Search This Blog

10.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம்-3
(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை.

வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்).


பால காண்டம்


நான்காம் அத்தியாயம்

மேலே அயோத்தியாபுரியிலே தசரத மன்ன வனுடைய முயற்சியினாலே செய்யப் பெற்ற அசுவமேத யாகத்திலே யாவரும் கூடி, சோமக் கொடியின் சாறாகிய கள்ளைக் குடித்துக் குதிரை, பாம்பு, ஆமை முதலியவற்றை வேள்வியிலே பாகம் செய்து உண்டு மகிழ்ந்தனர்.  யாகமும் நிறைவேறிற்று.
பின் பிள்ளைப் பேற்று வேள்வி செய்யப் பெறுகிறது.  தீயினின்றும் ஒரு பூதம் தோன்றிப் பாயசம் தருகிறது.  அதைத் தசரதன் மனைவியருக்குப் பகிர்ந்து தருகிறான்.  திருமால் தம்மை நான்கு கூறாக்கிக் கொண்டு, தம்மில் பாதியாகிய ஒரு கூறு கோசலை வயிற்றிலும், தம்மில் கால் பாகமாகிய ஒரு கூறு கைகேயி வயிற்றிலும், தம்மில் மீந்த பாகமாகிய இரண்டு கூறுகள் சுமத்திரை வயிற்றிலுமாகப் புகவே கருநிறைவுற்றபின் கோசலை இராமனையும், கைகேயி பரதனையும், சுமத்திரை இலக்குமணனையும், சத்துருக்கனனையும் பெற்றனர்.  இவர்கள் நால்வருமே திருமாலின் தோற்றமானவர்.  உலகினர் கருதுமாறு இராமன் மட்டுமே திருமாலின் பிறப்பெனக் கொள்வது தவறு.


அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்ட பின்னரே தசரதன் இவ்வேள்வியை இயற்றினான்.  கம்பரும் இதனையே பால காண்டம் திருவவதாரப் படலத்தில் தசரதன் கூற்றாக,

அறுபதி னாயிர மாண்டு மாண்டுற
உறுபகை யொடுக்கியிவ் வுலகை யோம்பினேன்


என்று கூறுகின்றனர்.  இதனால் அப்போது தசர தனுக்கு அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வயதிருக்க வேண்டும்.  அதன் பின்னரே இராமன் முதலிய நால்வரும் பிறந்திருக்க வேண்டும்.  இது நம்புந் தரமானதாக இல்லை.  இந்தத் தசரதன் இவ்வளவு காலம் உலகில் வாழ்வதற்கு என்ன தவம் செய்தனனோ?  யாரிடம் வரம் பெற்றனனோ?  தெரியவில்லை.
இவனுடைய மனைவியராகிய கோசலை, கைகேயி, சுமத்திரை முதலியவருக்கும் குறைந்தது அறுபதினாயிரம் வயதாவது இருக்க வேண்டும்.  பதினாயிரம் ஆண்டுகள் ஆண்ட பின்னர், இவர்களை தசரதன் மணந்து கொண்டானென்று கொண்டாலும், இவர்களுக்குக் குறைந்தது அய்ம்பதினாயிரம் வயதாவது ஆகியிருக்க வேண்டும்.  இப்பெண்மணிகள் இவ்வளவு காலம் உயிர் வாழ என்ன தவம் செய்து எவரிடம் என்ன வரம் பெற்றனரோ?  தெரியவில்லை.  இவ்வளவு வயதான கிழவிகள் எவ்வாறு கருத்தரித்தனரோ?  இதுவும் விந்தையே!


தற்காலத்தில் பெண்கள் அய்ம்பது வயது வரையில் பிள்ளை பெறுகின்றனர்.  அதன்மேல் அவர்களுக்குக் கருத்தரிக்கும் தன்மை அற்றுப் போகின்றது.  இந்த இராமகதை நிகழ்ந்த காலத்தில், பெண்கள் அய்ந்நூறு அல்லது அய்யாயிரம் வயது வரை கருத்தரித்தனர் என்று சொன்னாலும் ஒருவாறு பொருந்தும் பொய்யாகும்.  ஆனால், இந்தக் கவுசலை முதலிய பெண்களோ, அய்ம்பதினாயிரம் வயது சென்ற பின்னர் கருத்தரித்தனர் என்று சொல்வது பொய்யுலகமும் ஒப்பமுடியாததாக இருக்கின்றது.  இருந்தாலும் அறுபதினாயிரமாண்டு கடந்த இப்பெண்கள், இராமன் முதலிய நால்வரைப் பெற்றனரெனவே வால்மீகி முனிவரும் கம்பரும் கூறுகின்றனர்.  இவ்வாரியப் புரளியை என்னென்பது!


தான் வெட்டிக் கொன்ற குதிரையை ஒரு நாள் இரவு முழுவதும் கட்டித் தழுவியிருந்த கோசலையும், ஏனைய கைகேயி சுமித்திரையும் பிள்ளையை உண்டாக்கவல்ல கலைக்கோட்டு முனி முதலிய இருத்விக்குகளின் சேர்க்கையால் கருவுற்றனர்.  அதை மறைத்தற்காகவே பாயச வேள்வியும் செய்யப்பட்டது போலும்.  உண்மை யிவ்வாறிருப்பவும், கம்பர் பாயசத்தை உண்டதனாலேயே கவுசலை ஆதியர் கருவுற்றனர் என்று குறித்திருக்கிறார்.  உயரிய அறிவினராம் கம்பர், இயற்கைக்கு மாறாக இவ்வாறு குறித்ததேன்?  இயற்கைக்கு மாறும் செய்தியைக் கம்பர் குறித்ததால், இதன் உண்மைதா னென்னே என்று நுண்மாண் நுழை புலனுடையார் துருவிச் சென்று வால்மீகியைப் படித்து உண்மை தெரிந்து கொள்ளட்டும் என்று கருதிப் போலும் இவ்வாறு குறித்தனர்.


தசரதனுக்குப் பட்டமனைவியர் மூவரைத் தவிர வேறு அறுபதினாயிரம் மனைவியருமுண்டு.  இவர்களைத் தசரதன் தன்னைக் கொல்லவந்த பரசுராமனிடமிருந்து தப்பும் பொருட்டு மணந்தனனெனக் கூறுவர்.  இது எம் மட்டும் உண்மை என்பதைப் பின்னர் ஆராய்வோம்.  காரணம் எதுவாயிருந்தாலும், தசரதனுக்கு அறுபதினா யிரம் மனைவியரிருந்தனர் என்பது கதையின்படி உண்மையே.


அரசனே இவ்வாறு அறுபதினாயிரம் காமக்கிழத்தி யரைக் கொண்டிருந்தானென்றால், அவன் நாட்டிலிருந்த குடிமக்களின் ஒழுக்கநிலை எவ்வாறிருந்திருக்குமோ?  அண்ணாவி நின்று கொண்டு இருந்தால், பிள்ளைகள் ஓடிக் கொண்டன்றோ நீர் கழிப்பர்?  தசரதன் தான் ஒருவன் வாழ வேண்டிப் பேடித்தனமாக அறுபதினாயிரம் பெண் மக்களின் நல்வாழ்வைக் கெடுத்தானே; அய்யோ!  பெருங்கொடும் பாவம்!  உலகினர் இரண்டு பெண் டாட்டிக்காரனுக்குக் கொண்டையென்னத்திற்கடி கொண்டை என்பர்.  ஒரு மனைவியைக் கொண்டு காலங்கழிப்பதே மிகவும் கடினமாக இருக்கிறதனால், அறிவுடைய நன்மக்கள் இரண்டாமுறை மணக்க வேண்டுமென்று கனவிலும் மறந்தும் நினையார்.  இரண்டு பெண்டாட்டியால் உண்டாகும் திண்டாட்டமே மிகக் கொடியது.  ஒருவன் அறுபதினாயிரத்து மூன்று மனைவியரை வைத்திருந்தானென்பது கேட்கக்கூட மிகவும் அச்சத்தையும் அருவருப்பையும் தருகின்றதன்றோ?  அந்தோ பரிதாபம்!  அறுபதினாயிரத்து மூவருக்கு ஒருவன் கணவனென்றால், அவர்கள் ஒவ்வொரு வரையும் கவனிக்குமிடத்து அவன் இருந்தும் இறந்த வனே யாவனல்லவா?  அவர்கள் என்ன தாசி என்னப்பட்டவரோ?  பாவம்!  பாவம்!  நிற்க, கோசலை ஆதியருக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளும் நன்றாக வளர்ந்து வருவாராயினர்.  அவர்களில் இராமனுக்குத் துணையாக இலக்குவனும், பரதனுக்குத் துணையாகச் சத்துருக்கனும் இணைபிரியாதிருந்து வந்தனர்.  இவர்கள் கல்வி பயின்று பதினாறாட்டைப் பிராயத்தராயினர்.  அதுகண்ட தசரதன் அவர்களுக்குத் திருமணத்தைச் சிந்தித்தான்.


