Search This Blog

19.1.09

பார்ப்பனர் ஆதிக்கத்தின் அடிவேரை அடித்து வீழ்த்தும் வெட்டரிவாள்கள்
ஒரே நேர்க்கோட்டில் பார்ப்பனர்கள்அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அம்மையார் பேட்டி ஒன்றில் தொல். திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரதம் குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்:

"கருணாநிதியும், திருமாவளவனும் பேசிக்கொண்டு நடத்துகிற ஒரு நாடகம்"

("நமது எம்.ஜி.ஆர்", 19.1.2009).


இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் இது ஜெயலலிதா அம்மையாரின் கருத்து என்று கூறி, அதற்குமேல் அதற்குள் செல்லவில்லை.

மானமிகு தொல். திருமாவளவன் மேற்கொண்டிருந்த உண்ணாவிரத மேடைக்கே சென்று, வாழ்த்திப் பேசி - "வீரமரணம் அடையத் தயாராக இருப்போம்" என்று வீர முழக்கமிட்டார்.

இந்த நிலையில், தோழர் தா. பாண்டியன் அவர்கள் செய்தியாளர்கள் கேட்ட வேறு கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்துவிட்டு, இந்த வினாவை மட்டும் சந்திக்காமல் நழுவியது ஏன் என்று தெரியவில்லை.

பதில் சொல்வதாக இருந்தால் கடுமையானதாகவிருக்கும் - கூட்டணியின் அச்சையே முறிக்கும் அளவுக்கு அது முட்டுதலை ஏற்படுத்தும் என்று நினைத்தாரோ என்னவோ!

உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசிய நிலையில், ஜெயலலிதா அம்மையார் கூறும் அந்த நாடகத்தில் தோழர் தா.பா. அவர்களுக்கு ஒரு பாத்திரம் இருக்கத்தானே செய்யும்? அது என்ன பாத்திரமாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் யூகமாகப் பேசுவதற்கு கம்யூனிஸ்ட் செயலாளர் இடம் கொடுத்திருக்கவேண்டாம் என்பதே நமது கருத்து.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அய்யங்கார் அம்மையார் திருமா அவர்களின் உண்ணாவிரதத்தை ஒரு நாடகம் என்று சொல்கிறார் என்றால், தினமலர் பார்ப்பனர் என்ன எழுதுகிறார்?

தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி: நண்பர் திருமாவளவன் மட்டும் தன்னிச்சையாக, யாரிடமும் அறிவிக்காமல், தானே ஒரு முடிவெடுத்து, இலங்கைப் பிரச்சினையை வலியுறுத்தி உண்ணாநோன்பைத் தொடங்கியுள்ளார்.

டவுட் தனபாலு: அவரு பாவம்... நம்ம ஓட்டு வங்கியெல்லாம் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போயிடுமோங்கிற பயத்துல ஏதோ ஒரு உண்ணாவிரதம் இருந்து பார்க்கிறார்.... அது பொறுக்கலையா உங்களுக்கு...? அதையெல்லாமா உங்கள்ட்ட சொல்லி அழ முடியும்?

("தினமலர்", 19.1.2009, பக்கம் 8)

அய்யங்கார் அம்மையார் நாடகம் என்கிறார் - "தினமலர்" அய்யரோ ஓட்டு வங்கிக்காக என்கிறார்.

ஈழத் தமிழர் பிரச்சினையென்றாலும், சமூகநீதிப் பிரச்சினை என்றாலும், மதச் சார்பின்மை என்றாலும் எல்லாப் பார்ப்பன வகையறாக்களும், அது எப்படி ஒரே நேர்க்கோட்டில் வந்து விழுகிறார்கள்?

அதுதான் பார்ப்பனப் பாசம் என்பது. இந்தப் பிரச்சினைகள் எல்லாமே பார்ப்பனர் ஆதிக்கத்தின் அடிவேரை அடித்து வீழ்த்தும் வெட்டரிவாள்கள்தானே!

பார்ப்பனர்களுக்கென்று ஒரு நாடு இல்லாத காரணத்தால், நாடோடிகளாகத் திரிந்து ஆங்காங்கே ஒண்டிக்குடித்தனம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டுக்குரிய மக்களுக்குத் தனி நாடு கிடைத்துவிட்டால், "ஒண்ட வந்த நம்மை உண்டு இல்லையென்று பார்த்து விடுவார்களோ, ஓட ஓட விரட்டுவார்களோ" என்ற பயத்தில் இப்படி அக்கப்போர்களையும், அரட்டைக் கச்சேரிகளையும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த "ஈரோட்டுக் கண்ணாடியை" அணிந்து பார்த்தால், அவாளின் கொட்டம் அடுத்த நொடியே அடங்கிப் போய்விடும் - தமிழன் போடும் எச்சிலையில் புரளும் நிலையும் உருவாகிவிடும்.


---------------- கருஞ்சட்டை அவர்கள் 19-1-2009 "விடுதலை" இதழில் எழுதியது.

11 comments:

Unknown said...

/பார்ப்பனர்களுக்கென்று ஒரு நாடு இல்லாத காரணத்தால், நாடோடிகளாகத் திரிந்து ஆங்காங்கே ஒண்டிக்குடித்தனம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டுக்குரிய மக்களுக்குத் தனி நாடு கிடைத்துவிட்டால், "ஒண்ட வந்த நம்மை உண்டு இல்லையென்று பார்த்து விடுவார்களோ, ஓட ஓட விரட்டுவார்களோ" என்ற பயத்தில் இப்படி அக்கப்போர்களையும், அரட்டைக் கச்சேரிகளையும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.//


ஆடு மாடு ஓட்டிக் கொண்டு ஒண்ட வந்தக் கூட்டத்தைத்தான் “பார்ப்பானும் தமிழன்” என்று சொல்லி ஏமாறுகிறான் தமிழன். ஏமாந்த தமிழனை வைத்து ஏற்றம் பெற துடிக்கிறது பார்ப்பனக் கூட்டம். அதற்கு தா. பாண்டியனும் உடந்தையா? நாடில்லாத பார்ப்பானுக்கு நாடாளும் வாய்ப்பைக் கொடுக்காதீர்கள் தமிழர்களே!

