Search This Blog

12.6.14

வாஞ்சிநாதன் யார்? ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றதற்கான காரணம்!

வாஞ்சிநாதன் யார்?

வீரசாவர்க்கரின் படத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாடாளுமன்றத்தில் திறந்து வைத்து சாவர்க்கரை கவுரவப்படுத்தியுள்ளார். அது போல விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் படம் இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டப்பேரவையிலும் திறந்து வைக்க தகுதியானது.

இந்திய நாட்டுக்காக வாஞ்சிநாதன் இன்னுயிர் ஈந்த தினமான ஜூன் 17-ஆம் தேதி அவருடைய படத்தை தமிழக தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்து அவருடைய தியாகத்தை கவுரவப்படுத்துமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். மேலும், கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பீட்டர் அல்போன்ஸ் 2006-ஆம் ஆண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடையநல்லூர் அரசு பொது மருத்துவமனை முன் பேருந்து நிறுத்தம் அமைத்தார். அதன் மேற்கூரையில் பிற மாவட்டங் களைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலர் மற்றும் பொது மக்களுக்குத் தெரியாத சிலரின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால் அனைவரும் அறிந்த விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் படம் மட்டும் இல்லை. அங்கு வாஞ்சிநாதனின் படத்தை வைக்க நான் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. எனவே கடையநல்லூர் அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரையில் வாஞ்சிநாதன் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம் என  வாஞ்சி இயக்கம் என்ற அமைப்புக் கோரியுள்ளது.

ஆஷ் துரையைப் படுகொலை செய்த வாஞ்சிநாதனின் படத்தை சட்டப் பேரவையில் திறக்க வேண்டுமாம். இந்த எண்ணம் எப்படி தோன்றியது தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் மார்பளவு சிலையுடன் ரூ.50 லட்சம் மதிப்பில் வாஞ்சிநாதனின் மணி மண்டபத்தைத் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா திறந்து வைத்தார் (டிசம்பர் 2013). அல்லவா - அதுதான் தூண்டுகோலாகி விட்டது.

அது தொடர்பாக தமிழ்நாடு அரசால் செய்திக் குறிப்பு வெளியடப்பட்டது -  அது என்ன தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 1886ஆம் ஆண்டு பிறந்த புரட்சியாளர் வாஞ்சிநாதன், கல்லூரிப் படிப்பு முடிந்து, திருவிதாங்கூர் சமஸ்தானத் தில் வனத்துறையில் பணியாற்றி வந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் கவரப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் அய்க்கிய மானார். தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார்.

நீலகண்ட பிரம்மச் சாரியுடன் இணைந்து பாரத மாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பில் சேர்ந்தார். 1911 ஜூன் மாதம் 17ஆம் நாள் மணியாச்சி புகை வண்டி நிலையத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்தார். தமிழக அரசின் சார்பில், நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த, வாஞ்சிநாதன் நினைவைப் போற்றிடும் வகையில், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலையுடன் கூடிய மணி மண்டபத்தை, முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிச்சாமி, செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் கே.சி. வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

வாஞ்சிநாதன் யார் என்பதற்கு ஆதாரம்- ஆஷ் துரையைச் சுட்டுக் கொல்லுவதற்கு முன், அவன் தனது சட்டைப் பையில் எழுதி வைத்திருந்த கடிதமே தக்க ஆதாரம்.

“ஆங்கிலச் சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும், தற்காலத்தில் தேசியச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத் தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தா, அர்ஜுனன் முதலியோர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்,  கேவலம் கோ மாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெரு முயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக் கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நானும் இச்செய்கை செய்தேன். இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்  வாஞ்சி நாதய்யர்    Rvanchi Ayyar of Shencotta

இத்தகைய சனாதன - பார்ப்பனீய வெறி பிடித்த வாஞ்சிநாதன் படத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையில் வைக்க வேண்டுமாம்.
மத்தியில் ஒரு மதவாத அரசு என்பதால் தமிழ்நாட்டி லும் அதன் சாயலை எதிர்பார்க்கிறார்கள் - இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதுகிறார்கள். தமிழக முதலமைச்சர் இதற்கு இடந் தரக் கூடாது - கூடவே கூடாது!
                  -------------------------"விடுதலை” தலையங்கம் 12-06-2014
        

12 comments:

Seeni said...

