Search This Blog

21.6.14

ஆர்.எஸ்.எஸ். பற்றி எம்.ஜி.ஆர்-சட்டத்தைக் கையில் எடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.- எச்சரிக்கை!இராமநாதபுரம் மாவட்டம் தேவிப் பட்டினத்தில் பொது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சியை நடத்தியுள்ளது; பொது இடத்தில் நடத்த வேண்டும் என்றால் காவல்துறை அனுமதியைப் பெற வேண்டும். அனுமதியின்றி நடத்தியதால் காவல்துறை ஷாகா நடத்தக் கூடாது என்று கூறியுள்ளது. அதைமீறி நடத்தியதால் காவல்துறை ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கைது செய்தது;
காவல்துறை கடமை யாற்றியதை எதிர்த்து சென்னை, பழனி போன்ற இடங்களில் பி.ஜே.பி.யினரும், சங்பரிவார்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளனர்.


பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நடத்தும் ஷாகாக்கள் என்பவை ஏதோ உடற்பயிற்சி என்று நினைத்தால், அதைவிட ஏமாளித்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

உடற்பயிற்சி என்ற போர்வையில் வன்முறைத் தூண்டுதல்கள்தான் அதன் உள்ளீடாக இருக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
அயோத்தியில் கரசேவை என்ற பெயராலே இவர்கள் என்ன செய்தார்கள் என்பது மறந்து போய் விட்டதா?

அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் என்ன நடந்தது? அங்கு முசாபர் நகரில் நடைபெற்ற மதக் கலவரத்தில் 50 பேர்கள் கொல்லப்படவில்லையா?

முசாபர் நகர் கலவரத்திற்கு மூலகர்த் தராக இருந்த பிஜேபி சட்டப் பேரவை உறுப்பினர் சோமை என்பவரை உ.பி. காவல்துறை கைது செய்தது. அவர்மீது தேசீய பாதுகாப்புச் சட்டமும் (NSA) பாய்ந்தது. இதனைக் கண்டித்து மீரட் கிராமத்தில் 34 கிராமங்களைச் சேர்ந்த வர்கள் மகா பஞ்சாயத்துக் கூட்டப் போவதாகச் சொன்னார்கள்.

ஆனால் உண்மை வேறுவிதமானது - மகா பஞ்சாயத்து பெயரில் கூட்டப்பட்ட வர்கள் அத்தனை பேரும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தாம்.

அவர்களின் கைகளில்  கூரிய ஆயு தங்கள் - உருட்டுக் கட்டைகள்!
இதில் பெண்களே முன்னிறுத்தப்பட்ட னர் என்பதை மறந்து விடக் கூடாது இவர்கள் அத்தனை பேரும் ஆர்.எஸ். எஸின் ஷாகாவில் பயிற்சி பெற்றவர்கள்!

சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு இருந்தன. துப்பாக்கிப் பயிற்சிகூட பெண் களுக்கு அளிக்கப்படுகின்றன.

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் ஆயிரக்கணக்கானவர்களை கேதா என்ற இடத்தில் ஒன்று திரட்டினர். சூழ்நிலையைப் புரிந்து கொண்ட உ.பி. அரசு கேதா பகுதியில் 144 உத்தரவைப் பிறப்பித்தது. தடையை மீறியது. -அந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

போலீசாருக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர் களுக்கும் ஒரு யுத்தமே நடந்தது என்று சொல்ல வேண்டும்.

#####

32 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தென் கோடிப் பகுதிகளில் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலால் வன்முறைக் கொம்புகள் சீவி விடப்பட்டன.

சட்டமன்றத்தில் காவல்துறை மான்யத் தின்மீது உரையாற்றிய முதல் அமைச்சர் (29.3.1982) எம்.ஜி.ஆர். அவர்கள் தெரிவித்த கருத்தும் அறிவிப்பும் மிகவும் முக்கிய மானவை.

மக்களை பிளவுபடுத்தும் இவர்களின் நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட்டாக வேண்டும்; அரசு இதை அனுமதிக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மடாதிபதிகள் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் காட்டிய வழியை பின்பற்ற வேண்டுமே தவிர, வேறு வழிகளைப் பின்பற்றக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காவல்துறை மான்யத்தின் மீதான விவாதத்துக்கு சட்டமன்றத்தில்  முதல மைச்சர் பதிலளித்தார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
மதவாதிகள் - அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை - இந்த அரசு அனுமதிக்காது என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்து முன்னணி பேரணி கூடாது

இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல் மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழி முறைகளில் இறங்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.

நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.  அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே - அதை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ். சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.
மக்கள் நலன் காக்கக் கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக் கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள் எனவே, மதவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறிச் செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்; அரசு அதற்குத் தயாராக இருக்கிறது

------------------ இவ்வாறு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தனது பதில் உரையில் குறிப்பிட்டார்.


முதல்வர் எம்.ஜி.ஆர். மட்டுமல்ல; முன்னாள் முதல் அமைச்சர் என்ற நிலையில் மன்னார் குடியில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் (11.4.1982) பேசிய மானமிகு கலைஞர் அவர்களும் ஆர்.எஸ்.எசுக்கு எச்சரிக்கை செய்ததுண்டு இதோ கலைஞர் பேசுகிறார்:

ஆட்சியாளர் இன்றைக்கு மன்னார் குடியிலே பெரியார் அவர்களுடைய சிலைத் திறப்பு விழாவிலே நான் சொல்வதைக் கவனித்தாக வேண்டும்.
ஒரு மாத காலத்திற்குள்ளாக இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினடைய அணி வகுப்புக்களை அவர்களுக்கு ஆயுதந் தந்து ஆங்காங்கே தேகப் பயிற்சி என்ற பெயரால் எதிர் காலத்திலே மற்ற மதங் களின்மீதும், பகுத்தறிவு, இயக்கங்களின் மீதும் பாய்வதற்காகத் தயார்படுத்துகின்ற அந்தப் பாசறைகளையெல்லாம் தமிழ் நாட்டு சர்க்கார் தடுத்து நிறுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஒரு மாதத்திற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் அப்படிப்பட்ட படைகளை அப்படிப்பட்ட பாசறைகளை நாங்களும் அமைக்கத் தயாராகி விடுவோம் என்பதை மாத்திரம் நான் அவர் களுக்குக் கூறிக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

இரு முதல் அமைச்சர்களும் இவ்வாறு கூறியுள்ளனர். சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றும் கடமையும், பொறுப்பும் முதல் அமைச்சர்களுக்கு இருக்கிறதே! இந்த நிலையில் எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் பொது இடங்களில் ஷாகா பயிற்சி அளிப்பது சட்டப்படி குற்றம் தானே? அந்த வகையில்தான் தேவிப்பட்டி னத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சட்டப்படியான நடவடிக்கையைத்தான் தமிழ்நாடு காவல்துறை செய்திருக்கிறது.

அப்படி கைது செய்தது தவறு என்பது போலவும் ஆர்.எஸ்.எஸின் உரிமையே கொள்ளை போய் விட்டது என்பது போலவும் சென்னை, பழனி உள்பட பல ஊர்களில் சங்பரிவார் மற்றும் பி.ஜே.பியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய பொன். இராதாகிருஷ்ணன் தமிழ்நாடு அரசினைக் கண்டித்துள்ளார்.

#####

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணிப் பொறுப்பாளர் கொலை செய் யப்பட்டார் என்பதை வைத்து சென்னை யில் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் (19.6.2014).

கிறித்தவர்களின் தேவாலயத்தைத் தாக்கியுள்ளனர். அதுவும் வழிபாடு முடிந்து வந்தவர்களைத் தாக்கியுள்ளனர். கடை களையும், பேருந்துகளையும் தாக்கி யுள்ளனர். மத்தியில் அதிகாரத்துக்கு வந்ததால் எதையும் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் போலும்! இதில் தமிழ்நாடு அரசும் - காவல்துறையும் சரியாக இருக்க வேண்டும். தும்பை விட்டு வாலைப் பிடிக்க ஆசைப்பட வேண்டாம்.

இந்து முன்னணிப் பிரமுகர் கொலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியதே! குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடம் இல்லை. அதே நேரத்தில், மதமாச்சரியமின்றி இணக்கமாக மக்கள் வாழும் தமிழ்நாட்டை குஜராத் மண்ணாக மாற்றும் வேலைக்கு இடம் தரக் கூடாது - எச்சரிக்கை! எச்சரிக்கை!


எம்.ஜி.ஆரை ஆர்.எஸ்.எஸ். தேள் கொட்டிவிட்டது!

17.2.1983 அன்று சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பற்றி செய்தியாளர்களிடையே தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கீழ்க்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

கேள்வி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா?

பதில்: நேற்று நான் டில்லியில் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளை பார்ப்பதற்காக புறப்பட முயன்ற நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் இந்து மஞ்ச் என்ற பெயரில் 40,50 வயதுக்காரர்கள் படித்தவர்கள், யோசித்து செயல்படும் தகுதி உள்ளவர்கள் என் முன்னால் நின்று கொண்டு 15 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாக சொன்னார்கள்; என்னைப்  பார்க்க வேண்டும் என்றார்கள். நான் உடனே பார்க்க முடியாது. முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதற்காக ஒழிக என்று சொன்னார்கள்.


அவர்கள் நடந்துகொண்ட முரட்டுத்தனமான செய்கையைப் பார்க்கும்போது இது தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்றால் அது இந்த நாட்டுக்கும் தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராதது. நேரத்தையும் முன்னதாக குறித்து வாங்கவில்லை. உண்மைக்கு மாறான தகவலையும் சொல்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் அவ்வாறு மட்டமாக நடந்து கொண்டார்கள். என்னை தடை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.

அது ஆர்.எஸ்.எஸ். இயக்கமானாலும், எதுவானாலும் இப்படிப்பட்ட செயல் அதற்கு பெருமை தரக்கூடியது அல்ல.  இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக அவர்கள் நடந்ததுபோல அனுபவம் இதுவரை நடந்ததில்லை.

இதுபோல மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கொடுத்தால் என்னாகும்? இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தை போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள். எனக்கு இதைப்பார்த்தபிறகு ஆர்.எஸ்.எஸ்.மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். என்றால் ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடு ஆனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வளவையும் அங்கு தகர்த்து எறிந்துவிட்டார்கள் அந்த பெரியவர்கள். இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல. இங்கு இந்து முன்னணி அங்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா? என்பதையும் உணர வேண்டும்.

இதுதான் அவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றால் அதுபற்றி கேள்வி கேட்க வேண்டியதே இல்லை. இப்படிப் பேசுவதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்யும் நோக்கம் வந்து விட்டதோ என்று கருதி முடிவு செய்ய வேண்டாம். எந்த மதம் ஆனாலும் தன் மதத்தைப் பரப்ப நாகரிகமான முறையிலும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலும் பிறர் மனதை மாற்ற கருத்து விளக்கத்தின் மூலமாக அந்தப் பணிகளைச் செய்ய முழு உரிமையும் இந்த அரசு தரும், தந்து வந்தும் இருக்கிறது.  - இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

எம்.ஜி.ஆரோடு இருந்த மின்துறை அமைச்சர் மாண்புமிகு பண்ருட்டி எஸ். இராமச்சந்திரனை ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் பிடித்துத் தள்ளி 
இருக்கின்றனர்.
 ---------------------------------------------------------------------------------------------------------------------

            --------------- மின்சாரம் அவர்கள் 21-06-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......

தண்டனையா?

ஒருமுறை மும் மூர்த்திகளில் யாருக்கு சத்வ குணம் அதிகம் இருக்கும்? என்ற எண் ணம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.

இதை சோதிக்க ஒவ்வொரு மூர்த்தியையும் நேரில் சந்திக்கச் சென்றார் முனிவர். பெருமாளே சத்வ குணம் படைத்தவர் என்று அறிந்தார்.

முனிவர். திருமகள் உறையும் பெருமாளின் மார்பில் உதைத்தபோதுகூட திருமால் கோபம் கொள்ளாது.

முனிவரின் கால்கள் நோகக் கூடாதே என்று கவலை கொண்டானாம். ஆனால் முனிவரின் செய்கையால் கோபம் கொண்ட திருமகள் திரு மாலைப் பிரிந்து பூலோகம் சென்றாள்.

திருமால் தேவியைத் தேடிச் சென்ற போது, சுவர்ண முகி நதிக்கரை யில் ஒரு தடாகம் ஏற் படுத்தி அதன் கரையில் தவமியற்றுக என்று ஒரு அசரீரி கேட்டது. பெரு மாளும் அதன்படி 12 ஆண்டு காலம் தவம் செய்தார்.

இறுதியில் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச திதியில் வெள்ளிக் கிழமை உத்திராட நட்சத்திரத்தில் மைத்திரம் என்ற முகூர்த்த நேரத்தில் திருமகள் பொற்றாமரை மலரில் தோன்றி திருமா லுக்கு மாலையிட்டாளாம்.

கடவுளுக்கே சாபம் - தண்டனையா? அப்படி என்றால் அந்தக் கடவுள் எப்படி சர்வ சக்தி வாய்ந்தவர் ஆவார்? பக்தரைப் பகவான் சோதிப்பார் என்பார்கள்; இங்குப் பகவானைப் பக்தர் சோதிப்பது எப்படி?

Read more: http://viduthalai.in/e-paper/82602.html#ixzz35K5E6fi9

தமிழ் ஓவியா said...

குஜராத்தும் தமிழ்நாடும்

தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் 2011-இல் 0.42 சதவீதம் ஆகும்.

1981ஆம் ஆண்டிலோ 0.98; படிப்படியாகக் குறைந் துள்ளது - இப்பொழுது எண்ணிக்கை 17,351.

வளர்ச்சி வளர்ச்சி என்று தம்பட்டம் அடிக்கும் குஜராத்திலோ குழந்தைத் தொழிலாளர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரத்து 687.

Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5ituj6

தமிழ் ஓவியா said...

தலைக் கவசமும் மதமும்

மத சம்பிரதாயம் காரண மாக சீக்கியப் பெண்கள் தலைக் கவசம் அணியத் தேவையில்லை என்ற உத்தரவு போல, இஸ்லாமி யப் பெண்களுக்கும் மத சம்பிரதாயத்தின் அடிப் படையில் தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை டில்லி ஆளுநரி டம் வைக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5rdqnd

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/82620.html#ixzz35K65dmt5

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை வெறும் 26 சதவீதம்தான்!- இது சென்சஸ் கணக்கு


புதுடில்லி, ஜூன் 21_ பொது மொழி என்றோ, தேசிய மொழி என்றோ ஏதும் இல்லாத, 125 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை மட்டும் 26 சதவீதம்தான். இந்தக் கணக்கைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பான சென்சஸ்!

இந்தி பேசுவோர் 2001- ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்று 42 கோடி பேர் என கணக்கு காட்டியிருந்தனர். அதாவது 45 சதவீதம் பேர்.

அய்ந்தாவது இடம் தமிழுக்கு வங்காளம், தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோருக்கு அடுத்து அதிகம் பேர் பேசும் மொழி தமிழ்தான். தமிழ் பேசு வோர் என 6 கோடியே 7 லட்சம் பேர் எனப் பதிவு செய்திருந்தனர்.

மத்திய அரசின் மோசடி இது ஒருபுறம் இருக்க, இந்தி மொழி பேசுவோர் என்று மத்திய அரசு கணக்கு காட்டியிருப்பது ஒரு மோசடியான வேலை என்பது அம்பலமாகியுள்ளது. காரணம், இந்த 42 கோடி மக்களும் இந்தி பேசுபவர்கள் அல்ல.. வெவ்வேறு மாநிலங்களில் இந்தியின் கிளை மொழிகளைப் பேசுபவர்கள்.

26 சதவீதம்தான் இந்தியை மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்று பார்த்தால் 27 கோடியே 79 லட்சம் பேர். அதாவது நாட்டு மக்கள் தொகையில் 26 சதவீதம். இந்தி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளான போஜ்புரி, ராஜஸ்தானி, மகதி, சத்தீஸ்கரி, ஹரியான்வி, மேவாரி, மால்வி, மார்வாரி உள்ளிட்டபத்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோர் 15 கோடிக்கு மேல் உள்ளனர். இவை வட்டார வழக்கு மொழிகள் அல்ல. தனி எழுத்துருக்களைக் கொண்டவை. இந்த மொழி பேசுவோர் தங்கள் தாய்மொழி இந்தி என்று சொல்வதில்லை. அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.

குற்றச்சாட்டு ஆனால் இதை மறைத்து விட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 42 கோடி பேர் என கணக்கு சொல்கிறது மத்திய அரசு. இதன் மூலம் பெரும்பான்மை யோர் பேசும் மொழி இந்தி என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

முரண்பாடு "இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது. இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள். இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது," என்கிறார் இந்திய மொழிகள் கணக் கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி.

Read more: http://viduthalai.in/page-2/82623.html#ixzz35K6QcpeU

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் மோதல் கைதான இந்து முன்னணியினர் சிறையில் அடைப்பு!


