Search This Blog

12.7.09

இலங்கைக்கான இந்திய தூதர்கள் தமிழினத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள்!


கலைஞரிடம் சொன்னோம்

கலைஞர் அவர்களிடம் சொன்னேன். ஏங்க உங்களைத் தவிர வேறு யாராவது ராஜினாமா பண்ணத் தயாராக இருக்கிறார்களா? ஒருத்தரும் இல்லை. நீங்கள் தனியே ராஜினாமா செய்தால் என்னங்க இலாபம்? தெருவில் நின்று கத்துவதற்குத் தான் நாங்கள் இருக்கிறோமே நீங்கள் ஏன் எங்களோடு வந்து சேர வேண்டும் (கைதட்டல்)-.

காரணம் என்னவென்றால் நான் பெரியார் தொண்டன். எதை எப்பொழுது யாரிடத்திலே துணிவாகச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லக் கூடியவன்.-(கைதட்டல்) ஆகவே அய்யா அவர்களுடைய சிந்தனைதான் எனக்கு அது பலன் அளித்தது.

இந்த சங்கதியில் சோனியாகாந்தி அவர்களை உள்பட பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து எல்லாம் செய்தது அவர்தானே. அந்த அம்மையாரும் தெளிவாகப் பேசினார்களே. இன்னும் கேட்டால் ரகசியம் என்ன வென்றால் இந்திய அரசு அதைப் போட்டுக் குழப்பி அவர்களும் நமது எண்ணத்திற்கு வரக்கூடிய அளவிற்கு ஓர் அரசியல் நெருக்கடி வந்திருக்கிறது. இந்தியா முதலில் ரடார் கொடுத்து உதவி செய்தது. நாம் அழுத்தம்கொடுத்தவுடனே பயந்துகொண்டு நிறுத்திவிட்டார்கள்.

சைனா, ஈரான் காரனின் ஆயுதம்

அவனுக்கு ஆயுதங்கள் எல்லாம் தேவைப்படுகின்ற நேரத்திலே டக்கென்று இதுதான் சந்தர்ப்பம் என்று சைனாகாரன் உள்ளே போய்-விட்டான். அவனுடைய முழு ஆயுதத்தையும் அவன் விற்கஆரம்பித்தான். பாகிஸ்தான்காரன் விற்க ஆரம்பித்தான். ஈரான் விற்க ஆரம்பித்தான். இஸ்ரேல் விற்க ஆரம்பித்தான். நிறைய கடனாகக் கொடுக்க ஆரம்பித்துவிட்டான். காசு நீங்கள் எப்-பொழுது வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டான்.
அதோடு அவன் இராணுவ தளங்களை உருவாக்கிவிட்டான். இந்தியா இலங்கையைக் கண்டு பயப்படக் கூடிய நிலைக்கு வந்துவிட்டது என்பது தான் யதார்த்தம்.

இந்திராகாந்தி அணுகு முறையை கைவிட்டு விட்டீர்களே என்று அன்றைக்கே நாம் இந்தியாவிடம் சொன்-னோம். இந்திராகாந்தி எடுத்திருந்த அணுகு முறையை நீங்கள் கைவிட்டு விட்டீர்கள். அமெரிக்காகாரன் இந்தப் பகுதியில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் விடுதலைப்புலிகளிடம் ஆயுதங்களைக் கொடுத்து அந்த இளைஞர்களைத் தயாரித்தார்கள்.

அந்த அம்மையார் அவர்களுக்காக மட்டும் செய்யவில்லை. ( வி)7-7-2009



இந்தியாவினுடைய பாதுகாப்பையும் கருதித்தான் ஆயுதங்களைக் கொடுத்தார்கள்.

தமிழினத்திற்கு எதிரான தூதர்கள்

இவ்வளவு விளக்கமாக நாம் தெளிவாகச் சொன்னபிற்பாடு இப்பொழுது கொஞ்சம், கொஞ்சம் புரிகிறது. காரணம் என்ன? அதிகாரிகள் அங்கேயிருக்கிறார்கள்.

