Search This Blog

8.1.09

விஷ்ணு பகவானின் ஆபாச அவதாரம்
விஷ்ணுவின் விஷமங்கள்

புராணப் புளுகர்களின் அளப்புக்கு அளவே இல்லை. அந்தக் காலத்தில் உச்சவரம்பு சிந்தனை தோன்றி இருக்கக் கூடாதா? அதனை இந்தப்புராண கர்த்தாக்களின் பாட்டுக்களில் புரளவிட்டிருக்கக் கூடாதா என்ற நியாயமான நப்பாசை ஏற்படுகிறது. பிரம்மன்,படைப்புக் கடவுள் என்கிறான் ஒருவன்; விஷ்ணுவுக்குப்பிறந்தவன் தான் பிரம்மன் என்கிறான் இன்னொருவன். அந்த விஷயத்திற்குள் போகாமல் விஷ்ணுவிடம் போவாம்.

பல பெயரில் பிரபலமான பெயர்; இவனைப் பொறுத்தவரை விஷ்ணுதானாம். பிரம்மனைப்போலவே இவனும் மூன்று பெண்டாட்டிப் பேர்வழி, லட்சுமி, பூதேவி, நீலாதேவி, ஆகியவர்கள் தான் அவர்கள்.

வைகுண்டத்திலேயே வாழ்நாளை ஒட்டிவரும் இவன், கோடை வெயிலில் மட்டும் திருப்பாற்கடலில் குடியிருக்கப்போய்விடுவான். காஷ்மீரின் கண்கவர் ஆறுகளில் படகு வீடுகள் இருக்குமே அதுபோல் திருப்பாற்கடலில் "சீசனுக்கு"வரும் இவனுக்குப் பாயாகவும் படுக்கை யாகவும், மெத்தையாகவும், மிதப்பாகவும் இருப்பது ஆதிசேஷன் என்னும் பயங்கரப் பாம்பு. இதற்குத் தலைகள் ஆயிரம். இந்தப் பஞ்சணையில்தான் -ஒரு கையைத் தலைக்கு ஓரங்கொடுத்து, ஒருக் களித்துப் படுத்து ஒய்யாரக்காட்சி அளிப்பான் விஷ்ணு! பக்கத்தில் லட்சுமி வேறு. இந்தக் கோலத்தை "அனந்த சயனம்"என்று ஆர்ப்பரித்துக் களிப்பார்கள் பக்தர்கள். பூலோகம் அந்தர்லோகம் மற்றும் சுவர்க்க லோகம் என்ற மூன்று உலகத்துச் சகல உயிரினங்களையும் கட்டிக் காப்பது இவனது பணி.

மற்ற எல்லாக் கடவுளிலும் விசேஷமானவன் இவன். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் இவன், இதுவரை பத்து (தசாவதாரம்) அவதாரங்களை எடுத்து ஓய்ந்துவிட்டான். இன்னும் ஒரு அவதாரம் எடுத்துவிட்டால் பூலோகம் காலியாம்! ஒவ்வொரு அவதாரத்தின் முடிவிலும் பிரளயம் ஏற்படுத்தி ஆனந்திப்பவன் விஷ்ணு.

மச்சாவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம். பரசுராம அவதாரம், ராம அவதாராம் , பலராம அவதாரம் கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் முதலியவை இவன் எடுத்த குறிப்பிடத்தக்க அவதாரங்கள்.

(இதில் பவுத்த அவதாரம் என்பது ஒரு மோசக் கற்பனை. புத்தரின் செல்வாக்கை ஒழிக்க இப்படி ஒரு புளுகு)

ஒவ்வொரு அவதாரத்திலும் விஷ்ணு போட்ட களிக் கும்மாளத்தை எழுத, கத்திக் குத்துப்பட்டுச் செத்த லட்சுமிகாந்தன் அவதாரம் எடுக்க வேண்டும். இவனின் ஒரே ஒரு ஆபாசத்தை எட்டிப் பார்ப்போம்.

அடிக்கடி மாறுவேடம் போடும் மகத்துவம் இவனுடையது அதுவும் பெண் வேடமிட்டுக் கொள்வதென்றால் இவனுக்குத் தனிக்குஷி. ஒவ்வொரு முறையும் மாறுவதோடு மட்டுமல்ல ; பெண்ணாய் மாறி எவனுடனாவது ஓடுவதும், அல்லது எவனையாவது வரச்செய்து சுகிப்பதுமே இவனின் வேலை. அதோடு -கர்ப்பத்தடை முறைக் கெல்லாம் போகாமல் கண்ணியமாய் பிள்ளையும் பெற்று - விட்டெறிந்து போகிறவன் இந்த விஷ்ணு!

