Search This Blog

12.7.09

ஆனந்தவிகடனின் ஆரியத்தனம்!






ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்தப் பார்ப்பானும் சிங்களர்களின் கையாள்தான்! தப்பித் தவறிகூட வேறு வகையில் சிந்தித்துவிடக் கூடாது என்பதிலே மிகவும் வைராக்கியமாக இருந்தனர் இருந்தும் வருகின்றனர்.

இந்து ராம் துக்ளக் சோ என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு. இவர்கள் மிகவும் வெளிப்படையாக தமிழன் ரத்தத்தை ருசி பார்ப்பதில் நாக்கை நீட்டிக் கொண்டு அலைபவர்கள்.

ஆனால் ஆனந்த விகடனின் தளுக்கே தனி!

இந்த வார ஆனந்த விகடன் (15.7.2009) கருணாநிதிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

எதிலும் ஒரு நீக்குப் போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு அங்குள்ள சிங்கள இனத்தின்மீது ஒன்று சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால் அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீராவேசமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல் அலைப் பேச்சு, எரிமலைப்பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால் சிங்களர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப் போக்கு என்று சொன்னேன் என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கூறிய கருத்தினை எடுத்துக்காட்டி தனது வக்கணைகளை வாரிக் கொட்டியிருக்கிறது விகடன்

30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப்படையில் 30 ஆயிரம் பேர் உயிர்ப் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காது. கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்கு தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்திருந்தால், பவுத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால் நீங்கள் தான் தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக்கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தை தமிழ்நாட்டுத் தெரு வெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த பதவியை ராஜினாமா செய்து, பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தை போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்களை நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்குக் காவடி தூக்கி, ஆட்சியைப் பறி கொடுத்து.. என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காக காலத்தை வீணாக்கி விட்டீர்களே, தலைவரே? - இதுதான் ஆனந்தவிகடன் உதிர்த்த முத்துகள்.

ஈழத்தில் தமிழர்கள் சிங்களர்களால் கொல்லப் பட்டதற்கும் போராளிகள் கொல்லப்பட்டதற்கும் எல்லாம் காரணமே கருணாநிதி பேச்சுதான் என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளது விகடன்

ஈழத் தமிழர்களுக்காக அகிம்சை வழியில் தந்தை செல்வா தலைமையில் போராடினார்களே, உண்ணாவிரதங்கள் இருந்தார்களே, ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்திலும் கருத்துகளை எடுத்து வைத்தார்களே அதற்கெல்லாம் செவி சாய்த்து, தமிழர்களின் அடிப்படை நியாயமான உரிமைகளை அங்கீகரித்ததா இலங்கை அரசு?

1956_இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சட்டம் செய்யப்பட்டது அதனை எதிர்த்து 1956 ஜூன் 5 ஆம் நாள் தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

கொழும்பில் உள்ள காலிமுகத் திடல் என்னும் இடத்தில் அறவழியில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களர்கள் வெறி கொண்டு தாக்கினரே. உருட்டைக் கட்டைகளைக் கொண்டு அடித்தார்களே, கற்களால் அடித்தனரே, சிலரை பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றிலே தூக்கி எறிந்தனரே! குருதி சொட்டச் சொட்ட அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தத் தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது பிரதமராக இருந்த பண்டார நாயகா அவர்களைப் பார்த்து கேலியாகச் சிரித்தாரே, எதற்காக இப்படி உதைபடுகிறீர்கள்! சிங்களவர்கள் கொஞ்சம் முரடர்கள் பேசாமல் கலைந்து சென்று விடுங்கள். இனிமேல் இங்கு சிங்களம்தான் ஆட்சி மொழியாக இருக்கும்? என்றுதானே சொன்னார்.

இதனைத் தொடர்ந்து பத்தே நாள்களுக்குள் கல்லுயா பள்ளத்தாக்கில் வாழ்ந்த 150 தமிழர்கள் கொல்லப்பட்டனரே!

இதற்குக்கூட கலைஞர் கருணாநிதிதான் காரணம் என்று எழுதப் போகிறார்களா? அப்பொழுது கருணாநிதி ஏதாவது பேசியிருப்பார் என்று ஆடு ஓநாய் கதையை ஆனந்த விகடன் கூட்டம் அவிழ்த்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


போர் முடிந்தது ஆனாலும் ஈழத் தமிழர்களின் சோகத்துக்கு மட்டும் முடிவு ஏற்பட்டு விடவில்லை. ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தைப்பற்றிப் பேச எழுத அங்கு மனிதர்கள் இல்லை, ஏடுகள் இல்லை. வாரம் ஒன்றுக்கு 1400 பேர் முள் வேலி முகாம்களில் தமிழர்கள் மரணம் அடையும் கொடுமை! சிங்கள இரும்புக்கரத்தின் கொடிய பிடியில் ஈழத் தமிழர்கள் மரண விளம்பில் தத்தளித்துக் கொண்டுள்ளனர் இத்தகு சூழ்நிலையில், இந்த நேரத்தில் பேசப்படும் உரைகள் ஈழத் தமிழர்களுக்குக் கேடாக அமைந்துவிடக் கூடாதே என்ற பொறுப்புணர்ச்சியில் காலம் கருதி ஒரு முதல் அமைச்சர் பேசியதை வேறு விதமாக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வகையில் ஆனந்த விடகன். விளையாடிப் பார்க்கிறது.வெந்த புண்ணியில் வேல் பாய்ச்சும் விகாரப் புத்தியில் தன் வேலையைக் காட்டுகிறது.

இலங்கையில் சிங்களர்கள்தானே மெஜாரிட்டி? அப்படியிருக்கும்போது சிங்களவர் தான் ஜனாதிபதியாக வர வேண்டும். பிரதமராக வர வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டு போனால் தமிழர்களுக்கு இந்தத் தொல்லைகள் எல்லாம் வந்திருக்காதே! தமிழுக்கு இடம் இல்லாமல் போனால் குடிமூழ்கியா போய்விடும்?

தேவையில்லாமல் இதற்கெல்லாம் கொடி பிடித்ததால்தானே தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்? என்று கூட ஆனந்தவிகடன் இதோபதேசம் செய்யும்போலும்!


மானம் ஈனம் பார்த்தால் முடியுமா? அங்குத் தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், சூழ்நிலை கருதி, உயிர் தப்பிக்க அதனைப் பொருட்படுத்தாமல் விட வேண்டியது தானே என்று கூட ஆனந்தவிகடன் வகையறாக்கள் எழுதி னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை (அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பதுதானே அவாள்! தர்மம்!)

இரு வேறு மாறுபட்ட நிலைகளில் கலைஞர் அவர்கள் கூறிய கருத்தினை மிக இலாவகமாக பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, எந்த நிலையிலும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட வேண்டியவர் மட்டும் கலைஞராகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவில் ஆனந்தவிகடன் செயல்பட்டு இருப்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது போராடுவது கூடாது என்று சுயமரியாதை உள்ள எவரும் கூற மாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் பன்னாட்டு ஆயுத பலத்தால் போராளிகள் படுகொலை செய்யப்பட்டு பாமர மக்கள் ஒரு பாசிச ஆட்சியின் திட்டமிட்ட அடக்குமுறைகளால் பரிதவிக்கும் அவல நிலையில் கூறப்படும் கருத்து என்பது வேறுவிதமாகத் தானிருக்க முடியும். இரண்டும் இரு வேறுபட்ட நிலைகள் ஆனந்தவிகடன் வகையறாக்களுக்கு இது தெரியாதா? தெரியும், தாராளமாகவே தெரியும். ஆனாலும் எதைச் சொல்லியாவது கருணாநிதியை தாக்க வேண்டும் என்பதுதானே அவர்களின் தீராத வெறி சும்மா இருப்பார்களா?

மாநாடு கூட்டி பார்ப்பனர்கள் அரிவாளைத் தூக்குவோம் _ ஆரியத்தைக் காப்போம்! என்று முழக்கமிட்டபோது ஆனந்தவிகடன் பேனாக்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன என்று தெரியவில்லை.

ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை இங்கு பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டு இருந்தால், ஒருக்கால் அப்படி எழுத முன் வந்திருப்பார்களோ என்னவோ! தமிழன் தான் பெருந் தன்மைக்காரனாயிற்றே!

------------------மின்சாரம் அவர்கள் 12-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

10 comments:

Gokul said...

இது என்ன பதிவு, ஜூலை ஒன்றாம் தேதி கலைஞர் சட்டசபையில் ஆனந்த விகடன் கருத்தை ஒட்டித்தான் தன் கருத்தை சொல்லி இருக்கிறார், அப்போது கலைஞரும் ஆரியரோ?

