Search This Blog

28.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 8

இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.பால காண்டம்

ஆறாம் அத்தியாயம் தொடர்ச்சி

இவர்கள் வந்திருப்பதைக் கேள்வியுற்றுச் சுமதி எதிர்கொண்டு உபசரித்தான்.  அவ்விசாலை நகரத்தில் அன்றிரவைக் கழித்துவிட்டு மறுநாள் விஸ்வாமித்திர முனிவரும் அரசகுமாரர்களும் மிதிலை நகருக்கருகேயுள்ள ஒரு பூஞ்சோலையை அடைந்தார்கள்.  மேலே கண்ட வரலாற்றைப் பின்னர் ஆராய்வோம்.


கடலைக் கடைவதற்குக் காரணம் தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடித் தாம் சாவாமலிருக்கும் பொருட்டு அமுதம் பெற எண்ணிய எண்ணமேயாம்.  இவ்வால்மீகி கூற்றுக்கு மாறாகக் கம்பர் புதியதோர் கதை கட்டினார்.  அதாவது, ஒரு வித்தியாதரப் பெண் வைகுந்தமடைந்து திருமகளைப் புகழ, அவள் மகிழ்ந்து கொடுத்த மாலையை வாங்கிவந்து துர்வாச முனியிடம் கொடுக்க, அம்முனி உவந்து இந்திரனிடம் கொடுக்க, அவன் யானைத் தலையில் வைக்க, அது கையா லெடுத்துக் காலால் நசுக்க அதைக் கண்ட முனி சினந்து, உனது செல்வமெல்லாம் கடலில் விழ, நீ துயருறுக எனச் சபிக்க, அவ்வாறே இந்திரன் வளங்குன்றி வருந்தக்கண்ட தேவர்களும், சிவபெருமானும், நான்முகனும் திருமாலை யடைந்து வேண்ட, அவருத் தரவுப்படி இழந்த செல்வங் களையுடைய கடலைக் கடைந்தனர் என்பதாம்.  இப் புனை கதைக்கு ஆதாரம் வால்மீகி இராமாயணத்தில் ஓரிடத்திலும் கிடையாது.  இதனால், கம்பர் கூறுவன வற்றில் ஒரு சிலவே வால்மீகி போக்குடன் ஒத்திருப்பதும் மிகப்பல மாறுபட்டிருப்பதும் புலனாகும்.


இதனால் கம்பர் தமது மனம் போலெல்லாம் கதையைக் கொண்டு போகிறாரே ஒழிய வால்மீகியைப் பின்பற்றுகின்றிலர்.  இப்புனைகதையைப் படிப்பதால், தமக்குப் பிள்ளைப்பேறு முதலியன கிடைக்குமென மயங்கிப் படிப்போரது அறிவுதானென்னே!  கம்பருடைய கவிகளும் மிகவும் அருமையானவையாக இருந்தாலும், அவை முழுவதும் பொய்ப் புனை கதைகளாகவேயுள.  ஆதலின், அவை முழுவதும் பயனில் சொற்களே ஆகும்.  அதனால் இராமாயணத்தைப் படித்துப் பாராட்டுவதெல்லாம் பயனில் சொற்பாராட்டுதலேயாம் என்று துணிக.


கடலைக் கடைந்ததற்குக் காரணம் அதனுள்ளே புகுந்திருந்த இந்திரனுடைய செல்வங்களைத் திரும்பவும் அடைவதேயென்றால், அசுரரும் ஒருபுறம் கடைந்தன ரென்றால், அறிவிலாரும் ஒப்புமாறில்லை.  ஏனெனில், அசுரர் தேவர்களுக்குப் பிறவிப் பகைவர்.  ஆதலின், வால்மீகி முனிவர் கூறும் காரணமே அறிவுடையார் ஒப்புமாறுளது.  தேவாசுரர்கள் கடலைக் கடைந்தபோது, அவர்களுக்குச் சிவபெருமானாவது, திருமாலாவது, நான் முகனாவது உடனிருந்து உதவியவரல்லர்.


வால்மீகியார் கதைப்படி, முதலில் ஓராயிரமாண்டுகள் கடைந்தும் ஒன்றும் எழவில்லை.  அப்போது வாசுகிப் பாம்பு நஞ்சைக் கக்கிற்று.  அந்த ஆலகாலமென்ற நஞ்சால் யாவரும் வருந்தி அலறிச் சிவபெருமானை அடைந்தனர்.  அப்போது திருமாலும் அங்கே வந்து சிவபெருமானை நோக்கி, சுவாமி!  தேவரீர் தேவர்களி லெல்லாம் தலை சிறந்தவர்.  ஆதலின் முதலில் மரியாதை தமக்காம்.  எனவே, தயவு செய்து நஞ்சையுண்டு காத்தருளும் என்று வேண்டிப் போயினர்.  சிவனாரும் நஞ்சையுண்டு உலகத்தாரைக் காத்தார்.  இவ்வர லாற்றைக் கூறாது நஞ்சும் பிறையும் கடலில் தோன்றின; அவற்றைத் திருமால் மங்கைபங்கனுக்களித்தார் என்று கம்பர் கூறுகிறார்.  இவை உண்மையை மறைக்கும் தன்மைகளாம்.  இவர் வைணவ ஆரியரிடம் தயவு பெற வேண்டினமையின், இவ்வாறு மறைத்தனர் போலும்.  இவரைப் போலவே வால்மீகி மொழிபெயர்ப்பாளராகிய வைணவப் பண்டித அநந்தாச்சாரியார் இவ் வரலாற்றை மூலத்தை மட்டும் பதித்து மொழிபெயர்க்காது விட்டிருக்கிறார்.  இதுவே கம்பர் போக்குக்கும் ஒரு தகுந்த எடுத்துக்காட்டாம்.  ஆனால், பண்டித நடேச சாஸ்திரி யாரும் மன்மதநாததத்தரும் தங்கள் மொழி பெயர்ப்பில் நன்றாக இவ்வரலாற்றை மொழிபெயர்த்துள்ளார்கள்.


கடலிலிருந்தெழுந்த பெண்களில் வாருணி என்பவளைத் தேவர்கள் கைப்பற்றி மயிர்கூச்சடைந்து தழுவினர் என்றும், அசுரர் அப்பெண்ணை ஏறெடுத்தும் பார்த்திலர் என்றும் வரலாறு கூறுவதால், தேவர்கள் காமிகளென்பது புலனாகிறது.  அசுரர் காமத்தில் ஈடுபடாதவர் போலும்.  சுராபானம் செய்பவர்.  அதாவது கள்ளைக் (சுரா-கள்) குடிப்பவர்கள் சுரரென்றும் சுராபானம் செய்யாதவர்கள் அசுரரென்றும் பெயர் பெற்றதற்கொப்ப, இங்கே சுரர் காமிகளாயிருந்ததையும் காண்கின்றோம்.


அமுதமெழுந்தபோது, சுராசுரர் அதுபற்றிப் போரிட்டனர்.  அதுதான் நல்ல சமயமென்று திருமால் மோகினி யுருவெடுத்து அதைத் தூக்கிச் சென்றனர்.  இந்திரன் அசுரரையெல்லாம் கொன்று திருமாலைப் பணிந்து அமுதம் பெற்று வாழ்வடைந்தான்.  இதனால் திருமால் செய்த வஞ்சகம் புலனாகிறது.  முன்னரும் திருமால் இந்திரனுக்காகச் செய்த தீரச் செயல்களையும் கண்டோம்.  இவ்வாறு வஞ்சகச் செயலைத் திருமாலின் மேல் ஆரியர் ஏற்றினர்.


தன் மக்களாகிய அசுரர் மடிந்தமை கண்டு வருந்தி, இந்திரனைக் கொல்லத் தகுந்த பிள்ளையை அடையத் திதி தவம் புரிகின்றனள்.  அதைத் தெரிந்த இந்திரன் அவளையடைந்து அவளுக்குப் பணிவிடை செய்து, அவளை ஏமாற்றி அவளோடு உடன் வாழ்கின்றனன்.  தவம் செய்பவளாகிய திதிக்கு உடம்பு பிடித்தல் முதலிய பணிவிடைகளையும் அவன் செய்தனனாம்.  திதியும் அதற்கு இணங்கியிருந்தனளாம்.  அவள் செய்த தவத்தின் மேன்மைதானென்னே!  முழுமகனாம் இந்திரனைத் தன் உடம்பு பிடித்தல் முதலிய பணி விடை செய்யத் திதி இடங்கொடுத்தனளே.  இவளுடைய பெண் தன்மை தானென்னே!  இவள் தன் சக்களத்தி மகன் என்பதுபற்றிப் போலும், இத்தகாத செயல்களுக்கு அவள் இடங் கொடுத்தனள்.  காமியும் வஞ்சகனுமாகிய இந்திரன், கருப்பமுற்றிருக்கும் தன் பெரிய தாயாராகிய போது, ஒரு நாள் அவள் தலைமாடு, கால்மாடாக, கால்மாடு தலைமாடாக மாறிப் படுத்தனளாம்.  அதனால், அவள்தான் ஒழுக்கங் கெட்டவளாம்.  என்னே இவ்வாரியார் தம் ஒழுக்கத்தைப் பற்றிய கோட்பாடு!  இதனை ஒரு பெரிய ஒழுக்கக் கேடாகக் கொள்கின்றனரே!


உடனே இந்திரன் தனது பெரிய தாயாராகிய திதியின் பெண் குறிக்குள்ளே நுழைகிறான்.  என்னே இப்பாதக னின் இழி செயல்!  தன் பெரிய தாயாரின் குறிக்குள்ளே நுழைந்து கருப்பையை யடைகிறான்.  அங்கிருந்த சிசுவை இரக்கமில்லாமல் அது அழ அழ ஏழு துண்டு களாக வெட்டுகிறான்.  இவ்வாறு சிசுக் கொலை, கருவழித்தல் முதலிய மனத்தினாலும் நினைக்கமுடியாத பெரும் பாதகங்களை இந்திரன் செய்கிறான்.  தலைமாறிப் படுத்ததைப் பெரிய குற்றமாகக் கருதும் ஆரியர், இந்திரனுடைய இவ்விழி செயல்களைக் குற்றமாகக் கருதாது இந்திரனைப் பாராட்டுகின்றனர்.  இவ்விந்திர னுக்காக நான்முகனும், திருமாலும் பலவுதவிகளைச் செய்கின்றனர் என்றும் கதைகளெழுதுகின்றனர்.  தனது தந்தைக்கு முதல் மனைவியாகிய திதியின் பெண் குறியை அவள் தூங்கும்போது பார்த்து அதன் வழியாகக் கருப்பையில் நுழைய இப்பாவி இந்திரனின் மனம் எவ்வாறு துணிந்ததோ?  இவ்வளவு ஆபாசமான கதைகளையெல்லாம் கம்பர் எவ்வாறு தமது பாடலில் எழுதுவார்?  அவர் தமிழ் மகனாதலின் இவைகளை யெல்லாம் ஒழித்துச் சுருக்கமாக ஒரே பாடலில், திதி தவம் செய்வதை உணர்ந்த இந்திரன் அவளையடைந்து பணிந்திருந்து, அவள் வயிற்றிலிருந்த குழந்தையை ஏழு கூறுகளாக வெட்டினன் என்று கூறிவிடுகிறார்.  

