Search This Blog

19.7.09

ஈழப் பிரச்சினையில் பழி வாங்கும் பார்ப்பனர்கள்!
இலங்கையிலே நடைபெறுவது பயங்கரவாதத்தை எதிர்த்துதான் என்று அத்தீவின் அதிபர் ராஜபக்சே பாடிய பாட்டுக்குப் பக்க மேளம் வாசித்தது ஒரு கூட்டம் இந்தியாவில்.

இப்பொழுது அவர்கள் கூறுகிறபடியே அந்தப் பயங்கரம்தான் ஒழிக்கப்பட்டு விட்டதே அடுத்து மக்கள் நல வாதம் தானே எதிரொலிக்க வேண்டும்.

சிங்களவர்கள் தமிழர்கள் என்று பிரித்துப் பார்க்காதீர்கள் எல்லோரும் எம்மக்கள்தான் என்று இலக்கணச் சுத்தமாக பொதுமைவாதம் பேசிய ராஜபக்சே இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

மூன்று லட்சம் மக்களை முள் வேலிக்குள் முடக்கியிருக்கிறார்; தமிழின வாலிபர்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறார்.

வாலிபப் பெண்களை சிங்கள இராணுவத்தினர்க்குத் தீனியாக்கிக் கொண்டு இருக்கிறார் கருவுற்ற தமிழ்ப் பெண்களின் கருச்சிதைப்புப் படலமும் ஒரு கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் மரபு வழி தாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் சட்ட ரீதியாகவே ஆக்கப்பட்டுவிட்டது.

ஏற்கெனவே தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் சாங்கோ பாங்கோமாக திட்டமிட்டு நடத்தப்பட்டாகி விட்டது. முகாமுக்குள் இருக்கும் தமிழர்கள் முகாமுக்குள்ளேயே நிரந்தரப்படுத்தும் ஏற்பாடு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியே குடியமர்த்தினாலும் அவர்கள் பெரும்பான்மையாக ஓரிடத்தில் குடியேற்றும் எண்ணம் சிறிதளவும் இருப்பதாகவே தெரியவில்லை.

இலங்கையில் இரண்டு இனங்கள் என்பதெல்லாம் பழங்கதை! எல்லாம் சிங்களம்தான் சிங்களமயம்தான் என்கிற முடிவில் காய்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறார் அடால்ப் இட்லரின் மறுபதிப்பான சிங்கள அதிபர்.

இந்த விவரங்கள் வெளி உலகுக்குத் தெரியக் கூடாது என்கிற காரணத்துக்காக ஊடகங்கள் முகாமுக்குள் நுழையக்கூடாது என்கிற தடையுத்தரவு, செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு ஆணை விரைவில் மூட்டையைக் கட்டுங்கள் என்று.

தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் இனச் சுத்திகரிப்பு வேலை கச்சிதமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இன்னும் கால் நூற்றாண்டுக்கு தமிழர்களில் இளைஞர்கள் மருந்துக்கும் தென்படக் கூடாது என்ற ஒரு கொலைநோக்குத் திட்டம் அதிபரின் தொண்டைக் குழிக்குள் குமிழிட்டு நிற்கிறது.

இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என்சில்வா முகாம்களைப் பார்வையிட்டு வந்தபின் மனதில் ஏற்பட்ட கொந்தளிப்பை முனை மழுங்காமல் அப்படியே கொட்டி விட்டார்.

இவ்வளவுக்கும் அவர் சிங்களர்தான். அவருக்கே பொறுக்க முடியவில்லை என்றால் வேறு என்ன தடயங்கள் தேவை?

நமது நாட்டின் சட்டத்தின்மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படவேயில்லை. இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை; ஒரே இனம்தான் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் பச்சைப் பொய்கள். இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப்புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம். இப்படிச் சொல்வதன்மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம்; கவலையில்லை என்று சிங்களவர்களில் ஒரே ஒரு மனிதத் தன்மைபடைத்தவர் என்ற முறையிலே தலைமை நீதிபதி செந்நீர் வடித்துள்ளார்.

5 பேர் வாழக் கூடிய கூடாரத்தில் 30 க்கும் மேற்பட்டோர் அவதிப்படுகின்றனர். கழிவறைக்குச் செல்லுவதற்குக்கூட நீண்ட வரிசை என்றும் புலம்பியுள்ளார்.

ஆனால் லங்கா ரத்னா விருது பெற்ற இந்து ஏட்டின் ராம் கூட்டமோ நாங்களும் தமிழர்கள் தான் என்று கூறிக் கொண்டு கருணாக்களின் நாக்கிலே பேசிக் கொண்டு திரிகின்றனர்.

ராஜபக்சேயின் சிறப்பு அழைப்பின்பேரில் இலங்கை சென்று, வதைபடும் தமிழர்களின் முகாமுக்குச் சென்று நேரில் பார்த்ததாகக் கூறி, தப்பித் தவறியும் எள் மூக்கு முனை அளவுக்குக்கூட உண்மையைச் சொல்லிவிடக் கூடாது என்கிற வைராக்கிய வெறியில் செய்திகளை ஒரு பக்கம் வெளியிடுகிறார்.

சாப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லையாம்! தண்ணீர் தட்டுப்பாடு கிடையவே கிடையாதாம். நம் ஊரில் இருக்கும் முகாம்களைவிட பல மடங்கு மேம்பட்டு இருக்கிறதாம்.