இலங்கைக்கு தூதராக இருக்கக் கூடியவர்கள் தமிழினத்திற்கு விரோதமாக எதிரான மலையாளிகள் இருக்கிறார்கள்.

இதுதான் யதார்த்தம். இந்த சூழ்நிலையில் ஜாதியை எதிர்த்து கலைஞர் அவர்கள் தான் எவ்வளவு செய்ய முடியும்? ஒரு மாநில அரசின் முதல்வர் அவரால் ஆன அத்தனையையும் செய்தார். இரவு, பகல் எங்களோடு பேசுவார். நள்ளிரவு 2 மணிக்குத் தீர்மானம் எழுதுவார். என்னங்க இவ்வளவு கொடுமையாக இருக்கிறதே என்று நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வோம். வருகிறவர்களிடம் இதைப்பற்றித் துன்பத்தோடு எடுத்துச் சொல்வார்.

மருத்துவமனையில் இருந்த பொழுது


ஆகவே இந்த ஈழப்பிரச்சினையில் உண்மையாகவே கவலை எடுத்து எவ்வளவு அக்கறையோடு இருந்தார். அவர் மருத்துவமனையில் இருக்கும்பொழுது எவ்வளவு கவலைப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். காரணம், நமக்கு அரசியல் இல்லை. ஆனால் இதுதான் சந்தர்ப்பம் என்று ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தார்கள் சில நண்பர்கள்.

இப்பொழுது நம்மைவிட்டு வெளியேறிய நம்மால் விரட்டப்பட்டவர்கள் இருக்கிறார்-கள் பாருங்கள். இங்கே கூட நம்முடைய துணைப்பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்கள் கூட சொன்னார்கள் பாருங்கள். அவர்களோடு சேர்ந்து கொண்டு காரியம் பண்ணுகிறார்கள் என்று யார் வேண்டுமானாலும் பண்ணட்டும்.

பந்தயம் கட்டிக்கொண்டு கெட்டுப்போனால்...!


கெட்டுப்போவதற்குப் பந்தயம் கட்டிக்கொண்டு கெட்டுப்போனால் நாம் என்ன தடுக்கவா முடியும்? (கைதட்டல்).இன்றைக்கு நம்மால் விலக்கப்பட்டவர்கள். ஜெயலிதாவுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு ஓட்டுபோட்டார்கள். மதச் சார்பற்ற தன்மையைக் காப்பாற்றுவதற்காக தி.மு.க பி.ஜே.பியோடு போன பொழுது நாம் எதிர்த்து மதச்சாற்பற்ற தன்மை என்ற ஒன்றை உருவாக்கி மத்தியில் மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இங்கே அவ்வளவு பெரிய சூழ்நிலையை உண்டாக்கிய பொழுது, ஆகா இவர் அய்ந்து லட்சத்திற்கு விலை போய்-விட்டார் என்று அன்றைக்கு வீரம் பேசியவன் இன்றைக்கு அந்த அம்மாவுக்குத்தானே ஓட்டு கேட்டார்கள். அப்படியானால் இவர்களுடைய யோக்கியதை என்ன? தேர்தல் ராஜபக்சேவுக்கும், பிரபாகரனுக்கும் நடந்திருந்தால் சரி, நாம் யாருக்கு ஓட்டு போடுவோம் என்பது தெரியும்.

ஆட்சியைப் பற்றி இனஉணர்வோடு முடிவு

நமது நாட்டில் அய்ந்து வருடத்திற்கு எப்படிப்பட்ட ஆட்சி அமைவது நாம் இனஉணர்வோடு முடிவு செய்ய வேண்டும். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தவறு என்று விமர்சிப்பதற்கு நமக்கு உரிமை உண்டு. அதை செய்கிறோம், திருத்துகிறோம், மாற்றுகிறோம். எப்பொழுதும் அந்த ஆட்சியின் லகான் நம்முடைய கையில் இருந்தால்தான் மாற்ற முடியும் சும்மா இருந்தால் செய்ய முடியாது. இதை எல்லாம் எடுத்துச் சொன்னதினுடைய விளைவு என்ன?

தொடர்ந்து நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய 65 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் நான் தெளிவாகச் சொல்லுகின்றேன். தோழர்கள், இளைஞர்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

அதிதீவிரம் பேசுகிறவன் இருக்கமாட்டான்

அதிதீவிரம் பேசுகிறவன் கட்சியிலே இருக்க மாட்டான். (கைதட்டல்). நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்; எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அது எந்தக் கட்சியாக இருக்கட்டும் (கைதட்டல்); அது எந்த இயக்க-க இருக்கட்டும்.

ஆகா நாளை காலையிலேயே போய்விட வேண்டும் என்பான். காலையில் போவதற்கு நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள் என்று கேளுங்கள் ஆள் வரமாட்டான் (சிரிப்பு)

திராவிட நாடு கேட்டபொழுது, திராவிட நாட்டை காலையிலே பிரிப்பது எப்படி? அட பைத்தியக்காரர்களே!

நாங்கள் மாணவர்களாக இருக்கும்பொழுது எங்களுடைய அறைக்கு வந்த சில மாணவர்கள் சொன்னார்கள். நாம் சாதாரணமாக இருக்கக் கூடாது. டாக்டர் சிக்மன்ரி என்று தென் கொரியாவில் இருக்கிறார்.

அவரிடம் நாம் ஆயுதம் வாங்கி இங்கே போராட வேண்டும் என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், அட பைத்தியக்காரர்களே! நீ படிப்பது அண்ணாமலை யுனிவர்சிட்டிக்குள். நீயே ஹாஸ்ட்டலுக்குள்ளே இருக்கிறாய் சோறு சாப்பிட்டுக்கொண்டு. நீ எங்கே சிக்மன்ரீ கிட்டே போறது? என்னய்யா, உனக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா? போய் ஒழுங்காகப் பாடத்தைப் படியய்யா அப்புறம் நாம் வெளியே போன பிற்பாடு சிக்மன்ரீயைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினேன்.

என்ன, நீங்க இவ்வளவு கோழையாக இருக்கிறீர்கள்? என்று நம்மைப் பார்த்துக் கேட்பான். ஆமாப்பா, நான் ரொம்ப கோழைதான்; எனக்கு தைரியம் வராது. நான் பெரியாரிடமே இருந்ததால் ரொம்பக் கோழையாகப் போய்விட்டேன். நீ வெளியே இருப்பதாலே ரொம்ப தைரியமாக இருக்கிறாய் என்று சொல்லியதுண்டு.

ஆகவே நண்பர்களே, இந்த அதிதீவிரம் பேசுகிறவர்கள் யாரும் என்ன ஆவார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.
அது மட்டுமல்ல, இந்த ஆக்டிங் மாதிரி விளம்பரம் தேடுவது, நிகழ்ச்சி நடத்துவது. அதை மறிக்கிறேன். என்பது இதை முறிக்கிறேன் என்பது. அவனவன் மூச்சு விடுவதற்கு இடம் இல்லாமல் ஏன் போய் எங்கே இருக்கிறோம் என்று அட்ரஸ் தெரியாமல் இருப்பது என்ன? என்ன காரணம்?

------------------தொடரும்..."விடுதலை" 8-7-2009

3 comments:

ttpian said...

O.K:right:remove malayaalees from Tamilnadu:then only malayaalees @Delhi will be afaraid of tamil community:who will ring the bell?

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

நீங்கள் அதிதீவிரம் பேசுகிறவறா,ttpian?
"remove malayaalees from Tamilnadu", this is never possible in the present day Indian democracy.

Suresh Kumar said...

@ தலைப்பு
தமிழக முதல்வரே தமிழர்களுக்கு எதிராக செயல் படும் போது தூதர்களை மட்டும் குறை சொல்வதா ?