Search This Blog

5.1.09

ஆசை நாயகி துலுக்க நாச்சியாருக்குச் சிறப்பு சொர்க்க வாசல்!


சொர்க்கத்தின் திறப்பு விழா!

வைகுண்ட ஏகாதசியாம்! சொர்க்கத்தின் வாசல் கதவு திறக்கப்படுமாம்! அந்த நாள் 7.1.2009-இல் வருகிறதாம்! எல்லா வைணவத் தலங்களிலும் இது நடக்குமாம்! திருச்சி, உறையூர் நாச்சியார் கோயிலைத் தவிர! அங்கே மட்டும் சொர்க்கவாசல் திறப்பு ஸ்பெஷல் ஷோ ஆக பிப்ரவரி 20-இல் நடக்குமாம்! அன்றைய நாளில் சொர்க்கத்தில் நுழையும் வாய்ப்பு நாச்சியாருக்கு மட்டும் உண்டாம்!

யார் இந்த நாச்சியார்? திருமாலின் இசுலாமிய மனைவி! சீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழா பத்து நாளில் ஒரு நாள் ரங்கநாதனை இங்கு தூக்கிக் கொண்டு வந்து தங்க வைத்து, மறுநாள் சீரங்கத்திற்குத் திரும்பக் கொண்டு போவார்கள். பாவம் ரங்கநாதன்! அந்த ஒரே இரவில் ஒரு வருட ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஓர் ஏற்பாடு செய்து, கடவுளை நிந்திக்கும் கயவர்களாகப் பக்தர்களே காட்சி தருகின்றனர். ஆக, ஆசை நாயகி துலுக்க நாச்சியாருக்குச் சிறப்பு சொர்க்க வாசல்!

சாமான்யர்களுக்கான சொர்க்கவாசல் என்ன கதை?

பிரளயத்தால் அழிந்து போன உலகத்தைப் புதுப்பிக்கப் பிரமனைப் படைத்ததாம், நாராயணக் கடவுள். அந்தப் பிரம்மாவை வதைக்க இரண்டு அசுரர்கள் வந்தனராம். இந்த அசுரர்களை யார் படைத்தனர்? புராணம் பதில் கூறவில்லை.

இந்த அசுரர்களை நாராயணன் அழித்ததாம்! வைகுண்டத் தில் வாசம் செய்யும் வாய்ப்பைத் தங்களுக்குத் தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்களாம்! அதை ஏற்று, மார்கழி மாத சுக்ல ஏகாதசியில் வடக்கு வாசல் வழியாக அவர்களை வைகுண்டத்தில் அனுமதித்ததாம் நாராயணன்!

அதன் அடையாளம்தான் வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் எல்லாமே!


ஒன்று தெரிகிறது - கடவுளால் படைக்கப்பட்ட கடவுளான பிரம்மாவைக் கஷ்டப்படுத்திய அசுரர்களுக்கும் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் போது - எதற்காக ஏகாதசி விரதம்?


--------------------நன்றி: "விடுதலை" 4-1-2009

7 comments:

Unknown said...

ஒழுக்கமான கடவுள் ஏதவது உண்டா?
இருந்தா அடுத்த பதிவில் போடுங்க.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்

Unknown said...

ராமசாமி நாயக்கன் ஒரு ஊர் மேய்ஞ்சவன். ஒழுக்கத்த பத்தி அவனிடம் தான் பாடம் கேக்கனும்!!!

தமிழ் ஓவியா said...

பெரியார் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன் தன்னுடைய தவறுகள் அத்தனையும் தலைமுழுகிவிட்டு நாணயமாக ஒழுக்கமான ஒரு தலைவராக வந்தார். அதுமட்டுமல்லாது தான் முன்பு செய்த தவறுகளை மக்களிடம் சொன்னார். இப்படி வெளிப்படையாக பதிவு செய்து நாணயமாக நடந்து கொண்டவர் பெரியார்.

அவரின் பொதுவாழ்க்கை தொடங்கிய பிறகு அவரிடம் ஒழுக்கக்குறைவோ, கண்ணியக் குறைவோ இருந்ததில்லை என்பது அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மை.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை எதையும் மறைக்காமல் யார் மதிக்கிறார்களோ இல்லையோ உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்தையும் சொன்னவர் பெரியார்.

உண்மையிலேயே ஒழுக்கத்தைப் பற்ரி பெரியாரிடம்தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒழுக்கம் என்றால் என்ன?
பெரியார் சொன்னது இதோ.

