Search This Blog

7.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 2(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன?
ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)

பால காண்டம்

மூன்றாவது அத்தியாயம்

சிப் பெண்களால் மயக்கி நாட்டுக்கு அழைத்து வரப்பெற்ற கலைக்கோட்டு முனிவனை அயோத் திக்கு அழைத்துவந்த தசரதன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். யாகக் குதிரை நாடு சுற்ற அனுப்பப் பெற்றது. அரசர்களெல்லோரும் வந்து சேர்ந்தனர். அயோத்தி யையடுத்துள்ள சரயு நதியின் வடகரையில் யாகம் தொடங்கப் பெற்றது.

குதிரையை விட்டு ஓராண்டு நிரம்ப அக்குதிரையும் வந்து சேர்ந்தது. கலைக்கோட்டு முனிவன் தலைமை பூண்டு வேள்வியை நடத்தினான். யாகத்திற்கு நாற்புறத்தும் பிராம ணர்கள் உட்கார்ந்து கொண்டு நன்றாய்ச் செழித்திருந்த சோம மென்னும் கொடியைக் கல்லெடுத்து நசுக்கி யாகம் செய்ய வேண்டி அதிலிருந்து இரசத்தை நன்றாகப் பிழிந்தெடுத்தார்கள்.
இருபத்தொரு பூபஸ்தம்பங்கள் (வேள்வித்தூண்) நாட்டப் பட்டன. அவை மிகவும் அலங்காரம்செய்யப் பெற்றன. அந்த பூபஸ்தம்பங்களில் அவ்வவ் வானவர்களைக் கருதிப் பசுக்களும், பாம்புகளும், பறவைகளும், நூல் தவறாது கொண்டு வந்து கட்டப்பட்டன. அசுவமேதம் என்னும் அச்சிறந்த யாகத்தில், விதிப்படி பசு ஹிம்சை செய்ய வேண்டிய சமயம் வருகையில் குதிரையும், ஆமை முதலிய நீர் வாழ்வனவும் மற்றும் யாகத்திற்கு வேண்டிய பசுக்களும் ஆகிய இவையெல்லாம் விதிப்படி கொண்டுவந்து கட்டப் பெற்றன. அந்த யாகத்தில் பூபஸ்தம்பங்களில் முந்நூறு பசுக் களும் சிறந்த ஒரு குதிரையும் கட்டப்பட்டிருந்தன.

அரசன் முதல் மனைவியான கவுசலை யென்பாள், அக் குதிரையைச் சுற்றிவந்து, அக்குதிரையை மூன்று வெட்டாக வெட்டிக் கொன்றாள். பின் அவள் தரும காரியத்தில் விருப்ப முடையவளாய்க் கலங்கா நெஞ்சுடன் அவ்விரவு முழுவதும் கட்டித் தழுவி அந்தக் குதிரையோடு கூடியிருந்தாள்.
பின் கவுசலை, கைகேயி, சுமத்திரை முதலிய இராஜ ஸ்திரீகளை அத்வர்யு, ஹோதா முதலிய முக்கியமான இருத்துவிக்குகளுக்குத் தட்சணையாகத் தசரதர் கொடுத்து விட்டார். இருத்துவிக்குகள் இராஜபத்தினிகளைக் கைப்பற்றிக் கொண்டு சில நேரந்திரிந்தனர். பின்பு அவர்களுக்கீடாகத் திரவியங்களைப் பெற்று, அவர்களை அவ்வரசனுக்கே கொடுத்துவிட்டார்கள். இந்த அசுவமேத யாகம் நடந்த அன்றே கவுசலையும், கைகேயியும், சுமத்திரையும் கருத்தரிக்கின்றனர்.

இந்த யாக விவரமெல்லாம் வால்மீகி இராமாயணம் பதினான்காவது சருக்கத்தில் காணப்படுகிறது. இதனை மொழி பெயர்த்துள்ள பண்டித அனந்தாச்சாரியார் இந்த இடங்களைப் பின்வருமாறு மொழி பெயர்க்கின்றார்: கவுசல்யை அக்குதிரையை மூன்று கத்திகளால் கொன்றாள். கவுசல்யை ஓர் இரவு முழுவதும் அக்குதிரையோடு கூடியிருந்தாள். இருத்துவிக்குகள் ராஜ ஸ்திரீகளை மன்னவர் தட்சணையாகக் கொடுத்ததனால் கைப்பற்றினர். பண்டித நடேச சாஸ்திரியார் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகின்றார்:- கவுசல்யை அக்குதிரையை வாளால் சில துண்டுகளாக வெட்டி வீழ்த்தினாள். அன்றியும் ஸ்திர சித்தத்துடன் அவள் புத்திரபாக்கியம் அடையும் விருப்பத்தால், சாஸ்திர விதிப்படி அன்றிரவு முழுவதும் அவ்வசுவத்தின் அருகே இருந்தாள். ஹோதா, அத்வர்யு, உத்காதா முதலிய யாக கர்த்தாக்கள் உரிய தட்சணைகளைப் பெற்று ராஜ பாரியைகளுடன் இருந்து சடங்கு நடத்தி னார்கள்.

பண்டித மன்மத நாததத்தர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்: Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an un disturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugates joined the King’s wives.

இதன் பொருள் வருமாறு:- கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.

(பண்டித வில்சன் துரை மகனார்) வேதகால இந்து மதம்(Vedic Hinduism)
என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிற தாகக் குறிக்கப்பட்டுள்ளது.“Kausalya is directed to be all night in closest contact with the dead horse/ In the morning, when the queen is released from this disgusting and in fact, impossible contiguity a dialogue. as given in the Yajush and in the Ashavamedha section of the Sathapatha Brahmna and as explained in the Sutras as taking place between the queen and the females accompanying or  attending upon her and the principal priests which in brief is in the highest degree both silly and obscene”.

இதன் பொருள் வருமாறு:- கவுசலை ஓர் இரவு முழுதும் செத்த குதிரையை நன்றாகத் தழுவிப் படுத்திருக்கச் செய்யப்ப
ட்டாள். காலையில் இந்த அருவருப்பானதும், உண்மையாகவே அசாத்தியமானதுமான அக்குதிரையின் தேக சம்பந்தத்தினின்றும் நீங்கின உடனே, யசுர் வேத சதபத பிராமண அசுவமேத அத்தியாயத்திலும் சூத்திரங்களிலும் விவரித்துள்ளபடி, இராச பத்தினிகளுக்கும் அவர்களைச் சூழ்ந்துள்ள பெண்களுக்கும், இருத்துவிக்குகளுக்கும் ஒரு சம்பாஷணை நடைபெற்றது. அது சுருக்கமானதாக இருந்த போதிலும் சொல்லுவதற்கு மிகவும் அசங்கிதமாகவும் அருவருப்பை உண்டாக்குவதாயும் இருக்கிறது.
தெலுங்கில் வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்த் துள்ள பண்டித லட்சுமணாச்சார்லு தமது மொழிபெயர்ப்பில், பக்கம் 181இல் யாகம் முடிந்தவுடன், நடத்துபவன், தன் மனைவியரைக் குருக்களிடம் தட்சணையாக ஒப்புவிக்க வேண்டுமென்பதும், பின் பணம் பெற்றுக் கொண்டு அப்பெண் களைச் சொந்தக்காரனிடம் ஒப்புவிக்க வேண்டுமென்பதும் சாஸ்திர விதி என்றெழுதுகிறார்.


மேலே கண்ட செய்கைகளைப் பார்க்குமிடத்து ஆரியர் களது அருவருப்பான செய்கைகள் நன்கு புலனாகின்றன. பலசாலியான ஒரு வீரன்கூட மூன்றுவெட்டில் ஒரு பெரிய குதிரையை வெட்டி வீழ்த்துவது சிரமம். அப்படியிருக்க ஒரு பெண், அதிலும் அரசனுடைய முதல் மனைவி, பெருங் கூட்டமாகப் பல தேச வேந்தரும்பிறரும் கூடியிருக்கு மிடத்தில், அவர்கள் காண ஒரு குதிரையை மூன்று வீச்சில் மிகவும் உற்சாகத்துடன் வெட்டி வீழ்த்துகிறாள் என்பது மனத்தினாலும் எண்ண முடியாதபடி அருவருக்கத்தக்க செய்கையாக உள்ளது. அப்படியானால், அப்பெண்ணின் மனோபாவங்கள் எப்படியிருந்திருக்க வேண்டும்? மேலும் அவ்வாறு வெட்டிக்கொன்ற குதிரையோடு ஒரு நாளிரவு முழுவதும் கலங்கா நெஞ்சொடும் கட்டித்தழுவிக் கூடியிருந் தாளென்பதும் சாதாரணப் பெண்களால் செய்யக்கூடாத செயலாகவேயிருக்கின்றது. மனிதர்கள் செயலுக்கு அப்பாற் பட்டதாய் உள்ளது.

இவ்வாறு கூடியிருந்ததும் தனியாகவு மல்ல; பல நாட்டு முடிவேந்தர் நடுவில் அமைந்திருந்த பந்தலிலேயே. இதற்குமேல் ஆராயத் தகுந்தது. தசரதன் ராஜபத்தினிகளை இருத்விக்குகளிடம் ஒப்புவித்தும் அவர்கள் அப்பெண்ணைக் கூடிச்சடங்கு நடத்தியதுமே. அதன் பின்னர் அப்பெண்கள் அரசனிடம் ஒப்புவிக்கப் பெறுகின்றனர்.

இதனால் ஆரியர் தங்கள் குடும்ப விருத்திக்காக இந்த யாகத்தை வைத்திருக்கின்றனரென்பது தெளிவாகிறது. புத்திரருண்டாகச் செய்ய வல்லவரான ருசியசிருங்கர் முதலியோர் சேர்க்கைப் பிரசாதத்தால் அப்பெண்கள் பிள்ளைகளை அடைகின்றார்கள். இதன் மேல் நிகழ்ந்ததை ஆராய்வோம்.

அத்வர்யு, அந்தச் செத்த குதிரையின் வபையை இழுத்து எடுத்து அக்கினியில் நன்றாகப் பாகம் பண்ணினான். தசரதன் அவ்வாறு பாகம் பண்ணப்பட்டபோது கிளம்பிய அவ்வபைப் புகையை மோந்து பார்த்து நின்றான். பின் அக்குதிரையின் பிற அவயவங்களெல்லாம் தீயில் பாகம் செய்யப்பெற்றன. பின் தானத்தோடு யாகம் முடிவடைகிறது.

இதனால் ஆரியர்கள் கணக்கிறந்த மிருகங்களையும், பாம்புகளையும், பறவைகளையும், ஆமை முதலிய நீர் வாழ்பவற்றையும் கொண்டு வந்து கட்டி, வெட்டித் தீயில், நன்றாகப் பாகம் பண்ணி உண்டு வந்தது தெளிவாகிறது. குதிரை முதலிய மிருகங்களை உண்டதோடு நில்லாது பாம்பு, ஆமை முதலியவற்றையும் வதக்கி உண்டனரென்பதே மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.

மேலே கண்ட வேள்விச் செயல்களெல்லாம் தமிழ் மக்களால் மிகவும் அருவருத்துத் தள்ளப் பெற்றவை. இராம கதையைத் தமிழில் பாடி வந்த கம்பர் தமிழ் மகனாகையால், இவற்றைக் கண்டு வெறுப்படைந்து திகைத்து வருந்திக் கேவலமான இவ்வரலாற்றைப் பாடுவதால் தம்த் தமிழுலகத்தார் உண்மை தெரிந்தபோது இகழ்வர்; மாசும் வந்தடையும் என்றும் புலம்பியுள்ளார். 

