Search This Blog

20.7.09

பெரியார்-அண்ணா-கலைஞர்-வீரமணி -2





காலம் காலமாக இருந்து வருகின்ற சமூக அநீதிகள்மீது
துணிந்து கை வைத்து கலைஞர் மாற்றி வருகின்றார்


காலம் காலமாக இருந்து வருகின்ற மூடநம்பிக்கைகளை, சமூக அநீதிகளை கலைஞர் அவர்கள் துணிந்து கை வைத்து மாற்றி வருகின்றார் என்று கலைஞரைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

குற்றாலத்திற்கு அருகிலுள்ள செங்கோட்டை-யில் 19-6-2009 அன்று கலைஞரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


இந்த செங்கோட்டையில் பல சமூகத்தவர்கள் வாழ்கிறார்கள். எங்காவது ஒரு சங்கடம் இருக்கிறதா?

அனைவர்க்கும் அனைத்தும்

இந்த இயக்கம் இருக்கிறது. இந்த இயக்கத்தைத்தாண்டி எண்ணிப்பாருங்கள். கடந்த 2004இல் மீண்டும் மத்தியிலே ஒரு மதவெறி ஆட்சி வந்திருக்குமேயானால் இப்படிப்பட்ட ஒரு சுமூகமான சூழல் இருந்திருக்குமா? பல்வேறு மதத்தவர்களாக இருக்கக் கூடியவர்கள், பல்வேறு பிரிவைச் சார்ந்தவர்கள், ஜாதி, மதம் என்ற பிரிவினாலே உழன்று கொண்டிருக்கின்ற ஒரு சமுதாயத்திலே அதை எல்லாம் தாண்டி, இன்றைக்கு அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றால் அது சாதாரணமானதல்ல.

எனவே, அவர்களுடைய ஒவ்வொரு செயலும் தனக்காக அல்ல, தன்னுடைய கட்சிக்காக அல்ல; தன்னுடைய சமுதாயத்திற்காக. கோடானுகோடி ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்ட சமுதாயம் நம்முடைய சமுதாயம்.

கலைஞரின் பொற்கால ஆட்சி மான வாழ்வு பெற முடியாத சமுதாயம் நம்-முடைய சமுதாயம். எனவே இந்தச் சமுதாயத்தை எழுந்து நிற்கச் செய்ய வேண்டுமானால் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இவர்கள் தான் தங்களுக்கு வழிகாட்டி என்பதை அவர்கள் எந்தக் கட்டத்திலும் சொல்ல மறந்தது கிடையாது.

எனவே நல்ல ஒரு ஆட்சியை, அய்ந்தாவது முறையாக ஒரு பொற்கால ஆட்சியை கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிலே உருவாக்கியிருக்கின்றார்கள். இந்தியாவிலே இவர்களைப் போன்றவர்கள் இருக்கலாம். ஆனால், இத்தனை ஆற்றல் படைத்த பல்கலைக் கொள்கலன் கலைஞரைப் போல வேறு யாரும் கிடையாது.

பல துறைகளில் ஆற்றல் பெற்றவர்கள். எழுத்தாற்றல் பற்றி இங்கே எடுத்துச்சொன்னார்கள். எவ்வளவு பெரியவர்களும் அந்த எழுத்திலே சொக்கிப் போய்விடுவார்கள்.

இத்தனைக்கும் தன்னை பெரிய பட்டதாரி என்று சொல்லி அழைத்துக் கொண்டதில்லை. ஆனால் இன்றைக்குப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் அவருடைய எழுத்துகளை ஆய்வு செய்கின்றன என்று சொன்னால் ஈரோட்டு குருகுலத்திலே விளைந்த விளைச்சல் அப்படிப்பட்ட அறுவடையாக அது சிறப்பாக இருக்கிறது. இந்தப் பாசறை எப்படிப்பட்ட வரைத் தந்திருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தனையும் ஒருங்கே பெற்ற ஆற்றலாளர்

அது போன்று நல்ல பேச்சாளராக இருப்பவர்கள் எழுத்தாளர்களாக இருக்கமாட்டார்கள். எழுத்தாளர்களாக இருப்பவர்கள் நல்ல பேச்சாளர்களாக இருக்க மாட்டார்கள். எழுத்தா-ளர்களாகவும், பேச்சாளர்களாகவும் இருக்கின்றவர்கள் நல்ல செயலாளர்களாக இருக்கமாட்டார்கள்.