அம்பத்தூர், ஜூன் 21- இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி நேற்று பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 அரசு பேருந்து கண்ணாடிகள், 3 கார், லாரி உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.

மேலும் சுரேஷ்குமார் உடலை மண்ணூர் பேட்டை சிடிஎச் சாலை சந்திப்பில் இந்து முன்னணி தொண்டர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டை பேருந்து நிலையம் வழியாக ஊர்வல மாக வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். அந்த வழியில் மசூதி இருப்பதால் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 10_க்கு மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்தனர். பலர் சிதறி ஓடினர். மேலும் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டதில் 3 காவல் துறையினர் காய மடைந்தனர். இதையடுத்து அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் துறையினர் 52 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

பின்னர் 52 பேரில் 39 பேரை விடுதலை செய்தனர். 13 பேர் மீது பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தது, கற்கள் கம்புகளை வைத்து தாக்குதல் நடத்தியது, அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற வழக்குகளின் கீழ் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குமரியில் பதற்றம்

அம்பத்தூரில் வெட்டி கொல்லப்பட்ட இந்து முன்னணி தலைவர் உடல் குமரிக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது. இறுதி ஊர் வலத்தின் போது திடீரென வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/82634.html#ixzz35K6pbv7V

தமிழ் ஓவியா said...

கழகப் பேச்சாளர்கள், பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

கழகப் பரப்புரை கூட்டங்கள், திருமணங்கள், இல்லத்திறப்பு, படத்திறப்புகளுக்கு கலந்து கொள்ள ஒப்புதல் அளித்து தேதி கொடுக்கும் கழகப் பேச்சாளர்கள், இது தொடர்பாக மாவட்ட, ஒன்றிய கிளைக்கழக பொறுப்பாளர்களுக்கு தங்கள் வருகையினை அருள்கூர்ந்து, அஞ்சல் அட்டை மூலமாகவோ, தொலைப்பேசி வாயி லாகவோ தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள் கிறோம்.

மேலும், மேற்கண்ட நிகழ்ச்சிகளை நகல் பிரதி எடுத்து அனுப்பாமல் துண்டறிக்கைககள் மூலம் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள் நல்ல வண்ணம் விளம்பரப்படுத்தி நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். தந்தை பெரியாரின் தலையாய கொள்கை தமிழர் தலைவரின் தலைமையில் தரணியெங்கும் தழைக்கச் செய்வோம்! - செல்வம், சண்முகம், நெய்வேலி வெ.ஞானசேகரன்
மாநில அமைப்புச் செயலாளர்கள்

Read more: http://viduthalai.in/page-4/82638.html#ixzz35K7EfKWt

தமிழ் ஓவியா said...


மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்


கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் வரவேற்பு

சுவாமி விவேகானந்தாவின் பெயரினால் சென்னையில் பார்ப்பனர்கள் செய்யும் ஏமாற்றையும் வஞ்சகத்தையும் பற்றியும், ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 90 பேர் யோக்கியமற்றவர்கள் என்றும், உதாரணமாக சென்னையில் உள்ள ராம கிருஷ்ணா ஹோம் என்கின்ற இடத்தில் நடக்கும் அக்கிரமம் கணக்கு வழக்கில்லையென்றும்,

அங்கு புழங்கும் பணம் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பார்ப்பனரல்லா தாருடையதென்றும், வருஷம் 20, 30 ஆயிரம் அந்த ஹோமின் பேரில் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றதென்றும் இதை அறிந்த தனது நண்பரும் சுயமரியாதை சங்கத் தலைவருமான உயர்திரு டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியர் சட்டசபையில்கூட கேள்வி கேட்டு அக்கொள்ளையை நிறுத்த முயற்சித்தார் என்றும்,

ஆனாலும் அரசாங்கத்தில் முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் செல்வாக்கால் பார்ப்பனரல்லாத பயங்காளிப் பெரியவர்கள் அவர்களுக்கு அடிமையாகி சிறிதும் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் பொதுமக்கள் பணத்தை வசூல் செய்து, கொடுக்கின்றார்கள் என்றும், இங்கும் அதுபோல் இருக்கக்கூடாதென்று ஆசைப்படுவ தாகவும், விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்துமதப் பிரதி நிதியாய் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் உண்மையான பிரதிநிதியாய் இல்லாமல் இந்து மதத்திற்கு ஒரு வக்கீலாய் போய் கேசை ஜெயித்துக்கொண்டு வந்தாரென்றும்,

ஆகையால் அதனாலேயே இந்துமதம் என்பதற்கு யோக்கியதை வந்து விடாதென்றும், அவர் இந்தியாவையும் இந்துக்களையும் பற்றி இந்தியாவில் பேசி இருப்பதைப் பாருங்கள் என்றும், பார்ப்பனர்களைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்பதும், வருணாசிரமம், ஜாதி வித்தியாசம் ஆகியவைகளைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்ப தையும்,

இந்து அரசாங்கமாகிய மலையாளத்தைப் பற்றிச் சொல்லி இருப்பதையும், அவர் விக்கிரகங்களைப் பற்றிச் சொல்லும்போது அவை பாமர மக்களுக்கு வேண்டி ஏற்பட்டதே ஒழிய மற்றவர்களுக்கு அல்ல என்றுதான் சொன்னாரென்றும்,

ஆனால், இப்போதைய விக்கிரகங்களை பாமர மக்களுக்கு உபயோகப்படாமலும், கண்ணில் பார்க்கக்கூட இடம் தராமலும், பண்டிதர்கள் பிரமஞானம் உடையவர்கள் கடவுளாலேயே அறிவாளிகளாய் பிறப்பிக்கப்பட்ட மக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கும், அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கும்தான் சாதனமாயிருக்கின்ற தென்றும்,

மற்றும் தென்இந்தியாவுக்கு வேண்டியதெல்லாம் உண்மையான சுயமரியாதையே என்று அவர் சொல்லி இருக்கின்றார் என்றும் மற்றும் இப்படி அவர் சொன்ன அனேக விஷயங்களைப் புத்தகத்தைப் பார்த்தே எடுத்துச் சொல்லி 2 மணி நேரம் கூட்டத்தையே ஆச்சரியப்படும்படி செய்து விட்டார்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 09. 02. 1930

Read more: http://viduthalai.in/page-7/82600.html#ixzz35K7aVtOo

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாட்டில் பேசியது


சகோதரர்களே!

இன்று இங்கு நடந்த மகாநாட்டு நடவடிக்கை யைப் பார்த்தேன். இது எங்கள் நாட்டில் காங்கிரசின் ஆரம்பகால நடவடிக்கைகளை ஒத்திருக்கின்றது. அதாவது இந்தியப் பொதுமக்களுடையவும், பாமரமக்களுடையவும் நன்மைக்காக வென்றுதான் ஆதியில் காங்கிரசு ஆரம்பிக் கப்பட்டது.

ஆனால் இதை ஆரம்பித்தவர்களில் அரசாங்க உத்தியோகத்தை நம்பி ஆங்கிலம் படித்துவிட்டு உத்தியோகத்திற்கும், தங்கள் சொந்த வயிற்றுப் பிழைப் புக்கும் வகை எதிர்பார்த்த மக்களே முதன்மையா யிருந்தார்கள். அம்மகாநாடுகளில் தங்கள் உத்தியோகத்திற் கேற்ற பல தீர்மானங்கள் செய்துவிட்டு பாமர மக்களை ஏமாற்ற ரோடுகள் போட வேண்டும், வரி குறைக்க வேண்டும், காடு திருத்தவேண்டும் என்பது போன்ற சில காகிதத் தீர்மானத்தையும் செய்வார்கள்.

காரியத்தில் சீர்திருத் தம் என்னும் பேரால் கொழுத்த சம்பளமுள்ள சில உத்தியோகங் களை அந்தப் படித்தக் கூட்டத்தினர் அனுபவிக்கவும், அதற்காக வரிகள் உயர்த்தவும் நேர்ந்ததைத் தவிர அதற்குத் தகுந்த படி வரிகளும் உத்தியோகங்களும் அரசாங்க அதி காரங்களும் மற்றும் தொல்லை களும் பெருகினதைத் தவிரவும், வேறு யாதொரு பலனும் ஏற்பட வில்லை.