அதனால் அவர் என்ன செய்தார்? இவ்விழிவான  யாக வரலாற்றை முழுவதும் மறைத்துவிட்டார். அவர் பாடல்கள் பின்வருவன:-

(கலைக்கோட்டு முனிவன் தசரதனை நோக்கி)
என்றிவை பற்பல இனிமை கூறி நற்
குன்றுறழ் வரிசிலைக் குலவு தோளினாய்
நன்றிகொள் அரிமகம் நடத்த எண்ணியோ
இன்றெனை அழைத்ததிங் கியம்புவாய் என்றான்.
உலப்பில் பல்லாண்டெலாம் உறுகண் இன்றியே தலப்பொறை ஆற்றினென் தநயர் வந்திலர்
அலப்புநீர் உடுத்தபார் அளிக்கு மைந்தரை
நலப்புகழ் பெறஇனி நல்கல் வேண்டுமால்
என்றலும் அரசநீ இரங்கல் இவ்வுலக
கொன்றுமோ உலகமீ ரேழு மோம்பிடும்
வன்றிறன் மைந்தரை அளிக்கு மா மகம்
இன்றுநீ இயற்றுதற் கெழுக ஈண்டென்றான்
(பின் யாகசாலையிற் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீவளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்றெழுந்தது)

இவ்வாறு கம்பர் கூறும் வரலாறு, வால்மீகி ராமாயணத்திற் பதினைந்தாவது சருக்கத்தில் கூறப்படுகிறது. ஆதலின் பெருங்கவி கம்பர் வால்மீகி முனிவர் கூறும் அசுவமேத வரலாற்றை அறிந்திலரா எனின், அவர் கூறுவது முதலில் அவ்வாறு நினைக்கும்படிதான் உள்ளது. முதலில் அசுவமேதம் செய்ய என்னை அழைத்தாயா? வென்று தசரதனிடம் கலைக்கோட்டு முனி கேட்டதாகவும், அவன் அவ்வாறே கூறியதாகவும், உடனே கலைக்கோட்டு முனி புத்திர காமேட்டி யாகம் செய்ததாகவும், பூதம் தோன்றியதாகவுமே புத்திரகா மேட்டியென மயங்கி எழுதியிருக்க வேண்டும். அல்லது அசுவமேதம் தமிழ் மக்களுக்கு மிகவும் அருவருப்பாக இருக்குமென்று அதனை எழுதாது மறைத்திருக்க வேண்டும்.

பூதம் தோன்றித் தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தானென்று கூறிய பின்னர் கம்பர்.


வாம்பரி வேள்வியும் மகவை நல்குவ
தாம்பரை ஆகுதி பிறவும் அந்தணன்
ஓம்பிட முடித்தபின் உலகு காவலன்
ஏம்பலொ டெழுந்தனன் யாரு மேத்தவே

என்று கூறுகிறார்.  இதனால் அசுவமேதயாகம் செய்தபின், புத்திரகாமேட்டியும் செய்தனன் தசரதன் என்பதையும், அசுவமேதம் வேறு, புத்திரகாமேட்டி வேறு என்பதையும் கம்பர் நன்றாக உணர்ந்தவர் என்பது புலனாகிறது.  ஆதலால் கம்பர் பரிவேள்வியின் ஆபாசங்களைத் தமிழர் உணர்ந்தால், தமது கதையை மதியார் என்பதை உணர்ந்தே, அதை முற்றிலும் கூறாது விடுத்தார் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.  இவருக்கு வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்துரைத் தோர், இவ்வசுவமேத யாக வரலாற்றைக் கூறாது விடுத்தனரோ என்று அய்யுறவும் இடமில்லை.  ஏனெனில், அந்நோக்க முடையோர் பரிவேள்வி செய்தான் என்ற அளவில்கூட பரிவேள்விப் பெயரையே கூறியிருக்க மாட்டார்கள்.

இராமாயணக் கதையைப் படிப்போர் இதனை நன்கு கவனிக்க வேண்டும்.  பலன் கருதி இக்கதையைப் படிப்போர் வால்மீகி முனிவர் கூறும் உண்மைக் கதையை மறைத்து, வேறுவிதமாகக் கதையை மாற்றி, எழுதும் கம்ப இராமா யணத்தைப் படிப்பதால், அவர்கள் விரும்பும் பலன் விளையா தென்பதை உணர்வாராக.  அதோடு உண்மைக்கு மாறான வரலாற்றைப் படித்துக் கேட்பதால் வரும் பாவத்துக்கும் ஆளாவதுண்மை.  ஆதலின் கம்ப இராமாயணத்தை அவர்கள் படியாமல் உண்மை வரலாறாகிய வால்மீகி இராமாயணத்தைப் படிக்கக் கடவர்.  இச்சொல் ஆரியருள் கம்ப இராமாயணத்தைப் படிப்போருக்கே.  தமிழரோ பிற்காலத்தில் உண்மையை யறியும்போது தம்மை இகழ்வரென உணர்ந்த கம்பர், தம்மவர் சிறந்த வரலாறு பல மலிந்து கிடப்பவும் அவைகளைப் பாடாமல் அந்நியராகிய ஆரியர் வரலாற்றைப் பாடியதோடு, உண்மையை உரைக்காமல் பலவற்றை மறைத்தும், மாற்றியும் எழுதியிருப்பதனால் வால்மீகி இராமாயணத்தையும் படித்து உண்மையறியக்கடவர்.

ஆனால், கம்பர் ஒரு வகையில் தமது கடமையையும் மறந்தார்.  அவர் வாழ்ந்த காலத்தில் ஆரியர் ஆதிக்கம் மிகுந்தி ருந்தது போலும்!  அதனாலேயே அவர்களால் வற்புறுத்தப் பட்டு அவர்கள் அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் அஞ்சியோ அல்லது அவர்களிடையேயும் புகழ் பெறும் அவாவினாலோ இதனை அவர் பாடியிருக்க வேண்டும்.  கம்பர் பரிவேள்வி யையும், மகப்பேற்று வேள்வியையும் தசரதன் செய்ததாகக் குறித்து விட்டு, பரிவேள்வியின் விவரத்தை எழுதாதிருப் பதனால், அதைப் படிப்போர்க்கு அதன் விவரத்தை அறிய ஆவல் எழும்.  உடன் அவர்கள் வால்மீகியைப் பார்த்துத் தெரிந்து கொள்வார்கள் என்று எண்ணியே அவர் பரிவேள்வியும் செய்யப் பெற்றது என எழுதுகிறார்.  தமிழ் மகனாகிய அவருக்குத் தாம் பாடும் நூலில் இவ்வசுவமேத ஆபாசங்கள் இடம் பெற வேண்டாமென்று தோன்றி ஒருவேளை அவற்றை அவர் எழுதாது விட்டிருக்கலாம்.
                      ----------------------------------"விடுதலை” 6-6-2014

Read more: http://viduthalai.in/page-3/81674.html#ixzz33uZzKcEG

35 comments:

தமிழ் ஓவியா said...


இப்படியும் நடக்கிறதே!


மகாராட்டிரத்தில் பூனாவுக்கு அருகில் உள்ள கர்ஜத் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றுவரும் குழந்தைகள் இல்லத்தில் மனிதக் கழிவுகளை உண்ணச்செய்து பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளதாக அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்ஜத் பகுதியில் சந்திரபிரபா அறக்கட்டளையின் சார்பில் குழந்தைகள் இல்லத்தை அஜித் தபோல்கர் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

இவரின் உதவியாளர் லலிதா டாண்டே என்பவர் ஆவார். குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளில் 5வயதிலிருந்து 15வயதுவரை உள்ளவர்களில் சிலர்மீது பாலியல் வக்கிரக் கொடுமைகள் செய்துள்ளனர். அத்துடன் நிற்காமல் பசியால் வாடிய குழந்தைகளை மனிதக் கழிவுகளை உண்ணச்செய்துள்ள கொடுமையையும் செய்துள்ளனர்.

இவை அனைத்தையும் படமும் பிடித்துள்ளனர். இதுகுறித்து குழந்தைகளுக்கான சமூக ஆர்வலர்கள் தகவல் கிடைத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். பூனா மற்றும் ராய்காட் குழந்தைகள் பாதுகாப்பு மய்யம் (Child Line)
தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏறத்தாழ ஒரு மாதமாக இந்த விவகாரம்குறித்து ரகசியமாக விசாரணை நடைபெற்று வந்துள்ளது. அந்த குழந்தைகள் இல்லத்தில் வறுமையான குடும்பத்திலிருந்து மொத்தம் 30குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூன்று குழந்தைகள் மட்டுமே தற்போது இல்லத்தில் உள்ளனர். மற்றவர்கள் கோடை விடுமுறைக்கு சென்றுவிட்டனர். தன் குழந்தையை அந்த இல்லத்தில் சேர்த்துள்ள ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அப்பெண் வீட்டுவேலை செய்வதால் குழந்தையை இல்லத்தில் சேர்த்துள்ளார்.

அவர் வேலைசெய்துவரும் வீட்டில் இதுகுறித்து தெரிவித்து எழுத்துமூலம் புகாராகக் கொடுத்துள்ளார். இதனையடுத்தே குழந்தைகள் பாதுகாப்பு மய்யம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அதேபோல் ஆறு குழந்தைகள் எழுத்துமூலமாக புகாரை அளித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நிர்வாகியும் உதவியாளரும் அலிபாக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். பாலியல் கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் இல்ல விவகாரத்தை அடுத்து, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து காப்பகங்களிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page5/81758.html#ixzz346DGKhcO

தமிழ் ஓவியா said...


பாம்பைப் பற்றிய மூடநம்பிக்கை


பாம்புகள் பழிக்குப் பழியாக பழி வாங்கும்னு சொல்றது உண்மையா?

(பலமாக சிரிக்கிறார்) அப்படியெல்லாம் கிடையாது. பொதுவா பாம்புகள் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. இதமான இருப்பிடம் தேடித்தான் எதிர்பாராம வீட்டுக்குள்ள புகுந்துடுது. அப்புறம் இயற்கையான அதோட வாழ்விடங்களை மனுசங்க குடியிருப்புப் பகுதியா மாத்திட்டு வர்றாங்க. அதுவும் ஒரு காரணம்.

எதிரிகளை எத்தனை வருசமானாலும் நினைவில் வைத்து- பாதிக்கப்பட்ட நல்ல பாம்பு பழி வாங்கும்னு சொல்றதும்; கொம்பேரி மூக்கன் பாம்பு... பழி வாங்கிட்டு சுடுகாடு வரை போய் பார்க்கும்னு சொல்றதும்கூட கட்டுக் கதைகள்தான்

அது சரி... பச்சைப் பாம்பை தொட்டவர்களின் சமையல் ருசிக்கும் என்பது?

இதுவும் ஒரு தவறான நம்பிக்கைதான்! இது உண்மையா இருந்தா கேட்டரிங் படிப்பே தேவையில்லையே? ஒரு பச்சைப் பாம்பை மட்டும் வெச்சுக்கிட்டு எல்லோருக்கும் கை ருசியான சமையல் கலையை கத்துக் கொடுத்திடலாமே!

இந்தவகைப் பாம்பு கண்ணை குறி வெச்சுத் தாக்கும்கிறதுகூட தவறானதுதான். நம்மளோட கண்களை வண்டு என்று தவறாக நினைத்துதான் சிலநேரம் கொத்துவதுண்டு

(20,000 பாம்புகளை இதுவரை பிடித்த பூனம் சந்த் அளித்த பேட்டி (ராணி - 8.6.2014)

Read more: http://viduthalai.in/page6/81760.html#ixzz346DyvSkT

தமிழ் ஓவியா said...