அமிர்தம் வேண்டி ஆழ்கடலாம் பாற்கடலைக் கடைந்து குடைந்து கொண்டிருந்தனர் தேவர்களும், அசுரர்களும்.பல பாடு களுக்குப்பின், அமிர்தம் கொப்பளித்தது. இதனைப் பங்கு வைக்கும் விஷயத்தில் தேவர்களும், அசுரர்களும் குடுமிப்பிடி போர் நடத்தினர்.

சும்மா இருக்கும்போதே இந்த அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியவில்லை. அமிர்தத்தைக் குடித்து விட்டால் நம் கதி அதோகதிதான் என்று அஞ்சிய தேவர்கள் "அமிர்தம் எங்களுக்கே ; அசுரர்களுக்குத் தரக்கூடாது"என்று பிடிவாதம் பிடித்தனர். தேவர்களின் இஷ்ட தெய்வம் மகாவிஷ்ணு அவன் தனது பக்தகோடிகளுக்குச் சாதகமாக அமிர்தத்தைப் பகிர்ந்துதர மோகினி வேடம் எடுத்து அசுரர்கள் அணைப்பிற்கு ஆளானான். ஒரு வழியாய்த் தேவர்கள்

அமிர்தத்தோடு கடை கட்டினர். அவர்களுக்கு ஈடுகொடுத்துவிட்டு, இளைப்பாறப் போன விஷ்ணுவை சிவன் பார்த்தான். அவ்வளவுதான் நடக்கவேண்டியது நடந்தது! இந்நிலையில் பிறந்தவன் தான் "ஹரிஹரன்" என்ற குட்டிக் கடவுள்.

(ஆதாரம் அபிதான சிந்தாமணி பக்கம் 1484)

கேள்விகள் கீழே:

1) கோடை வெயில் தாளாமல் "குளு-குளு" வென்ற சுகம் தேடி இடம் மாறும் பேர்வழியாய், தொட்டாற் சுருங்கியாய் இருப்பவன் தான் கடவுளா? பாம்புப் படுக்கையாம் நம்ப முடியுமா?

பக்கத்தில் லட்சுமிகரம் வேறு! அதிலும் நியாயம் இல்லாமல் மூன்று பெண்டாட்டிகளில் இரண்டைத் தனிமையில் தவிக்க விட்டுவிட்டு, ஒன்றை மட்டும் படுக்கையில் குந்த வைத்துச்
சொந்தம் கொண்டாடுவதா?


2) ஒவ்வொன்றாய் இவன் அவதாரம் எடுப்பதும், உலக மக்களை ஒழித்துத் தள்ளுவதும் கருணையா? கொடுமையா? அப்படியானால் , 21 ஆம் நூற்றாண்டில் ஏன் அவன் அவதாரம்
எடுக்கவில்லை?

3) வேஷம் போடுவதில் அலிகள் ஆசைப்படுவது போல், பூ வைத்து பொட்டு இடும் வேஷத்திலேயே குறிப்பாக இந்தக் கடவுள் இருக்கக் காரணம் என்ன? இது -எந்த இடத்துக்
குறை என உங்களுக்குப் படுகிறது? வாய்விட்டுச் சொல்லும் தெம்பு, திராணி உண்டா?

4) அமிர்தம் வேண்டிய தனது பக்தர்களுக்காக அசுரர்களை வஞ்சிப்பது, திருட்டுத் தராசின் நிறுவை அல்லவா? இதுதான் ஒரு கடவுளின் யோக்கியதையா?

5) அசுரர்கள் ருசித்த எச்சில் மோகினியை, உலக நாயகனான சிவனே சீரழித்தான் என்றால், ஆணுக்கு ஆண் அசிங்கம் நடத்தப்பட்டது என்றுதானே பொருள்?

சிவ வழிச் சிங்கங்களும், வைணவ நெறித் தங்கங்களும் இதற்கென்ன பதில் சொல்லமுடியும்?


------------------- சாமி - நூல்: "கடவுளர் கதைகள்" பக்கம் 18-21

5 comments:

SurveySan said...