சம்பளமும் உத்தியோகமும் பெருகினதின் காரணமாய் கட்சி களும் உட்பிரிவுகளும் ஏற்பட வேண்டியதாய்விட்டது. ஏனென்றால், ஸ்தாபனங்களில் முக்கியஸ்தர்களாயிருக் கின்றவர்கள் அதனால் ஏற்படும் உத்தியோகங்கள் எல்லாம் தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும் மற்றவர் களுக்குப் பங்கு கொடுக்காமல் ஏமாற்றச் சூழ்ச்சி செய்வதாலும் மற்றவர்கள் பிரிந்துபோய் வேறு ஸ்தா பனங்கள் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் தலைவர்களா வதும் பிறகு அது போலவே அதிலிருந்து பலர் பிரிந்து போவதும், சாத்தியப்படாதவர்கள் ஜாதி மத வகுப்புகளின் பேரால் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு பாத்தியம் கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

எங்கள் நாட்டில் உள்ள இவ்வளவு அரசியல், மத இயல், ஜாதி வகுப்பு இயல், சமூக இயல் ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டதான கட்சிகளும், ஸ்தாபனங்களும் காங்கிரசு ஏற்பட்டதினாலும் அதிலுள்ளவர்களின் சுயநல சூழ்ச்சி யாலும் அவர்களைப் பின்பற்றியும் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.

ஆகையால், இந்த மகாநாடு எங்கள் நாட்டு காங்கிரசைப் பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொதுமக்களின் நலனுக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தும் படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும்.

அதற்கு மார்க்கம் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுய மரியாதையையும் உண்டாக்குவதே தவிர, உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டுமென்பதல்ல என்பதே எனதபிப்பிராயம்

இந்தியர்களென்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்று படுத்திக் கொண்டா லொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது.

ஆதலால் நீங்கள் ஏதாவது எங்கள் காங்கிரசைப் பின்பற்றி, எங்கு இந்த நாட்டையும் இந்தியாவைப்போல பாழாக்கி, ஏழைகளை வதைத்து, இனி இங்கிருக்கும் ஏழைகளுக்கும் தொல்லை விளைவித்து அவர்கள் இங்கிருந்து இனி வேறு வெளி நாட்டிற்கு அனுப்பி விடுவீர்களோ என்று பயப்படுகிறேன்.

(மேடையில் இருந்த சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சபாஷ், சபாஷ், உண்மை, உண்மை என்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனரபிள் வீராசாமி அவர்கள் திரு. இராமசாமியாரின் கையைப் பிடித்து தாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றோம் என்பதாகச் சொன்னார்).

- குடிஅரசு -சொற்பொழிவு - 02.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82599.html#ixzz35K7mgszo

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டி யிருக்கின்றது.ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன்.

எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன் மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்.

Read more: http://viduthalai.in/page-7/82599.html#ixzz35K7wElnl

தமிழ் ஓவியா said...


செங்கல்பட்டு ஜில்லாபோர்டு தேர்தல்


செங்கல்பட்டு ஜில்லாபோர்டுக்கு 30 - 01 - 1929 தேதியில் தலைவர் தேர்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தேர்தல் அடுத்த மார்ச்சு மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டதாக ஒரு சேதியும், தேர்தல் நடந்து ராவ்சாகிப் திரு. ஜெயராம் நாயுடு அவர்கள் தலைவராக தேர்தல் ஆகிவிட்டதாக ஒரு சேதியும் கிடைத்திருக்கின்றது.

எப்படியானாலும் தேர்தல் முடிவு நமது உண்மை நண்பர்களான திரு. திவான்பகதூர் எம்.கே.ரெட்டியாருக் காவது அல்லது திரு. ராவ்சாகிப் சி. ஜெயராம் நாயுடு காருக்காவது ஆகாமல் அதற்கு விரோதமாய் வெளியாருக்கு அதாவது பார்ப்பன அடிமைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதே நமது ஆசை.

இருவரும் சுயமரியாதை வீரர்களே ஆவார்கள். நிற்க, நாம் கொஞ்ச காலத்திற்கு முன் பார்ப்பனர்களும், பார்ப்பனக் கூலி களும், அடிமைகளும் அவர்களது யோக்கியதை வெளி யாக அடங்கிப் போய்விட்டார்கள். ஆனாலும் மறுபடியும் தலைகாட்ட நமக்குள் ஏதாவது சண்டை ஏற்படவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்று சொன்னபடிக்கு இச்சிறு விஷயங்களைக் கண்டே பார்ப்பனர்களும், அடிமைகளும் தலைநீட்ட புறப்பட்டு விட்டார்கள். ஆனாலும், ஜாண் நீட்டினால் முழம் கத்தரிக்க நமக்குச் சக்தி உண்டு. பழைய ஆயுதங்கள் எண்ணெய் இட்டு உறையில் வைத்திருக்கின்றதே தவிர மழுங்கிப் போய்விடவில்லை. யாரும் பயப்படத் தேவையில்லை!

- குடிஅரசு - கட்டுரை - 02.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82601.html#ixzz35K83xhpp

தமிழ் ஓவியா said...

5 ரூபாய் இனாம் -சித்திரபுத்திரன் -

திரு. காந்தியின் கடைசிப்போர் என்னும் உப்புச் சத்தியாகிரகக் கிளர்ச்சியில் தென்னிந்தியாவில் எங்கு பார்த் தாலும் பெரிதும் பார்ப்பனர்களே கலந்து அவர்களே முழுதும் தலைவர்களாக வேண்டிய காரணமென்ன?

திரு. காந்தி இந்த சத்தியாகிரகப் போருக்குப் பணமே வேண்டியதில்லை என்று சொல்லி இருந்தும், திரு. ராஜகோ பாலாச்சாரியார் பணம் வேண்டும் மென்று கேட்பதின் இரகசியமென்ன? அப்படி கேட்கப்படும் பணத்தையும் திருவாளர்கள் மைலாப்பூர் வக்கீல் பாஷ்யம் அய்யங்கார், திருச்சி டாக்டர். ராஜன், மதுரை வக்கீல் வைத்தியநாதய்யர் ஆகிய பார்ப்பனர்களுக்கே அனுப்பும்படி சொல்வதின் சூழ்ச்சி என்ன?

இந்த சத்தியாக்கிரகப் போருக்குப் பிரசாரகர்களாக மாத்திரம் சம்பளம் கொடுத்துப் பார்ப்பனரல்லாதார் களையே ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யச் செய்திருப்பதின் தந்திரமென்ன? இக்கேள்விகளுக்கு முதலில் கிடைக்கும்படி தக்கக் காரணங்களுடன் சரியான விடையளிப்பவர்களுக்கு 5 ரூபாயும் இரண்டாவது கிடைக்கும்படி விடையளிப்பவர் களுக்கு குடிஅரசு பத்திரிகை ஒரு வருஷத்திற்கு இனா மாகவும் அளிக்கப்படும்.

குறிப்பு : - முதலில் அல்லது இரண்டாவதாக எது வந்து சேர்ந்தது என்பதற்கும் சரியான விடை எது என்பதை நிர்ணயிப்பதற்கும் நானேதான் ஜட்ஜு எனக்குமேல் அப்பிலோ கேள்வியோ கிடையாது.

- குடிஅரசு - அறிவிப்பு - 30.03.1930

Read more: http://viduthalai.in/page-7/82601.html#ixzz35K8Gbv1c

தமிழ் ஓவியா said...


த.பெ.தி.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தமிழர் தலைவர் முன்னிலையில் தோழர்களுடன் கழகத்தில் இணைந்தார்!

சென்னை, ஜூன் 21- தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், இன்று (21.6.2014) சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து, திராவிடர் கழகத்தில் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் ஓரணியில் இணைந்து பணியாற்றும் நோக்கில், திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களுடன் த.பெ.தி.க. தோழர்கள் சொ.அன்பு (வடசென்னை மாவட்டத் தலைவர்), வி.ஜனார்த்தனன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), கண்ணதாசன் (காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர்), ரகுநாத் (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), ஜெய்சங்கர் (திருவல்லிக்கேணி துணை அமைப்பாளர்), எருக்கஞ்சேரி தமிழ்ச்செல்வன், ராஜ்குமார், வழக்குரைஞர் காண்டீபன், பாட்சா உள்ளிட்ட த.பெ.தி.க. தோழர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரமும், விடுதலை சந்தாவுக்கான நன்கொடையும் அளித்தார். தோழர் வி.ஜனார்த்தனன் ஈராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/82578.html#ixzz35K917aBe

தமிழ் ஓவியா said...


