Search This Blog

31.1.09

விடுதலைப்புலிகள் " போராளிகளா"? - "பயங்கரவாதிகளா"?


போராளிகளே தவிர பயங்கரவாதிகள் அல்லர்!

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் அறிவுரை கூறுவதாக, கருத்துக் கூறுவதாக நினைத்துக்கொண்டு பலரும் அவரவர் பாணியில் இஷ்டத்துக்குக் கருத்துகளைக் கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

(1) இரு தரப்பாரும் போரை நிறுத்தவேண்டும் என்று இதோபதேசம் செய்து வருகிறார்கள்.

போராளிகள் அங்கு போராடுவது அவர்களின் மக்களைக் காப்பாற்றுவதற்காக - அந்த மக்களும் தங்களின் வாழ்வுரிமைக்காக, மானவாழ்வுக்காக உயிரைத் துச்சமாகக் கருதி 24 மணிநேரமும் களத்தில் நிற்பவர்கள் போராளிகள்தான் என்ற உண்மையில் உண்மையாகவே இருக்கிறார்கள் - உறுதியாகவும் உள்ளனர்.

ஈழத் தமிழர்கள் தங்களுக்காகப் போராடும் போராளிகளின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாலும், நல்லெண்ணத்தாலும் - உண்மையிலே போராளிகள் போராடி வருவதாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத் தமிழ் மக்களையும் பிரிக்கவே முடியாது என்ற உண்மையான கண்ணோட்டத்தைப் புரிந்துகொண்டால், விடுதலைப்புலிகள்மீது பழி சுமத்துவது அபாண்டமே என்பதைப் புரிந்துகொள்வர்
.

(2) போரை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை என்றும், அரசியல் தீர்வு காணப்படும் என்றும் கதைக்கின்றனர்.

நார்வேயின் முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் நின்றிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் மீறியவர்கள் யார்? தன்னிச்சையாக இலங்கை அரசுதானே போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பின் வாங்கியது? இந்த நிலையில், விடுதலைப்புலிகளையும், சிங்கள அரசையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது குற்றமேயாகும்.

(3) விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தால்தான் பேச்சுவார்த்தை என்பதும் முன்வைக்கப்படுகிறது.

ஏதோ விடுதலைப்புலிகள் போர் வெறிகொண்டு சிங்கள இராணுவப் படையைத் தாக்குவதாக நினைத்துக்கொண்டு இதுபோன்ற நிபந்தனையை முன்வைக்கின்றன.

உண்மை என்னவென்றால், இலங்கையில் தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே எந்த ஆயுதத்தையும் தூக்கிக்கொண்டு முன்வரவில்லை.

ஈழத் தந்தை என்று மதிக்கப்பட்ட செல்வநாயகம் அவர் களின் தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டத்தை அலட்சியப்படுத்தியோடு அல்லாமல், அந்த அகிம்சைவாதிகளை அரசின் அதிகாரபலம் கொண்டு அடித்துத் துவைத்தனர் என்ற அரிச்சுவடி தெரியாதவர்கள்தான் தன் மனம் போன போக்கில் விடுதலைப்புலிகளால் தான் பிரச்சினை என்று பொறுப்பற்ற முறையில் கருத்துகளைக் கூறிக்கொண்டு திரிகின்றனர்.


(4) தமிழுக்கு ஆட்சி மொழித் தகுதி பறிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மாணவ - மாணவிகளுக்குக் கல்வியில் பாரபட்சம் காட்டியதுவரை எடுத்துச் சொன்னால், அது ஒரு பெரிய தொகுதியாகவே நீட்சி அடையும்.

ஈழத் தமிழ்த் தலைவர்கள் சாத்வீகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற தமிழ் நூலகம் சிங்கள வெறியர்களால் கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டது என்கிற விவரம் எல்லாம் தெரியாமல், வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்ற முறையில், வெறுப்பு நஞ்சைக் கக்கும் வகையில் வஞ்சகமாகப் பேசுகின்றனர் - எழுதியும் வருகின்றனர்.


தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்ட நிலையிலும், சிறையில் இருக்கும் தமிழர்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்ற கொடுமையான சந்தர்ப்பத்திலும், தமிழ்ப் பெண்கள், மானம், மரியாதையோடு வாழ முடியாது - சிங்கள வெறித்தனத்தின் உடல் பசிக்கு தமிழ்ப் பெண்களின் உடல் இரையாக்கப்படுகிறது என்ற கொடுமையான காலகட்டத்தில்தான் அங்கே போராளிகள் உருவாகவேண்டிய நிலையும், ஆயுதங்களைத் தூக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்பதை மறந்துவிட்டு, நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தன மானதாகும்.

இந்தப் பிரச்சினையில் பார்ப்பனர்களும், ஜெயலலிதாக்களும், காங்கிரஸ்காரர்களும், குறிப்பிட்ட இடதுசாரிகளும் போராளிகள்மீது அபாண்டம் பேசுவது கண்டிக்கத் தக்கதாகும்.


-----------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் -31-1-2009

7 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்ட நிலையிலும், சிறையில் இருக்கும் தமிழர்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லை என்ற கொடுமையான சந்தர்ப்பத்திலும், தமிழ்ப் பெண்கள், மானம், மரியாதையோடு வாழ முடியாது - சிங்கள வெறித்தனத்தின் உடல் பசிக்கு தமிழ்ப் பெண்களின் உடல் இரையாக்கப்படுகிறது என்ற கொடுமையான காலகட்டத்தில்தான் அங்கே போராளிகள் உருவாகவேண்டிய நிலையும், ஆயுதங்களைத் தூக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்பதை மறந்துவிட்டு, நாட்டுரிமைக்காகப் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பது சிறுபிள்ளைத்தன மானதாகும்.

இந்தப் பிரச்சினையில் பார்ப்பனர்களும், ஜெயலலிதாக்களும், காங்கிரஸ்காரர்களும், குறிப்பிட்ட இடதுசாரிகளும் போராளிகள்மீது அபாண்டம் பேசுவது கண்டிக்கத் தக்கதாகும்.//

நானும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிரேன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

புலிகளைப் பயங்கரவாதிகள் என குற்றம் சாற்றுபவர்கள்...
1.வரலாறு அறியாதவர்கள்
2.வரலாற்றை மறைப்பவர்கள்
3.தமிழர் அல்லாதவர்கள்
4.தமிழின துரோகிகள்
5.தமிழினத்தில் பிறந்த தன்னலப் பேய்கள்
அல்லது...
6.அரசியலாளர்கள்

இந்தப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் கண்டிப்பாக அடங்குவார்கள்..

ஆ.ஞானசேகரன் said...

தமிழ் போராளிகளிடம் ஏன் ஒற்றுமை இல்லை என்பதுதான் புரிந்துக்கொள்ளமுடியவில்லை..தமிழகத்தில் புரட்சித் தலைவர் MGR க்கு பிறகு ஈழத்தமிழர்க்கு முழுமையாக ஆதரவை கொடுக்கவில்லை.. கொடுப்பதுபோல் நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்... இந்த நிலைதான் பயங்கரவாத நிலைக்கு தள்ளப்படுகின்றது....

வெத்து வேட்டு said...

those who say LTTE is freedom fighters are:
1)live on ltte's collection money
2)sore loosers
3)just terrorists like ltte
4)begging ltte for more money

::)

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்

நம்பி said...

//ஆ.ஞானசேகரன் said...