நல்ல செயலாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் நல்ல ஆட்சியாளர்களாகவும் இருக்க மாட்டார்கள். இத்தனையும் இணைந்து ஒரு தனி மனிதரிடத்திலே இருக்கிறது என்று சொன்னால் அவருக்குப் பெயர்தான் கலைஞர் என்பது மிகத் தெளிவாக அனைவருக்கும் தெரியும்.

கலைஞர் மகுடத்தில் எத்தனை முத்துகள்

கலைஞர் அவர்களுடைய மகுடத்தில் எத்தனை முத்துகள்? எத்தனை ஆற்றல்கள்? எவ்-வளவு சிறப்பானது? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எந்த நேரத்திலும் சிந்திப்பவர்கள் அவர்கள். இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அதையும் சிந்திப்பார்கள். அவரைத் தவிர வேறு யாராவது இருந்திருந்தால் இவ்வளவு சாதித்திருக்க முடியாது. சாதனை சரித்திரங்கள் ஏராளம். இப்பொழுது கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே இத்தனை கட்சிகள் சேர்ந்து விட்டார்கள். ஆகவே நமக்குத் தான் வெற்றி என்றெல்லாம் தப்புக் கணக்குப் போட்டார்கள். ஆனால் இத்தனை கட்சிகளையும் ஒரு தட்டிலே போட்டு, கலைஞர்அவர்களுடைய சாதனை என்பதை இன்னொரு தட்டிலே போட்டு பார்த்தால் எந்தத் தட்டு உயர்ந்தது. எந்தத் தட்டு கனத்தது என்று மக்கள் தீர்ப்பளித்தார்கள்.

எனவே, அந்தத் தீர்ப்பு இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது. அவருடைய உழைப்பு சாதாரணமானதல்ல. பொது மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? மக்களாட்சி என்று சொன்னால் மக்களுடைய குறை தீர்க்-கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும்.

கலைஞர் கொண்ட மனப்பாடம்

சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கிய நேரத்திலே அதற்கு என்ன கொள்கை, என்ன தத்துவம் என்று சொல்லும் பொழுது இரண்டே சொற்களிலே அதைத் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். இதைக் கலைஞர் அவர்கள் மனப்பாடமாக தன்னுடைய வழிகாட்டியாக அவர்கள் புரிந்து கொண்டார்கள். அனைவர்க்கும் அனைத்தும் இது தான் அந்த இரண்டே சொற்கள். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? என்று தந்தை பெரியாரவர்கள் எழுதிய அந்தப் புத்தகத்திலே அவர்கள் எழுதியிருக்கின்றார்கள்.

அனைவர்க்கும் அனைத்தும் என்று சொன்னார். அனைவர்க்கும் அனைத்தும் என்று சொன்னார்கள் பாருங்கள். அதிலேயே எல்லாமும் அடங்கிப் போய் விட்டது.

கலைஞர் அவர்களுடைய ஆட்சியை யாருமே குறை சொல்ல முடியாது. எதிர்கட்சிக்காரர்களாகக் கூட இருக்கட்டும். கலைஞருடைய ஆட்சியினாலே அவருடைய வீடு பயன்பெறவில்லை என்று யாராவது விரலை மடிக்க முடியுமா?

எதிர்க்கட்சியிலே இருப்பவராக இருக்கட்டும். ஓட்டுப் போட்டவராக இருக்கட்டும் அல்லது ஓட்டுப் போடாதவராக இருக்கட்டும் அவருக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.

நம்முடைய மக்கள் பயன்பெற வேண்டும். எது எது எல்லாம் செய்ய முடியாது என்று நினைத்தார்களோ அதை எல்லாம் செய்ய முடியும் என்று சாதனைகளுக்கு மேல்சாதனை செய்து காட்டியவர் கலைஞர்.

இங்கே சொன்னாரே, நம்முடைய சுப.சீத்தாராமன் அவர்கள். தந்தை பெரியார் அவர்களுடைய ஆதங்கத்தைச் சொன்னார்கள். தமிழ் நாட்டிற்குத் தமிழ்நாடு என்ற பெயர் வரவேண்டாமா என்று கேட்டார்கள்.

பிறகு அண்ணா அவர்கள் அதை நிறைவேற்றினார்கள். முப்பெரும் சாதனைகளை ஓராண்டிலே அண்ணா அவர்கள் செய்த பொழுது ஒன்று, சென்னை ராஜதானிக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்.

அது போலவே சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்டவடிவம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அது போலவே இருமொழிக்கொள்கை இந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள்தான் இருக்க வேண்டுமென்று பேரறிஞர் அண்ணா அவர்கள் தெளிவாகச் சொன்னார்.

அது போல அவர்கள் செய்த மாற்றங்களைச் சொல்லி விட்டு ஓர் அரசியல் தத்துவத்தைச் சொன்னார். அண்ணா அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையிலே இருந்து வந்தபொழுது சொன்னார்.

எனது உடல் இருந்து என்ன பயன்?

தாய்த்திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொள்ளவில்லை என்றால் எனது உடல் இருந்து என்ன பயன்? தனது பேச்சைத் துவக்கும் பொழுதே ஆரம்பித்தார்.

அப்பொழுது சென்னார். தமிழ்நாட்டு மக்களுக்காக நான் செய்திருக்கின்ற இந்த மூன்று காரியங்கள். இந்த ஓராண்டிலே என்னுடைய ஆட்சி செய்திருக்கின்ற மூன்று காரியங்கள். நான் கேள்விப்படுகிறேன், எங்களை ஆட்சியை விட்டு இறக்க வேண்டும் என்று சிலர் துடிக்கின்றார்கள்.

அச்சம் உங்களை உலுக்கும்

அது முடியுமா? என்று கேட்டால் முடியாது என்று சொல்லுவதற்கு சிலர் தயாராக இருப்பார்கள். அதே நேரத்தில் எங்களை இறக்கிவிட்டு விட்டு அவர்களே வந்து உட்கார்ந்திருந்தால் கூட, மற்றவர்கள் வந்து உட்கார்ந்திருந்தால் கூட, அப்பொழுது நாங்கள் செய்த காரியங்கள் அவர்களுடைய நினைவுக்கு வரும். முதலில் தாய்த்திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம். இரண்டாவது சுயமரியாதைத் திருமண சட்டம். மூன்றாவதாக இங்கே இரு மொழித் திட்டம் என்று வந்தவுடனே இந்த மூன்று திட்டங்களை அண்ணாதுரை அல்லவா செய்திருக்கின்றார் என்பதைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு கோபம் வரும்.

இந்த நினைப்பு வந்த அடுத்த நிமிடமே இன்னொரு அச்சமும் உங்களுக்கு வரும். இதை எல்லாம் மக்கள் மத்தியிலே சந்திக்க முடியுமா என்று ஒரு கேள்வி வரும். மக்களைச் சந்திக்க முடியுமா என்ற பயமும், அச்சமும் வரும். எவ்வளவு காலத்திற்கு அந்த அச்சமும், பயமும் இருக்கின்றதோ, அவ்வளவு காலமும் இந்த அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்பது பொருள் என்று ஒரு அர-சியல் தத்துவ விளக்கம் கொடுத்தார்கள். அதே நிலைதான் கலைஞர் செய்திருக்கின்ற காரியங்களை யாராலும் மாற்ற முடியாது மாற்றி விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். மாற்ற முடியாது. ஏனென்றால் காலம் காலமாக இருந்ததை எல்லாம் அவர் துணிந்து கை வைத்து மாற்றியுமிருக்கிறார். சாதாரணமாக மக்கள் பசியில்லாமல் இருக்க வேண்டும்.

அண்ணா நூற்றாண்டில்

அண்ணா சொன்னதைச் செய்ய முடியுமா? என்று அவரே யோசித்தார். திடீர் என்று அண்ணாவுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் வெறும் விழாவாகக் கொண்டாடாமல் அறிவித்தார்.

