Search This Blog

13.7.09

ஜாதி ஒழிந்தால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான்!


இந்நாட்டில் பொதுமக்களுக்குப் பொதுத் தொண்டு புரிவதற்காக ஓர் உண்மையான ஸ்தாபனம் இருக்கிறது என்றால் அது திராவிடர் கழகம் தான்!

மற்றவர்களெல்லாரும் பொதுத் தொண்டைச் சொல்லிக் கொண்டு பணம் பதவி சம்பாதிக்கின்றவர்கள். எங்கள் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டுப் பாடுபடுபவர்கள் நாங்கள் ஒருவர்தானே இந்த நாட்டில் இருக்கிறோம்? மற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏதாவது பொறுக்கித் தின்ன முடியுமா என்றுதான் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்.

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதே. அதாவது எந்த மனிதனும் எனக்குக் கீழானவனல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதே. 100-க்கு 97- பேராக உள்ள மக்கள் பறையன், சூத்திரன் என்று வீட்டில் இன்று உள்ளார்கள். இங்குப் பார்ப்பாரப் பூண்டும் இருக்கக்கூடாது என்று தான் அர்த்தம். சித்திரத்தில் வரைவதற்குக்கூட ஒரு பார்ப்பான் இருக்கக்கூடாது. பொம்மை பிடித்து வைக்கக்கூட ஒரு பறையன் இருக்கக்கூடாது. மனிதன் தான் இருக்க வேண்டும்.


இந்தக் கருத்தை நான் 1925-இலிருந்தே - காங்கிரசிலே இருந்து வெளியேறிய நாள் முதற்கொண்டே சொல்லி வருகிறேன்.


எனவே இதற்குக் காரணமான ஜாதி ஒழிய வேண்டும். ஜாதி ஒழிந்தால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான். இந்துமதம் ஒழிந்துவிடும். அறிவு வளரும். இவ்வளவு கடவுள்கள் இருக்கின்றனவே அவற்றில் ஜாதியில்லாத கடவுள்கள் உண்டா? காளி, முனி, பிரம்மா, விஷ்ணு எல்லா கடவுளுக்கும் ஜாதி உண்டே! ஜாதி ஒழிந்து விட்டால் கடவுள் போய்விடும் என்று சொல்ல முடியுமா? வேண்டுமானால் ஜாதியைக் காப்பாற்றும் இந்தக் கடவுள்கள் ஒழிந்துவிடும் என்று சொல்லலாம். வெள்ளைக்காரனுக்குச் ஜாதியில்லாத கடவுள் இல்லையா? அதற்கு இந்தக் காரியத்தைச் செய்வதற்கு மிகவும் துணிவு வேண்டும்.

எம்.ஆர்.ஜெயக்கர் என்பவர் அந்தக் காலத்தில் நம்முடைய மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் என்னை அழைத்துக் கேட்டார். "ஏன் மதம் ஒழியணும் என்று சொல்லுகிறாய்" என்று என்னைக் கேட்டார். ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் வீட்டிலே என்னை அழைத்து வைத்துக் கொண்டு பேசினார். நான் சொன்னேன் "மதம் ஒழிந்தால் என்ன நஷ்டம். இந்து மதம்தான் கெட்டுப்போய் விட்டதே. முஸ்லிமும் மற்றவனும் சாதியில்லா மதத்தை வைத்துக் கொண்டு இதை ஒழித்துவிட்டார்களே என்ன கெட்டுபோய்விட்டது?" என்றேன். அங்கே சில கடவுள்களுடைய படங்கள் சுவரில் மாட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. நான் சொன்னேன் "நீர் சூத்திரன், இன்னொருவன் பிராமணன் என்று சொல்லும் மதம் தான் போய்விடும். அப்படிப் போய்விட்டால் என்ன கெட்டுப்போகும்" என்று சொன்னவுடன் அவர் கேட்டார். அந்தப் படங்களைக்காட்டி (What about all these gods) இந்த கடவுள்கள் நிலை என்ன ஆகும் பிறகு? என்றார். "இவைகள் ஆபாசக் கடவுள்கள்தானே! ஒழியட்டுமே - "All these are rubbish gods" என்ன நட்டம் என்றேன்?" உடனே "Excuse me" என்னை மன்னியுங்கள் என்று சொல்லி வாயடைத்து உட்கார்ந்து விட்டரே!

அந்த மாதிரி ஜாதி போய்விட்டால் பார்ப்பான் போய்விடுவான். மதம் போய்விட்டால் ஒழுக்கம் போய்விடுமா? ஜாதி ஒழிந்து விட்டால் என்ன நஷ்டம் ஏற்பட்டுவிடும்? கடவுள் ஒழிந்தாலும், மதம் ஒழிந்தாலும், சாஸ்திரம் - பார்ப்பான் ஒழிந்தாலும் சரி, ஜாதி ஒழியணும். இந்த 1958-இல் எதற்காக ஜாதி? ஜாதியால் பார்ப்பானுக்கு இலாபம். ஆனால் நமக்கு நஷ்டம்தானே? அவன் உயர்ந்த ஜாதிக்காரனாக இருக்கிறான். பிரசிடெண்டு (குடியரசு தலைவர்) அவன் பிரதம மந்திரி அவன். இன்னும் உள்ள எல்லாப் பதவிகளிலும் அவன்! இதை மாற்றியமைக்கப் பாடுபட வேண்டுமென்பதில் நம்மவர்களில் யாருக்கு என்ன நஷ்டம்? இதனால் இன்ன பலன் என்று யாராவது சொல்லட்டுமே! தலை வணங்கி ஏற்றுக்கொள்ளுகிறேன். ஜாதி ஒழிந்தால் என்ன கெட்டுப்போகும்? உலகில் ஜாதியில்லாத மற்ற மக்கள் வசதியாக இல்லையா? கெட்டு விட்டார்களா? சிரைக்கிறவன், வெளுக்கிறவன், நெசவு செய்பவன், வீடு கட்டுபவன் இவர்கள் இருக்க வேண்டும். இவர்கள் தேவை சமூதாய வாழ்வுக்காக பார்ப்பான் இல்லாவிட்டால் எதிலே ஒட்டை யோசித்துப் பாருங்கள்.

-------------20-10-1958 அன்று முசிறியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: "விடுதலை 26-10-1958"

1 comments:

tamilan said...

பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :

1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.

2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.

3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.

இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:

1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.

2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.

3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் "உண்மைத் தமிழர்கள்" என அழைப்பது.

முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.

1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?

2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.

3) தமிழ் பள்ளிகளை மூடுவது.

4) தமிழ் பேசும் சமூகத்தினரை "அவர்கள் தமிழே கிடையாது" என வஞ்சகப்பேச்சு பரவுதல்.

5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.

6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.

7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.

இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.