Search This Blog
20.1.09
பாரதியார் நூல்களில் திரிபுகள்
பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க
வேண்டும் என்று "கதறுவோர்" சிந்தனைக்கு!
பாரதியார் நூல்களில் திரிபுகள்
பெயர்த்தி விஜயபாரதி குமுறுகிறார்
நாட்டுடைமை ஆக்கப்பட்ட சுப்பிரமணிய பாரதியாரின் எழுத்துகளில், கருத்துகளில் திரிபு வேலைகள் நடந்திருக்கின்றன. அவர் எழுதாத நூல்களையெல்லாம் அவரே எழுதியதாகத் திணிக்கப்பட்டுள்ளன என்று பாரதியாரின் பெயர்த்தி விஜயபாரதி குமுறியுள்ளார். அதுபற்றி அவர் கூறிய தாவது:-
கவிஞர் சி.சுப்ரமணிய பாரதியாரின் எழுத்துகள் நாட்டு டைமை ஆக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியுள்ளன. அவரது நூல்களைப் பலரும் பல தலைப்புகளில் பதிப்பித்துப் பணம் பார்த்து வருகின்றனர். அவற்றில் எவ்வளவு தவறுகள் நடந்துள்ளன என்பதை பாரதியாரின் பெயர்த்தி விஜயா பாரதி விளக்கியுள்ளார்.
தந்தை பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று பேசித் திரிபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
பாரதியார் 1921இல் இறந்தார். அவரது படைப்புகள் 1949இல் நாட்டுடைமையாக்கப்பட்டன. அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்த காப்புரிமைச் சட்டப்படி 50 ஆண்டுகள் கழித்துதான் (இப்போது 60 ஆண்டுகள்) நாட்டுடைமை யாக்கப்பட வேண்டும்.
எழுத்துகளில், கருத்துகளில் திரிபுகள்
தம் தாத்தாவின் படைப்புகளின் சீர்மை காப்பாற்றப்பட வில்லை என அவர் குறை கூறியுள்ளார். வெளியிடப்பட்ட நூல்களில் ஏராளமான எழுத்துப் பிழைகள் உள்ளன. எழுத்து களில், கருத்துகளில் திரிபுகள் செய்யப்பட்டு உள்ளன. பிறர் எழுதியவைகூட, பாரதியார் எழுதியதாகக் காட்டப்பட்டுள்ளன என்கிறார் விஜயா பாரதி.
மிகவும் மோசமான குற்றச்சாற்று ஒன்றையும் அவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம் 1970இல் பதிப்பித்து வெளியிட்டுள்ள பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு எனும் நூலில் பாரதி எழுதாத 48 படைப்புகள் அவர் எழுதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்கிற அதிர்ச்சி தரும் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
குருவிப் பாடல்களைப் பாரதியார் எழுதினாரா?
அதுபோலவே, குருவிப் பாடல்கள் எனும் தலைப்பிலான தொகுப்பில், கேளடா மானிட ஜாதி என்ற பாடல் பாரதி யாரால் பாடப்படவில்லை; ஆனாலும் நூல்களில் பாரதியின் படைப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது பாரதி திரைப்படத்திலும் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
இம்மாதிரி திருடுகள், திரிபுகள், பிழைகள், குறைகள், குற்றங்கள் நாட்டுடைமையாக்கப்படும் நூல்களில் செய்யப்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன என்பதால், படைப்பாளியின் கொள்கைகளைப் பின்பற்றுவோர் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது என்பது தெரியவில்லையா?
------------------------- நன்றி: "விடுதலை" 19-1-2009
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment