Search This Blog

2.8.08

பெரியார் கொள்கைகளை நிறைவேற்றும் ஆட்சி!





அண்மையில், ஈரோடு நகரத்தை மாநகராட்சி மன்றமாக ஆக்கினோம். அப்படி ஆக்கிய போது, ஒரு குறிப்பை தம்பி ஸ்டாலின் என்னிடத்திலே காட்டினார். என்ன குறிப்பு என்றால், 1917 ஆம் ஆண்டு வாக்கில் அந்த ஈரோடு நகரத்தினுடைய தலைவராக இருந்தவர் யார் தெரியுமா? தந்தை பெரியார் அவர்கள். அவர் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார் - குறிப்பு எழுதுகின்ற புத்தகத்தில் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். இந்த ஈரோடு நகரம் அளவில் எல்லைகளில் குறைவானதாக இருக்கின்ற காரணத்தால், பக்கத்திலே இருக்கின்ற வீரப்பன் சத்திரம் என்ற ஊரையும், இன்னும் இதற்கு அருகிலே இருக்கின்ற ஊர்களையும் ஈரோடு நகரத்தோடு சேர்த்துக் கொள்ளவேண்டும்; அப்படி சேர்த்தால்தான் எதிர்காலத்திலே இது பெரிய நகராட்சி மன்றமாக, மாநகராட்சி மன்றமாக ஆகின்ற தகுதியைப் பெறும் என்று பெரியார் குறிப்பு எழுதினார். எப்பொழுது? 1917-இல்.

பெரியார் எதை எழுதி வைத்திருந்தாலும் அவைகளெல்லாம் தேடிக்கண்டுபிடித்து, அதை நிறைவேற்றுகின்ற பகுத்தறிவாளர்களுடைய ஆட்சியாக - முன்னேற்ற விரும்புகின்றவர்களுடைய ஆட்சியாக பெரியாருடைய கொள்கைகளை, அண்ணா வழியில் நிறைவேற்றுகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கின்ற காரணத்தால் - 1917 ஆம் ஆண்டு அவர் எழுதிய குறிப்பின்படி வீரப்பன்சத்திரம் போன்ற பகுதிகளையெல்லாம் ஈரோடு நகரத்தோடு இணைத்து, ஈரோடு மாநகராட்சி மன்றத்தை உருவாக்கியிருக்கின்றோம்.
அதைப்போலத்தான் இப்போது இதை விரிவாக - பெரிய நகரமாக ஆக்கி பல நன்மைகளை, சாதனைகளைச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநகரத்தை இன்றைக்கு உருவாக்கி இருக்கின்றோம்.

------------------ வேலூர் மாநகராட்சியைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து, 1.8.2008.

2 comments:

bala said...

//பெரியாருடைய கொள்கைகளை, அண்ணா வழியில் நிறைவேற்றுகின்ற ஆட்சியாக //

தமிழ் ஓவியா அய்யா,

அது ஏன் அண்ணா கொளகைகளை தாடிக்கார அய்யா வழியில் சென்று நிறைவேற்றக்கூடாது என்று இந்த முண்டம் விளக்குமா?பகுத்தறிவோடு பதில் சொல்லுங்கய்யா.

பாலா

தமிழ் ஓவியா said...

பாலா உனக்கு விதண்டாவாதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாதா?