Search This Blog

17.1.09

பார்ப்பனர்களின் குறும்புச் சடங்கு
தமிழர் பண்பாட்டைச் சீரழிக்கும் முயற்சி

மாட்டுப் பொங்கலன்று பசு மாட்டின் "பின்பக்க"த்திற்குப் பூஜை

பார்ப்பனர்களின் குறும்புச் சடங்கு


தை இரண்டாம் நாளை "மாட்டுப் பொங்கல்" என்கிறார்கள். உழவுக்குப் பயன்படும் (காளை) மாட்டுக்கு "நன்றி" பாராட்டும் நாள் என்கிறார்கள்.

அன்றைய நாளில் பல ஊர்களிலும் "ஏறு தழுவுதல்" நடைபெறுகிறது. போர்க் குணத்தோடு வளர்க்கப்படும் காளைகள் போட்டியின் போது அவிழ்த்து விடப்பட்டு ஓடிவரும்போது அதன் திமிலைப் பிடித்து அடக்கி நிறுத்த இளைஞர்கள் முயன்று, வீழும் விளையாட்டு. உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் விளையாட்டு. ஆனாலும் உயிரைப் பொருட்படுத்தாமல் இதில் ஈடுபடுகின்றனர். இது தமிழர் பண்பாடாக இருந்தது.

அறுவடைத் திருநாளாம் பொங்கலை, "சங்கராந்தி" ஆக்கிய பார்ப்பனர், மாட்டுப் பொங்கலையும் பார்ப்பனப் பண்பாட்டு நிகழ்ச்சியாக்கி விட்டனர். ஓர் அய்யங்கார் அம்மணிக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியைக் காட்டினார்கள். பசு மாடுகள் வரிசையாகக் கட்டப்பட்ட தொழுவம். பார்ப்பன மடிசார் மாமிகள், கையில் பித்தளைத் தட்டில் கர்ப்பூரத்தைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு, பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கர்ப்பூர தீபாராதனை காட்டும் காட்சியைக் காட்டினார்கள். இதுதான் பார்ப்பன பண்பாடு!

இந்து மதத்தின் எல்லாக் கடவுள்களும் பசு மாட்டில் வசிக்கின்றன என்ற முட்டாள்தனமான கருத்தின் அடிப்படையில் பசு மாட்டைக் கும்பிடும் பார்ப்பனர், இப்போது மாட்டுப் பொங்கலன்றே இதைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். பசுவின் மூத்திரம் வரும் வழியில்தான், லட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது, இந்து மதம்! அதனால்தான், வைணவக் கோயிலில் விடிந்ததும் பூஜை நடக்கும்போது பெருமாள் முகத்திற்கு நேரே பசு மாட்டின் யோனியைக் காட்டுகிறார்கள்! கடவுள் லட்சுமியை தரிசனம் செய்கிறதாம்!

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளும் காலத்தில், அந்த முயற்சிகளுக்கு ஓரளவு வெற்றிகள் கிடைத்துள்ள காலத்தில், தம் பண்பாட்டுத் திணிப்பில் பார்ப்பனர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றனர் என்பதை அத்தொலைக்காட்சி பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது! என்னே, காட்டுவிலங்காண்டித்தனம்!


பார்ப்பவர்கள், பார்க்காமல் புறக்கணிக்க வேண்டாவோ?


--------------------நன்றி:"விடுத்லை" 17-1-2009

5 comments:

Thamizhan said...

சாணி திருநீர்,
மூத்திரம் பஞ்ச கெளமியம்!
பசு மாடு தெய்வம்.
ஆனால் பெண்ணும்,சூத்திரனும் பாவ யோனியில் பிறந்தவர்கள்.
ஆமாம்.சாமியின் தலையிலே ஒரு சாமியம்மா உட்கார்ந்திருக்கிறதே,அது.... எங்கே அதெல்லாம் போகும்?

குப்பன்.யாஹூ said...

அந்த அய்யங்கார் அம்மணியின் காலில்தானே மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வீரமணி விழுந்து சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் சமர்ப்பணம் செய்தார்.

இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் வீரமணி என்ன எல்லாம் பட்டம் கொடுக்க போகிறாரோ அந்த அய்யங்கார் அம்மணிக்கு.

வீரம்நிக்கோ திராவிடர் கழஅகதிர்க்கோ அய்யங்கார் அம்மணியை பற்றி பேச எல் முனை அளவு கூட தகுதி யோக்கியதை கிடையாது.

இன்று நாவித கலைஞர் நாளை அய்யங்கார் அம்மணி, இதுதானே வீரமணியின் கொள்கை.குப்பன்_யாஹூ

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழன் அய்யா

Unknown said...

குப்பன் குழம்பி இருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

எப்படியிருப்பினும் வருகைக்கு நன்றி.

குப்பன்.யாஹூ said...

குழப்பம் எனக்கு இல்லை.

வல்லம் கல்லூரியில், அய்யங்கார் அம்மையார் ஆட்சி புரிந்த போது, சமூக நீதி காத வீராங்கனை பட்டம் கொடுத்து அழகு பார்த்தது , மானமிகு வீரமணி தானே.

தமிழ் ஓவியா அதை மறந்து விட்டாரா அல்லது மறக்க சொல்கிறாரா குப்பனை.


குப்பன்_யாஹூ


Only last Sunday, the US based ‘Periyar International’ owing allegiance to Veeramani’s Dravidan Kazhagam, awarded ‘Veeramani Award for Social Justice’ to Karunanidhi.

The same Veeramani, when he was in alliance with AIADMK, awarded Jayalalitha with a title ‘Protector of Social Justice’, when she ensured the placement of the 69% reservation in the Ninth Schedule in 1993


http://newstodaynet.com/newsindex.php?section=13&catid=22&id=10607