கொசுக்கடியிலிருந்து தப்பிக்க வேண்டுமா?


2006ஆம் ஆண்டில் சிக்குன்குனியா நோய் தாக்கியபோது தமிழகப் பொது சுகாதாரத்துறை ஓர் ஆய்வினை மேற்கொண்டது. கருநீலம், கரும்பச்சை, கருப்பு போன்ற வண்ண உடைகள் கொசுக்களை ஈர்ப்பதால் அம்மாதிரி உடை அணிபவர்கள் கொசுக்கடிக்கு அதிகம் ஆளாவதாகக் கண்டறிந்தோம். ஒரு சிலரை மட்டும் சிக்குன்குனியா தாக்குவது ஏன் என்ற கேள்ளிக்கு விடை கிடைத்தது என்கிறார் அப்போது அத்துறைக்கு இயக்கு நராக இருந்த டாக்டர் இளங்கோ.இரவில் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இந்திய பொது சுகாதார அமைப்பு IPHA - Indian Public Health Association- Tamilnadu பரிந்துரைக்கிறது. சென்னை மாநகரத்தைச் சேர்ந்த புளியந்தோப்பு, அண்ணா நகர், முகப்பேர், போரூர், அடையார், தேனாம்பேட்டை, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 100 பேர்களைத் தேர்ந்தெடுத்து 2013 செப்டம்பரில் தொடங்கி 2014 பிப்ரவரி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உறங்கச் செல்வ தற்கு முன் ஒரு குளியல் போட வேண்டும். பூண்டு சாப்பிட்டவர் களை நெருங்க பிற மனிதர்களுக்கு மட்டு மல்ல, கொசுக்களுக்கும் தயக்கம் இருக் கிறது. இரவுஉணவில் பூண்டு சேர்த்துக் கொள்பவர்களை அவை நெருங்குவ தில்லை. அதே சமயம், ஆல்கஹால் உட் கொள்பவர்களைக் கொசுக்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. தோலில் உள்ள நுண்ணுயிர்கள் பலவிதமான வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இவை வியர்வையுடன் கலந்து உருவாக்கும் ஒருவித மணம் கொசுக்களை ஈர்க்கிறது. படுப்பதற்கு முன் குளியல், உணவில் பூண்டு சேர்ப்பது, ஆல்கஹால் உட் கொள்வது போன்றவை இந்த மணத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களே கொசுக்களை ஈர்ப்பதிலும் மாற்றங்களை ஏற்படுத்து கின்றன என்கிறது மேற்கண்ட ஆய்வு.

(ஆதாரம்: 2014 மார்ச் 26 தேதியிட்டஆங்கில இந்து நாளிதழில் திருமிகு செரீனா ஜோசஃபைன் எழுதிய கட்டுரை)

Read more: http://viduthalai.in/page8/81763.html#ixzz346F1cKEI

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


முடி காணிக்கை எதற்காக?

இறைவனைத் தரிசிக்கும்போது எனது அகங்காரம் நீங்க வேண் டும். அதற்காக அழகுடன் நான் பராமரிக்கும் முடியை அர்ப்பணிக் கிறேன் என்பது அதன் தத்துவம்.

முகத்துக்கு அழகு மூக்கும் முழியும் தானே! அவற்றைக் காணிக் கையாக அளித்தால் அகங்காரம் மட்டுமல்ல; மும்மலமும் (ஆணவம், கன்மம், மாயை) ஒட்டு மொத்தமாக அகலாதா?

Read more: http://viduthalai.in/page1/81726.html#ixzz346FWNTdI

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை!தமிழ்நாட்டில் கடந்த சனவரி முதல் ஏப்ரல் வரை யில் சாலை விபத்துகளில் 5078 பேர் பலியாகியுள் ளனர். இதில் சென்னையில் மட்டுமே 366 பேர்களாம்.
சாலை விதியைப் பின் பற்றா விட்டால் சாவைத் தான் அழைக்க நேரிடும் குறைந்தபட்சம் தலைக் கவசம் (ஹெல்மட்) அணியக் கூடாதா?

Read more: http://viduthalai.in/page1/81725.html#ixzz346Fg5uVJ

தமிழ் ஓவியா said...


மனிதனாக...


மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page1/81727.html#ixzz346GcNvcO

தமிழ் ஓவியா said...


திருப்பதி வெங்கடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை!


திருப்பதி வெங்கடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம்.

தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூஜையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங் களையும், பூமியையும், கட்டிடங்களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும், நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள்தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.

ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும் மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து, அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலீசாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச்சைக்குப் பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கி டாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?

- குடிஅரசு - கட்டுரை - 24.11.1929 (தந்தை பெரியார் அவர்களது நகைச்சுவை உணர் வையும் நையாண்டி ஆற்றலையும் இக்கட்டுரை விளக்குகிறது - ஆசிரியர் கி. வீரமணி)Read more: http://viduthalai.in/page1/81717.html#ixzz346HK2Bhw

தமிழ் ஓவியா said...

கோவில் பிரவேசம்

வங்காளத்தைச் சேர்ந்த குல்னாகாளி கோவிலுக்குள் தீண்டாதார் எனப்படுவோர் செல்ல வேண்டுமென்று சத்தியாக்கிரகம் செய்து வந்ததும், அதனால் சிலர் கைதி யானதும் சென்ற வாரப் பத்திரிகையில் தெரிந்திருக்கலாம்.இப்போது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் தீண்டாதார் எனப்படுவோர் உள்பட தாராளமாய் கோயிலுக்குள் சென்று சாமிதரிசனம் செய்யலாம் என்பதாக மேல் ஜாதியார் என்பவர்கள் ஒப்புக் கொண்டு ராஜி ஏற்பட்டு கைதியாக்க பட்டவர்களையும் விடுதலை செய்து விட்டார்கள்.

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 21.07.1929

Read more: http://viduthalai.in/page1/81717.html#ixzz346Hb8HJK

தமிழ் ஓவியா said...


திரு.குருசாமி - குஞ்சிதம் திருமணம்


சென்ற ஞாயிற்றுக்கிழமை 8-ஆம் தேதியன்று ஈரோட்டில் எமது இல்லத்தில் நடைபெற்ற ரிவோல்ட் உதவி ஆசிரியர் திரு.குருசாமியின் திருமணத்தைப் பற்றிய முழு விவரங்களை மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம். இந்தத் திருமணமானது பல வழிகளிலும், ஏனைய திருமணங் களைவிடச் சிறந்தது என்பதற்கு சற்றும் சந்தேகமில்லை.

முதலாவதாக, இது ஒரு காதல் மணம், மணமகனும் மண மகளும் ஒத்த கல்வியும், ஒத்த அன்பும், ஒத்த குணமும், ஒத்த உடல் நலனும் உடையவர் களாகையால் அவ் விருவரும் ஒருவரையொருவர் காதலித்துச் செய்து கொண்ட திருமணமாகையால் இதைக் காதல் திருமணம் என்றோம்.

இரண்டாவதாக ஒரு வகுப்பிலுள்ள மணமகன் மற்றொரு வகுப்பைச் சார்ந்த மணமகளை மணந்து கொண்டதால் இது ஒரு கலப்பு மணமாகும். இந்தச் சீர்திருத்த மணத்திற்கு முக்கியமாய் மண மகன் திரு.குருசாமி அவர்களுக்கு பல இடையூறுகள் நேர்ந்தன. இந்தத் திருமணத்தின் சிறப்பைக் கூறுமுன் மணமகனது ஜாதியாராகிய முதலி யார் எனப்படுவோர்கள் இவ்விதக் காதல் மணங்களுக்கு எவ்வளவு இடையூறாக இருக்கிறார்கள் என் பதைப் பற்றிச் சிறிது கூறாமல் இருக்க முடியவில்லை.

திருமணத்தின் முதல் நாளன்று அவரது தங்கையார் கிணற்றில் விழுந்து விட்டதாகவும், இன்னும் இது போன்ற பலவாறான பொய்த் தந்திகளையனுப்பிய தோடும் ஜாதியை விட்டு விலக்கி விடுவதாகவும் பல பய முறுத்தல் கடிதங்களையும் எழுதினார்களென்றால், இந்த சீர்திருத்த உலகத்தில் இந்த வகுப்பாரது மனப்பான்மை எவ்வளவு தூரம் தாழ்ந்த நிலையிலிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துக் கொள்ளும்படி விட்டு விடு கின்றோம்.

ஆனால், இந்த சமூகத்திலுங்கூட முற்போக்கான அபிப்பிராயங்களைக் கொண்ட சில பிரமுகர்களைக் குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. உதாரணமாக, இந்தத் திருமணத்தை ஆதரித்து வாழ்த்துச் செய்திகளனுப்பிய திருவாளர்கள் சீர்காழி சிதம்பரநாத முதலியார், பி.டி.ராஜன், கனம் மந்திரி முத்தையா முதலியார், திருநெல் வேலி சிதம்பரநாத முதலியார் போன்றவைகளின் ஆதரவானது நமக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதோடு அந்தச் சமூகத்திற்கே முற்போக்கடையும்படியான சந்தர்ப்பமும் கிட்டியிருக்கிறது என்று உறுதியாய்க் கூறுவோம்.

இரண்டாவதாக, மணமகள் செல்வி குஞ்சிதம் அவர்களின் கல்வி அறிவையும், அவர்களது சீர்திருத்த கொள்கைகளையும், அவர்கள் ரிவோல்ட்டில் ஆங்காங்கு எழுதி வந்திருக்கின்ற கட்டுரைக ளிலிருந்து இனிதறியலாம்.

மேலும், குஞ்சிதம் அவர்கள் திருமணத்தன்றைய தினமே மாலையில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்தில் மேடையின் மீதே முதன்முதலாக செய்தஆங்கிலப் பிரசங்கமே எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நேரில் பார்த்த அன்பர்களுக்கு அவர்களது பிற்கால ஆற்றலைப் பற்றி நாம் சற்று அதிகமாகவே எதிர்பார்க்கக் கூடிய வர்களாயிருக்கிறோம்.

மேலும் மணமகள் தெலுங்கிலும் சொற்பொழி வாற்றக்கூடிய தேர்ச்சி பெற்றிருப்பதால் நமது சுயமரி யாதை இயக்கம் தெலுங்கு நாடு களிலும் பரவவேண்டிய ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்து விட்டதற்காக நாம் பெருமகிழ்ச்சி யடைகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் பெண் கல்வியின் உயர்வை நன் குணர்ந்து மணமகளை உயர்ந்த கல்வி பயிற்றுவித்த அவரது பெற்றோர்களை வாழ்த்தாம லிருக்க முடியவில்லை.

இதர தாய் தந்தைமார்களும் இவர்களைப் பின்பற்றி தங்கள் பெண்களையும் பல துறைகளிலும் தேர்ச்சிபெறக் கூடிய கல்விகளைப் போதிப்பார்களானால், இத்தகைய காதல் மணங்கள் நம் நாட்டில் பெருகும் என்பதற்கு அய்யமில்லை. மணமகனும் மணமகளும்,

சுயமரியாதை இயக்கத்துக்குத் தக்க ஊன்று கோலாக இருந்து தங்களது - சந்தோஷமான வாழ்க்கையாலும் நடத்தையாலும் பிற்போக்குள்ள மக்களுக்கு ஒருவழி காட்டிகளாக இருந்து இத்தகைய திருமணங்கள் நமது நாட்டில் பெருகி மக்களது அறிவும் வளர்ச்சி பெற்று, தங்களைப் போலவே பிறரும் கலக்கமற்றவாழ்க்கை வாழ்வதற்கு உதவி புரிவார்களென்று நம்புகிறோம்.

இளைஞர் உலகத்துக்கு ஒரு பேரூக்கம் அளிக்கத்தக்க செயலை தம் மணவினையால் நிகழ்த்திக் காண்பித்த திரு.குருசாமி அவர்களையும் திருமதி. குஞ்சிதம் அவர்களையும் நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 15-12-1929

Read more: http://viduthalai.in/page1/81718.html#ixzz346HitVYM

தமிழ் ஓவியா said...


தமிழர் சங்கம்


சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.

தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கை களையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்

திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷக ராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவ ராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலை வராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான் கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப் பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page1/81719.html#ixzz346HsaMeJ

தமிழ் ஓவியா said...

மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம்.

அதுபோலவே அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/81719.html#ixzz346HzH8T8

தமிழ் ஓவியா said...


மீண்டும் அம்பேத்கர் குறித்து ஆட்சேபணைக்குரிய படம்: மகாராஷ்டிரத்தில் மீண்டும் வன்முறை


புனே, ஜூன் 9 முக நூலில் அம்பேத்கர் குறித்த ஆட்சேபணைக்குரிய படங்களை சிலர் பரப்பிய தால், மகாராஷ்டிரத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

மகாராஷ்டிரத்தில் கடந்த வாரம் மராட்டிய மன்னர் சிவாஜி ராவ் மற்றும் சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரே ஆகியோரை இழிவுப் படுத்தும் விதமாக முக நூலில் (ஃபேஸ்புக்கில்) சில படங்கள் கசிய விடப் பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அங்கு இந்து ராஷ்ட்ர சேனை அமைப்பினர் மேற் கொண்ட வன்முறைச் சம் பவத்தில் மொசின் ஷேக் என்ற தொழில் நுட்ப வல் லுநர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் முகநூலில் அம் பேத்கர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக சில படங்கள் வெளியிடப்பட் டன. இதனை தொடர்ந்து புனே, சோலாப்பூர், அவு ரங்காபாத் ஆகிய இடங் களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு சம் பவங்கள் நடந்தன. இதில் அரசு பேருந்துகள் பலத்த சேதமடைந்தன.

முகநூலில் அவதூறாக பதிவேற்றம் செய்யப்பட்ட கணினியில் அய்.பி எண் குறித்த தகவலை தரும்படி, மகாராஷ்டிர காவல்துறை ஆணையம் முகநூல் நிறுவனத்தை தொடர்புக் கொண்டுள்ளது. மகாராஷ் டிராவில் தொடர்ந்து நடைபெறும் வகுப்புவாத வன்முறை குறித்து விசா ரணை மேற்கொள்ளுமாறு மாநில அரசை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/81849.html#ixzz34C6SbZbD

தமிழ் ஓவியா said...


பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரைபுதுடில்லி, ஜூன் 9- நாடாளு மன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணை தலைவர் ஹமீது அன்சாரி, மக்க ளவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றுச் சென்றனர். குடியரசுத் தலைவர் உரை முக்கிய அம்சங்கள்:

பணவீக்கத்தை கட்டுப் படுத்த அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

பொது விநியோகத் திட்டத்தில் மறு சீரமைப்பு கொண்டு வரப்படும்.

நாட்டில் வறுமை ஒழிக்கப்படும்.

அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும்.

இந்திய எல்லையில் ஊடுருவலை தடுக்க அரசு முன்னுரிமை வழங் கும்.

உணவுப் பொருட்களை பதுக் குவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மாநிலங்களிலும் அய்.அய்.டி, அய்.அய்.எம். கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

அனைவருக்கும் சுத்தமான தண் ணீர் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.

ஆந்திரா, தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வேண்டிய உதவிகளை செய்யும்.

விளையாட்டுத் துறை ஊக்கு விக்கப்படும். தேசிய விளையாட்டு திறன் கண்டறியும் மய்யம் அமைக் கப்படும்.

பெண்களுக்கு எதிரான வன் முறையை அரசு பொறுத்துக் கொள்ளாது. பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க அரசு வழிவகை செய்யும்.

மக்கள் உடல்நலத்தை பேணும் வகையில் தேசிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நாடாளுமன்றம், சட்டமன்றங் களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நட வடிக்கை எடுக்கும்.

அனைத்து சிறுபான்மை சமு தாயத்தினரையும் அரசு சரிசமமாக நடத்தும்.
கிராமங்களில் குடிநீர், மின்சார பற்றாக்குறை சரி செய்யப்படும்

மதரஸாக்களை நவீனப்படுத்தும் திட்டத்தை அரசு மேற்கொள்ளும்.

பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக் கும் வகையில் 'சார்க்' கூட்டமைப்பு நாடுகளுடனான நல்லுறவு மேலும் பலப்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கடினமான சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந் நிலையில், பொருளாதாரத்தை சீர் படுத்துவதே அரசாங்கத்தின் முன் இருக்கும் மிகப் பெரிய கடமை.

நாட்டில் ஊழல் ஒழிக்கப்படும். வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணம் மீட்டுக் கொண்டு வரப்படும்.

அதிவேக விரைவு ரயில் திட் டத்தை மேம்படுத்த 'வைர நாற் கரம்' திட்டம் செயல்படுத்தப்படும்.

சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத் தும் வகையில் சிறிய ரக விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

அந்நிய முதலீட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள் ளும்.

பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

அணுமின் நிலைய திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

ஜப்பான், சீனாவுடனான நட்புறவு வலுப்படுத்தப்படும்.

வேளாண் துறையில் முதலீடு அதிகரிக்கப்படும்.

என குடியரசுத் தலைவர் உரையில் தெரிவித்துள்ளார்.


Read more: http://viduthalai.in/e-paper/81848.html#ixzz34C6gySzd

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் நிலை: ஆட்சி மாற்றம் - காட்சி மாறவில்லையே!


தமிழின மீனவர்கள் பிரச்சினைக்கு என்றுதான் முடிவோ? - என்ற கேள்விக் குறி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

1983ஆம் ஆண்டுக்கு பிறகு இது அனேகமாக அன்றாடப் பிரச்சினையாகி இருக்கிறது; எத்தனைத் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற புள்ளி விவரம்கூட சரியாகக் கிடைக்க முடியாத அளவுக்குச் சிங்கள இனவெறி தலை விரித்துத் தாண்டவம் ஆடி வந்திருக்கிறது - வருகிறது.

ஆட்சி மாறும் - காட்சி மாறும் என்று பேசியவர்கள் எல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் முணுமுணுத்துக் கொண்டுள்ளனர். ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது; அவர் பிரதமராக பதவிப் பொறுப்பு ஏற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக் சேயும் அழைக்கப்பட்டார் - கடும் எதிர்ப்புக்கிடையே; டில்லி வந்த இலங்கை அதிபரிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு வார்த்தையெல்லாம் நடத்தி இருந்திருக்கிறார்.

இது நல்லெண்ண சமிக்ஞை என்றெல்லாம் தூக்கிப் பேசப்பட்டது. ஆனால், நிலைமை என்ன? அவர் டில்லி யிலிருந்து கொழும்பு சென்ற ஈரம் காய்வதற்கு முன்ன தாகவே சிங்களக் கடற்படை தனது கோர முகத்தைக் கோணங்கிதனமாகக் காட்ட ஆரம்பித்து விட்டதே!


தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் முதற்கட்டமாக 33 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு கடந்த 7ஆம் தேதி இராமேசுவரத்திலிருந்து 10 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 50 மீனவர்களை மீண்டும் சிறைப் பிடித்தனர்; அதே போல புதுக்கோட்டை மாவட்டம் செகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்கள், இராமநாதபுரத்திலிருந்து சென்ற எட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 82 தமிழக மீனவர் கள் கைது செய்யப் பட்டுள்ளனர். 8 விசைப் படகுகள் முடக்கப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 77 முறை இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை எதிர்த்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வழக்கம் போல தமிழக முதல் அமைச்சர் பிரதம ருக்குக் கடிதம் எழுதுவது, இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் என்ற சம்பிரதாய நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லையா!? 8.12.1999க்கும் 18.10.2003க்கும் இடையே பிஜேபி ஆட்சிக் காலத்தில் எட்டு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வழி விட்டான், செல்ல பாண்டியன், முனீஸ்வரன், பாபு, முருகன், சரவணன், கோட்டை, நாகநாதன் ஆகியோர் அப்படிப் படுகொலை செய்யப்பட்டவர்களே!

இதில் வேடிக்கை என்னவென்றால் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது ஒருபுறம் இருக்கட்டும்; குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரே. அவர்களை அவரால் மீட்க முடிந்ததா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. குஜராத்தைச் சேர்ந்த 150 மீனவர்கள் இந்த மீன் பிடி காலத்தில் மட்டும் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 படகுகள் முடக்கப்பட் டுள்ளன; இதன்மீது எந்தவித உருப்படியான நடவடிக் கையும் எடுக்கப்படவில்லையே!

இன்றைய நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் மொத்த குஜராத் மீனவர்களின் எண்ணிக்கை 240. இதுவரை குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறைச் சாலைகளில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். குஜராத் மாநில முதல் அமைச்சராக நரேந்திரமோடி தானே இருந்தார். இந்த வகையில் அவர் சாதித்தது என்ன?

பிஜேபியின் 16ஆம் மக்களவைக்கான தேர்தல் அறிக்கையில் மீனவர்கள் பிரச்சினை குறித்து எந்த ஒரு சொல்லாடலும் கிடையாதே!

கேட்டால் வெளிநாட்டுக் கொள்கைகள் - நயந்து தான் போக வேண்டும். பக்குவமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பார்கள். கடந்த கால காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்தப் பாதையில் பயணித்ததோ, அதே பாதையில்தான் அட்சரம் பிறழா மல் இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நடைபோட்டு வருகிறது.

தேர்தலுக்கு முன்னதாகவே எடுத்துக் கூறி வந்திருக்கிறோம். வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் அடிப்படையில் எந்தவித வேறுபாடும் கிடையாது; ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று சொல்லி வந்துள்ளதை மோடி தலைமையிலான இன்றைய அரசு நாளும் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறது.

மாற்றம் வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமேதான் மிச்சம்.

கடிதம் எழுதினால் போதுமா என்று அன்றைய முதல்வர் கலைஞரைப் பார்த்துக் கேள்வி எழுப்பி வந்த அதிமுக பொதுச் செயலாளர் இப்பொ ழுது முதல் அமைச்ச ராக இருக்கும் நிலையில், கடிதம் தான் பிரதமருக்கு எழுதிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்க!

Read more: http://viduthalai.in/page-2/81856.html#ixzz34C72WMbI

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப் படியான பொருள்களுக்கு அதிபதி யாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. (விடுதலை, 22.6.1973)

Read more: http://viduthalai.in/page-2/81855.html#ixzz34C7a52QE

தமிழ் ஓவியா said...


பட்டை கிராம்பு ஏலக்காய்


அன்றாடச் சமையலில் நாம் உபயோகிக்கிற கடுகு, பெருங்காயத்தில் தொடங்கி, அரிதாக உபயோகிக் கிற பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் வரை அனைத்துக்கும் மாபெரும் மருத்துவ குணங் களும் உண்டு. சில வகையான மசாலா பொருள்களுக்கு பசியைத் தூண்டும் சக்தியும் உண்டு. இன்னும் சில வகைப் பொருள்கள் நம் குடலை சுத்தப்படுத்தக் கூடியவை.

பட்டை மசாலா பொருள்களின் ராணி என்று பார்த்தால் பட்டை எனலாம். அதற்கொரு ஆழமான மணமும், மருத்துவக் குணங்களும் அதிகம். பட்டையை லேசாக வறுத்துப் பொடித்து, அரை டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

பூஞ்சைத் தொற்று மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு பட்டைப் பொடியை வெளிப்பூச்சாகத் தடவினால் குணம் தெரியும். பெரும்பாலான மருத்துவர்கள், பிரியாணி வகையறாக்களை நிறுத்தச் சொல்லியோ, குறைக்கச் சொல்லியோ அட்வைஸ் செய்வார்கள். காரணம், அதிலுள்ள அதிகபட்ச கொழுப்பு.

சுவையின் காரணமாக அளவுக்கு மீறியும் உட்கொள்கிறோம். தவிர்க்க முடியாமல் இப்படி கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள நேர்ந்தால், உடனே மேலே சொன்னபடி பட்டைக் கஷாயம் குடித்தால், உடலில் அதிகக் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படும். வளர்சிதை மாற்றச் செயல்பாடு அதிகமாகி, உடல் எடையும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கிராம்பு சமையலுக்கு சுவையையும் அதைவிட, அதிகமாக மணத்தையும் கொடுக்கக்கூடியது. பல்வலிக்கு கிராம்பு பிரமாதமான மருந்து. சளி, தொண்டை வலி போன்ற பல உடல் உபாதைகளுக்கும் கிராம்பு தைலம் கலந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால், உடனடி நிவாரணம் தெரியும். தசைப் பிடிப்பை நீக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

இந்த எண்ணெய் கலந்து மசாஜ் செய்கிறபோது பலனை உணரலாம். ஏலக்காய் சுவையும், மணமும் கொண்ட ஏலக்காய்க்கு புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் சக்தி உண்டாம். இதில் அளவுக்கதிகமான ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. வாய் துர்நாற்றத்தை விரட்டும்.

மன அழுத்தத்தை விரட்டும். பெருங்காயம் இந்தியச் சமையலின் பிரத்தியேக மணத் துக்கும் சுவைக்கும் முக்கிய காரணம் அதில் சேர்க்கப்படுகிற பெருங்காயம். பெருங்காயம் என்பது ஒரு மரத்தின் பிசின். இது செரிமானத்துக்கு உதவக்கூடியது.புரதச்சத்து அதிக முள்ள உணவுகளில் கட்டாயம் பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/81832.html#ixzz34CAXNIS3

தமிழ் ஓவியா said...


நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது.

கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக் கூடிய பொருள்கள் உள்ளன.

பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடி யது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலிப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும். நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடு வதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும்.

இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப் படும் ரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கி யமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.

அனைத்துக் காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டி ருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவ னாய்ட்ஸ் காணப்படுகிறது. மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கிய மாக இருங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAfGym0

தமிழ் ஓவியா said...

இயற்கை தரும் மருத்துவம்

தேன்: சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப் படுத்தும்.

வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.

துளசி: தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

பூண்டு: வயிற்றில் உண்டாக்கும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர்: உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை போன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.

வெண்ணெய்: வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்.

மிளகு : ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக் கும் தன்மை மிளகுக்கு உண்டு.

சோம்பு: இது செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

காளான்: தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்றுநோய் தடுக்கப் படுகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

சிவப்பு முள்ளங்கி: வயிற்று புண்ணை அகற்றும், மஞ்சள்காமாலைக்கு மிகவும் சிறந்த மருந்து.

வாழைத்தண்டு: சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை கரைக்கும். உடல் பருமனை குறைக்கும். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAtE6Lk

தமிழ் ஓவியா said...


ஆரோக்கியத்திற்கு 6 உணவுகள்


ஆப்பிள்: அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத் தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர். ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது.

இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. பாதாம்: வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக அளவில் உள்ளன.

நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இதில் உள்ள தாமிரம் மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

எலுமிச்சை: தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, நல்ல கொழுப்பான எச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம் அடையும் பிரச்சினையைச் சரி செய்வ துடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

பூண்டு: நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

டார்க் சாக்லேட்: குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சாக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப் போகும் பிரச்சினையைத் தவிர்க்கும். ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதால் ரத்தசோகை பிரச்சினை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம்.

சோயாபீன்: சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்தப் பிரச் சினையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள லெசிதின் என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/81834.html#ixzz34CB2FpAM

தமிழ் ஓவியா said...


மோடி தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கும்? சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மய்யக் கருத்து


லண்டன், ஜூன் 9--இந்தியத் தேர்தல்களில் கடந்த 30 ஆண்டுகளில் 1984 ஆண்டிற்குப்பிறகு யாரும் பெறாத அளவில் 545 உறுப்பினர்களில் 282 நாடாளுமன்ற உறுப் பினர்களை தனிக்கட்சி பெரும்பான்மையுடன் மக்களவைக்கு பாஜக பெற்றுள்ளது. அதன் கூட்டணியுடன் சேர்ந்து 336 இடங்களைப் பெற் றுள்ளது.

மோடி இதுவரை யாரும் பெற்றிராத அள வில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி என்பது முரண் பாடானவராக பார்க்கப் பட்ட அரசியல்வாதி, மோடி வணிக நட்பில் அதிக நாட்டத்துடன் உள்ளதால், வரும் அய்ந்து ஆண்டுகளில் டில்லியில் அதிகாரத்தை தக்க வைத் துக் கொள்வார்.

அவரு டைய நிர்வாகம் என்பது தேனிலவுக்கு ஒப்பாக மகிழ்வாக எண்ணமுடி யாது. அய்க்கியப் பேரர சின் சர்வதேச அமைப் பான ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு அமைப்பு ஜுன் 5 ஆம் நாளில் வெளியிட் டுள்ள சிறப்பு அறிக்கை யில் இவ்வாறு கூறி உள்ளது.

அந்த ஆய்வு அறிக் கையின்படி,

தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சரிபாதி அளவினர் நாட்டில் உள்ள மாநிலக்கட்சி களைச் சார்ந்தவர்கள். மாநில அளவில் ஆட்சி செய்பவர்களும் ஆவார் கள். கொள்கை முடிவு களில் சுயேச்சையாக தீவிரத்தன்மையுடன் முடி வுகளை எப்படி வேண்டு மானாலும் எடுப்பார்கள். 2003-2008 இல் இருந் ததைவிட தற்போது 5 விழுக்காடு அளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.

வாக்காளர்கள் தூய்மை யான அரசு நிர்வாகத்தை யும், அரசின் சேவைகளில் முன்னேற்றத்தையும், நல்ல திட்டங்கள், பணிகள் எப்போதுமே உயர்ந்த அளவில் இருக்கவேண் டும் என்று எதிர்பார்க் கின்றனர்.

மோடியின் அயலுறவுக் கொள்கை சம அளவில் இருக்குமா என் பது அய்யத்துக்கிடமா கவே உள்ளது. சீனாவுடன் சுமுக உறவு, ஆஃப்கானிஸ்தானி லிருந்து நேட்டோ படை திரும்பப் பெறுதல், அருகாமை நாடுகளிடம் வளர்ந்து வரும் பாதுகாப் பின்மை உணர்வு, இவற்றை மேற்கத்திய நாடுகள் விரும்புவது போல் நடுநிலையில் இருந்து செயலாற்றும் பாங்கு இவை அனைத் தையும் பிரதமர் என்கிற முறையில் கவனத்தில் கொள்ள வேண்டி உள் ளது.

மோடியின் தலை மைப் பண்புகுறித்து ஆரா யும்போது, இந்தியாவின் முக்கியமான பங்கு வணிகத்தவருடன் உள்ள உறவை ஒட்டியே கொள் கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலை உள்ளது என்று ஆய் வறிக்கையில் குறிப்பபிடப் பட்டுள்ளது.

மேலும், இராணுவத்துக்கான செலவினக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றிற்கு தாராள பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகிய வற்றின்மூலம் அமைதி யின்மை ஏற்படும் அபா யம் உள்ளதாக ஆக்ஸ் ஃபோர்டு ஆய்வு எச் சரிக்கிறது. பொருளாதார ஒருங்கிணைப்பை அரசு இடைக்கால இலக்காகக் கொண்டுள்ளது.

வருவாய் தேவை அதிகரிப்பு சவா லாக இருப்பதுடன், நிலச் சீர்திருத்தங்களை எண் ணும்போது முடியாத ஒன்றாகவே இருக்கும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

Read more: http://viduthalai.in/page-8/81847.html#ixzz34CBGsGiV

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே கவனியுங்கள்!


aarthi anbalagan

Jun 9 (2 days ago)

to me

Hello sir,

Your newspaper ((Viduthalai) containing lot of useful information. Particularly Employment news very useful for me because I am looking for job. But this news fully based on government jobs. most of the people are not interested in government jobs. so, this is my request, try to publish private jobs also sir.
thank you

நமது இயக்கத்திற்கு நேரிடையாகத் தொடர்பில்லாத தோழர்கள்கூட ஒவ்வொரு கோணத்தில் விடுதலையின் பலனைத் துய்த்து வருகிறார்கள் - வரவேற்கிறார்கள். எனவே விடுதலை சந்தா சேகரிப்பில் இறங்குங்கள் நல்லாதரவு நிச்சயம் கிட்டும்.

மறவாதீர்! இம்மாத இறுதிக்குள் 12 ஆயிரம் விடுதலை ஆண்டு சந்தாக்கள் நமது இலக்கு என்பதை மறந்து விடாதீர்கள்!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/81904.html#ixzz34F9qeXky

தமிழ் ஓவியா said...


பசுமலை - சிறுமலை

திராவிடர் கழகத்தின் சார்பில் களப்பணி முகாம்கள் கழகத் தலைவர் வழிகாட்டுதல்படி நடந்து வருகின்றன. கடந்த மாதம் புதுச்சேரியில் நேர்த்தியாகத் தொடங்கப் பட்டது. கடலூர், சிதம்பரம் மாவட்டக் கழகத் தோழர்களுக்கு வடலூரில் முகாம் நடத்தப்பட்டது.

கடந்த சனியன்று மதுரை பசுமலையிலும், ஞாயிறன்று திண்டுக்கல் சிறுமலையிலும், முறையே மதுரை, புறநகர், விருதுநகர், திண்டுக்கல், பழனி, தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்குக் களப் பணி முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.


கழகப் பொறுப்பாளர்களுக்கு மட்டுமான பட்டறை இது; கழக அமைப்புப் பணிகள், பதிவேடுகள், ஆண்டு ஒன்றுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்துரையாடல்கள், பிரச்சாரக் கூட்டங்கள், ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல், உறுப்பினர் சேர்த்தல், புத்தகச் சந்தை நடத்துதல் மற்றும் தொண்டறப் பணிகள்பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

பகுத்தறிவுத் தகவல் பலகை, பெரியார் வாசகர் வட்டம் சுவர் எழுத்து, வாயிற் கூட்டங்கள், துண்டறிக்கை விநியோகம் குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்கள் என்று இலக்குகள் வரையறுக்கப்பட்டு கழகப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. தோழர் களும் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கருத்துக்களையும், திட்டங்களையும் கவனமுடன் கேட்டனர். அவர்களின் அய்யப்பாடுகளையும் தெரி வித்தனர். அவற்றிற்கெல்லாம் கழகப் பொறுப்பாளர்கள் உரிய முறையில் விளக்கங்களைஅளித்தனர்.

பிற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள சூழலில் சமூகப் புரட்சி இயக்கமான கழகம் எந்தெந்த வகைகளில் எல்லாம் மதச் சார்பற்ற கொள்கைகளையும், சமூக நீதியையும், முன்னெடுத்துச் செல்லுவது என்பதற்கான கருத்துகளும், திட்டங்களும் விவாதிக்கப்பட்டன.