அப்பாடல் வருமாறு :-

கேட்ட வாசவன் அன்னவட் கடிமையிற் கிடைத்து
வாட்ட மாதவத் துணர்ந்தவள் வயிற்றுறு மகவை
வீட்டி யே யெழு கூறுசெய் திடு தலும் விம்மி
நாட்ட நீர்தர மருத்தெனும் நாமமு நவின்றான்.

இப்பாற்கடல் கடைந்ததும், திதி தவம் செய்ததும் இந்திரன் கருவழித்ததுமாகிய வரலாறெல்லாம் கங்கை வரலாறு கூறுமுன், சோனை நதிக்கரையிலுள்ள ஒரு சோலையில் நடந்ததாகக் கூறுகிறார்.  இது பெரிய பிழை.  முதல் நூலாசிரியராகிய வால்மீகி முனிவரோ, இக்கதை விசாலை என்னும் நகரம் உண்டாவதற்கு முன், அங்கிருந்த சோலையில் நடந்ததாகக் கூறுகிறார்.  இது ஒரு முக்கியமான மாறுபாடே.  விசாலை நகரத்திற்குக் கங்கையைக் கடந்து கோசிப முனிவரும் வந்தனர்.  அவ்வூர் மன்னன் உபசரிக்க அங்கு அன்று தங்கி மறுநாள் மிதிலை கண்டனர் அம்மூவரும் என்று கம்பர் கூறுகிறார்.  விசாலையைப் பற்றி விசாரித்ததும் அதன் பழைய வரலாறு கூறியதுமாகிய ஒன்றும் அவர் குறித்திலர்.


இவ்வாறு கம்பர், வால்மீகி கூறுவதை மாற்றி மாற்றியும், மறைத்து மறைத்தும், புதுவது புதுவது புனைந்தும் தம் பாடல்களைப் பாடிப் போகின்றனர்.  இனி, மேற்செல்லுதும்.

                                       ----------------------- ”விடுதலை” 28-06-2014

28 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


ஏன் காக்கவில்லை?

தனது காலை முதலை பிடித்தவுடன் கஜேந் திரன் (யானை) கண்களில் நீர் மல்க ஆதி மூலமே! என்று அலறி அழைத்த வுடன் விஷ்ணு தன் கருட வாகனத்தில் விரைந் தோடி வந்து சக்ராயுதத் தால் முதலையை அழித்து கஜராஜனாகிய யானைக்கு விடுதலை அளித்ததோடு மட்டும் அல்லாமல் முதலை வடிவில் இருந்த ஹு ஹு என்ற கந்தர்வனுக்கு சாப விமோசனம் அளித் தான். இதுபோல மனித னாகிய நாம் ராம நாமத்தை சொல்லி அழைத்தால் நம் இடர் தீர்க்க நாராயணன் ஓடோடி வந்து அருள் புரிவான்.

- திருச்சி கல்யாணராமன் உபந்நியாசம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அதன் மேலாளர் சங்கர் ராமன் கொலை செய்யப் பட்டபோது (அதுவும் கடவுள் சன்னதியி லேயே) ஏன் ஓடி வந்து காக்கவில்லை?

Read more: http://viduthalai.in/e-paper/82960.html#ixzz35tF8R4l2

தமிழ் ஓவியா said...


மாணவிகள், இளம் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை

சென்னை, ஜூன் 27_ வீட்டை விட்டு வெளியில் தங்கியுள்ள மாணவிகள், இளம் பெண்களுக்கான விடுதிகளில் மேற் கொள் ளப்பட வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறை களை தமிழக அரசு அறி வித்துள்ளது.

* பொதுவாக, வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங் கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். இந்த கட்ட டங்கள் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக இருக்க வேண் டும்.

* பெண் விடுதிகளில் பொறுப்பாளர்களாக பெண்கள் மட்டுமே நிய மிக்கப்பட வேண்டும்.

* 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் இருக்க வேண்டும்.

* 24 மணி நேரமும் அனைத்து வாயில்களிலும் பாதுகாவலர்கள் நியமிக் கப்பட வேண்டும்.

* 50_க்கு மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட வேண்டும்.

* விடுதிக் காப்பாளர்கள் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

* பாதுகாவலர்கள் பெண்கள் தங்கியுள்ள விடுதி கட்டடங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது.

* விடுதிகளில் நான்கு புறமும் சுற்றுச்சுவர் இருக்க வேண்டும். வாயில்களில் கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.

* விடுதியை விட்டு வெளி யில் செல்லும் நேரம், திரும்பும் நேரத்தை விடுதி காப்பாளர் பதிவு செய்ய வேண்டும்.

* விடுதியில் தங்கி இருப் பவர்களை பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை மட்டு மே அனுமதிக்க வேண்டும்.

* சிறு வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் விடுமுறை நாட்களில் வீட் டிற்கு அனுப்பும்போது, பெற்றோர், பாதுகாப்பாள ருடன் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

* பெற்றோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாது காப்பளர்களுக்கும் புகைப் படத்துடன் கூடிய அடை யாள அட்டை வழங்கப் பட வேண்டும்.

* விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களது தொலைப்பேசி எண் மற்றும் முகவரியை காப்ப கத்தின் முன்வாயிலில் எளிதில் காணக் கூடிய வகை யில் வைக்கபட வேண்டும்.

* விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களை உள்ளூர் காவல் துறை யிடமிருந்து அனுமதி பெற்று, முழுமையான பரிசீலனைக்குப் பின்னரே நியமனம் செய்ய வேண்டும்.

* தொற்று நோய் உள் ளவர்களை நியமிப்பதை தவிர்க்க, உள்ளூர் அரசு மருத்துவமனையால் சான்ற ளிக்கப்பட வேண்டும்.

* அரசு அல்லாத நிறுவனங்களால் நடத் தப்படும் காப்பகங்களில் நியமிக்கப்படும் விடுதி காப்பாளர் மற்றும் பாது காவலர்களுக்கு போதுமான அளவு ஊதியம் வழங் கப்பட வேண்டும்.

* அனைத்து விடுதி களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

* பதிவு செய்யப்பட்ட விடுதிகள் குறித்த பட்டியல் முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். காவல் துறையினர் இரவு நேரங்களில் விடுதிகளை கண்காணிக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை ரோந்து பணி பதிவேடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

* குழந்தைகள் உதவி எண் 1098அய் பயன் படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த விளம் பரம் செய்ய வேண்டும்.

* பாலியல் வன்முறை யை முற்றிலும் தடுக்க அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை நடை முறைப்படுத்த விடுதிகளின் உரிமையாளர்களும், பெற் றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண் டும்.
இவ்வாறு முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/82975.html#ixzz35tG6PGuU

தமிழ் ஓவியா said...


உங்கள் எதிரிகளை அழிக்க இதோ ஒரு வேடிக்கையான வழி!நம்மில் பலரும் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு மிக மிக வேகமாக, அளவுக்கு அதிகமான - ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்காக ஏதோ ஒரு பி.எச்.டி., (Ph.D.) ஆய்வே செய்வது போல் முடிவு எடுத்து, மாதக் கணக்கில் நேரம், நினைப்பு, உழைப்பு, (பணம்) நிதி முதலியவைகளை தேவைக்கு அதிகமாகவே செலவழிப் பார்கள்.

எடுத்துக்காட்டாக, தங்களது பிள்ளை உயர்நிலை மேனிலைப்பள்ளி மட்டத்தில் படிப்பை, முடித்து (அதற்கும் Graduation) பட்டம் பெறுதல் என்பது போன்ற நிகழ்ச்சி வைத்துத்தான் அமெரிக்காவில் பள்ளிகளிலிருந்து வெளியே (பாஸ் செய்த பிறகு) செல் லும் மாணவர்களை ஊக்கப்படுத்த, பெற்றோர்கள், நண்பர்கள் முன்னி லையில் நடத்திடுவர்.

இது ஒருபுறம் இருந்தாலும் அடுத்து பிள்ளைகளை எந்த மேல் படிப்பு கல்லூரிக்கு பல்கலைக் கழகத்திற்கு அனுப்புதல் என்று முடிவு எடுப்ப தற்குள் தலையைப் பிய்த்துக் கொள் ளுவது அங்கே சர்வ சாதாரணம்! (பெற்றோருக்கு பொறுப்பு இருப்பதால் தான் அந்தக் கவலை; மற்றும் நிதிச் சுமைப் பொறுப்பும் உள்ளதே) அதற்காக பல மாத இடைவெளியில் ஊண் - உறக்கம் இன்றிக்கூட பலரையும் அணுகி அறிவுரை - ஆலோசனை கேட்பார்கள். நம் நாட்டில் அவ்வளவு தூரம் ஆராய் வார்களா என்றால் அதில் சில பெற்றோர்கள் 75 அல்லது 80 விழுக்காடு கவலை எடுத்துக் கொள்ளும் நிலை உண்டு.

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் சேரத்தான் என்பது ஒரு உதாரணத்திற்குச் சொல்லப்பட்டதே தவிர வேறில்லை!

அதே போன்று நம் நாட்டில் பெண் பார்ப்பதற்கு - மகளிர் பலர் புடவை, நகைக் கடைகளில் சென்று பொருள் வாங்கு வதிலும் சரி, ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி - கேள்வி மேல் கேள்வி, பல புடவைகளை சளைக்காமல் சர்வே செய்தல் இவைகள் எல்லாம் உண்டு; காரணம் பணம் அதிகம் கொடுத்து வாங்கும்போது; கவலையோடு ஆராய வேண்டாமா?