அமைச்சரோடும் திருமணஞ் சிந்தித்திருந்த தசரதனைக் காதிமகனான விசுவாமித்திர முனிவன் வந்து கண்டான்.  அவன் மன்னனை நோக்கி, இராமனைத் தன்னுடன் பத்து நாளைக்கு அனுப்பித் தான் செய்யும் வேள்வியைக் காக்க வேண்டுமென வேண்டினன்.  உடனே மன்னவன் நினைவிழந்து, ஓ முனிவரே!  யான் பிறந்து அறுபதினாயிரம் ஆண்டுகள் சென்று இந்த இராமனை அருமையாகப் பெற்றேன்; எனது பிள்ளைகள் நால்வருள்ளும் இராமனிடத்தில் எனக்குப் பேராசை பெருகிவிட்டது.
ஆதலால் அவனை அழைத்துக் கொண்டு போக வேண்டாம்.  உம்மை வருத்தும் அரக்கர் யாவர்? எனப் புகன்றனன்.  உடனே விசுவாமித்திரன், புலத்திய மாமுனி குலத்தினனான இராவணனென்று ஓர் அரக்கனிருக்கிறான்.  அவன் மாரீசன், சுபாகு என்ற இரண்டு அரக்கரையனுப்பி வேள்விகளைக் கெடுக் கிறான் என்று கூறினான்.  அதுகேட்ட மன்னன், அந்த இராவணன் முன் நின்று போர் செய்ய யான் வல்ல வனல்லேன்.  தேவர்கள், கந்தர்வர்கள், இயக்கர்கள் முதலியோரும்கூட இராவணனோடு போர் செய்ய வல்லமையில்லாதிருக்க மானிடர்கள் எவ்வளவு?  அவனோ மிக்க வல்லமை பெற்றவர்களின் வல்லமை யையும் போர்தன்னில் அடக்கி விடுகிறான்.  அவனோ டாவது, அவனுடைய படைகளோடாவது, போர் செய்ய என்னால் முடியாது.  யான் எனது படைகளைக் கூட்டி வந்தாலும் முடியாது.  எனது மக்களோடு கூடிவந்தாலும் முடியாது.  ஆதலின் சிறு குழந்தையான இராமனை நீர் என்ன பாடுபட்டாலும் கொடுக்கவே மாட்டேன்.  உமது யாகத்தை அழிக்க வந்துள்ள சுபாகு, மாரீசரோ மிக வல்லமை பெற்றவர்கள்.  ஆதலால், வேண்டுமானால் நான் அவர்களுள் ஒருவனோடு போர் செய்ய வருகிறேன் என்று கெஞ்சினான்.
அப்போது முனிவர் சினமிகக் கொண்டார்.  இதுவரை, நிகழ்ச்சி வால்மீகி இராமாயணம் பாலகாண்டம் இருப தாவது சருக்கத்திலுள்ளது.  அதனாலே கேடு விளையு மென அறிந்த வசிட்டமுனி, மன்னனுக்குத் தேறுதல் சொல்லி இராமனை அனுப்புமாறு ஏவினன்.  அது கேட்ட மன்னனும் இராமனை முனிவனுடனனுப்ப இசைந்தனன்.


விசுவாமித்திர முனிவன் முன்னாலே செல்லப் பின்னால் இராமனும் இலக்குவனும் அவனைத் தொடர்ந்து காடு நோக்கிச் சென்றனர்.  அவர்கள் சரயு நதிக்கரையை யடைந்தபோது, முனிவன் அவர்களுக்குப் பலை, அதிபலை என்ற வித்தைகளைக் கற்றுக் கொடுக் கின்றனன்.  அன்றிரவு அக்குழந்தைகள், சிறகுகளாலாகிய படுக்கையில் துயின்றனர்.  விடிந்ததும் முனிவன், விடிந்து விட்டது; எழுந்திருங்கள் என்று அவர்களைச் சத்தமிட் டழைத்து எழுப்பினன்.

                 ------------------------------------"விடுதலை” 10-06-2014

26 comments:

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே கவனியுங்கள்!


aarthi anbalagan

Jun 9 (2 days ago)

to me

Hello sir,

Your newspaper ((Viduthalai) containing lot of useful information. Particularly Employment news very useful for me because I am looking for job. But this news fully based on government jobs. most of the people are not interested in government jobs. so, this is my request, try to publish private jobs also sir.
thank you

நமது இயக்கத்திற்கு நேரிடையாகத் தொடர்பில்லாத தோழர்கள்கூட ஒவ்வொரு கோணத்தில் விடுதலையின் பலனைத் துய்த்து வருகிறார்கள் - வரவேற்கிறார்கள். எனவே விடுதலை சந்தா சேகரிப்பில் இறங்குங்கள் நல்லாதரவு நிச்சயம் கிட்டும்.

மறவாதீர்! இம்மாத இறுதிக்குள் 12 ஆயிரம் விடுதலை ஆண்டு சந்தாக்கள் நமது இலக்கு என்பதை மறந்து விடாதீர்கள்!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/81904.html#ixzz34F9qeXky

தமிழ் ஓவியா said...

பசுமலை - சிறுமலை

திராவிடர் கழகத்தின் சார்பில் களப்பணி முகாம்கள் கழகத் தலைவர் வழிகாட்டுதல்படி நடந்து வருகின்றன. கடந்த மாதம் புதுச்சேரியில் நேர்த்தியாகத் தொடங்கப் பட்டது. கடலூர், சிதம்பரம் மாவட்டக் கழகத் தோழர்களுக்கு வடலூரில் முகாம் நடத்தப்பட்டது.

கடந்த சனியன்று மதுரை பசுமலையிலும், ஞாயிறன்று திண்டுக்கல் சிறுமலையிலும், முறையே மதுரை, புறநகர், விருதுநகர், திண்டுக்கல், பழனி, தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்குக் களப் பணி முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.


கழகப் பொறுப்பாளர்களுக்கு மட்டுமான பட்டறை இது; கழக அமைப்புப் பணிகள், பதிவேடுகள், ஆண்டு ஒன்றுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்துரையாடல்கள், பிரச்சாரக் கூட்டங்கள், ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல், உறுப்பினர் சேர்த்தல், புத்தகச் சந்தை நடத்துதல் மற்றும் தொண்டறப் பணிகள்பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

பகுத்தறிவுத் தகவல் பலகை, பெரியார் வாசகர் வட்டம் சுவர் எழுத்து, வாயிற் கூட்டங்கள், துண்டறிக்கை விநியோகம் குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்கள் என்று இலக்குகள் வரையறுக்கப்பட்டு கழகப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. தோழர் களும் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கருத்துக்களையும், திட்டங்களையும் கவனமுடன் கேட்டனர். அவர்களின் அய்யப்பாடுகளையும் தெரி வித்தனர். அவற்றிற்கெல்லாம் கழகப் பொறுப்பாளர்கள் உரிய முறையில் விளக்கங்களைஅளித்தனர்.

பிற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள சூழலில் சமூகப் புரட்சி இயக்கமான கழகம் எந்தெந்த வகைகளில் எல்லாம் மதச் சார்பற்ற கொள்கைகளையும், சமூக நீதியையும், முன்னெடுத்துச் செல்லுவது என்பதற்கான கருத்துகளும், திட்டங்களும் விவாதிக்கப்பட்டன.

சமூகநீதியில் இன்றைய கால கட்டத்தில் பெறப் பட்டுள்ள உரிமைகளின் அளவு, பெற வேண்டிய இலக் குகள்பற்றி தக்க புள்ளி விவரங்களுடன் விவாதிக்கப் பட்டன.

தமிழ் ஓவியா said...

மத்திய அரசுத் துறைகளில் 27 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி உரிமை உடையது என்றாலும் இதில் இன்னும் ஏழு சதவீதத்தைக்கூட எட்டவில்லை என்று நினைக்கும் பொழுது, இத்திசையில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு எவ்வளவு என்பதைச் சிந்திக்க வேண்டும்.

திராவிடர் இயக்கத்தின் சித்தாந்தம், கொள்கைக் கோட்பாடுகள், சாதனைகள் புதிய தலைமுறையின ரிடத்தில் சென்றடையவில்லை. இந்த நிலையில் அவர்கள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்லுவது கட்டாயமாகும்.

மாணவரணி, இளைஞரணி அமைப்புகளை, முகாமைப்படுத்தி வலுப் பெறச் செய்து, அவர்கள் மூலமே இந்தச் சாதனையை நிகழ்த்த இயலும் என்பதால் இத்திசையில் கழகப் பொறுப்பாளர்கள் பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த மாத இலக்காக 12,000 விடுதலை சந்தாக்கள் சேர்ப்பதில் கழகத் தோழர்கள் கடமையாற்ற வேண்டும். கழக உறுப்பினர்கள் கட்டாயம் சந்தாதாரர் ஆக வேண்டும். அதே போல ஒவ்வொரு கழகத் தோழரும் இரண்டு விடுதலை சந்தாக்கள் திரட்டுவது என்ற முறையில் பணியாற்றினால் ஒரே வாரத்தில் இந்த பணியை நிறைவேற்றி முடிக்கலாம்.

நாம் எவ்வளவுப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினாலும் நாள்தோறும் வெளிவரும் விடுதலை அதிக எண்ணிக்கையில் பரவினால் தான் நமது கருத் துக்கள் போய்ச் சேர முடியும். களத்தில் பணியாற்றும் கழகத் தோழர்களும் அன்றாடம் கழகத் தலைவரின் கருத்துகள், நிலைப்பாடுகளை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்றாற்போல பணிகளை ஆற்ற முடியும்; மக்கள் மத்தியில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் இலகுவாக ஏதுவாகும்.

ஒரு பக்கத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை, இன்னொரு பக்கத்தில் களப் பணி முகாம்கள் இரண்டும் இணையும் பொழுதுதான் உரிய பலன்கள் கிடைத்திட முடியும்.

இயக்க இளைஞர்கள் கணினிப் பயிற்சி பெறு வதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது, இன்றைக்கு முகநூல் மூலம் சண்டமாருதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்தக் களத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கைப்பேசி மூலம் குறுஞ் செய்திகளை அனுப்பலாம்; கருத்துக்களைப் பரப்பலாம்.

அஞ்ஞான கருத்துக்களை விஞ்ஞானக் கருவிகள் மூலம் பரப்பிக் கொண்டுள்ள நிலையில், விஞ்ஞான சிந்தனையின் கூர் முனைக் கருத்துக்களைக் கொள்கை யாகக் கொண்ட நாம் தொழில் நுட்ப சாதனங்களைக் கையாள வேண்டாமா?

எனவே, தோழர்களே! எப்பொழுதும் தொடர்போடே இருங்கள் - எதிர் நிலையாளர்களின் செயல்பாடுகளை யும் கணித்து வாருங்கள். நாம் நமது இலட்சிய பயணத் தில் பயணிக்கும் போதே எதிர்வரும் சவால்களுக்கு முகம் கொடுத்து, இளைஞர் பட்டாளத்தின் ஈர்ப்பை நாம் தட்டிச் சென்றாக வேண்டும்.

மற்றொரு முக்கிய கருத்து: இயக்கம் அவ்வப்பொழுது வெளியிட்டுக் கொண்டே இருக்கும் வெளியீடுகளை, நூல்களைப் படிக்கத் தவறாதீர்! வணிக நிறுவனங்களை நடத்தும் தோழர்கள் நமது இயக்க நூல்களையும் விற்பனை செய்ய ஆர்வம் காட்டலாமே!

சால்வைகளுக்குப் பதில் சந்தாக்கள் - திருமணப் பரிசாக பணம் அளிக்காமல் சந்தாக்களை பதிவு செய்வீர்! முக்கியமான கால கட்டம் இது. முகிழ்த் தெழும் ஒளிக்கற்றையாக ஓங்கி எழுவீர் தோழர்களே!

Read more: http://viduthalai.in/page-2/81911.html#ixzz34FALEyYj

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களுக்கு எதிராக திராவிடர் கழகம் பேசுகிறதாம் பேச தடை விதிக்க வேண்டுமாம்


பார்ப்பனர்களுக்கு எதிராக திராவிடர் கழகம் பேசுகிறதாம் பேச தடை விதிக்க வேண்டுமாம்

சிவகாசி பார்ப்பனர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை, ஜூன்.10--_ பார்ப்பனர்களுக்கு எதி ராக திராவிடர் கழகம் பேசுவதாகவும் அவ்வாறு பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சிவகாசி வக்கீல் பார்ப் பனர் கார்த்திகேயன் என் பவர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக் குத் தொடுத்துள்ளார்.

செய்தி வருமாறு: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், வழக்குரை ஞர் இவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திராவிடர் கழக தலை வர் வீரமணி பிராமணர் சமூகத்துக்கு எதிராகவும், பிராமணர்களை அவ தூறாகவும் தொடர்ந்து பேசி வருகின்றார். 2012ஆ-ம் ஆண்டு திருவானைக்காவலில் நடந்த பொதுக்கூட்டத் தில் வர்ணாசிரமத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும், வர்ணாசிரமத் துக்கு எதிரான போராட்டம் வன்முறை அல்லாத ஒன்றாக இருக்காது என்றும் கி.வீரமணி பேசி உள்ளார்.

பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது சமூகத்தின் பெயரில் கடை கள், பள்ளிகள் போன்ற வற்றை வைத்துள்ளனர். அப்படி இருக்கும் போது, பிராமணாள் கபே என்று இருப்பதில் என்ன தவறு உள்ளது?.

அகத்தியர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், சுப்பிரமணிய பாரதி, ராமானுஜர் போன் றவர்கள் பிராமண சமூ கத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள், ஜாதி வேறுபாடு களை களையவும், சமூக சீர்திருத்தங்களுக் காகவும் பாடுபட்டு உள் ளனர்.

தனிமனித சுதந்திரத்துக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் திராவிடர் கழகம், பிராமணர் சமூகத்தினரை தொடர்ந்து அவ தூறாக பேசி வருவது நியாயமற்றது.

எனவே, கி.வீரமணி, மீது நடவ டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பிராமணர் களுக்கு எதிராகவும், அவதூறாகவும் திராவிடர் கழகம் பேச தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனு வில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை தள்ளிவைப்பு

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகி யோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை நாளை (11-ஆம் தேதி)-க்கு தள்ளி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/81903.html#ixzz34FB5MPj5

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


விளம்பர யுக்தி

திருப்பதி - லட்டு, பழனி - பஞ்சாமிர்தம், திருவில்லாலை - பாயசம், அழகர்கோயில் - தோசை, காஞ்சிபுரம் - குடலை இட்லி, உப்பிலியப்பன் கோயில் - உப்பில்லாத பிரசாதங்கள், சிதம்பரம் - களி, வைத்தீஸ்வரன் கோயில் - தினைமாவு, குணசீலம் - தேங்காய்ப்பூ, பிள்ளையார்ப்பட்டி - பிடி கொழுக்கட்டை, குருவாயூர் -நல்லெண்ணெய், சபரி மலை - நெய், சங்கரன் கோயில் - புற்றுமண், இவையெல்லாம்தான் பிரசித்த பெற்ற கோவில் பிரசாதங்களாம்.

கடவு ளுக்கு உருவங்களும் அவற்றுக்காகக் கோயில் களும் கட்டப்பட்ட நிலை யில் அவற்றை நிலை நிறுத்தவும் ஏதோ ஒரு வகையில் வசீகரித்து மக்களை ஈர்க்கவும், வணிகத் தன்மையுடன் இத்தகைய விளம்பர யுக்திகளைக் கை யாளுகிறார்கள் என்பது புரியவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/81900.html#ixzz34FBGzkS2

தமிழ் ஓவியா said...


அனைத்துக் கட்சிக் கூட்டம் கிடையாதாம் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு


காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில்
தமிழ்நாட்டுக்கு எதிராக இரு மாநில அரசுகளும் மும்முரம்

அனைத்துக் கட்சிக் கூட்டம் கிடையாதாம் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு


வெங்கய்ய நாயுடு: உமாபாரதி அதிர்ச்சித் தகவல்!

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு டில்லியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளனர். மத்திய அமைச்சர் உமாபாரதியும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.

புதுடில்லி, ஜூன் 10_- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படக் கூடாது என்று கருநாடக மாநில அரசும் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மேலும் .உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கேரள அரசும் மும்முரம் காட்டுகின்றன. இந்த நிலையில் அனைத் துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை என்கிறார் தமிழக முதல் அமைச்சர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை தடுக்க கர்நாடகா முடிவு

காவிரி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலு வையில் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என கர் நாடக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தடுப்பது தொடர்பாக கர்நாடகாவின் அனைத் துக்கட்சி கூட்டம் திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் தொடங்கியது. கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நானையா, கர்நாடக மாநில அமைச்சர்கள் மற் றும் மக்களவை உறுப் பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற அனைத் துக்கட்சி கூட்டத்துக்குப் பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமய்யா செய்தியா ளர்களிடம் பேசியதாவது: ''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தடுப்பது குறித்து ஆலோ சிக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. காவிரி, கிருஷ்ணா ஆகிய நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சியினரும், அனைத்து அமைப்பி னரும் ஒரே அணியில் ஒற்றுமையாக செயல்படு வது என ஒரு மனதாக முடிவெடுத்துள்ளோம்.


தமிழ் ஓவியா said...

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யில் இருக்கிறது. அதனால் இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சரியான நேரம் அல்ல. அதனை அமைக்க மத்திய அரசு முற்பட்டால் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க் கும். ஏனென்றால் இதனை அரசியலாக பார்க்க வில்லை. கர்நாடகாவில் உள்ள மக்களின் முக்கிய பிரச்சினையாக பார்க்கி றோம். எனவே எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விட மாட்டோம்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை இரவே டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களான வெங்கய்ய நாயுடு, சதானந்தகவுடா, அனந்த குமார், சித்தேஸ்வரா ஆகியோருடன் ஆலோ சனை நடத்தப்படும். செவ்வாய்க்கிழமை காலை டெல்லியில் உள்ள கர் நாடக பவனில் அனைத் துக் கட்சி எம்.பி.க்களைக் கூட்டி இவ்விவாகரம் குறித்து ஆலோசிக்கப் படும். அதன்பிறகு கர்நா டகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலை வர்கள், மத்திய அமைச் சர்கள், மக்களவை, மாநி லங்களவை உறுப் பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந் தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என வலியுறுத்த இருக்கிறோம்'' என்றார். முல்லை பெரியாறு: மத்திய அரசு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் முல்லை பெரியாறு பிரச்சினையில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு இரு மாநிலங்களுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று கேரள மாநில சட்ட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு குடியரசுத் தலைவர் பரிந் துரை செய்ய வேண்டும் என்றும் அத்தீர்மானத் தில் கோரப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை நடை பெற்ற கேரள சட்ட மன்றக் கூட்டத்தில், தமி ழக அரசுக்கு சாதகமாக வெளியான உச்ச நீதி மன்றத் தீர்ப்பால் எழுந் துள்ள நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சு தானந்தன் வலியுறுத் தினார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் கம்யூ னிஸ்ட் கூட்டணி கட்சி களின் பிரதிநிதிகள் சுமார் 3 மணி நேரம் விவாதம் நடத்தினர்.