சமூகநீதியில் இன்றைய கால கட்டத்தில் பெறப் பட்டுள்ள உரிமைகளின் அளவு, பெற வேண்டிய இலக் குகள்பற்றி தக்க புள்ளி விவரங்களுடன் விவாதிக்கப் பட்டன.

மத்திய அரசுத் துறைகளில் 27 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி உரிமை உடையது என்றாலும் இதில் இன்னும் ஏழு சதவீதத்தைக்கூட எட்டவில்லை என்று நினைக்கும் பொழுது, இத்திசையில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு எவ்வளவு என்பதைச் சிந்திக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் இயக்கத்தின் சித்தாந்தம், கொள்கைக் கோட்பாடுகள், சாதனைகள் புதிய தலைமுறையின ரிடத்தில் சென்றடையவில்லை. இந்த நிலையில் அவர்கள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்லுவது கட்டாயமாகும்.

மாணவரணி, இளைஞரணி அமைப்புகளை, முகாமைப்படுத்தி வலுப் பெறச் செய்து, அவர்கள் மூலமே இந்தச் சாதனையை நிகழ்த்த இயலும் என்பதால் இத்திசையில் கழகப் பொறுப்பாளர்கள் பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த மாத இலக்காக 12,000 விடுதலை சந்தாக்கள் சேர்ப்பதில் கழகத் தோழர்கள் கடமையாற்ற வேண்டும். கழக உறுப்பினர்கள் கட்டாயம் சந்தாதாரர் ஆக வேண்டும். அதே போல ஒவ்வொரு கழகத் தோழரும் இரண்டு விடுதலை சந்தாக்கள் திரட்டுவது என்ற முறையில் பணியாற்றினால் ஒரே வாரத்தில் இந்த பணியை நிறைவேற்றி முடிக்கலாம்.

நாம் எவ்வளவுப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினாலும் நாள்தோறும் வெளிவரும் விடுதலை அதிக எண்ணிக்கையில் பரவினால் தான் நமது கருத் துக்கள் போய்ச் சேர முடியும். களத்தில் பணியாற்றும் கழகத் தோழர்களும் அன்றாடம் கழகத் தலைவரின் கருத்துகள், நிலைப்பாடுகளை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்றாற்போல பணிகளை ஆற்ற முடியும்; மக்கள் மத்தியில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் இலகுவாக ஏதுவாகும்.

ஒரு பக்கத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை, இன்னொரு பக்கத்தில் களப் பணி முகாம்கள் இரண்டும் இணையும் பொழுதுதான் உரிய பலன்கள் கிடைத்திட முடியும்.

இயக்க இளைஞர்கள் கணினிப் பயிற்சி பெறு வதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது, இன்றைக்கு முகநூல் மூலம் சண்டமாருதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்தக் களத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கைப்பேசி மூலம் குறுஞ் செய்திகளை அனுப்பலாம்; கருத்துக்களைப் பரப்பலாம்.

அஞ்ஞான கருத்துக்களை விஞ்ஞானக் கருவிகள் மூலம் பரப்பிக் கொண்டுள்ள நிலையில், விஞ்ஞான சிந்தனையின் கூர் முனைக் கருத்துக்களைக் கொள்கை யாகக் கொண்ட நாம் தொழில் நுட்ப சாதனங்களைக் கையாள வேண்டாமா?

எனவே, தோழர்களே! எப்பொழுதும் தொடர்போடே இருங்கள் - எதிர் நிலையாளர்களின் செயல்பாடுகளை யும் கணித்து வாருங்கள். நாம் நமது இலட்சிய பயணத் தில் பயணிக்கும் போதே எதிர்வரும் சவால்களுக்கு முகம் கொடுத்து, இளைஞர் பட்டாளத்தின் ஈர்ப்பை நாம் தட்டிச் சென்றாக வேண்டும்.

மற்றொரு முக்கிய கருத்து: இயக்கம் அவ்வப்பொழுது வெளியிட்டுக் கொண்டே இருக்கும் வெளியீடுகளை, நூல்களைப் படிக்கத் தவறாதீர்! வணிக நிறுவனங்களை நடத்தும் தோழர்கள் நமது இயக்க நூல்களையும் விற்பனை செய்ய ஆர்வம் காட்டலாமே!

சால்வைகளுக்குப் பதில் சந்தாக்கள் - திருமணப் பரிசாக பணம் அளிக்காமல் சந்தாக்களை பதிவு செய்வீர்! முக்கியமான கால கட்டம் இது. முகிழ்த் தெழும் ஒளிக்கற்றையாக ஓங்கி எழுவீர் தோழர்களே!

Read more: http://viduthalai.in/page-2/81911.html#ixzz34FALEyYj

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


விளம்பர யுக்தி

திருப்பதி - லட்டு, பழனி - பஞ்சாமிர்தம், திருவில்லாலை - பாயசம், அழகர்கோயில் - தோசை, காஞ்சிபுரம் - குடலை இட்லி, உப்பிலியப்பன் கோயில் - உப்பில்லாத பிரசாதங்கள், சிதம்பரம் - களி, வைத்தீஸ்வரன் கோயில் - தினைமாவு, குணசீலம் - தேங்காய்ப்பூ, பிள்ளையார்ப்பட்டி - பிடி கொழுக்கட்டை, குருவாயூர் -நல்லெண்ணெய், சபரி மலை - நெய், சங்கரன் கோயில் - புற்றுமண், இவையெல்லாம்தான் பிரசித்த பெற்ற கோவில் பிரசாதங்களாம்.

கடவு ளுக்கு உருவங்களும் அவற்றுக்காகக் கோயில் களும் கட்டப்பட்ட நிலை யில் அவற்றை நிலை நிறுத்தவும் ஏதோ ஒரு வகையில் வசீகரித்து மக்களை ஈர்க்கவும், வணிகத் தன்மையுடன் இத்தகைய விளம்பர யுக்திகளைக் கை யாளுகிறார்கள் என்பது புரியவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/81900.html#ixzz34FBGzkS2

தமிழ் ஓவியா said...


அபவ்ருஷம்வேதம் என்பது எப்போது, யாரால் சொல்லப்பட்டது என்பதை மறைப்ப தற்காகவே அது அனாதி என்றும், மனிதனால் சொல்லப்படாத அபவ் ருஷம் என்றும் சொல்லப்படுகிறது.
(விடுதலை, 8.3.1953)

Read more: http://viduthalai.in/page-2/81908.html#ixzz34FBfM65G

தமிழ் ஓவியா said...


ஜூன் 10 குமிழ்முனைப் பேனா தினம்


எழுதுகோல் சுமேரிய நாகரிகத்தில் இருந்து நாணல் முனைக்கொண்டு எழுத ஆரம்பித்தது. அதுதான் உலகின் முதல் எழுதுகோல் என்று அறியப்படுகிறது, அப்படி ஒரு நாணல் எழுதுகோல் இன்றும் பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளது. அதற்கு முன்பும் கற்கால மனிதர்கள் கரிக்கட்டைகளைக்கொண்டு சித்திரங்கள் வரைந்திருக்கின்றார்கள்.

கிருஸ்துவிற்கு முன்பே அலெக் சாண்டர் காலத்தில் எழுதுவதின் மதிப்பு உலகிற்கு தெரிய ஆரம்பித்துவிட்டது. தாவர சாற்றில் செய்யப்பட்ட மசி(மை)யில் இருந்து மயிலிறகு, அன்ன இறகு, சில வகை மரக்குச்சிகள் கொண்டு எழுத ஆரம்பித்தனர். எழுதுகோலைப் பொறுத்தவரை சீனர்கள் தான் இதிலும் முதலிடம் வகிக்கிறார்கள். கிமு 7-ஆம் நூற்றாண்டில் சிறிய மூங்கில் தண்டில் மை ஊற்றி அதன் முனையை மிகவும் சிறிதாக துளையிட்டு அதில் மை வடிவதுபோல் செய்து எழுதத் துவங்கினர். இது பட்டுப் பாதை என்ற புகழ்பெற்ற Silk Route மூலம் அய்ரோப் பாவிற்கு சென்றது. கிருஸ்து பிறந்த போதே மூங்கில் குழாய் முனை வெங்கலமாக மாற்றப்பட்டு எழுதுகோலாகிவிட்டது என்று உறுதியற்ற தகவல் தெரிகிறது.

ஆனாலும் கிருஸ்து பிறந்து 79 ஆண்டுகளுக்கு பிறகு வெங் கல எழுதுகோல் உபயோகத்தில் இருந்தது பற்றிய பல தகவல்கள் கிடைத்துள்ளன. நமது நாட்டில் எழுதுகோல் மரக் கட்டைகளில் இரும்பு ஆணிகளைக் பதித்து எழுதும் முறை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உள்ளது. தூய சவேரியார் வந்த 16-ஆம் நூற்றாண்டில் தான் இரும்பு உருளை முனை எழுது கோல் (pen) உபயோகம் இந்தியாவில் வந்தது. மை ஊற்றி எழுதப்படும் எழுதுகோலி னால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. நீண்ட காலமாக இதற்கு நிவாரணம் தேடினார்கள். பிரபல வானியல் அறிஞர் கலிலியோ தான் நமது பால்பாய்ண்ட் பேனாவின் தொழில் நுட்பம் பற்றிக் கூறினார். அதன் பிறகு ஜோன் லோட் என்பவர் நேர்த்தியான குமிழ்முனைப் பேனா (Ball point pen) 1888-ஆம் ஆண்டு உருவாக்கினார். இதில் சிறப்பு என்னவென்றால் இவர் காகிதத்தில் எழுத பேனாவை உருவாக்கவில்லை. தோல் பொருட்களில் அடையாளம் இட இந்தபேனாவைப் பயன்படுத்தினார்.

அதன் பிறகு பல்வேறு நபர்களால் வடிவமைக்கப்பட்டாலும் தோல்வி யையே தழுவினர். 1943-ஆம் ஆண்டு லாஸ்லூ மற்றும் ஜார்ஜ் லாஸ்லூ போன்றோர் அனைத்து பாதங்களையும் நீக்கி ஜூன் 10-ஆம் தேதி இன்று பயன்படுத்தும் பால்பாயிண்ட் பேனாவை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்து பேனா விரும்பிகளால் இந்த நாள் The ballpoint pen day) குமிழ் முனைப்பேனா தினம் என அறிவிக்கப் பட்டு பேனாவின் உருவாக்கத்திற்காக உழைத்த அனைத்து அறிஞர்களையும் நினைவுபடுத்தி பெருமைப்படுத்து கிறார்கள்.

- சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/81912.html#ixzz34FBoh4Iy

தமிழ் ஓவியா said...


பார்ப்பனீயத்தின் நச்சுப்பல் பிடுங்கி எறியப்படும்!....

ஆசிரியருக்குக் கடிதம்
பார்ப்பனீயத்தின் நச்சுப்பல் பிடுங்கி எறியப்படும்!....

நூலகங்கள் பொது மக்களின் வரிப் பணத்தில் இயங்குபவை. ஆனால், அங்கு கிடைப்பதோ பார்ப்பனீய ஏடுகளும் பக்தி வார, மாத இதழ்களுமே! இப்பொழு தெல்லாம், நூலகங்கள் பஜனை மடங் களாகவும், ஆளுங் கட்சிக்கு ஜால்ரா போடும், ஏடுகளின் கூடாரமாகவும் மாறிக் கொண்டிருப்பது, வேதனைக்குரிய செய்தியே!

இதில், தற்செயலாக துக்ளக் என்ற வார இதழும் கண்ணில் பட்டது. அதன் அட்டைப் படத்தில் முத்தமிழறிஞர் கலைஞர். உடம்பில் பல கட்டுகளோடு படுக்கையில் இருப்பது போலவும், தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள், அவருக்கு ஆறுதல் சொல்வது போலவும் ஒரு கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்தது.

தி.மு.க. மக்களவைத் தேர்தலில், வெற்றி வாய்ப்பை இழந்தது. மக்களாட்சியில் இப்படி நடைபெறுவது இயல்பு. ஏன்? பர்கூர் சட்டப் பேரவைத் தேர்தலில் கட்டுத் தொகை யையே இழந்தவர்தானே, ஜெயலலிதா. அவர் மீண்டும் முதல்வராக வரவில்லையா? பேரறிஞர் அண்ணா, பச்சைத் தமிழர் காமராசர் தங்களது சொந்த ஊரிலேயே தோற்கவில்லையா? பிறகு அவர்களே, நாட்டின் முதல்வர்களாக வரவில்லையா?

ஆனால், மனிதநேயமே சிறிதுமில்லாத பார்ப்பனியம் மட்டும், அவாள் தோற்றால், அதற்கு பிறர் மேல் பழி போடும்! சூழ்ச்சி, வஞ்சகம், அடுத்துக் கெடுத்தல் செய்து பெற்ற வெற்றியாக இருந்தாலும் அதற்கும் மாற்றாரை மிகவும் கீழ்த்தரமான முறையில் கேலியும், கிண்டலும் செய்யும்.

தனது இலட்சியப் பயணத்தில், தி.க.வும், தி.மு.க.வும் பேரறிஞர் அண்ணா, தலைவர் அய்யா காலத்திலிருந்தே இதுபோன்ற எத்தனையோ சோதனைகளை வெற்றிகர மாகக் கடந்தே பயணித்து சாதனைகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஜாதி வெறியும், ஆணவமுமே தவிரவேறல்ல!

தமிழனத்தை எதிலுமே தலையெடுக்க ஒட்டாமல் தடுப்பதே, அவாளின் தலையாயக் கடமையாக இதுவரை இருந்து வருகிறது! தமிழினத்தின் அறியாமையும், ஒற்றுமை இன்மையுமே அவர்களது பலம். அதனால்தான் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் அவர்களால் வெற்றி பெற முடிகிறது. எளிதாக தமிழர்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பை உறிஞ்சவும் முடிகிறது. இது நிரந்தரமானது அல்ல என்றாலும், இந்நிலை தமிழர்க்குத் தலை குனிவுதானே? இது தேவை தானா என்பதை இனியேனும் பார்ப்பனியத்துக்கு துணை போவோர் சிந்திக்க வேண்டும்!

இத்தகைய சூழ்நிலையில்தான், துக்ளக் ஆசிரியர், மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும். திருவாரூரிலிருந்து தொலைபேசியின் வாயிலாக (26.5.2014) அவர் விரைவில் உடல் நலம் பெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார். ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள்! இது அய்யாவின் வழி வந்த திராவிட மரபுக்கே உரித்தான உயரிய பண்பு!.. பேரறிஞர் அண்ணாவும், முத் தமிழறிஞர் கலைஞரும் இதே வழியில் நடைபோட்டு வந்ததால்... வருவதால்தான்... திராவிடப் பண்பாடு இன்னமும் பட்டுப் போகாமல் இருக்கிறது! இது, தொடர வேண்டுமானால் பார்ப்பனீயம் தன் னுடைய ஜாதிவெறியை, ஆணவப் போக்கைக் கைவிட வேண்டும். மனித நேயத்தை மதித்துப் போற்றவேண்டும்!

இன்றேல், பார்ப்பனீயத்தின் நச்சுப்பல் விரைவில் தமிழ்நாட்டில், பிடுங்கி எறியப் படும்!! எழுச்சிமிக்க இளைஞர்களால்!!

- நெய்வேலி க. தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்

Read more: http://viduthalai.in/page-2/81916.html#ixzz34FBwZKme

தமிழ் ஓவியா said...


பெண் விடுதலைக்காக உழைத்த கடம்பினி


1861 ஜூலை 18... பீகாரில் உள்ள பகல்பூரில் பிறந்தார் கடம்பினி. அப்பா பிரஜ கிஷோர் பாசு... பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார்.

சீர்திருத்த கொள்கைகளில் அதிக நாட்டம் கொண்ட அவர், அபய் சரண் மாலிக் என்பவருடன் இணைந்து பகல்பூர் மகிள சமிதி என்ற பெண்கள் அமைப்பை உருவாக்கினார். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் பெண் விடுதலைக்காக உரு வாக்கப்பட்ட முதல் இயக்கம் இதுதான்!

பள்ளிப் படிப்பை முடித்த கடம்பினி, 17 வயதில் கொல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றார். இதன் மூலம் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவரானார்.

கடம்பினியின் படிப்பு ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் பெத்தூன் கல்லூரி யில் இளங்கலைப் பட்டப் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க பெண்களில் ஒருவராகத் திகழ்ந்த சந்திரமுகி பாசுவும், கடம்பினியும் முதல் பெண் பட்டதாரிகளாக வெளிவந்தனர்!

1883இல் சீர்திருத்தவாதியும் பெண் விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்குலியை மணம் செய்துகொண்டார் கடம்பினி. இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களுக்கு பணி சீர்திருத்தம் கொண்டு வர இருவரும் பாடுபட்டனர்.

8 குழந்தைகளுக்கு தாயானார் கடம்பினி. மருத்துவம் படிக்க விரும்பி, கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் கடம்பினி. பெண்களின் படிப்பு கொண்டாடப்படாத அந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

1886இல் கடம்பினியும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்திய மருத்துவர் களாக வெளிவந்தனர். மருத்துவராகப் பணியை ஆரம்பித்த கடம்பினிக்கு, உயர்கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

1892இல் இங்கிலாந்து சென்றார். 3 துறைகளில் பட்டப் படிப்புகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். மருத்துவராகச் சிறிது காலம் வேலை செய்தார். பிறகு சொந்தமாக மருத்துவப் பயிற்சியில் இறங்கினார். கடைசி காலம் வரை, பெண்கள் படிக்கவும் சுயமாகச் சிந்திக்கவும் வழிகாட்டிய கடம்பினி, 1923இல் மறைந்தார்.

Read more: http://viduthalai.in/page-7/81925.html#ixzz34FCVHzXG

தமிழ் ஓவியா said...


கணித மேதை ஆன கவிஞர் மகள் அகஸ்டா அடா பைரன்

1815 டிசம்பர் 10... லண்டனில் பிறந்தார் அகஸ்டா அடா பைரன். அவரது அப்பா புகழ்பெற்ற கவிஞர் லார்ட் பைரன். அம்மா அன்னபெல்லா மில்பேங்க். அடாவுக்கு 8 வயதானபோது பைரன் இறந்து போனார். அப்பாவும் இல்லை... அம்மாவிடமும் நெருக்கம் இல்லை... அடா பாட்டி வீட்டில் வளர்ந்தார்.

அதனால், அப்பாவைப் பற்றி நல்ல விஷயங்கள் எதுவும் அடாவுக்குச் சொல்லப்படவில்லை! 8 வயதில் அடாவுக்குத் தீராத தலைவலியும் பார்வைக் கோளாறும் ஏற்பட்டன. அதில் இருந்து மீண்ட பிறகு, அவருக்குக் கணிதமும் இசையும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார் அம்மா. ஆர்வமும் புத்திசாலித்தனமும் நிறைந்த அடா படிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டார்.

12 வயதில் கணினியின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் பாபேஜைச் சந்தித்தார் அடா. சார்லஸுக்கு அடாவின் புத்திசாலித் தனம் மிகவும் பிடித்துப்போனது. பறவையைப் போல மனிதனும் பறக்கும் முயற்சிகளைப் பற்றிப் பேசினார். அந்த விஷயம் அடாவுக்குப் பிடித்துப் போனது. 1828ல், அதன் முதல் படியாக இறக்கைகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

காகிதம், இறக்கைகள், பட்டுத்துணி போன்றவற்றில் பல்வேறு அளவுகளில் இறக்கைகளை உருவாக்கினார். பறவை எப்படிப் பறக்கிறது என்று ஆய்வு செய்தார். தான் கண்டறிந்த விஷயங்களை ஃப்ளையாலஜி என்ற பெயரில் ஓவியங்கள் நிறைந்த புத்தகமாக்கினார். இதோடு, பறக்கும் இயந்திரம் ஒன்றையும் வடிவமைத்தார் அடா.

20 வயதில் வில்லியம் கிங் என்ற அரசரைத் திருமணம் செய்துகொண்டார் அடா. காலரா, ஆஸ்துமா, ஜீரணக் கோளாறு என்று அடாவின் உடல்நிலையில் தொடர்ந்து பாதிப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. கணவர், குழந்தைகளோடு, நோயையும் சமாளித்துக்கொண்டு, தன்னுடைய ஆய்வையும் தொடர்ந்துகொண்டிருந்தார் அடா.

சார்லஸ் பாபேஜ் கணிதச் சமன்பாடுகளுக்கான ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்திருந்தார். அது முழுமை அடைவதற்குள் அனாலிடிக்கல் இன்ஜின் என்ற புதுக் கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அவருடைய புதிய திட்டத்துக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கவில்லை.

அனாலிடிக்கல் இன்ஜின் பற்றிய கட்டுரையை மொழி பெயர்க்கும் வாய்ப்பு அடாவுக்குக் கிடைத்தது. பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு அடா மொழி பெயர்த்த அந்தக் கட்டுரையில், அவருடைய கருத்துகளும் சேர்ந்து இடம்பெற்றன. 1843இல் அறிவியல் பத்திரிகையில் இந்தக் கட்டுரை வெளிவந்தது.

பல்வேறு கணித ஆய்வுகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த அடா, அனாலிடிக்கல் இன்ஜி னுக்கான அல்கோரிதங்களை எழுதினார்.

அதனால் உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என்று போற்றப் படுகிறார் அடா! வாழ்க்கை முழுவதும் நோய்களின் தாக்கத்தில் இருந்தாலும் கணிதவியலாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், கவிஞர் மட்டுமல்ல... நடனம், குதிரையேற்றம் போன்ற வற்றிலும் சிறந்து விளங்கினார் அடா. கருப்பை புற்றுநோயால் மிகுந்த வேதனைக்கு உள்ளான அடா, 36 வயதில் இறந்து போனார்.

Read more: http://viduthalai.in/page-7/81930.html#ixzz34FCktBjw

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பிரதமர் மோடிக்கு கலைஞர் வேண்டுகோள்

சென்னை, ஜூன் 10_தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது என்பது தொடர் கதையாக நீண்டு கொண்டே போகிறது. ஒரு நாளில் மட்டும் 82 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண் டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 56 பேரையும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட் டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்களையும் சிறை பிடித்ததோடு, அவர்களின் மீன் பிடிக்கும் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை அதிபரை தன்னுடைய பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து, இந்தியப் பிரதமர் பெருமைப் படுத்தினார். அவரும் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்ததோடு, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதாகத் தெரிவித்தார்.

அதற்குப் பிறகும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நிற்கவில்லை. இந்திய சிறையில் இருந்த இலங்கை மீனவர்களை மத்திய அரசும் விடுதலை செய்தது.

மேலும் இலங்கைக் கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டி யடிப்பது, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவது, சிறைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக் கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெய லலிதா கடந்த காலத்தில் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை சிறை பிடித்ததும் கடிதம் எழுது வதைப் போல அல்லாமல், இந்த முறை சற்று மாறு தலாக எழுதியிருக்கிறார்.