(மருந்துகளை டாக்டர்கள் பரிந் துரைத்த நிலையில் அவசரமாகச் சீட்டைக் கொடுத்து வாங்கிடும் இவர்கள் அதன் காலக் கெடுவைப்பற்றிக்கூட (Expiry Date)
கவனித்து ஆராய்வதில்லை. சில நேரங்களில் காலாவதியான மருந்து களைக்கூட கவனிக்காமலே உட் கொள் ளவும் செய்கின்றனர்!)

அதிக தகவல்களைச் சேர்த்து, மாய்ந்து மாய்ந்து அதன் பிறகே இறுதி முடிவு என்று செயல்படும் வழமை உள்ளவர்கள் மனோ தத்துவ ரீதியில் ‘Information Bias’ தகவல் தேடிடும் சார்பு நிலை மையாளர் என்றே பெயரிடப்பட்டுள்ளனர்!

தேவைக்கு அதிகமான - களைப்பும், சோர்வும் அடையும் அளவு மண்டை யைக் குடைந்து கொள்ளுதல் பற்றி உளவியலாளர்கள் கூறும்போது,

உங்கள் எதிரிகளைத் தோற்கடிக்க நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம்; மிக அதிகமான தகவல்களை அவர்களுக் குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள் குழப்பத்தில் ஊறியே அவர்கள் தோற்று விடுவார்கள் என்று வேடிக்கை யாகச் சொல்கிறார்கள். அதற்குத்தான் சதா தகவல் தேடும் சார்பாளர்களாக அவர்கள் அமர்ந்து எளிதில் முடிவு எடுக்க வேண்டிய முடிவுகளைக்கூட, மண்டை பிளந்து, ‘Cerebral Hemorrhage’ மூளையே ரத்தக் கொதிப்பின் உச்சத் திற்குச் சென்று, மூளை வெடித்தது மாதிரி ரத்தம் வழியும் அவலத்திற்கு சென்று விடுகிறார்கள் என்று பரிதாபப்பட்டுக் கூறுகிறார்கள்!

எனவே, எண்ணித் துணியுங்கள்; என்பதன் முழுப் பொருள் புரிகிறதா?

தேவைக்கேற்ற (ஓரளவு) தகவல் களை வைத்தே முடிவுக்கு வாருங்கள் - பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு காணுங்கள்.

அதற்காக அளவு மிஞ்சிய தகவல் திரட்டி பயனற்றுப் போகாதீர்கள் என்பது நல்ல உளவியல் சார்ந்த அறிவுரைதானே!

என்ன பின்பற்றுவீர்களா? எதிரி களை அடக்க ஏராள தகவல் களைத் தீனியாகத் தந்தால் அது செரிக்குமா? செரிமான மாகாமல் வயிற்றில் புரட்சி உண்டாக்கி சோதனைக்கும் சோர்வுக் கும் ஆளாக்கும் அல்லவா அது போலத் தான்.

அளவுக்கு அதிகமானால் அமிர்த மும் நஞ்சு - என்பதற்கு இதனையும் ஒரு புது விளக்கமாக - உளவியல் ரீதியில் எடுத்துக்கொண்டு, ஒரு குறிப் பிட்ட அளவிலேயே தெளிவான, குழப்பமில்லாத முடிவு எடுங்கள் - வெற்றி நிச்சயம்!


- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/e-paper/82964.html#ixzz35tGUue4m

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை


சரித்திரத்தை புராணத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

Read more: http://viduthalai.in/e-paper/82962.html#ixzz35tH7kZ64

தமிழ் ஓவியா said...


எங்க மகேசனைப் பார்த்தீங்களா - அந்த மணல்மேடு புழுதிக்குள்ளே!


இறங்கிவிட்டது! இறங்கி விட்டது!! செவ்வாய் கிரகத்திலே வைக்கிங் இறங்கி விட்டது! செவ்வாய் கிரகத்தின் படங்கள் பூமிக்கு வந்து கொண் டிருக்கின்றன. அந்த வைக்கிங் காமரா அனுப்பிய புகைப்படங்களிலே.... கங்கையை தலையில் சுமந்து களி நடனம் புரியும் எங்கள் சிவபெருமான் படம் விழுந்து விட்டதா?

சுடர் முகம் தூக்கி சூரனை அழித்த, சூலாயுதக் கடவுள் சுப்ரமணியன் போஸ் கிடைத்ததா?

தங்கத் தாமரையில் வீற்றிருக்கும் எங்கள் குலச் செல்வி சரசுவதி படம் வந்து விட்டதா?

வள்ளியோடு பள்ளிகொண்டு துள்ளி விளையாடும் எங்கள் சல்லாப முருகனுமா கிளிக் ஆகவில்லை!

கூரான கற்கள் படிந்த புழுதி களையும், மணல் மேடுகளையும் தான் வைக்கிங் படம்பிடிக்க முடிந் ததா?

அய்யோ, செவ்வாய் கிரகத்தில் எங்கள் கடவுள்கள் ஒன்று கூட இல்லையா? அவர்களெல்லாம் போன இடம் எங்கே? வாழும் இடம் எங்கே?

வைக்கிங்கே, வைக்கிங்கே! அமெரிக்கா அனுப்பிய வைக்கிங்கே!! எங்கேயாவது, எப்படியாவது எங்கள் கடவுள்களை தேடிப் பிடித்து, அவர்களின் முகவெட்டை இங்கே பூமிக்கு அனுப்பி, இங்கே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் நாத்திக பிண்டங்களின் நாவை அடக்க மாட்டாயா?

வாயைப் பிளந்து வைகுண்டத்தைக் காட்டியவனின் காலடி பிடித்துக் கிடக்கும் காருண்ய சீடர்கள் நாங்கள்! கடைசியில் எங்கள் வாயிலும் வைக்கிங்கே, நீ எடுத்து வரும் மண்தான் விழப் போகிறதா? அந்தோ, வைக்கிங்கே! அய்யகோ விஞ்ஞானமே! அழுது புலம்புகிறோம்; எங்களை ஆற்றுவாரில்லையா? தேற்றுவாரில்லையா?

பூமியை ஆட்டி வைக்கும் எங்கள் புண்ணிய தெய்வங்களே, நீங்கள் உண்மையிலேயே எங்கேதான் இருக்கிறீர்கள்? சொல்லித் தொலை யுங்களேன்! அங்கேயாவது அமெரிக் காவைப் பிடித்து ஒரு விண்வெளிக் கோளை அனுப்பி வைக்க முயற்சி செய்கிறோம்.

- விடுதலை, 22.7.1976 (சென்சாரால் வெட்டப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHcpegl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங்களோடு இருக்கி றவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகுநாளாக இருந்து வருபவர்கள்;

இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டி யவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்று சொல்லு வதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHoOPf9

தமிழ் ஓவியா said...

ராமனின் மிருகத்தனம்

சீதை நெருப்பில் இறங்கி வந்தும்கூட, ராமனுக்கு அவள் மீதுள்ள சந்தேகம் தீராமல் போய்விட்டது. கடைசியாக, கதையின் முடி வானது சீதை 5 மாத கர்ப்பத்துடன் தனியே காட்டிற்குக் கொண்டுபோய் விடப்பட்டாள் என்று முடிந்தது.

இந்தக் காரியம் எப்படி மன்னிக்கப்படக் கூடியது என்பது விளங்கவில்லை. உலக ஒப்புதலுக்காகச் செய் யப்பட்டது என்றாலும், இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு என்ன நீதி, படிப்பினை ஏற்பட்டு விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.

இதைப் பார்க்கின்றபோது அதாவது, தனது மனைவி யை 5 மாத கர்ப்பத்துடன் துஷ்ட ஜந்துக்கள் வாழும் கானகத்தில் கொண்டுபோய் தனியே விட்டு வரும்படிச் செய்தவன், தாடகையைக் கொன்றதும், சூர்ப்பனகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படிச்செய்ததும் ஓர் ஆச்சரியமென்று சொல்லமுடியாது.

ஆகவே, ராமன் ஆண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு வாலி, ராவணன் வதையும், சுக்ரீவன், விபீசணன் நேசமும், ராமன் பெண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு தாடகை வதம், சூர்ப்பனகை பங்கம், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது முதலியவையும் தக்க அத்தாட்சிகளாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHunLY5

தமிழ் ஓவியா said...


அய்யா தீட்டியது - ஒரு சிறு உரையாடல்


மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டு போகின்றது, அம்மன் விக்கிரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டு போகின்றது, விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை, மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம் முத்து ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது, அச்சு ஒடிகின்றது.

இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில் இந்த விக்கிரகங்களில் புனிதத் தன்மை அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா! தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோட்டீஸ்வரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் - பாப்பராய் போகிறான் என்பதை பார்த்தும் கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்.

இன்னும் ஒன்றுதான் - அப்புறம் ஒன்றுமில்லலை. துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய் போன சாமி இருக்குதுண்ணு நினைக் கின்றீர்கள்.

மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தை படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான் கடவுள்.

பதில்: சரி. அப்படியானால் அந்தக் காரணத்தை - கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)

மூடர்: கடவுளை படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள் தனமாகும்.

பதில்: அப்படியானால் உலகப்படைப்புக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள் தனமாகும்.

மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்.

பதில்: சரி.நல்ல காரியமாச்சு. சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.

-சித்திரபுத்திரன், குடிஅரசு (4.1.1931)

Read more: http://viduthalai.in/e-paper/82995.html#ixzz35tI6dfGi

தமிழ் ஓவியா said...


பைபிளில் ஜாதி வெறி!


அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். ஆவியிலே நீதியுள்ளவ ரென்று விளங்கப்பட்டார். தேவ தூதர்களால் காணப் பட்டார். புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்; உலகத்திலே விசுவாசிக்கப்டடார். மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேவு 3:16)

இதில் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பதும், புற ஜாதிகளிடத்திலே பிரசங்கிக்கப்பட்டார் என்பதும் கவனிக்கும் பொழுது தேவன் (ஏசு) என்று சொல்லக்கூடியவரும்;

சாதாரண மனிதனைப் போல மாம்சத்திலேயே உண்டாகினார் என்பதும் அவர் தேவ தூதர்களால் காணப்பட்ட நேரத்தில் புற ஜாதிகளிடத்திலும் பிரசங்கிக்கப்பட்டார் என்பதைப் பார்க்கும் பொழுதும் இவர்கள் மதத்திலும், ஜாதி வெறிகள் அன்றே இருந்திருக் கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

அந்த தேவன் தூதர்களின் கண்ணில் மட்டுமே காணப்பட்டார் என்பதும் மற்ற விசுவாசித்து ஜெபம் தொழும் அனைவருடைய கண்ணிலும் அவர் காணப் படவில்லை என்பதும் இது எவ்வளவு அப்பட்டமான பொய் கதையை புகுத்தியுள்ளார்கள் என்பதை அவர்களின் பைபிள் வாசகங்களே நிரூபித்துக்காட்டுகின்றன. இதை நம்புகிறவன் மடையன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது உண்மைதானே!

தகவல்: ச.இராமசாமி, சென்னை-18

Read more: http://viduthalai.in/e-paper/82992.html#ixzz35tIIjl6B

தமிழ் ஓவியா said...

குட்டி கல்லுச் சாமி!

ஒரு கிழவர் தன் பேரனான சிறுவனுடன் கோவில் ஒன்றுக்குச் சென்றார். அந்தப் பையனிடம் கற்சிலையைக் காட்டி, அதைக் கும்பிடும்படி கேட்டுக் கொண்டார். சுட்டிப்பயல் உடனே, கல்லை எதற்குத் தாத்தா கும்பிடச் சொல்கிறீர்கள்? என்று கேட்டான்.

உடனே கிழவர், இது கல் இல்லை. கடவுளின் சிலை. இதைக் கும்பிடு என்று கூறினார். பையனும் கைகூப்பிக் கும்பிட்டான் - அந்தக் கற்சிலையை. சாமி தரிசனம் முடிந்ததும் அருகில் இருந்த ஓட்டலுக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றார்கள்.

சோற்றில் சிறு கல் ஒன்றைப் பார்த்துவிட்ட அந்தப் பையன் உற்சாக மிகுதியால், தாத்தா! தாத்தா!! குட்டி சாமி இதோ என்று கும்பிட ஆரம்பித்து விட்டான். உடனே கிழவர் செய்வதறியாது, உடனிருந்தவர் களுடன் கூடி தானும் சிரித்து விட்டார்.

நன்றி: மலையாள மனோரமா, (1979 - மே 3-ஆம் வாரம்) தமிழாக்கம்: ச.ராமசாமி

Read more: http://viduthalai.in/e-paper/82992.html#ixzz35tIRGuma

தமிழ் ஓவியா said...


இன்று (ஜூன் 27) உலக நீரிழிவாளர் தினம்நீரிழிவு சர்க்கரை வியாதி என்ற உடனேயே இன்று பெரும்பாலானோர் பயத்தில் மூழ்கிவிடுகின்றனர். அக்காலத்தில் இயற்கைக்கு உகந்த உணவை உண்டு வந்தனர். ஆகையால் சர்க்கரை நோய் அவர்களைத் தாக்கவில்லை, இன்று நாம் பலவகையான உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம் ஆகவே எளிதில் சர்க்கரை வியாதிக்கு ஆளாகிவிடுகிறோம் என்றும் சிலர் கூறுவார்கள். மனிதர்களுக்கு நாகரிகம் வளர வளர வசதிகள் பெருகுகின்றன. ஆகவே நாகரிக ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்கிறோம். உடலும் தன்னை மாற்ற முயல்கிறது. இதுதான் பரிணாமவளர்ச்சி என்று கூறுகிறோம். கடந்த 200 ஆண்டுகளில் பல உயிர்க்கொல்லி நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி இருக்கின்றன. இதற்குக் காரணம் மருத்துவத் துறையின் வளர்ச்சி. உடலில் உள்ள சர்க்கரை அளவை நிரந்தரமாக கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் உலகமெங்கும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்துகொண்டு வருகின்றனர். முன்பு சர்க்கரை நோய் வந்தவர்கள் உடல் பாகத்தில் ஏதாவது பாதிப்பு ஏறப்பட்டால் அந்தப் பாகத்தையே வெட்டி எடுத்துவிடும் நிலை இருந்தது. இன்று அப்படி அல்ல.

பாகிஸ்தானின் பிரபல மட்டைப்பந்து வீரர் வாசிம் அக்ரம் தன்னுடைய 31 வயதில் முதல்நிலை சர்க்கரை நோய்க்கு ஆளானவர் (type-1 diabetes) இந்த நிலை நோயுள்ளவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு விரை விலேயே மரணத்தை அடைந்து விடுவார்கள். பிரபல நகைச்சுவை சிரிப்பு நடிகர் உசிலைமணி இந்த type-1 diabetes
தாக்கத்தால் நீண்ட நாட்களாக மிகவும் வேதனைக் குள்ளாகி இறுதியில் மரணமடைந்தார்.

ஆனால், இன்று எந்த வகை சர்க்கரை நோயானாலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நீண்ட நாட்களாக உயிர் வாழமுடியும். மிகவும் ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு உயரும் தன்மையை கொண்ட வாசிம் அக்ரம் கூறுவதைக் கேளுங்கள்.

தொடக்கத்தில் எனக்கு type-1 diabetes உள்ளது என்றவுடன் என்னுடைய பயிற்சியாளர்கூட பயமுறுத்தி விட்டார். பாகிஸ்தானில் பெரிய மருத்துவர்கள் கூட என்னை அச்சுறுத்தினர். முக்கியமாக மட்டைப்பந்து விளையாட்டைக் கைவிடக்கூறினார்கள். ஆரம்பத்தில் எனக்கு ஒரு பயம் தான் இருந்தது. என்னுடைய ஆஸ்திரேலிய நண்பர்கள் சில இந்த வகையான சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்தும் இன்றும் ஆரோக்கியமாக வாழும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்ட போது மிகவும் வியப்பாக இருந்தது. மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தனர். முக்கியமாக முன்பிருந்ததைவிட அதிக நேரம் உற்சாகமாக தங்களு டைய அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர்.

சில நாள்கள் அவர்களுடன் இருந்து அவர்களின் வாழ்க்கை முறையைக் கற்றுக்கொண்டேன். அது ஒன்றும் பெரிய சிரமமான செயல் அல்ல. பாகிஸ்தான் திரும்பிய பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவழித்தேன். எந்த ஒரு எதிர்மறையான சிந்தனையையும் எடுத்துக்கொள்ளமாட்டேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல புதிய நல்ல திருப் பங்கள் ஏற்பட்டன.

அதிலிருந்து என்னுடைய வாழ்க் கையில் பெரும் பங்கை நீரிழிவு நோய் என்ற மாயையினால் பாதிக்கப்படும் மக்களுக்காக செலவழிக்கத் தொடங்கி விட்டேன். இன்று யாரும் என்னை type-1 diabetes-ஆல் பாதிக்கப்பட்டவர் என்று கூற முடியாது.

கலகலப்பான வாழ்க்கை, உணவுக்கட்டுபபாடு, மருத் துவர்களின் ஆலோசனைஎல்லாவற்றையும் விட குடும்பத் தாரிடமும், பழகும் பிற நபர்களிடமும் இன்முகத்துடன் பழகி சுற்றுப்புறச்சூழலைக் கலகலப்பாக வைத்துக் கொண்டாலே நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.

Read more: http://viduthalai.in/page-8/82993.html#ixzz35tInUCBz

தமிழ் ஓவியா said...

னடா பள்ளிகளில் பாலினங்களைக் குறிப்பிடுவதில் மாற்றம்


கனடாவில் உள்ள பள்ளிகளில் ஆண், பெண் பாலினத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக He/She என்பதற்குக்குப் பதிலாக Xe என்கிற பாலின பொதுச் சொல்லைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கனடியன் சிட்டி பள்ளியின் நிர்வாகம் இந்த மாற்றத்தை அங்கீகரித்து உள்ளது. புதிய மாற்றத்தின்படி He/She என்பதற்குப் பதிலாக ‘Xe’, என்றும், him/her என்பதற்குப் பதிலாக ‘xem’, என்றும், his/her என்பதற்குப் பதிலாக ‘xyr’ என்றும் புதிதாக மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது பள்ளி நிர்வாகம். குழந்தைகளிடையே கழிப்பிடங்களைப் பயன்படுத்தும்போது குழப்பங்கள் இல்லாமல், பாலின வேறுபாடுகள் இன்றி (unisex) கழிப்பிடங்கள் இருக்கவேண்டும் என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர் மைக் லோம்பர்டி கூறும்போது, நாங்கள் குழந்தைகளுக்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். பள்ளியில் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லாவற்றுக்காகவுமே இந்த நடவடிக்கை என்று கூறினார். பெற்றோர்கள் இந்த மாற்றங்கள்குறித்து கேட்கும்போது, ஆறு வயதுள்ள குழந்தைகள் மத்தியில் பாலின அடையாளங்கள் பெரிதாக புரிவதில்லை. அவர்கள் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதில் அவர்களாகவே முடிவெடுக்க வேண்டி உள்ளதால் குழப்பங்களை அடைகிறார்கள். இந்த மாற்றத்துக்கான கொள்கை முடிவு எடுக்கும்முன்பாக விவாதங்களுக்கான கூட்டங்கள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் காரசாரமாகவே நடைபெற்றது. கோபத்துடன் உள்ள பெற்றோர்கள் தரப்பில் செரில் சாங் என்பவர் குற்றச்சாட்டாகக் கூறும் போது, விவாதக்கூட்டத்துக்கு பெற்றோர்கள், உளவியல் நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்கள் என்று யாரையுமே அழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறும்போது, இந்த விவாதம் பொருளற்றது. பிரிக்கும் அரசியலாகி உள்ளது. இதனால், மக்கள் கோபத்துடனும், நிலைகுலைந்தும் உள்ளனர் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/83019.html#ixzz35z6RHjfV

தமிழ் ஓவியா said...


திக்கெட்டும் முரசு கொட்டும் பெரியார் கொள்கைகள்!

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளைத்தலைவர் பேரா. டாக் டர் யுர்லிக் நிக்லசும், துணைத்தலைவர் திரு.சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகள் தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்புத் தொடங்கப் பட்டுள்ளது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) 6.6.2014 (Periyar International Germany Chapter Inc) தொடங்கப்பட்டது.

4ஆம் தேதி கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பவர் பாயிண்ட் மூலம் ஆய்வுரை நிகழ்த்தினார்.

5ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறை மாணவர்களுக்குத் தந்தை பெரியாரின் தன்மான இயக்க மான திராவிடர் கழக வரலாற்றையும், அதன் தொடர் பணிகள் குறித்தும் வகுப்பு எடுத்தார்.

இப்படிப் பல்வேறு நிகழ்வுகளின் மூலம், தந்தை பெரியாரின் பணியினால் தமிழகத்திலும் உலகின் பிறபகுதிகளிலும் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும், அதனால் மக்கள் விடுதலை அடைந்த நிலையையும் அறிந்ததன் விளைவாக, பெரியாரின் பணிகளை ஜெர்மனியிலும் தொடர வேண்டுகோள் விடுத்தார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களின் ஒப்புதலோடு பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்தக் கிளையின் தலைவராக பேரா.டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக சுவன்வோர்ட், செயலாள ராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த ஜெர்மானிய அமைப்பானது பெரியார் பன்னாட்டு அமைப்பின் (அமெரிக்கா) வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்து, தங்கள் நாட்டில் பெரியார் தத்துவக் கொள்கை களை, அவர் காண விரும்பிய சமுதா யத்தைப் படைக்க தன் பணியைச் செய்யும் என பொறுப்பாளர்கள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தனர்.

புதிதாகப் பொறுப்பேற்ற நிர்வாகி களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங்களை வழங்கியும் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பாஸ்கல் வொல்ப் ஸ்பெர்ஜர், லூகாஸ் பைபர், டிமோ பெய்ன் ஆகியோர், பெரியார் புத் தகங்களை அரங்கில் அமர்ந்து விற்பனை செய்தனர்.

தந்தை பெரியார் அவர்கள் 1932இல் மேற்கொண்ட ஜெர்மனி பயணத்திற்குப் பிறகு, இப்போது தமிழர் தலைவர் கொலோன் பல்கலைக்கழக அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளைத் தலைவர் பேரா.டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகி யோரும் கலந்து கொண்டனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையை தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்புத் தொடங்கப்பட் டுள்ளது.

தொகுப்பு: இலக்கியா

நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் (ஜூன் 16-30 2014)

Read more: http://viduthalai.in/page4/83020.html#ixzz35z85WAvs

தமிழ் ஓவியா said...


ஒரு நாட்டுக்கு 37 அலுவலக மொழிகள்


193 நாடுகள் நாடுகளாக அங்கீ கரிக்கப்பட்டவையாகும். 178 நாடு களில் தேசிய அளவில் அலுவலக மொழிகள் உள்ளன. அவற்றில் 51 நாடுகள் பொதுவான அலுவலக மொழியாக ஆங்கிலம் உள்ளது. 28 நாடுகளில் பிரெஞ்சு உள்ளது. 19 நாடுகளில் அரபு மொழியும், 19 நாடுகளில் ஸ்பானிஷ் மொழியும் அலுவலக மொழியாக உள்ளன. 8 போர்த்துகீசிய நாடுகள் மற்றும் மகாவா நாட்டில் போர்த்துகீசிய மொழி அலுவலக மொழியாக உள்ளது. 7 நாடுகளில் எந்த மொழியுமே அலுவலக மொழியாக இல்லாமல் உள்ளன.

27 மொழிகளை அலுவலக மொழிகளாக இரண்டு நாடுகள் கொண்டுள்ளன. அதில் தேசிய மொழி களும் அடக்கம். இவை மாற்றங் களுக்கு உட்படாதவை ஆகும்.

உலகில் அதிக எண்ணிக்கையில் பேசக்கூடிய, 1.2 பில்லியன் மக்கள் தாய்மொழியாகக்கொண்டு பேசக் கூடிய சீன மொழி இரண்டு நாடுகளில் அலுவலக மொழியாக உள்ளது.

சுவாஹிலி மொழி 8 இலட்சம் மக்கள் மட்டுமே தாய்மொழியாகக் கொண்டு, 4 நாடுகளில் அலுவலக மொழியாக உள்ளது. 84 மில்லியன் மக்கள் தாய் மொழியாகக் கொண் டுள்ள ஜாவனீஸ் எந்த நாட்டிலும் அலுவலக மொழியாக இல்லை.

சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எரித்ரியா, தி ஹோலி சி, லக்சம்பெர்க், சான் மரீனோ, சுவீடன், துவாலு, அய்க்கியப் பேரரசு(யூ.கே), அய்க்கிய நாடுகள்(யு.எஸ்) உருகுவே, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் அலுவலக மொழி என்று ஏதும் கிடையாது. அமெரிக்க ஆங்கிலம் மட்டுமே நிறுவனங்களின் மொழியாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில் 23 மொழிகள் அலு வலக மொழிகளாக உள்ளன.பல்வேறு தேசியங்களைக்கொண்டுள்ள பொலிவியாவில் 37 மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளன. முதல் மொழி ஸ்பானிஷ் அல்லது காஸ்டெலினா மற்றும் அந்தப் பகுதி தாய் மொழி.

Read more: http://viduthalai.in/page5/83025.html#ixzz35z8kEHk1

தமிழ் ஓவியா said...


நம் வீட்டில் எந்த நூல்கள்?

20.6.2014 நாளிட்ட விஜய பாரதம் இதழில் அதன் ஆசிரியர் 34 ஆம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு இந்துக்களுக்கு நூலகம் அமைக்கவும் அதில் கீழ்க்கண்ட நூல்கள் அவசியம் இருக்க வேண்டுமென்று கூறுகிறார்.

இதோ ஒவ்வொரு ஹிந்துவின் வீடுகளிலும் சின்னஞ் சிறு நூலகம் அமைய வேண்டும் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் அதில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு ஞாயிறுதோறும் கிறித்துவர் கைகளிலே பைபிள் புத்தகங்களோடு குடும்ப சகிதம் சர்ச்சுக்கு செல்லக்கூடிய காட்சிகளைப் பார்க்க முடியும். ஆனால் நம்முடைய இந்துக்களின் வீடுகளில் நமது சமய புத்தகங்கள் இருக்கின்றனவா என்றால் அது ஒரு கேள்விக் குறி தான்.

குறைந்தபட்ச புத்தகங்களையாவது நமது வீடுகளில் அவசியம் வைத்து இருக்க வேண்டும்.

1) சிறீமத் பகவத் கீதை (இறைவன் மனிதனுக்கு சொன்னதாம்) 2) திருவாசகம் (மனிதன் இறைவனுக்கே சொன்னதாம்) 3) திருக்குறள் (மனிதனுக்கு மனிதன் சொன்னதாம்) 4) ராமாயணம் 5) மகாபாரதம் 6) பாரதியார் பாடல்கள் 7) ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு. 8) அர்த்தமுள்ள இந்து மதம் 9) பஜனை பாடல்கள் 10) சுவாமி விவேகானந்தர் வரலாறு.

இப்படி விஜய பாரதம் இதழ் இந்துக் களுக்கு அறிவுரை கூறி உள்ளது.

அதில் எப்படியோ திருக்குறளையும் இணைத்து விட்டார்கள் ஏமாற்று வேலை தான். இதில் கிறித்துவர்களையும் பைபிளையும் சொல்லிவிட்டு இஸ்லாமியர்களையும், குரானையும் விட்டுவிட்டார்கள். அதே இதழில் மகான்களின் வாழ்வில் என்று தலைப்பிட்டு அதில் எனக்கு உறக்கம் எப்படி வரும்? என்று அம்பேத்கர் அவர்களின் படத்தை போட்டு செய்தியை திசை திருப்பி எழுதி இருக்கிறார்கள். இந்து மதத்தில் இருந்தால் எப்படித் தான் உறக்கம் வரும் அம்பேத்கர் அவர்களுக்கு?. மகான்களின் வாழ்வில் என்று குறிப்பிடும் விஜய பாரதம். அம் பேத்கரை இந்து மதவாதியாக்கி மகான் பட்டம் சூட்டி இருக்கிறது, மறுபக்கம் அம்பேத்கர் சமூகம் இழிநிலை சமுதாய மாக வைத்திருக்கிறது. பார்ப்பனியம் இதுதான் பிஜேபி, ஆர்.எஸ்.எஸின் பிரித் தாளும் சூழ்ச்சி (தாழ்த்தப்பட்ட மக்கள் விஜய பாரதத்தை பார்த்து ஏமாறாமல் இருந்தால் சரி).

எனவே திராவிடர்களாகிய தமிழர்கள், தனக்கு மானமும், அறிவும், சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவும் புரட்சி எண்ணத் தையும் உருவாக்கி மனிதனை மனிதனாக்கி தலைவர்களைப்பற்றி படியுங்கள். தமி ழர்களின் வீடுதோறும் தவறாமல் படிக்க வேண்டிய நூல்கள் கீழ்க்கண்டவைகளாக இருக்கட்டும்.

1) திருக்குறள் 2) விடுதலை, உண்மை 3) குடியரசு 4) ஜாதி ஒழிய வேண்டும் ஏன்? (அம்பேத்கர்) 5) ஆரிய மாயை (அறிஞர் அண்ணா) 6) பாரதிதாசன் பாடல்கள் 7) தந்தை பெரியார் வரலாறு 8) இராமாயண பாத்திரங்கள் (தந்தை பெரியார்) 9) கீதையின் மறுபக்கம் (கி.வீரமணி) 10) தமிழிசைப் பாடல்கள் 11) இராவண காவியம் 12) வாழ்வியல் சிந்தனைகள்

மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தும் (பெரியார் புத்தக நிலையங்களில்) கிடைக் கும். வாங்கிப் படித்து உண்மையை உணர்ந்து மூளைக்கிடப்பட்ட விலங்கை உடைத்தெறிய வேண்டும்.

மதங்கள் மாளட்டும், ஜாதிகள் அழி யட்டும்

சமத்துவம் மலரட்டும்

- அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page6/83026.html#ixzz35z9Qhji9

தமிழ் ஓவியா said...


பவுத்த வெறியர்களின்ஆபாசம் வட்டரக்க விஜித தேரருக்கு பலவந்தமாக சுன்னத்து


இலங்கையில் கடந்த வாரம் தாக்கப் பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்கு தலின் போது தனக்கு சுன்னத்து எனப் படும் விருத்தசேஷனம் செய்யப்பட் டதாகக் கூறினார் என்று அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். மிதவாத பவுத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வட்டரக்க விஜித தேரரை சந் தித்து திரும்பிய அவர் வழக்குரைஞரான நாமல் ராஜபக்ஷ இந்தத் தகவலை கூறியுள்ளார்.

ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள். அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக் குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்ட ரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் வீசி எறியப்பட்டுக் காணப்பட்டார். மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக் கியதாகக் கூறியதாக அவரது வழக் குரைஞர் முன்னதாக கூறியிருந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப் பையே குற்றஞ்சாட்டுகிறார் என்று அவர் வழக்குரைஞர் கூறியுள்ளார்.
-பிபிசி தமிழோசை, 23-_6_-2014

Read more: http://viduthalai.in/page6/83027.html#ixzz35z9bRjhn

தமிழ் ஓவியா said...


இங்கர்சாலின் பொன்மொழிகள்

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து எடுத்து விடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளைத் தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

####

அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங்குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.

Read more: http://viduthalai.in/page6/83028.html#ixzz35z9nQFXv

தமிழ் ஓவியா said...

இதுதான் ஹிந்துத்துவாகலாச்சார, மத மற்றும் அரசியல் இலக்குகளையே ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இந்து தர்மம் எனும் இந்து மதம், இந்து சன்ஸ்கிருதி எனும் இந்து கலாச்சாரம், இந்து ராஷ்டிரா எனும் இந்து தேசம் ஆகியவற்றின் உயர்வுக்காக சேவை செய்வதே தனது கடமையாகக் கொண்டு சங்கம் செயலாற்றி வந்தது.

சங்கத்தின் முன்னாள் தொண் டரால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மீது விதிக்கப் பட்ட அரசின் தடையை விலக்கிக் கொள்வதற்கு, குறைந்த அளவு பொது மக்களின் கண்களுக்குத் தோன்றும்படி யாவது, அரசியல் கோணத்திலான தனது செயல்பாடுகளை சங்கம் கை விடவேண்டுமென்று 1948 ஜனவரியில் சங்கத்திற்கு படேலினால் நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது.

அதன்படி சங்கத்தின் மறைமுகமான செயல் திட்டத்திலிருந்து ஹிந்து ராஷ்டிரா என்ற சொல்லை நீக்கிய சங்கம் தாங்கள் முழுமையான ஒரு கலா சார அமைப்பாகவே செயல்படுவோம் என்று அரசுக்கு உறுதியளித்தது. (பக்கம் 13-_14)

ஹிந்து மதத்தின்பால் தான் கொண் டிருந்த பாசமிகுதியின் காரணமாக சாவர்க்கர் தான் எழுதிய ஹிந்துத்வா என்ற பெயர் கொண்ட நூலில் தான் உருவாக்கி முன்னிலைப்படுத்திய ஆற்றல் நிறைந்த, வலிமை வாய்ந்த செயல்முறையான ஹிந்துத்வா என்ற சொல்லில் தங்கள் நோக்கங்கள் நிறை வேற்றப்படுவதற்கான நல்வாய்ப்புகள் இருப்பதை சங்கம் கண்டுகொண்டது. சாவர்க்கரைப் பொறுத்தவரை ஹிந் துத்துவா என்பது ஒரு மதம் என்ற சாதாரணமான கருத்தைக் கொண்டது அல்ல. அவரைப் பொறுத்தவரை இந்திய தேசத்தின் ஹிந்துக்கள்

(1) ஒரு பொதுவான கலாச்சாரத் தினால் கட்டுண்டிருப்பவர்கள்;

(2) பொதுவான ஒரு வரலாற்றினைப் பெற்றிருப்பவர்கள்;
(3) தங்களுக்கென ஒரு பொது மொழியினைப் பெற்றிருப்பவர்கள்;
(4) தங்களுடையது என்ற இந்திய தேசத்தைப் பெற்றிருப்பவர்கள்;
(5) தங்களுடையது என இந்து என்ற ஒரு தனி மதத்தினைப் பெற்றிருப்ப வர்கள் ஆவர்.

ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர் என்ற முழக் கங்கள் சங்பரிவாரத்தின் அடிப்படை யான, ஆதிக்கம் செலுத்தும் முழக்கங் களாக ஆயின.
ஹிந்துத்துவ அமைப்பின் மறைமுக மான செயல்திட்டம்:

வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து

ஹிந்து என்றழைக்கப்படும் ஒருவன் யார்? சிந்து நதியிலிருந்து தெற்கே கடல் வரை பரவியிருக்கும் பாரதவர்ஷமாகிய இந்த தேசத்தை தனது தந்தையர் நாடாகவும், புனித நாடாகவும், தனது மதம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டி லாகவும் கருதி பாவிக்கும் ஒருவன்தான் ஹிந்து என்பவன்.

வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 38-_39)

தமிழ் ஓவியா said...

சிந்து என்ற சொல்லின் வளர்ச் சியைத் தேடும் நமது முயற்சியில், சன்ஸ் கிருதி என்ற சொல்லையே இதுவரை நாம் சார்ந்து, நம்பி வந்துள்ளோம். தற்போதுள்ள வேறு எந்த சொற் களையும் விட சிந்துஸ்தான் என்ற சொல்லே இந்திய தேசம் என்ற வளர்ந்து வரும் கோட்பாட்டை மேலான முறையில் விவரிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நிலையில் நமது தேடுதல் என்னும் நூலின் நுனியை நாம் விட்டுவிட்டோம். குறுகிய மனப்பான்மையும், பழமைவாத மும் கொண்ட ஆர்யவர்த்தா என்னும் சொல்லின் முக்கியத்துவத்தை சிந்துஸ் தான் என்ற இந்த சொல்லுக்கு அளிக் கப்பட இயன்ற வாய்ப்பினை முறியடிப் பதற்கான அதே நோக்கத்துடன்தான், ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் தொடர்பு ஏதுமில்லாத முறையிலும், கட்சி வண்ணம் பூசப்படாமலும் இந்த சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

எடுத்துக் காட்டாக, ஒரு வல்லுநரின் கூற்றுப்படி, ஆர்யவர்த்தா என்பது

(நான்கு வர்ணங்கள் நடைமுறை இல்லாத ஒரு நாடு உண்மையிலேயே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது மிலேச்சர் நாடு என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆர்யவர்த் தாவோ அதனையும் தாண்டி வெகு தொலைவில் இருப்பதாகும்.)

ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 115)

அதனால், எட்டப்பட்ட முடிவு களைத் தொகுத்துக் கூறும்போது, இந்து எனப்படும் ஒருவன் சிந்து முதல் சிந்து வரை - அதாவது சிந்து நதியிலிருந்து கடல்கள் வரை உள்ள நிலத்தை தனது தந்தையர் (பித்ரு) நாடாகக் காண்பவனாகவும், அந்த இனத்தின் ரத்தத்தின் வழி வந்த வனாகவும், அவனது நுண்ணறி விற்கான முதல் ஆதாரத்தை வேதகால அய்ந்து சிந்துநதிகளில் தேடிக் காணத் தக்கவனாகவும், தொடர்ந்த தனது முன்னேற்றப்பாதையில் தான் எவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அந் நாட்டுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ப வனாகவும் இருக்கும் ஒருவனே இந்து என அறியப்படுபவன்ஆவான்; பொது வான அவர்களது செம்மொழியான சமஸ்கிருதத்தில் விவரிக்கப்பட்டுள்ள அந்த இனத்தின் கலாச்சாரத்தை பாரம்பரியமாகப் பெற்று வந்து அதனையே தனது கலாச்சாரமாகக் காண்பவன் ஆவான்; ஒரு பொதுவான வரலாறு, பொதுவான இலக்கியம், கலை, கட்டடக் கலை, சட்டம் மற்றும் நீதி பரிபாலனம், சடங்குகள், சம்பிரதா யங்கள், விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்குபவன் ஆவான்; அனைத்துக்கும் மேலாக, இந்த சிந்துஸ்தான் என்னும் நாட்டினை புண்ணிய பூமியாக (புனித தேசமாக), தனது மதத் தலைவர்கள் மற்றும் தேவதூதர்கள், குருக்கள், கடவுள் மனிதர்கள் வாழும் தேசமாக வும், வழிபாட்டிற்காக தலயாத்திரை செய்யும் புண்ணிய பூமியாகவும் கருதுபவன் ஆவான்.

ஹிந்துத்துவாவிற்கு மிகமிக முக்கிய மானவையாவன:
ஒரு பொதுவான நாடு (ராஷ்டிரா),
ஒரு பொதுவான இனம் (ஜாதி)
ஒரு பொதுவான கலாச்சாரம் (சன்ஸ்திரி)

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இவற்றை எல்லாம் சிறந்த முறையில் ஒன்றுதிரட்டி மிகச் சுருக்கமா இவ் வாறு கூறலாம்:

எவன் ஒருவனுக்கு சிந்துஸ்தான் ஒரு பித்ரு பூமியாக மட்டுமல்லாமல் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ அவனே ஹிந்து எனப்படுபவன்.

ஹிந்துத்வாவின் முதல் இரு முக்கிய தேவைகளான தேசம் மற்றும் ஜாதி ஆகியவை மிகமிகத் தெளிவாக பித்ரு பூமி என்று குறிப்பிடப்பட்டு பொருள் கொள்ளப்படுவதாகும். அதே நேரத்தில் மூன்றாவது முக்கியத் தேவையான சன்ஸ்திரி (கலாச்சாரம்) மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த முறையில் புண்ணியபூமி என்ற சொல்லால் குறிப் பிடப்படுகிறது. இந்த சன்ஸ்திரி என்பதில் புண்ணிய பூமி எனப்படும் புனித பூமியைக் குறிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள், கொண் டாட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.

- அ. பாலகிருஷ்ணன்

Read more: http://viduthalai.in/page6/83029.html#ixzz35zA2hr5w

தமிழ் ஓவியா said...


அரிது! அரிது!!

அரிது! அரிது!!

ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது.

கடவுளும் மனிதனும்!

கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு!! உண்டு!!!

உதாரணம்:- மனிதன் சுருட்டுப்பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page6/83033.html#ixzz35zB2suJz

தமிழ் ஓவியா said...


நாத்திக அறிஞர் தபோல்கருக்கு அம்பேத்கர் விருது


பூனா, ஜூன் 28-_ பூனாவில் பாலகந்தர்வா அரங்கில் நடைபெற்ற விழாவில் மறைந்த நாத்திக அறிஞர் டாக்டர் நரேந்திர தபோல்கருக்கு 2013-2014ஆம் ஆண்டுக்குரிய பாரத் ரத்னா டாக்டர் பாபாசாஹெப் அம் பேத்கர் விருது அவர் மகள் முக்தாவிடம் அளிக் கப்பட்டது. நாத்திக அறிஞர் நரேந்திர தபோல் கர் ஆதிக்க சக்திகளை எதிர்ப்பதிலும், போதை களிலிருந்து விடுவிக்கும் இயக்கத்தின்மூலமும் சமுதாயத்துக்கு தம்முடைய பங்களிப்பை வழங்கியதால் அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்படுவதாக விழாவில் தெரிவிக்கப்பட் டது.

மகாராட்டிர மாநிலத் துணை முதல்வர் அஜீத் பவார் விழாவில் கலந்துகொண்டு இவ் விருதை தபோல்கர் மகள் முக்தாவிடம் வழங்கினார். விருதுடன் ரூபாய் 1,11,111 தொகையும் வழங்கப்பட் டது. விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதை வழங்கிய மகா ராட்டி மாநிலத் துணை முதல்வர் பேசும்போது, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதிக்குள் சிசிடிவி கேம ராக்களை பூனா மற்றும் பிம்பிரி-சின்ச்வாட் உள் ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பொருத்த உள்ளதாகத் தெரிவித்தார். பூனா மாநகராட்சி கார்பொரேஷன் சார்பில் அதன் தலைவர் சுபாஷ் ஜக்தப், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் அம் பேத்கர் விருது தேர்வுக் குழுத் தலைவருமாகிய டாக்டர் சித்தார்த் தேண்டே ஆகியோர் இணைந்து கடந்த ஆண்டு அம்பேத்கர் விருதுக்கு டாக்டர் நரேந்திர தபோல் கரைத் தேர்வு செய்துள்ள தாகச் செய்தியாளர் களிடம் அறிவிப்பை வெளியிட்டனர்.

சமுதாயப் பணியில் ஈடுபட்டுள்ளவர் களும், எழுத்தாளர்களுமா கிய ராவ்சாஹெப் காஸ்பெ மற்றும் ராம்நாத் சவன் அம்பேத்கர் விருதுக்குரிய வர்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்வதில் இறுதி முடிவெடுத்தனர். அதன்படி நாத்திக அறிஞர் டாக்டர் நரேந்திர தபோல் கர் தேர்வு செய்யப்பட்டார். 2013ஆம் ஆண்டில் ஆகஸ்ட்டு மாதம் 19ஆம் தேதி அன்று ஆதிக்க வெறியர்களால் சுடப்பட் டுக் கொல்லப்பட்டார்.

அவருடைய சமுதாயப் பணிகளை நினைவுகூர்ந்து அவருக்கு 22-6-2014 அன்று வழங்கப்பட்ட அம்பேத்கர் விருதை அவர் மகள் முக்தா பெற்றுக்கொண்டார். விழாவில் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத வாலே, மேயர் சன்சலா கோத்ரே, டாக்டர் பாபா அதவ், நிலைக்குழுவின் தலைவர் பாபு கார்னே, பூனா மாநகராட்சி ஆணையர் விகாஸ் தேஷ்முக், தேசியவாதக் காங்கிரசுக் கட்சியின் பேச்சாளர் அன்குஷ்காகடே, ராம்நாத் சவான் மற்றும் பலரும் விழாவில் பங் கேற்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83041.html#ixzz35zCTGurf

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்


தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்ற வனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/83046.html#ixzz35zCwuW3d

தமிழ் ஓவியா said...


பாலாறா? பாழாறா?தமிழ்நாட்டுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் தொல்லைகள் தலை தூக்குகின்றன. கருநாடகத்தி லிருந்து காவிரிக்குத் தொல்லை என்றால் கேரளாவி லிருந்து முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் முட்டுக்கட்டை!

இப்பொழுது ஆந்திராவிலிருந்து அறைகூவல் இவ்வாற்றின் பிறப்பிடம் கருநாடகம் என்றாலும் 60 மைல் அம்மாநிலத்தில் ஓடி ஆந்திர மாநிலம் குப்பத்தில் கால் பதிக்கிறது. குப்பம் மாவட்டத்தில் 30 மைல் பயணமாகி தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே புல்லூரில் புகுகிறது. வேலூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வழியாக வழிந்தோடி கல்பாக்கம் அருகே கடலில் சங்கமமாகிறது. தமிழ்நாட்டில் இதன் ஓட்டம் 140 மைலாகும்.

இந்தப் பாலாறு வேலூர் மாவட்ட மக்களுக்குப் பால் வார்க்கும் நதியாகும் அம்மாவட்டத்தில் 49 ஆயிரம் ஏக்கர் நிலம் பாலாற்றால் பயன் அடைகிறது. 300 ஏரி குளங்களுக்கான பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாலாற்றங் கரையில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகியவை முக்கிய பயிர்களாகும்.

பாலாற்றின் நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டும் வருகின்றன.

மைசூர் மாநிலத்திற்கும், சென்னை மாநிலத்திற்கும் இடையில் எப்படி காவிரி நீர்ப் பிரச்சினையில் ஒப்பந்தம் போடப்பட்டதோ அதுபோலவே பாலாற்றுப் பிரச் சினையிலும் ஓர் ஒப்பந்தம் 1892இல் போடப்பட்டது.

அதன்படி பாலாற்றில் புதிய அணைகளைக் கட்டக் கூடாது; அணைகளின் உயரத்தையும் நீட்டக் கூடாது.

காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநிலம் எப்படி ஒப்பந்தத்தை எல்லாம் உடைத்துத் தானடித்த மூப்பாக கருநாடகம் நடந்து கொண்டு வந்துள்ளதோ, அதே புத்தியில் பாலாற்றுப் பிரச்சினையிலும் கருநாடகம் நடந்து கொண்டது. ஆனால், பேந்த மங்கலம் என்னும் இடத்தில் ஏற்கனவே இருந்து வந்த அணையை ஒப்பந்தத்தை மீறி 15 அடியிலிருந்து 30 அடியாக உயர்த்திக் கொண்டது மட்டுமல்லாமல் பாலாற்றின் குறுக்கே ராமாசாகர் என்ற புதிய அணையையும் கட்டிக் கொண்டது.

கருநாடக அரசு தன் பங்குக்கு ஒப்பந்தத்தை உடைத்தது என்றால் ஆந்திர அரசு தன் பங்குக்கு ஏதாவது தமிழ்நாட்டுக்குக் கெடுதல் செய்ய வேண்டாமா?

1892 ஒப்பந்தத்தை மீறி குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 20 அடி உயரம் உள்ள 22 தடுப்பு அணைகளை 30 மைலுக்குள் கட்டி முடித்துக் கொண்டது.

இதனால் இயற்கையாகப் பாலாற்றின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீர் செயற்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. அணைகள் நிரம்பி வழியும் தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் வந்து சேர முடியும்.

இதன் காரணமாகவே பாலாறு பாழாறாகிப் போய் விட்டது. 1892 ஒப்பந்தப்படி பாலாற்று நீர் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திர மாநிலங்களில் சம அளவில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இதில் பழி வாங்கப்பட்டது தமிழ்நாடு மட்டுமே.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர்ப் பாசனமும், பாசன நீர்ப் பாசனமும் முற்றாக முடக்கப்பட்டு விட்டது.

இதற்கிடையில் குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்த கதையாக ஆந்திர மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திருவாளர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டின், வடக்கு மாவட்டங்களின் தலையில் பாறாங் கல்லைத் தூக்கிப் போடுவது போல ஒன்றை அறிவித்துள்ளார்.

குப்பத்தில் பாலாற்றில் புதிய அணை ஒன்றைக் கட்டி, ஒரு துளி நீரும் வீண் போகாமல், ஆந்திர விவசாயிகளின் நன்மைக்காகத் திட்டங்கள் தீட்டுவேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சரும் தமிழ்நாட்டு உரிமையை மீட்பேன் என்று கூறியுள்ளார்.

இதில் முன்னாள் முதல்வர் கலைஞரை இந்நாள் முதல்வர் ஜெயலலிதா சீண்டியுள்ளது தேவையற்ற ஒன்று.

ஒரு முதலமைச்சராக இருக்கக் கூடியவர் இது போன்ற தமிழ்நாட்டு நலனைச் சேர்ந்த பொதுப் பிரச்சினையில், கிடைக்கக் கூடிய ஆதரவை வளர்த்துக் கொள்ளாமல், பொதுப் பிரச்சினையில்கூட நாங்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டோம் என்று காட்டிக் கொள்வது முதல் அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வட மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு போராடினால் போதிய பயன் கிடைக்க வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/page-2/83047.html#ixzz35zD5DagJ

தமிழ் ஓவியா said...


கடைசிப் போரின் முதல் பலன்


திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் கடைசிப் போரினால் இந்தியாவுக்கு அரசியல் துறையிலும், சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப் பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ருஜுவு ஏற்பட்டுவிட்டது.

அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்தி போரில் மிக்க அக்கறை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.

உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின்வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரார் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.

உப்பு சத்தியாக்கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதிகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்விதக் கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும்கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும்.

ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசிய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்குச் சரியான பதிலாகும். ஆனாலும், இது விஷயத்தில் இது உண்மையாயிருக்கு மானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக்கின்றோம்.

கண்டிக்கின்றோமென்பது போலி தேசிய வீரர்களைப் போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உணராமல் சாரதாச் சட்டத்தை சர்க்கார் திருத்துவார் களேயானால், வைதிகக் கூச்சலுக்குப் பயப்படுவார் களேயானால் அது கடைசிப்போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதிகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக்கொள்ள மாட்டோம்.