அதன் இறுதியில், மத்திய அரசு முல்லைப் பெரியாறு அணை விவ காரத்தில் இரு மாநிலங் களுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டும் எனக் கோரி, அவை விதிமுறை 275-ன் கீழ் முதல்வர் உம்மன் சாண்டி தீர்மானம் கொண்டு வந்தார். அத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கேரள சட்டமன்றத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளதாவது: முல் லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள, தமிழக அரசு களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்து சுமுக தீர்வு காண்பதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.

அணையையொட்டியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் 40 லட்சம் மக்களின் உயி ருக்கு ஆபத்து ஏற்பட் டுள்ளதால், இந்த விவ காரத்தை விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றத்துக்கு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 143-ன் கீழ் குடியரசுத் தலைவர் பிர ணாப் முகர்ஜி பரிந்துரை செய்ய வேண்டும்.

119 ஆண்டுகள் பழமை யான அணையின் பாது காப்பு குறித்து கேரள மக்கள் மிகுந்த அச்ச மடைந்துள்ளனர். இப் பிரச்சினைக்கு புதிய அணை கட்டுவதுதான் நிரந்தர தீர்வாகும். அதன் மூலம் கேரள மக்களுக்கு பாதுகாப்பும், தமிழகத் துக்கு தண்ணீரும் கிடைப் பது உறுதிப்படுத்தப்படும்

தமிழ் ஓவியா said...

1979-ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையம் தெரி வித்த யோசனையின்படி கேரளமும், தமிழகமும் இணைந்து புதிய அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அணையில் தண் ணீரைத் தேக்கிவைக்கும் அளவை உயர்த்தினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். வன மற்றும் சுற்றுச்சூழல் சட்டங் களை அணைப் பகுதியில் கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லையாம்

தமிழக முதலமைச்சர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும் மாறு பட்ட கருத்து கிடை யாது. அனைத்துக் கட்சி களுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள் ளது. எனவே இதுகுறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்பது அர்த் தமற்ற செயல் என்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார். கர்நாடக குழு டில்லியில் ஆலோசனை காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர் பாக, கர்நாடக முதல மைச்சர் சித்தராமையா தலைமையில் டில்லியில் இன்று (10.6.2014) ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது. டில்லியில் உள்ள கர்நாடக பவனில் கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தேவகவுடா, சதானந்தா கவுடா, அனந்த் குமார், வெங்கய்ய நாயுடு, எடி யூரப்பா, ஜகதீஷ் ஷட்டர், குமாரசுவாமி, அம்பரீஷ் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் கர்நாடகாவின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, இந்த கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது. இன்று பிற்பகலில், கர்நாடக குழுவினர், பிரதமர் நரேந் திர மோடியை சந்தித்து முறையிட உள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/81896.html#ixzz34FBOXHKc

தமிழ் ஓவியா said...


அபவ்ருஷம்வேதம் என்பது எப்போது, யாரால் சொல்லப்பட்டது என்பதை மறைப்ப தற்காகவே அது அனாதி என்றும், மனிதனால் சொல்லப்படாத அபவ் ருஷம் என்றும் சொல்லப்படுகிறது.
(விடுதலை, 8.3.1953)

Read more: http://viduthalai.in/page-2/81908.html#ixzz34FBfM65G

தமிழ் ஓவியா said...


ஜூன் 10 குமிழ்முனைப் பேனா தினம்


எழுதுகோல் சுமேரிய நாகரிகத்தில் இருந்து நாணல் முனைக்கொண்டு எழுத ஆரம்பித்தது. அதுதான் உலகின் முதல் எழுதுகோல் என்று அறியப்படுகிறது, அப்படி ஒரு நாணல் எழுதுகோல் இன்றும் பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளது. அதற்கு முன்பும் கற்கால மனிதர்கள் கரிக்கட்டைகளைக்கொண்டு சித்திரங்கள் வரைந்திருக்கின்றார்கள்.

கிருஸ்துவிற்கு முன்பே அலெக் சாண்டர் காலத்தில் எழுதுவதின் மதிப்பு உலகிற்கு தெரிய ஆரம்பித்துவிட்டது. தாவர சாற்றில் செய்யப்பட்ட மசி(மை)யில் இருந்து மயிலிறகு, அன்ன இறகு, சில வகை மரக்குச்சிகள் கொண்டு எழுத ஆரம்பித்தனர். எழுதுகோலைப் பொறுத்தவரை சீனர்கள் தான் இதிலும் முதலிடம் வகிக்கிறார்கள். கிமு 7-ஆம் நூற்றாண்டில் சிறிய மூங்கில் தண்டில் மை ஊற்றி அதன் முனையை மிகவும் சிறிதாக துளையிட்டு அதில் மை வடிவதுபோல் செய்து எழுதத் துவங்கினர். இது பட்டுப் பாதை என்ற புகழ்பெற்ற Silk Route மூலம் அய்ரோப் பாவிற்கு சென்றது. கிருஸ்து பிறந்த போதே மூங்கில் குழாய் முனை வெங்கலமாக மாற்றப்பட்டு எழுதுகோலாகிவிட்டது என்று உறுதியற்ற தகவல் தெரிகிறது.

ஆனாலும் கிருஸ்து பிறந்து 79 ஆண்டுகளுக்கு பிறகு வெங் கல எழுதுகோல் உபயோகத்தில் இருந்தது பற்றிய பல தகவல்கள் கிடைத்துள்ளன. நமது நாட்டில் எழுதுகோல் மரக் கட்டைகளில் இரும்பு ஆணிகளைக் பதித்து எழுதும் முறை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உள்ளது. தூய சவேரியார் வந்த 16-ஆம் நூற்றாண்டில் தான் இரும்பு உருளை முனை எழுது கோல் (pen) உபயோகம் இந்தியாவில் வந்தது. மை ஊற்றி எழுதப்படும் எழுதுகோலி னால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. நீண்ட காலமாக இதற்கு நிவாரணம் தேடினார்கள். பிரபல வானியல் அறிஞர் கலிலியோ தான் நமது பால்பாய்ண்ட் பேனாவின் தொழில் நுட்பம் பற்றிக் கூறினார். அதன் பிறகு ஜோன் லோட் என்பவர் நேர்த்தியான குமிழ்முனைப் பேனா (Ball point pen) 1888-ஆம் ஆண்டு உருவாக்கினார். இதில் சிறப்பு என்னவென்றால் இவர் காகிதத்தில் எழுத பேனாவை உருவாக்கவில்லை. தோல் பொருட்களில் அடையாளம் இட இந்தபேனாவைப் பயன்படுத்தினார்.

அதன் பிறகு பல்வேறு நபர்களால் வடிவமைக்கப்பட்டாலும் தோல்வி யையே தழுவினர். 1943-ஆம் ஆண்டு லாஸ்லூ மற்றும் ஜார்ஜ் லாஸ்லூ போன்றோர் அனைத்து பாதங்களையும் நீக்கி ஜூன் 10-ஆம் தேதி இன்று பயன்படுத்தும் பால்பாயிண்ட் பேனாவை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்து பேனா விரும்பிகளால் இந்த நாள் The ballpoint pen day) குமிழ் முனைப்பேனா தினம் என அறிவிக்கப் பட்டு பேனாவின் உருவாக்கத்திற்காக உழைத்த அனைத்து அறிஞர்களையும் நினைவுபடுத்தி பெருமைப்படுத்து கிறார்கள்.

- சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/81912.html#ixzz34FBoh4Iy

தமிழ் ஓவியா said...


பேச்சே இவரது மூச்சு


உலக ஊடகங்கள், முன்னணி பத்திரிகைகளால் ஆற்றல் மிக்கவர், செல்வாக்கு உள்ளவர், சக்தி வாய்ந்தவர் என்று பாராட்டப்பட்ட ஒரு பெண். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகச் சிறு வயதிலேயே பாலியல் கொடுமைகளை எதிர்கொண்டவர்.

ஆனால், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைத் தலைகீழாக மாற்றி, உலகப் பிரபலங்கள் எல்லாம் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படமாட்டோமா என்று ஏக்கப்பட வைத்தவர். இந்தப் பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஓப்ரா வின்பிரே.

உலகின் மிகுந்த செல்வாக்கான பெண் இவராக இருக்கலாம் " என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பாராட்டப்பட்டவர். அதே ஓபாமா முன்னால் கால் மேல் கால் போட்டு உரையாடக்கூடிய சகஜத்தை ஓப்ரா பெற்றிருந்தார். இதற்குக் காரணம் உலகின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளராக அவர் இருந்ததுதான்.

அவருக்கு முந்தைய தலைமுறை யில் சினிமா நடிகர், நடிகைகள் பெற்றிருந்த புகழை டிவி மூலம் பெற்றவர் ஓப்ரா. 25 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்த தி ஓப்ரா வின்பிரே டாக் ஷோ'வை நிறுத்துவது பற்றி யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்த நிகழ்ச்சி அவ்வளவு புகழ் பெற்றவை.

நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது, அவருடைய ஆண்டு வருமானம் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல். இப்படி உலகப் புகழ் பெற்றவராகவும், பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் இருக்கும் ஓப்ரா, சிறு வயதில் தனக்கு நேர்ந்ததைப் போல மற்றக் குழந்தைகளுக்கு நேரக்கூடாது என்பதில் உறுதிகொண்ட வராக இருந்தார். தனது பணத்தில் பெரும் பகுதியைக் கறுப்பின ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்குச் செலவிட்டுவருகிறார்.

அதற்குக் காரணம் இருக்கிறது. வறுமை காரணமாகச் சிறு வயதில் பல நேரம் கோணிச் சாக்கே அவரது உடையாக இருந்திருக்கிறது. அப்போது பாட்டி வெர்னிடா லீயிடம் வளர்ந்தார் ஓப்ரா. அவர் அடிக்கடி வீட்டு வேலைக்குப் போய்விட்டதால், பிறகு தந்தையிடம் விடப்பட்டார்.

அங்கு நெருங்கிய உறவினர்களாலேயே பல முறை பாலியல் வன்முறைக்கு உள்ளானார். கறுப்பினப் பெண்களுக்கு அதுவே அன்றைய நியதியாக இருந்தது. பிறகு காதல் கொண்டவருடன் 14 வயதிலேயே தாயானார். ஆனால், சில நாட்களில் அக்குழந்தையைப் பறிகொடுத்தார்.

மற்றொருபுறம், சிறு வயதில் இருந்தே ஓப்ராவின் பேச்சுத்திறமையும், வாசிப்பும் மேம்பட்டிருந்தன. இந்த இரண்டையும் கொண்டு சமூகம் அவர் மீது குத்திய ஒவ்வொரு முத்திரையையும் தகர்க்க ஆரம்பித்தார்.


தமிழ் ஓவியா said...

பேச்சுத் திறமை மூலம் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே 19 வயதில் ரேடியோ செய்தி வாசிப்பாளர் ஆனார். அந்த வருமானமும் போதாத நிலையில், அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டதன் மூலமாகக் கிடைத்த தொகை மூலம் கல்லூரி கட்டணங்களைச் செலுத்தினார்.

கொஞ்ச காலத்தில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தார். அமெரிக்காவில் அந்தக் காலத்தில் ஊரின் வாயை அடக்குவதற்காகக் கறுப்பினப் பெண்கள் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும் அவர்களுக்கு, முக்கியப் பொறுப்பு கள் வழங்கப்பட்ட தில்லை. ஆனால், ஓப்ரா அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், தன் இயல்பான கடும் உழைப்பைச் செலுத்தினார்.

புகழ்பெற்ற பேச்சு

அடுத்து பால்டிமோர் தொலைக்காட்சி நிலையத்தில் வேலை பார்த்தபோது எப்படி பேட்டிகளை எடுப்பது, வி.அய்.பிக் களிடம் எப்படி தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டார். 1984இல் ஏ.எம்.சிகாகோ தொலைக்காட்சி நிறுவனமே, ஓப்ராவை வேலைக்குச் சேர அழைத்தது.

அங்கேதான் தனது அடையாளமான டாக் ஷோ நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அது மிகப் பெரிய ஹிட். அப்போது புகழ்பெற்றிருந்த பில் டொனாகு டாக் ஷோ'வை அது விஞ்சியது. டாக் ஷோவைத் தொகுத்து வழங்குவதில் தனி ஆளுமையாக வளர்ந்த பின் ஹார்ப்போ புரொட சன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, தனது நிகழ்ச்சி களைத் தானே தயாரித்தார்.

நலப்பணிகள்

தனது வருமானத்தின் பெரும் பகுதியை ஏஞ்சல் நெட்வொர்க் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார். கறுப்பினக் குழந்தைகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினாலும், இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் குழந்தைகளின் படிப்புக்கும் அவர் உதவி வருகிறார்.

தென்னாப்பிரிக்காவில் ஓப்ரா வின்பிரே பெண்கள் தலைமைப்பண்பு அமைப்பை நடத்தி வருகிறார். கறுப்பின மாணவிகளின் ஆளுமைப் பண்பை வளர்க்கும் கல்வி நிறுவனம் அது.

ஓப்ராவின் வார்த்தைகளிலேயே அவரது வாழ்க் கையைச் சொல்வதென்றால், இந்த உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது தெரியுமா? ஒருவர் தனது அணுகு முறையை மாற்றிக்கொண்டால் தங்கள் வாழ்க்கையையே மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான்.

போராட்டம் இல்லையேல் வலிமை நமக்குக் கிடைக்காது. உங்கள் மனக்காயங்களைப் புத்திக்கூர்மையாக மாற்றுங்கள். அதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம்"

Read more: http://viduthalai.in/page-7/81929.html#ixzz34FCdQYbl

தமிழ் ஓவியா said...


கணித மேதை ஆன கவிஞர் மகள் அகஸ்டா அடா பைரன்

1815 டிசம்பர் 10... லண்டனில் பிறந்தார் அகஸ்டா அடா பைரன். அவரது அப்பா புகழ்பெற்ற கவிஞர் லார்ட் பைரன். அம்மா அன்னபெல்லா மில்பேங்க். அடாவுக்கு 8 வயதானபோது பைரன் இறந்து போனார். அப்பாவும் இல்லை... அம்மாவிடமும் நெருக்கம் இல்லை... அடா பாட்டி வீட்டில் வளர்ந்தார்.

அதனால், அப்பாவைப் பற்றி நல்ல விஷயங்கள் எதுவும் அடாவுக்குச் சொல்லப்படவில்லை! 8 வயதில் அடாவுக்குத் தீராத தலைவலியும் பார்வைக் கோளாறும் ஏற்பட்டன. அதில் இருந்து மீண்ட பிறகு, அவருக்குக் கணிதமும் இசையும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார் அம்மா. ஆர்வமும் புத்திசாலித்தனமும் நிறைந்த அடா படிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டார்.

12 வயதில் கணினியின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் பாபேஜைச் சந்தித்தார் அடா. சார்லஸுக்கு அடாவின் புத்திசாலித் தனம் மிகவும் பிடித்துப்போனது. பறவையைப் போல மனிதனும் பறக்கும் முயற்சிகளைப் பற்றிப் பேசினார். அந்த விஷயம் அடாவுக்குப் பிடித்துப் போனது. 1828ல், அதன் முதல் படியாக இறக்கைகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

காகிதம், இறக்கைகள், பட்டுத்துணி போன்றவற்றில் பல்வேறு அளவுகளில் இறக்கைகளை உருவாக்கினார். பறவை எப்படிப் பறக்கிறது என்று ஆய்வு செய்தார். தான் கண்டறிந்த விஷயங்களை ஃப்ளையாலஜி என்ற பெயரில் ஓவியங்கள் நிறைந்த புத்தகமாக்கினார். இதோடு, பறக்கும் இயந்திரம் ஒன்றையும் வடிவமைத்தார் அடா.

20 வயதில் வில்லியம் கிங் என்ற அரசரைத் திருமணம் செய்துகொண்டார் அடா. காலரா, ஆஸ்துமா, ஜீரணக் கோளாறு என்று அடாவின் உடல்நிலையில் தொடர்ந்து பாதிப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. கணவர், குழந்தைகளோடு, நோயையும் சமாளித்துக்கொண்டு, தன்னுடைய ஆய்வையும் தொடர்ந்துகொண்டிருந்தார் அடா.

சார்லஸ் பாபேஜ் கணிதச் சமன்பாடுகளுக்கான ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்திருந்தார். அது முழுமை அடைவதற்குள் அனாலிடிக்கல் இன்ஜின் என்ற புதுக் கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அவருடைய புதிய திட்டத்துக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கவில்லை.

அனாலிடிக்கல் இன்ஜின் பற்றிய கட்டுரையை மொழி பெயர்க்கும் வாய்ப்பு அடாவுக்குக் கிடைத்தது. பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு அடா மொழி பெயர்த்த அந்தக் கட்டுரையில், அவருடைய கருத்துகளும் சேர்ந்து இடம்பெற்றன. 1843இல் அறிவியல் பத்திரிகையில் இந்தக் கட்டுரை வெளிவந்தது.

பல்வேறு கணித ஆய்வுகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த அடா, அனாலிடிக்கல் இன்ஜி னுக்கான அல்கோரிதங்களை எழுதினார்.

அதனால் உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என்று போற்றப் படுகிறார் அடா! வாழ்க்கை முழுவதும் நோய்களின் தாக்கத்தில் இருந்தாலும் கணிதவியலாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், கவிஞர் மட்டுமல்ல... நடனம், குதிரையேற்றம் போன்ற வற்றிலும் சிறந்து விளங்கினார் அடா. கருப்பை புற்றுநோயால் மிகுந்த வேதனைக்கு உள்ளான அடா, 36 வயதில் இறந்து போனார்.

Read more: http://viduthalai.in/page-7/81930.html#ixzz34FCktBjw

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பிரதமர் மோடிக்கு கலைஞர் வேண்டுகோள்

சென்னை, ஜூன் 10_தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது என்பது தொடர் கதையாக நீண்டு கொண்டே போகிறது. ஒரு நாளில் மட்டும் 82 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண் டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 56 பேரையும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட் டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்களையும் சிறை பிடித்ததோடு, அவர்களின் மீன் பிடிக்கும் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை அதிபரை தன்னுடைய பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து, இந்தியப் பிரதமர் பெருமைப் படுத்தினார். அவரும் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்ததோடு, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதாகத் தெரிவித்தார்.

அதற்குப் பிறகும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நிற்கவில்லை. இந்திய சிறையில் இருந்த இலங்கை மீனவர்களை மத்திய அரசும் விடுதலை செய்தது.

மேலும் இலங்கைக் கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டி யடிப்பது, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவது, சிறைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக் கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெய லலிதா கடந்த காலத்தில் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை சிறை பிடித்ததும் கடிதம் எழுது வதைப் போல அல்லாமல், இந்த முறை சற்று மாறு தலாக எழுதியிருக்கிறார்.

கடந்த முறை மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது, பிரதமருக்கு இவர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து பிரதமர் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டதால், அனைத்து மீனவர்களும் இலங்கையில் நீண்ட நாட் களுக்கு சிறை வைக்கப்படாமல், உடனடியாக விடுவிக் கப்பட்டதற்காக முதலில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவருடைய வழக்கமான நடைமுறையை மாற்றிக் கொண்டு எழுதியிருக்கிறார்.

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏற்கெனவே 2 முறை 2 நாட்டு மீனவர் பிரதி நிதிகள் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியும் எந்த முடிவும் காணப்படவில்லை. மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகாவது, மீனவர்கள் கைது படலம் நிற்குமென்று எதிர்பார்த்ததற்கு மாறாக, நீடித்துக் கொண்டே போகிறது.

எனவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மீனவர்களின் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உடனடியாக முன் வர வேண்டும்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/81909.html#ixzz34FD1vDrN

தமிழ் ஓவியா said...

முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!


- சிகரம்

முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.

சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!

100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!

ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?

இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?

படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.

40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.

மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?

பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!

நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!

பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.

தன் எதிர்காலத் திட்டத்திற்கு - இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.

முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?

அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?

கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.

ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.

விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.

98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?

98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?

தமிழ் ஓவியா said...

கால்நடைகள் குடைக்கு மிரளுவது ஏன்?


மாடுகள், விரிந்த குடையைக் கண்டால் மிரளும். இதுபோல வேறுசில பிராணிகளும் பயம் கொள்ளும். இது ஏன் தெரியுமா?

ஏராளமான மிருகங்களுக்கு நிறத்தை அறிய முடியாது. ஒருசில பிராணிகள், சில வண்ணங்களை மட்டுமே அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவை. உதாரணமாக தேனீக்களுக்கு சிவப்பு வண்ணம் மட்டுமே தெரியும். ஆனால் அதுவும் சிவப்பாகத் தெரியாது,

கருப்பும் பழுப்பும் கலந்த நிறமாகத் தோன்றுமாம். இதுபோலவே கால்நடைகளுக்கு நிறம் அறியும் திறன் இல்லை. இருந்தாலும், குடையைக் கண்டவுடன் கால்நடைகள் மிரள்கிறது என்றால் சட்டென்று விரியும் குடை இயக்கத்தைப் பார்த்துதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழ் ஓவியா said...

அன்பு மடல்


செவ்வாய்க்குப் போன இந்திய ராக்கெட்


மங்கள்யான் விண்கலம்

பாசத்திற்குரிய பேத்திகளே, பேரன்களே,

என்ன நலமா? நீங்கள்தான் எவ்வளவு வாய்ப்புப் பெற்றவர்கள்! அவ்வளவு வசதிகளும், கண்டுபிடிப்புகளும், உங்களது அறிவை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் உதவிட எத்தனை எத்தனை புதுமையான நவீன அறிவியல் கருவிகள் விஞ்ஞான தொழில்நுட்பப் பெருவளர்ச்சிக் காலமான இக்காலத்தில் உங்களுக்குக் கிடைக்கிறது; கிடைத்துக் கொண்டே இருக்கிறது!

முன்னொரு காலத்தில் தொலைப்பேசி என்றால் என்னவென்று தெரியுமா?

வீடியோ காட்சிகள் என்றால் விளங்குமா?

மாயாஜால வித்தைகளையும், கதைகளையும் தானே எங்கள் பாட்டி, தாத்தாமார்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்...

ஆனால், இப்போ... அப்படியா?

நீங்கதானே எங்களுக்கு எப்படியெல்லாம் கைத்தொலைப்பேசிகளை (செல்போன்களை) அழுத்தி, எதை எதைப் பேசுவது என்று கற்றுத் தருகிறீர்கள்!

இப்போதெல்லாம் தாத்தாக்கள் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தது போக, பேரக் குழந்தைகள் அல்லவா தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாக்களுக்குக் கற்றுத் தருகிறார்கள், தொழில்நுட்பம் அடங்கிய பல செய்திகளை!

எனவே, இக்காலமும், இனி வரக்கூடிய காலமும் குமர-குருபரர்கள் ஆன உங்களது பொற்காலங்கள்தான்!

நம் தங்கத் தாத்தா பெரியார் தாத்தா அவர்கள்,

இனிவரும் உலகம் என்ற ஒரு பேச்சு (அது புத்தகமாகவும் வந்துள்ளதே) அதில் இப்போது வந்துள்ள கைத்தொலைப்பேசி காணொளிக் காட்சிகள் (வீடியோ கான்பரன்சிங் - video Conferencing) பற்றியெல்லாம் சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னேயே சொல்லிவிட்டார்களே!

என்ன ஆச்சரியம்!

இப்போது நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் எவ்வாறு பரப்பப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு உதாரணம்.

நல்ல நாள்; நல்ல நேரம்; என்றெல்லாம் பார்த்து (புரட்டர்கள் பிழைக்க இது ஒரு வழி) நமது நேரத்தில் முக்கியமான பகுதியை வீணடிக்கிறார்கள்!

உழைக்கும் மக்களுக்கு எந்த மணித்துளியும் முக்கியமல்லவா? நேரத்தை - காலத்தை வீணடிக்கலாமா?


செவ்வாய் கிரகம்

செவ்வாய் என்றால் வெறும் வாய் அந்த நாளில் எந்தப் பணியைச் செய்தாலும் விளங்காது; வெற்றி பெறாது என்று சொல்லி நம்மை ஏமாற்றினார்கள், காலங்காலமாய்!

இப்போது அது வெறும் டூப்பு என்பது புரிந்துவிடவில்லையா குழந்தைகளே!

செவ்வாய்க்கோள் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளதே! அதற்கே ஒரு விண்கலத்தை _- ராக்கெட்டை _- நமது விஞ்ஞானிகள் ஆயிரம் பேர்கள் கடுமையாக உழைத்து வெற்றிகரமாக செலுத்திவிட்டார்களே!

அமெரிக்காகூட நமக்குப் பின்னால் நாசாவிலிருந்து தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது!

இதுவரை 2 லட்சம் மைல்கள் பயணம் செய்து போய்க்கொண்டே இருக்கிறது. (இதை எழுதும்வரை) அடுத்த டிசம்பர் ஒன்றாம் தேதி அங்கே போய்ச் சேருமாம்!

என்னே அற்புதச் சாதனை!

செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட அந்த விண்கலம்பற்றி சுவையான தகவல்கள் இதோ!


மார்ஸ் ஓபிடெர் மிஷன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் மங்கள்யான் விண்கலம் 450 கோடி இந்திய ரூபா செலவில் மார்ஸ் ஓபிடெர் மிஷன் திட்டத்தின் கீழ் இந்த மங்கள்யான் ஏவப்பட்டுள்ளது. இது உலகில் மிகக்குறைந்த செலவில் உருவான செய்மதித் திட்டமாகும். மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சிறீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்தக் காலத்திலும், மத்திய அரசின் தொல்பொருள் துறை, யாரோ சாமியார் கூறியதாகக் கூறி, தங்கவேட்டைப் புதையலை _- உத்தரப்பிரதேசம் உன்னா (Unno) என்ற இடத்தில் செய்து உலக அளவில் அவமானப்பட்டதுதான் மிச்சம்!

உலகமே நமது மத்திய அரசினைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிறது.

ஆனால், மங்கள்யானைச் செலுத்தியுள்ளதன் மூலம் அறிவியலின் வெற்றியை _ அறிவியலின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அன்புடன்,
உங்கள் தாத்தா
கி. வீரமணி

தமிழ் ஓவியா said...

டென்னிஸ் (Tennis)

அணிக்கு ஒருவர் என்று இருவரோ, அணிக்கு இருவர் என 4 பேரோ டென்னிஸ் விளையாட்டினை விளையாடுவர். இது ஒற்றையர், இரட்டையர் பிரிவு என்றழைக்கப்படுகிறது. சல்லடை மட்டையால் (ராக்கெட்) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி அரங்கத்திற்குள் விழுமாறு பந்தைத் தட்டி விளையாடும் விளையாட்டே டென்னிஸ்.

முதலில், கைகளால் பந்தினைத் தட்டி விளையாடியுள்ளனர். டென்னிஸ் மட்டையினைப் பிரான்ஸ் நாட்டினர் அறிமுகப்படுத்தினர். டென்னிஸ் என்பது பிரான்ஸ் சொல்லாகும்.

உலகில் மிக அதிக ரசிகர்களையும், வீரர்களையும் கொண்ட விளையாட்டுகளுள் டென்னிசும் ஒன்றாகும். இதன் விதிமுறைகள் 1875ஆம் ஆண்டு மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் வரையறுக்கப்பட்டன.

ஆடுகளம்

புல்வெளி, களிமண், செம்மண், கற்காரை(கான்கிரீட்), செயற்கைப் புல், மரப்பலகை என்ற இவற்றுள் ஒன்றால் தளம் அமைக்கப்பட்டிருக்கும். ஆடுகளத்தின் நீளம் 36 அடி (10.97 மீட்டர்), அகலம் இரட்டையர் ஆட்டத்திற்கு 78 அடி (23.77 மீட்டர்), ஒற்றையர் ஆட்டத்திற்குப் போடப்பட்ட கோட்டின் இருபுறமும் 14 மீட்டர் (4.5அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்குக் கோடு போடப்படும். ஆடுகளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீட்டர் (3அடி) உயரத்தில் நடுவலை அமைந்திருக்கும்.

பந்து

மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும் பந்தின் உட்புறம் காலியாக இருக்கும் ரப்பர் பந்து பயன்படுத்தப்படுகிறது. பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் கொண்டதாக இருக்கும். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளைக்கோடு போட்ட பந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சல்லடை மட்டை


ரோஜர் பெடரர்

இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை மட்டைகளுக்கு இல்லை. எனினும், போட்டிகளில் 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும் 31.8செ.மீ (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் உள்ள மட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. மட்டையின் தலைப்பகுதி (வலைப் பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும் 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் எடைக்கு வரையறை இல்லை.

சிறப்புப் போட்டிகள்


சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டரங்கம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஆகியன சிறப்புப் போட்டிகளாகும். 1877ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் என்னும் இடத்தில் முதன்முதலில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ட்லைட் எப் டேவிஸ் என்பவரால் தொடங்கப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது.

உலகத் தரம் வாய்ந்த டென்னிஸ் விளையாட்டரங்கம் நமது சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதில் பன்னாட்டு டென்னிஸ் விளையாட்டுகள் ஆண்டுதோறும் நடக்கின்றன.

தமிழ் ஓவியா said...

விலங்குகளும் விசித்திர உறக்கமும்!


மனிதன், தண்டுவடம் தரையில் படும்படி (அல்லது மெத்தையில் படும்படி) வைத்து மல்லாந்த நிலையில் தூங்குகிறான். சிலர் குப்புறக் கவிழ்ந்தும், சிலர் ஒரு பக்கம் சாய்ந்தும் உறங்குவார்கள்.

நம்மைப்போலவே பிராணிகள் ஒவ்வொன்றும் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. நாய், பூனை, மாடுகள் தூங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், நாம் கண்டு ரசிக்க முடியாத வினோதம் கொண்ட பிராணிகள் பல உள்ளன. அவைபற்றி இங்கே...

பாம்பு இனங்கள் உடலை வளையம்போல சுருட்டி அதன் மீது தலைவைத்துப் படுத்திருக்கும், ஆனால், உறங்கும் போதும் பாம்புகளின் கண்கள் திறந்தே இருக்கும்.

மான்கள் நின்று கொண்டும், படுத்த நிலையிலும் உறங்கும். சில வகை மான்கள், தூங்கும்போது சுவாசத்தின் மூலமே எதிரிகள் நெருங்குவதை அறிந்து கொள்ளும்.

வாத்து தரையில் நின்று கொண்டும், நீரில் நீந்திக் கொண்டும் உறங்கும் ஆற்றல் பெற்றது.

யானைகளும் குதிரைகளும் நின்று கொண்டேதான் உறங்கும்.

இவை எல்லாவற்றையும்விட விசித்திர தூங்கும் பழக்கம் கொண்டன எறும்புகள். மண்ணில் அழகான மணல் மெத்தைகளை உருவாக்கி, மல்லாந்த நிலையில் உடலோடு கால்களை ஒட்டி வைத்து ஒய்யாரமாய் உறங்கும். சுறுசுறுப்பான எறும்புகள் சுமார் 3 மணி நேரம் ஓய்வெடுக்கும்.

- தகவல்: இ.ப.இனநலம், 9ஆம் வகுப்பு, பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்

தமிழ் ஓவியா said...

“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்...?


“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?

“சூதாடிய குற்றத்துக்காகவா?

கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்கா கவா?

கொள்ளைக் குற்றத்துக்காகவா?

கொலைக் குற்றத்துக்காகவா?

மோசடிக் குற்றத்துக்காகவா?

பல வந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?

பதுக்கல் – கலப்படம் குற்றத்துக்காகவா?

சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?

என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்!

மறியல் செய்தேன்!

சிறை சென்றேன்!

சர்க்கார் கண் விழிக்கவில்ல.

ஆகவே,

சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது

இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா,

என்று கருதி அதைச் செய்தேன்.

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா ?

எந்தப்பொருளுக்கேனும் நாசமுண்டா?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால்,

இதை நான் மகிழ்ச் சியுடன் வரவேற்க வேண்டாமா?

‘சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ்செய்தான்’

என்பதைவிடப் பெரும்பேறு, முக்கியக் கடமை,

வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும்

உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

– பெரியார், (விடுதலை 09-11-1957)

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......


வால்மீகி ராமாயணத் தில் பாலகாண்டம் 18 ஆவது சர்க்கத்தில் இராமன் பிறந்த நாள்,

நட்சத்திரம் அப்போதி ருந்த கிரக நிலைகள் ஆகியவற்றைக் குறிப் பிட்டு ஜாதகம் கணித் திருக்கிறார் வால்மீகி.

சித்திரை மாதம் வளர் பிறை நவமியில் ஆதித்ய வாரத்தில், மாத்யானிக வேளையில், புனர் வஸு நட்சத்திரம் 4 ஆம் பாதம் சந்திரன் ஆட்சியி லும், குரு உச்சத்திலும் அமைந்த கடக ராசியில், கடக லக்னத்தில் ஸ்ரீராமன் ஜனனம்.

கிரஹமாலிகா ஜாத கம், குரு, சந்திர யோகம், சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி உச்சம், இத் தகைய ஜாதகர்கள் மனி தருள் தெய்வமாக மதிக் கப்படுவார்கள் என்று பிர ஹத் ஜாதகம் கூறுகிறது.

- சக்தி, விண்மணி,

இந்த ஜாதகப்படி இராமன் தெய்வமாக மதிக்கப்படுவார் என்று கூறுவது உண்மை என் றால், இராமன் ஏன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றான்? சராயு நதி யில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான்?

Read more: http://viduthalai.in/e-paper/81950.html#ixzz34Nn4cgPc

தமிழ் ஓவியா said...


தமிழ் கட்டாய மொழிப்பாடம் என்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தல்


சென்னை, ஜூன் 11_ அடுத்த கல்வியாண்டில் (2015_20-16) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாய மொழிப்பாடமாக இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலி யுறுத்தினர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் சார்பில் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கட்டாய மொழிப்பாடமாக தமிழ் என்ற தலைப்பில் கருத்த ரங்கம் சென்னையில் திங் கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில், தமிழைக் கட்டாய மொழிப் பாடமாக பத்தாம் வகுப்புத் தேர்வில் எழுதச் செய்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழக அரசு உறுதியுடன் எதிர் கொண்டு வரும் 2015--_2016-ஆம் ஆண்டில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக பயிலுவதையும், தேர்வு எழுதுவதையும் உறுதி செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத் துக்குமரன் பேசியதாவது: தமிழகத்தில் வசிப்பவர் கள் தமிழ் படிக்க வேண் டும் என்று சொல்வதற்கு நீதிமன்றமோ, சட்டமோ தேவையில்லை.

அடுத்ததாக, தமிழ் இலக்கியத்தை ஏன் படிக்க வேண்டும் என்றால் ஒரு மொழியின் இலக்கியத் தைப் படித்தால்தான் அந்த மக்களைப் புரிந்துகொள்ள முடியும். தமிழர்களின் பழக்க வழக்கங்களைப் புரிந்து கொள்ளவேண்டு மானால் தமிழ் இலக்கியங் களைப் படிக்கவேண்டும்.

நம்மை நாம் புரிந்து கொள்வதற்கும், இங்கு வாழ்வதற்கும் தமிழ் படிக்க வேண்டியது அவசியம்.

இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையைப் பெற ஆங்கிலம் மட்டும் தெரிந் தால் போதாது. ஆங்கிலேய பண்பாட்டைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இருந் தால்தான் குடியுரிமையைப் பெற முடியும்.

தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருப்பதை உறுதிசெய்யக் கோரி இந்தக் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை நாம் மீண்டும், மீண்டும் வலி யுறுத்த வேண்டும் என்றார் அவர்.

சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பொற்கோ: பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்திய தால்தான் தமிழ் கட்டாய மொழிச் சட்டம் இயற்றப் பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான துணிச்சல் தனியார் பள்ளிகளுக்கு எங்கிருந்து வந்தது? தமிழ் பயிற்றுமொழிதான் நமது இலக்கு. தமிழைப் பயிற்று மொழியாக்குவதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்தவேண்டும். இத்தனை ஆண்டுகாலம் போராடியும் தமிழ் கட் டாய மொழி சட்டம் மட் டுமே இயற்ற முடிந்துள் ளது. அதையும் எதிர்ப் பதை எப்படி அனுமதிக்க முடியும் என்றார் அவர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு:

தமிழ் கட்டாய மொழிப் பாட சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடுத்துள்ள வழக் கில் கருநாடகத்துக்கு எதி ராக அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட் டியுள்ளனர். அந்த வழக்கு பயிற்று மொழி தொடர் பான வழக்கு. இது கட் டாய மொழிப்பாடம் தொடர்பானது. அந்த வழக்கில் அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டு பயிற்று மொழி முடிவு அமல்படுத்தப்பட்டது.