கடந்த முறை மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது, பிரதமருக்கு இவர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து பிரதமர் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டதால், அனைத்து மீனவர்களும் இலங்கையில் நீண்ட நாட் களுக்கு சிறை வைக்கப்படாமல், உடனடியாக விடுவிக் கப்பட்டதற்காக முதலில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவருடைய வழக்கமான நடைமுறையை மாற்றிக் கொண்டு எழுதியிருக்கிறார்.

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏற்கெனவே 2 முறை 2 நாட்டு மீனவர் பிரதி நிதிகள் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியும் எந்த முடிவும் காணப்படவில்லை. மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகாவது, மீனவர்கள் கைது படலம் நிற்குமென்று எதிர்பார்த்ததற்கு மாறாக, நீடித்துக் கொண்டே போகிறது.

எனவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மீனவர்களின் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உடனடியாக முன் வர வேண்டும்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/81909.html#ixzz34FD1vDrN

தமிழ் ஓவியா said...

முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!


- சிகரம்

முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.

சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!

100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!

ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?

இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?

படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.

40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.

மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?

பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!

நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!

பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.

தன் எதிர்காலத் திட்டத்திற்கு - இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.

முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?

அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?

கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.

ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.

விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.

98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?

98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?

தமிழ் ஓவியா said...

அன்பு மடல்


செவ்வாய்க்குப் போன இந்திய ராக்கெட்


மங்கள்யான் விண்கலம்

பாசத்திற்குரிய பேத்திகளே, பேரன்களே,

என்ன நலமா? நீங்கள்தான் எவ்வளவு வாய்ப்புப் பெற்றவர்கள்! அவ்வளவு வசதிகளும், கண்டுபிடிப்புகளும், உங்களது அறிவை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் உதவிட எத்தனை எத்தனை புதுமையான நவீன அறிவியல் கருவிகள் விஞ்ஞான தொழில்நுட்பப் பெருவளர்ச்சிக் காலமான இக்காலத்தில் உங்களுக்குக் கிடைக்கிறது; கிடைத்துக் கொண்டே இருக்கிறது!

முன்னொரு காலத்தில் தொலைப்பேசி என்றால் என்னவென்று தெரியுமா?

வீடியோ காட்சிகள் என்றால் விளங்குமா?

மாயாஜால வித்தைகளையும், கதைகளையும் தானே எங்கள் பாட்டி, தாத்தாமார்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்...

ஆனால், இப்போ... அப்படியா?

நீங்கதானே எங்களுக்கு எப்படியெல்லாம் கைத்தொலைப்பேசிகளை (செல்போன்களை) அழுத்தி, எதை எதைப் பேசுவது என்று கற்றுத் தருகிறீர்கள்!

இப்போதெல்லாம் தாத்தாக்கள் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தது போக, பேரக் குழந்தைகள் அல்லவா தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாக்களுக்குக் கற்றுத் தருகிறார்கள், தொழில்நுட்பம் அடங்கிய பல செய்திகளை!

எனவே, இக்காலமும், இனி வரக்கூடிய காலமும் குமர-குருபரர்கள் ஆன உங்களது பொற்காலங்கள்தான்!

நம் தங்கத் தாத்தா பெரியார் தாத்தா அவர்கள்,

இனிவரும் உலகம் என்ற ஒரு பேச்சு (அது புத்தகமாகவும் வந்துள்ளதே) அதில் இப்போது வந்துள்ள கைத்தொலைப்பேசி காணொளிக் காட்சிகள் (வீடியோ கான்பரன்சிங் - video Conferencing) பற்றியெல்லாம் சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னேயே சொல்லிவிட்டார்களே!

என்ன ஆச்சரியம்!

இப்போது நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் எவ்வாறு பரப்பப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு உதாரணம்.

நல்ல நாள்; நல்ல நேரம்; என்றெல்லாம் பார்த்து (புரட்டர்கள் பிழைக்க இது ஒரு வழி) நமது நேரத்தில் முக்கியமான பகுதியை வீணடிக்கிறார்கள்!

உழைக்கும் மக்களுக்கு எந்த மணித்துளியும் முக்கியமல்லவா? நேரத்தை - காலத்தை வீணடிக்கலாமா?


செவ்வாய் கிரகம்

செவ்வாய் என்றால் வெறும் வாய் அந்த நாளில் எந்தப் பணியைச் செய்தாலும் விளங்காது; வெற்றி பெறாது என்று சொல்லி நம்மை ஏமாற்றினார்கள், காலங்காலமாய்!

இப்போது அது வெறும் டூப்பு என்பது புரிந்துவிடவில்லையா குழந்தைகளே!

செவ்வாய்க்கோள் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளதே! அதற்கே ஒரு விண்கலத்தை _- ராக்கெட்டை _- நமது விஞ்ஞானிகள் ஆயிரம் பேர்கள் கடுமையாக உழைத்து வெற்றிகரமாக செலுத்திவிட்டார்களே!

அமெரிக்காகூட நமக்குப் பின்னால் நாசாவிலிருந்து தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது!

இதுவரை 2 லட்சம் மைல்கள் பயணம் செய்து போய்க்கொண்டே இருக்கிறது. (இதை எழுதும்வரை) அடுத்த டிசம்பர் ஒன்றாம் தேதி அங்கே போய்ச் சேருமாம்!

என்னே அற்புதச் சாதனை!

செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட அந்த விண்கலம்பற்றி சுவையான தகவல்கள் இதோ!


மார்ஸ் ஓபிடெர் மிஷன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் மங்கள்யான் விண்கலம் 450 கோடி இந்திய ரூபா செலவில் மார்ஸ் ஓபிடெர் மிஷன் திட்டத்தின் கீழ் இந்த மங்கள்யான் ஏவப்பட்டுள்ளது. இது உலகில் மிகக்குறைந்த செலவில் உருவான செய்மதித் திட்டமாகும். மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சிறீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்தக் காலத்திலும், மத்திய அரசின் தொல்பொருள் துறை, யாரோ சாமியார் கூறியதாகக் கூறி, தங்கவேட்டைப் புதையலை _- உத்தரப்பிரதேசம் உன்னா (Unno) என்ற இடத்தில் செய்து உலக அளவில் அவமானப்பட்டதுதான் மிச்சம்!

உலகமே நமது மத்திய அரசினைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிறது.

ஆனால், மங்கள்யானைச் செலுத்தியுள்ளதன் மூலம் அறிவியலின் வெற்றியை _ அறிவியலின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அன்புடன்,
உங்கள் தாத்தா
கி. வீரமணி

தமிழ் ஓவியா said...

டென்னிஸ் (Tennis)

அணிக்கு ஒருவர் என்று இருவரோ, அணிக்கு இருவர் என 4 பேரோ டென்னிஸ் விளையாட்டினை விளையாடுவர். இது ஒற்றையர், இரட்டையர் பிரிவு என்றழைக்கப்படுகிறது. சல்லடை மட்டையால் (ராக்கெட்) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி அரங்கத்திற்குள் விழுமாறு பந்தைத் தட்டி விளையாடும் விளையாட்டே டென்னிஸ்.

முதலில், கைகளால் பந்தினைத் தட்டி விளையாடியுள்ளனர். டென்னிஸ் மட்டையினைப் பிரான்ஸ் நாட்டினர் அறிமுகப்படுத்தினர். டென்னிஸ் என்பது பிரான்ஸ் சொல்லாகும்.

உலகில் மிக அதிக ரசிகர்களையும், வீரர்களையும் கொண்ட விளையாட்டுகளுள் டென்னிசும் ஒன்றாகும். இதன் விதிமுறைகள் 1875ஆம் ஆண்டு மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் வரையறுக்கப்பட்டன.

ஆடுகளம்

புல்வெளி, களிமண், செம்மண், கற்காரை(கான்கிரீட்), செயற்கைப் புல், மரப்பலகை என்ற இவற்றுள் ஒன்றால் தளம் அமைக்கப்பட்டிருக்கும். ஆடுகளத்தின் நீளம் 36 அடி (10.97 மீட்டர்), அகலம் இரட்டையர் ஆட்டத்திற்கு 78 அடி (23.77 மீட்டர்), ஒற்றையர் ஆட்டத்திற்குப் போடப்பட்ட கோட்டின் இருபுறமும் 14 மீட்டர் (4.5அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்குக் கோடு போடப்படும். ஆடுகளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீட்டர் (3அடி) உயரத்தில் நடுவலை அமைந்திருக்கும்.

பந்து

மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும் பந்தின் உட்புறம் காலியாக இருக்கும் ரப்பர் பந்து பயன்படுத்தப்படுகிறது. பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் கொண்டதாக இருக்கும். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளைக்கோடு போட்ட பந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சல்லடை மட்டை


ரோஜர் பெடரர்

இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை மட்டைகளுக்கு இல்லை. எனினும், போட்டிகளில் 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும் 31.8செ.மீ (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் உள்ள மட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. மட்டையின் தலைப்பகுதி (வலைப் பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும் 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் எடைக்கு வரையறை இல்லை.

சிறப்புப் போட்டிகள்


சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டரங்கம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஆகியன சிறப்புப் போட்டிகளாகும். 1877ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் என்னும் இடத்தில் முதன்முதலில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ட்லைட் எப் டேவிஸ் என்பவரால் தொடங்கப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது.

உலகத் தரம் வாய்ந்த டென்னிஸ் விளையாட்டரங்கம் நமது சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதில் பன்னாட்டு டென்னிஸ் விளையாட்டுகள் ஆண்டுதோறும் நடக்கின்றன.

தமிழ் ஓவியா said...

விலங்குகளும் விசித்திர உறக்கமும்!


மனிதன், தண்டுவடம் தரையில் படும்படி (அல்லது மெத்தையில் படும்படி) வைத்து மல்லாந்த நிலையில் தூங்குகிறான். சிலர் குப்புறக் கவிழ்ந்தும், சிலர் ஒரு பக்கம் சாய்ந்தும் உறங்குவார்கள்.

நம்மைப்போலவே பிராணிகள் ஒவ்வொன்றும் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. நாய், பூனை, மாடுகள் தூங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், நாம் கண்டு ரசிக்க முடியாத வினோதம் கொண்ட பிராணிகள் பல உள்ளன. அவைபற்றி இங்கே...

பாம்பு இனங்கள் உடலை வளையம்போல சுருட்டி அதன் மீது தலைவைத்துப் படுத்திருக்கும், ஆனால், உறங்கும் போதும் பாம்புகளின் கண்கள் திறந்தே இருக்கும்.

மான்கள் நின்று கொண்டும், படுத்த நிலையிலும் உறங்கும். சில வகை மான்கள், தூங்கும்போது சுவாசத்தின் மூலமே எதிரிகள் நெருங்குவதை அறிந்து கொள்ளும்.

வாத்து தரையில் நின்று கொண்டும், நீரில் நீந்திக் கொண்டும் உறங்கும் ஆற்றல் பெற்றது.

யானைகளும் குதிரைகளும் நின்று கொண்டேதான் உறங்கும்.

இவை எல்லாவற்றையும்விட விசித்திர தூங்கும் பழக்கம் கொண்டன எறும்புகள். மண்ணில் அழகான மணல் மெத்தைகளை உருவாக்கி, மல்லாந்த நிலையில் உடலோடு கால்களை ஒட்டி வைத்து ஒய்யாரமாய் உறங்கும். சுறுசுறுப்பான எறும்புகள் சுமார் 3 மணி நேரம் ஓய்வெடுக்கும்.

- தகவல்: இ.ப.இனநலம், 9ஆம் வகுப்பு, பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்