அண்ணா அவர்கள் ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு என்று அறிவித்தார்கள். இந்த செய்தியைக் கேட்ட எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. இன்றைக்குக் கூட இந்தியாவிலேயே ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுக்கிற ஒரு ஆட்சி தமிழ்நாட்டு ஆட்சியைத் தவிர, கலைஞர் ஆட்சியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா? இவ்வளவு வெற்றி பெற்ற பிற்பாடு கூட ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய். ஒரு கிலோ கோதுமை மூன்று ரூபாய் என்று இன்றைக்கு மற்றவர்களாலே சொல்லத்தான் முடிந்தது.

எப்படித் துணிச்சலாக செய்யக் கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள்? அவருடைய துணிவு, அவருடைய ஆற்றல், அதன் காரணமாகச் செய்தார்கள்.

மக்களுக்கு முதலில் பசியைப் போக்க வேண்டும்

முதலில் பசி மக்களுக்கு இருக்கக் கூடாது. அந்தப் பசியைப் புரிந்தவர் அவர். அவர் உப்பரிகையிலே, உல்லாச மாளிகையிலே இருந்தவர் அல்லர். பசி என்றால் என்ன என்பதை அறிந்தவர். எனவே அந்தப் பசி என்பதைப் புரிந்த காரணத்தால் தான் பசியின் கொடுமையை அறிந்த காரணத்தால் தான் அவர் தெளிவாகப் பல காரியங்களைச் செய்தார். அந்தக் காலத்திலே பச்சை அட்டை குடிஅரசுவிலே தலையங்கத்திற்கு மேலே ஒரு செய்தியைப் போட்டிருப்பார்கள். அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அனைவர்க்கும் பசியாற்றி மனதுக்குள் இருக்கின்ற போதா பேதம் அகற்றி என்று போட்டிருப்பார்கள். ஆக முதலில் மனிதனுக்குத் தேவையானது உணவு. முதலில் ஒரு மனிதனுக்குப் பசியைப் போக்க வேண்டும். உடனே சில பேர் கேட்டார்கள். ஒரு ரூபாய் அரிசி கொடுத்து விட்டால் போதுமா? மற்றவைகள் எல்லாம் இருக்க வேண்டாமா? என்று கேட்டவுடனே, அய்ம்பது ரூபாய்க்கு மளிகைப் பொருள்கள் என்று பத்துப் பொருள்களையும் போட்டுக் கொடு என்று. செய்தார்.

------------------- தொடரும்....."விடுதலை"19-7-2009

7 comments:

bandhu said...

அதை விடுங்கள். கருணாநிதி ராமாயண நூல் வெளியிட்டராமே. நீங்கள் போயிருந்தீர்களா?

கோவி.கண்ணன் said...

//அந்தப் பசியைப் புரிந்தவர் அவர். அவர் உப்பரிகையிலே, உல்லாச மாளிகையிலே இருந்தவர் அல்லர். //

உப்பரிகை, உல்லாச மாளிகை இதையெலலாம் இந்தியாவில் பணக்காரப் பட்டியலில் இடம் பிடித்த வாரிசுகளைப் "பெற்றவர்" நினைத்துப் பார்க்கவேண்டும்

Suddi said...

What about the Samrajyams, the individuals have created?. In media, paper?. Did Periyar also supported this?.

If we cannot eradicate poverty for 50+ years, we can never do it. Every politician knows this, but will not stop the "free" schemes.. All vote politics sir.

we can be happy, 1 Rupee rice, free tv, free patta, free clothes.. We are making people, more lazy than ever. Recently, we have started vote for money, money for vote scheme :-)

தமிழ் ஓவியா said...

//கருணாநிதி ராமாயண நூல் வெளியிட்டராமே. நீங்கள் போயிருந்தீர்களா?//

இல்லைங்க ரவி

இது குறித்து கலைஞரின் தன்னிலை விளக்கத்தை பதிவு செய்துள்ளேன். வாய்ப்பு இருப்பின் படித்து பாருங்கள்

ttpian said...

ஆகா!
நோகாமல் நோண்பு!
பிழைக்க வழி தெரிந்த பெரியார் பேரன்!

கருத்து: said...

1)anna,2)karuna(nithi),3)veera?mani, 4)o(zero).....................................................................1)periyar,2)tamilmakkal,3)tamilnadu.

கருத்து: said...

1)periyar,2)tamil makkal,3)tamilnadu.