Thamizhan said...

அனைத்துத் தமிழர்களுக்கும்,
முக்கியமாகத் தமிழ்ப் பெண்களுக்கும்
பொறுமையாக இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழ் தொலைக்காட்சிகள்,
தமிழ் இதழ்கள் இவற்றிற்குத் தொடர்ந்து
தெரிவித்து நிகழ்ச்சிகள்,கட்டுரைகள்
ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இளைய தலை முறைக்குப் போய்ச் சேர முயற்சிகள் தொடர வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்

&
தமிழன் அய்யா.

தாமிரபரணி said...

பாம்பைவட கொடியவர்கள் இந்த பார்ப்பனர்கள்
இவர்களிடம் ஆட்சியை கொடுத்தால்
வடநாட்டவர்களுக்கு மாலையிடுவது, தமிழ் மக்களுக்கு பாடைபோடுவதுதான் இவர்களின் வழக்கம்
இந்தியை தூக்கிவைத்து கொண்டாடுவது,
தமிழை தூக்கி எறிந்து கொண்டாடுவது
தமிழையும், தமிழர்களையும் எள்ளி நகையாடுவதுதான் இந்த பார்ப்பனனின் தலையாய கடமை

Unknown said...

முதல்வர் கருணாநிதியே உண்ணாவிரதம் இருந்ததை
குறை கூறி சாடியுள்ளார்.
அதற்கு என்ன விளக்கம்
தருவீர்கள்.தங்கபாலு பார்பனரா
இல்லை கருணாநிதி பார்ப்பனரா?

விடுதலை திருமா பக்கமா இல்லை
கருணாநிதி பக்கமா?.தி.கவினர்
ஏன் உண்ணாவிரத்திற்கு ஆதரவு
தெரிவித்து போராடவில்லை.
உங்களுக்குள் ஆயிரம் பூசல்,
அதை மறைக்க பிறரை
குறை கூறுவது வேடிக்கை.
நாடகமாடுவது யார்,பதவிக்காக
எதையும் செய்யாமல் அறிக்கை
விட்டே பிழைப்பு நடத்துவது
யார் என்பது உலகிற்கே தெரியும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தாமிரபரணி

தமிழ் ஓவியா said...

//தி.கவினர்
ஏன் உண்ணாவிரத்திற்கு ஆதரவு
தெரிவித்து போராடவில்லை.//

பெரியாரின் கொள்கைகள் என்னவென்று தெரிந்தால்தான் பெரியாரை விமர்சிக்கமுடியும்.

பெரியாரின் கொள்கைகள் என்ன வென்றே தெரியாமல் "நான் பெரியார் விமர்சகன்" என்று பெயர் வைத்துக் கொண்டு விமர்சிப்பது என்ன வகை அறிவு நாணயமோ?

உண்ணாவிரதப் போரட்டத்தை பெரியார் சண்டித்தனமான போராட்டம் என்பார்.

அந்த அடிப்படியைக்கூட நீங்கள் தெரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது உங்களின் அரைகுறைப் பார்வையே.

உங்களிடம் விவாதிப்பது நேரக்கேடே தவிர உருப்படியான எந்த முடிவுக்கும் வர முடியாது.

நன்றி.

Unknown said...

நான் குறிப்பாக இந்த உண்ணாவிரதத்தை பற்றி கேட்டிருக்கிறேன்.பொதுவான பதில்
தருகிறீர்கள். திக யார் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினாலும் கடந்த காலங்களில்
சொல்லி, சண்டித்தனம் என்று விமர்சித்துள்ளதா?
தங்கபாலுவும்,காங்கிரஸ் கட்சியும்
செய்துள்ள விமர்சனத்தை என்னவென்பீர்கள்.அவர்களும்
பார்பனர்களா?.தங்கபாலு எப்போது
பார்பனராக மாறினார்.

Unknown said...

சத்தியமூர்த்தி பவன் முன் தி.க ஆர்ப்பாட்டம் செய்யும்,தங்கபாலு சொன்னதை திரும்பப் பெற வேண்டும் என்று வீரமணி அறிக்கை விடுவாரா.

தமிழ் ஓவியா said...

//திக யார் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினாலும் கடந்த காலங்களில்
சொல்லி, சண்டித்தனம் என்று விமர்சித்துள்ளதா?//

உண்ணாவிரத்ப் போராட்டத்தில் உடன்பாடில்லை என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறது.

அதை அறியமால் மீண்டும் மொட்டைதாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் கேள்வி கேட்பது சரியல்ல.

tamilan said...

கருணாநிதி தெலுங்கே தான். அதான் தமிழ்நாட்டு OBC இடஒதுக்கீடு பட்டியலில் ஒரே இந்தி தெலுங்கு பேசும் சாதிகள். 'பாப்பான்' தமிழ் இல்லை...இவன் தமிழ் இல்லை...அவன் தமிழ் இல்லை என அடிக்கடி பேச்சு அளிப்பவர்...அவரே தமிழ் இல்லை என்பது நிசப்தமான உண்மை. அர்ஜுன் சிங், வி பி சிங், இந்த சிங், அந்த சிங் போன்ற இந்தி தலைவர்களை தலையில் தூக்கி புகழ்ந்து பாடும் பாங்கில் போய்ட்டார் மு க.