ஆதாரம்:http://www.hindu.com/thehindu/holnus/004200907020340.htm

ஒரே கருத்தை கலைஞர் சொன்னால் வேறு அர்த்தம் ஆனந்த விகடன் சொன்னால் வேறு அர்த்தமோ?விகடனை திட்ட வேண்டும் என்ற பதிவில் கலைஞரையும் சேர்த்து அல்லவா திட்டுகறீர்கள்!

Chittoor Murugesan said...

வரதராஜ பெருமாள் ஒரு பார்ப்பன பெண்ணை மணக்க சம்மதித்ததால் தான் அவரை சில பஞ்ச கச்சங்கள் முன்னிறுத்தி இலங்கை ஒப்பந்தத்தையே சொதப்பி விட்டன. பிரபாகரன் பாவம் அவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்து பார்ப்பன அரசியல் தெரியாது. இல்லாவிட்டால் அவரும் மயிலாப்பூர் பிராமண சகோதிரி ஒருவரை கைப்பிடித்து பொம்மை ராஜா ஆகியிருப்பார்

Suresh Kumar said...

ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்த நல்ல கருத்து இது ஓன்று தான் . எல்லாவற்றையும் பார்ப்பான் என்ற அரசியலில் பார்க்காதீர்கள் . உங்களை பார்த்தல் பிழைப்புக்கு பார்ப்பான் என சொல்லுவீர்கள் போல் இருக்கிறது .

இந்த கருத்து ஆனந்த விகடன் கருத்து மட்டுமில்லை ஒட்டு மொத்த தமிழர்களின் கருத்து

செந்திலான் said...

ஆனந்த விகடனின் கருத்து முற்றிலும் சரியானதே.கருணாநிதி நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம்.கருணாநிதி நெளிவு சுளிவாக இருந்ததால் தான் காவிரி, முல்லைபெரியாறு என்று தொடர்ந்து உரிமைகளை இழந்து கொண்டிருக்கிறோம்.எல்லா பார்பனர்களையும் ஒரே மாதிரி நினைக்க வேண்டாம்.எனது நண்பர்களில் பலர் ஈழத்துக்கு ஆதரவானவர்களாக இருக்கிறார்கள்.எல்லாவற்றையும் ஒரு பொதுமைக்குள் அடைக்க வேண்டாம்.தமிழர்களிலும் காட்டி கொடுப்பவர்கள், துரோகிகள் தனது குடும்ப நலனுக்காக இனத்தையே பலி கொடுக்கத் தயங்காதவர்கள் இருக்கிறார்கள்.இந்தத் துரோகிகளை விட ஆனந்த விகடன் எவ்வளவோ மேல்..!

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் செய்யும் கொடுமைகளை பார்ப்பனர்களே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாத பார்ப்பன அடிவருடிகள் இன்னும் பார்ப்பனருக்கு வக்காலாத்து வாங்குவதுதான் தமிழனைப் பிடித்த சாபக்கேடு.

Suresh Kumar said...

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் செய்யும் கொடுமைகளை பார்ப்பனர்களே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாத பார்ப்பன அடிவருடிகள் இன்னும் பார்ப்பனருக்கு வக்காலாத்து வாங்குவதுதான் தமிழனைப் பிடித்த சாபக்கேடு. ///////////////////////////////


பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் கருணாநிதிக்கும் வீரமணிக்கும் எதிராக தான் போராடியிருபார் . பெரியாரின் மேல் வெறுப்பு வருவது போல் இருவரும் நடந்து கொள்கிறார்கள்

Gokul said...

கலைஞரை பார்ப்பன அடிவருடி என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கறேன்.

அது எப்படி ஒன்று உங்கள் கருத்துக்கு உடன்பட வேண்டும் அப்படி செய்யாதவர்கள் பார்ப்பன அடிவருடிகள் , இது இரண்டும் இல்லாத நடுநிலையாளர்களே இருக்க கூடாதா?

வால்பையன் said...

இன்னும் நீங்க திருந்தலையா!?

தமிழ் ஓவியா said...

//கலைஞரை பார்ப்பன அடிவருடி என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கறேன்.//

பேச நா இரண்டுடையாய் போற்றி போற்றி

தமிழ் ஓவியா said...

//இன்னும் நீங்க திருந்தலையா!?//

புத்தி சொல்றாராம். கவுண்டமணி அவர்களின் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.