///2) ஒவ்வொன்றாய் இவன் அவதாரம் எடுப்பதும், உலக மக்களை ஒழித்துத் தள்ளுவதும் கருணையா? கொடுமையா? அப்படியானால் , 21 ஆம் நூற்றாண்டில் ஏன் அவன் அவதாரம்
எடுக்கவில்லை?///

:) லூஸ்ல விடுங்க. இவ்ளோ திட்டு திட்டிட்டு, ஏன் எடுக்கவில்லைன்னு வேர ஒரு கேள்வியா.
இவர்தான் கடவுள்னு சொன்னா நம்பிடப் போறீங்களா என்ன?

btw, நான் கடவுள்! :)

தமிழ் ஓவியா said...

//) லூஸ்ல விடுங்க. இவ்ளோ திட்டு திட்டிட்டு, ஏன் எடுக்கவில்லைன்னு வேர ஒரு கேள்வியா.
இவர்தான் கடவுள்னு சொன்னா நம்பிடப் போறீங்களா என்ன?

btw, நான் கடவுள்! :)

நான் கடவுள்! என்று இவர்கள் கற்பித்த ஒரு கடவுளும் இதுநாள்வரை சொல்லவில்லை. உங்களைப் போல் சில ஆசாமிகள் நான் தான் கடவுள் என்ரு சொல்லி வருகின்றனர்.

சொன்னவர்கள் ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

நீங்கள் சொல்வது வாழைப்பழத் தோலை மட்டும் தின்று விட்டு மற்றவர்களைப் பார்த்து நீங்கள் தின்பதெல்லாம் தோல் தான் என்று கூறுவது போல் உள்ளது. நான் சிவ நெறிச் சிங்கமோ அல்லது வைணவ நெறி சிறுத்தையோ அல்ல.... ஆனால் நீங்கள் சக்கையை எடுத்துக் கொண்டு சாரத்தை விட்டு விடுகிறீர்கள் என்று சொல்ல முடியும். ஆத்திகவாதிகள் அனைவரும் இந்த புராணங்களை நம்பி விடுகிறார்கள் என்று நீங்கள் நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த புராணங்கள் உருவானதிற்கான காரணங்களே வேறு. இதை நம்புகிறவர்கள் கூட இதில் இருந்து நல்ல விஷயம் தான் எடுத்துக் கொள்கிறார்கள். கே. ஆர். எஸ் இன் மாதவிப் பந்தல் படித்ததுண்டா நீங்கள்?

நோக்கம்,செயல், விளைவு - இந்த மூன்று காரணிகள் கொண்டு தான் எதையும் ஆராய முடியும் என்பது என் கருத்து.

உங்கள் நோக்கம் எனக்கு புரிகிறது. அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால் அதற்கான வழியாக - கடவுள் மறுப்போ, இந்த பதிவுகளோ இதில் தான் எனக்கு உடன்பாடில்லை. வருணாசிரம முறை கடவுள் நம்பிக்கை சார்ந்து எழுந்த ஒன்றாக இருக்கலாம். ஆனாலும் கடவுள் மறுப்புக் கொள்கை அதற்கான தீர்வல்ல என்று தான் தோன்றுகிறது. இது எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணும் என்றும் நம்பிக்கையில்லை. இருக்கும் சமுதாய சிக்கல்களுக்கான தீர்வு, இந்த சிறு பிள்ளைத்தனமான கேள்விகளுக்கு பதில் கேட்பதன் மூலம் கிடைத்து விடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. நாத்திகவாதிகள் உலகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்காது என்று நினைப்பதும் வேடிக்கை தான். உங்கள் பகுத்தறிவு வாதத்தையும் பகுத்தறிவுடன் நோக்குங்கள் என்பது தான் என் வேண்டுகோள். இப்பொழுது எனக்கொரு ஐயம் ஏற்படுகிறது. பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு மட்டும் தானா?

தமிழ் ஓவியா said...

//பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு மட்டும் தானா?//

கண்டிப்பாக இல்லை.

இந்தவலைப்பூவை படித்துப் பாருங்கள் பகுத்தறிவு என்பது என்ன என்று தெரியும்.புரியும்.

மேலும் விவாதிப்போம்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வந்தியத்தேவன் (நீர்குமிழி)

Mahadev said...

Hehee.. you can write some yellow color articles.. Sexy things are coming naturally good to you.

sir, you can not stop people who goes to temple just by writting like this. Am not discouraging you.

hmm, its not only vishnu sir,even in local village Iyynar statue right, our people will see the nipple in girls statue and want to lick it.. what to do ? its all in people mind. Either see GOD as some super power and believe in you and go in your way.
But,please dont tell so many people who dont know this much sexy things about vishnu and hurt their feeling that they were workshiping a gay so far..

hehehe.. try to write or direct a BLUE movie you will get a sure hit.