Search This Blog

25.1.09

இந்தியாவில் மதவெறியின் அடிப்படையில் நாட்டை உருவாக்கிட சதி!
இந்தியாவில் இந்துமத ஆட்சியை நிறுவிட சதி!

இந்துராஷ்ட்ரம் அமைக்க அரசமைப்புச் சட்டம் உருவாக்கம்

ஆர்.எஸ்.எஸ். - குண்டுவெடிப்புச் சூத்திரதாரி புரோகித்

திரைமறைவில் போட்ட சதித் திட்டங்கள் அம்பலம்!


மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதிகாரக்கும்பல் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் தலைமையில் செயல்பட்டுப் பலரின் உயிரைக் குடித்தது மட்டுமல்லாமல், இந்தியாவில் இந்து மத அரசை நிறுவிடச் சதிச் செயல்களில் ஈடுபட்ட நாட்டு விரோதக் கும்பலும் ஆகும் எனும் விவரங்கள் வெளிவந்துள்ளன.

அவர்களுடைய திட்டமான இந்துராஷ்ட்ரம் பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு ஆகி யவைபற்றி ஆலோசித்ததோடு மட்டுமின்றி, மாநில அரசுகள் இல்லாத ஒரே நாடு, மக்களுக்கு மதப் பயிற்சி அளித்தல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்துதல் என ஒரு நாட் டின் பல்வேறு அம்சங்களையும் கொண்டதாகத் திட்டம் இடப்பட்டுள்ளது.

இதுபற்றிய சதிக் கூட்டத்தில், தன் இந்துராஷ்ட்ரத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில பத்திகளை புரோகித் படித்துக் காட்டியபோது, வேதங்களில் குறிப்பிட்டுக் கூறியுள்ளது போன்ற பாரதக் கலாச்சாரத்தை வலுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.பி. சிங் கலந்துகொண்டார். அபிநவ் பாரத்தின் உறுப்பினர்கள் அரசியல் சட்டம்பற்றி விவாதித்தது உள்பட எல்லா விவரங்களும் புரோகித்தின் மடிக்கணினியில் பதிவாகியுள் ளது.

அரசமைப்புச் சட்டத்தின் சில கூறுகள்:

பொருளாதாரம்

தற்சார்புள்ள வேளாண் வளர்ச்சியைக் கண்ணோட்டத்தில் நாட்டின் கலாச்சாரத்தைக் கட்டமைத்தல், சட்டங்களைக் கண்டிப்பாகச் செயல்படுத்தல், பாரதீய வழி முறைகளின்படி பாரத் சேனையை அமைத்தல்; வெளி நாட்டுப் படையெடுப்பை எதிர்த்தல்.

பாதுகாப்பு

இதுபற்றிப் பேசும்போது, புரோகித் தற்போதுள்ள 14 லட்சம் போர் வீரர்களை ஒரு கோடியாக உயர்த்துதல், பாதுகாப்பு அமைச்சர் இனிமேல் போர் அமைச்சர் என்று அழைக்கப்படவேண்டும். போலி சங்கராச்சாரி பாண்டே பேசும்போது, பாகிஸ்தான் என்று குறிப்பிடக்கூடாது என்றும், அந்நாடு தனி நாடல்ல என்றும் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதிதான் என்றும் கூறியுள்ளார்.

கொடி

தங்க நிற ஓரம் கொண்ட காவிக்கொடிதான் இந்து ராஷ்ட்ரத்தின் கொடியாம். இரண்டு பங்கு நீளமும் (அதில் பாதி) ஒரு பங்கு அகலமும் கொண்ட கொடியின் நடுவில் பழங்கால பொன்னிறத் தீவட்டி இடம்பெற்றிருக்கு மாம்.

பொருளாதாரம்

கூட்டு விவசாயத்தை வளர்த்து, விற்பன்னர்களைக் கொண்டு விவசாயத்தில் பயிற்சி அளிக்கவேண்டும். தன்னிறைவு டன் கூடிய வேளாண்மையே முதுகெலும்பு போன்றது. தரிசு நிலங்களில் மட்டுமே சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படவேண்டும், விவசாய நிலங்களைக் கையகப் படுத்தக் கூடாது. தனியார் நிறுவனங்களும் தாராளமான முத லீடுகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டுக் கொள்கை

நேபாள், தாய்லாந்து, கம்போடியா இணைந்த இந்து நாடு உருவாக்கப்படவேண்டும். இந்து, புத்த மதத்தவர் நாடுகள் ஒன்றாக்கப்பட்டு, கிறித்துவ, இசுலாமிய நாடுகளை எதிர்க்க வேண்டும்.

அபிநவ் பாரத் அமைப்பின் உறுப்பினர் கட்டணம் ரூ.30. எல்லா இந்துக்களும் இதன் கவுரவ உறுப்பினர்களே. எல்லா உறுப்பினர்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படும். ஆயுதங்களைக் கையாள்வதில் பயிற்சி தரப்படும்.

மதவெறியின் அடிப்படையில் நாட்டை உருவாக்கிட, பாசிச பாணியில் திட்டம் தீட்டிச் சதியில் ஈடுபட்டவர்களை நாட்டுத் துரோகக் குற்றம் இழைத்துள்ளார்கள். இவர்கள்மீது வெறும் கிரிமினல் குற்றங்கள் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளன. அரசுத் துரோகக் குற்றத்திற்கான நடவடிக்கை கிடையாதா? என நாடு கேள்வி கேட்கிறது.


--------------நன்றி: "விடுதலை"24-1-2009

1 comments:

TamilBloggersUnit said...

நல்லா எழுதியிருக்கீங்க...