மாட்டுச் சாணத்தில் இருந்து குடிநீர்


மாட்டு சாணத்தில் இருந்து குடிநீர் தயாரிக்க முடியும் என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு, மெக் லானஹன் நியூட்ரியண்ட் செப்ப ரேஷன் சிஸ்டம் என பெயரிடப்பட் டுள்ளது. எதிர்காலத்தில், ஏற்பட வுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, இந்த தொழில் நுட்பத்தின் உதவியுடன், சாணத்தில் இருந்து சுத்தமான, சுகாதாரமான நீரை தயாரித்து குடிநீராக பயன்படுத்த லாமாம். இந்த தொழில்நுட்பத்தை, மிக்சிகன் பல்கலைக்கழக விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/82559.html#ixzz35K9XV4QV

தமிழ் ஓவியா said...


கழக மருத்துவர் புகழேந்தியின் மனித நேயப் பயணம்


தந்தை பெரியார் கொள்கையின் பால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஈர்க்கப் பட்டு அதனை ஏற்று இயக்கத்தை வலுப்படுத்த வந்தவர்கள் ஏராளம். அந்த வகையிலே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற சிற்றூரில் இருந்த கொள்கை வீரர்கள் ராமமூர்த்தி _- சாந்தா இவர்கள் தமது மகன், மகள் களை பெரியார் கொள்கை நெறியோடு வளர்த்தது மட்டுமல்ல தந்தை பெரியாரின் மனித நேயத்தையும், ஈகை குணத்தையும், கல்வியையும் போதித்தது சிறப்பாகும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் நிறுவனங்களுக்கு செல்லும் போது அதன் நிர்வாகிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தும் மிக முக்கிய கருத்துகளில் முதன்மை வாய்ந்தது என்ன வென்றால் அனைவரும் பள்ளி நடத்துவது போன்று நம் பள்ளி நடைபெறுவது சிறப்பல்ல. தந்தை பெரியார் கூறியதை போல வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும், சமுதாயத் தில் பின் தங்கியவர்களுக்கும் முதல் தலைமுறையினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு பல பள்ளிகள் வாய்ப்பு வழங்கும். படிப்பில் ஆவரேஜாக (பின் தங்கி) உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கி அவர்களை பள்ளியில் சேர்த்து அந்த மாணவர்களை நல்ல சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும் எனக் கூறுவார்.

அந்த வகையிலே ராமமூர்த்தி - சாந்தா ஆகியோரது மகன் மருத்துவர் புகழேந்தி அரசு மருத்துவராக பணி யாற்றி வந்தார். தன்னுடைய சேவை பின்தங்கிய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற நோக்கோடு மலை வாழ் மக்கள் வாழும் நீலகிரி, குன்னூர் பகுதி அரசு மருத்துவ மனைக்கு மாற்ற லாகி சென்று தொண்டு செய்து வந்தார். அவரது தொண்டினால் கவரப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அவரை பணிகள் முடிந்ததும் தங்கள் தொண்டு நிறுவனத்தில் இணைந்து மலைவாழ் மக்களுக்கு பணியாற்றக் கேட்டுக் கொண்டனர். அந்த வகையில் அவருடைய பணிக்காலம் நிறைவடைந் ததும் நீலகிரி ஆதிவாசி நல்வாழ்வு அமைப்பு என்ற தொண்டு நிறுவனத் தின் மூலம் அம்மக்களுக்கு தொண் டாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் குன்னூர் பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் (இருளர், தோடர்) வாழும் சுமார் 26 கிராமங்களுக்கு மாதத்தில் ஒரு முறை என வகை பிரித்து சென்று அந்த மக்கள் வாழும் இடத் திற்கே நேரில் மருத்துவர் புகழேந்தி, செவிலியர் வனிதா, இரத்த அழுத்த ஆய்வகர் கலைவாணி, ஓட்டுநர் அசோக் ஆகியோர் சென்று மக்களை பரிசோ தித்து ஊசிபோட்டும், அடுத்து இவர் கள் செல்லும் நாள் வரைக்கும் தேவை யான மருந்துகள் வழங்கியும் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கிராமங்களுக்கு பேருந்து வசதி என்பது ஒரு நாளுக்கு காலை, இரவு இருமுறைதான் உண்டு. அந்த மக்கள் ஏதேனும் பொருட்கள் வாங்க வெளியே செல்ல நேரிட்டால் காலையில் சென்று இரவுதான் திரும்ப முடியும்.

சில கிராமங்களில் மாணவர்கள் படிப்பதற்கு அங்கேயே அரசு பள்ளி சிறந்த கட்டடத்துடன் அமைந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்று.

மருத்துவர் புகழேந்தியுடன் ஒருநாள் பயணத்தில் அங்கே உள்ள மக்களுக்கு புன்முறுவலோடு அந்த மக்களின் மன நிலைக்கேற்ப பதில் கூறி நகைச்சுவை உணர்வோடு அம்மக்களிடம் பழகியதை காணமுடிந்தது. ஒரு மருத்துவர் அணுகுமுறை நோயாளியின் பாதி நோயை சரிசெய்துவிடும் என்ற எண்ணம் தோன்றியது. திரும்பும் வழியில் முதியவர் ஒருவர் நின்று கைகாட்டியதும் வண்டியை நிறுத்தி அவருக்கு சிகிச்சை, மருந்து, ஊசி வழங்கிய பின் வாகனம் புறப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து குன்னூர் வருகை தந்த முக்கிய பிரமுகர் பொறியாளர் பாலகுரு அவர்கள் தான் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல விரும்பவில்லை. மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு செல்ல வேண்டும் என விரும்பி தனது குடும்பத்தாருடன் மருத்துவர் புகழேந்தி சென்ற கிராமத்திற்கு சென்று அவர் பணியை கண்டு வியந்து பொதுவாக மருத் துவர்கள் நல்ல வசதியுள்ள இடத்தில் தான் பணியாற்ற விரும்புவார்கள். நீங்கள் செய்யும் இந்த பணி மகத்தான பணி என 60ஆம் ஆண்டு அகவை காணும் மருத்துவர் புகழேந்தியை மனதார வாழ்த்தினார்.

தந்தை பெரியாரின் தொண்டுள்ளத் தால் மனித நேயத்தோடு வளர்ந்த மருத்துவர் புகழேந்தி சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தொண்டாற்ற அடுத்த கிராமத்தை நோக்கி புறப்பட்டார். தொடரட்டும் அவரது சமுதாய தொண்டு.

Read more: http://viduthalai.in/page4/82561.html#ixzz35KA3xUn4

தமிழ் ஓவியா said...


மத(யானை) அட்டகாசம்!


மோதல்கள் போதுமடா! - மதங்களின்
மோதல்கள் போதுமடா! . . . (மோதல்கள்)
வாதங்கள் ஆயிரம் பக்கம் - பக்தி
வாழ்க்கையில் செத்தபின் சொர்க்கம்!
சேதங்கள் எதற்கு மீண்டும்? - மக்கள்
சிந்தித்துத் தெளிந்திட வேண்டும்! . . .
(மோதல்கள்)
1. இந்துநாடா இசுலாம் நாடா - இது
எந்தநாடு சொல்லவா?
இந்து அல்ல இசுலாம் அல்ல - இந்தியா
ஏழைநாடு அல்லவா?
தானமே வேண்டும் இன்றும் - சமா
தானமே வேண்டும் என்றும்! . . .
(மோதல்கள்)
2 கடப்பாறை சூலம் வெடிகுண்டு - வலிய
கரங்களுக்கு தேவையா?
கடல்போல குருதி வெள்ளம் - அன்புக்
கடவுளுக்குத் தேவையா?
புத்திவந்தால் பக்திபோகும் - உனக்கு
பக்தி வந்தால் புத்திபோகும்! . . .
(மோதல்கள்)

- குபேரன்

Read more: http://viduthalai.in/page6/82574.html#ixzz35KBQ76ND

தமிழ் ஓவியா said...


மலேரியாவை ஒழிக்க கொசுக்களே!


கொசுக்கள் மூலம் மலேரியா ஒழிப்பு நட வடிக்கையை மேற்கொள்ள விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டியுள்ளனர். மலேரியா நோய், கொசுக்கள் மூலம் பரவுகின்றது. இது அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க் கிருமிகளை உற்பத்தி செய்கிறது. பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து மலேரியா நோயை ஏற்படுத்துகிறது. எனவே மலேரியா என்ற கொடிய நோயை கொசுக்கள் மூலமே ஒழிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டி ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற் கொண்டனர்.

அதன்படி புதிய மரபணு மூலம் மலேரியாவை உருவாக்கும் அனோபிலெஸ் காம்பியே கொசுக் களில் ஆண் கொசுக்களை மட்டும் 6 தலைமுறைகளாக மாற்றி மாற்றி உரு வாக்கினர். அதன் மூலம் மலேரி யாவை பரப்பும் பெண் கொசுக்கள் ஒழிந்து ஆண் கொசுக்களை மட்டும் பெருக்கமடைய செய்தனர். இதன் மூலம் மலேரியா கிருமிகளை உரு வாக்கும் கொசுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என விஞ் ஞானிகள் நம்புகின்றனர்.