தமிழ் போராளிகளிடம் ஏன் ஒற்றுமை இல்லை என்பதுதான் புரிந்துக்கொள்ளமுடியவில்லை..
தமிழகத்தில் புரட்சித் தலைவர் MGR க்கு பிறகு ஈழத்தமிழர்க்கு முழுமையாக ஆதரவை கொடுக்கவில்லை.. கொடுப்பதுபோல் நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்... இந்த நிலைதான் பயங்கரவாத நிலைக்கு தள்ளப்படுகின்றது....
January 31, 2009 10:56 PM //

இது முற்றிலும் தவறானச் செய்தி...புரட்சித்தலைவர் ஆதரித்த ஒரு பிரிவு விடுதலை புலிகள் இயக்கம்...எஸ்.டி.எஸ் ஆநரித்த இயக்கம் பிளாட்....கலைஞர் ஆதரித்த இயக்கம் டெலோ......இப்படி பல பிரிவுகள் இருந்தன ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைவர்கள் ஆதரித்து வந்தனர். மக்கள் அப்பொது அனைவரையும் போராளிகளாக பார்த்தனர். ஆதரித்தனர்.

இதில் எஸ்.டி.சோமசுந்தரம் முன்னால் அதிமுக அமைச்சர்...ஆக அதிமுகவிலேயே இரு பிரிவுகள்...அந்த இரு போராளி பிரிவுகளும் பின்னாளில் என்ன? ஆயின? என்பது வரலாற்றை பின்னோக்கிப்பார்த்தால் தெரியும். எலியும், பூனையுமாக ஆகிவிட்டன.

இதில் எம்.ஜி.ஆர் இறுதியாக ஆதரித்தது எல்.டி.டி.ஈ இயக்கம். அந்த இயக்கத்திற்கு இரு இயக்கங்கள் நன்கொடை கொடுக்க முன்வந்தன...கலைஞர் எல்லா இயக்கங்களுக்கும் கொடுத்தது போலவே இதற்கும் நன்கொடை கொடுக்க முன்வந்ததை உதறித்தள்ளி விட்டு எம்,ஜி,ஆர் கொடுத்த 3 கோடி நன்கொடையை மட்டும் பெற்று சென்றது.பின்பு அந்த இயக்கம் அவருக்கும் (எம்.ஜி,ஆருக்கு) எதிரியானது. இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டதால். இதர இயக்கங்கள் அமைதிப்படையை ஆதரித்தன. ஆதரிக்கவில்லை என்றாலும் எவரும் தடுக்க முயலவில்லை. காரணம் குறிப்பிட்ட ஒற்றுமையின்மை தான்.

அமைதிப்படையை எதிர்த்தது கலைஞர் மட்டும் தான். அதன்பலனாக விபி சிங் பிரதமராக பதவியேற்றவுடன், அவரிடம் வலியுறுத்தி உடனடியாக அமைதிப்படை வாபஸ் பெறப்பட்டது.

அதற்கு நன்றி கடனும் செலுத்தப்பட்டது...அசாம்பாவிதமாக.
...உயிர் பலிகளை வாங்கியது. ஆட்சிக்கலைக்கப்பட்டது...மீண்டும் கலவரங்கள்....காங்கிரஸ் அரியணை, தமிழகத்தில் எதிர்க்கட்சியற்ற சூழ்நிலை..பார்ப்பன அராஜக ஆட்சி....கொலைப்பழி...சொத்துக்கள் நாசம்..எல்லாம் நடந்தேறியது.

ஒருவருக்கொருவர் இனப்படுகொலையை அரங்கேற்றிக்கொண்டனர். பல போராளிகள் போராளிகளினாலேயே பலியாயினர். இலங்கையில் தமிழ்த் தலைவர்கள் பலியாயினர்.


இந்த அரங்கேற்றம் தமிழக மக்களை இதிலிருந்து விலக்கி விட்டது. 1991 இல் நடந்த படுகொலை சம்பவத்தால் இது முற்றிலுமாக தமிழக மக்களிடமிருந்து விலக்கிவிட்டது.

இந்த ஒற்றுமையின்மை இன்று வரை இலங்கையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதிலில் அங்கு சீர்செய்தால் போதும்.