Search This Blog

21.1.09

ஆரிய பார்ப்பன வெறி பிடித்த பா.ஜ.க. ஆட்சி


பா.ஜ.க. ஆட்சியின் ஊதாரித்தனம்!

பாரதீய ஜனதா ஆட்சி மத்தியில் இருந்தபோதும் சரி, சில மாநிலங்களில் ஆட்சியில் இருந்தபோதும் சரி, சாதனைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இருந்ததில்லை. அவர்கள் செய்தது எல்லாம் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டை எப்படி காவி மயமாக்குவது என்ற சிந்தனையில்தான் இருந்தது.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவிருந்த முரளி மனோகர் ஜோஷி, கல்வித் துறையை பச்சையாகக் காவி மயமாக்கிடக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்.

பல்கலைக்கழகங்களில் சோதிடத்தைக் கட்டாயப்படுத்தினார் - வேதக் கணிதம் என்ற அறிவியலுக்கு முரணானவற்றை மாணவர்கள் மூளையில் திணிக்க முயற்சி செய்தார்.

வரலாற்றுக் குழுவில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகத் தட்டிப் பார்த்துத் தேர்வு செய்து நியமனம் செய்தார். தவறான வரலாறுகளை அரசு செலவில் எழுதிடத் தூண்டினார்.

திராவிட நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகம் என்பது ஆரிய நாகரிகமே என்று சாதிக்க கணினியைப் பயன்படுத்தி எருதினைக் குதிரையாக்கிக் காட்டும் மோசடி வேலைகளில் ஈடுபட்டார்.

ஆர்.எஸ்.எஸ். கல்வியாளர் ஒருவரைக் கொண்டு பாடத் திட்டம் ஒன்றை வகுத்து, அதனைச் செயல்படுத்தத் திட்டமிட்டனர்; சரஸ்வதி வந்தனா என்ற ஒன்றை கடவுள் வாழ்த்தாகப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த முயன்று தோற்றனர்.

எந்த அளவுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக விருந்த முரளிமனோகர் ஜோஷி ஆரிய பார்ப்பன வெறி பிடித்தவராக இருந்தார்
என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதும்.

திராவிடப் பல்கலைக்கழகத்தின் தோற்றுநரான பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் திராவிடக் கலைக்களஞ்சியத்தை (என்சைக்ளோபீடியா) நேரில் அளித்தபோது அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி என்ன சொன்னார் தெரியுமா?

இந்தத் திராவிட என்ற சொல்லை நீக்கலாமே என்றாராம். அதற்குப் பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் தேசிய கீதத்தில் உள்ள திராவிட என்ற சொல்லை நீக்கிவிட்டால், நானும் நீக்கி விடுகிறேன் என்று அறிவார்ந்த பதிலை நேருக்கு நேர் அளித்து மூக்கை வெட்டினார்.


அதேபோல இராணுவத்துறை உள்பட பல துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குப் பதவிகள், பணிகள் தங்கும் தடையின்றி அளிக்கப்பட்டன. அதன் விளைவுதான் மும்பை - மாலேகாவ் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் ஆகும். முன்னாள் இராணுவத்தினரும், இந்நாள் இராணுவ அதிகாரியும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குப் பயிற்சி கொடுத்த தகவலும், அவர்கள் அளித்த திட்டத்தின்படிதான் அந்தக் குண்டு வெடிப்பு நடந்தது என்கிற பூனைக்குட்டியும் வெளியில் வந்து விட்டதே!

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி குஜராத்தில் நரேந்திர மோடி நரவேட்டை ஆடிய கொடுமையையும் நினைத்துப் பார்க்கவேண்டும். உச்சநீதிமன்றமே நீரோ மன்னன் என்று அவருக்குப் பட்டம் சூட்டிய பின்னர் வேறு எதையும் கூறத் தேவையில்லையே!

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் கருதும் இந்துத் துவாவைத் திணித்தது ஒருபுறம் இருந்தால், நாட்டு நலனில், மக்கள் வளர்ச்சியில் அவர்கள் சாதித்தது என்ன என்பதும் குறிப்பிடத்தக்க வகையில் ஏதும் கிடையாது.

அவர்களது நிர்வாகத்தின் இலட்சணத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு இதோ:

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றது. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த வசுந்தராராஜே முதலமைச்சராக இருந்தார். அவர் பயணம் செய்வதற்காக ரூ.20 கோடி செலவில் இத்தாலியிலிருந்து ஹெலிகாப்டர் ஒன்று வாங்கப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அந்த ஹெலிகாப்டரை ஓட்டும் அனுபவம் உள்ளவர்கள் இந்தியாவில் கிடையாது. இதுதான் பா.ஜ.க. ஆட்சி நிருவாகத்தின் உச்சக்கட்டம்.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், முதலமைச்சர் வசுந்தராராஜே தான் பயணம் செய்ய வாடகைக்கு வேறு ஹெலிகாப்டரைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

மக்கள் பணம் என்றால் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா முதலமைச்சருக்கு அவ்வளவு அலட்சியம் என்பதல்லாமல் வேறு என்ன?

மத்திய தணிக்கைத்துறை இதனை அம்பலப்படுத்திவிட்டது. இது பனிப்பாறையின் ஒரு முனைதான்.

தோண்டத்தோண்ட பாறைகளே வெளிவந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.


-------------------- நன்றி: "விடுதலை" 21-1-2009

2 comments:

Unknown said...

//திராவிடப் பல்கலைக்கழகத்தின் தோற்றுநரான பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் திராவிடக் கலைக்களஞ்சியத்தை (என்சைக்ளோபீடியா) நேரில் அளித்தபோது அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி என்ன சொன்னார் தெரியுமா?

இந்தத் திராவிட என்ற சொல்லை நீக்கலாமே என்றாராம். அதற்குப் பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் தேசிய கீதத்தில் உள்ள திராவிட என்ற சொல்லை நீக்கிவிட்டால், நானும் நீக்கி விடுகிறேன் என்று அறிவார்ந்த பதிலை நேருக்கு நேர் அளித்து மூக்கை வெட்டினார்.//

பார்ப்பனர்களுக்கு திராவிட என்ற சொல்லின் மீது இருக்கும் வெறுப்பைக் கண்டபிறாகவது திராவிட என்ற சொல்லின் அவசியத்தை உணர்ந்து கொண்டால்
நல்லது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்