Read more: http://viduthalai.in/page6/82576.html#ixzz35KBg8oLa

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

எந்த வகை?

பிறர் காதில் விழும்படி பிரார்த்தனை செய்வது வாசிகம் இது ஒரு மடங்கு பலன் தரும். தன் காதில் விழும்படி செய்வது உபாம்சு ஆகும் - இது நூறு மடங்கு பலன்தரும். ஆனால் மனதில் மட்டும் பிரார்த்தனை சொல்லு வது உபாம்சு - 100 மடங்கு பலன் தருமாம்.

சரி. காந்தியார் பிரார்த் தனை செய்யும் பொழுது தானே சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் அது எந்த வகைப் பலனோ?

Read more: http://viduthalai.in/e-paper/82691.html#ixzz35PvS3zei

தமிழ் ஓவியா said...


மன்னார்குடி அய்யருக்கு எவ்வளவு பெரிய வக்காலத்து!

டில்லி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 31. இதில் ஜஸ்டீஸ் எஸ். ரத்தினவேல் பாண்டியன், ஜஸ்டீஸ் பி. சதாசிவத்திற்குப் பின் பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் எவரும் இன்றும் இல்லை; சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆனபின்பும்கூட.

தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களில் இன்றும் 31 பேரில் ஒருவர்கூட நீதிபதியாக உச்சநீதிமன்றத்தில் இல்லை.

ஒரு ஜஸ்டீஸ் வரதராஜன், ஜஸ்டீஸ் ராமசாமி இருவர் தான் (S.C.) சமூகத்திலிருந்து சென்று ஓய்வு பெற்றவர்கள்.

இவ்விருவரின் சமூக மக்கள் எண்ணிக்கையில் சுமார் 80 விழுக்காட்டிற்கு மேல் - இருந்தும் இந்த புண்ணிய பூமியில் பஞ்சம, சூத்திரர்களுக்கு அங்கே இடமில்லை. அத்துணை நீதிபதிகளும் உயர் ஜாதிக்காரர்களே; மக்கள் எண்ணிக்கையில் அவர்கள் 10 விழுக்காட்டினரே முன்னேறிய ஜாதிகளைச் (F.C.) சேர்த்தாலும்கூட!

அப்படியிருந்தும் அவாள் ஆதிக்கமே இன்று வரை! இப்போது காலியான பதவிகளில் 3 நீதிபதிகளின் பதவிகளை நிரப்ப, தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றி உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் இரு பார்ப்பனர்களோடு மேலும் இரு பிரபல சட்ட நிபுணர்கள் வழக்குரைஞர் களாக இருந்தவர்கள் பெயரை முந்தைய தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த கொலிஜியம் பரிந் துரைத்தது!

பிரபல சட்ட நிபுணரான பார்சி வழக்குரைஞருடன் முன்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த மன்னார்குடி பார்ப்பனர் கோபால் சுப்பிரமணியத்தையும் பரிந்துரை செய்திருந்தனர்.

மத்திய அரசு அவர் பெயரை நிராகரித்து மற்ற மூவரை (இரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்; ஒரு சட்ட நிபுணரான பார்சி மூத்த வழக்குரைஞர்) மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளதாம்!

தமிழ் ஓவியா said...


இது என்ன கொடுமை?இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு!


சென்னை, ஜூன் 22_ பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப் பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக்கடிதம் கிடைக் காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990- ஆம் ஆண்டு இலங்கையிலி ருந்து வந்த 164 குடும்பங் களைச் சேர்ந்த 523 தமி ழர்கள் இங்கு தங்கியுள்ள னர். இவர்களில், பெயிண் டிங் தொழிலாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று.

தனது தாய் ரூபா வதி மற்றும் மூன்று தம்பி களுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகா மைச் சேர்ந்த அல்லிமலருக் கும் கடந்த 1995- ஆம் ஆண்டு திருமணம் நடந் தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.

அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி யில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற் றுள்ளார்.

தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந் தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்காக விண்ணப் பித்தார். அவரது விண்ணப் பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந் தாய்வில் பங்கேற்க அவ ருக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை. 197.50 கட்ஆப் மதிப்பெண் பெற்றவர் களுக்கு இன்று (21- ஆம் தேதி) மருத்துவக் கலந் தாய்வு நடக்கவுள்ள நிலை யில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.

இதுகுறித்து நந்தினி கூறியதாவது: மருத்துவக் கலந்தாய் வுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப எண் (245143), ஏ.ஆர்.எண் (1529), ரேண் டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும், எனக்கு கிடைத்தன.

ஆனால், எனது கட்ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய் வுக்கான அழைப்புக் கடித மும் வரவில்லை. கலந்தாய் வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய்வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறை யிட உள்ளேன் என்றார்.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் (டி.எம்.இ.,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனை வருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகு தியான விண்ணப்பதாரர் கள் பெயர் மட்டும், புர விஷனல் பட்டியலில் வெளியிடுவோம்.

தமிழ கத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடி யுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதி கள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந் தாய்வில் பங்கேற்க முடி யாது என்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/82666.html#ixzz35PxoSoiS

தமிழ் ஓவியா said...


புதிய ஞானோதயமோ!பொருளாதாரம் வளர்ச்சி பெற கசப்பு மருந்து சாப்பிடுங்கள்! வெங்கய்யா புலம்பல்

அய்தராபாத், ஜூன் 23-_ -ரயில் கட்டணம் கடுமை யாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை அரசியல் கட்சிகள் கடுமை யாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய கசப்பு மருந்தை சாப்பிடத்தான் வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள் ளார்.

அய்தராபாத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய் தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகை யில், கடந்த 10 ஆண்டு களாக அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசு தவறான ஆட்சியை நடத்தி யுள்ளது. அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கையால் இந்த ரயில் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார். மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ள ஒரு மாதத்திற்குள்ளாகவே மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை துவங்கி யுள்ளது. ரயில் கட்டண உயர்வை மோடி அரசின் அமைச்சர்கள் நியாயப் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கசப்பு மருந்து` சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு அறி வுரை கூறியுள்ள வெங் கய்யா நாயுடு, தற்போதைய ரயில்வே பட்ஜெட்டிற்கு ரூ. 5 லட்சம் கோடி தேவைப் படுகிறது. ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு பொருளாதாரத்தை தடம்புரளச்செய்து விட் டது என்றும் பொருளா தாரம் மீண்டும் சரியான பாதைக்கு வர வேண்டும் என்றால் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண் டும் என்றும் கூறினார். இதுபோன்ற உறுதியான முடிவுகளை எடுப்பதில் மோடி அரசு தயக்கம் காட்டாது என்றும் அவர் மக்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

முன்னதாக, உலகத் தரத்திலான ரயில் சேவை தேவையென்றால் கட்டண உயர்வை ஏற்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ரயில் கட்டண உயர்வு குறித்தமுடிவு கடினமானது என்றாலும், தற்போதுள்ள சூழலில் சரியான முடிவு என்றும் அவர் கூறினார். ரயில்வேயில் சிறந்த வசதிகள் செய்ய அதைப் பயன்படுத்துபவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்தலாம் என்றும் அவர் நியாயப்படுத்தினார்.

பிருந்தா காரத் கண்டனம்

ரயில்கட்டண உயர்வை மோடி அரசின் அமைச்சர் கள் நியாயப்படுத்தி வருவது நகைப்புக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குறிப்பிட் டார். ஏற்கெனவே விலை வாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு மோசமான முடிவு. ஆனால்இது வளர்ச்சிக்கு உதவும் என்று அருண்ஜெட்லியும், அமைச் சர்களும் கூறுவது நகைப் புக்குரியது. தேர்தல் பிரச் சாரத்தின் போது, முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அதே கொள்கைகளை, அதே முடிவுகளை நாங்களும் தொடர்வோம் என்று இவர்கள் ஒருபோதும் சொல்லவில்லையே என்றும் பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82722.html#ixzz35W0cKJ50

தமிழ் ஓவியா said...


சோலார் (சூரிய) மின்வேலி அமைப்பதாகக் கூறி கருநாடகத்தில் தமிழர்களை வெளியேற்ற சதி?

மேட்டூர், ஜூன் 23_ தமிழ்நாடு - _ கருநாடகம் - எல்லைப் பகுதியில் சோலார் மின்வேலி அமைப்பதாகக் கூறி அங்கு வாழும் தமிழர்களை வெளியேற்றும் சதி வேலை கருநாடகத்தில் நடக்கிறது.

கர்நாடகா _ தமிழக எல்லையில், தமிழர் வசிக் கும் கிராமத்தில், சாலை யோரம் சோலார் மின்வேலி அமைக்கும் பணியை, கருநாடகா வனத்துறை துவங்கியுள் ளது. இதனால், கிராமத்தை விட்டு, வெளியேற முடி யாமல் முடங்கும் நிலையில், தமிழர்கள் உள்ளனர்.

மேட்டூர் அடுத்த, தமிழக எல்லையிலுள்ள கருநாடகா வனப்பகுதியில், பாலாற்றில் இருந்து ஒகே னக்கல் அருவிக்கு செல்லும் ரோட்டோரம், கோபி நத்தம், ஆத்துர், கோட் டையூர், மாறுகொட்டாய், ஜம்புருட்டு, ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இவற்றில், 420 தமிழ் குடும்பத்தினரும், 100 சோழகர் இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் களும் வசிக்கின்றனர். கிராமங்களைச் சுற்றியுள்ள வனப்பகுதியை, வன உயிரின சரணாலயமாக, கருநாடகா வனத்துறை அறிவித்துள்ளது. இந்த பகுதியில் இருந்து, வனவி லங்குகள் வெளியேறுவதை தடுக்கவும், வளர்ப்பு கால்நடைகள், வனத்துக் குள் நுழைவதை தடுக்கவும், கருநாடகா வனத்துறை, ஆலம்பாடி கிராமத்தில், சாலையோரம் ஒன்றரை கி.மீ., துரத்துக்கு, சோலார் மின்வேலி அமைத்துள்ளது.

திட்டத்தை விரிவுபடுத் தும் பட்சத்தில், வனப் பகுதிக்குள் வசிக்கும் கிராமத்தவர், சாலையை தவிர, வேறு எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து, ஜம்புருட் டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியதா வது: கடந்த, 1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, கோபிநத்தம் மற்றும் இதர கிராமங்களில் மக்கள் வசித்தது உறுதி செய்யப் பட்டுள்ளது.

வனப்பகுதியில், மக்கள் பெருக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக, கிராமங்களில் வசிக்கும், 300 தமிழ் குடும்பத்தினர், வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என, ஆறு மாதத்துக்கு முன், கருநாடகா வனத்துறை, அறிவிக்கை கொடுத்தது.

தற்போது, ஆலம்பாடி கிராமத்தில், சோலார் மின்வேலி அமைத்துள் ளது. மின்வேலி அமைக் கும் பணியை,மேலும் விரிவுபடுத்ததிட்டமிட் டுள்ளது. இதனால், கால் நடைகளை நம்பி வாழு வோர், வனத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கருநாடகா வனத்துறை, தமிழர் குடும்பங்களை வெளியேற்ற, மறைமுக நெருக்கடி கொடுக்கிறது.

தமிழக அரசு, இந்த விவகாரத்தில் தலையிட்டு, வனப்பகுதியில், மூன்று தலைமுறைக்கு மேல் வசிக்கும் குடும்பங்களை பாதுகாக்க, உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82711.html#ixzz35W0mmM4c

தமிழ் ஓவியா said...


தாக்குப் பிடிக்குமா மத்திய அரசு?


எனது பெயர் கெடலாம் - என்னை மக்கள் வெறுக்கவும் செய்யலாம் என்று சில நாட்களுக்கு முன் பீடிகை போட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்படி ஏன் சொன்னார் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படவில்லை. இந்தக் குறுகிய காலத்தில் மத்தியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சியின் அறிவிப்புகள், முடிவுகள் நிச்சயமாகக் கெட்ட பெயரைக் கெட்டியாக சம்பாதித்துக் கொடுப்பவைதான் என்பதில் சந்தேகமேயில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும், முன்பு எப்பொழுதையும்விட இப்பொ ழுது மிக அதிகமாக அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்தியப் பிரதமர் மோடியை வெகு துச்சமாகக் கருதுகிறார், சுண்டைக் காய்த் தீவான இலங்கை அதிபர் என்பதும் நிரூபணமாகி விட்டது.

எந்த விலைவாசியைக் காரணமாகப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்தி, பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி மத்தியில் அமைந்ததோ, அதே காரணங்களை அட்சரம் பிறழாமல் எதிர்க்கட்சிகள் இன்றைய ஆளும் கட்சியை நோக்கித் திருப்பிச் சொல்லும் நிலைக்கு ஆளாகி விட்டது.

ஆனால், இவ்வளவுச் சீக்கிரம் மக்களின் அதிருப் தியை இந்த ஆட்சி வாங்கிக் கட்டிக் கொள்ளும் என்று யாரும் எதிர்ப் பார்த்திருக்கவே முடியாது.

விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணம் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்கள்தான். இந்த அத்யாவசியமான பொருள்களின் விலையைக்கூட நிர்ணயிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்குத் தூக்கிக் கொடுத்தது டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சி.

அதனைக் குற்றங்கூறி, சாட்டையை எடுத்துச் சுழற்றியது இதே பி.ஜே.பி.தான்; இப்பொழுது என்ன வாழ்கிறதாம்?

அதே தனியார் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையைத் தீர்மானிக்கும் என்று மோடி ஆட்சியும் கூறி விட்டதே! அதோடு நின்றாலும் பரவாயில்லை.

இரண்டு நாட்களுக்குமுன் மத்திய அரசு வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா? சமையல் எரிவாயு விலை மாதந்தோறும் ரூபாய் 10 உயருமாம். இதன் மூலம் குடும்பத் தலைவிகளின் மொத்து தயாராகி விட்டது என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

அடுத்து மிக முக்கியமான மரண அடி, சாதாரண மக்களும் அதிகம் பயன்படுத்துவது இரயில்தான். அந்த இரயில் கட்டணத்தை இதுவரை என்றும் கேள்விப் பட்டிராத - நடந்திராத வகையில் 14.2 சதவீத உயர்வு என்றால், கேட்கும் போதே தலையைச் சுற்ற வில்லையா? சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட் டுள்ளது (6.5 சதவீதம்) இதன் மூலமும் விலைவாசிகள் உயர்வு எகிறிப் பாயப் போகிறது.

ஏற்கெனவே பண வீக்கத்தால் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நிலையின் இடுப்பையும், முதுகையும் ஒரே நேரத்தில் பிளப்பது என்று மத்திய பிஜேபி அரசு முடிவு கட்டி விட்டதாகத் தெரிகிறது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக் கட்டுக்கடங்காமல் கொந்தளித்து எழுந்துள்ளது. குறிப்பாக டில்லி, உ.பி., பீகார் போன்ற வட மாநிலங்கள் உக்கிரமாகக் கிளர்ந்துள்ளன. இந்தத் தீ எளிதில் அணைந்து விடப் போவதில்லை; எல்லா மாநிலங்களிலும் காட்டுத் தீயாகப் பரவத் தான் செய்யும்.

இரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டண உயர்வுக்கு நிதி அமைச்சர் அருண்ஜெட்லி காரணம் சொல்லுகிறார்: சர்வதேச தரத்துக்கு இந்திய இரயில்வேயை உயர்த்திட இது தவிர்க்க முடியாதாம். இவர் இப்படி சொல்கிறார்; பிரதமர் மோடி என்ன சொல்லுகிறார்? இரயில்வே துறையில் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறுகிறார்.

இது என்ன முரண்பாடு? புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல் உலகத் தரத்துக்கு இந்திய ரயில்வேயை எப்படி உயர்த்துவார்களாம்?

சர்வதேசத் தரத்திற்கு இரயில்வே மட்டும்தான் உயர வேண்டுமா? இன்னும் எத்தனை எத்தனையோ துறைகளில் நமது தரம் சர்வதேச தரத்தை எட்ட வில்லையே, அதற்காக அவற்றின்மீது வரிகளை விதிக்கலாமா?

நாட்டின் பொருளாதாரத்தைப் படிப்படியாக வளர்ப்பதன் மூலம்தான் அந்த நேர்த்தியான அணுகுமுறைகள் மூலம்தான் முறையாக அந்தச் சர்வதேசத் தகுதி எல்லையை எட்டிப் பிடிக்க வேண்டுமே தவிர, அகலக் கால் வைத்து அவதிப்படக் கூடாது. இன்னொரு காரணத்தையும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். பழைய காங்கிரஸ் ஆட்சியின் போதே மேற்கொள்ளப்பட்ட முடிவுதான் இரயில் கட்டண உயர்வு - நாங்களாகச் செய்த முடிவல்ல என்று சிறுபிள்ளைத்தனமாக சொல்லித் தப்பி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். பழைய ஆட்சி செய்த தவறுக்காகத் தானே அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, பி.ஜே.பி.யை அந்த இடத்தில் உட்கார வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும் பொழுது இத்தகு காரணத்தை இந்த ஆட்சி சொல்லலாமா என்ற கேள்விக்கு என்ன பதில்? (உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அந்தத் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியே செயல்படுத்தவில்லை).