ஒரே ஒரு குறைதானாம்; அது கழிப்பறைப் பிரச்சினை. மற்றபடி ஒரு குறையும் சொல்ல முடியாதாம். ராஜபக்சேயின் சகோதரர் இந்து என். ராம் பேட்டி கொடுத்துள்ளார்
(ஜூனியர் விகடன் 12.7.2009)

ஒரு கேள்வி: அய்க்கிய நாடுகள் சபைத் தலைவர் பான்கீமூன் இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதி சரத்சில்வா ஆகியோரெல்லாம்கூட இந்த முகாம்கள் குறித்து வேதனையோடு கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்க, நீங்கள் மட்டும் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபடுகிறீர்களே...? ஜூனியர் விகடனின் இந்தக் கேள்விக்கு என். ராம் என்ன சொல்லுகிறார்?

அவர்கள் எதை வைத்து அப்படிச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அங்கு நான் பார்த்ததைத் தான் சொல்கிறேன் என்கிறாரே!

அடேயப்பா தமிழர்கள்மீது இந்தப் பார்ப்பனர்களுக்கு ஏன் இப்படி ஒரு பழிவாங்கும் துடிப்போ வஞ்சம் தீர்க்கும் நெருப்போ!

முகாம்களில் இருப்பவர்களுக்கெல்லாம் போதுமான அளவுக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது என்கிற கேள்விக்கு ராம் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

அவர்களுக்குச் சாப்பாடு வழங்கும்போது நான் பார்க்கவில்லை. முகாம்களில் இருக்கும் மக்களிடம் நீங்கள் பேசினீர்களா?

அங்கிருக்கும் மக்களிடம் நான் பெரிய அளவில் பேசவில்லை என்பது பதில்.

பேசவில்லை பார்க்கவில்லை இந்த லட்சணத்தில் அங்கு வாழும் மக்கள் மிக சவுகரியமாக இருக்கிறார்கள் என்று ஒருவர் பதில் அளிக்கிறார் என்றால், இவர்களின் அறிவு நாணயத்தை எது கொண்டு எடை போட? எதைக் கொண்டுசாற்ற? ஒன்று மட்டும் மிக மிக விளக்கமாகவே புரிகிறது.

தமிழினத்தின்மீது பார்ப்பனர்களுக்கு இருக்கும் தீராப் பகை மட்டும் தெளிவாகவே தெரிகிறது.

தந்தை பெரியார் அவர்களாலும் அவர்கள் கண்ட இயக்கத்தாலும், அவர் விட்டுச் சென்ற மரபுகளாலும் பார்ப்பனர் தமிழ்நாட்டில் பரிகாசத்துக்குரியவர்களாக ஆக்கப்பட்டார்களே அந்த ஆத்திரத்தை அதற்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்கிற வெறியை தமிழ்நாட்டுத் தமிழர்களிடத்திலே நேரிடையாகக் காட்டி, எதிர் விளைவுகளை சமாளிக்க முடியாத பட்சத்தில் சந்திக்கத் திராணியில்லாத கோழைத்தனத்தில் தமிழ்நாட்டிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள ஈழத் தமிழர்களிடத்திலே காட்டி வருகிறார்கள் என்பது மட்டும் வெளிச்சமாக, மிக மிக வெளிச்சமாகவே தெரிகிறது!

எந்த வகையில் இந்தக் கூட்டத்தைப் பழி வாங்குவது? தமிழர்கள் பகுத்தறிவு ரீதியாக தந்தை பெரியார் கண்ணோட்டத்தில் சிந்திப்பார்களாக!

-----------மின்சாரம் அவர்கள் 18-7-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

3 comments:

KANTHANAAR said...

பார்ப்பனர் இந்து ராம் மட்டுமா... வேற யாரும் இல்லையா....?
மனசாட்சியை கேட்டுப் பாருங்கள்

தமிழ் ஓவியா said...

இந்து ராம்,சோ,சு.சுவாமி போன்ற அனைத்துப் பார்ப்பனர்களும் அயோக்கியப் பார்ப்பனர்கள்தான்
கந்தா

Unknown said...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக துணைக்கண்டத்து பெரும்பாலன மக்களை கீழ்நிலக்குத்தள்ளியவர்களின் வழியை இன்னும் விடாது தொடர்பவரை, தமிழும் தமிழ்மக்களும் தப்பியும் பிழைக்கக் கூடாது என்று தொடர்ந்து பெருமுயற்சி செய்து வரும் கூட்டத்தின் தற்போதைய ஊடகங்களை, அதனின் முதலாய் உள்ள ஆளை, அவர்தம் ஈன அறிக்கையை, பெரியார் கொள்கைக்காக, பேச்சுக்காக பழிவாங்குகிறார் என்று எழுதுவது பிழை. பெரியார் பிறக்காமலே இருந்திருந்தாலும், தமிழ் மக்களயும், தமிழ் மொழியையும் ஒருவழியாக ஒழிக்கவேண்டும் என்று முனையும் கூட்டமும் ஆட்களும் இவர்கள்.

அன்பரே, தமிழ் மக்களுக்கு உண்மையை சரியாகச் சொல்ல வேண்டிய கடமை உமக்கு உள்ளது முட்டாளே. பெரியாராலும் அவர்தம் இயக்கத்தாலும் இவர்கள் இப்போது பழிவாங்குகிறார்கள் என்று எழுதி சிந்திக்கவொண்ணா தமிழர்களை மேலும் குழப்பாதீர். கூர்மையாகவும் நுணுக்கமாகவும், சிந்திக்கவும் செயல் ஆற்றவும் வேண்டிய தேவையை உணர்வீர், கவனம் கொள்வீர்.
அன்புடன்
உண்மையாகவே நண்பன்
சூலை 19, 2009.