இது மாத்திரமல்லாமல் கடைசிப்போர் முடிவு பெறுவதற்குள் இதுபோல் இன்னும் அநேகக் கெடுதிகள் ஏற்படப்போவதையும் எதிர்ப்பார்த்துதான் ஆகவேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 13.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83064.html#ixzz35zFCGk5l

தமிழ் ஓவியா said...


இரட்டை வெற்றி

பன்னீர்செல்வம் உயர் திருவாளர் ராவ் பகதூர் ஏ. டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந் தெடுக்கப் பட்டவிஷயம் முன்னமேயே வாசகர் களுக்குத் தெரிவித்திருக்கிறோம்.

ஆனால், அந்த தேர்தலின் மேல் சில சட்ட சம்பந்த மான ஆட்சேபணைகளைக் கிளப்பி எதிர் அபேட்சகர்கள் அரசாங்கத்திற்கு செய்து கொண்ட விண்ணப்பத்தால் இரண்டு மாதகாலம் அந்தத் தேர்தல் முடிவை கிரமப்படி அரசாங்கத்தார் ஒப்புக் கொண்டு கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் காலம்கடத்தி வந்தார்கள்.

ஆனாலும் முடிவாக தேர்தல் செல்லுபடியானதை சென்ற வாரத்தில் பிரசுரம் செய்து விட்ட சேதி யாவருக்கும் மகிழ்ச்சி யைத் தரும். இதனால் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உத்தியோகக் காலம் மற்றும் சிறிது காலம் வளர்வதற்கு இடமுண்டாகி இரட்டை வெற்றி ஏற்பட்டதே தவிர வேறொரு கெடுதியும் ஏற்பட்டுவிட வில்லை.

ஆனால் மேற்படி தேர்தலின் மீது அது செல்லத் தக்கதல்ல வென்று எதிர் அபேட்சகர் கோர்ட்டில் ஒரு வியாஜியம் தொடுத்து இருக்கின் றார்கள். அதன் தீர்ப்பு அனேகமாய் முடிவில் இப்படியே தான் ஆகி மூன்று வெற்றி ஏற்படக் கூடுமென்று இப்போதே முடிவுகட்டி விடலாம்.

எலக்ஷன்கள் நடந்ததும் எதிர் அபேட்சகர் தனது திருப்திக்கும் தனது கட்சியார்களின் திருப்திக்கும் இம்மாதிரி ஆட்சேபங்கள் கிளம்புவதும் அநேகமாய் எங்கும் இயற் கையாகவே இருந்து வருகின்றது. ஆனால் 100-க்கு தொண்ணூற்றுக்கு மேற்பட்ட தேர்தல் ஆட்சேபங்கள் தோல்வி அடைந்தே வருவதும் சகஜமாகவும் இயற்கை யாகவுமே இருந்து வருகின்றது.

எனினும் இம் மாதிரி சம்பவங்கள் வெற்றி பெற்றவர் களுக்கு வெற்றி மகிழ்ச்சியடைய இரண்டு சந்தர்ப் பங்களையும் தோல்வி அடைந்த வர்கள் ஏமாற்றம் அடைய இரண்டு சந்தர்ப்பங்களையும் அளித்து வரு வதும் அனுபவத்தில் கண்டதேயாகும். சுகமும் துக்கமும் மாறி மாறியும் தொடர்ந்து தொடர்ந்தும் வருவது இயற்கையேயாகு மன்றோ!

எம்.கே.ரெட்டி

உயர் திருவாளர் திவான் பகதூர் எம். கே. ரெட்டியவர்களும் செங்கல் பட்டு ஜில்லாபோர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப் பட்டார் என்கின்ற சேதியை கேட்க வாசகர்கள் மிகுதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள்.

திரு. எம். கே. ரெட்டி அவர்களின் ஜில்லாபோர்டு நிருவாகமும் திரு. பன்னீர் செல்வத்தின் நிருவாக மும் பார்ப்பனரல்லாதார் சமூக நன்மை யையும் சுயமரியாதைக் கொள்கை யையுமே பெரிதும் தழுவி நடந்துவந்த காரணமே அவ்விரு போர்டு தலைவர் தேர்தலுக்கும் சற்று எதிர்ப்பும் சூழ்ச்சியும் பலமாய் இருக்க நேரிட்டது. ஆனாலும் அவ்விரு போர்டு தலைவர்களும் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் பட்டதானது நமது இயக்கத்திற்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 06.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFKi2ZL

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இன்று ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு இதுவரை இருந்து வந்த சக்கரவர்த்திப் பட்டத்தை எடுத்துவிட்டார்களா இல்லையா? அரசர் கடவுளின் பிரதிநிதி என்ற பழைய கொள்ளை இன்று என்னவாயிற்று? கோவணம் கட்டத் தெரியாத குழந்தைப் பிள்ளைகளெல்லாம் இன்று அவன் ஏன் பணக்காரன்? இவன் ஏன் மிராசுதாரன்?

என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களா இல்லையா? அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் - நாம் எதனில் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று. அப்போது தெரியும் - நாம் தாழ்த்தப்பட்டிருக்கக் காரணம் நாம் தழுவி நிற்கும் இந்து மதம்தான் என்று. எவனும் தன்னை ஓர் இந்து என்றே கூறிக்கொள்ளக் கூடாது.

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFeqWbm

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதன் தலைவரும் சென்னையில் நடந்த காங்கிரசின்போது வரவேற்புத் தலைவராய் இருந்தவரும் பார்ப்பனர்களின் தாசானுதா சராய் இருந்தவருமான திரு.முத்துரங்க முதலியாரும் மற்றும் அதன் காரியதரிசியாய் இருந்த திரு. கே. பாஷ்யம் அய்யங்காரும் மற்றும் நிருவாக அங்கத்தினர்களான திருவாளர்கள் எ.சத்தியமூர்த்தி சாஸ்திரி, ஆர்.சீனிவா சய்யங் கார் முதலியவர்கள் நிருவாக சபையில் ராஜினாமா செய்து விட்டார்கள்.

காங்கிரஸின் நிலைமை எங்கு பார்த்தாலும் இதே கதியாகத்தான் இருந்து வருகின்றது. ஏனெனில், கொஞ்ச காலமாய் காங்கிரசில் இந்த மாதிரி ஆட்கள்தான் அதில் இருக்க முடிந்தது. அதாவது சட்டசபை மந்திரி முதலிய தானங்களும் அபேட்சை உள்ளவர்கள் மாத்திரம் அதில் இருக்கும்படி இருந்தது.

இப்போது அதற்கு இடமில்லாமல் ஒரு சமயம் ஜெயிலுக்கும் போகும்படியான சந்தர்ப்பம் ஏற்படக் கூடும் என்று தெரிவதால் அப்படிப்பட்ட ஆட்கள் அதை விட்டு ஓடி வேறு கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வாழவேண்டியதாய் விட்டது. இதனாலே யே காங்கிரசைப் பார்ப்பனர்கள் வளர்த்து வந்த உத்தேசம் இன்னது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, இன்றைய தினம் சென்னை மாகாணத்தில் காங்கிரசிலிருந்து ராஜினாமா கொடுத்து ஓடுகின்ற ஆட்கள் எல்லாம் சென்னையில் காங்கிரஸ் கூடியபோது லாகூர் தீர்மானமாகிய பூரண சுயேச்சை தீர்மானத்தை வெகுவீரத் துடன் ஆதரித்த ஆசாமிகளாவார்கள். ஆனால் அத்தீர் மானம் லாகூரில் நிறைவேற்றி அதற்கு ஆரம்பவிழா நடத்தப் போவதாக பிரதாபம் வெளிப்பட்டவுடன் ராஜினாமா கொடுத்து ஓடிவிட்டார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் அதிகாரமுள்ள எல்லா ஸ்தாபனங்களையும் கைப்பற்றவேண்டும் என்பதேயாகும். எனவே உத்தியோகம் தேர்தல் தாபனங்களைக் கைப்பற் றுவதுமேதான் இந்தப் பார்ப்பனர்களுடையவும் அவர்களது அடிமைகளுடையவும் தேசிய லட்சியம் என்பதையும் அதற்கு வழி இருந்தால்தான் பூரண சுயேச்சையில் கலந்தி ருப்பார்கள் என்பதையும் மற்றவர்கள் யாராவது அப்படிச் செய்தால் அவர்களைக் குலாம் என்றும் சர்க்கார்தாசர்கள் என்றும் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் எழுதுவார்கள் என்பதையும் ஒருசமயம் ஜெயிலுக்குப் போகவேண்டியதா யிருந்தால் இராஜினாமா கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள் என்பதையும் நாம் நம் வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.03.1930

Read more: http://viduthalai.in/page-7/83072.html#ixzz35zFmL2tF

தமிழ் ஓவியா said...

அகில இந்திய அளவில் தனியார் துறைகளில் முழுமையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பேட்டி

குற்றாலம், ஜூன் 29- அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக்கோரி திராவிடர் கழகம் விரைவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித் துள்ளார். குற்றாலத்தில் இன்று (29.6.2014) செய்தியாளர் களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும்

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்கவில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசுக் கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு

மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளையும் திராவிடர் கழகம் கடைப் பிடிக்கும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்!

அதற்காக திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இப்புதிய பயணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து தனியார்மயமாவதை கண்டிப்போம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படுவதை திராவிடர் கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் தந்தை பெரியார் வழிகாட்டியிருந்தபடி ஆகஸ்டு முதல் தேதி ரயில் நிலை யங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும்.

மோடி ஆட்சி பழைய கள் புதிய மொந்தை

கடந்த ஒரு மாத பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசின் மோடி ஆட்சி, பழைய கள் புதிய மொந்தை என்ற நிலையில் தான் உள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை, பழைய நிலையைவிட மோசமான நிலையில் இருக்கிறது. விலைவாசியை பொறுத்தளவில் கடந்த ஆட்சியை விட தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் அதிக அளவில் விலையேற்றம் அதிகரித்துள்ளது.

ரயில்வே கட்டணங்கள் உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்

ரயில்வே கட்டணங்கள் உயர்வு ஏழை - எளிய நடுத்தர வகுப்பு மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரயில்வே சரக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்கு முன்பே இவ்வளவு உயர்வு என்றால், பின்னர் வரி விதிப்புகள் மூலம் மக்களை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவை எதிர் விளைவுகளை உண்டாக்கும் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/83140.html#ixzz365EdNmJf