Search This Blog

9.1.09

திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்கள் மறியல் போராட்டம்

சொர்க்கவாசல்?


வைகுந்த ஏகாதசி அன்று வைணவக் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. விடியற்காலையில் அதற்கான கோயில் கதவு திறக்கப்பட்டதுடன் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் இட்டுக் கொண்டு பக்தர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு செல்லுவார்கள்.

சொர்க்கம் என்றால் என்ன? அது எங்கேயிருக்கிறது? என்பதெல்லாம் அவர்களின் சிந்தனை வட்டத்துக்குள் வராது; பேராசை மட்டும் அவர்களைப் பிடுங்கித் தின்றுவிடும்.

ஊர்வசி இருப்பாள், இரம்பை இருப்பாள், கற்பகத்தரு இருக்கும், காராம் பசு இருக்கும். மகிழ்ச்சி கொப்பளிக்கும்; துயரம் என்றால் என்னவென்றே தெரியாது என்பன போன்ற பேராசைகளைத் தூண்டி வைத்துள்ளனர்.


ஓ! அதற்காகத்தான் இப்படி ஆசை ஆசையாக ஓட்டமோ, ஓட்டம்?

கோயில் நிருவாகம் அறிவிப்பு கொடுக்கட்டும். சொர்க்கவாசல் நுழைபவர்கள் திரும்பி வர மாட்டார்கள். அவர்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படு வார்கள் என்று ஓரிரு வார்த் தைகளைச் சொல்லட்டும், ஒரே ஒரு பக்தராவது கோயில் பக்கம் தலை வைத்துப் படுப்பாரா?

ஏதோ ஒரு மன நமைச்சல் - போதை அவர்களை அவ்வாறு ஆட்டுவிக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

வைணவக் கோயில்களில் மிகப் பெரிய கோயிலும், இந்தியத் துணைக்கண்டத்திலேயே பெரிய கல் முதலாளியான திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோயிலில் இவ்வாண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பக்தர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்களாம்.

பலே! பலே! கோயிலுக்குள்ளேயே மறியல் போராட்டமா!

ஆமாம், உண்மைதான்! எதற்காக மறியலாம்? சொர்க்க வாசலில் நுழையச் சென்றவர் களுக்கு சரியாக அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வில்லையாம். அதனால் பக்தர் கள் மறியலில் ஈடுபட்டனராம்; கோயில் நிருவாகத்தை எதிர்த்து முழக்கமிட்டனராம்.

சொர்க்கம் என்ற குபேரபுரிக்குச் செல்லும் பக்தர்கள் அதற்காக சிறு சிறு சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளக் கூடாதா? இதைவிட நாத்திகப் பாணி பணி வேறு ஒன்றும் இருக்க முடியாது. பக்தர்களுக்குக் குறை யில்லாமல் பார்த்துக் கொள்ளக் கூட பகவானால் முடியாதா! இதைக்கூட செய்யாத அந்தக் குத்துக்கல் - பக்தர்களுக்கு எதைத்தான் சாதித்துக் கொடுக்கப் போகிறது?

ஒருக்கால், இந்த அளவு வசதிகள் போதும் என்று ஏழு மலையான் நினைத்திருக்கலாம் அல்லவா! அப்படியிருக்கும்போது அந்த இடத்தில் மறியல் செய்வது ஏழுமலையானுக்கு எதிரான போராட்டம் தானே!

எந்த உரிமையைப் பெறுவதாகயிருந்தாலும், அதற்காகப் போராட வேண்டும் என்பார் தந்தை பெரியார். பக்தர்கள் அந்த வகையில்தான் மறியலில் ஈடுபட்டுள்ளனர் என்று கருதலாமா?

வைணவர்களுக்கு ஒரு வைகுண்ட ஏகாதசி என்றால், சைவர்களுக்கு ஒரு சிவராத்திரி! இப்படி மதப் பிரிவுகளுக்குள் போட்டா போட்டி! அதன் விளைவு தான் பண்டிகைகளின் எண் ணிக்கைப் பெருக்கம்.

பண்டிகைகள் பெருகப் பெருக பக்தர்களின் மணி பர்ஸ் காலி - புரோகிதர்களின் தொந்தி வீக்கம்! புரிகிறதா?

------------ மயிலாடன் அவர்கள் 9-1-2009 "விடுதலை" யில் எழுதியது

6 comments:

Unknown said...

//பண்டிகைகள் பெருகப் பெருக பக்தர்களின் மணி பர்ஸ் காலி - புரோகிதர்களின் தொந்தி வீக்கம்! புரிகிறதா?//

நன்றாகப் புரிகிறது.

வெண்காட்டான் said...

கோயில் நிருவாகம் அறிவிப்பு கொடுக்கட்டும். சொர்க்கவாசல் நுழைபவர்கள் திரும்பி வர மாட்டார்கள். அவர்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படு வார்கள் என்று ஓரிரு வார்த் தைகளைச் சொல்லட்டும், ஒரே ஒரு பக்தராவது கோயில் பக்கம் தலை வைத்துப் படுப்பாரா?

iskcon said...

தமிழகத்தின் இரண்டு மிக பெரிய திராவிட கட்சிகளின் சேனல்களிலும் பெரியாரின் கருத்துக்களை பகுத்தறிவு கருத்துக்களை சொல்லக்கூட நேரமில்லை. சொர்க்க வாசல் நேரடி ஓளிபரப்பு இப்படித்தான் இருக்கிறது இவர்களின் நேரங்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெண்காட்டான்.
சரியான கெள்வியை கேடுள்ளீர்கள். பதில் சொல்வார்களா?

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி iskcon.

Mahadev said...

Sir, real பர்ப்பனர் will not read anything..they will learn and get a god job and settle.

We should educate people in lower section first,nothing going to happen if we simply complain or scold them. Educate people Educate people Educate people .. If all IAS/IPS/Group1 officers are non-brahmin then things will change, Provided all of them should support your thoughts.
I see it will happen only Educate people of lower section.
How did you blog like this? If you and I didnot get a chance to learn and get educated and get job what we willl be doing ? so..education is the key.Support for reservation for next 20 years and then see. All caste people will be in creamy layer and then its upto them to support themselfs.

Got my point ? am I right ?

So dont just blame others,let them do what they wish to do. We need to uplift the weaker section thats all. You CAN not close all the temples in Tamilnadu..right ?