்து கொள்கிறோம் உடல் கிளர்ச்சி தேவைகளை, துணையுடன் பூர்த்தி செய்துகொள்கிறோம்.....ஆகையால் எங்களது பிரிவில் இது மாதிரி பாலியல் பலாத்காரம் என்ற சமூக விரோத செயல்கள் ''பெரும்பாலும்'' பாதிரிக்குழுக்களிடம் நடைபெறுவதில்லை என்று இவர்களை (துறவு மனநிலையை பின்பற்றும், ரோமன் கத்தோலிக்கம்...இன்னும் இதர கிருத்துவப் பிரிவினரை) பார்த்து நகைப்பது வாடிக்கையான ஒன்று.

பலப்பிரிவுகளை, கொள்கைகளைக் கொண்ட கிருத்துவ மதம், ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன....எப்படி?

இது (பாதிரியார்களின் பாலியல் வன்கொடுமை) ''ரோமன் கத்தோலிக்க கிருத்துவ மதத்துடைய குற்றம்'' என்று ''பெந்தகொஸ்தே'' கிருத்துவ மதப்பிரிவு குற்றம் சாட்டுகிறது.

இங்கே என்னடான்னா? மதத்தின் குற்றமா? மண்ணாங்கட்டியின் குற்றமா? என்றால்? என்னாவது. குற்றம் செய்வதும் மதம் தான்....அதற்கான காரணத்தை சொல்லி வன்மையாக குற்றம் சாட்டுவதே அதே மதம் தான்.

(சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது...மூக்கை சிந்திறதுக்கு கூட நேரம் இல்லாததினால், யாரும் சிந்திக்காமல் இருக்கிறார்களோ? என்னவோ?)