ஆனால், இங்கு தமிழ் கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்கிற சட்டம் 2006-இல் நிறை வேற்றப்பட்டு, அதற்கான செயல்வழிமுறைகளையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு வகுப் பாக எட்டு ஆண்டுகளில் இந்தச் சட்டம் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத் தப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண் டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தச் சட்டம் அமல் செய்யப்பட உள்ள நிலையில், இப் போது இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள் ளது.

இதுவரை இந்தச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/81951.html#ixzz34NnCmQs2

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை- பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

- (குடிஅரசு, 25.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/81958.html#ixzz34NnOi5Gx

தமிழ் ஓவியா said...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கூடாதா?வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தி யாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் பட்டியலினத்த வருக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறை கள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை ஆய்வு செய்ய இளையபெருமாள் என்பவரது தலைமையில் ஒரு குழுவை நாடாளுமன்றம் அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1989 இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995 இல்தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

இவ்வளவுக் காலதாமதமாக இந்தச் சட்டம் நடை முறைக்கு வந்தபோதிலும் இன்றும் இதனை நடைமுறைப் படுத்துவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர்.

மக்கள் தொகையில் 20 விழுக்காடு இருக்கும் தாழ்த்தப்பட்டோர், அதிக எண்ணிக்கையில் இருக்கும் உயர்ஜாதியினரின் கொடுமைகளைப்பற்றி புகார் கொடுக்கும்போதுகூட அதை தங்களது ஜாதிக்கு எதிரானதாக புகார் பெறும் அதிகாரிகள் பார்க்கின்றனர்.

இதன் காரணமாக பல்வேறு தளங்களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் வெளியுலகிற்கு வராம லேயே போகின்றன. நேர்மையான அதிகாரிகளை நியமித் தாலும் அரசியல் தலையீடு அந்த அதிகாரிகளைத் தங் களின் பணிகளைச் சரிவர செய்ய அனுமதிப்பதில்லை.

கிராமங்களில் மட்டுமா? மதுரை அரசு மருத்துவ மனையில் குறிப்பிட்ட சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருக்கும் மருத்துவப் பேராசிரியர், சக மருத்துவர்களால் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானதை டி.என்.ஏ. என்ற ஆங்கில நாளிதழ் மே 30 ஆம் தேதி செய்தியாக வெளியிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கர்ணன் அவர்களே, தான் அவமதிக்கப்படுவது குறித்து கூற வில்லையா?

தீண்டாமை ஒழிக்கப்படுகிறது - எந்த வடிவில் அது கடைப்பிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (17 ஆவது பிரிவு).

இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன. இன்னும் தேநீர்க் கடைகளில் இரண்டு கண்ணாடித் தம்ளர்கள் இருக்கத்தான் செய்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஒரு பள்ளியின் கல்வெட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் பெயர் இருந்ததால், ஆத்திரப்பட்ட உயர்ஜாதி ஆணவக்காரர்கள் அந்தப் பெயரைத் தார் கொண்டு அழித்திருக்கின்றனர்.

இந்தியா முழுமையும் எடுத்துக்கொண்டால்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தீண்டாமைக் கொடுமைபற்றிய புள்ளி விவரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் 8061, ராஜஸ்தானில் 5235, மத்தியப் பிரதேசத்தில் 4503, தமிழ்நாட்டில் 3505, ஆந்திரப்பிரதேசத்தில் 2088, குஜராத்தில் 1452, கருநாடகாவில் 1409, ஒரிசாவில் 1100, பிகாரில் 955, மகராஷ்டிராவில் 573, அரியானா 243.

இவை 2011-2012 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் - எடுத்துக்காட்டுக்காகக் குறிப்பிட்டுள்ளோம்.

உண்மைகள் நிதர்சனமாக இவ்வாறு இருக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதன் நோக்க மென்ன?

தமிழ் ஓவியா said...

இந்தச் சட்டம் சுயநலத்துக்காகப் பயன்படுத்தப்படு வதாகக் கூறப்பட்டுள்ளது; எந்தச் சட்டத்தையும் இந்த வகையில் பயன்படுத்தலாம். கொலைக்கே சம்பந்த மில்லாதவர்களைக்கூட பழிவாங்கும் நோக்கத்தோடு சாட்சிகளைப் புனைந்து வழக்குத் தொடுக்கப்படுவது கிடையாதா?

தந்தை பெரியார் அவர்களாலும், அவர் கண்ட இயக்கத்தாலும் விழிப்புணர்வு உண்டாக்கப்பட்ட தமிழ் மண்ணில்கூட, தருமபுரிகள் நடந்திருக்கின்றன. தாழ்த் தப்பட்ட ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதற்காக ஒரு கிராமமே எரிக்கப்படவில்லையா?

உண்மையிலேயே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த - தேவையில்லாத அளவுக்கு மக்களிடத்தில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தை ஆக்க ரீதியான செயல்பாடுகளை முன்னிறுத்துவதுதான் முற்போக்கான சிந்தனையாக, தீர்வாக இருக்க முடியும்.

அதை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவது புத்திசாலித்தனம் ஆகாது.

இன்னும் தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப் பட்டவர்களும் சரி, பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியினரும் சரி நம் நாட்டுக் கோவில்களில் அர்ச்சகர் ஆக முடியுமா? இது இன்னொரு வகை தீண்டாமை அல்லவா?

மிகவும் அவசியமான இதுபோன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், தீண்டாமையை விசிறிவிடும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

Read more: http://viduthalai.in/page-2/81960.html#ixzz34NnYGQr9

தமிழ் ஓவியா said...


மருத்துவர்களுக்கு பிறகு நோயாளிகளை பாதுகாப்பது செவிலியர்கள்தான் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி தமிழர் தலைவர் பாராட்டு


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, ஜூன் 11_ திருச்சி திருவெறும்பூரில் தந்தை பெரியார் முழு உருவ சிலை நிறுவப்பட்ட இடத்தில் பெரியார் படிப்பகமும், பெரியார் மருத்துவமனையும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் கீழ் செவி லியர்களுக்கான மருத்துவ பயிற்சி வகுப்புகள் நடை பெற்று வருகின்றன.

ஓராண்டு பயிற்சிக் கான 2013-_2014 கல்வி ஆண் டில் 40 மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 29 பயிற்சி முடித்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன்.10) பெரியார் மருத்துவமனை யில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கி உரையாற்றும் போது: செவிலியர் பணி என் பது நோயாளிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மருத்துவர்கள் கூட அவ ரது பணிகளை முடித்து விட்டு சென்றுவிடுவார் கள்.

ஆனால், செவிலியர் கள் அந்த நோயாளிக ளுக்கு அனைத்து உதவி களை செய்துகடைசி வரை உதவி வருபவர்கள் செவிலியர்கள் தான். பெரி யார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற செவிலியர் கள் மலர்ந்த மலர்களாகி யிருக்கிறார்கள்.

செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.

செவிலி யர்கள் பயிற்சி பெற்றது டன் நமது மருத்துவமனை யில் தொண்டாற்றியது டன் பொதுமக்களுக்கும் சிறந்த சேவை செய்ய வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் கடவுளை மற! மனிதனை நினை! என்று. அவர் செய்த தொண்டின் மிக முக்கியமானது மனித தொண்டு. இம்மனித தொண்டினை சிறப்பாக செய்து வரும் உங்களை பாராட்டுகிறேன் என்று பேசினார்.

முன்னதாக இப்பயிற்சி வகுப்பில் பயின்று சான் றிதழ் பெறும் மாணவிகள் சார்பில் மருத்துவமனை வளாகத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அருள்மொழி மாலை அணிவித்தார்.

இதில் மருத் துவர் ஜான்போஸ்கோ, பெரியார் கல்வி நிறுவனங் களின் ஒருங்கிணைப்பா ளர் பேரா.ப.சுப்ரமணியன், மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர் உள்பட அனை வரும கலந்து கொண்ட னர்.

இந்நிகழ்ச்சியில் மண் டல தலைவர் ஞா.ஆரோக் கியரார், பெல் தி.தொ.க. தலைவர் ம.ஆறுமுகம், செல்வம், சிங்கராஜ், விடுதலை கிருட்டிணன், காமராஜ், கனகராஜ், சங்கிலிமுத்து, பழனிவேல், தங்கப்பன், கருத்தகண்ணு, கருணாநிதி, கென்னடி, பாஸ்கர், பன்னீர்செல்வம், அசோகன், பால்சாமி, ஆசைத்தம்பி, திருவரங்கம் நகரத் தலைவர் மோகன் தாஸ், இளைஞரணி தோழர்கள் சண்முகம், தமிழ்ச்செல்வம், இளந் தமிழன், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மருத்துவ மனை ஊழியர்கள் புவ னேஸ்வரி, செல்வி,விமலா ஆகியோர் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் செவி லியர் படிப்பில் பயிற்சி பெற்று முதல் மதிப்பெண் களை பெற்ற கழகத் தோழர் ஜெயில்பேட்டை தமிழ்மணியின் சகோதரி இளையராணி ஆவார்.

அவர் இம்மதிப்பெண் பெற்றமைக்காக நாகம்மை குழந்தை இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

Read more: http://viduthalai.in/page-8/81991.html#ixzz34NoU76Gz