இந்தப் போக்குத் தொடருமேயானால் அய்ந் தாண்டைக் கடப்பது கூடக் கடினம்தான் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/82728.html#ixzz35W18t0MZ

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

Read more: http://viduthalai.in/page-2/82727.html#ixzz35W1JZ1qg

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

Read more: http://viduthalai.in/page-2/82727.html#ixzz35W1JZ1qg

தமிழ் ஓவியா said...


அய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:


அய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:
சமூக நீதிக்கும் - பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி

-குடந்தை கருணா

அய்.அய்.டி கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் யிணிணி தேர்வினை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதி, அதில் 27000 தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அய்.அய்.டியில் 9784 இடங்கள் உள்ளன. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு தரப்பட்ட நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு 2641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, நடத்தப்பட்ட தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் 4085 பேர், பொதுப்போட்டியிலும் வெற்றி பெற்று, மொத்தம் 6726 மாணவர் கள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முந்தைய அய்க்கிய முற்போக்கு முன்னணி அரசில் 2005 ஆம் ஆண்டு, அன்றைய கல்வி அமைச்சர் அர்ஜூன் சிங், மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு அளித்திடும் மசோ தாவை நிறைவேற்றினார். அது உச்ச நீதிமன்றத்தில், பார்ப்பனர் களால் தடை பெற்று, பின்னர் இரண்டு ஆண்டுகள் கடந்து 2008 முதல், அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப் பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தால், தகுதி, திறமை குறைந்துவிடும் என பார்ப்பனர்கள் கூறி வந்த நிலையில், தற்போது, இந்தியாவில் மிகக் கடினமான தேர்வாக கருதப்படும் JEE தேர்வில், பொதுப்போட்டியில், பார்ப்பனர்களை பின்னுக்கு தள்ளி, 4085 மாணவர்கள் தேர்வு பெற் றுள்ளனர் என்பது சமூக நீதிக்கும், பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

Read more: http://viduthalai.in/page-2/82733.html#ixzz35W1TGb6Z

தமிழ் ஓவியா said...


கருநாடக முதல்வருக்கு வேண்டுகோள்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

கருநாடக முதல்வருக்கு வேண்டுகோள்

இந்தியா பெரும்பகுதி கிராமப்புறங்கள் நிறைந்த நாடாகும். அதே போன்று கருநாடக மாநிலத்திலும் கிராமங்கள் நிறைந்துள்ளன. மேலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லா கிராமப்புற மக்களுக்கும் சரி நிலையில் சென்றடை யாமல் உள்ளன. அந்த வகையில் முதலும் தலைமையானதுமான கழிப்பிட வசதியை எல்லாக் கிராமப் புற மக்களுக்கும் செய்து தர வேண்டும். கிராமப்புறங்களிலுள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்டும் பணியை தீவிர சிறப்புத் திட்டமாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்படவேண்டும்.

மனிதநேய மிக்க செயல்பாடுகளில் முக்கியம் கருதி செயல்படும் கருநாடக மாநில முதலமைச்சர் அவர்கள் இன்றி யமையாத எல்லா வீடுகளுக்கும் கழிவறை கட்டும் திட்டத்தினை செயல்வடிவம் கொடுத்து இரண்டு நிதியாண்டிற்குள் முடித் திடும் வகையில் பணிகளை மேற்கொண்டு முடித்திட வேணுமாய் முதலமைச்சர் அவர் களை மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கிராமப்புற பெண்கள் கழிவறைகளை உருவாக்கி, அதனைப் பயன்படுத்துகின்ற விழிப்புணர்வை தொண்டு நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்த வேண்டும். சமூக முக்கியத்துவம் பணிகளைச் செய்வதில் இந்தியாவிலேயே கருநாடகம், முதன்மை யாதென்ற செயலிலும், முதன்மையான தென்றே வரலாற்றுச் சுவடினை உரு வாக்கிட வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் கூறியது போல், சமூகச் சீர்திருத்தங்களை கிராமப் புறங்களில் இருந்து முதலில் தொடங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படை யில் எல்லா கிராமபுறங்களிலுள்ள வீடு களுக்கு கழிவறைகளும், தாலுக்கா தலை மையிடங்களில் பொதுக் கழிவறைகளை அமைக்க வேணுமாய் மிகுந்த அக்கறை யுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

- எம். ஜானகிராமன், தலைவர், கர்நாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு

Read more: http://viduthalai.in/page-2/82732.html#ixzz35W1gcBTD

தமிழ் ஓவியா said...


இதய நலம் காக்கும் வெங்காயம்


வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக் கிறது. சளி பிடித்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்ற தின்று, வெந்நீர் குடித்தால் சளி குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.

வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத் தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத் தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.

நெஞ்சு படபடப்பு

நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோய்

மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங் காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.

வெங்காயச்சாறு

* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

* தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.

* வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

Read more: http://viduthalai.in/page-7/82744.html#ixzz35W2Vq184

தமிழ் ஓவியா said...


உடலை சீராக வைத்திருக்கும் புரோட்டீன் உணவுகள்


ஆரோக்கியம் தரும் பருப்பு வகை சமையல்: உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றிமையாதது. அத்தகைய புரோட் டீன்கள் நிறைய உணவு வகைகளில் உள்ளன.

அதிலும் அசைவ பிரியர்களுக்கு இறைச்சி, முட்டை, போன் றவை உள்ளது. ஆனால், சைவத்தை சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மட்டுமின்றி வேறு சில ஊட்டச்சத்துகளும் நிறைந்துள் ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

அது மட்டுமல்லாமல் பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன. அது ஓவ்வொன்றும் பல சத்துக்களை கொண் டுள்ளது. அவற்றில் பொதுவான ஓன்று என்றால் அதில் குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்,.

மேலும் இதனை தொடர்ச்சியாகவும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். நாம் பருப்புகளின் வகைகளையும் அவற்றின் பயன் களையும் அறிவோம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நிறைந்த அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும்.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிம சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் பொட்டா சியம், அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்ப தற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டு மல்லாமல் அதிகப்படியான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தால் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சைபயறு

இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன் கால்சியம், பொட்டாசியம் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றம் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால் உடலில் உணவுகள் எளிதில் செரிமானமடைவதோடு உடல் எடை மறறும் கொலஸ்ட் ரால் குறையவும் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புசத்து, காப்பர், மாங்கனீசு, போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

சுண்டல்

கொண்டக்கடலையின் ஒரு வகை தான் இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், இரும்புசத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அது கருப்பைக் குழாயில் பிரச்சினை களையும், ரத்தசோகை பிரச்சினைகளையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட் மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலைவிட இரு மடங்கு அதிக புரோட்டீனை கொண்டுள்ளதால் இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டறிந்துள்ளனர்.

சிவப்பு காராமணி

சிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துகள் அடங்கியுள்ளது. மேலும் வைட்மின்கள் பி6, இரும்புசத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இது புற்றுநோய் கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தட்டைபயறு

தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்கமுடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது இதயநோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டா சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந் துள்ளது. இதனால் தசைச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கும்.

உளுத்தம் பருப்பு

இட்லிக்கும் தாளிப்பதற்கும் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன், நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமசத்துகளும், வைட்ட மின்களும் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால் இறைச்சிக்கு பதிலாக இதை சாப்பிடலாம்..

Read more: http://viduthalai.in/page-7/82743.html#ixzz35W2h8WJR

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை


செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவர இலையே மருத்துவப் பயனுடையது, கீரைக்கட்டாக விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல், தாகம் தணித்தல் ஆகிய பண்பு களைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும், செரியாமை பிரச்சினையும் அகலும்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

கீரையை சமைத்துண்ணவோ, சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்து வத்தில் ஆரைக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் ரத்தம் போதல் ஆகிய பிரச்சினைகள் தீரும்.

குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம், கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப் பேற்றுக்காக காத்திருப்போர், கருவுற்றப் பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.

Read more: http://viduthalai.in/page-7/82749.html#ixzz35W2txaFP