"பிறர் உன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அதுபோல் நீ பிறரிடம் நடந்து கொள். இது தான் ஒழுக்கம்."

நந்தன் எதையும் சரியாக ஆராய்ந்து எழுதுங்கள். ஒவ்வொருத்தரைப் பற்றி ஒரு பிம்பத்தை கட்டி வைத்திருக்கிறது பார்ப்பனியம். அதற்கு அடிமையாகிவிடவேண்டாம் நந்தன். ஆராய்ந்து உண்மையை அறியுங்கள்.


தங்களின் வருகைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

துலாக்கா நாச்சியா இஸ்லாமிய பெண் என்று சொல்லி இந்துத்துவாக்கள் சிலைக்கு வெடி வைக்காமல் இருந்தால் சரி

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

தமிழ் ஓவியா,

உங்கள் பதில்களின் கண்ணியம் எனக்கு பிடித்திருக்கிறது. ஆனாலும் இந்த பதிவுகளில் எனக்கு உடன்பாடில்லை. தீண்டாமையை ஒழிக்கத் தான் கடவுள் மறுப்புக் கொள்கையை பெரியார் கையாண்டார் என்று நான் நினைக்கிறேன். (தவறாக இருந்தால் திருத்துங்கள்). அவர் செய்த புரட்சியால் தீண்டாமை பெருமளவில் குறைந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது இன்னும் ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும் தீண்டாமைக்கும் கடவுள் தான் காரணமா என்று தெரியவில்லை. இப்பொழுது பெருமளவில் நிலைமை மாறி விட்டது அல்லவா? உயர் சாதி, கீழ்சாதி என்று பிரித்துப் பார்க்காத ஆத்திகவாதிகள் தான் எனக்கு தெரிந்து மிக அதிகம். அவர்கள் மிக மதிக்கும் சில விஷயங்களை கீழ்த்தரமாக ஏளனம் செய்வது எதற்காக? கடவுள் மறுப்பு கொள்கையும், இத்தகைய ஏளனம் செய்யும் பதிவுகளும் அவசியமா? பலரின் மனதை புண்படுத்துவதைத் தாண்டி இந்த பதிவுகளின் நோக்கம் தான் என்ன? அப்படியே கடவுள் மறுப்பு செய்தாலும் இன்னும் கண்ணியமாய் செய்ய முடியாதா?

கோவி.கண்ணன் said...

//இத்தகைய ஏளனம் செய்யும் பதிவுகளும் அவசியமா? பலரின் மனதை புண்படுத்துவதைத் தாண்டி இந்த பதிவுகளின் நோக்கம் தான் என்ன? //

தமிழ் ஓவியா என்ன பதில் சொல்லப் போறார்னு தெரியவில்லை. ஆனால் எனக்கு தெரிந்த அளவுக்கு சொல்கிறேன்.

தமிழை கருவரை ஏற்ற இன்னும் நீதிமன்ற படிக்கட்டுகளில் தான் ஏறி இறங்குகிறோம், கண்டதேவி, பாப்பாரப் பட்டி கீரி பட்டிகள், இரட்டை குவளைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். நாகரீகத்தில் பின் தங்கிய நரிக்குறவர்களும் கூட சாதி என்ற அளவில் தலித்துகளை தாழ்வாக நினைக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் மூலக் காரணம் வருணாசிரம முறை, இதனை கட்டிக் காக்கும் உயர்சாதியினர், அவர்கள் கட்டமைத்த இறைவன் பற்றிய இட்டுக்கதைகள் இவைகள் தகர்ந்து போகதவரை ஏற்றத் தாழ்வுகள் என்றுமே மறைந்துவிடாது.

ஐயர், செட்டியார், பிள்ளைமார் என சாதிப் பெருமைகள் இருக்கும் வரை பகுத்தறிவாதம் மிக மிகத் தேவை.

பெரியார் சொல்லியபடி கடைசியாக ஒரே ஒரு மனிதனிடம் பார்பனீயம் எனப்படும் உயர்சாதி மனப்பான்மை இருக்கும் வரை பகுத்தறிவாதம் நடைமுறையில் இருக்க வேண்டும்.

நாய், பன்றி, மலம் (சாணி) என அனைத்தையும் இறைவன் என்று கும்பிட ஆரம்பித்த மனிதன், சக மனிதனை மதிப்பது இல்லையே, மனிதம் வளர்க்காத கடவுள் நம்பிக்கை எத்தகைய உயர்ந்த நிலையைக் காட்டினாலும் அவை நிராகரிக்கப் படவேண்டியதே.