Search This Blog

1.6.14

தந்தை பெரியார் வழியில் கருநாடக அரசு!

அய்ந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ஆடம்பரமாக திருமணத்திற்குச் செலவு செய்பவர் களிடம் வரி வசூலிக்கும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று கருநாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

அம்மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:


கருநாடகாவில் கோடிக்கணக்கில் செலவு செய்து, தேவையில்லாமல் ஆடம்பரத் திருமணம் செய் கின்றனர். இதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. கவுரவத்திற்காக பெரும் செலவு செய்வதைத் தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்த நிலையில்,  கருநாடக மாநில அரசு விரைவில் சட்டம் ஒன்றைக் கொண்டு வர உள்ளது. ஆயிரம் பேர்கள் சேரும் திருமணம் மற்றும் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக செலவு செய்து திருமணம் செய்பவர்கள் அரசுக்குக் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். இந்த வரிப்  பணம் வறுமையில் உள்ள வர்களின் திருமணத்திற்குப் பயன்படுத்தப்படும். இதற்கு மாங்கல்ய நிதி என்று பெயர். இத்திட்டத்தின்கீழ் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கும் இந்த நிதி வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.


கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா முற்போக்குச் சிந்தனை உடையவர் சீர்திருத்தவாதி. அத்தகைய ஆட்சியில் இது போன்ற சிந்தனைகள் எதிர்ப்பார்க்கப்பட வேண்டிய ஒன்றே! 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று செங்கற் பட்டில் நடைபெற்ற மாநில முதல் சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கலியாணம் முதலிய வைபவங்களுக்கும், சடங்கு களுக்கும் சொற்பப் பணச் செலவும், நேரச் செலவும் நேரிடத் தக்கதாக நடத்தப்பட வேண்டும். விசேஷமாக கலியாணம் கொண்டாட்டம் ஒரு நாளைக்கு அதிகமாக இருக்கக் கூடாது; ஒரு விருந்துக்கு அதிகமாகப் பணம் செலவு செய்யவும் கூடாது என்று  இந்த மகா நாட்டார் தீர்மானிக்கின்றனர் (தீர்மானம் எண்10).
85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்களால் முற்போக்காகத் தீர்மானிக்கப்பட்டது. காலந் தாழ்ந்தாவது, தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் அண்டை மாநிலம் ஒன்றில் சட்டமாக நிறைவேற்றப் படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.


1976இல் நெருக்கடி காலத்தில் ஆடம்பரத் திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்டதுண்டு.


சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைக்கும் வேளையில் தந்தை பெரியார் மறவாமல் திருமணம் சிக்கனமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசுவார்கள்.


31.1.1970 அன்று திருத்துறைப்பூண்டியையடுத்த தென் பாதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கீழ்க்கண்ட கருத்தினை தந்தை பெரியார் அவர்கள் பதிவு செய்தார்கள்.


இத்திருமணத்தில் உள்ள மாறுதல், செலவு சுருக்கம் என்பது இதையெல்லாம் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். இந்தியாவில் பொருளாதார நிலை யைப் பற்றிக் கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது அதை நம்பி கோவிந்தா போடாத பாமர மக்களும் கிடையாது. அது உண்மையாய் இருக்குமா னால், இந்த மாதிரி ஒரு 5 நிமிஷ காரியத்துக்காக நான்கு வரி ஒப்பந்தக் காரியத்திற்குப் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப்படலாமா என்று கேட் கிறேன்.


இப்படி செலவு செய்வது கிரிமினல் குற்ற மாகாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டணா வரும்படி என்கிறார்கள். அப்படியானால் தினம் நான்கு அணாவே வரும்படி உள்ள ஒரு ஜோடிக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்திற்கு எவ்வளவு ரூபாய் செலவழிப்பது? குறைந்தது 250 ரூபாய் செலவானாலும் 1000 நாளைய வரும்படி செலவழிக்கப்படுகிறதா இல்லையா என்று பாருங்கள்.


இந்த வழக்கம் இதுவரை அனுமதிக்கப்பட்டதிலிருந்தே இந்த நாட்டில் பொறுப்புள்ள சீர்திருத்தக்காரரோ, பொருளாதார துணைவர்களோ, நல்ல அரசியல் தலைவர்களோ, ஜீவகாருண்யமுடையவர்களோ, தேசீயவாதிகளோ இல்லை என்று அருத்தமாகவில்லையா? நான் ஒரு நிமிஷம் அரசனாய் இருந்தாலும், முதன் முதல்  இம்மாதிரியான பொருள் விரயத்தை தடுக்கவே தூக்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன்.


இம்மாதிரியான பொருள் நஷ்டம்தான் இன்று இந்தியாவுக்குப் பிடித்த பெரும் பிணி என்று சொல்வேன் என்று கூறிய தந்தை பெரியார் திரு மணத்திற்கு எந்த அளவு செய்யலாம் என்பதற்கான வரையறையையும் வழங்குகிறார்.


இம்மாதிரி திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வரும் படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது, மற்றும் நாள் சுருக்கமும் ஒரு மாறுதலாகும் (விடுதலை 10.6.1970 பக்கம் 3).

தந்தை பெரியார் அவர்கள் திருமண மேடையை மக்களின் சிந்தனையை மாற்றவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். திருமண மேடைகளில் அவர் எடுத்து வைத்த கருத்துக்கள் எல்லாம் பிற்காலத்தில் சட்ட வடிவம் பெறலாயின.

அவர் கூறிய திருமணத்தில் செலவுச் சுருக்கமும் கருநாடக மாநிலத்தில் சட்ட வடிவம் பெற உள்ளது. தந்தை பெரியார் வாழ்ந்த - கருத்துரைத்த தமிழ்நாட்டில் இத்தகு சட்டம் செய்யப்பட்டால் அது வரவேற்கத் தக்கதாகவே இருக்கும். வாழ்க பெரியார்!

                                 ----------------------------”விடுதலை” தலையங்கம் 31-05-2014

72 comments:

தமிழ் ஓவியா said...


நல்ல குடும்பம்


நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிய செலவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பம் தான் கண்ணியமான குடும்பமாகும்.

- (விடுதலை,2.11.1961)

Read more: http://viduthalai.in/page-2/81324.html#ixzz33L8imY5r

தமிழ் ஓவியா said...


அவாளால் தகர்க்கப்பட்ட தகுதி, திறமை மாய்மாலம்?

- குடந்தை கருணா

நாம் இடஒதுக்கீடு கேட்டு போராடினால், தகுதி திறமை போய் விடும் என அங்கலாய்த்த பார்ப் பனர்கள், நமக்கு எதிராக, வட நாட்டில் போராட்டம் நடத்தினார்கள்; உச்ச நீதி மன்றம் சென்று, வழக்குப் போட்டார்கள்.

இட ஒதுக்கீடு அளிப்பதால், தகுதி திறமை ஒருபோதும் குறையாது; வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்திற்கு, அந்த உரிமை தரப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி, இந்த தடை களையெல்லாம் உடைத்துத் தான், ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கு முன்னேறி வருகிறார்கள்.

இன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பத்தாவது கூட படிக்க வில்லை, என சிலர் குற்றஞ்சாட்டிய தும் அப்படி கூறலாமா? ஒருவரது படிப்பை வைத்து, அவரது திற மையை எடைபோடலாமா? அவருக் குக் கல்வித்துறையில் முன் அனுபவம் இருக்கிறதா என்று கேட்கலாமா? முதலில் அவர் அந்த பணியைச் செய் யட்டும்;

அதில் எவ்வாறு செயல்படு கிறார் என்று பார்த்து அப்புறம்தான் மதிப்பீடு அளிக்கவேண்டும் என இப்போது பார்ப்பனர்கள், நாம் வைக் கும் அதே வாதத்தை வைக்கிறார்கள். நம்மூர் தொலைக்காட்சியில், ராகவன் எனும் பார்ப்பனர், காமராசர் என்ன படித்தவரா? எனக் கேட்கிறார். கல்விப் புரட்சி ஏற்படுத்திய காமராசரும், ஸ்மிரிதி இரானியும் ஒரே நிலையில் வைத்து நாம் பார்க்க முடியாது.

ஆயினும், நாமும் ஸ்மிரிதி ஜுபின் இரானி மீது வீசப்படும் இந்த குற்றச் சாட்டை ஆதரிக்கவில்லை; கல்வித் துறை அமைச்சராவதற்கு, இந்த படிப்புதான் வேண்டும் என நியதி எதுவும் கிடையாது.

இதற்கு முன்னர் பாஜக ஆட்சியில் இருந்தபோது, இதே துறையை நிர்வகித்த மெத்தப்படித்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷி என்ன சாதனை செய்தார்? இந்தியாவில் ஒரு ஆயிரம் பேர்கூட பேசாத சமஸ்கிருத மொழியை, செம்மொழி என அறிவித்து, அதன் மேம்பாட்டுக்காக, ரூ.100 கோடி ஒதுக்கச் செய்தார்;

ஜோஸ்யத்தை, வேத அறிவியல் என கூறி, அதனை பாடத் திட்டத்தில் சேர்த்திட முனைந்தார்; இந்த துறையில் இயங்கும், இந்திய வரலாற்று ஆய்வு குழுமத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நியமனம் செய்தார். இதைத் தவிர, அவர் சாதித்தது ஒன்றும் இல்லை;

உடம்பெல்லாம் மூளை என வர்ணிக்கப்பட்ட ராஜாஜி, தமிழ் நாட்டின் முதலமைச்சராகி, ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார்; எஞ்சிய பள்ளிகளில் படிக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், பாதி நேரம் படிப்பு, மீதி நேரம் அவரவர் அப்பன் செய்யும் தொழிலை செய்ய வேண்டும் என்கிற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

நம் தந்தை பெரியார், வெகுண்டெழுந்து, ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து விரட்டி, அந்த இடத்தில், அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராசர், முதல்வராக வருவதற்குக் காரணமா யிருந்தார்; குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு, மேலும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு, தமிழ் நாட்டில் கல்விப்புரட்சி ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வி பெற வாய்ப்பு அதிகமாக உருவானது.

இப்போது, பார்ப்பனர்கள், தாங்கள் இது நாள்வரை கூறி வந்த தகுதி, திறமை என்பதை வாபஸ் வாங்கி, பேசுவதற்கான காரணம் என்ன? பார்ப்பனர்கள் இவ்வாறு பேசுவது ஸ்மிரிதி இரானி மீது அக்கறையால் அல்ல; ஸ்மிரிதி இரானி ஒரு பார்ப்பன பெண்மணியும் அல்ல; அவர் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவர் இந்த துறையில், ஆர்.எஸ்.எஸ் சொல்லும்பணியை செவ்வனே செய்துமுடிக்க, ஆர்.எஸ். எஸால் அனுப்பப்பட்ட மோடி அமைச்சரவையில் ஒரு அமைச்சர். ஸ்மிரிதி இரானி, சமஸ்கிருதத்தை உயர்த்திப்பிடிப்பார்;

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என பார்ப் பனர்கள் கருதுகிறார்கள். அதற்குத் தடையாக, தகுதி, திறமை வருமானால், அதனை தகர்க்கவும் அவாள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இப்போது, ஸ்மிரிதி இரானிக்கு வக்காலத்து வாங்கும் இந்த போக்கு.

Read more: http://viduthalai.in/page-2/81322.html#ixzz33L8rWrWo

தமிழ் ஓவியா said...

நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதா? ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்க!


பெல் நிறுவனத்தின்முன் திராவிடர் தொழிலாளர் கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மே.31- திருச்சி திருவெறும்பூரில் இயங் கும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந் தரம் செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தர விட்டும், அதனை அமல் படுத்தாத பெல் நிரு வாகத்தை கண்டித்து இன்று (31.5.2014) காலை 7.30 மணியளவில் பெல் ம.ஆறு முகம் தலைமையில் பெல் முதன்மை நுழைவு வாயி லில் பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் சார் பில் கண்டன ஆர்ப்பாட் டமும், வாயிற் கூட்டமும் நடைபெற்றது.

பெல் நிறுவனத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த ஊழியர்களாக தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். அவர் களை பணி நிரந்தரம் செய் யாமல், தொடர்ந்து ஒப் பந்த ஊழியர்களாகவே நீடித்து வருவதால், அவர் களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலி யுறுத்தி திராவிடர் தொழி லாளர் கழகம் தொடர்ந்து பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகிறது.

உத்தரவு

இதற்கிடையில் நிரந்தப் படுத்தாத பெல் நிருவாகத் தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அவ் வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு மாற் றப்பட்டு, வழக்கு நடை பெற்று கடந்த 28.2.2014 அன்று தொழிலாளர் களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் திராவிடர் கழக வழக் கறிஞரணி தலைவர் த. வீரசேகரன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பெல் நிறுவனத்தின் பொது மேலாளரை சந்தித்து நீதி மன்ற உத்தரவை அமல் படுத்துமாறு கூறி வந்தனர்.

ஆனால் இதுவரையில் நீதிமன்ற உத்தரவை அமல் படுத்தாமல் இழுத்தடிக்கப் பட்டு வந்தது. இந்நிலை யில் மே 20 ஆம் தேதி நிருவாகத்தின் மூலம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. அக்கடித்தில் லேபர் கான்டாரக்ட் சொசைட்டி என்பது சொசைட்டி விதி களின் படி ஆரம்பிக்கப் பட்டது என்றும், பெல் நிருவாகத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என் றும், அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு ஒப்பந்த பணிகள் போல இந்த சொசைட்டியும் ஒரு ஒப்பந்தம் தான் என்றும், அவர்களை பெல் நிருவா கத்தின் கீழ் நிர்வகிக்க வில்லை என்றும் அனை வரும் தற்காலிக பணி களைதான் செய்து வரு கின்றனர் என்று உண் மைக்கு புறம்பாக அக்கடி தத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதனைக் கண்டித்து பெல் ம.ஆறுமுகம் பேசு கையில்: நிரந்தர ஊழி யர்கள் செய்கிற எந்த பணியையும் எல்சி.எஸ். ஊழியர்கள் செய்யவில்லை என்று நிருவாகம் தெரிவித் துள்ளது. அது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்த சொசைட்டியை ஆரம்பித்தவர்களே பெல் அதிகாரிகள்தான். இதுவரை நிருவாகம் செய்து வரு வதும் பெல் அதிகாரிகள் தான். நிரந்தர ஊழியர்கள் செய்யக் கூடிய பணி களையே எல்.சி.எஸ். ஊழி யர்கள் செய்து வருகி றார்கள்.

தமிழ் ஓவியா said...


அவர்கள் என் னென்ன பணிகளை செய் கிறார்கள் என்பதை முழு வதையும் மறைத்து உண் மைக்கு மாறாக நிருவாகம் கூறி வருகிறது. அரித்துவாரில் உள்ள பெல் நிறுவனத்தில் சொசைட்டி ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டி ருப்பதும், அதே போல் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த ஊழியர்கள் நிரந் தரம் செய்யப்பட்டிருப் பதும் இவர்களுக்கு பொருந்தாது என்று சட்டத்திற்கு விரோதமாக தெரிவித்திருக்கிறார்கள்.

240 நாள்களுக்கு மேல் பணிபுரிந்தால் பணி நிரந் தரம் செய்யப்பட வேண் டும் என்ற விதி பெல் நிரு வாகத்தில் மீறப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்திற்கு முன் னிலை வகித்து மாவட்ட தி.க தலைவர் மு.சேகர் பேசும் போது, இந்த பெல் நிருவாகம் தொழிலாளர் களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. நீதிமன்ற உத் தரவை மதிக்காத நிருவாக அதிகாரிகள் மனித தன் மையற்ற செயலில்
ஈடுபட்டு வருகிறார்கள். தொழி லாளர்கள் உழைப்பை சுரண்டிக் கொண்டு அவர்களை நிரந்தரப்படுத் தாமல் இருந்து வருகின்றனர்.

நாங்கள் இந்த தொழிலாளர் நலனுக்காக நீதிமன்றம் வரை சென்று அவர்களை நிரப்படுத்துவதற்கான உத்தரவை பெற்று வந்தால், அதற்கும் ஒரு தவறான முன்னூதாரண பதிலை தந்து இருக்கிறார்கள். இங்கு இருக்கக் கூடிய சட்ட வல்லுநர்கள் அனைவரும் மலையாளிகள். இந்நிறுவனத்தில் பாதிக் கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் மலையாளிகளாக இருந்திருந்தால், இந் நேரம் நிரந்தரப்படுத்தியிருப்பார்கள்.

பணி செய்து ஓய்வு பெறும் நிலை யில் இருக்கக் கூடிய இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை கடைசி காலத்தி லாவது மரியாதையுடன் ஓய்வு பெற வேண்டும் என்பதற்காகவது அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அவர்களை நிரந்தர படுத்தாதவரை நாங்கள் ஓயமாட்டோம். பல சங்கங்கள் நிரு வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மனித தன்மை யோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

இது ஆரம்பம்தான். மீண்டும் நீதி மன்றத்திற்கு செல்வோம். வெற்றி பெறுவோம். இவ்வாறு பேசினார். இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் ஒன்றியத் தலைவர் மாரியப்பன், தி.தொ.க பொருளாளர் அசோக்குமார், துணைத் தலைவர் ஆண்டிராஜ், ராஜீவ்காந்தி, காமராஜ், பவுல்ராஜ், மதியழகன், தர்மலிங்கம், பாஸ்கர், ராஜப்பா, மோகன் உள்ளிட்ட எல்.சி.எஸ் தோழர்களும், பெல் சொசைட்டி அனைத்து சங்க கூட்டுக் குழுவைச் சேர்ந்த தொ.மு.ச. நடராஜன், எம்.எல்.எப். முருகானந்தம், பி.எம்.எஸ். முருகன், சி.அய்.டி.யூ. செல்வராஜ், எ.டி.பி. ராஜேந்திரன், எல்.எல்..எப். இளந் தமிழன் உள்ளிட்ட ஏராளமான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். நிறை வாக ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.

முடிவில் ஒப்பந்தத் தொழிலாளர் களை நிரந்தரப்படுத்தவும், நிரந்தரப் படுத்தாத பெல் நிருவாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Read more: http://viduthalai.in/e-paper/81328.html#ixzz33L966vzV

தமிழ் ஓவியா said...


உ.பி.யில் தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்முறை மாயாவதி சீறுகிறார்

பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகளின் தந்தை ஜீவன்லால்

உஷைத், மே 31- உத்தரப்பிரதேச மாநி லத்தில் 2 தலித் சிறுமிகள் கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 2 காவ லர்கள் பணி நீக்கம் செய் யப்பட்டுள்ளனர். ஒரு காவ லர் உள்பட 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைத்து, குற்றவாளி கள் உடனடியாகத் தண்டிக்கப் படுவார்கள் என உத்தரப் பிரதேச முதல்வர் அகி லேஷ் உறுதியளித் துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநி லம் உஷைத் கிராமத்தைத் சேர்ந்த, 14, 15 வயதுள்ள இரு சிறுமிகள் கடந்த 27-ஆம் தேதி இரவு காணாமல் போயினர்.

இதுகுறித்த வழக்கை காட்ரா சதாத்கஞ்ச் காவல் துறை பதிவு செய்ய மறுத் தது. 28-ஆம் தேதி காலை இரு சிறுமிகளின் உடல் களும் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.

உயிரிழந்த ஒரு சிறுமி யின் தந்தை கூறுகையில், காவல்துறையின் உதவியை நாடினோம். அதில் ஒரு காவலர் இரண்டு மணி நேரத்தில் சிறுமிகள் வீடு திரும்பி விடுவர் எனத் தெரிவித்தார். ஆனால், தூக் கில் தொங்கிய நிலையில் தான் அவர்கள் கிடைத் தார்கள் என்றார்.

இச்சம்பவத்தால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங் கினர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய் தனர். இரு காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

பிரேதப் பரிசோதனை யில் இரு சிறுமிகளும் கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அதுல் குமார் சக்ஸேனா கூறிய தாவது:

வழக்கில் தேடப்படும் ஏழு பேரில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வேஷ் யாதவ் மற்றும் சத்ரபால் யாதவ் ஆகிய 2 காவல்துறையினரும் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சர்வேஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பப்பு மற்றும் அவதேஷ் யாதவ் என்ற 2 சகோதரர்களும் கைது செய்யபட்டுள்ளனர்.

பப்பு மற்றும் அவதே ஷின் சகோதரர் உர்வேஷ், காவலர் சத்ர பால் மற்றும் மேலும் இருவரைத் தேடி வருகிறோம் என்றார்.

இரு காவலர்கள் மீது, குற்றச் சதி வழக்கு பதியப் பட்டுள்ளது. மற்ற அய்வர் மீது பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், பாதிக் கப்பட்ட 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங் கப்படும் என அறிவித்துள் ளார். மேலும் அக்குடும்பத் தினருக்குப் பாதுகாப்பும் தேவையான உதவிகளும் அளிக்கப்படும் என்றார். மேலும் இவ்வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன் றம் அமைக்கப்படும் என வும் அகிலேஷ் உறுதி யளித்துள்ளார்.

இது தொடர்பாக மத் திய மகளிர் மற்றும் குழந் தைகள் நலத்துறை அமைச் சர் மேனகா காந்தி கூறு கையில், இதுபோன்ற சம்பவங்களில் பாலியல் வன்முறை விவகாரக் குழு உடனடியாக அமைக்கப் பட்டு, நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண் டும். பாதிக்கப்பட்ட குடும் பத்தினர் ஒப்புக் கொண் டால், சிபிஅய் விசார ணைக்கு பரிந்துரைக்கப் படும்.

இச்சம்பவத்தில் காவல் துறையின் அலட் சியத்திற்கு சம பங்கு உள் ளது. காவல்துறை இன் னும் சரியான கோணத்தில் செயல்படத் தொடங்க வில்லை. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத் துக் காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட வேண் டும் என்றார்.

இதனிடையே பாதிக் கப்பட்ட பெற்றோர், உ.பி. காவல்துறையின் நடவடிக் கைகள் சந்தேகத்துக்குரி யவை. அவர்களை நம்ப முடியாது என்பதால், சிபி அய் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாயாவதி கடும் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இது தொடர்பாக சிபிஅய் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வலியுறுத் தியுள்ளார்.

தலித் சிறுமிகள் கும்ப லால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மகளிர் அமைப்பினர், மாணவர் கள் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநி லம் சராய்மீர் பகுதியைச் சேர்ந்த 17 வயது தலித் சிறுமியை நான்கு பேர் பாலியல் வன்முறை செய் துள்ளனர். இச் செயலில் ஈடுபட்டவர்கள் முகேஷ், அர்விந்த், விக்ரம், துர்கேஷ் என அடையாளம் காணப் பட்டுள்ளது. இந்நால்வ ரும் தலைமறைவாகிவிட் டனர். காவல்துறையினர் வழக்குப் பதிந்து நால் வரையும் தேடி வருகின் றனர்.


Read more: http://viduthalai.in/e-paper/81325.html#ixzz33L9FJINQ

தமிழ் ஓவியா said...

இயக்கத்தைப் பற்றியோ, தலைமையைப் பற்றியோ குறை சொன்னால் பதிலடி உடனே கொடுப்பார் சாக்ரட்டீசு

பெரியார் சாக்ரட்டீசு நினைவேந்தல் நிகழ்ச்சியில் தோழர்கள் உருக்கமான உரை

சென்னை, மே 31- கழகத்தைப் பற்றியோ, தலைமையைப் பற்றியோ குறை கூறினால் ஒரு நிமிடம் கூடத் தாமதியாமல் அதற்குப் பதில் கூறி விளங்க வைப்பவர் பெரியார் சாக்ரட்டீசு என்று புகழாரம் சூட்டினர் இனமுரசு சத்யராஜ், பேரா.சுப.வீ., பாவலர் அறிவுமதி, நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் பங்கேற்ற சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரட்டீசு நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (30.5.2014) மாலை சென்னைப் பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.

இயக்கத் தோழர்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருமக்களும், தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறையைச் சேர்ந்தவர்களும் உற்றார், உறவினர்களும் ஏராளமாக வந்திருந்தனர்.

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது வரவேற்புரையில், இன்னும் 50 ஆண்டு காலம் இயக்கத்திற்குப் பயன்பட வேண்டிய வசீகரமிக்க தோழரை இயக்கம் இழந்து பரிதவிக்கிறது என்று குறிப்பிட்டு இயக்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட தோழர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நக்கீரன் கோபால்

நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் உரையாற்றுகை யில் குறிப்பிட்டதாவது:-

பெரியார் சாக்ரட்டீசு விபத்துக்கு ஆளானார் என்ற தகவலை எனக்குத் தெரிவித்தபோது அவர் நமது பெரியார் சாக்ரட்டீசாக இருந்து விடக் கூடாது என்று எண்ணினேன். பதறினேன். 18 நாட்கள் ஓடினாலும் இன்னும் நம் கண்களில் நீர் வடிந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆரம்பக் காலத்தில் நக்கீரனின் முகவராக காரைக் குடியில் இருந்தவர் அவர். நக்கீரனில் வெளிவரும் கட்டு ரைகள், தகவல்கள் குறித்து கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பார். அந்த வகையில் தான் எங்களிடையே தொடர்பு இருந்தது - பின்னர் நெருக்கமானது.

ஆசிரியர் அவர்களைப் பற்றியோ, திராவிடர் கழகத் தைப் பற்றியோ ஒரு சிறிது அளவுக்கு மாறுபாடான கருத்தோ, செய்தியோ நக்கீரனில் வெளிவந்து விடுமேயானால், உடனடியாக மிகக் கூர்மையாக சாக்ரட்டீசின் தரப்பிலிருந்து கடிதம் வரும். மறுப்பு வரும் - அத்தகைய தோழர் ஒருவர் மறைவு என்பது ஈடு செய்ய முடியாதது. அதுவும் ஆசிரியர் அவர்களுக்குப் பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டார்.

பாவலர் அறிவுமதி

இந்தத் திடலில் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளேன். அந்த நேரத்தில் எல்லாம் தம்பி சாக்ரட்டீசின் அசைவுகள் எங்கு பார்த்தாலும் தெரியும்.

எங்களைப் பொறுத்தவரை சாக்ரட்டீசு ஒரு நூலக மாகவே இருந்து வந்தார். எதைப் பற்றிக் கேட்டாலும் அதற்கான குறிப்புகள் ஒரு அரை மணி நேரத்தில் அவரிட மிருந்து கிடைக்கும்.

அதுவும் எந்தக் காலக்கட்டத்தில் நாடு இருக்கிறது? மிகவும் தேவையான ஒரு காலகட்டத்தில் சாக்ரட்டீசை இழந்து விட்டோமே. இந்த நேரத்தில் இந்த இடத்தில் தந்தை பெரியார் மடியில் இருந்து தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வைக்கும் வேண்டுகோள் இது.

நாம் பல வகைகளில் பிரிந்து கிடக்கிறோம். இதனால் பலகீனப்படுவது நம் இனந்தானே?

தமிழ் ஓவியா said...


நீங்கள் அழைத்தால் வராத தலைவர்கள் யார்? பிரிந்து கிடக்கும் நம் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்துங்கள். அது உங்களால்தான் முடியும் தடைகளைக் கடந்து ஒரே சக்தியாய்த் திரளுவோம் என்று குறிப்பிட்டார்.

டொம்னிக் சேவியர்

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த பொம்னிக் சேவியர் அவர்கள் உரையாற்றுகையில் இயக்க ரீதியாக சாக்ரட்டீசு இங்கு பேசப்பட்டாலும் எங்களைப் பொறுத்த வரையில் அனுபவ முறையில் சாக்ரட்டீசு ஒரு தலைசிறந்த மனிதராக, பண்பாளராக, நண்பராகப் பார்த்தோம். அத்தகைய ஒரு நல்ல மனிதரை நாம் இழந்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் குறிப்பிட்டதாவது:

இது வெறும் கூட்டமல்ல; பெரிய குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் இழப்புக்காகக் கூடியுள்ள கூட்டம்.

செட்டிநாட்டுப் பகுதியில் வைதிக கோட்டையாக இருந்த வட்டாரத்தில் சாக்ரட்டீசின் தாத்தா அய்யா என்.ஆர்.சாமி அவர்களும் என்னுடைய தந்தையார் ராம.சுப்பையா அவர்களும் இணைந்து சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பிட அரும்பாடு பட்டவர்கள். வைதிக கோட்டையில் சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பியது எளிதானதல்ல.

1949இல் திமுக பிரிந்தபின் அதில் எங்கள் தந்தையார் சேர்ந்தார். கடைசி வரை திமுகவிலேயே இருந்து மறைந்தார்.

என்.ஆர்.சாமி அவர்களோ கடைசி வரை திராவிடர் கழகத்திலேயே இருந்து மறைவுற்றார்.

சாக்ரட்டீசை பொறுத்தவரையில் பெரியார் திடலுக்கு வெளியில் இருந்தவர்களையெல்லம் பெரியார் திடலுக்கு அழைத்து வந்த கொள்கையாளர். பெரியவர்கள் முதல் பிஞ்சுகள் வரை ஈர்த்தது என்ன சாதாரணமா?

தங்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் பணி செய்ய நாட்டில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் - சாக்ரட்டீசைப் போல?

தோழர் ஒளிவண்ணன் அவர்கள் அழுது கொண்டே என்னிடம் தொலைப்பேசியில் சொன்னார். மேலும் மேலும் பெரியார் திடலிலும் இயக்கத்திலும் என்னை முழுமையாக ஒப்படைக்கும் உணர்வை சாக்ரட்சிஸ் என்னுள் விதைத்தார் என்று குறிப்பிட்டார் என்றால் சாக்ரட்டீசின் அருமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா!

சாக்ரட்டீசைப் போலவே தம்பி பிராட்லா நான் காரைக்குடிக்கு குடும்பத்துடன் செல்லும்போது எல்லாம் நாங்கள் சென்றது முதல் ரயிலேறித் திரும்பும் வரை எங்களோடு இருப்பவர் அவர். என் மனைவி சொல்லுவார் நம் பிள்ளைகளுள் பிராட்லாவும் ஒருவன் என்பார்கள். நல்ல கொள்கைக் குடும்பம் - இப்படி ஓர் இழப்பு - ஈடு செய்ய முடியாத ஒன்று என்று குறிப்பிட்டார்.

இனமுரசு சத்யராஜ்

இனமுரசு சத்யராஜ் அவர்கள் தன்னுரையில் குறிப் பிட்டதாவது: சாக்ரட்டீசு மறைவு அவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள இன உணர்வுள்ள அத்தனைப் பேருக்குமே பேரிழப்பாகும்.

கைப்பேசி மூலம் எப்பொழுதும் தொடர்புடனேயே இருப்பார். கருத்துக்களைப் பரப்பிக் கொண்டே இருப் பார். இயக்கம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அவர் மூலம் தான் தெரிந்து கொள்வேன்.

சில நேரங்களில் எனக்குச் சில சந்தேகங்கள் எழும் போது, அதற்குத் தக்க வகையில் விவரங்களை எடுத்துக் கூறி எனக்கு விளங்க வைப்பார். இயக்கத்தைப் பற்றியோ, ஆசிரியர் அவர்களைப் பற்றியோ தவறாகச் சொல்லி விட்டால் உடனே தக்க பதிலடி கிடைக்கும். இந்தக்கால கட்டம் பற்றி அறிவுமதி இங்கே குறிப் பிட்டார். சில காரணங்களால் ஆங்காங்கு பிளவுபட்ட வர்களையெல்லாம் இணைத்திட ஆசிரியர் ஏதாவது செய்தால் நல்லதாக இருக்கும். அதற்கான அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-4/81317.html#ixzz33LAWIdpR

தமிழ் ஓவியா said...


சென்னை மந்திரிகளைப் பின்பற்றுதல்

சென்னை மாகாண சுகாதார மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்கு விஷயமாய் கவர்ன் மெண்டாரின் கொள்கையை திட்டப்படுத்தவும், மக்களுக்கு மதுவிலக்கில் அதிக முயற்சி உண்டாக்கவும், வருஷம் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் போல் செலவு செய்து நாட்டில் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்த தாகும்.

அதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் கண்டு உண்மையில் நமது நாட்டில் மதுவிலக்கு ஏற்பட்டுவிட்டால் எங்கு அதனால் பிழைக்கும் தங்களது உத்தியோகத் தொழிலும், வக்கீல் தொழிலும் மற்றும் மதுபானத்தின் பலனாய் ஏற்படும் பலவிதத் தொழிலும் நின்றுவிடுமோ எனக்கருதி பலவித தந்திரத்தாலும், மந்திரி கனம் முத்தையா முதலியாருக்குக் கெட்ட எண்ணம் கற்பித்தும், கவர்ன்மெண்டை தூண்டி முத்தையா முதலியாரின் கொள்கையை ஒப்புக் கொள்ளாமல் இருக்கச் செய்ய முயற்சித்தும் பயன்படாமல் போய் இப்போது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம் நடைபெறுவதும் யாவருக்கும் தெரிந்ததாகும்.

தவிர, காந்தி மடத்தின் சட்டாம்பிள்ளையாகிய திரு. இராஜகோபாலாச்சாரியார் தினமும் இந்தக் கொள்கையையும், பிரச்சாரத்தையும் தூற்றிக் கொண்டு வருவதும் யாவருக்கும் தெரிந்ததாகும். மந்திரி கனம் முத்தையா முதலியார் அவர்களின் இந்தக் கொள்கையை இப்போது இந்தியாவில் பல பாகங்களிலும், மேல்நாடுகளில் பல பக்கம் பின்பற்ற துவங்கிவிட்டன.

அதாவது, அய்க்கிய மாகாணமாகிய அலகாபாத் மாகாண அரசாங்கத்தார் இந்தக் கொள்கையைப் பின்பற்றி அந்த மாகாணம் முழுவதும் இப்பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டார்கள். மைசூர் அரசாங்கத்தாரும் இக்கொள்கையை பின்பற்றி பல ஆயிரம் ரூபாய்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். அமெரிக்கா அரசாங்கத்தார் இதைப் பின்பற்றி அய்ம்பதாயிரம் டாலர்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கி விட்டார்கள்.

நியூசிலெண்ட் தீவு அரசாங்கத்தாரும் இதே முறையில் மதுவிலக்குப் பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். இவ்வளவு பேர்கள் ஒப்புக் கொண்டாலும் நமது நாட்டு பார்ப்பனர்களுக்கும். அவர்கள் சிஷ்யர்களுக்கும், காந்தி சிஷ்யர்களுக்கும் மாத்திரம் இது பிடிக்க வில்லையாம் ஏன்? மதுவிலக்குப் பிரச்சாரத்தின் பெயர் சொல்லி பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க முடியாமல் போனதும், மதுபானத்தால் பிழைக்கும் பார்ப்பனர்களின் வயிற்றில் மண் விழுவதாலும் தான்.

ஆகவே, இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பொது மக்கள் இந்த அருமையான சந்தர்ப் பத்தை விட்டுவிட்டாமல் மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவி புரிந்து கூட்டம் கூட்டியும் மற்றும் பல விதத்திலும் பிரச்சாரம் செய்வதற்கு வேண்டிய ஆதரவளிக்க வேண்டுவ துடன் ஜில்லா தாலுகா போர்டு தலைவர்களும் முனிசிபல் சேர்மென்களும், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் திரு.சவுந்தரபாண்டியன் அவர்களை பின்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட அங்கத்தினர்களும் இந்த பிரச்சாரத்துடன் ஒத்துழைத்து ஆதரவு செய்து கொடுக்க வேண்டுகின்றோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 24.11.1929

Read more: http://viduthalai.in/page-7/81292.html#ixzz33LB9yz7m

தமிழ் ஓவியா said...


கார்ப்பொரேஷன் தேர்தல்

ஜஸ்டிஸ் கட்சி முனிசிபல் கவுன்சில் பார்ட்டியின் கூட்டம் ஒன்று 16.10.1929 தேதி இரவு 8 மணிக்கு தியாகராயர் மெமோரியல் கட்டிட மேல்மாடியில் கூடிற்று. 19 அங்கத்தினர்கள் விஜயமாயிருந்தார்கள். திருவாளர்கள் ஜி.நாராயணாசாமி செட்டியாரும், அவர் குமாரரும் மற்றுமிரண்டொரு வரும் வரவில்லை என்பதாகத் தெரிகின்றது.

கூட்டத்தில் இரகசியமாய் ஓட்டு எடுத்ததில் திரு.ராமசாமி முதலியாருக்கு. 15 ஓட்டும், டாக்டர் நடேச முதலியாருக்கு 2 ஓட்டும் கிடைத்தன. அப்படி இருந்தும் இருவரும் தேர்தலில் போட்டிபோடப் போவதாகவே முடிவு செய்து கொண்டு போயிருக்கிறார்கள். ஏறக்குறைய இருவருமே சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்களின் ஓட்டுகளை நம்பிக் கொண்டிருப்பதோடு சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்கள் வீட்டுக்கும் தலைவர்கள் வீட்டுக்கும் இரு அபேட்சகர்களும் நடந்த வண்ணமாய் இருக்கின்றார்கள்.

வெள்ளைக்காரர்கள் ஓட்டுகளையும் இருவரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சி கவுன்சிலர்கள் ஓட்டு அநேகமாய் சரிசமமாய்ப் பிரியாவிட்டாலும் இரண்டு பேருக்குமாகத்தான் பிரியக் கூடும் போல் தெரிகின்றது. சுயராஜ்ஜியம் கட்சி ஓட்டுகளும் அதேமாதிரி தான் பிரியும் போல் தெரிகின்றது.

வெள்ளைக்காரர்களின் ஓட்டுகள் நாலில் மூன்று பாகம் ஒருவருக்கும் ஒரு பாகம் ஒருவருக்குமாகப் பிரியலாம். மற்ற ஓட்டுகளும் சரிசமமாகப் பிரியலாம். எனவே, தேர்தலில் இருவர் போட்டியும் பலமாக இருக்கக் கூடும்.

நம்மைப் பொறுத்த வரை முடிவைப் பற்றி கவலையில்லா விட்டாலும், அதன் பயனாய் ஏற்படக் கூடிய கட்சிப் பிளவு பார்ப்பனரல்லாதார் கட்சியையும் அக்கட்சியின் அடுத்த சென்னை சட்டசபை தேர்தல்களையும் பாதிக்காமல் இருக்க முடியாதென்றே கருதி கவலைப்படுகின்றோம்.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் நிலைமையையும் நியாயத்தையும் உரிமையையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் பலத்தையும் தந்திரத்தையும் சண்டித்தனத்தையும் ஆதாரமாக வைத்தே முடிவு செய்வதாயிருந்தால், அக்கட்சிக்கு எந்த விதத்தில் யோக்கியதையும் நம்பிக் கையும் இருக்க முடியும் என்பது நமக்குப் புரியவில்லை.

அநேகமாக 5,6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் வரக்கூடு மாதலால் திரு.ராமசாமி முதலியாரைப் போன்றவர்கள் கார்ப்பொரேஷன் தலைவரா யிருந்தால் கட்சி தேர்தலுக்கு அனுகூலமாயிருக்கக் கூடும் என்னும் காரணம் திரு. ராமசாமி முதலியாருக்கு அனுகூலமாக சொல்லிக் கொள்ளப்படுகிறது.

டாக்டர். நடேச முதலியார் இந்த கட்சியில் சேர்ந்த காலம் முதல்கொண்டு கஷ்டப்படுகின்றவரான தினாலும் ஒவ்வொரு சமயத்திலும் இம்மாதிரி சாக்குகள் வந்தே அவருடைய உரிமை நழுவ விடப்படுவதாலும் அவரும் இதனாலேயே அடிக்கடி கோபித்துக் கொண்டு கட்சியில் கலகம் விளைவிப்பதும் வெளியில் போவதும் மறுபடி சமாதானமும் ஆசையும் சொல்லி அழைக்கப்படுவதாலும், ஏதாவது ஒரு தடவை அவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டியது ஒற்றுமையை உத்தேசித்தாவது அவசியம் என்கின்ற விஷயம் டாக்டர். நடேச முதலியாருக்கு அனுகூலமான காரணமாக சொல்லிக் கொள்ளப்படுகிறது.

இரண்டு காரணங்களும் சரி என்று வைத்துக் கொண்டாலும் திரு.நடேச முதலியாருக்கு விட்டுக்கொடுப்பது இந்தத் தடவையா அல்லது அடுத்த தடவையா என்பதை வேண்டுமானால் மற்ற தலைவர்களும் சேர்ந்து யோசனை செய்து ஒரு முடிவு கட்ட வேண்டியதான விஷயம்.

அப்படிக்கில்லாமல் எப்படியோ போகட்டும்! என்று மற்ற தலைவர்களும் இயக்கத் தலைவரும் அலட்சியாமாயிருப்பதும் சிலர் இருவருக்கும் நல்ல பிள்ளைபோல் நடந்து கொள்ளுவதும் உள்ளுக்குள் அவர்களுக்கு இஷ்டமானவர் களுக்கு வேலை செய்வதுமான காரியங்களானது, அவற்றின் பலன் எப்படியானாலும், அவை தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையையும் கோழைத் தனத்தையும் சுயநலத்தையும் காட்டுவதாகும்.

நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கை ஒருவாறு நமது இயக்கத்தில் உள்ள கட்சிகள் இவ்வளவு என்பதைக் காட்டிவிட்டது. ஆனால் அடுத்துவரும் கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தலானது அக்கட்சிகளின் தனித்தனி வேலைத் துவக்கத்தை காட்டக் கூடியதாகிவிடுமோ என்றே பயப்படுகின்றோம்.

ஆகையால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் உடனே ஒரு கூட்டத்தைக் கூட்டி இருவரையும் தருவித்து இன்னார்தான் நிற்க வேண்டும் என்று தீர்மானம் செய்ய வேண்டியது அவருடைய முக்கியமானதும் கடமையானதுமான வேலையாகும்.

அப்படிக்கில்லாமல் அலட்சியமாயிருப்பதோ அல்லது தனது தலைவர் ஸ்தானம் கவுரவிக்கப்படமாட்டாது என்பதோ காரணம் கொண்டு சும்மா இருப்பதானால் அவரும் பொறுப்பை உணராத தலைவர் என்றுதான் சொல்லித் தீர வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20-10-1929

Read more: http://viduthalai.in/page-7/81293.html#ixzz33LBITWD2

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை


ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர்களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகுகாலமாக ஒரு உயர்தரப் பாடசாலை நடந்துவரும் விவரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்துவந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திரு. சவுந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட் தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டை மகாஜனங்களும் மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபச்சாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள்.

அவ்வுபச்சாரப் பத்திரங்களுக்குத் திரு.சவுந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதே, இது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப் போவதாயும், ஆனால் அதில் தனக்கு சில கஷ்டங்கள் நாடார் சமுகத்தாராலேயே இருப்பதாகவும் சொல்லி உதாரணமாக அருப்புக் கோட்டையில் உள்ள நாடார் ஹைஸ்கூலில் ஆதிதிராவிடப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளுவதில்லை என்கின்ற நிர்ப்பந்தமிருப்பதேதான் முக்கியமான தடையென்றும் கூறி, அதனால் தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் தன்னுடைய சமூகத்திலேயே இவ்விதக் கொடுமையிருந்தால் தன்னுடைய உத்தியோக ஓதாவில் மற்ற சமூகத்தாருக்குள் இருக்கும் கொடுமைகளை நீக்கும் படி சொல்ல தனக்கு எப்படி தைரிய முண்டாகுமென்றும், ஆகவே எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரத்தில் இவ்வருப்புக் கோட்டை பள்ளிக்கூடத்தில் இக்கொடுமை நீக்கப்படுகின்றதோ, அவ்வள வுக்கு அவ்வளவு தனது வேலை சுலபமாகுமென்றும் அவசியம் செய்ய வேண்டும் என்றும் தனது சமுகத்தலைவரை அடிப்பணிந்து கேட்டுக் கொள்ளுவ தாகவும் சொன்னார்.

அதற்கிசைய அன்று அப்பள்ளிக்கூட நிர்வாகிகள் அவ்வித நிர்ப்பந்தத்தை நீக்கிவிட்டு ஆதிதிராவிட மக்களை அந்தப் பள்ளிகூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள் . இது நமது நாட்டில் உள்ள தீண்டாமையும் உயர்வு தாழ்வும் ஒழிய ஒரு பெரிய அறிகுறியாகும் என்றே சொல்ல வேண்டும். இவ்வித அரிய காரியத்தைச் செய்த அருப்புக் கோட்டை நாடார் தலைவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 29.09.1929Read more: http://viduthalai.in/page-7/81294.html#ixzz33LBQN6Zv

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

உண்மையிலேயே ஜாதியின் பேரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருஷ்டிக்கப்படவில்லை என்று சொல்லப்படுவது உண்மையானால் கக்கூசு எடுக்கிற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. ஆனால் எந்தப் பார்ப்பானாவது கக்கூசு எடுத்ததாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தாழ்த்தப்பட்ட மகன்தானே அந்த வேலையைச் செய்கிறான்?பல தமிழர்கள், நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கிறவனல்ல; பொதுவானவன் என்று சொல்லிக் கொண்டு தங்கள் சுயநலத்திலேயே கண்ணாக இருக்கிறார்கள். மற்றும் பல தமிழர்கள், தங்களுக்கு எதில் எதில் எவ்வெப்போது பலனடைய வாய்ப்பு வருமோ அவ்வப்போது கட்சி மாறத் துடித்துக் கொண்டும், மாறிக் கொண்டும் இருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/81294.html#ixzz33LBXNh2O

தமிழ் ஓவியா said...

என் குறிப்பறிந்து செயல்படக்கூடிய கொள்கை வீரர் பெரியார் சாக்ரட்டீசு!


இவர் பெயரால் அறக்கட்டளை நிறுவப்படும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கழகத் தலைவர் அறிவிப்பு

c

பெரியார் சாக்ரட்டீசு நினைவேந்தல் நிகழ்ச்சியில், படத்தினை திறந்து வைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்

சென்னை, மே 31- மறைந்த பெரியார் சாக்ரட்டீசு பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டு ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளர் ஒருவருக்கு விருதும், நிதியும் வழங்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் (30.5.2014) பெரியார் சாக்ரட்டீசு படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தன் குடும்பம், தன் வீடு என்று தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல் கடல் போன்ற மனிதநேய உணர்வால் பின்னப்பட்டு பிறருக்காகவும் வாழவேண்டும், தொண்டு செய்யவேண்டும் அதுவே உண்மையான சுயநலம் என்று உணர்த்திச் சென்றவர் இதோ படமாக நம்முன் காட்சி அளிக்கிறார்.

படமாக மட்டுமல்ல, பாடமாகவும் விளங்குகிறார் தமிழ் ஈழம் என்ற செல்வத்தை நமக்கு அளித்தும் சென்றுள்ளார்.

பெரியார் தொண்டராக ஆனது நமக்குக் கிடைத்தற் கரிய வாய்ப்பு; அதுபோலவே, எனக்கு அருமையான தோழர்கள் கிடைத்தார்கள். நான் சொல்லியல்ல; நான் சொல்லுவதற்கு முன்னதாகவே, நான் என்ன நினைப்பேன் என்று குறிப்பறிந்து செய்யக்கூடிய தோழர்கள் அவர்கள். அவருள் முக்கியமானவர் சாக்ரட்டீசு.

44 ஆண்டில் கால் நூற்றாண்டுக்காலம் பணியாற்றிய தோழர் குறிப்பறிந்து செய்யக்கூடிய வினைத் திட்பம் நிறைந்த ஒருவரையல்லவா இழந்திருக்கிறோம். அந்த இடத்தை யாரைக் கொண்டு நிரப்புவது?

இங்கே சாக்ரட்டீசு நம்மிடம் விட்டுச் சென்ற செல்வமான தமிழ்ஈழம் பேசியது. சாக்ரட்டீசு மறைந்து விடவில்லை, நம்மிடம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்பதை தமிழ் ஈழம் பேச்சின்மூலம் உணர்கிறோம்.

சாக்ரட்டீசு மறைந்தபோது என்னுள் ஏற்பட்ட துயரத் தின் தன்மையை, கனத்தை எழுத்துக்களாகக் கொட்டி னேன். அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஒரு சாக்ரட்டீசு இன்று மறைந்திருக்கலாம்; ஆயிரமா யிரம் சாக்ரட்டீசுகளை உருவாக்குவோம் என்று அந்த அறிக்கையில் நான் குறிப்பிட்டு இருந்தேன். தமிழ்ஈழம் பேசும்போது அதை நான் உணர்ந்தேன்.

நாம் சாதாரணமானவர்களாக இருக்கலாம். அதேநேரத் தில் நாம் யார் தோள்மீது நிற்கிறோம் தெரியுமா? தந்தை பெரியார் அவர்களின் தோளின்மீதல்லவா நிற்கிறோம்!

அதன்மூலம் துணிவு பெறுகிறோம் - வலிமை பெறுகிறோம்.

நம் கொள்கை தெளிவாக இருக்கிறது - அணுகுமுறை சரியாகவே இருக்கிறது. நட்பில் சமரசம் உண்டே தவிர கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நாட்டில் 123 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால், அவர்களைப் பாதுகாக்க 123 கோடி இராணு வீரர்களா இருக்கிறோம். அதுபோன்றதுதான் கருஞ்சட்டைப் படை.

இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும், நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அதுபற்றி நான் கருத்துச் சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் பதில் சொல்லாமல் போய்விட்டாரே! என்று கருதிட இடம் கொடுக்கக்கூடாதல்லவா!

பெரியார் திடல் என்பது எந்த ஒரு தனிப்பட்டவருக்கும் சொந்தமானதல்ல; என்றைக்கும் திறந்தே இருக்கிறது; யாரும் வரலாம்!
நான் அடிக்கடி சொல்லுவதுண்டு; அதையே திரும்பவும் சொல்கிறேன். நம்மை எது இணைக்கிறதோ அதனை விரிவு செய்வோம் - எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்துவோம் என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், சாக்ரட்டீசின் நினைவைப் போற்றும் வகையில் ஆக்கப்பூர்வமாக சிலவற்றைச் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் திடலில் உருவாக்கப்பட இருக்கின்ற ஸ்டூடி யோவுக்கு அவர் பெயர் சூட்டப்படும். அதோடு அவர் பெயரால் ஓர் அறக்கட்டளை நிறுவப்படும். ஏற்கெனவே பகுத்தறிவுப் பேராசிரியர் வெள்ளையன் அவர்கள் பெயரால் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, சிறந்த தமிழின எழுத்தாளர் ஒருவருக்கு விருது அளித்து நிதியும் அளிக்கிறோம்.

சாக்ரட்டீசின் பெயரால் நிறுவப்படும் அறக்கட்டளைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.10,000 அளிக்கப்படும்; மற்றவர்களும் நிதி உதவி அளிக்கலாம். ஒரு லட்ச ரூபாய் வங்கியில் இருப்பு வைத்து, அதன் வட்டி யிலிருந்து வரும் தொகையை ஒரு எழுத்தாளருக்கோ, பத்திரிகையாள ருக்கோ அளிக்கலாம் என்ற கருத்தினையும் வெளிப்படுத்தினார்.

பிராட்லா நன்றியுரை

மறைந்த சாக்ரட்டீசின் தம்பியும், காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளருமான பிராட்லா இறுதியாக நன்றி கூறினார்.

நானும், சாக்ரட்டீசும் சகோதரர்களாக அல்ல, நண்பர் களாகவே பழகி வந்தோம். எனக்கு அண்ணன் என்றாலும் அவன், இவன் என்றுதான் பேசிப் பழகுவேன்.

இறப்பதற்கு சில நாள்களுக்குமுன் தான் சொன்னான். நீ என்ன செய்யப் போகிறாய்? இயக்கப் பணியை முழுமை யாக நீ செய். அது முக்கியம். உன் மகனை சென்னைக்கு என் னிடம் அனுப்பி வை. அவனைப் படிக்க வைக்கவேண்டியது என் பொறுப்பு என்று சொன்ன சில நாள்களிலேயே இந்தப் பேரிழப்பு என்று துயரச் சுமையோடு நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

உறுதிமொழி எடுத்தது கொள்கைக் குடும்பம்

சென்னைப் பெரியார் திடலில் நேற்று (30.5.2014) நடைபெற்ற பெரியார் சாக்ரட்டீசு நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேடைக்கு வந்து கீழ்க்கண்ட உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

எந்த இடர் வந்தாலும், எத்தனை இழப்புகளை எதிர்கொண்டாலும், தந்தை பெரியார் பணிமுடிக்க தமிழர் தலைவர் வழியில் அர்ப்பணிப்போடு இன்னும் வேகமாக செயல்படுவோம். ஒரே கொள்கை, ஒரே கொடி, ஒரே தலைமை என்று வாழ்ந்து வழிகாட்டிய பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி - பேராண்டாள் ஆகியோரின் நெறிப்படி, கொண்ட கொள்கையை வென்றெடுக்க இறுதிவரை போராடுவோம்.

அது எங்கள் குருதியோடு கலந்த ஒன்று. இன்று பெரியார் சாக்ரட்டீசு மறைவால் இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில் இன்னும் வலுவோடும், துணிவோடும் இயக்கப் பணியாற்றுவோம் என்று உறுதியேற்கிறோம் என்று சாக்ரட்டீசு குடும்பத்தினர், அவர் தம் சுற்றத்தினர் மேடையில் உறுதிமொழி எடுத்தனர்.

வேறு எங்கும் கண்டிராத இந்தக் காட்சியைக் கண்டு வியந்து பாராட்டினர் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பெருமக்கள்.

நடிகர் சிவகுமார் இரங்கல்

என் அன்புக்குரிய தம்பி பெரியார் சாக்ரட்டீசின் திடீர் முடிவு என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரியாரைப் பின்பற்றுவோராகிய நீங்கள் ஒப்பமாட்டீர்கள். எனினும் அவரின் இறுதி அமைதிக்காக நான் வேண்டிக்கொள்கிறேன்.

- இவ்வாறு நடிகர் சிவகுமார் இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/81309.html#ixzz33LCJS4P2

தமிழ் ஓவியா said...


ஜோதிடம் புரியாத புதிரா?

நான் பெரும்பாலும் புத்தகங்களைப் படிப்பவன், நான் ஒரு புத்தக வியாபாரி. புத்தகங்களைப் படித்து, புரிந்து, அதை விமர்சனம் செய்பவன்.

சமீபத்தில் நடிகர் ராஜேஷ் எழுதிய ஜோதிடம் புரியாத புதிர் என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது.

ஒரு இடதுசாரி சிந்தனை உள்ளவர், மார்க்சியத்தில் பரிச்சயம், பெரியாரை நேசித்தவர். இயற்கையின் செயல்பாடு களைப் பேசக் கூடியவர் அப்படிப்பட்ட ஒருவர் சோதிட கலையை ஓர் ஆய்வு செய்து, மக்கள் ஜோதிடத்தை நம்பக்கூடிய அளவில் எழுதியுள்ளார்.

யார் யாரையோ துணைக்கு அழைத்துள்ளார் மார்க்சியவாதிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. சொந்த வாழ்க்கையில் நடந்ததாக கூறி அத்த னையையும் நம்பும் ராஜேஷ் எல் லோரையும் நம்பச் சொல்கிறார்.

ஒரு கட்டுரை எழுதிவிட்டு கடைசியில் பல கேள்வி போட்டு விக்கிரமாதித்தன் கதையில் வேதாளத்தை சுமந்து செல்லும் விக்கிரமாதித்தன் நிலையில் ராஜேஷ் உள்ளார். அது கூட கதையில் ஒரு கருத்து இருந்தது.

அவர்கள் எழுதியதை கலைஞானம் என்பவர் ராஜேஷ் சோதிடக் கலையை உயர்த்தி வருகிறார் என்று பாராட்டி யுள்ளார்.

எனக்கு தெரிந்த ஒரு மார்க்சியவாதி, பெரியாரின் கொள்கையில் இளம் வயதில் வாழ்நாளைக் கழித்து ஆசிரியராகப் பரிணமித்து, குறிப்பிட்ட காலத்தில் சோதிடம் பார்க்கும் தொழிலைத் தேர்வு செய்து வாழ்கின்றார். சங்கரன் கோவில் அருகே குருவிகுளம் அதன் அருகே ராமலிங்காபுரம் கிராமத்தில் ஓகோ என்று தொழில் ஓடுகிறது.


தமிழ் ஓவியா said...

சோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஏன் இங்கு வருகிறீர்கள். நாடு எப்படி உருப்படும் என்ற வார்த்தைகளால் அர்ச் சனை செய்து ஜோதிடத்தை சொல்லு கிறார். அவர் பெயர் தேவதாசன்.

எப்படி சப்தம் போட்டாலும் நீங்கள் சொல்வது எங்களுக்கு நடக்கிறது என்று சொல்லி மக்கள் பெருமையோடு பேசுகிறார்கள்.

தேவதாசன் சார் இளவயதில் பெரியார் கொள்கையில் ஈர்த்து பல எதிர்ப்புகளில் வாழ்ந்த ஓர் மாமனிதர். யாரிடமும் ஜோதி டம் பாருங்கள் என்று கூறியதில்லை. வந்த மக்களை நம்பிக்கையோடு தேற்றி அனுப் புகிறேன் என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

இதைக்கூட தொலைபேசியில் அனு மதி பெற்றுத்தான் எழுதுகிறேன், வாழ்த் துக்கள் கூறினார். கஷ்டமான வாழ்வு தொடங்கும் போது மக்கள் ஜோதிடத்தை நம்புவதும், குருவி ஜோசியத்தை நம்புவதும், இரவு நேரங்களில் குறி சொல்லும் கோடாங்கி காரர்கள் கையில் பிரம்பு வைத்துக் கொண்டும் குறி சொல்வதை நம்புவதும் அதை தொழில் செய்பவர்கள் பரிகாரம் என்ற பெயரில் பல ரூபாய்களை பிடுங்கிச் செல்வதும் வாடிக்கை.

ஊருக்கு ஜோதிடம் சொல்லும் மக் களுக்கு அவர்களை பிழைப்பு நிலையை யோசிப்பதில்லை. அதைக் கேட்டால் முன் செய்த பலனால் இந்த நிலை என்று கூறி அதற்கு ஓர் காரணம்.

நாடித்துடிப்பை வைத்து மருத்துவம் பார்த்த வைத்தியம் தான் சிறப்பாக இருந்தது. அது நாடி துடிப்பை வைத்துக் கூட கணக்கிடலாம்.

பிறந்த தேதி, நேரம் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. குழந்தை தாய் வயிற்றிலிருந்து பூமியில் விழும் போது அந்த பரபரப்பில் நேரம் சரியாக கணிக்க முடியாது. டாக்டர்கள் கூட 5 நிமிடம் 10 நிமிடம் கழித்துத் தான் சொல்வார்கள்.

இதை எப்படி சோதிடமாக ஏற்றுக் கொள்ள முடியுமா? நடிகர் ராஜேஷ் நடிகராகவே இருந்திருக்கலாம். இந்த ஆய்வுக்குள் வந்தது யாரைக் காப்பாற்ற என்று தெரியவில்லை.

பிராமணர்கள் மந்திரம் என்ற பெயரில் எல்லா மக்களையும் ஏமாற்றுகிறார்கள். அவர்கள் வலிய வந்து என்னை அழையுங்கள் என்று கூறவில்லை.

எவ்வளவு படித்திருந்தாலும் கல் யாணம், இழவு, கும்பாபிசேகம், இறந்த தாய், தகப்பனார்களை மேலோகம் அனுப்ப எவ்வளவு பணம் கொடுத்து அனுப்புகிறார்கள்! உலகத்தில் 90% மூட நம்பிக்கையில் உழன்று வாழ்வதைக் காணுகின்றோம்.

தமிழ் ஓவியா said...

ஒரு பாடல் உண்டு

தலையெழுத்து, தலைஎழுத்து என்று சொல்லி தத்தளிக்கிறார்,
கடும் உழைப்பைக் கூட தலைவிதி என எண்ணி
செயல் படுகின்ற மாமேதைகளைப் பற்றி என்ன சொல்வது?
ராஜேஷ் முன்னுரையில் ஒன்னுமே புரியலே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்று கவிஞர் சந்தானத்தின் பாடலை நினைவு கூர்கிறார்.

அதை சந்திரபாபு பாடியுள்ளார்.

இது ஓர் படத்தின் சூழ்நிலைக்கு கவிஞர் எழுதியுள்ளார். இதுவே நிஜமாக ஆகிவிடுமா?

பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலை விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணர் எல்லாம் மாறணும் வேலை செஞ்சா உயர்வோம் என்ற விபரம் மண்டையில் ஏறனும் இது அவர் வாழ்க்கையில் ஒத்துவரவில்லை என்று எழுதியுள்ளார்.

நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்

என்ற பாடல் வரிகள் இன்றும் மக்கள் மனதில் பதிந்து விட்ட பாடல்.

இப்படி எழுதியவர் 29ஆம் வயதிலே ஏன் மறைந்தார்? விதியின் அடிப் படையிலா என்று எழுதியதைப் பார்த்து தான் குருட்டு தனமாக நம்பினால் எல் லோரும் நம்ப வேண்டும் என்ற பிற் போக்கான சிந்தனை தவிர, உயர்ந்த சிந்தனை இல்லை.

என் வாழ்க்கையில் நடந்த ஓர் நிகழ்வைக் கூறுகிறேன். என் கல்யாணத் திற்கு பெண் பார்க்கையில் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். ஓர் தீவிரமான பொதுவுடைமையாள னாகிய நான் மறுத்து விடவில்லை.

கடைசியில் நானும் எனது மைத்துனர் ராமச்சந்திரனும் ஊரின் அருகிலுள்ள சேர்ந்த மரத்தில் பார்க்கச் சென்றோம்.

சோதிடர் பலனைப் பார்த்து ஐந்து பொருத்தந்தான். சரி; இது பொருத்த மில்லை என்று கூறிவிட்டார்.

நானும் என் மைத்துனரும் ஆலோ சித்து வீட்டில் போய் எட்டுப் பொருத்தம் என்று பொய் சொல்வோம் என்று பேசி, சொல்லி கல்யாணம் நடைபெற்றது. சிறிது காலம் என் நடைமுறையில் சில கஷ்டம். நான் மக்கள் பணிக்காக சிறை சென்றேன்.

குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு நான் வாழ்க் கையைப் புரிந்து நல்ல பிள்ளைகள், நல்ல மனைவி, நல்ல மருமக்கள்மார், நல்ல பேரப்பிள்ளைகள், என் மாதி கொடுத்து வைத்தவன் யாரும் இல்லை என்பது போல வாழ்கிறேன். நான் சைக்கிளில் சென்று 73 வயதில் சுமார் 80 கிலோ மீட்டலிரிந்து 120 கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை புரிகிறேன்.

திணமனி, தி இந்து, சிவப்பு சட்டைத் தாத்தா, புத்தகத் தாத்தா என்று பாராட்டு கிறது.

மானமிகு தமிழர் தலைவர் கி.வீரமணி கையினால் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் புத்தக விழாவில் புத்தகர் விருது அதிலும் மூன்று பொதுவுடைமைத் தோழர்கள் வாங்கியுள்ளோம். நான் பிறந்த பலனை அனுபவிக்கின்றேன். ஜாதி இல்லை, கடவுள் இல்லை என்று பள்ளி களில் பிள்ளைகளிடம் உரக்க கூறுகிறேன்.

மாதா, பிதா, குரு தான் தெய்வம் என்று பள்ளி பிஞ்சு உள்ளங்களில் கூறி வருகின்றேன்.

உலகத்தில் எந்த விதமான கவலை இல்லாமல் சைக்கிளில் பவனி வருகின் றேன். உடலில் நோயும் இல்லை. மன நிம்மதி, பல புத்தகங்களைப் படிக்கின் றேன் பகுத்தறிவுவாதியாக வாழ் கின்றேன்.

என்னை மனிதனாக்கியது மார்க்சியம்

சிந்திக்க வைத்தது திருக்குறள்

ஜாதி, மதம், கடவுள் இல்லை என்று பெரியாரிசம் சொல்ல வைக்கிறது.

நல்லவர்களைக் தொடுங்கள்! நல்ல பலன் கிடைக்கும்

ஜீவாவை தொட்டேன் எல்லோராலும் பாராட்டப் படுகின்றேன்.

உறுதியான லட்சியம், மன தைரியம் தான் வாழ்வதற்கு ஓர் மா மருந்து, எடுத்த முடிவில் பின் வாங்கக்கூடாது. நல்ல முடிவாக இருக்க வேண்டும். கடவுளை நம்புகிறவர்கள் நிம்மதியாக இருந்ததாக சரித்திரம் இல்லை. நம்பாத நான் திருப்தியாக இருக்கிறேன். யாருக்கும் வஞ்சகம், துரோகம் எண்ணாத என்னை கடவுள் என்று இருந்தால் என்னை நேசிப்பாரே தவிர, என்னைச் சோதிக்க மாட்டார்.

- தோழர் இரா.சண்முகவேல்
நெல்லை மாவட்டம் - 627860

Read more: http://viduthalai.in/page2/81264.html#ixzz33LCiK1LM

தமிழ் ஓவியா said...


மதமாற்றம்: விவேகானந்தர்


வட இந்தியாவில்தான் முகமதியர் படையெடுப்புகள் நடைபெற்றன. ஆனால் கேரளா, தமிழகம் போன்று மலேசியா, ஜாவா, சுமத்ரா, போர்னியோ இன்னும்பிலிப்பைன்ஸ், சீனத்தில்கூட எந்த படையெடுப்புமில்லாமல் கோடிக் கணக்கில் மக்கள் இஸ்லாமைத் தழு வியது ஏன்?

ஆட்சிகள் மூலம்தான் மதமாற்றங் கள் ஏற்பட்டன என்பது உண்மையா னால் ஸ்பெயின் நாட்டை அரபு முஸ் லிம்கள் 700 ஆண்டுகள் ஆண்டார்கள். ஆனால் மதமாற்றம் ஏற்படவில்லை.

இந்தியாவின் சில பகுதிகளை எட்டாம் நூற்றாண்டிலிருந்து முகமதியர் ஆண்டு வந்த போதிலும் ஐந்தில் ஒருவரே இஸ் லாமுக்கு மாறினர். கிறிஸ்தவ ஆங்கி லேயர் இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்டனர். ஆனால், 2-3 விழுக்காடு தான் கிறிஸ்தவர்களாகினர்.

இன்று உலகின் ஜனத்தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனே சியா. இன்றைய மக்கள் தொகை 24 கோடி. 13,500 சிறிய பெரிய தீவுகளைக் கொண்ட நாடு.

5,000 கி.மீ. நீளமுள்ள சமுத்திரத்தில் பரவியுள்ள நாடு. இன்றைய மக்கள் தொகையில் 88 விழுக்காடு இஸ்லாமியர்கள். இந்து மன்னர்களின் விஜயசாம்ராஜ்யம் 7 முதல் 13ஆம் நூற்றாண்டு வரை விரிவாகப் பரவி இருந்தது. ஆனால் இன்று 2 விழுக்காடு தான் இந்துக்கள்.

இந்த நாட்டை 16ஆம் நூற்றாண் டிலிருந்து போர்ச்சுகீஸ், பிரிட்டிஷ் பிரான்சு, டச்சு முதலாளிகளின் கம் பெனிகள் (டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி 1602 - 1798) பல்வேறு பகுதி களைக் கைப்பற்றிக் கொண்டனர். 1922லிருந்து இந்தோனேசியா முழு மையாக டச்சு சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.

இன்றைய இந்தோனேசியா 1949இல் தான் விடுதலை பெற்றது. சுமார் 500 ஆண்டு களுக்கு மேல் கிறிஸ்தவ ஐரோப்பியரின் ஆளுகை. ஆனால் இன்று 8 விழுக் காடுதான் கிறிஸ்தவர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை- எளிய மக்களுக்கும், முகமதியர் படை யெடுத்துப் பிடித்தது ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால் தான் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் முகமதியர்களாக மாறினர். இதை சாதித்தது வாளால் தான் என்பதற்கில்லை.

வாளாலும், நெருப்பி னாலும் தான் இவையெல்லாம் சாதிக்கப் பட்டது என்பது மதி கேட்டின் உச்ச நிலையாகும் என்கிறார் விவேகானந்தர்.

Read more: http://viduthalai.in/page4/81269.html#ixzz33LCxjs5S

தமிழ் ஓவியா said...


ஸ்ரீலஸ்ரீகளே! பிள்ளையார் சிலை உடைப்பு கிளர்ச்சி நடந்த நாள் (27.05.1953)


இன்று!

பிள்ளையார் சிலை உடைப்பு கிளர்ச்சி நடந்த நாள் (27.05.1953)

''பிள்ளையார் சிலை உடைப்புப் பற்றி தந்தை பெரியார்''

'பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டிய தில்லை.

பிள்ளையார் சதுர்த்தி பண்டி கையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண் ணோடு மண்ணாக ஆகி விடுவ தில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்ல வில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல!

வேத சாஸ்திர ஆதாரம் என்பதன் படியும் அது - கணபதி கடவுளல்ல!

கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறி வும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.

கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண் டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங் களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டு மிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப் பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசஞ்சி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்ப வர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ் வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக் களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக் கிறேன்.'

----------------------7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை.

(முகநூலிலிருந்து குடந்தை கோ. கருணாநிதி)

Read more: http://viduthalai.in/page4/81271.html#ixzz33LDAbqji

தமிழ் ஓவியா said...


என்ன நடக்கிறது நாட்டில்?

முக நூலில் இருந்து: ' . 2012 - எழுதப் பட்ட இந்தக் கட்டுரை பிஜேபி- இலங்கை அரசின் பொருத்தப்பாடுகளை எப்படி கணித்திருக்கிறது பாருங்கள் யார் இந்த ஷர்மிளா..?

ஆசியாவின் ஹிட்லர் ராஜ பக்க்ஷே வுக்கும், இந்தியாவின் சுஷ்மா உள்ளிட்ட பாரதிய ஜனதா கும்பலுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஆழமான உறவுக்கும் ,திட்டமிட்டு பின்னப்பட்டுவரும் சதி வலைகளுக்கும் இடையில் ஒரு இணைப் புப் பாலமாக இயங்கிக் கொண்டிருக் கிறார் இலங்கையில் வசிக்கும் ஷர்மிளா என்ற இந்திய பெண்மணி...!

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரம் பொருந்திய மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்காவின் ஒரே மகள்தான் இந்த ஷர்மிளா.

ஷர்மிளாவின் கணவர் அசோக் குமார் காந்தாதான் இலங்கைக்கான இந்திய தூதர்..!

இந்திய தூதரும் அவரது குடும்பமும் இலங்கையில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கும்..?

இந்திய அரசின் செலவில் இலங் கையில் சொகுசான வாழ்க்கை வாழும்

இந்த ஷர்மிளாதான் சுஷ்மா உள்ளிட்ட பாஜகவினரையும் வட இந்திய பாஜக தலைவர்களையும் இலங்கை அரசுக்கும் ராஜபக்ஷேவிற்கும் ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்..

புத்தரின் பெயரால் தற்போது நிகழும் ராஜபக்ஷேயின் மத்திய பிரதேச விஜயத் திற்கு ஏற்பாடு செய்ததும் இதே கும்பல் தான்....!

பிகு:தற்போது இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆண்டாலும் மத்திய அரசு இலங் கைக்கு அனுப்பிய குழுவிற்கு சுஷ்மாவை தலைவராகப் போட்டதும், பாஜக இலங்கை அரசுடன் நெருங்கி வருவதும் இலங்கை அரசின் ராஜ தந்திர நடவ டிக்கைகளின் ஒரு அங்கமே ..

இலங்கை அரசின் குறிப்பறிந்து அதற்கேற்ப ஒத்து ஊதுகிறது கொழும்பில் இயங்கும் இந்திய தூதரகம் ..

அதாவது நாளை காங்கிரஸ் போய் பாஜக இந்தியாவில் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய அரசு இலங்கையிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவே இந்த ஏற்பாடு ..

ஷர்மிளாவும் அவரது சகாக்களும் தங்கள் கஜானாவை நிரப்ப வேண்டி தமிழ் மகக்ளுக்கு எதிராக செய்துவரும் இத் தகைய மோசடித்தனங்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்...

Read more: http://viduthalai.in/page4/81270.html#ixzz33LDNWt3I

தமிழ் ஓவியா said...


யார் இந்த சுதீர்தவாலே?


காவல்துறை வண்டியில் சுதீர்தவாலே

சுதீர்தவாலே இவர் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக சமூகத் தொண்டாற்றி வருபவர். இவரை மகாராட்டிர அரசு மாவோயிஸ்ட் என்று குற்றஞ்சாட்டி 2011ஆம் ஆண்டு சனவரியில் கைது செய்தது. அதைத் தொடர்ந்து சிறையில் சுதீர் தவாலே அடைக்கப் பட்டிருந்தார்.

சுதீர் தவாலேமீது பிரிவு 120பி(குற்றவாளிகளுடன் தொடர்பு), பிரிவு 20 மற்றும் பிரிவு 39 சட்டவிரோத செயல்தடுப்பு பிரிவு மற்றும் யுஏபிஏ சட்டம் ஆகிய வற்றுடன் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருத்தல் மற்றும தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்படுவது ஆகிய குற்றச்சாட்டுக்களை சுதீர்மீது மகாராட்டிரக் காவல்துறை பதிவு செய்து இருந்தது.

கிழக்கு மகாராட்டிரத்தில் கோண்டியா மாவட் டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஆர்.ஜி.அஸ்மர் முன்பாக வழக்கு விசாரணை நடைபெற்று கடந்த வாரம் தீர்ப்புக்கட்டத்தை அடைந்தது. சுதீர் தவாலே உடன் பீமாராவ் போய்டி, சிந்தாமணி வால்டே, சஞ்சத் பஞ்சாரா, டோங்காராம் கோரேட்டி, ஷைலேஷ் வக்டே, பாஸ்கர் கோரே மற்றும் சிறீனிவாஸ் ஜோண்டே ஆகிய ஒன்பது பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

தீர்ப்பை அளிக்கும்போது முக்கால் மணிநேரம் காவல்துறை மற்றும் அரசின் வழக்கில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக்காட்டி கடிந்துகொண்டார். காவல்துறை போதுமான ஆதாரங்களை அளிக்க வில்லை. சட்டத்திற்குட்பட்டு விசாரணை நடை முறைகள் கையாளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

சுதீர்தவாலே விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வந்த அவர் துணைவியார்

சுதீர் தவாலே மாவோயிஸ்ட்டு என்று குற்றம் சாட்டிய காவல்துறை அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக்கூறிய கணினி நினைவகம் (ஹார்ட் டிரைவ்), லேப்டாப், பென்-டிரைவ் ஆகியவற்றை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, பறிமுதல் செய்த பின்னர் இயக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அனைத்தையும் நீக்கிவிட்டே கைரேகை நிபுணர்களின் ஆய்வுக்கு கைப்பற்றப்பட்ட பொருட் கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. சுதீர் தவாலே விடம் கைப்பற்றியதாகக் கூறப்பட்ட மாவோயிஸ்ட் கருத்துக்களுடன் உள்ள கட்டுரைகளை தாமே இணை யத்தில் பார்த்தபோது, நூற்றுக்கணக்கிலான இணைப் புகளில் அத்தகவல்கள் உள்ளதாகவும், அக்கட்டுரை யிலிருந்து சில தகவல்கள் பாடப்புத்தகத்திலும் கூட உள்ளன என்றும் கூறிய நீதிபதி குற்றம் சுமத்தப் பட்டவருக்கு பேச்சு சுதந்திரத்தை அரசியலமைப்பு வழங்கியுள்ளவாறே அவர் பயன்படுத்தி உள்ள தாகவும் குறிப்பிட்டார்.

போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிய காவல்துறையை கடுமையாகக் கண்டித்தார். 39 சாட்சியங்கள் அளிக்கப்பட்டபோதும், அவர்கள் எல்லோருமே பல மாநிலங்களிலிருந்து வந்த ஹோம் கார்டுகள் போன்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அரசுக்கு சாதகமாகவே இருப்பார்கள். ஆகவே, குற்றம் சுமத்தப்பட்ட சுதீர் உட்பட ஒன்பது பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

சுதீர் தரப்பு வழக்குரைஞர் லிங்காயத் கூறும்போது, சுதீர் தவாலேவின் சொந்த எழுத்துக்களையே கணக்கில் கொள்ள வேண்டும். நக்சலைட் இயக்க நிறுவனர் சாரு மசூம்தார் எழுதிய நூல்கள், அவருடைய நூல்களின் மொழியாக்க நூல்களான சுனிதி குமார் கோஷ் (அண்மையில் மறைந்தவர்) நூல்கள் மற்றும அருந்ததி ராய் நூல்களைக் கைப்பற்றிக் குற்றவாளி என்று கூறுவதைப்பற்றி நீதிபதி கூறும்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தின்படிதான் செயல்பட்டுள்ளனர் என்று கூறி உள்ளார்.

தமிழ் ஓவியா said...

அருண் பெரைரா,வெர்னான் கான்சால்வ்ஸ்,சிறீதர் ஆகியோருக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் சுரேந்திர காட்லிங் கூறும்போது, சுதீரைத் தவிர மற்றவர்கள் மாநில அரசைக்கண்டித்து பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். அதனாலேயே அவர்கள் மீது பொய் வழக்குகளைப்போட்டு பல ஆண்டுகள் சிறையில் அடைத்தது. மகாராட்டிர அரசு இதுபோன்ற அதிருப்தியாளர்களை தீவிரவாதிகள் என்றுகூறி அவர்களை சிறையில் அடைப்பதை வழக்கமாகக் கொண் டுள்ளது.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் திணிக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் பினாயக் சென் வழக்கைப்போன்றே சுதீர் தவாலே சிறையிலடைக்கப் பட்ட சம்பவமும் உள்ளது. டாக்டர் சென் வழக்கு வெளி உலகுக்கு தெரிய வந்தபோதுதான் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டில் ஏராளமானவர்கள் சிறையில் அடைக் கப்பட்ட தகவல் வெளியானது. ரிபப்ளிகன் பேந்தர் (Republican Panther-RP) என்கிற குடியரசு சிறுத்தைகள் அமைப்பை உரு வாக்கியவர்களில் சுதீர் தவாலே ஒருவர் ஆவார்.

ஜாதி அண்டாச்சி சால்வால் (ஒடுக்கப்பட்ட ஜாதியின ருக்கான இயக்கம்) நிறுவியவரும் சுதீர் தவாலே ஆவார். சுதீர் தவாலே 2007இல் மராத்தி மொழியில் மாதமிருமுறை இதழான வித்ரோகி இதழில் வெளி யிட்ட கருத்துக்கள்தான் 2011இல் சிறையில் அடைக்க சான்றாக காவல்துறையால் கொள்ளப்பட்டது.

தமிழ் ஓவியா said...

சுதீர் தவாலே சிறையில் இருந்தபோது, அவரை விடுவிக்கக்கோரிக் குடியரசு சிறுத்தைகள் அமைப்பு வீறுகொண்டு எழுந்தது. அந்த அமைப்புக்கு ஜாதி, வகுப்பு பிரச்சினைகள் முதன்மையானதாக இருந்தன. கைர்லாஞ்ச் பகுதியில் போட்மாங்கே குடும்பத்தினர் அதிகப்படியாக பாதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து தொண்டர்களையும், தலைவர் களையும் ஒன்றுபட்டு போராடத் தூண்டுதலாக இருந்தவர் சுதீர் தவாலே ஆவார்.

குடியரசு சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சரத் கெய்க்வாட் கூறும்போது, மாநில அரசுக்கு சுதீர்தவாலேவை சிறைக்குள் அடைத் திட இதுபோன்ற காரணங்களே போதுமானதாக இருந்தன. ஜாதீயக்கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், மாநிலத்தில் சமுதாயத்தில் சம அந்தஸ்து பெறவேண்டும் என்பதற்கும் சுதீர்தவாலே ஒரு அமைப்பை உருவாக்க விரும்பினார். இது மகாராட்டிரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுக்கீட்டில் அரசியலில் ஈடுபடுவதைக்காட்டிலும் மாறுபாடான தாக இருந்தது. அந்த இலக்கை அவர் எட்டுவதற்குள் மாநிலம் முழுக்க அவர் கருத்து பரவிவிடும் என்கிற முடிவுக்கு அரசு வந்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார்.

தவாலே கைதுக்குப்பிறகு குடியரசு சிறுத்தைகள் அமைப்பு அதன் வீச்சை சற்று இழந்துவிட்டது. அதன்பிறகு, தாழ்த்தப்பட்ட சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் உண்மை அறியும் குழுவை அமைத்து, அவன் மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராடிவந்தது. மராத்தியர்களால் அகமத்நகர் மாவட்டத்தில் அச்சிறுவன் கொல்லப் பட்ட வழக்கைக் காவல்துறை விபத்து வழக்காக மாற்ற முயன்றுவந்தது.

அவனுடைய குடும்பத்தாரும் அச்சத்துடன் உயிர்பயத்தில் இருக்கும் நிலை ஏற் பட்டது. நான்கு அய்ந்து மாதங்களில் மகாராட்டிரத்தில் சட்டமன்றத்துக்கு தேர்தல் வர உள்ளது. சுதீர் தவாலே விடுதலையைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அச்சுறுத்தல்கள்குறித்து பிரச்சாரங்கள் சூடுபிடிக்கும் என்று குடியரசு சிறுத்தைகள் அமைப் பின் பிரமுகர் சரத் கெய்க்வாட் கூறினார்.

-தி நியூஸ் மினிட்.காம்

Read more: http://viduthalai.in/page5/81272.html#ixzz33LDlSYai

தமிழ் ஓவியா said...


இவர்தான் மோடி


குஜராத்தில், குஜராத்தி மொழியை அந்த மாநில மக்களிடம் இருந்து அகற்றி குஜராத் மக்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை நீக்கி, இந்துத்துவா மாநிலமாக மாற்றி இந்தியைத் திணித்த பெருமை, தற்போதைய மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடியையே சாரும்.

தன் தாய்மொழி மீது அளவு கடந்த பற்றுக் கொண்டு குஜராத்தியில் கையொப்பமிட்டு அதன் மூலம் தாய்மொழிப் பற்றை மக்களிடம் ஊக்குவித்த காந்திக்கு கிடைத்த பரிசு. காலப்போக்கில் இப்படிப்பட்ட விசத்தை கலந்தது கூட அந்த மக்களுக்கு தெரியாது. தங்களது தாய்மொழி இந்தி தான் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி பட்ட ஒரு தந்திரக்காரர் தான் மோடி. இந்த மோடித்துவா பற்றி தான் முற்போக்காளர்கள் கூறுகிறார்கள். மோடித்துவா மெல்ல மெல்ல தான் தன் வேலையை காட்ட ஆரம்பிக்கும். அதை உணரமுடியாது போனால் நமக்கும் அதே கதிதான். புரிந்துகொண்டவர்கள் தப்பித்துகொள்வார்கள்.

- பரணீதரன் கரியபெருமாள்

Read more: http://viduthalai.in/page5/81273.html#ixzz33LDyu0QF

தமிழ் ஓவியா said...

திருக்குறளும் - பார்ப்பனர்களும்!


- பெரும்புலவர் சீனிவாசன்

திருக்குறளை பிதற்றல் நூல் என்று சொன்னவர்களும் உண்டு. அவர்கள் யார்? எத்தகையவர்? என்பதை விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

திருக்குறளின் பெருமை

திருக்குறள் நூல் உலகத்தார் அனைவ ராலும் போற்றிப் புகழப்படுகிறது. பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலா வருகிறது. நடுவு நிலையாக நீதி களைக் கூறுகிறது. தவறான பழக்க வழக் கங்களைக் கண்டிக்கிறது. உலகத்திற்கே பொதுவான நீதிகளைக் கூறுவதன்றி ஒரு நாட்டுக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு பிரி வினர்க்கோ தனித்து நீதி கூறப்படுவ தில்லை.

உலகு என்னும் சொல் சுமார் அய்ம்பது இடங்களுக்கு மேல் இந்நூலில் கையாளப்படுகிறது. தமிழ் என்றோ தமிழ்நாடு என்றோ சொல்லப்படுவதாக இந்நூலில் எங்கும் காணமுடியாது.

திருக்குறள் ஆட்சி

திருக்குறளை எடுத்தாளாத புலவர் களே இல்லை எனக்கூறலாம். புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், மணி மேகலை முதலிய பண்டைய நூல்களில் திருக்குறளைப் பொன்னே போல் எடுத்துப் பொதிந்து வைத்துள்ளனர் -மணிமேகலையில்.

தெய்வந்தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழையெனப்

பொய்யில் புலவர் பொருளுரை தேறாய்
எனத் திருக்குறளை எடுத்தாளுவ தோடு வள்ளுவரைப் பொய்யில் புலவர் என்றும், பொருள் பொதித்த உரை என்றும் போற்றப்பட்டுள்ளமை காண்க.

கம்பர் சுமார் 500 குறட்பாக்களைத் தம் நூலில் அமைத்துப் பாடியுள்ளார். சில இடங்களில் குறளுக்கும் புத்துரையும் கூறியுள்ளார். மகாவித்துவான் ச.தண்ட பாணி தேசிகர் அவர்களால் இது தனி நூலாக வெளிவந்துள்ளது.

இடைக்காலத்தார் செய்த கேடு

இவ்வளவு பெருமை வாய்ந்த குறள் நூலுக்கு இடைக்காலத்தார் சிலர் பல கேடுகளைப் புரிந்துள்ளனர். அவர்களுள் பரிமேலழகரும் ஒருவர். பரிமேலழகரை யான் மதித்து வருகிறேன். அவர் உரை போன்று எழுதுவது அரிது. இருப்பினும் பரிமேலழகர் வட மொழியாளருக்கு அடிமையாகி ஒரு பத்து விழுக்காடு குறளுக்கு மாறான கருத்துகளைத் தெரிவித் துள்ளார். தாம் எழுதும் நூல் அவதாரி கையில் அறத்திற்கு விளக்கம் கூற வந்தவர்.

அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித் தலுமாம்

என எழுதியுள்ளார், மனு என்ன யாவ ருக்கும் பொதுவான நூலா? பார்ப்பனர் களுக்கு மட்டும் சாதகமான நூலாகும். நெருப்பில் பொசுக்கப்பட வேண்டிய நூலாகும். அதனாலன்றோ மனோன் மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள்.

வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ, மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி?

என்று கூறினார், மனுநூலைப் படிப் பார்களோ என்னாமல் நினைப்பார்களோ என வினவினார். நினைத்தாலே மனம் கெட்டுப்போகும் எனக்குறிப்பிட்டார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்னும் குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகர் எப்படித்தான் மனுநூலை ஏற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. மேலும் வள்ளுவர் வடநூல் முறையை உட்கொண்டு இவ்வாறு கூறினார் எனப் பலவிடங்களில் குறிப்பிடுகிறார்.

கீழ்க்காணும் எண்கள் உள்ள குறட் பாக்களின் உரையை நோக்குக. 434, 501, 648, 924, 993 காமத்துப்பால் அவதாரிகை, 1330 ஆக 7 இடங்கள்.

சில இடங்களில், அரசன் புரோகிதர் களைத் துணையாகக் கொள்ள வேண்டும் - என எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பவர்களாம். இதுவும் தேவையற்ற உரையாகும். கீழ்க்காணும் எண்கள் உள்ள குறட்பா உரைகளைக் காண்க.


தமிழ் ஓவியா said...

442, 45 அதி - அவதாரிகை, 501

முதலில் புரோகிதர்களை நாட்டை விட்டு ஒழியுங்கள், அவர்களால் நாடு கெட்டது போதும்

- விவேகானந்தர் வாக்கு.

இவை போன்ற இடங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பிற குறட்பாக்களுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையைக் கற்போமானால் திருவள்ளுவருடைய உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொள்ள முடியும்.

முற்காலத்தில் நூலுக்கு அரங்கேற்றம் என வைத்துப் பல புலவர்கள் முன்னி லையில் நூலை எடுத்துக் கூற வேண்டும். அவைப் புலவோர் குற்றம் கண்டு கூறு வாராயின் நூலாசிரியர் அவற்றைத் திருத் திக் கொள்ளுதல் வேண்டும் இல்லையேல் சமாதானம் கூற வேண்டும் அதன் பின்னரே நூல் வெளிவரும். அதுபோன்று உரைக்கும் அரங்கேற்றம் வைத்திருப்பார் களானால் மேற்சொல்லப்பட்ட குறை களெல்லாம் நீக்கப்பட்டிருக்கும். ஏனோ அவ்வாறு செய்தார்களில்லை.

வைணவ மதத்து ஆழ்வார்கள் பன்னிருவரில் திருமங்கையாழ்வார் என்பவர் ஒருவர். இவர் ஆறு நூல்கள் இயற்றியுள்ளார். அவையாவன:

பெரிய திருமொழி, திருவெழுக் கூற்றிருக்கை, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந் தாண்டகம் சிறிய திருமடல் பெரிய திருமடல் - என்பன வாம்.

இவற்றுள் இறுதியிலுள்ள இரு நூல் களும் அகப்பொருள் நூலாகும். மட லேறுதல் அகப்பொருள் நூலுள் ஒரு துறையாகும்.

அஃதாவது, தலைவியைக் களவுப் புணர்ச்சியில் புணர்ந்து பிரிந்த தலைமகன் தோழியை இரந்தும் தன்குறை நிறைவேறப் பெறாமல் சேட்படுக்கப் பட்டான். பிரிவுத்துயரால் ஆற்றாமை விஞ்சியது. அதனால் நாணம் முதலிய வற்றை விட்டு தலைவியின் வடிவையும், ஊரையும் பேரையும், தனது ஊரையும் பேரையும் ஒரு படத்தில் எழுதி, அச்சித் திரப் படத்தைக் கையிற்கொண்டு, பனை மடலினால் ஒரு குதிரை உருவம் செய் வித்து, அதன்மீதுதான் ஏறிக்கொண்டு, அதனைப்பிறரால் இழுக்கச் செய்து வீதிவழியே பலருங்கூடும் பொது இடங்களில் சுற்றி வருவான்.

இக்கடுந்தொழிலைக் கண்ட உற்றார் உறவினர் மனமிரங்கி அத்தலைவியை தலைவனுக்கு மணம் செய்து கொடுப்பர்.

ஆடவர்கள் இவ்வாறு மடலேறலாமே யன்றி, பெண்கள் எவ்வளவு காமம் மீதூர்ந்தாலும் மடலேறுதல் கூடாது என தமிழிலக்கணம் விதித்துக் கூறுகிறது.
எத்திசை மருங்கினும் மகடூஉ மடன் மேற் பொற்புடை நெறிமை இன்மையான (தொல் - 981)
எண்ணில் காமம் எரிப்பினும் மடல் மேற் செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணலது இல்லையே
(சீவகசிந்தாமணி)
மேற்கண்ட கருத்தை ஒட்டியே திரு வள்ளுவரும்
கடலன்ன காமம் உழந்தும் மடலே றாப் பெண்ணின் பெருந்தக்க தில்
(குறள் - 1137)

தமிழ் ஓவியா said...


கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர் தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல, மிக்க தகுதியினையுடைய பிறப்பு உலகத்து இல்லை.

(பரிமேலழகர்)

இக்குறட்பாவின் கருத்தைத் திருமங்கை ஆழ்வார் தமது பெரிய திருமடல் என்னும் நூலில் பொன்னே போல் போற் றிப்பதிய வைத்துள்ளார். அப்பகுதி யாவது,

- மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர்போல் மன்னும் மடலூ ரார் என்பதோர் வாசகமும் தென்னு ரையில் கேட்டறிவ துண்டு (கண்ணி - 38, 39)

தென்னுரையில் கேட்டறிவதுண்டு - என்பதற்கு என்ன பொருள்? தென்னாட்டுத் தமிழ் மொழியின் கண் திருவள்ளுவர் கூறியிருப்பதைக் கேட்டு அறிந்ததுண்டு என்பதாம். பெரிய திருமடலில் கூறப் படும் தலைவி வடமொழி கற்ற தலைவி யாவாள். அதனால் கற்றறிந்ததுண்டு எனக் கூறாமல் கேட்டறிவதுண்டு எனக் கூறினாள்.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு பலர் உரை எழுதியுள்ளனர். முழுதும் மணிப் பிரவாள நடையே. மணியும் முத்தும் கலந்ததுபோலத் தமிழும் வடமொழியும் கலந்து எழுதிய நடையே மணிப்பிரவாள நடையாம். இக்கலப்பு நடையைப் பரிதிமாற் கலைஞர் ஆபாச நடை என ஒதுக்குவார்.

பெரியவாச்சான் பிள்ளை உரை

பெரியவாச்சான் பிள்ளை என்பவர் ஒரு வைணவப் பார்ப்பனர் (அய்யங்கார்) நாலாயிரம் பாடல்களுக்கும் மணிப்பிர வாள நடையில் இவர் ஒருவரே உரையெழுதியவர். மற்றையோர் சில சில பகுதிகளுக்கே உரை எழுதினர். சோழ நாட்டில் திருப்பனந்தாளுக்கு அண்மை யில் உள்ள சேய்ஞலூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிள்ளை என்பது அவருக்குக் கொடுத்த பட்டம் போலும்.

இவர் மேற்கண்ட பெரிய திருமடல் கண்ணிக்கு உரை கூறும் போது,
தென்னுரையில் கேட்டறிவதுண்டு - என்பதற்கு மிலேச்சசாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு - என எழுதியுள்ளார். என்னே கொடுமை! இதை எப்படித் தாங்கிக்கொள்வது!

தமிழ்மொழி மிலேச்ச சாதி மொழி யாம். திருக்குறள் மிலேச்ச சாதி நூலாம். மடலேறுதல் பெண்களுக்கு வழக்க மில்லை என விதி வகுத்த தொல்காப்பியர் மொழி மிலேச்ச சாதி பிதற்றும் தமிழா கிறது.

திருக்குறளின்மீது இவர்களுக்கு ஏன் காழ்ப்பு உணர்ச்சி தோன்றுகிறது? மனு நீதி போலத்திருக்குறள் அவர்களுக்குச் சார் பாக நீதி கூறவில்லை. பல குறட் பாக்களில் அவர்களுக்கு எதிர்ப்பாகவும் கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் - 249)

இக்குறட்பாவை அவர்கள் ஏற் பார்களா? பிறர் பொருளால் கேள்வி செய்தே தம் வயிற்றை வளர்ப்பவர்கள் எப்படி ஏற்பார்கள்? இதனுடைய சூதினை அறியாத நம் பண்டைய அரசர்களும் ஏமாந்து பல வேள்விகளைச் செய்து பெயர் பெற்றார்கள் என அறி கிறோம். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் பெயர்களைக் காண்க.

மணிப்பிரவாள நடையில் உரையெழு தும்போது, பல இடங்களில் வேதத்திலி ருந்தும், கீதையிலிருந்தும் மேற்கோள் காட்டி - இவ்வாறு விசேட தருமம் கூறு கிறது எனவும் அடுத்துத் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி - இவ்வாறு சாமானிய தருமம் கூறுகிறது எனவும் எழுதியுள்ளார்கள். வேதம், கீதை தெய்வம் கூறியதாம்.

வேதத்தைப்பற்றி வள்ளலார் கூறி யதைக் கீழ்க்காண்க.

வேதாந்தம் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் வேதாந்தத்தின் விளைவு அறியீர் - சூதாகச் சொன்னவலால் உண்மை நெறிதோன்றவிலை என்ன பயனோ இவை.

கீதையைப் பற்றி சிவஞான சித்தியார் கூறுவதைக் கீழ்க்காண்க.

பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக் கூர்த்த அம்பாலே எய்து கொன்றரசாளேன் என்ன தேர்த் தனிலிருந்து மாயை செய்து மால்கொல்லச் செப்பும் வார்த்தை நூலாக்கிக் கொண்டாய்...

(அருணந்தி சிவாச்சாரியார்)

வைணவர்களில் தமிழராகப் பிறந்தவர்களும், இச்சூதுவாதினைப் புரிந்து கொள்ளாமல் தம் மொழியை விட வடமொழி மேலானது எனவும், வட மொழியாளர் தெய்வப்பிறப்பினர் எனவும் நம்பி அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். நம்மையும் நமது நூலையும் இகழ்ந்து பேசியும் எழுதியும் வருபவர்களைப் புகழ்ந்து பேசியும் எழுதியும் வரு கிறார்கள்.

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று கூறிய பாரதியார் பாவடியை நோக்குக.

திருவள்ளுவரும், புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை (குறள் - 966)

என்று கூறினார். மானம் இல்லாதவரே தம்மை இகழ்வார் பின் சென்று அடிமை களாயிருப்பர். அதனால் புகழும் உண் டாகாது எனக்கூறினார். புரட்சிக்கவிஞரும்,

அறையுமிவை பெருந்தமிழர் ஆழ்ந்த நெடும் தூக்கத்தின் பயனே அன்றோ?

எனக்கூறி வருந்தினார்.

இனியாவது யாருக்கும் அடிமை யாகாமல் விழிப்பு நிலையோடு வாழ முயல்வோமாக.

பெரியாரும் திருக்குறளும்

திருக்குறள் நெடுங்காலமாக புலவர் கள் மத்தியிலேயே வழங்கி வந்தது. பாமரர்கள் மத்தியிலேயே வழங்கி வந்தது. பாமரர்கள் மத்தியிலும் அந்நூல் சென்று சேரவேண்டும் என்னும் எண்ணம் முதன்முதலில் பெரியார் அவர்களுக்கே உதித்தது. அதற்காகப் பல மாநாடுகள் கூட்டித் திருக்குறளை எங்கும் பரவச் செய்தார்.

குறளுக்குப் பண்டையோர் தவறான பொருள் செய்திருப்பரேல் அவற்றையெல்லாம் மாற்றி உண்மைப் பொருளைக்கூறி தமிழர்கள் மனத்தில் பதியவைத்தார். இன்றைய தினம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறு குழந்தைகளிடம் கேட்டாலும் இரண்டு திருக்குறளாவது சொல்லும், இவ்வாறு திருக்குறள் நூல் பட்டிதொட்டியெங்கும் பரவி வருவது தமிழ்ப் பகைவர்களுக்குப் பிடிக்குமா? அதனால் அந்நூலுக்கு மறைமுகமாக பல மாசுகளை உண்டாக்கி வந்தனர்.

ஆகவே திருக்குறள் எங்கும் பரவுவதற்கு முதற்காரணமாய் இருந்த பெரியார் அவர்களை நாம் என்றும் மறவாது நினைவு கூர்வோமாக!

Read more: http://viduthalai.in/page6/81275.html#ixzz33LEDepKL

தமிழ் ஓவியா said...


சர்க்கரை வியாதிக்கு இயற்கை தரும் நிவாரணம்


இரண்டாம் ரக சர்க்கரைவியாதி மற்றும் இன்சுலின் தடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலத்தில் இருந்து பெறப்படும் மூலக்கூறு ஒன்று பெரும் உதவி புரியக்கூடும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மூலக்கூறு சர்க்கரை வியாதிஉடையவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டனர். இந்தஇயற்கை மூலக்கூறுக்கு அவர்கள்டிஎக்ஸ்(பிடிஎக்ஸ்) என்று பெயரிட்டுள்ளனர்.

மனித தசைஉயிரணுக்களில் இண்டர்லூகின் 6 (ஐஎல்-6) எனப்படும் வேதியல் பொருளை உற்பத்தி செய்து வெளியில் பரவவிடுவது இதன் முக்கிய செயல்களில்ஒன்றாக இருக்கும். இந்த ஐஎல்- 6 உற்பத்தி அதிகரிப்பு முக்கியமானதாகும்.

இது ரத்த ஓட்டத்தில் கலந்தால், ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகளில் உதவி புரிகிறது.முதலாவதாக, குளுகோஸ் உற்பத்தியைக் குறைக்குமாறு இது கல்லீரலுக்கு உத்தரவிடுகிறது.

இரண்டாவதாக தசை உயிரணுக்கள் பயன்படுத்தும் குளுகோஸின் அளவை அதிகரிக்க வேண்டுமென்று நேரடியாக தசை உயிரணுக்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த இரண்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுநிறைவேற்றப்பட்டால், ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவுகுறைந்து விடும்.

இது இரண்டாம் ரக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும். உடற்பயிற்சியால் உருவாகும் விளைவுகளை இந்த இயற்கை மூலக்கூறு உருவாக்குகிறது என்ற போதும், உடற்பயிற்சிக்கு இது பதிலியாகவோ, மாற்றாகவோ இருக்க முடியாது என்று பேராசிரியர் ஆண்ட்ரே மாரெட் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page6/81274.html#ixzz33LEc1XEc

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களின் அகங்காரம் அடங்கி விட்டதா?

The Times of India (28.8.2010) ஒரு தலைப்புச் செய்தியை வெளியிட்டு இருந்தது. Ignored by Political Parties and Denies Welfare, Large sections of a Traditconally Elite in Poverty Brahmins on the Margins, Fight for survival என்று தலைப்பிட்டிருந்தது.

படித்தவர்கள் என்று கருதப்படக் கூடிய பார்ப்பனர்கள் இன்றைக்கு ஏழ்மையில் உழலுகிறார்கள். அரசியல் கட்சிகளால் உதாசினப்படுத்தப்படு கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

இதுபற்றி திருவாளர் சோ ராமசாமி யிடம் கேள்வி எழுப்பிய போது Brahmins are not wanted in Tamilnadu Beyond that I Do not want to comment என்று ஆதங்கத் தில் வெறும் போதிய சொற்களால் பதில் சொன்னார்.

பார்ப்பனர்கள் தமிழ் நாட் மக்களால் விரும்பப்பட்டவில்லை; இதற்குமேல் எதையும் சொல்ல நான் விரும்பவில்லை என்று சலித்துக் கொண்டார்.

தன் பக்கம் நியாயம் ஏதாவது இருந்தால் எகிறிப் பேசி இருப்பார்கள். இந்தப் பிரத்தியட்ச நிலையைத் தன் சாமர்த்தியமான லியாக்கியானத்தால் தூக்கி நிறுத்தக் கூடியவர்தான் ஆனாலும் அதற்குரிய நியாயமான அறிவுப் பூர்வ மான சங்கதிகள் சரக்குகள் அவர் வசம் இல்லை. எனவே தான் அவ்வாறு அவர் கூற நேர்ந்தது.

சோவின் இந்தப் பதிலைப்பற்றி வாச கர் ஒருவர் கல்கிக்கு எழுதிக் கேட்டார்.

கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்று துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி.

கல்கி பதில்: பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது.

சமுதாய நீரோட்டத் தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில் அவர்களை ஒதுக்கு வதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுத தோன்றியிரு ப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப் பிரிவினை ஆபத்து.
(கல்கி 19.9.2010 பக்கம் 30)

சோவின் பதிலுக்கும் கல்கியின் பதிலுக்கு இடையில் நெளியும் வேறு பாட்டைக் கவனிக்கவேண்டும்.

பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் விரும்பப்படவில்லை என்பது சோவின் அருள்வாக்கு. என்றால் அப்படியெல்லாம் அவர் வெறுக்கப்படவில்லை; அவர் களின் அங்காரம் என்றோ மறைந்து விட் டது என்று கல்கி மிகவும் விழிப்பாகப் பதில் கூறுகிறது.

பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப் பட்டு விட்டனர் என்று சொன்னால் அதனுடைய பார தூர விளைவு வேறு விதமாப் போய் விடுமே!

அதே நேரத்தில் கல்கிக்கு நமது கேள்விகள் உண்டு. பார்ப்பனர்கள் உயர் ஜாதியிரன் என்ற அகங்காரம் மறைந்து விட்டது உண்மையா?

அனைத்து ஜாதியினக்கும் அர்ச்சகர் உரிமையுண்டு என்று ஒரு சட்டமன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் செய்தால் சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லுகிறார்களே பார்ப் பனர்கள் இதுதான் அவர்கள் ஜாதி ஆணவத்திலிருந்து அகன்று விட்டனர் என்பதற்காக அடையாளமா?

சென்னை நாரதகானா சபையில் தாம்ப் ராஸ் எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந் தது என்ன? ஆண்டவனுக்கு மேல் பிரா மணர் என்று பேசினாரா இல்லையா?

ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட் டம் என்ற பெயரால் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதன் தாத்பரியம் என்ன? தங்களை தூர ஜாதி - இரு பிறவியாளர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்வது தானே!

திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ எடையில் பூணூல் செய்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அணிவித்தாரே - இது கடவுளேயே தங்கள் பிராமணர் ஜாதிக்குள் அடைக்கும் ஆவ ணம் அல்லவா டி.எம். கிருஷ்ணா இந்து ஏட்டில் குறிப்பிட்டு இருப்பதை வரவேற் கிறோம் - ஏன் பாராட்டவும்கூடச் செய்வோம்.

Read more: http://viduthalai.in/page7/81277.html#ixzz33LEsjNYc

தமிழ் ஓவியா said...


அபாயம்தலைக்குமேலே!


மேற்கு அண்டார்க்டிக்கா பனிப்படுகைகள் நொறுங்கி வருகின்றன. அபாயம் வெகு தொலை வில் இல்லை. 1973 முதல் இந்த கேள்வி எழுப்பப் பட்டு வருகிறது. மேற்கு அண்டார்க்டிக்காவில் உள்ள பனிப்பாறைகளின் தொடர்ச்சி சிதைகிறதா என்ற கேள்வியை ஜியோபிசிக்கல் ரிசர்ச் இதழ் இந்த கேள்வியைஎழுப்பியது.

இது பற்றி ஆராய்ச் சியாளர்களிடம் முணுமுணுப்பு இருந்தது. அண்மையில் வெளியான இரு ஆய்வு அறிக் கைகள் இந்த கேள்விக்கு திட்டமாக ஆம் சிதைகிறது என்று கூறியுள்ளன. இவர்கள் ஆறு பனிப்படிவங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.

இவை ஒட்டு மொத்தமாக உருகி விட்டால் கடல்மட்டத்தின் உயரம் சுமார் 1.2 மீட்டர்கள் உயரும் என்றும் அந்த அறிக்கையில் கூறுகிறது. 2100ஆம் ஆண்டில் கடல்மட்ட உயர்வு குறித்து சர்வதேச பருவநிலைமாற்றகுழு நிர்ணயித்த அளவைக்காட்டிலும் இது இரண்டு மடங்காகும்.

இது போன்ற அபாயமான விளைவுகளை இந்த அறிக்கை கூறவில்லை என்ற போதும், அவர்கள் கூறும்தகவல் கவலை அளிப்பதாகும். பைன் தீவுகள் பனிப்படிவம் கடலடி பனிப்பாறைகளோடு ஒன்றியிருந்த பகுதி கடலுக்குள் 1992 முதல் 2011ம் ஆண்டுக்குள் 31 கி.மீ. சுருங்கி விட்டது என்றும் த்வைட்ஸ் பனிப்படிவங்கள் 14 கிலோமீட்டர் பின் வாங்கியுள்ளன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. தரையோடு இணையும் பகுதி சுருங்குகிறது என்றால் அவை ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கும்.

இப்பனிப்படிவங்கள் திரும்பப்பெற முடியாத இழப்பு என்று பனிப்படிவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இது இழப்பு மட்டும் அல்ல. எதிர்காலத்துக்கு விடுக்கப்படும் அபாயமணி என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page7/81276.html#ixzz33LF0lKWI

தமிழ் ஓவியா said...


எங்க முத்து மாரியம்மா...


- இரா. கண்ணிமை

மாரியம்மனை தமிழ்நாட்டின் கிராம தேவியாக்கி - அவளின் வரலாறு தெரியா விட்டாலும், ஆடிப்பாடி ஆர்ப்பாட்டமாக அவளுக்கு விழா கொண்டாடி வருவதை எங்கும் காணலாம்.

மாரியம்மாளின் வரலாற்றை பல் வேறாக சொல்வதில் இதுவும் ஒன்று.

கருவூர் பெரும் பறையன் மகள் ஆதி என்பவளை பேராழி முனியின் மகனான பகவன் என்பான் மனைவியாக்கிக் கொண் டானாம். பகவன் - சாதியில் பார்ப்பானாம், ஆதி என்பவள் பறைச்சி யுமாதலால் - இவ்விருவரும் மற்றவர் களால் புறக் கணிக்கப்பட்டு ஊரிலே பிச்சையிரந் துண்டு நாட்டிலே வாழ்ந்தார்களாம். இவர்களுக்கு நான்கு பெண்களும், மூன்று ஆண்களும் பிறந்தார்கள் இவர்கள் உப்பை, உறுவை அவ்வை, வள்ளி, அதிக மான், கபிலர், வள்ளுவர் என்றழைக்க பட்டனர்.

உப்பை: ஊற்றுக்காட்டிலே வண்ணார் வளர்த்தனர். இவளே எங்கும் கிராம தேவதையாய் போற்றி வணங்கப்படும் தற்கால மாரியம்மன்.

உறுவை: இவளை சாணார் வளர்த் தனர். அவ்வை: இவள் நரப்புச் சேரியில் அல்லது சேரி நரப்பில் நரப்புக் கருவி யோர் சேரி பாணரிடத்தில் வளர்ந்தாள்.

வள்ளி: இவள் மலைச்சாரலில் குறவனிடத்தில் வளர்ந்தாள்.

அதிகமான்: ஆரூரிலே அரசனாயிருந்த அதிகமான் வீட்டில் வளர்ந்தான்.

கபிலன்: ஆரூரிலே பார்ப்பனர் வீட்டில் வளர்ந்தான்.

வள்ளுவர்: தொண்டை மண்டலத்து மயிலாப்பூரில் - பறையரிடத்தில் வளர்க் கப்பட்டான்.

இவ்வேழு பேரில் ஆதி என்னும் பறைச்சி வயிற்றில் முதல் பிறந்ததும் வண்ணார் வீட்டில் வளர்ந்தவளுமான உப்பை என்பவள் பறைச்சி வயிற்றில் பிறந்ததால் வெட்டியாரப் பறையனுக்கே மணமுடித்து கொடுத்தார்.

அக்காலத்தில் உப்பைக்கு வைசூரி நோய் கண்டு உடலெங்கும் புண்ணாகி நாற்றமெடுத்து ஈக்கள் மொய்த்தன.

அவளின் கணவனான வெட்டியான் வறிய நிலையில் இருந்ததால் கட்ட ஆடைகூட இல்லாதவளாய் வேப்பந் தழைகளை அவளுக்குக் கீழே பரப்பி - அதையே போர்வையாய் மூடி - பாது காத்து ஊர் ஊராய் சுற்றி பிச்சையெடுத்து வாழ்ந்தான்.

அவளின் நோய் தெளிந்த பின் இருவ ரும் பிச்சைக்குப் போகும் போது இவள் புண்களில் மொய்க்கிற ஈக்களின் தொல்லை தாங்காமல் வேப்பந் தழை களாலேயே அவற்றை ஓட்டி - விசிறிக் கொண்டே வீடு வீடாகப் பிச்சையெடுத்து காலத்தைக் கழித்தனர். பிறகு அந்நோ யாலேயே அவள் இறந்து போனாள். ஊரார் அவளை அம்மை நோய் கண்ட வளானதால், உப்பை என்னும் பெயரை மாற்றி மாரியம்மன் என்ற பெயரைச் சூட்டி சமாதி கட்டி வைத்து கிராம தேவதையாக வணங்கி னார்கள். இப் பழக்கம் எனும் நோய் இன்றைய வரையில் தொடர்கிறது.

உப்பை என்ற மாரியம்மனின் வரலாறு உண்மையென்றால் நோய் வாய்ப்பட்டு முடிந்து போன ஒரு மனித பிறவியை தேவியாக்கி வணங்குவதால் எந்த நன்மையாவது கிடைக்குமா? இதில் என்ன நியாயம் உண்டு? இது அறியாமையும் அஞ்ஞானமும் அல்லவா?

கடந்த காலங்களில் மனிதர்க்குள் கண்ட கொடிய நோய்களையும் எல்லாம் கடவுளா கவே நம்பி - பின்னும் வராமலிருக்க வணங்கினார்கள் வாந்தி, பேதி, காலரா நோய்கள் அனைத்தும் காளிதேவி என நம்பினார்கள். ஆங்கில மருத்துவத்தில் ஆத்தா வார்த்தது அல்ல, ஆத்தா ஊத்தியது அல்ல என்பதுதெளிவாகி விட்டதே.

இந்த மாரியம்மன் அல்லாமல் பரமேஸ்வரி- மகேஸ்வரன் மனைவி, மனோன்மணி - சதாசிவன் மனைவி,

ருக்மணி - கிருஷ்ணன் மனைவி,

சீதை - ராமன் மனைவி,

ராதை - கிருஷ்ணன் வைப்பாட்டி,

காமாட்சி - ஏகாம்பரன் மனைவி,

விசாலாட்சி - விசுவநாதன் மனைவி,

அழகம்மை - கச்சாயை மனைவி,

உண்ணாமுலை - அருணாசலம் மனைவி,

மீனாட்சி - சொக்கநாதன் மனைவி,

தயிலி - வைத்தி மனைவி,

அலமேலு - வெங்கடாசலம் மனைவி,

பெருந்தேவி - வரதராசன் மனைவி,

கனகவல்லி - வீரராகவன் மனைவி,

ஆகியோரும் பொன்னி, குள்ளி, சங்தி, ஷீரி, நாகி, காளி, பாலி, கோலி, சீயான் முதலிய புது தேவதைகளையும் கன்னிமார் என்னும் தேவியர்களையும் - மக்கள் கண்மூடித்தனமாய் வணங்குகிறார்கள்.

இதைப்பற்றி அகத்தியர் சொல்வதைக் காணுங்கள்.

முகிவாகச் செய்துவிட்டேன்
மைந்தா, மைந்தா!
முப்பதுக்குள் ளடக்கிவிட்டேன்
முன்னூல் பார்த்து
அகிலமதில் விரித்துவிட்டேன்
இந்த நூலை;
யார்தானு மெந்தனைப்போ
லறைய மாட்டார்
பகிரதியுங் கலைமகளும்
வாணி தானும்
பார்வதியு மறுமுகனும்
பல பேர் தானும்
சகியாத மூர்த்திகளா
யிவர்க டானும்
சக்திசிவ விருப்பிடமோ
சாற்று வீரே!

மேற்கூறிய தேவர்களும் தேவியர் களும் வணக்கத்திற்குரியவர்கள். கடவு ளர்கள் அல்ல என்கிறார் அகத்தியர்.

சூத்திரச்சி மாரியம்மாளின் சுயமரி யாதை சொல்லி விட்டோம். இதைக்கேட்ட பிறகு எங்க முத்து மாரியம்மா! முத்து மாரியம்மா! எனப்பாடிப் பாடி -மாரியம் மனுக்கு கூழ் ஊற்றப் போகிறீர்களா?

Read more: http://viduthalai.in/page8/81278.html#ixzz33LFP0RUT

தமிழ் ஓவியா said...

108 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?

25.2.2011 அன்று கோவையிலுள்ள கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் எனும் சிறந்த விருதினை மருத்துவர் பக்தவத்சலம் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

அதே விழாவில் இன்னொரு அறிஞருக்கும் விருது வழங்கப்பட்டது.அவருடைய பெயர் டாக்டர் வெங்கட் செங்கவல்லி. அய்தராபாத்தைச் சேர்ந்த இவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றி ஆராய்ந்து பல பட்டங்களைப் பெற்றவர். அய்தராபாத்தில் “Emergency Management And Research Institute” என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றி வருகிறார்.

அவ்விழாவில் பேசிய வெங்கட் செங்கவல்லி, நான் அய்தராபாத்தில் நெருக்கடி நிலையில் நம் ஆளுமைத் திறன் _ ஆராய்ச்சி என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருங்காலத்தில் எனக்கு, ஆம்புலன்சு வண்டிகளை நெருக்கடி நிலையில் எப்படி விரைவாகப் பயன்படுத்திக் கொள்வது, உயிருக்குப் போராடுபவர்களைப் பாதுகாப்பாக உடனடியாக எப்படி மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பது என்பதை ஆராய வேண்டும் என்று தோன்றியது. தீயணைப்பு நிலையத்திற்கு நிலையான ஒரு தொலைப்பேசி எண் இருப்பதைப் போல, அவசர போலீஸ் உதவிக்கு ஒரு எண் இருப்பதைப் போல ஆம்புலன்சுக்கும் ஒரு நிலையான எண் வேண்டுமே என்று சிந்தித்தேன். அது இந்தியா முழுமைக்குமான ஒரு பொது எண்ணாக இருக்க வேண்டும். 108 என்ற எண் பொருத்தமானதாக எனக்குத் தோன்றியது. 108 என்ற இந்த எண்ணை அழைத்தால் அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்சு வண்டி முதலுதவி வசதிகளுடன் வந்து நிற்க வேண்டும்.

இது தனியார் துறையில் இடம்பெற இயலாது. தீயணைப்புத் துறையைப் போல அரசாங்கம்தான் இதனை ஏற்று நடத்த வேண்டும். என்று தோன்றியது என்றும் சொல்லும் அவர், திட்டத்தைச் செம்மையாக வரையறைப்படுத்திக் கொண்டு முதலில் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியைப் போய்ப் பார்த்தார். திட்டத்தை நன்கு படித்துப் பார்த்த ஆந்திர முதலமைச்சர், அதனை நடைமுறைப் படுத்துவதென்று முடிவு செய்தார். அடுத்தவாரம் வந்து தம்மைச் சந்திக்குமாறு வெங்கட் செங்கவல்லியிடம் ஆந்திர முதலமைச்சர் கூறியனுப்பி விட்டார். அடுத்த நாள் செங்கவல்லிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டி விமான விபத்தில் காலமாகிவிட்டார்.

மனந்தளராமல் தமது 108 ஆம்புலன்சு திட்டத்தை மராட்டிய முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். சில நாட்களிலேயே மராட்டிய முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது. மராட்டிய முதலமைச்சரின் மனம் ஏற்குமாறு நல்ல முறையில் விளக்கமளித்துவிட்டு வெற்றிப் புன்னகையோடு வெளியில் வந்தார். இன்னும் சில நாட்களில் மராட்டிய மாநிலத்தில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழப் போகிறது என்று ஆவலோடு காத்திருந்தார் வெங்கட் செங்கவல்லி. ஆனால் அவர் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை; மாறாக மராட்டிய முதலமைச்சரையே அங்கு மாற்றிவிட்டார்கள்! இப்போது புதிய முதலமைச்சர்!

மனம் உடைந்துபோன மருத்துவர் எவ்வளவு அருமையான திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறோம்; நடைமுறைக்கு வராமல் காலம் தள்ளிக் கொண்டே போகிறதே என்று வருந்தினார்.

கடைசியாக, இனி நாம் பார்க்க வேண்டிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் என்று எண்ணிய வெங்கட் செங்கவல்லி, அவரிடம் விளக்கியுரைத்துவிட்டால் 108 எனும் இத்திட்டம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்ற நன்னம்பிக்கையோடு கலைஞரைப் பார்த்தார். கலைஞரைக் கவர்ந்தது 108! வெங்கட் செங்கவல்லி வெற்றி பெற்றார்.

கலைஞர் ஆட்சியில், தமிழ்நாட்டில் எண்ணற்றோர் உயிரைக் காப்பாற்றி ஒளியூட்டிய 108 ஆம்புலன்ஸ் வந்தது இப்படித்தான்.

- பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து

தமிழ் ஓவியா said...

அணைத்துக் கொண்டு அல்ல; அணைத்துவிட்டுப் படுங்கள்

நவீன திறன்பேசிகள், குளிகைகள், கையடக்கக் கணினிகள் இன்று பெருகிப் போயுள்ளன. பகலெல்லாம் கட்டிக் கொண்டும், தூக்கிக் கொண்டும் அலைந்தாலும், இரவிலும் அவற்றை அணைத்தே பலர் உறங்குகின்றனர். படுக்கைக்கு அருகிலேயே வைத்து உறங்கும் பழக்கமும் இருக்கிறது. குறுஞ்செய்திக்காகவோ, அல்லது வேறு ஏதேனும் நினைவுறுத்தலுக்காகவோ அடிக்கடி ஒளியைப் பாய்ச்சும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும் என்கிறது ஓர் ஆய்வு.

இரவா, பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் ஆகஆக புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, பொழுது போய்விட்டது. படுக்கப் போ என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. ஆக, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்பு நிற ஒளிதான் படவேண்டும்.

இந்த அமைப்பை திறன்பேசிகள் குளறுபடி செய்கின்றன. அவற்றில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால் இன்னும் இரவு நேரம் வரவில்லை என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்துக்கானது. தூங்கியது போதும் என்று படுக்கையில் இருந்து நம்மை எழுப்பிவிடுவதற்கானது.

எனவே, தொந்தரவு இல்லாத ஆழ்ந்த உறக்கம் கிடைக்க வேண்டும் என்றால் திறன்பேசிகளையும், குளிகைகளையும் அணைத்துவிட்டுப் படுங்கள். இல்லாவிட்டால் கண்ணில் படாமல் தொலைவிலாவது வைத்துவிட்டுப் படுங்கள் என்கிறார் இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த பிரையன் ஸோல்டோவ்ஸ்கி.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள்

அமெரிக்க மண்ணிலே சிகாகோவிலே 1988லே தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் ஆசிரியை சிறப்பாகச் சொல்லிக் கொடுத்தார்.

தமிழ் என்றால் முடியாது என்ற வார்த்தையையே அறியாத அமெரிக்கத் தமிழ் நெப்போலியன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் பாபு அவர்களின் அயராத உழைப்பால் இன்று நானூறுக்கும் மேற்பட்ட ஏழு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. அன்றிருந்த ஆசிரியைகள் கலைச்செல்வி கோபாலன், கண்ணகி விசுவநாதன், சரோ இளங்கோவன் போன்றோரின் ஆர்வத்தாலும், அன்பாலும் குழந்தைகள் மழலைத் தமிழ் பேசிய நிலை மாறி, இன்று அழகிய தமிழ் உச்சரிப்புடன், ஆர்வத்துடன் பேசி, பாடி, நடித்து, பல போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி பொங்குகின்றது. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அய்ந்து வயது சிறுவன் நூறு திருக்குறள்களை ஒப்புவிக்கின்றான். பல சிறுவர்கள், சிறுமியர்கள் 200, 300, 700 என்று ஒப்புவிக்கின்றனர். அவர்களாகவே திருக்குறள் பற்றிக் கதைகள் சொல்கின்றனர்.

இன்று நடந்த ஆண்டு விழாவிலே பல போட்டிகள். முழுவதும் தமிழிலேயே ஆங்கிலம் கலக்காமல் கதை, வார்த்தைகள், பழமொழிப் போட்டிகள், கிராமிய கலை, பண்பாட்டுப் பாடல்கள், பொங்கலின் சிறப்புகள் என்று குழு குழுவாக அவர்கள் அளித்த நிகழ்ச்சிகள் பாராட்டின் உச்சத்தைத் தொட்டன.

இது இல்லினாய் மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் குழந்தைகள் படிப்புத் தேவையில் இணைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகின்றது.

இன்று பல தமிழ்ச் சங்கங்களும் அமெரிக்காவின் அத்துனைப் பெரு நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் சனி, ஞாயிறுகளில் நடப்பதும், குழந்தைகளின் தமிழ் அறிவும், தவறில்லா உச்சரிப்பும் தாத்தா பாட்டிகளைப் பெருமையில் ஆழ்த்தி விடுகின்றன.

- மருத்துவர் சோம.இளங்கோவன்

தமிழ் ஓவியா said...

ஆயிரமாயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம்!

தந்தை பெரியார் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு, பிறந்தது முதல் திராவிடர் கழகத்தவர். பிஞ்சுப் பருவத்திலிருந்தே இயக்கப் பணிகளில் ஈடுபாடு கொண்டு போராட்டங்களில் பங்கேற்றவர்.

புதுமைச் சிந்தனையும், எழுத்தாற்றலும் மிக்கவர். இதழியல் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். 2003-ஆம் ஆண்டு முதல் உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்குப் பொறுப்பேற்றார்.

பின்னர் 2006-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் தமிழரசு இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். எனினும், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில செயலாளராகப் பொறுப்பேற்று பன்னாட்டுத் தொடர்புகளை மேம்படுத்தினார். உண்மையில் தொடர்ந்து கட்டுரைகளை வழங்கிவந்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்கள் குறித்த செம்மொழிச் சிற்பிகள் நூல உருவாக்குவதில் பெரும்பங்காற்றினார்.

பல்வகை ஆற்றலுடன் ஊக்கமிகு உழைப்பை வழங்கிய தி.பெரியார் சாக்ரடீசு சென்னையில் மே 8 அன்று நடைபெற்ற சாலை விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மே 12 மாலையில் அவர் காலமானார். மருத்துவமனையிலும் பெரியார் திடலிலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். பல்வேறு இயக்கத்தவர்களும் உணர்வாளர்களும் பங்கேற்கும் வண்ணம் சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டு, மே 14 அன்று காரைக்குடியில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. அவரது மறைவுக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கை உணர்வுபூர்வமானது. அதில்,

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தைத் தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடீசை (வயது 44) விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாரே!

அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை சாமி.திராவிடமணியும், தாய் ஜெயா அம்மையாரும், வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழீழமும், அவரது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும், இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே! பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே! உன் இழப்பை எப்படி நாங்கள் சரிசெய்வோம்?

எங்கள் இயக்கக் கொள்கை குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே! எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே -எங்கள் கொள்கைத் தங்கமே!

தமிழ் ஓவியா said...


கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து, பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே! உன்னைப் பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!

திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கைப் பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடீசைப் போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே! நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே! எனது மற்றொரு துரைசக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!

எப்படித்தான் தாங்குவதோ, எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதிக் கொள்கைக் குடும்பம், வாழ்விணையர், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது? எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே... அந்தோ!

வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம்! உறுதி கொள்ளுவோம்!!!

புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன், உண்மை இதழின் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன் கி.வீரமணி என்று குறிப்பிட்டுள்ளார்.

எண்ணற்ற புதிய படைப்பாளிகளை உருவாக்கிய அவருக்கு உண்மை வாசகர்களின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்தாலும் ஆசிரியரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் இன்னும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உறுவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் ஆகும்.

தமிழ் ஓவியா said...

கோவில் பிரச்சினைகள்... முடங்கும் நிர்வாகம்!

பக்தியின் பெயரால் ஆங்காங்கே நடந்து வரும் மோசடிகளை அப்போதைக்கப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஏமாறுவது ஏமாற்றப்படுவது என பலவகை மோசடிகள் இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்களாக பக்தியின் பெயரால் நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்தால் நாம் எந்தக் காலக்கட்டத்தில் இருக்கிறோம் எங்கே இருக்கிறோம் என்பதை விட, நம் தமிழ்ச் சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் விடப்போகிறது என்பதை நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பார்ப்பனர்கள் தங்களுக்குச் சொல்லிக் கொண்ட வாசகத்தை எதற்கு எடுத்துக் கொள்கிறோம் என்பதே புரியாமல் நம்மவர்கள் எடுத்து வைத்துக் கொண்டு ஊர்கள்தோறும் வீதிகள் தோறும் தெருக்கள் தோறும் கோவில்களைக் கட்டி வைத்துக் கொண்டு பார்ப்பனக் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு கோவில் கட்டினாலும் கோவில் கட்டுவதால் ஏற்படும் பயன் என்பது அதைத்தவிர ஒரு துரும்பைக் கிள்ளி எடுத்துப் போடக்கூடப் பயன்படாது. கோவில் கட்டுவதற்குக் காரணம் கேட்டால் ஒற்றுமையாக இருப்பதற்கு என்று சொல்வார்கள். அப்படிக் கட்டுவது ஒற்றுமையாக இருப்பதற்கு என்று சொன்னால் அப்புறம் ஒருவரிடமிருந்து பிரிந்து போய் இன்னொரு இடத்தில் கோவில் கட்டுவதற்கு என்ன காரணம்? கட்டிய கோவிலால் பிரிவினை ஏற்பட்டுவிட்டது என்பதுதானே உண்மை.

மாங்குடி. இது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள சிறு கிராமம். இந்த ஊரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது வழக்கம். அனைத்து ஜாதியினரும் சேர்ந்து திருவிழா நடத்தினாலும் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் கட்டுப்பாட்டில் மட்டும் இருந்ததால் குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு மண்டகப்படி ஒதுக்கவில்லை என்ற குறைபாடு நீண்ட காலமாக இருந்து வந்தது.

அதனால் தாழ்த்தப்பட்டவர்களும் கோனார் வகுப்பைச் சேர்ந்தவர்களும் அது குறித்து அதிகாரிகளிடம் 1981-ஆம் ஆண்டு முறையிட்டதில் 12 ஆண்டுகளுக்குப் பின் 1993-ஆம் ஆண்டு கோனார் வகுப்பினருக்கு மட்டும் மண்டகப்படி கிடைத்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதுவும் இப்போதுவரை புகைச்சலில் இருந்து, கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்தது.

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அந்தக் கோவிலுக்குக் காப்புக்கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. எங்களுக்குப் பதில் சொல்லிவிட்டுக் காப்புக்கட்டுங்கள் என்று ஊர் முக்கியப் பிரமுகர்களிடமும், மண்டகப்படி வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டார்கள். அதன் விளைவு கோட்டாட்சியர் வட்டாட்சியர் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வழக்கம்போல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காததால் பிரச்சினை என்று ஊரே அல்லோல கல்லோலப்பட்டது.

தமிழ் ஓவியா said...

வட்டாட்சியர் தவச்செல்வம் மாங்குடிக்கு காவல்துறை உதவியோடு வந்து 144-தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக அறிவித்துவிட்டு காவல்துறையை நிறுத்தி விட்டுச் சென்றுவிட்டார். திருவிழா தடைப்பட்டுவிட்டது. இப்போது ஊரும் அமைதியாக இருக்கிறது. அம்பாளும் அமைதியாக இருக்கிறாள். அதிகாரிகள் மட்டும் திருவிழா நடத்தக்கூடாது என்று அறிவித்ததோடு எதுவும் யாரும் நடத்திவிடக் கூடாது என்று கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதே போல் புதுக்கோட்டையின் கடைக்கோடிப் பகுதியான பேயாடிக்கோட்டை என்ற ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கோவில் திருவிழாவிற்காக புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய குளத்தூர் அச்சுதமங்கலம், வெட்டிவயல், ஆய்க்குடி, தென்னமாரி மங்கலம், பறையத்தூர், எட்டிச்சேரி, புத்தாம்பூர், சுந்தனூர், செங்கானம், வசந்தனூர், பேயாடிக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் திரளுவார்கள். அங்கும் இதே போல் பிரச்சினைதான் தலைதூக்கியிருக்கிறது. இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு மண்டகப்படி தராவிட்டால் வேற்று மதத்திற்குச் சென்று விடுவதாக வந்த மிரட்டலையடுத்து அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இங்கு சற்று வேடிக்கையாக, தாழ்த்தப் பட்டவர்களாக இருந்தாலும் உயர் ஜாதிக்காரர்களாக இருந்தாலும் அனைவரும் இந்துக்கள், எக்காரணத்தைக் கொண்டும் திருவிழாவை நிறுத்திவிடக் கூடாது; ஏதாவது காரணத்தைக் காட்டி, திருவிழா தடைப்பட்டு விட்டால் இந்துக்களாக இருப்பவர்கள் மதம் மாறிவிட்டால் இந்துக்களின் எண்ணிக்கை (பலம்)குறைந்து விடும் என்று கருதிய இந்து முன்னணி அமைப்பின் பொறுப்பாளர்கள் மேல்ஜாதி எனப்படுபவர்களிடம் வலியச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் ஊருக்குள் 144-தடை உத்தரவு போடப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இங்கும் திருவிழா நடத்துவதா வேண்டாமா, போவதா போகாமல் இருந்து கொள்வதா என பக்தர்கள் பட்டிமன்றம் நடத்துவதைவிட ஒவ்வொரு நிமிடமும் பதைபதைப்புடன் இருந்தார்கள். கிராமமே திகுதிகு என்று எந்த நேரத்திலும் பற்றிக் கொள்ளும் சூழ்நிலையில் இருந்தது. திடீரென்று மே மாதம் 14-ஆம் தேதி மதியம் அக்கோவிலின் பக்தர்கள் அய்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் காவடி என்று எடுத்துக் கொண்டு தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்தனர்.
அதைப் பார்த்த அதிகாரிகளும் காவல் துறையினரும் தடை உத்தரவைக் காரணம் காட்டித் தடுத்து நிறுத்தினார்கள். அதனால் பக்தர்கள் காவடியை அங்கேயே இறக்கிவிட்டு பால்குடங்களைக் கொண்டு போய் அருகில் இருந்த குளத்தில் கொட்டிவிட்டுத் திரும்பினார்கள். கோவில் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை விரதத்தை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் பக்தர்கள். அப்படி என்றால் என்ன பொருள். அவர்கள் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஜாதிக்குச் சாதகமான தீர்ப்பு வரும்வரை வெறியாக இருப்போம் என்றுதானே பொருள்.

இந்த இடத்தில் நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். நமது ஆட்சி முறையில் கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர்வரை சாதாரண காவலர் முதல் மாவட்டக் கண்காணிப்பாளர் வரை ஊராட்சி மன்ற உறுப்பினர் முதல் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள்வரை எதற்காக நியமிக்கிறோம்? எதற்காகத் தேர்ந்தெடுக்கிறோம்? என்பதைப் பற்றித் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். அவர்களது கடமை என்ன? அவர்களுக்கு இந்தச் சமூகமும் ஆட்சிமுறையும் இட்ட கட்டளை என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.

பொதுமக்களும் பக்தர்களும் ஒற்றுமையாக இருப்பதற்கும் சாதாரணமாக கோவிலுக்குள் போவதற்கும் அனைத்துத்துறையும் வந்து காவல் காத்துக் கொண்டிருந்தால் அவரவர் செய்ய வேண்டிய அன்றாடப் பணிகள் அனைத்தும் தேங்கி விடாதா? அவ்வாறு தேங்கிவிட்டால் அதைச் செய்து முடிப்பது எப்போது? மாங்குடியில் சிக்கல் என்று சொல்லிக் கொண்டு வட்டாட்சியர்களும் கோட்டாட்சியர்களும் மாவட்ட ஆட்சியரும் காவல் துறையின் அத்தனை பிரிவு அதிகாரிகளும் வந்து நாள் கணக்கில் ஒரு கிராமத்துக்குள் தங்கள் வேலை நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தால் மற்ற ஊர்களில் இருந்து பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது யார்?

மாங்குடியையும் பேயாடிக்கோட்டையையும் போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமமாக இந்த அதிகாரிகள் சென்று கொண்டிருந்தால் ஒட்டு மொத்தப் பணிகளும் பாதித்து விடாதா? சர்வ சாதாரணமாக இப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேர்தல் விதிமுறை கடந்த மார்ச் 4-ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதிவரை இருந்ததால் எந்த ஒரு பணியையும் அதிகாரிகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டோடும், எப்போது அரசுப் பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்போடும் நாட்டு மக்கள் காத்துக் கிடக்கையில் பக்தியின் பேரில் இவ்வாறு அதிகாரிகளை ஒரே இடத்தில் குவிந்து கிடக்கச் செய்வதில் நமக்கு ஒன்றும் பெருமை வந்துவிடப் போவதில்லை.

அதே நேரத்தில் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். அதாவது, எதனை பக்திக்கு உரியது என்றும் போற்றுதலுக்கு உரியது என்றும் புனிதமானதாகக் கருதுகிறோமோ அந்தக் கோவிலைப் பூட்டி விட்டதால் இப்போது யாருக்கும் ஒன்றும் நட்டமில்லையே. இந்த மாதிரி நேரத்தில்தான் பார்ப்பான் சொன்ன மாதிரி கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றால் கோவில் பூட்டப்பட்டு விட்டதால் அவன் வேண்டுமானால் ஊரைவிட்டுப் போய்விடலாம். ஆனால் பல வகையிலும் சரியாக இருக்குமே தவிர கிராமத்தில் ஊருக்குள் இருக்கும் யாருக்கும் எந்த ஒரு நட்டமும் வந்துவிடப்போவதில்லை. அது மாங்குடி, பேயாடிக்கோட்டை மட்டுமல்ல; எல்லா ஊர்க் கோவில்களுக்கும் பொருந்தும். காவடியை நடுவழியிலேயே இறக்கிவைத்து விட்டதாலோ சாமிக்குக் கொண்டு சென்ற பாலைக் குடங்குடமாக குளத்தில் கொட்டிவிட்டு வந்து விட்டதாலோ சாமிக்குத்தம் ஏதும் நடந்துவிடப் போவதில்லை. சாமி இருந்தால்தானே தன் உரிமையைக் கேட்டுப் பெறுவதற்கு? அதுதான் இல்லையே.

திருவிழாக் காலங்களில் செய்யப்படும் எந்தச் செலவானாலும் அது உருப்படியானதாக இருக்காது. அதைக் கணக்கிட்டுப் பார்த்தாலே திருவிழா வேண்டாம் என்று எளிதில் சொல்லிவிடலாம். திருவிழா என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், குடி, கூத்து, சுருட்டல் என்று இருப்பவர்களுக்கு வேண்டுமானால் வருவாயை ஈட்டித் தந்திருக்கலாம். அதற்கு பக்தி என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு அனைத்து நிர்வாகத்தையும் முடக்கிப் போடுவது எந்த வகையில் சரி என்று சிந்திக்க வேண்டும்.

- ம.மு.கண்ணன்

தமிழ் ஓவியா said...

தேர்தல் பறிமுதல்


இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் இல்லாமல் தடுக்க பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருந்தது. பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நாடு முழுவதும் 313 கோடியே 31 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில்ரூ.153 கோடியும், மகாராஷ்டிரத்தில் ரூ.25.67 கோடியும், தமிழகத்தில் ரூ.25.05 கோடியும், உத்தரப்பிரதேசத்தில் ரூ.24.07 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாராயம் இல்லாத மாநிலம் என்று ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தில், ஒரு கோடி லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பாட்டில்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கைப்பற்றினர். தேர்தல் வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 75,306 வழக்குகளுள் தமிழகத்தில் 13,641 வழக்குகளும் உத்தரப்பிரதேசத்தில் 13,565 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைவிட தற்போது ரூ.123 கோடி அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 144ன் போது எத்தனை ஆயிரம் கோடி செலவானது என்பதற்குத்தான் கணக்கில்லை.

தமிழ் ஓவியா said...

நாடகம் ஆரம்பம்


தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு பல முறை உடைமாற்றுவதும், அந்தந்த பகுதிக்கேற்ற தொப்பிகள், உடைகள், வண்ணங்கள் பூசிக் கொண்டு தோன்றி, அடிப்படையே இல்லாத உணர்ச்சிப்பூர்வ வசனங்களாகப் பேசி வென்றுவிட்ட மோடியின் நாடகம் அடுத்த காட்சிக்குச் சென்றுள்ளது. காட்சியின் திரைவிலகியதும், நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார் ராஜபார்ட் மோடி. முதல் அடி வைப்பதற்குள் கீழே விழுகிறார். ஏதும் சறுக்கிவிட்டதா என்று எல்லோரும் பதற்றத்துடன் பார்க்க, நாடாளுமன்றப் படிகளை விழுந்து வணங்குகிறார் மோடி. அத்தனை கேமராக்களும் சுற்றி சுற்றிப் படமெடுக்க, அவற்றின் பிளாஷ் ஒளியில் காட்சி முடிந்து, நாடாளுமன்ற மைய மண்டபத்துக்குள் தொடர்கிறது அடுத்த காட்சி. கண்ணீரும் கம்பலையுமாக மோடி தொடங்கிய நாடகத்தில் வாழ்ந்து கெட்ட துணை கதாபாத்திரமான அத்வானியும் சேர்ந்து கொள்ள 1960 களில் அழுவாச்சி படம் பார்த்த எபெக்டில் ஒட்டுமொத்த இந்தியாவும் கைக்குட்டை தேடுகிறது.

இது ஒருபுறம் என்றால், பக்கத்து செட் நாடகத்தில் ராஜபார்ட்டான ராஜபக்சேவுக்கு, மோடி விடுத்த அழைப்பிற்கு தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு கிளம்ப, நாங்கள் விடுத்த அழைப்பு நெய்யில் பொறித்தது என்று விளக்கம் கொடுத்தார் பா.ஜ.க.வின் ஒரே தமிழ்நாட்டு எம்.பி. நாடகத்த்தில் தன் பங்கைச் சிறப்பாகச் செய்து பேர் வாங்க வேண்டும் என்ற துடிப்பு ராஜபக்சேவுக்கு இருக்காதா? உடனடியாக சிறையில் உள்ள இந்திய மீனவர்களையெல்லாம் விடுதலை செய்யப் போவதாக அவரும் அறிவித்துள்ளார். அதற்காக ஓநாய் சைவமாகிவிட்டது என்று பொருளல்ல. அப்புறம் அடுத்த முறை இந்தியா வரும்போது நல்லெண்ணத்துக்காக விடுவிக்க ஆள் வேண்டுமே! மீண்டும் கைதுகள் நடக்கும்; துப்பாக்கிச் சூடுகள் நடக்கும். கைது செய்யப்பட்டோர் விடுவிக்கப்படலாம். ஆனால், கொன்றவர்களை என்ன செய்வார்? சொல்லமுடியாது சூப்பர்மேனாக கேதர்நாத்தில் குஜராத்திகளை மட்டும் மோடி காப்பாற்றிய காட்சி போல், சிங்களர்களால் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களை மட்டும் சாவித்திரியாக வேடமேற்று மீட்டுவந்தாலும் வரலாம். யார்கண்டா? இந்த அய்ந்தாண்டில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேற இருக்கின்றவோ?

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்றத்தில் பெண்கள்


அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 61 பெண்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

543 உறுப்பினர்ககளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் 15 தேர்தல்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் தேர்வாகியுள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற முதல் தேர்தலில் (1952) 5 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 2009 தேர்தலில் 59 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

2014இல் தான் அதிகளவாக 11.3 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

33 விழுக்காட்டை நெருங்குவதற்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ?

தமிழ் ஓவியா said...

பதவியேற்பு விழாவில் போர்க் குற்றவாளியா?

26.05.2014 அன்று புதிய பிரதமராக, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திராமலேயே, தனித்த பெரும்பான்மைப் பலம் (மக்களவையில் 282 இடங்களை) பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் பா.ஜ.க.வின் நரேந்திரமோடி அவர்களுக்கு எதிராக வாக்களித்த, நாட்டின் 69 சதவிகித மக்களில் ஒரு பகுதியாக உள்ளவர்களான நமது சார்பில், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். (நரேந்திரமோடி வாங்கிய வாக்கு 31 சதவிகிதம்).மாற்றத்தை விரும்பிய மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் பல்துறையிலும் உள்ளன. ஆட்சி எத்திசையில் செல்லுகிறது என்பதைப் பொறுத்தே, இந்த வெற்றி நிலைத்த வெற்றியா என்பதைத் தீர்மானிக்கும்.

ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றாலும், பிரதமர் _- ஆட்சியாளர் _- அனைவருக்கும் உரியவர்; அனைவரது எதிர்பார்ப்புகளையும் அலட்சியப்படுத்தாது அரவணைத்துச் செல்ல வேண்டிய அறநெறி அரசியலே - ஜனநாயகம் என்ற மக்களாட்சி ஆகும்.

அவரது பதவியேற்பு விழாவுக்கு பல நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி, அவர்கள் வந்து வாழ்த்துவது நாட்டிற்கு, புதிய அரசுக்குப் பலம், பெருமை என்றாலும்கூட, மிகப் பெரிய இனப் படுகொலை நிகழ்த்தி, அய்.நா. மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் முன்னால் போர்க் குற்றவாளி என்று குற்றவாளிக் கூண்டில் பெரும்பாலான அதன் உறுப்பு நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக, நிறுத்தப்பட்டுள்ள இலங்கை அரசை _- அதன் அதிபர் ராஜபக்சேவை அழைப்பது எவ்வகையிலும் சரியானதாக அமைய முடியாது.

அண்டை நாடு _ சார்க் (Saarc) உறுப்பு நாடு என்று காரணம் கூறுவது எவ்வகையிலும் சரியல்ல! தொப்புள் கொடி உறவுள்ள ஈழத் தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் வாழ்வுரிமையைப் பறித்ததோடு, 2009-இல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப்பின் 5 ஆண்டுகள் ஆகியும்கூட, அங்குள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ இயலாத நிலை! சிறையில் அல்லது காணாமல் போனதாக அறிவிப்பு, ஆள் தூக்கும் அவலம்; மறைந்தவர்களுக்காக, கொல்லப்பட்டவர்களுக்காக அழுது கண்ணீர் வடிக்கக்கூட உரிமையற்ற பரிதாபம்!

ஒரு ஜனநாயகத் தேர்தல் மூலம் வந்த வடக்கு மாகாணத் தமிழர் ஆட்சிக்குக்கூட எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை; இன்னமும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதும், அதனால் உயிருக்குப் பயந்து ஈழத் தமிழர்கள் இரத்தக் கறையுடன் கண்ணீருடன் தப்பி வருவதும், புகலிடங்களைத் தேடுவதுமாக உள்ள நிலையில், ராஜபக்சே இங்கே, புதிய மோடி அரசு பதவி ஏற்கையில் வந்து வாழ்த்துவதோ, பங்கேற்பதோ பல கோடித் தமிழர்கள் நெஞ்சம் -ஏற்கெனவே அவர்கள் வெந்த புண்ணோடு உள்ள நிலையில் _- இப்படி ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு நியாயமானதுதானா?

ராஜரீகம் என்ற சாக்கு _- விளக்கம் ஏற்கப்படக் கூடியதல்ல.

இதற்கு முன் தேசிய ஜனநாயக முன்னணி (NDA) வாஜ்பேயி அவர்கள் பிரதமராகப் பதவியேற்றபோதோ, 2004, 2009இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)பிரதமர் மன்மோகன்சிங் பதவி ஏற்றபோதோ வெளி நாட்டவரை அழைக்கவே இல்லையே _- இப்பொழுது மட்டும் என்ன அவசியம் வந்தது?

அய்.நா.வால் போர்க் குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவர், இன்னமும் தமிழினப் படுகொலைகளைத் தயங்காது நடத்திடும் படலம் அங்கே தொடரும் நிலையில் இது தவிர்க்கப்பட வேண்டாமா?

உலக முழுவதும் உள்ள தமிழர்களின் வேண்டுகோள்!

இது தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேண்டுகோள் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வு களின் பிரதி பலிப்பாகும்!

இல்லையென்றால், இலங்கையுடன் ஈழத் தமிழர் பிரச்சினைகளைப் புதிய அரசு வந்தால் பெரும் அளவுக்குப் புதிய அணுகுமுறையோடு தீர்க்கும் என்று நம்பியவர்களின் நம்பிக்கை வீணாகி, இவர்களும் உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கப்பன் என்பதாகவே கருதப்படும். துவக்கத்திலேயே இப்படி ஒரு நிலையா? இன்னும் இராணுவத்தின் அட்டகாசம் அங்கு குறையவே இல்லை!

புதிய மத்திய அரசில் பொறுப்பேற்க இருப்பவர்கள் சிந்திக்கட்டும்; துணிந்து முடிவுகளை வழமையாக தவறான ஆலோசனைகளைத் தருவதையே வாடிக்கையாகக் கொண்ட அதிகாரிகளை மட்டுமே நம்பாமல், சுதந்திரமாக மக்கள் உணர்வுகளைக் கருத்தில் எடுத்து முடிவு எடுப்பது அவசியம் _ அவசரம்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

பாராட்டத்தக்க பீகார்!
பாராட்டத்தக்க பீகார்!


மக்களவைத் தேர்தலில் பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் 2 இடங்கள் மட்டும் பெற்றமைக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். எனினும் சட்டசபையைக் கலைக்கு அவர் கோரவில்லை. பதவி விலகல் முடிவைட் திரும்பப் பெற வேண்டும் என்று கட்சிக்குள் பலரும் கோரினாலும், அதில் உறுதியாக இருந்தார் நிதிஷ்.

தொடர்ந்து நடைபெற்ற அய்க்கிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. மொத்தம் 243 பேரைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் 117 இடங்களைப் பெற்றுள்ள அய்க்கிய ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் - 4, கம்யூனிஸ்டுகள்-1, சுயேட்சை-2 என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற போதுமான இடங்களை மஞ்சி தலைமையிலான அரசு பெறும் என்றாலும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒரு முதல்வர் என்பதாலும், மதவாத சக்திகளை வீழ்த்தி, சமூகநீதியைக் காப்பாற்றவும் எங்களின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் மஞ்சி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று அறிவித்த லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சொன்னபடியே வாக்களித்து மொத்தம் 145 வாக்குகளுடன் நம்பிக்கை அளித்துள்ளது. இதை எதிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது பாரதிய ஜனதா. எதிரெதிர் திசைகளில் இருந்த லாலுவும், நிதிஷும் சமூக நீதித் தளத்தில் மறைமுகமாவேனும் கைகோர்த்திருப்பது நம்பிக்கைக் கீற்றைக் காட்டுவதாகக் கருதுகிறார்கள் சமூகநீதியாளர்கள்! இதைத்தான் நாடும் எதிர்பார்க்கிறது.

தமிழ் ஓவியா said...

பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்? தொடரும் துரோகக் கும்பலின் புரட்டுக்கு மறுப்பு


அகநாழிகை எனும் அடிவருடி இதழ் ஒன்று ம.பொ.சி.யின் விட்ட குறை தொட்ட குறையாக ம.பொ.சி.யாரின் பேத்தி (தி.பரமேஸ்வரி என்பவர்), இதோ இன்றும் எங்கள் துரோகம் தொடர்கிறது என்று சொல்லும் வகையில் பெரியாரைக் கொச்சைப்படுத்தி எழுதிய ஒரு கட்டுரையை கடந்த மார்ச் மாத இதழில் வெளியிட்டுள்ளது. அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற பெரியார்களெல்லாம் ஒதுக்கப்பட்டு, ஈ.வெ.ரா பெரியார் என்னும் ஒருவருடைய அதிகபட்ச செயல்பாடுகளையும் மீறிய ஒரு பெரும் பிம்பத்தைக் கட்டமைத்து, ஆதரவானதோர் அலையைத் தொடர்ந்து உருவாக்கி வரும் ஒரு கூட்டத்தார்,தங்கள் எண்ணங்களை அந்தப் பிம்பத்தின் மீது ஏற்றித் தங்களை ஈடேற்றிக் கொள்கிறார்களோ? என்று தோன்றுமளவு ஈ.வெ.ரா பெரியார் பற்றிய மிகை பிம்பங்களைத் தோற்றுவிக்கும் எழுத்துகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு படிக்கக் கிடைக்கிறது எனத் தொடங்குகிறது அக்கட்டுரை!பெரியாரின் சமகாலத் தலைவர்கள் என்று இவர் குறிப்பிடுவது யாரை?

தமிழ் ஓவியா said...

அம்பேத்கரும், காந்தியும், சர்.ஏ.டி.பன்னீர் செல்வமும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் தான் அவரது சமகாலத் தலைவர்கள்! சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்றவர்கள் பெரியாரைத் தனது தலைவராக ஏற்றுகொண்டவர்கள் அல்லவா? தனது தோளுக்கிட்ட மாலையை பெரியாரின் காலுக்கிடுகிறேன் என்று சொல்லி, மேடையில் இருந்த பெரியார் படத்திற்கு இட்டு அவரை நீதிக்கட்சியின் தலைவராக்கி அழகு பார்த்தவர் அல்லவா திரு.பன்னீர் செல்வம்? ஒருவேளை தன் தாத்தாவைத் தலைவராக நினைத்து இந்த வரிகளை அவர் எழுதியிருப்பாரோ? பெரியார் தன் 84ஆவது பிறந்தநாள் மலரில் (1962) எழுதிய ஒரு கட்டுரையில் தாசி என்ற சொல்லைப் பயன்படுத்தியதைக் கண்டுபிடித்த கட்டுரையாளர் இப்படி பல இடங்களில் பெரியார் பேசி வந்ததாக குறிப்பிட்டு பெண்களின் நிலைகுறித்து தீவிரமாகச் சிந்திக்கக்கூடிய ஒரு மனிதர், பெண்களை இழிவாகக் குறிக்கும் சொல்லாடல்களை எப்படி ஒரு கேள்வியுமின்றி மிக இயல்பாக தன் பேச்சுகளில் பயன்படுத்தியிருக்க முடியும்? என்று கேட்கிறார். பெரியார் வாழ்ந்த காலத்தில் தாசி என்கிற சொல்தானே புழக்கத்தில் இருந்தது! அன்றைக்கு தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தைத் தமிழகத்திலே கொண்டுவரக் காரணமாக விளங்கியவரே தந்தை பெரியார்தானே!

மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார்கூட தாசிகளைப்பற்றி தான் எழுதிய நூலுக்கு தாசிகளின் மோசவலை என்றுதான் பெயரிட்டார்.

தமிழ் ஓவியா said...


அந்தப் பெயரைப் பயன்படுத்தியதால் அம்மையார் அவரையும் பெண்ணியத்திற்கு எதிரானவர் என பட்டியலிடுவாரோ?

1962இல் வெளியான அதே பெரியார் பிறந்தநாள் மலரில், ம.பொ.சி.யாரின் கட்டுரை ஒன்றும் வெளிவந்திருக்கிறது. பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மாற்றுக் கட்சியினராலும், போற்றிப் புகழத்தக்க மாண்புடையவர். கட்சி வேறுபாடு காரணமாக மட்டுமல்லாமல், கொள்கை வேறுபாடு காரணமாகவும், அவருக்கு நெடுந்தொலைவில் உள்ளவன். எங்கள் இருவருக்கும் நடுவிலுள்ள இடைவெளி எளிதில் கடக்க முடியாததாகும். ஆயினும், பொதுவாழ்க்கையில் அவர் கடைபிடித்துவரும் நேர்மை, கொள்கையில் காட்டிவரும் உறுதியான மனப்பான்மை காரணமாக அவரிடம் எனக்குப் பெருமதிப்புண்டு என குறிப்பிட்டிருந்ததை பேத்தியார் படிக்கவில்லையா?

பெண்ணியம் குறித்த தெளிவான தொடர்ந்த சிந்தனை, வாசிப்பு பெரியாரிடம் இல்லை என்கிறார் இந்த மேதாவி! பெண்கள் மணவிலக்குப் பெறவும், விதவைகளுக்கு மறுமண உரிமை கோரியும் 1929லேயே செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் இயற்றியவர் பெரியார். பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்துரிமை, வாரிசுரிமை ஆண்களைப்போலவே எந்தத் தொழிலையும் செய்வதற்குச் சமஉரிமை, பெண்களைச் சட்டசபைகளுக்கும், நகர சபைகளுக்கும் தேர்ந்தெடுத்தல் போன்ற உயரிய தீர்மானங்களை நிறைவேற்றி அதற்காக களம்கண்டவர் பெரியார்.

பெண்களைப் போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் எந்திரமாக நடத்தி அடிமைப்படுத்துவதை ஒழிக்க நினைத்த பெரியார்தான், பிள்ளை பெறும் எந்திரமா பெண்கள்? என வினா எழுப்பி, பெண்களே! தேவைப்பட்டால் கருப்பையை அகற்றவும் தயாராகுங்கள் என்று எச்சரித்தார். அதன் தத்துவார்த்தத்தைக் கூட புரிந்துகொள்ளாத கத்துக்குட்டிகள் கர்ப்பப்பைக்கு மருத்துவ விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள்! சேரமாதேவி குருகுல விடுதியில் பிராமணர், பிராமணரல்லாதாருக்கு இருந்த தீண்டாமையில் தீவிரம் காட்டிய பெரியார், கொடுமைகளில் நலிந்து கொண்டிருக்கும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என யாரோ எழுதியதாகச் சுட்டிக்காட்டி இதையே பெரியாரின் பெண்ணியத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று எழுதுகிறார்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பன ராஜாஜி கூட்டத்திற்குக் கைத்தடியாக இருந்து தமிழினத் துரோகியாக வலம் வந்த ம.பொ.சி பரம்பரையில் பிறந்து பார்ப்பனர்களுக்காக பேனா பிடிக்கும் அடிவருடிகளுக்கு பெரியாரின் சேரமாதேவி குருகுலப் போராட்டம் எரிச்சலைத் தருவதில் வியப்பில்லை. பெரியார் மணியம்மை திருமணம் பற்றிக் குறிப்பிடுகையில் 30 வயதுப் பெண்ணின் உணர்வையும், மன நிலையையும் சற்றும் சிந்தியாமல், சேர்த்து வைத்திருந்த பொருளே குறியாக (அதை அவர் இயக்கத்திற்காகவே செய்திருப்பினும்கூட) பெண்ணுணர்வை ஒரு பொருட்டாகவே கருதாத ஈ.வெ.ரா.வை எப்படி பெண்ணிய சிந்தனைவாதியாக ஏற்றுகொள்ள முடியும் எனக் கேட்டு அண்ணாவையும் துணைக்கு அழைத்திருக்கிறார்?

பேரறிஞர் அண்ணா அவர்களே அதற்குப் பதிலளித்துவிட்டார். எனக்கு இன்றைக்கு இருக்கும் உடல் உபாதைகளுக்கு மேலாக அன்று பெரியாருக்கு இருந்தது. மணியம்மையார் போன்று ஒருவர் கிடைத்திராவிட்டால் பெரியார் இத்தனை நாட்கள் வாழ்ந்திருக்க முடியாது என்று சொல்லி வருந்தினார்.

அன்னையார் மீது மிகவும் கரிசனப்பட்டு பெண்ணுணர்வை ஒரு பொருட்டாகவே கருதாத ஈ.வெ.ரா. வை என்று எழுதியிருக்கும் சகோதரியாரே! இந்தத் திருமணத்தைப்பற்றி அன்னை மணியம்மையார் என்றைக்கேனும் வருந்தியதற்கான செய்தி உண்டா? மாறாக, பொது வாழ்கைக்காக தன் வாழ்க்கையையே அழித்துக் கொண்ட மெழுகுவர்த்தி அல்லவா அவர்?

ஈ.வெ.ரா.வுக்கு பெரியார் பட்டம் எங்கு கொடுக்கப்பட்டது? யாரால் கொடுக்கப்பட்டது? அப்படியான என்ன கருத்தாக்கங்களை அல்லது நன்மைகளை அவர் பெண்களுக்குச் செய்திருக்கிறார்? என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை என்கிறது கட்டுரை.

13.11.1938இல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா அவர்களுக்கு பெரியார் என பட்டம் வழங்கிய செய்தி 1938 நவம்பர் 20ஆம் தேதியிட்ட குடிஅரசு இதழில் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள், செய்ய இயலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரும் இல்லாமையாலும், அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது என்கிற தீர்மானமும், கணவனை இழந்த பெண்களின் துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், இறுதியில் தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப்பெண்கள் நிலைமையை விரித்தும் தோழர் ஈ.வெ.ரா சொற்பொழிவாற்றினார் என்றும் குடிஅரசு பதிவு செய்துள்ளது. இப்படி, சரியான வரலாற்று ஆவணங்கள் இருக்கும்பொழுதே ஆதாரம் ஏதும் இல்லை என முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மூடி மறைக்க முயற்சித்திருக்கிறார் அம்மணி!.

பெரியார் இயக்கத்தின் கீழே ஒரு அறிஞனோ, எழுத்தாளனோ, கவிஞனோ உண்டா? உள்ளவர்கள் எல்லாம் நாலாம்தர பேச்சாளர்கள்!. அய்ந்தாம் தர அரசியல்வாதிகள்! என நிதானமிழந்து பேனாவை நகர்த்தியிருக்கிறார். அம்மையார் சொல்லும் அய்ந்தாம்தர அரசியல்வாதிகளான அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரிடத்தில் பதவி சுகம் தேடி அலைந்தவர் யார் என்பதை நாடு அறியும். ம.பொ.சியார் தன் தலைக்கு மேலே நாற்காலியைத் தூக்கிக்கொண்டு அண்ணா தம்பி வந்திருக்கேன்! அண்ணா தம்பி வந்திருக்கேன்! என இறைஞ்சுவது போல் தமிழகப் பத்திரிகைகள் போட்ட கார்ட்டூன்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

ம.பொ.சியார் மறைந்து பல ஆண்டுகள் ஆகியும் அவரது துரோகம் மட்டும் தொடர்கதையாகிவிட்டது.

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...

மதத்தை மறுப்பதா? கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்


இங்கல்ல... சூடானில்!

மதத்தை மறுப்பதா?

கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்


சூடானில் மரியம் யாஹ்யா இப்ராகிம் (வயது 27) என்பவருக்கு 20 மாத வயதுள்ள ஆண்குழந்தை உள்ளது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆனால், அப்பெண்ணின் தந்தை குழந்தைப் பருவத்திலேயே பிரிந்துவிட்டார். தனக்குத் தெரிந்தவரை தான் ஒரு கிறித்தவர் என்றே கருதி வந்துள்ளார்.அவர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டார். இதனால், அவர் மதத்தை மறுத்தவராகக் குற்றம் சுமத்தப்பட்டார். மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மீண்டும் அவருடைய மதத்துக்குத் திரும்புவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்தது. ஆனால் அவர் கிறித்தவர் என்று தன்னைக் கூறிவிட்டார். அவர் தந்தை ஓர் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அப்பெண்ணையும் இஸ்லாமியர் என்று நீதிமன்றம் கூறுகிறது.

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் சூடான் ஆராய்ச்சியாளர் மானர் அய்ட்ரிஸ் கூறும்போது, உண்மை என்னவென்றால், தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்பெண் அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப மதத்தைத் தேர்வு செய்துள்ளார். அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதால் மதத்தை மறுத்தார் என்று கூறியும், விபச்சாரம் செய்ததாகக் கூறியும் தண்டனைக்கு உள்ளாகி உள்ளார். மதத்தை மறுப்பது, விபச்சாரம் ஆகியவற்றைக் குற்றச் செயல்களாகக் கருதக்கூடாது. இச்செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் விதிகளை மீறி உள்ளது வெளிப்படையாகி உள்ளது என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரியத்தின் மனதளவிலான மத நம்பிக்கை, மத அடையாளத்தைக் கூறுவதால் மட்டுமே அவர் தண்டிக்கப்படக் கூடாது. நிபந்தனைகளின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே சர்வதேச பொது மன்னிப்பு சபையின் விருப்பமாகும். மனசாட்சிப்படி அவருடைய நம்பிக்கையை, மதத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் கருத்துச் சுதந்திரத்தைக் காண முடியவில்லை. இவை எட்டமுடியாத தொலைவில் உள்ளது. தனிப்பட்டவர் மீதான தண்டனை, அதுவும் மதம், நம்பிக்கைமீது தண்டனை இவை போன்ற அனைத்திலும் கருத்துச் சுதந்திரத்தை உள்ளடக்கியே இருக்கிறது என்றார்.
நீதிபதி அப்பாஸ் அல் கலீஃபா குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணான மரியம் யாஹ்யா இப்ராகிமிடம் இசுலாம் மதத்துக்குத் திரும்புகிறாயா என்று கேட்டபோது, நான் கிறித்தவர் என்று பதில் அளித்துள்ளார். அதன்பிறகே மரியத்துக்கு மதத்தை மறுக்கும் குற்றத்துக்கு மரண தண்டனையும், வேறு மதத்தவரைச் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று அறிவித்து, அதனால் விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு நூறு கசை அடி தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானதை நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டு மதச் சுதந்திரத்தைக் கோரும் பதாகைகளுடன் முழக்கமிட்டவர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களாகவே அதிக சுதந்திரமும், சமுதாயம், பொருளாதார முன்னேற்றங்கள் வேண்டும் என்று கர்த்தூம் பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு தொடர்ந்து போராட்டங்களைச் செய்து வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் சூடானிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், மனித உரிமை நசுக்கப்படுவதைக் கண்டித்தும் இசுலாமியத்தை முன்னெடுக்கும் அரசு நம்பிக்கையின்மீதான சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சூடான் அரசுக்குக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மாற்றத்திற்கு என்ன மார்க்கம்? மக்களவைத் தேர்தல் - ஓர் அலசல்-கலி.பூங்குன்றன்


16ஆம் மக்களவைத் தேர்தல் முடிந்தது; பத்து ஆண்டுக்காலம் ஆட்சிப் பீடத்தில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குப் பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பி.ஜே.பி. தலைமையில் அமைகிறது.

(1) இந்த ஆட்சி அமையக் காரணம் என்ன?

10 ஆண்டுக்காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலே எதிர் அலை வீசுவது என்பது ஓர் இயல்பான நிலையே.

காங்கிரசில் ஆட்சித் தலைவர் _ வழிகாட்டும் தலைமை என்பது அரசியல் ரீதியான தலைமையல்ல. அரசியல் ரீதியான தலைமைக்குத்தான் அரசியல் _ தேர்தல் _ வாக்கு _ என்பதற்கான அடிவேர்களும் ஆணிவேர்களும் பக்க வேர்களும் என்ன என்று தெரியும்.பொருளாதார ஆலோசகராக இருப்பது என்பது வேறு _ ஆட்சித் தலைவராக இருப்பது என்பது வேறு. தொலைநோக்குத் திட்டம் தேவைதான். அதனை அன்றாடத் தேவையை விலை கொடுத்துத்தான் பெற வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

தமிழ் ஓவியா said...


நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் 7.7 விழுக்காடு என்பதுதான் மெத்தப் படித்த பொருளாதார நிபுணர்களின் (சென் குப்தா அறிக்கை) சாதனையா என்ற கேள்விக்கு என்ன பதில்?

வாங்கும் சக்தி வளர்ந்துவிட்டது என்று கூறி, தவறாமல் விலைவாசியை விண்ணுக்குத் தாவ வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குவது எந்த வகையில் சரி?

இந்தியா பல மாநிலங்கள், பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இணைந்த ஒரு கூட்டணிதான்!

அந்தந்த மாநிலப் பிரச்னைகளைக் கையாளும் முறை _ அம்மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை _ ஈழத் தமிழர்ப் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை _ இவற்றை ஒரு சுண்டைக்காய் நாட்டிடம் தன்மானத்தை அடகு வைத்துவிட்டது இந்தியா என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிவதை எப்பொழுதாவது புரிந்து கொண்டுள்ளதா?

தம் கூட்டணியில் பிரதான கட்சியாக அங்கம் வகிக்கும் தி.மு.க. என்ன கருதுகிறது? அதன் உணர்வு என்ன என்பது பற்றி மதிப்புக் கொடுத்துச் சிந்தித்ததுண்டா?

காவிரி நீர்ப் பிரச்சினையில் நேர்மையாக நடந்து கொண்டுள்ளதா?

தெலுங்கானா பிரச்சினையைத்தான் எடுத்துக் கொள்வோம். பிரிவினை என்று முடிவானால் அதனைக் காலத்தே நிறைவேற்றிக் கொடுப்பதில் என்ன தயக்கம்?

சரி தெலுங்கானாவுக்கு ஆதரவாக இருந்து அதனைச் சட்ட ரீதியாக அங்கீகரித்ததன் அரசியல் ஆதாயத்தையாவது காங்கிரஸ் அடைய முடிந்ததா?

ஒரு சந்திரசேகர ராவுக்கு இருந்த ராஜதந்திரம் காங்கிரஸ் தலைமைக்கு இல்லாது போய்விட்டதே!

காங்கிரஸ் தலைவருக்கோ, துணைத் தலைவருக்கோ உள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருப்போர் யார்? பார்ப்பனர்களும், மலையாளிகளும்தானே! (உருப்பட்ட மாதிரிதான்!)

வெகுஜன விரோத சிந்தனையாளர்களாகவே இருந்துள்ளனர். தேர்தல் கால பட்ஜெட் என்பார்கள். அதைக் கூடச் செய்யத் தவறி விட்டதே!

அதன் ஆதாயத்தை அப்படியே அள்ளிக்கொண்டு போக பி.ஜே.பி.யைத் தவிர அகில இந்திய தேசியக் கட்சி வேறு ஒன்றும் இல்லை _ அதுதான் இப்பொழுது நடந்துள்ளது.

காங்கிரசின் மீது இருந்த வெறுப்பின் பலன் பி.ஜே.பி.க்குப் போய்விட்டது. திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த இதே கருத்தைத்தான் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொலிட் பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரியும் கூறியுள்ளார்.

(2) காங்கிரஸ் செய்யத் தவறியவை எவை?

2ஜி ஊழல் என்ற ஒன்றை பி.ஜே.பி. _அதன் தொங்கு சதைகளான ஊடகங்கள் ஊதிப் பெருக்கின. 1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்று அபாண்டமாகக் கிளப்பி விட்டனர்.
அப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தொகையை ஏதோ அமைச்சர் ராஜா எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்பது போன்ற பிரச்சாரம் செய்தனர்.

அதற்குப் பதிலடி எதிரடி கொடுத்து, உண்மை நிலையை எடுத்துக்கூறி, பொய்ப் பிரச்சாரகர்களின் முகத்திரையைக் கிழிக்க வக்கு இல்லை; தி.மு.க. சம்பந்தப்பட்டது என்று தட்டிக் கழித்தார்கள். இன்னொரு வகையில் தி.மு.க.வை அச்சுறுத்துவதற்கும் இதனை அனுமதித்தார்கள். அதன் விளைவு காங்கிரசுக்கே பாதகமாகிவிட்டது.

தொலைத் தொடர்புத் துறையை சாதாரண மக்களுக்குப் பயன்படும் துறையாக ஆக்கிய சாதனையாளர் ஆ.இராசா என்று சொல்ல பிரதமருக்கோ கூட்டணித் தலைவருக்கோ என்ன தயக்கம்?

1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதே! 22 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில்கூட அந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படாதது ஏன்?

நியாயமாக, சரியாக நடத்தியிருந்தால் பி.ஜே.பி., சங்பரிவார் முக்கியத் தலைவர்கள் எல்லாம் தேர்தலிலேயே நிற்க முடியாத அளவுக்குத் தண்டிக்கப்பட்டு இருப்பார்களே!

தமிழ் ஓவியா said...

வெட்கக்கேடு என்னவென்றால், அந்தக் கேவலமான _ அநாகரிகமான குற்றத்தைச் செய்தவர்கள் பிற்காலத்தில் துணைப் பிரதமராக, மத்திய அரசு அமைச்சர்களாக, மாநில அமைச்சர்களாக வந்து விட்டார்கள்.

ராமன் கோவிலைக் கட்டுவோம் என்றும், வெளிநாடுகளில் வாழும் இந்துக்களுக்கு அடைக்கலம் கொடுப்போம் என்பது போன்ற மதச்சார்பின்மைக்கு விரோதமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதே பி.ஜே.பி. இதனைப் பெரிதுபடுத்தி இருக்க வேண்டாமா?

மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைக்க வருகிறார்கள். உஷார்! உஷார்! என்று இந்தியா முழுவதும் பரப்பிக் கதிகலங்க வைத்திருக்க வேண்டாமா?

தேர்தல் ஆணையத்திடம் _ இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் சென்று தேர்தல் அறிக்கையில் சட்ட விரோதமாக உறுதிமொழிகள் இடம் பெற்றுள்ளன என்று கூறி சரியான தீர்ப்பைப் பெற்று இருக்க முடியுமே!

1991 மே 21 அன்று விசுவ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த மகாஜன், வி.எச்.பி.யைச் சேர்ந்த சாத்வி ரிதம்பரா ஆகியோர் இந்துமத அடிப்படையில் வாக்குகள் கேட்டனர்; அந்த மேடையில் பி.ஜே.பி. வேட்பாளர் ராம் கட்சே இருந்தார் என்பதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததே! (15.4.1994)

2004இல் நடைபெற்ற கேரள மாநிலம் மூவாட்டுப்புழ மக்களவைத் தேர்தலில் இந்தியப் பெடரல் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.தாமஸ். (இவர் மத்திய சட்டத்துறை முன்னாள் இணை அமைச்சரும்கூட!) தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.எம். கட்சியின் உறுப்பினர் பி.எம்.இஸ்மாயிலைவிட 529 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.எம். கட்சியின் இஸ்மாயில், ஜோஸ் கே. மணி உள்ளிட்டோர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

தேர்தலில் கத்தோலிக்க கிறித்துவ மக்களின் வாக்குகளைக் கவர்ந்திட போப் மற்றும் தெரசா ஆகியோரின் படங்களுடன் தன்னுடைய படத்தையும் இணைத்துக் காலண்டர் அச்சிட்டு மக்களிடம் வழங்கினார்.

இந்த வழக்கில் நீதிபதி சி.என்.இராமச்சந்திரன் வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. (31.10.2006)

தமிழ் ஓவியா said...

மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கோரியதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)ன்படி தவறானது. இந்த முறைகேடுகள் இல்லாவிட்டால் தோல்வி அடைந்த மனுதாரர் வெற்றி பெற்று இருப்பார். எனவே, நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்த மனுதாரர் இஸ்மாயில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதே!

நடந்து முடிந்த தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி உத்தரப்பிரேதேசம் பைசாபாத்தில் ராமன் படம், ராமன் கோயில் படத்தைப் பின்னணியாகக் கொண்ட மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்தாரே! தெய்வமாகிய ராமன் பிறந்த மண்ணில் வாழும் மக்களாகிய நீங்கள் காங்கிரசுக்குப் பாடம் புகட்டுங்கள். தேர்தல் வாக்குறுதிகளில் ராமன் கோயிலை ஆதரிக்காதவர்களுக்கும் பாடம் புகட்டுங்கள். இது ராமன் கடவுளின் மண்ணாகும். (பிரான் ஜெயே பர்வச்சன் நா ஜெயே) என்று முழங்கினாரா, இல்லையா? இது அப்பட்டமான மதவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட செயல்பாடாகும்.

அந்த நேரத்திலேயே காங்கிரஸ் இதனைக் கையில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். சட்டரீதியாக அணுகியிருக்க வேண்டும். ஏன் இப்பொழுதுகூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. வாரணாசி வெற்றியைக்கூட கேள்விக்குறியாக்கிட முடியுமே!

(3) பி.ஜே.பி. வெற்றி பெற்றது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது. நரேந்திர மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவித்து நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. விளம்பரத்துக்காகவும், பிரச்சாரத்துக்காகவும் பி.ஜே.பி. செலவிட்ட தொகை ரூ.5,000 கோடி. (அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்).

நாள் ஒன்றுக்கு ஆறு தடவை உடைமாற்றம் என்பதெல்லாம் அறிவுக்கு அப்பாற்பட்டு பாமர மக்களை வசீகரிக்கும் நாடக பாணி செயற்கை யுக்திதானே!
பொய்யான பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. அதற்கு இணையதளங்கள் வெகுவாக பயன்படுத்தப்பட்டன. (3டி உட்பட).

எடுத்துக்காட்டாக சீனாவில் குவாங்_ஜோ (Guangzhou) நகரில் உள்ள பேருந்து நிலையம் மோடியின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரப் பேருந்து நிலையம் என்று அப்பட்டமாக வலைத் தளத்தில் வெளியிட்டனர் என்றால் அவர்களின் அண்டப் புளுகைத் தெரிந்து கொள்ளலாமே!

வளர்ச்சி, வளர்ச்சி, குஜராத் மாடல் என்று ஊதிப் பெருக்கிக் காட்டி மக்களை நம்ப வைத்தனர். புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அதனை நம்பியதுதான் வெட்கக்கேடு!

தமிழ் ஓவியா said...


உண்மையில் குஜராத் இந்தியாவின் முன்மாதிரி (மாடல்) மாநிலமா? இல்லை _ இல்லவே இல்லை. இதனை இந்தியாவின் ஆளுநரான ரகுராம்ராஜன் குழுவினர் வெளியிட்ட விவர அறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து காட்டியது.

இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் _ குஜராத் 10ஆம் இடம். எழுத்தறிவு 18ஆம் இடம். ஏழைகள் குறைந்த மாநிலத்தில 10ஆம் இடம். சாலைகள் பராமரிப்பில் 11ஆம் இடம். பிரசவக்காலத்தில் இறப்பு விகிதம் 100க்கு 62 (குஜராத்தில்). பிற மாநிலங்களிலோ 12 முதல் 14 வரைதான். சராசரி ஆயுள் குஜராத்தில் ஆண்கள் 63.12, பெண்கள் 64.10. பிற மாநிலங்களிலோ ஆண்கள் 71.67, பெண்கள் 75.

எக்னாமிக் டைம்ஸ் சர்வே ஒன்றை வெளிப்படுத்தியது. இந்தியாவுக்கு அடுத்த பிரதமர் யார் என்ற கணக்கெடுப்பு 100 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நடத்தப்பட்டது. அதில் 74 சதவிகிதம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடிக்கு ஆதரவாக இருந்ததை வெளிப்படுத்தியது.

தமிழ் ஓவியா said...


கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அப்படி என்ன ஆர்வம் _ அக்கறை?

குஜராத்தில் முந்த்ரா துறைமுகம் கட்டுவதற்காக என்று அதானி குழுமத்திற்கு 5.47 கோடி சதுர மீட்டர் நிலத்தை மோடி அரசு அளித்தது. சதுர அடி ஒன்றுக்கு ரூ.ஒன்று முதல் 32 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

வெறும் 98.60 லட்சம் ஏக்கர் நிலத்தை மட்டும் துறைமுகத்துக்காக பயன்படுத்திக் கொண்டு மீதி 4 கோடி ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை சதுர மீட்டர் ரூ.600 முதல் ரூ.737 வரை விலை நிர்ணயம் செய்து, மற்ற நிறுவனங்களுக்கு விற்று, கோடி கோடியாக வாரி சுருட்டிக் கொண்டது அதானி குழுமம். இந்த அதானி குழுமத்திற்குச் சொந்தமான தனி விமானத்தில்தான் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார்.

(4) பிரதமராக மோடி ஜொலிப்பாரா?

ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆயிரம் பேசலாம். ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதன் வலி தெரியப்போகிறது. பொருளாதார வளர்ச்சியில் சாதனை காட்டுவதற்கு மாறாக திசை திரும்பும் சில வித்தைகளைக் காட்டக் கூடும்.

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ்.தான் மோடியைத் தேர்வு செய்தது. ஆட்சியின் லகான் அதனிடம் இருக்கப் போகிறது.

இங்கேதான் சிக்கல் ஆரம்பமாகப் போகிறது. ராமன் கோயிலைக் கட்டப் போகிறாரா? வறுமையை ஒழிக்கப் போகிறாரா? பொருளாதாரக் கொள்கை வெளி நாட்டுக் கொள்கைகளைப் பொறுத்த வரை காங்கிரசுக்கும் பி.ஜே.பி.க்கும் பெரிய வேறுபாடு கிடையாதே!

(5) தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. 39இல் 37 இடங்களில் வெற்றி பெற்றது எப்படி?

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கை (19.5.2014) விரிவாகக் கூறுகிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் 5 காரணங்கள்.

(1). ஆட்சிப்பலம்
(2). தேர்தல் ஆணையப்பலம்
(3). பணம் பட்டுவாடா
(4). 144 தடை உத்தரவு
(5). ஊடகங்களின் ஒருசார்புப் பிரச்சாரம்.
மற்றபடி மின்வெட்டு சமாளிக்கப்பட்டதா? குறைந்தபட்சம் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு உண்டா? விலைவாசி குறைக்கப்பட்டதா?

மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு. இவைதான் அ.தி.மு.க. ஆட்சியின் மூன்றாண்டு சாதனையாக நடைபெற்றது. சமூக நீதியில் சறுக்கல்!

நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் மாநிலப் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறவில்லை. அடுத்த இரண்டாண்டும் அ.தி.மு.க.வுக்கு மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும்.

மாற்றத்திற்கு என்ன மார்க்கம்?

(1) மதச்சார்பற்ற சக்திகளும் சமூகநீதியாளர்களும் கை கோர்க்க வேண்டும்.

மண்டல் காற்று வீசிய பிகார், உத்தரபிரதேசம், மகாராட்டிரம், கருநாடக மாநிலங்களில் இந்தச் சக்திகள் பிளவுபட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை மதவாத சக்திகள் ஆக்ரமித்துக்கொண்டன. (2) பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை இரு விழிகள் போன்ற இந்த இரு நிலைப்பாடுகளிலும் முற்றிலும் மாறுபாடு கொண்டதாகும். மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக உள்ள தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கையிணைத்தால் கண்மூடிக் கண் திறப்பதற்குள் மதவாத சக்திகள் மறைந்தோடி விடும்.

கார்ப்பரேட் சக்திகள் - உயர்ஜாதி பார்ப்பன சக்திகள் - அவற்றின் ஊடகங்களும் நொறுக்கப்பட்டுவிடும்.

பதவியேற்பு விழாவில் பிரியாணி பார்சல்!?

மோடி சைவ உணவு மட்டுமே உண்பவர் என்பதால் அவரது பதவியேற்பு விழாவில் முழுக்க மரக்கறி உணவு தான் என்று சொல்லிவிட்டார்கள் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள். (ஹிட்லரும் புலால் மறுப்பவர் என்பது உங்களின் நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல...)

மரக்கறியா, புலால் உணவா என்பதை சாப்பிடுபவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு புலம்பத் தொடங்கிவிட்டனர்.

பதவியேற்பு விழாவின் விருந்திலேயே இவ்வளவு கவனமா என்றால், தங்களின் பார்ப்பனியப் போக்கை எங்கிருந்து தொடங்குகிறார்கள் என்பதைத் தானே நாம் கவனிக்க வேண்டும். இன்னொருபுறம், சார்க் நாட்டுத் தலைவர்களையெல்லாம் அழைத்திருக்கும் மோடிக்கு, தனது டுவீட்டு மூலம் ஒரு கொட்டு கொட்டியிருக்கிறார் சசிதரூர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியர்களின் தலைகளை பாகிஸ்தான் சீவும்போது, நம்நாட்டுப் பிரதமர் பாகிஸ்தான் பிரதமருடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று மோடி கிண்டல் செய்ததை எடுத்துக் காட்டி, மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சிக்கன் பிரியானி கேட்பார் என்று நம்புவோம் என்று டுவீட்டியிருக்கிறார் அவர்.

ஆரிய பவன் சாப்பாடுதான் என்று முடிவான பின் ஷெரிப்புக்கு மட்டும் பிரியாணி பார்சலா? என்று கிண்டல் தொடங்கிவிட்டது டெல்லிபவன்களில்!

கடைசிச் செய்தி: சசிதரூர் சொன்னதினாலோ என்னவோ, வெளிநாட்டுத் தலைவர்களுக்கென்று அசைவ உணவும் மெனுவில் சேர்க்கப்பட்டிருக்கிறதாம்.

தமிழ் ஓவியா said...

வலைக்குத் தப்பிய மாநிலங்கள்!

மோடி அலை என்பது ஒரு மாயைதான். பெருமுதலாளிகள் இதுவரை மன்மோகன் சிங் அவர்களைப் பயன்படுத்தினார்கள். பயன்படுத்தியாகி விட்டது, தற்போது மோடியைப் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியின் தவறான அரசியல் முடிவுகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத விலைவாசிப் பெருக்கம் போன்றன மக்களை வேறு ஒரு கட்சியைத் தேர்தெடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டன. ஆளும் கட்சியின் மீது கோபத்தில் இருக்கும் வட இந்திய மக்களை ஜாதி, மத ரீதியாக எளிதாகப்பிரிக்க முடிந்தது. உடனிருந்த மாநிலக் கட்சிகளின் வலுவைக் குறைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளும் தோல்விக்குக் காரணமாயின. இந்தக்குழப்பமான இடைவெளியில் மோடி என்ற ஒரு உருவத்தைப் பிரமாண்டமாகக் காட்டியதும் மக்கள் திசை திரும்பிவிட்டார்கள். இந்த சூழ்ச்சி எடுபடாத சில மாநிலங்களும் இருக்கின்றன. அவை மேற்குவங்கம், தமிழ்நாடு, ஒரிசா மற்றும் கேரளா ஆகியவை. ஆந்திராவிலும் கூட மாநிலக் கட்சிகளே கோலோச்சியுள்ளன. இந்திய வரைபடத்தில் டிக் அடித்தது போன்ற இந்த கடலோர மாநிலங்கள் தான் ஆர்.எஸ்.எஸ். விரித்த மோடி வலைக்குத் தப்பியிருக்கின்றன. இவற்றின் அரசியல் பின்புலங்களை அறிந்துகொள்வது மற்றவற்றின் மீட்சிக்கும் உதவக்கூடும்.

தமிழ் ஓவியா said...

ஒரிசா

ஒரிசா மாநிலத்தைப் பொறுத்தவரை கம்யூனிசத் தாக்கம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் மாநிலம். கம்யூனிஸ்டுகள் நேரடியாக ஆட்சியைப் பிடிக்கமுடியாவிட்டாலும், பொதுவுடைமைக் கொள்கைகளைத் தன்னுடைய கட்சியின் முக்கியக் கொள்கையாக கொண்ட பிஜு ஜனதா தளத்திற்கு மக்களின் ஆதரவு என்றும் உண்டு. சுதந்திரத்திற்குப் பிறகு 1990 வரை ஒரிசா பிந்தங்கிய மாநிலங்களுள் ஒன்றாகத்தான் இருந்து வந்தது. ஜனதாதளம் ஆட்சியில் இருந்த போது பிஜு பட்நாயக் ஒரிசா மாநிலத்தில் பல சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அதன் பிறகு வந்த காங்கிரஸ் அரசின் ஆட்சியின் மீது இருந்த வெறுப்பால் மீண்டும் பிஜு பட்நாயக்கின் மகன் நவின் பட்நாயக்கிற்கு அமோக ஆதரவு கிடைத்தது. 2000-ங்களில் இருந்து தொடர்ந்து மாநிலத்தில் முதலமைச்சராகத் தொடர்ந்து பணியற்றிவருகிறார்.

இந்தத் தேர்தலில் மோடி ஒரிசாவில் மாத்திரம் 4 பொதுக்கூட்டங்கள் நடத்தி லட்சக்கணக்கான மக்களை திரட்டி பேசிப்பார்த்தார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு இடம் மட்டுமே. மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரசின் மீதான வெறுப்பு இங்கு நவின் பட்நாயக் அலையாக மாறியது கடந்த முறை 14 இடங்களை வென்ற பிஜு ஜனதா தளம் இந்த முறை 21 இடங்களில் 20 இடங்களை வென்று சாதனை படைததது.

தமிழ் ஓவியா said...

கேரளா

சுதந்திரம் வாங்கியது முதலே பொதுவுடமைக் கட்சி மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் தொடர்ந்து ஆண்டுவருகின்றன. கல்வியாளர்கள் சிந்தனை பார்ப்பனிய மதவாத சக்திகளுக்கு எதிராக இருக்கும் என்பதற்கு கேரளா ஒரு எடுத்துக்காட்டு ஆகும். காவிகளுக்கு கேரளாவைப்பற்றிய மிகப்பெரிய கனவும் முயற்சியும் தொடர்ந்து இருக்கிறது. காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வீழப்போவது உறுதியாகிவிட்டது. அப்படி என்றால் காங்கிரஸ் இருந்த இடத்தில் தங்களின் காவிக்கொடி ஏற்றப்படும் என்ற பெரிய ஆசை சுக்குநூறாக்கப்பட்டு விட்டதால் காவிகள் பெரிய வெற்றியை சுவைத்திருந்தாலும் அந்த வெற்றியை முழுமையாக கொண்டாடமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கேரளாவை மிகவும் சாதாரனமாக நினைத்து இறங்கியது. ஆனால் 20 தொகுதிகளில் எதிலும் வெற்றியில்லை என்பதோடு, ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதியிலும் வைப்புத்தொகையை இழந்தது.

மேற்கு வங்கம்

இந்தியாவே தேர்தல் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த மாநிலங்களில் முதலிடம் வகித்தது மேற்கு வங்கம். இந்தியாவில் இஸ்லாமிய எதிர்ப்பை கையில் எடுத்த உடனேயே தானாகவே இந்துத்துவ கட்சிகளின் பார்வை மேற்கு வங்கத்தின் மீது சென்றது. காரணம் பங்களாதேசில் இருந்து வரும் இஸ்லாமியர்களை விரட்டுகிறோம் என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்கள் மீது அழுத்தத்தை கொடுக்கவேண்டும். இதற்கு முக்கியமாக் எல்லை மாநிலமான மேற்குவங்கத்தில் தங்கள் வலிமையைக் காட்டவேண்டும். இந்த எண்ணவோட்டம் மோடியை முதன்மைப்படுத்தியதில் இருந்தே காவிகளுக்கு இருந்து வந்தது.

நீண்டகாலமாக கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்துவந்த மேற்குவங்கத்தில் இன்று 2 இடங்களே அவர்களுக்குக் கிடைத்திருப்பினும், காங்கிரசிலிருந்து வெளியேறி தனிக்கட்சி நடத்தி, அண்மையில் ஆட்சியையும் பிடித்த மம்தா பானர்ஜி அதிக இடங்களைப் பிடித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாஜ்பாயி அரசில் முக்கிய அங்கம் வகித்தவர். அதே நேரத்தில் பாஜகவுடன் நல்ல நட்புறவிலும் இருந்தவர். மேற்கு வங்கத்தேர்தலில் இமாலய வெற்றிப்பெற்றபிறகு முதலில் சென்று வாழ்த்துதெரிவித்த கட்சியும் பாஜக தான் இந்த அளவு நட்புறவில் இருக்கும் போது மம்தாவின் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டை வைக்க அவசியமில்லை. மம்தா அரசியல் வருவதற்கு முன்பிருந்தே பொதுநல சேவைகளுக்கான ஒவியம் வரைந்து அதை நிதி திரட்ட பயன்படுத்துகின்றவர். நட்பு ரீதியாக பகிர்ந்துகொண்ட ஓவிய விவகாரத்தை அரசியலுக்குப் பயன்படுத்தி மம்தா மீது குற்றச்சாட்டை வீசத் துவங்கினார். முதலமைச்சர் என்ற லேபிளைப் பயன்படுத்தி ஒன்றுமில்லாத ஓவியங்களை கோடிக்கணக்கில் விற்கிறார் என்று மோடி வைத்த குற்றச்சாட்டு வங்காளிகளை முகம் சுழிக்க வைத்தது.

விளைவு போட்டியிட்ட பல இடங்களில் மண்ணைக் கவ்வியது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட இயக்கங்களால் பண்படுத்தப்பட்ட மண். திராவிட இயக்கத்தின் எழுச்சிக்குப் பிறகு எந்த தேசியக் கட்சியும் தனது செல்வாக்கை நிலைநாட்ட முடியவில்லை. தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் முயன்று வந்தபோதும், ஜாதியக் கட்சிகள் உள்ளிட்ட பதவிக்காக விலைபோகும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து பெரிய விளம்பரம் செய்தும் கூட இந்த முறை அவர்களால் இரண்டு இடங்களைத் தவிர மற்றவற்றைப் பிடிக்கமுடியவில்லை. கிடைத்த இரண்டு தொகுதியும் வென்றவர்களின் தனிப்பட்ட பலத்தில் தான் வென்றார்கள் பாஜக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்தது. தமிழகத்தின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் முற்போக்குத் திசையில் இல்லையென்றாலும், முற்றிலும் மாறான திசைக்கும் சென்றுவிடவில்லை; மதவாத-ஜாதியவாத சக்திகளுக்கு இம்மண்ணில் இடம் கொடுத்துவிடவில்லை; மோடிக்கு அதிகபட்ச ஜால்ரா தட்டிய ஊடகங்களால் கூட எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, ஆந்திரா இரண்டாகப் பிரிந்தாலும் இரண்டிலுமே மாநிலக் கட்சிகளே அதிக இடம் பிடித்துள்ளன. கணிசமான இடங்களைப் பிடித்த தெலுங்குதேசத்துடன் கூட்டணி வைத்த பா.ஜ.க. 3 இடங்களை மட்டுமே பிடித்தது.

இந்திய அளவில் மதச்சார்பற்ற _ முற்போக்கு சக்திகள், பொதுவுடைமை இயக்கங்கள், சமூகநீதியாளர்கள் பிரிந்து நின்றதும், மக்களை ஒன்றிணைக்கத் தவறியதுமே, பழமையில் ஊறியிருந்த மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றியை உறுதிப்படுத்தின என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

- சரவணா & சமா

தமிழ் ஓவியா said...


திராவிடர் தளபதி ஏ.டி.பி.

திராவிடர் இயக் கத்தைப் பற்றி குறை சொல் வதைச்சிலர் தொழிலாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில அதிகப் பிர சங்கிகள், கேரளாவில் அதிகம் படித்து இருக் கிறார்களே. அதற்கெல்லாம் திராவிடர் இயக்கம் தானா காரணம்? என்று அதி மேதாவித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறியும் வருகின்றனர்.

ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு வகை யான சூழல் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்?

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடுக்கான ஆணைகளைப் பிறப்பித்தவர்கள் யார்? குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற முதல் அமைச்சர் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) வருணாசிரம நோக்கத்தை ஒழித்துக் கட்டிய தலைவர் யார்? இயக்கம் எது? என்று அடுக்கடுக்கான கேள்வி கள் உண்டு.

அரசு அமைந்தால் பள்ளிகளைத் திறப்பார்கள் - ஆனால் ராஜாஜி இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் 1937களில் 6000 கிராமப் பள்ளிகளையும் 1952இல் 8000 பள்ளி களையும் மூடினாரே - இது கேரளாவில் நடந்ததா? தமிழ்நாட்டில் தானே நடந் தது? அதனை எதிர்த் ததோடு - அதனைக் கொண்டு வந்த ஆச்சாரி யாரையே பதவியை விட்டு விரட்டினோமே - வரலாறு புரியாமல் உளறலாமா?

இன்று திராவிடர் தள பதி ஏ.டி. பன்னீர்செல்வம் பிறந்த நாள் (1888) அவர் தஞ்சாவூர் மாவட்டக் கழகத் தலைவராக (டிஸ் டிரிக்ட் போர்டு பிரசிடன்ட் 1924-1930) இருந்தபோது எத்தகைய கல்விச் சாத னைகளை முத்திரையாகப் பொறித்தார்?

உரத்தநாடு, இராசா மடம் ஆகிய இடங்களில் மன்னர்களால் கட்டப்பட்டு இருந்த சத்திரங்கள் முழுக்க முழக்கப் பார்ப்பன சிறு வர்களுக்குப் பயன்பட் டதை மாற்றி அமைத்தவர் அவர் தானே?.

திருவையாற்றில் ஒரு கல்லூரி - சமஸ்கிருத கல் லூரியாக மட்டும் இருந் ததை மாற்றி - தமிழ்ப் புலவர் பட்டப்படிப்புக்கும் வழி வகுத்து சமஸ்கிருதக் கல்லூரி என்றிருந்த பெயரை மாற்றி அரசர் கல்லூரி என்று புதுப் பெயர் சூட்டினாரே!

பார்ப்பனர்களுக்கு மட்டும் இருந்த விடுதியை அனைவருக்கும் பொது வானதாக மாற்றினாரே!

இதுதான் தமிழ் நாட் டுச் சூழல் - வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று உளற வேண்டாம்.

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/81385.html#ixzz33RCrfZgl

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு றீரயில் கட்டணம் உயர்கிறது ,டீசலும் விலை ஏற்றம்


பழைய கள் புதிய மொந்தை!

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு றீரயில் கட்டணம் உயர்கிறது
டீசலும் விலை ஏற்றம்

புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்

புதுடில்லி, ஜூன் 1- காங்கிரஸ் தலைமையி லான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத் தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கி விட் டது.

குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கி விட்டனவே!

25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.

இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப் போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக் குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத் தியிருந்தார் என்றும் கூறப் பட்டது.

இந்த நிலையில் மீன் பிடித் தடைக் காலம் முடிந்த பின்னர் நேற்றுதான் மீனவர்கள் கடலுக்கு சென் றனர். பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற் படை திடீரென சுற்றி வளைத்து தாக்கியது. தமி ழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து வீசி யது. மேலும் 25 மீனவர் களையும் கைது செய்து அவர்களது 6 விசைப் படகு களையும் சிறைப்பிடித்து சென்றுள்ளது ராஜபக்சே வின் கடற்படை.

ரயில் கட்டணம் உயர்வு

ரயிலில் அபாயச் சங்கிலி உண்டு - ஆபத்து காலத்தில் இழுத்து ரயிலை நிறுத்த லாம். ஆனால், ரயில் கட்டணத்தை உயர்த்தும் அபாயம் அல்லவா ஏற் பட்டு விட்டது? எதைப் பிடித்து இழுப்பது?

பிஜேபியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா - ரயில் கட்டணம் உயரும் என்று அறிவிப்புக் கொடுத்துள் ளார். பழைய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்த தவறி விட்டதாம் - அத னால் இந்த ஆட்சியில் கட்டண உயர்வாம்! ரயில் கட்டணத்தை உயர்த்தாதது பழைய ஆட்சியின் தவறாம் - எப்படி இருக்கிறது?

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு

டீசல் விலை லிட்ட ருக்கு 50 காசுகள் உயர்த் தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக் கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலங்கள் விதிக்கும் வரிகள் சேர்க்கப்படாததால் இந்த விலை உயர்வு, மாநில வாரியாக வேறுபடும். எண் ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டது.

டீசலுக்கு அளிக்கப் படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக கடந்த காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு மாதந் தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தும் திட்டத்தை 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

அந்தத் திட்டத்தின் அடிப்படையில், மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசும் இந்த விலை உயர்வை மேற் கொண்டுள்ளது. இதனால் மாதந்தோறும் டீசல் விலை உயர்வுத் திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த ஆண்டு ஜன வரி மாதம் முதல் 15 முறை டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது. அதன் மூலம் லிட்டருக்கு இதுவரை ரூ. 9.55 காசுகள் உயர்ந்துள்ளது.

Read more: http://www.viduthalai.in/e-paper/81389.html#ixzz33RD5P2U0

தமிழ் ஓவியா said...


அரசு அலுவலகங்களில் புகைப்பிடிக்க தடை கர்நாடக அரசு அறிவிப்பு


கர்நாடகத்தில் அரசு அலுவலங்கள், பேருந்து நிலையம், மருத்துவ மனை ஆகிய இடங்களில் புகைப் பிடித்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன் னிட்டு, சனிக்கிழமை பெங்கருவில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து, கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் கூறிய தாவது:

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 60 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்களால் இறக்கிறார்கள். ஒவ்வொரு 6 வினாடிக்கும் உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் பலியாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமல்லா மல் வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறு நீரகம் ஆகிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன. ரத்தக்குழாய், ரத்த நாளங் களில் ஏற்படும் பாதிப் பால் மாரடைப்பு, பக்க வாதமும் ஏற்படுகிறது. மனைவி கருவுற்றி ருக்கும் போது கணவன் அருகிலி ருந்து புகைப்பிடித்தால், வயிற்றில் இருக்கும் குழந் தையின் மனவளர்ச்சி பாதிக் கப்படும் என தெரியவந் துள்ளது.

உலக அளவில் புகை யிலை பொருட்களைப் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-ஆம் இடத்திலும் இருக் கிறது. இந்தியாவில் 57 சதவீத ஆண்களும், 11 சதவீத பெண்களும், 34.6 சதவீத இளைஞர்களும் புகையிலை பயன்படுத்து கிறார்கள். கர்நாடகா வைப் பொறுத்தவரை 45 சதவீத ஆண்களும், 5 சதவீத பெண்களும் புகையிலை பயன்படுத் துகிறார்கள்.

புகைப்பிடிப்பதைத் தடுக்கவும், புகையிலை உபயோகப்படுத்துவதைத் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை முதல் அரசு அலுவலகங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப் படுகிறது.

புகைப்பிடிப்பவருக்கு மட்டுமில்லாமல் அருகில் இருப்பவருக்கும் பிரச் சினை ஏற்படுவதால், முதல் கட்டமாக அரசு அலுவ லகங்களில் தடையை மீறி புகைப்பிடிப்ப வருக்கு நிச்சயம் தண்டனை வழங் கப்படும். மேலும் பேருந்து நிலையம், மருத்துவ மனை, அரசு அலுவலகங் கள் உள்ளிட்ட இடங்களில் புகைப்பிடிப்பவருக்கு தண் டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இதுதவிர கர்நாடகா வில் புகையிலை விளைச் சலை குறைக்குமாறு தோட் டக் கலைத் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு அருகில் நூறு மீட்டர் சுற்றளவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாட கத்தை புகையிலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81386.html#ixzz33RDGf3jP

தமிழ் ஓவியா said...

சீமாந்திராவுக்கு அடிக்கிறது லாட்டரி சீட்!

திருப்பூர், ஜூன் 1- திருப்பதி ஏழுமலையான் என்ற கல் முதலாளிக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ளது. 11 டன் தங்க நகைகளும் உள்ளன. 4000 ஏக்கர் நிலமும் உள்ளது.

ஆந்திராவிலிருந்து தெலங்கானா, சீமாந்தரா பிரிந்து விட்டதால், அந்தக் கோயிலும் சொத்தும் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இச்சொத்துக்கள் தேவஸ்தானத்துக்கும், கோயில் அமைந்துள்ள சீமாந்திரா வுக்குமே சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்துக்கள் முடங்கிக் கிடக்கின்றனவே தவிர, பொது மக் களுக்கு எள் மூக்கு முனை அளவுகூடப் பயன் கிடையாது.

Read more: http://www.viduthalai.in/e-paper/81381.html#ixzz33RDXEzl8

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை கூறுவது: உலகில் மூன்றில் ஒருவர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி யுள்ளனர். 2013ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஆண்களில் 23.1 சதவீதத்தினரும், பெண்களில் 22.6 சதவீதத் தினரும் இத னால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய், கெட்ட கொழுப்பின் அளவு அதிகம் இவையே இதற்குக் காரணம் ஆகும்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81381.html#ixzz33RDhxYCo

தமிழ் ஓவியா said...


பலே, மணப்பெண்!


தொட்டிலை ஆட் டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.

இதன் பொருள் - பெண் என்றால் பிள் ளையைப் பெத்துப் போட்டு வெறுமனே தாலாட்டிக் கொண்டு இருப்பதல்ல; - அந்தப் பெண்ணுக்குள்ளும் ஆளுமைத் திறன் உண்டு என்பதாகும்.

ஆனாலும் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று எதுகை மோனையில் பேசிக் கொண்டுதான் திரிகிறார்கள்.

ஆண் என்றால் சாட்டை - பெண்ணென் றால் அடிக்கப்படும் முதுகு என்ற நிலை நிலவி வந்தது உண்மைதான்.

பெண்கள் படிக்க ஆரம் பித்தனர் - ஆண்களை விஞ்சி கல்வியில் சாதிக்க ஆரம்பித்தனர் - ஆண் களை முதுகு காட்டச் செய்து விட்டனர்.

காதலிப்பது - கொஞ்ச நாட்கள் ஜாலியாக சுற்றித் திரிவது - அதன் பின் கை விட்டு இன் னொரு பெண்ணைக் கட்டிக் கொள்வது என் கின்ற எஜமானத் திமிர் கொண்ட ஆண்கள் சிலர் உண்டு.

அத்தகைய ஆண் வர்க்கத்தின் முகத்தில் அறைந்தது போல், முதுகுத் தோலை உரித் ததுபோல ஒரு நிகழ்வு!

மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வந்த சரவணன் என்ற பொறியியல் பட்டதாரி, தான் பணியாற்றும் நிறு வனத்தில் பணியாற்றிய ரம்யா என்ற பெண்ணை நான்கு ஆண்டுக் கால மாகக் காதலித்து வந்தான்.

காதலித்த பெண்ணைக் கைவிட்டு - வீட்டார் நிச்சயித்த பெண்ணுக்குத்தாலி கட்டத் திட்டமிட்டான்.

ரம்யாவுக்கு உண்மை தெரிய வந்தது; அடங்கிக் கிடந்த அந்தப் பெண் புலி சீறி எழுந்தது!

நண்பர்கள், உறவினர்கள் 10 பேர்களை அழைத்துக் கொண்டு திருமண மண் டபத்திற்குள் நுழைந்தார். ஆங்கே ஒரே ஆட்டம் பாட்டம்!

ரம்யாவைக் கண்ட சரவணன் ஆடிப் போனான்; அதிர்ச்சி அடைந்தான்.

மணப்பெண்ணிடம் உண்மையைக் கூறினார் ரம்யா! அவ்வளவுதான். ஆவேசப் புயலாகச் சீறி எழுந்தாள் மணப்பெண்! சரவணனின் சட்டையை இழுத்துக் குலுக்கி நான்கு கேள்விகளை நறுக் கென்று கேட்டதோடு நிற்கவில்லை;

தன் கால் செருப்பைக் கழற்றி மண மகனை நாலு சாத்தும் சாத்தினாள்.

காவல்துறையும் வந் தது. திருமணம் நின்றது!

நாலு இடத்தில் இப்படி நடந்தால்தான் நாசகாரர்கள் திருந்துவார்கள்!

பலே ரம்யா!

பலே மணமகள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/81424.html#ixzz33XGDwPhX

தமிழ் ஓவியா said...


80 ஆம் ஆண்டில் ‘விடுதலை’ சந்தாக்களைக் குவிப்பீர்


கழகக் குடும்பத்தவர்களே, தமிழ் இன உணர் வாளர்களே,

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் தந்த அருட்கொடையான அறிவாயுதம் விடுதலை நாளேடு.

இந்த நாளேடு 80ஆம் ஆண்டை அடைகிறது. தமிழில் ஒரு நாளேடு 80 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறுவது என்பதும் - அதிலும் கொள்கை லட்சிய நெறியோடு - வெறியாளர்களை எதிர்த்து, வீறு கொண்டு வேக நடை போடுவது என்பதும் எளிதான செயலா? எண்ணிப் பாருங்கள்.

அக்காலத்துப் பிரபலமான நாளேடுகள் - அதுவும் அரசு ஆதரவு, விளம்பர வருவாய் போன்ற பல்வேறு சலுகைகளைப் பெற்று நடந்த நாளேடுகள்கூட 80 ஆண்டைத் தொடவில்லை.

கொள்கை இல்லாமல், வெறும் சர்க்குலேஷன் என்ற எண்ணிக்கையை எப்படிப் பரப்புவது என்பதையே குறியாகக் கொண்டு, அரை நிர்வாணம், சினிமா, ஜோதிட மூடநம்பிக்கை, ஆன்மீகம் என்ற பெயரில் அதிகமான புராணக் குப்பைக் கதைகளைப் பரப்புதல் போன்ற பாமரத்தனத்தின் பசிக்கு இரை போட்டு தங்கள் வயிறுகளை வளர்த்துக் கொள்ளும் மலிவுச் சுவையால் கொழுத்துக் கொண்டுள்ள ஏடுகள் ஏராளம் உண்டு.

மேற்காட்டிய ஜனரஞ்சகம் என்ற ஏமாற்று வேலைகளாலும், ஆட்சியை அனுசரித்தால் போதும் அமோகமாய் பக்க பக்கமாக விளம்பரங்கள் என்ற நிலவரம் ஒருபுறம்.

இவைகளை ஒதுக்கி மனிதர்களை பகுத்தறிவுவாதிகளாகவும், சமூக நீதிக்கு, எதிரான சக்திகளுக்கு எதிராக சங்கநாதம் செய்யும் பணியை, எந்நிலையிலும் நிறுத்த மாட்டோம் என்ற சூளுரையோடு சுயமரியாதை உலகு சமைக்க, பயணம் செய்யும் இந்த ஏடு, ஒரு தனித் தன்மையான லட்சிய ஏடு!

இதனைப் பரப்ப, நமது தோழர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டாமா?

எனது 50 ஆண்டு ஆசிரியப் பணியை ஊக்குவிக்கும் வகையில், 50ஆயிரம் சந்தாக்களை தந்தீர்கள் - மகிழ்ந்தோம்.

நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினீர்கள். அந்த அரும்பணிக்கு உங்களை அர்ப்பணித்துக் கிளம்புங்கள் தோழர்களே, தோழியர்களே!

தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறினாரே, தமிழன் இல்லம் என்பதற்கான அடையாளம் விடுதலை நாளேடு அங்கு இருப்பதே என்று.

அது கல்லில் செதுக்கப்பட்ட உண்மை என்று காட்டிடும் வகையில், சந்தாக்களை சேர்க்க தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குங்கள் தோழர்களே!

ஒருவர் இரு ஆண்டு சந்தாக்கள் என்ற ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டு உழைத்தால் உடனே 50 ஆயிரத்திற்கு மேல் சந்தாக்கள் கிடைக்காதா என்ன?

திருமணங்களுக்கு சந்தாக்களை அன்பளிப்பாகத் தரும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!

மாணவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் பரிசுகள் தரும்போது, நம் ஏடுகளின் சந்தாவைத் தந்து படிக்கப் பழக்குங்கள் -உங்கள் செயல் திறனில், நமக்குள்ள நம்பிக்கை ஒரு போதும் வீண் போனதில்லை.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/81429.html#ixzz33XGMmFZf

தமிழ் ஓவியா said...


விடுதலைக்கு 12 ஆயிரம்!


கழகத் தோழர்களே! நமது விடுதலை ஏடு 80ஆம் ஆண்டில் எடுத்தடி வைத்து விட்டது. விடுதலையின் பெருமைகளையோ, சாதனைகளையோ புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்களின் மூச்சுக் காற்று அது.

விடுதலை வெள்ளி விழா வேண்டுகோள் ஒன்றைப் பகுத்தறிவுப் பகலவன் வெளியிட்டார் (விடுதலை 6.6.1964).

அதில் அய்யா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை!

ஒழுக்கக் கேடானதும்; மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும் தமிழ் மக்களுக்குச் சமுதாயத் திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடளிக்கக் கூடியதான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை விடுதலை.

விடுதலை பத்திரிகை இல்லா திருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும்.

முதலாவது விடுதலையில் வரும் செய்திகளை நமது தமிழ்நாட்டு அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளும் நல்ல வண்ணம் கவனித்து ஒரு அளவுக்காவது பரிகாரம் செய்து வந்திருப்பதுடன், கவனம் செலுத்தும்படியான நிலையும் ஏற்பட்டு வந்திருக்கிறது. மற்றும் விடுதலை பத்திரிகையானது மற்ற பத்திரிகைக்காரர்கள் யாரும் இருட்டடிக்கும் செய்திகளையும், வெளியிடப் பயப்படும் செய்திகளையும் தைரியமாய் வெளியாக்கி, மக்கள் கவனத்தையும், அரசாங்கத்தின் கவனத்தையும் திருப்பும் படியாய் செய்து வந்திருக்கிறது.

இதையெல்லாம்விட விடுதலை பத்திரிகையானது பார்ப்பன ஆதிக்கத்தையும் அவர்களது அட்டூழியங் களையும் வளர விடாமல் செய்வதற்கு நல்ல பாது காப்பாய் இருந்து வந்திருக்கிறது என்று துல்லியமாக, தெளிவுபடுத்தி இருக்கிறார் தந்தை பெரியார்.

அதன் காரணமாகத் தான், மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், பெரியார் திடலில் விடுதலை பணிமனையைத் திறந்து வைத்தபோது மிக அழகாகவே அவருக்கே உரித்தான முறையில் சொன்னார்கள்.

தமிழர்கள் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் விடுதலை தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். (விடுதலை 2.11.1965) என்றார். உலகில் நாத்திக ஏடு ஒன்று இத்தனை ஆண்டுக் காலம் நடைபெற்று வருகிறது என்பது சாதாரண மானதல்ல! அந்த வகையில் உலகில் உள்ள கோடானுகோடி பகுத்தறிவாளர்கள், நாத்திகர்களின் மதிப்பிற்குரிய அறிவாயுதமாக ஒளிர்கிறது.

ஜாதியால் பிரிந்து கிடந்த தமிழர்களை ஒன்று திரட்டிய சாதனையும், அந்த ஜாதியின் காரணமாக மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தந்ததிலும், மூடநம்பிக்கைகளின் முதுகெலும்பைப் பிளந்து பகுத்தறிவு வெளிச்சம் தந்ததிலும், பெண்ணடிமை ஒழித்த திசையிலும், கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்குச் சட்டப்படியாக உரிமை களைப் பெற்றுத் தந்ததிலும் விடுதலைக்கு நிகர் விடுதலையே!

தமிழ்நாட்டில் ஆசிரியர் என்று சொன்னாலே அது விடுதலை ஆசிரியரைத்தான் குறிக்கும் என்ற நிலை என்றால் அதன் பொருள் என்ன? ஒட்டு மொத்த தமிழி னத்திற்கே நல்லாசானாக அது விளங்கி வருவதால்தான் அந்தச் சிறப்பினைத் தமிழர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

80 ஆண்டு விடுதலை வரலாற்றில் நமது தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்

52 ஆண்டுக் காலம் ஆசிரியராக இருந்து புதிய சாதனை படைத் துள்ளார்கள்.

50 ஆண்டு விடுதலையின் ஆசிரியராக இருந்த நிலையில், அவர்களின் பிறந்த நாளில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டித் தந்தோம். அது புதிய தலை முறையினரைச் சந்தித்துப் புத்தியைக் கூர் தீட்டியிருக்கிறது. இப்பொழுது 80 ஆண்டு வயதை விடுதலை எட்டியிருக்கும் இந்தக் கால கட்டத்தில் மேலும் 12 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டிட முடிவு செய்துள்ளோம்.

இந்த ஒரு மாதத்துக்குள் கழகத் தோழர்களே, பொறுப்பாளர்களே, உங்கள் வீட்டுத் திருமணப் பணிக்கு ஓடியாடிப் பணியாற்றுவதுபோல, இன்னும் சொன்னால் அதற்கும் ஒரு படி மேலாகப் பாடுபட்டு இலக்கை முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விடுதலைக்குச் சந்தா சேர்ப்பது விடுதலைக்காக அல்ல; தமிழரினத்தின் விடுதலைக்காகத்தான் இந்தச் சந்தா சேர்க்கும் பணியாகும்.

அதுவும் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இந்தச் சந்தா சேர்ப்புப் பணியினைத் தொடங்கியிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

மதவாதம் அதிகாரத்திற்கு வந்து இருக்கிறது. ஜாதீயவாதப் பேர் வழிகள் மக்கள் மத்தியில் கொம்பு சீவும் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

இந்தச் சக்திகளை முறியடிக்கும் போர் ஆயுதம் தந்தை பெரியார் நமக்குத் தந்த விடுதலை யல்லவா!

எனவே, கழகத் தோழர்களே, களத்தில் இறங்குவீர்!

தமிழர் இல்லமெல்லாம் சென்று விடுதலையின் அவசியத்தை எடுத்துச் சொல்லுவீர்.

ஒவ்வொரு கழகத் தோழரும் இரு சந்தா சேர்ப்பது என்ற முடிவுடன் வீதியில் இறங்குங்கள். கண் மூடிக் கண் திறப்பதற்குள் இலக்கை எட்டி விடலாமே!

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்பதைச் செயலில் காட்ட களத்தில் இறங்குவீர் கருஞ்சட்டைத் தோழர்களே!

Read more: http://viduthalai.in/page-2/81432.html#ixzz33XGhzB4F

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

16-ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள கோபமும், பொருளா தார நெருக்கடியும், காங்கிரசுக்கு மாற்றாக சரியான ஒரு மூன்றாவது அணி அமை யாததாலும், இது பா.ஜ.க வுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால், தான்தோன்றித்தனமாக நடக்காமல், தன்னடக்கத்தோடு மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்பதே நடுநிலையா ளர்களின் கருத்து.

இந்திராகாந்தி ஆட்சி காலத்திலே, இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப் பட்ட கச்சத்தீவை, ஒப்பந்தங்களை மீறி நடக்கும் ராஜபக்சேவின் சர்வாதிகார அரசி டமிருந்து, திராணியுள்ளதாகச் சொல்லும் பா.ஜ.க அரசு கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

தமிழக மீனவர்களைப் படாதபாடு படுத்தும் சுண்டைக்காய் நாடான இலங் கையின் தலையிலே ஒரு தட்டுத்தட்டி அடக்கி வைக்குமா?

பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம், காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்டு, மாண்புமிகு ஜெயலலிதா அரசின் (ஈகோ) தன் முனைப்பால் முடக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி - சென்னை இடையிலான கப்பல் போக்குவரத்து பயண நேரம் 32 மணி மிச்சமாகும் என்கிற நிலையிலே - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - பா.ஜ.க அரசு நிறைவேற்றுமா?

இந்தியர்களின் கறுப்புப்பண வங்கிக் கணக்கை, இந்தியாவின் இரட்டை வரிக் கொள்கையை காரணங்காட்டி வெளியிட மறுக்கும், சுவிஸ் வங்கியிடமிருந்து பட் டியலை வாங்கி பா.ஜ.க அரசு கறுப்புப் பணத்தை வெளிக்கொணருமா?

நீராதாரப் பிரச்சினை:- ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய தென் மாநிலங்களில் அணைகளில் 16 பில்லியன் கனமீட்டர் மட்டும் சேமித்து வைக்கப் படுகிறது. ஆனால் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளில் ஆண்டுக்கு 2000 முதல் 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக் கிறது. தென் மாநிலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை நீர்வழிச்சாலை திட்டம் வழியாக இணைத்து அனைத்து மாநிலங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று வெ.பொன்ராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திட்டச்செலவு ரூ. 50,000 கோடி ஆகுமாம்.

பா.ஜ.க அரசு, நீர் வழிச்சாலைத் திட் டத்தை நிறைவேற்றி நாட்டின் பொருளா தாரத்தை உயர்த்துமா?

ஆட்சி அமைக்க, தமிழ்நாட்டின் (அதிமுக 37 இடங்கள்) தயவு தேவையில்லை என்கின்ற நிலையிலே தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நியாயமான நிதியினை பா.ஜ.க அரசு வழங்குமா?

தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட தென்மாநில ரயில் கொள்ளையில் ஈடுபடும் உத்தரபிரதேச மாநில கொள்ளையர்களை, பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்துமா?

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்றாலும்கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு 5 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. சீனாவில் கூட மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8 சதவீதம் ஆகும். உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியராம். இந்த நிலையை மாற்றியமைக்க நரேந்திரமோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்குமா?

சாதாரண காய்கறி முதல் பெட்ரோல், டீசல் விலை வரை உயர்ந்து கொண்டே போகிறது. இதை தடுத்து நிறுத்தி பெட்ரோல், டீசல் விலையை, பா.ஜ.க அரசு குறைக்குமா?

வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் நீடிக்கிறது, படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை பா.ஜ,க அரசு உருவாக்குமா?

உற்பத்திச் செலவுக்கும் கீழாக, மஞ்சள் விலை விற்பதால், விவசாயிகள் பெருத்த நட்டத்தில் இருக்கிறார்கள், உற்பத்திச் செலவையாவது கணக்கிட்டு, பா.ஜ.க அரசு மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்ய லாமே?

பா.ஜ.க மிகப்பெரிய சக்தியாக உருவெ டுத்திருக்கும் நிலையிலே பா.ஜ.க வில் நிறுத் தப்பட்ட 5 முஸ்லீம்களும் தோல்வியடைந் தது எப்படி? இதற்கான காரணங்களை பா.ஜ.க கண்டறியுமா?

இப்படி ஏராளமான எதிர்பார்ப்பு களோடு, இந்தியத் திருநாட்டின் குடி மகன்கள், ஏக்கப்பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றாமல் புதிய ஏற்றம் தருமா? நல்ல மாற்றம் தருமா? வாழுமா, ஜனநாயகம்! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- கா.நா.பாலு, மேடடூர் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-2/81437.html#ixzz33XGrAPDr

தமிழ் ஓவியா said...


உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்


இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. புதுபுது நோய்களால் ஏராளமானோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டு உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய். முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம்.

மனிதன் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண் களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இவை பெண் களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம் வரை இருக்கும். மேலும் இந்தியர்கள் மற்றும் ஆசியர் களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை. குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவை.

அறிகுறிகள்: மாரடைப்பின் அறிகுறிகளை அடை யாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம்.

நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம். மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம். எனவே நீரிழிவு நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/81408.html#ixzz33XHPpdbQ

தமிழ் ஓவியா said...

மூட்டு வலியும்.. இதயமும்.. சில ஆலோசனைகள்

எலும்புகளை மட்டுமல்ல... இதயத்தையும் பாதிக்கும் மூட்டுவலி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான உடல் வலி...ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான வலி... ஆக, நாமும் சரி, நம்மைச் சுற்றியிருப்போரும் சரி, வலியின்றி வாழ்ந்த நாட்களை எண்ணிவிடலாம்.

சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு வலியின் தீவிரம் எல்லை மீறும் போதுதான் அதை நாம் கவனிப்போம். ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டீர்கள்? என்று ஆரம்பிக்கிற மருத்துவர், வலியின் தொடக்கத்தில் நாம் உணர்ந்து, அலட்சியம் செய்த அறிகுறிகளைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். அப்போது காலம் கடந்திருக்கலாம்.

சின்ன அறிகுறியுடன் உங்களை சீண்டிப் பார்க்கிற வலிகளை சீக்கிரமே அடையாளம் கண்டு கொண்டால், அதன் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் வலி நிர்வாக மருத்துவர் குமார். அந்த வகையில் பரவலாக எல்லோ ரையும் பாதிக்கிற மூட்டுவலிகளைப் பற்றி அவர் கூறியதாவது:-

மூட்டுவலி என்பது பொதுவான பெயர். இதில் ருமட்டா யிட் ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த் ரைட்டிஸ், ஆங்கிலோசிங் ஆர்த்ரைட்டிஸ், கவுட் ஆர்த்ரைட்டிஸ் எனப் பல வகைகள் உள்ளன. எலும்பு மூட்டுகளைப் பாதிக்கும் நோய்கள் இவை எல்லாம்.

மூட்டுவலிக்கு பொதுவான சில ஆலோசனைகள்:

அறிகுறிகள் சின்னதாக இருந்தாலும் அலட்சியப்படுத் தாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகவும். ஆரம்பக் கட்ட பரிசோதனையின் மூலம் நோய் தீவிரமடைவதைத் தவிர்த்து, வலியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்ட காலத் துக்கு, குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும். சுய மருத்துவம் ஆபத்தானது. உடற்பயிற்சிகள் மிக முக்கியம்.

அவற்றின் மூலம்தான் மூட்டுகளில் வலி வராமல் காக்க முடியும்.நோய் வந்த பிறகு பயிற்சி என்பதைத் தவிர்த்து, பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்துப் பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு பயனளிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/81408.html#ixzz33XHXlVfg

தமிழ் ஓவியா said...


நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை


பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய இலைகளையும் சேர்த்து தான் நமக்கு நினைவு வரவேண்டும். அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

கொய்யா இலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல., பல அற்புதமான குணாதிசயங்களை கொண் டுள்ளது. காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யா இலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்து விடும் சிறந்த உணவாகும். இதயநோய், புற்றுநோய், அல் சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களி லிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுவவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

கொய்யா இலையின் பயன்பாடுகள்

நீரிழிவை கட்டுப்படுத்தும்: கொய்யாஇலை ஆரோக் கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப் படுத்தியுள்ளது. இது நீரிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சும் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத் தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளன.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட் கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு தன்மையை கொண் டுள்ளது.

மேலும் இந்த கொய்யா இலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

Read more: http://viduthalai.in/page-7/81409.html#ixzz33XHiLve1

தமிழ் ஓவியா said...

தேங்காயில் புதைந்துள்ள சத்துகள்

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப் படுகிறது.

தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கி யுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

மனிதனுக்கு அழகும் ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அருந்திய உடனேயே புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியது, இளநீர். அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காயை சாப்பிட வேண்டும். ஏனெனில், தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் ஈ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது.

சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந் துள்ளது.

100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண் டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.

புதிய இளநீரில் உள்ள நீரானது நீரிழிவு நோயை போக்க கூடியது. தாய்ப்பாலுக்கு இணையானது. தேங்காய் எண்ணெய் உடலை குளிர்ச்சியுடன் பாதுகாக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு புத்துயிர் ஊட்டுவதில் தேங்காய்க்கு நிகர் தேங்காய் தான். தேங்காய் பாலை மலமிளக்கியாகவும் சிறுநீர் கோளாறுகளுக்கும் எலும் புருக்கி நோய்க்கும் பயன்படுத்துகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-7/81409.html#ixzz33XHvdrwh