பகிர்வுக்கு நன்றி..

தமிழ் ஓவியா said...

திருவவதாரம்

வைகையாற்றங்கரையில் மதுரை மாநகரத்திலி ருந்து ஏழு கி.மீ. தொலை வில் திருவாதவூர் என்ற தலம் உள்ளது. இத்தலத் தில் இறைவன் வாதபுரீசு வரர் என்னும் திருநாமத் தோடு எழுந்தருளியுள் ளார். இத்தலம் வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என வழங்கப் பெறுகிறது. இந்நகரில் அமாத்திய அந்தணர் குலத்தில் சிவநெறி பிற ழாச் சிந்தையாளராகிய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சம்புபாதா சிருதர்.

அவர் மனைவியாரின் பெயர் சிவஞானவதி என் பதாகும். இவ்விருவரும் இல்லறம் வழுவாது ஒழுகி வரும் நாளில் தென்னாட்டில் புறச் சமய மாகிய புத்தம் மேலோங்கி இருந்தது. சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறை வன் திருவருளால் இவ்விருவருக்கும், சைவம் தழைக்கவும், வேத சிவாகம நெறிகள் விளங்கவும் திருமகனார் ஒருவர் திரு அவதாரம் செய்தருளினார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து அம்மகனார்க்கு திருவாதவூரர் என்னும் திருப்பெயர்ச் சூட்டினாராம்.

மத மாற்றம் உள் ளிட்ட பிரச்சினைகளில் கூட கடவுள் தலையிடு வாரோ!

மதத்தைத் தாண்டி கடவுள் இல்லை என்கிறபோது கடவுள் மதத்தின் கைக்கருவி ஆகி விடவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/82012.html#ixzz34TarP8u0

தமிழ் ஓவியா said...


இராணுவ தளபதி சர்ச்சை சூடு பறக்கிறது!


மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்த நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி வி.கே. சிங்குக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பதவி ஓய்வுக் குப்பின் பிஜேபி.யில் சேர்ந்தவருக்குத் தேர்தலில் நிற்கவும் வாய்ப்புக் கொடுக் கப்பட்டது.

இராணுவம் போன்ற அதி முக்கிய துறைகளில் மிக உயர்ந்த பதவியை வகித்தவர் ஓர் அரசியல் கட்சியில் சேர்வதும், அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிப்பதும், தேர்தலில் வென்றபின் அமைச்சர் பதவி கொடுப் பதும் ஒழுங்குமுறைதானா? இராணுவத் துறைமீது அரசியல் வண்ணம் படியும் நிலை ஏற்படலாமா என்ற சர்ச்சை ஒரு பக்கம். (இவர் வயதுப் புகாரில் சிக்கிய வரும்கூட!)

அமைச்சரவையில் இடம் பெற்ற வி.கே. சிங் சும்மா இருக்கவில்லை; முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் போது இந்தியாவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட தல்பீர்சிங் சுஹாக்கைப்பற்றி டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதனை மிகவும் மோசமான நிலைப்பாடு என்று குற்றஞ் சாட்டினர். வி.கே. சிங் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லியோ அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி பதவியில் தொடர் வார்; மாற்றம் என்ற பேச்சுக்கே இட மில்லை என்று கூற முடிந்ததே தவிர, இந்தியாவின் இராணுவத் தளபதி பற்றி கடுமையான விமர்சனம் செய்த அமைச் சரின் நிலைப்பாடு குறித்து ஏதும் பேச வில்லை.

இதற்கிடையே இராணுவத் தளபதி தல்பீர்சிங் சுஹாக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத் திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத் தில் தயாரிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் இது. இது எப்படி நடந்தது என்று இராணு வத்துறை செயலாளர் ஆர்.கே. மாத்தூர் உட்பட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளாராம், பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி.
தொடக்கமே குழப்பக் கூத்து சும்மா தூள் பறக்கிறது - போகப் போக என்னென்ன நடக்குமோ - யார் கண்டது?

Read more: http://viduthalai.in/e-paper/82016.html#ixzz34Tb47Ek5

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை அரிச்சுவடி


1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சு மாறிகள் பேச்சு

2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி

3. இதிகாசம் என்பது - மதிமோச விளக்கம்

4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே.

5. ஊழ்வினை என்பது - ஊக்கத்தை கெடுப்பது.

6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம்

7. கல்லை தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம்

8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது

9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம்

10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல்

11. சூத்திரன் என்றால் - ஆத்திரங் கொண்டடி

12. திதி கொடுப்பது - நிதியைக் கெடுப்பது

13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்கு கேடு

14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க

15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற் கொள்ளைக்காரர்கள்

16. புராணங்கள் - பொய் களஞ்சியங்கள்

17. பேதமென்பது - வேதியருக் கணிகலம்

18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்

19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள்

20. மதக்குறி என்பது - மடையர்க்கறிகுறி

21. முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே

22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது

23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது

24. ஜாதி வேறுபாடு - ஜன சமூகத்திற்குக் கேடு

25. க்ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு

- குடிஅரசு 23.2.1930

Read more: http://viduthalai.in/page-7/82104.html#ixzz34ZTNEPXz

தமிழ் ஓவியா said...


பைபிள் படிப்பவர்கள் பதில் கூறுவார்களா?


ஆதியிலே தேவன் வானத்தையும்; பூமியையும் இன்னும் பலவற்றையும் படைத்து முடிவில் ஆதாம் - ஏவாள் எனும் இரண்டு பேரைப் படைத்தார்; (என்ன கஞ்சத்தனம் பாருங்கள்?) அவர்களுக்குக் காயீன், ஆபேல் எனும் இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்; இருவரும் கர்த்தருக்குப் பூஜை செய்தார்கள். ஆபேலின் பூஜையை கர்த்தர் ஏற்றுக் கொண்டார்; பொறாமை அடைந்த காயீன் ஆபேலைக் கொன்று விட்டான்.

கோபமடைந்த கர்த்தர் காயீனை நாடு கடத்தினார்; பிதாவே! அங்கிருப்பவர்கள் என்னைக் கொன்று விடு வார்களே என்றான் காயீன்.

காயீனை கொல்லும் எவர்பேரிலும், ஏழு பழிசுமக்கக் கடவது என்று கர்த்தர் அருளினார், இது பைபிள் சொல்கிற கதை; முதலில் கர்த்தர் படைத்தது ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர், அவர்களின் பிள்ளைகள் இருவர்; ஆக மொத்தம் நாலே பேர்; அதிலும் ஒருவன் இறந்து விட்டான்; பாக்கி இருப்பது மூன்றே பேர்; அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? ஒரு வேளை இந்துக்கள் இருந்தார்களா? கிறிஸ்தவர்களை மட்டும்தான் படைத் தாரா? அல்லது படிப்பவர்கள் தான் மடையர்களா?

தகவல்: ச.ராமசாமி, சென்னை-18

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZTeraAY

தமிழ் ஓவியா said...


இந்துமதம் - சங்கரமடங்கள் பற்றி ஜெயப்பிரகாஷ் நாராயண்


ஒரு இந்துவை இனம் குறிப்பது வேதாந்தம் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ரஷ்யர் அல்லது ஒரு ஜெர்மானியர் வேதாந்தியாக இருக்கலாம். ஆனால், அவர்களை இந்துக்கள் என்று யாரும் கருதுவது இல்லை.

ஜாதியும், தீண்டாமையும் மட்டுமே ஒரு இந்துவை இனம் காட்டுபவை அல்ல. ஆனால், வழக்கங்கள், சடங்கு கள், அனுஷ்டானங்கள். கற்களை, மரங்களை, மிருகங் களை நாம் வழிபடுவது, கர்ம காண்டம் என்பது - ஆகியவைகளே ஒரு இந்துவை இனம் காட்டுகின்றன.

படு பயங்கரமான சிக்கலாகக் சிக்கிக் கிடக்கும் இந்த வலைதான் இந்து சமுதாயத்தை பிணைத்து வைத் திருப்பது. அத்துடன் இந்து சமுதாயத்தின் தார்மீக, பொரு ளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருப்பது இதுவே ஆகும்.

இந்தநாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பரந்து பட்டுக் கிடக்கும் எண்ணற்ற சங்கர மடங்களைப் பாருங்கள். அவை குருட்டுப் பழைமை வாதத்தின் குகைகளாக மட்டுமா இருக்கின் றன? பச்சையான சுரண்டல்களாக வும் அல்லவா இருக்கின்றன?

இந்து மதத்தின் உச்சக்கட்ட உறைவிடங்களான சங்கர பீடங் களையே எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கே பதவி வகித்துக் கொண்டிருப்பவர்களில் குறைந்த பட்சம் ஒரு சங்கராச்சாரியாவது (பூரி) குருட்டுப் பழைமை வாதத்துக்கும், வெறிபிடித்த ஆச்சாரத்துக்கும் முன் மாதிரியாக விளங்கவில்லையா? இந்த டில்லிப் பட்டணத்தையே சில ஆண்டுகளுக்கு முன்னால் அவமானத்துக் குள்ளாக்கிய பசுவதைத் தடை போராட்டத்துக்குப் பின்னால் இருந்து தூண்டிவிட்ட சக்திகளில் இவரும் ஒருவர் என்பது நினைவில் கொள் ளத்தக்கது. நம்முள்ளே நாம் திறந்த உள்ளத்துடன் இருப்போம்.

நமது சமுதாயம் சீரழிந்து கொண் டிருக்கும் ஒரு சமுதாயம். நமது சமுதாயத்தைப் பிடித்துக் கொண் டிருக்கும் ஒட்டடைகளிலிருந்து அதை விடுவிக்கவும், அதை சுத்தப் படுத்தவும் ஒரு புதிய புத்தனே தேவைப்படுகிறான் என்பதை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுவோம்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ், 20.9.1972)

Read more: http://viduthalai.in/page-7/82102.html#ixzz34ZTyauQb

தமிழ் ஓவியா said...

பாதிரி காட்டிய படங்கள்

பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப்பட்டி ருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.

ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக்கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார்.

அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கையில்லாதவர்கள், ஆண்டவனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.

Read more: http://viduthalai.in/page-7/82103.html#ixzz34ZUOOw5F

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZVD44QV

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? விநாயகரின் சிறப்புத் தலங்கள்பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் விநாயகர் முதற் கடவுளாக இருப்பார். ஆனால் விநாயகர் வழிபாட்டுக்கு என்றே அமைந்த சிறப்பு வாய்ந்த தலங்கள் சில தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

கற்பக விநாயகர் கோயில் - பிள்ளையார் பட்டி, பிரளயம் காத்த விநாயகர் - திருப்புறம் பயம், பொல்லாப்பிள்ளை யார் - திருநாரையூர், முக்குறுணி விநாயகர் - மதுரை, ராஜகணபதி - சேலம், ஈச்சநாரி விநாயகர் - பொள்ளாச்சி, மணக்குள விநாயகர் - புதுச்சேரி, இரட்டை விநாயகர் - தாடிக்கொம்பு, லட்சுமி கணபதி - குன்றக்குடி முருகன் கோவில் என் கிறது ஓர் ஆன்மீக இதழ். கடவுள் உருவமற்றவர் - வழி பாட்டுக்காகத்தான் உருவச்சிலைகள் என்று சமாதானம் கூறும் ஆன்மீகச் சிரோன்மணிகள், இப்படி சில ஊர்களின் பெயர்களைச் சொல்லி அந்த ஊர்களில் உள்ள உருவச்சிலைதான் (கடவுள்தான்) பிரசித்தம் என்பது முரண்பாடு அல்லவா?

Read more: http://viduthalai.in/e-paper/82066.html#ixzz34ZVQR0Lm

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


கடவுள் சக்தி இவ்வளவுதான்!
சாமி கும்பிடுவதற்காக வந்த 4 பேர் பலி

தலைவாசல், ஜூன்.13- சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே உள்ள ஆறகளூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் அம்பாயிர அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடு வதற்காக கோவை பி.என்.புதூரை சேர்ந்த சமையல் காண்டிராக்டர் மாதேஸ் என்பவர் தனது உறவினர்களுடன் 2 வேன் களில் நேற்று ஆறகளூர் வந்தார்.

காலையில் அவர்கள் கோவிலில் பொங்கல் வைத்து அங்கேயே சாப் பிட்டனர். இவர்களுடன் வந்த ராஜி என்பவரின் மகன் சஞ்சய் (வயது 13), சேகர் என்பவரின் மகன் செந்தில் (16) ஆகிய 2 பேரும் பி.என்.புதூரில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 9-ஆம் வகுப்பும், பிளஸ் 1-ம் படித்து வந் தனர். முருகன் என்ப வரின் மகன் விவேக் (19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். மதியம் 2 மணியளவில் இவர்கள் 3 பேரும் விளை யாடுவதற்காக வசிஷ்ட நதிக்கு சென்றனர்.

கடந்த சில நாட் களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வசிஷ்ட நதியில் நீர்வரத்து ஏற் பட்டு ஆங்காங்கே தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதைப் பார்த்த 3 பேருக்கும் அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினார் கள். சிறிது நேரத்தில் 3 பேரும் ஆழமான பகு திக்கு சென்று விட்டதாக தெரிகிறது. நீச்சல் தெரி யாததால் அவர்கள் தண் ணீரில் மூழ்கினார்கள்.

தண்ணீரில் தத்தளித்த படி உயிருக்கு போராடி னார்கள். இதைப்பார்த்த செந்திலின் தந்தை சேகர் தண்ணீரில் இறங்கி அவர் களை காப்பாற்ற முயன் றார். ஆனால், அவரால் முடியவில்லை. மாறாக அவரும் ஆழமான பகு திக்கு சென்றதால் தண் ணீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரி ழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு உடல் பரிசோத னைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82065.html#ixzz34ZVYzpXA

தமிழ் ஓவியா said...


பெண்களை அர்ச்சகராக்க அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் பந்தர்பூர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம்பூனா.ஜுன்.13-_ 900 ஆண்டு கால பழமை வாய்ந்த பந்தர்பூர் வித்தல் ருக்மணி கோயிலில் அர்ச் சகர் பணியில் பார்ப் பனர்களே இருந்துவந்துள் ளனர். அந்தக் கோயி லுக்கான வித்தல்-ருக்மணி கோயில் அறக்கட்டளை நிர்வாகம் பார்ப்பனர்கள் அல்லாத மற்றவர்களையும், குறிப்பாக பெண்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்தது. அதன்படியே விளம் பரங்கள் அளிக்கப்பட்டன. அர்ச்சகர்கள் பணிவாய்ப்பு கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 16பெண்கள் உட்பட 129பேர் நேர் காணலுக்கு அழைக்கப் பட்டனர். உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பு கடந்த சனவரியில் வழங்கப்பட்டு அதன்படியே இரு (பார்ப்பனக்) குடும்பத்தவர் களின் ஆதிக்கத்திலிருந்து அர்ச்சகர்பணி விடுவிக்கப் பட்டு அறக்கட்டளை நிர்வாகம் நேர்காணலை நடத்தி உள்ளது குறிப் பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் பக்தர்கள் திரளும் அந்தக் கோயிலுக்கு வர்காரி பிரி வைச் சேர்ந்த பக்தர் களேஅதிக அளவில் பக்தர்களாக உள்ளனர்.

இதனிடையே அறக் கட்டளை நிர்வாகத்தை எதிர்த்து வர்காரி அமைப் பினர் போராட்டம் நடத்தி உள்ளனர். வர்காரி சாகித்ய பரிஷத் என்கிற அமைப்பின் சார்பில் விட்டல் பாடீல் என்பவர் கூறும்போது: பார்ப்பனர் அல்லாதவர்களையும், பெண்களையும் அர்ச்சக ராக நியமிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே போல் நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. எல்லோ ரையும் சமமாக மதிக் கிறோம். பழமையான விஷ யங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது வர்காரி பிரிவினரையும் கலந்தா லோசிக்க வேண்டும். கோயிலின் அறக்கட்டளை நிர்வாகத்தில் வர்காரி பிரி வினருக்கு இடமளிக்கும வகையில் அறக்கட்டளை நிர்வாகம் மாற்றி அமைக் கப்பட வேண்டும் என்று கோருகிறோம் என்று கூறினார்.

அறக்கட்டளைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமாகிய அன்னா டாங்கே (இவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பாகிய தன்கர் வகுப்பைச் சேர்ந்தவர்) கூறும்போது, வேகமான முன்னேற்றத்துக்கிடையே விரும்பத்தகாத நிலையில் அரசின் இடையூறு உள் ளது. அரசே மீண்டும் நிர் வாகத்தின் நடவடிக்கைக்கு மீண்டும் உறுதியை அளிக் கும் என்று எதிர்பார்க் கிறோம் என்று டாங்கே கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82061.html#ixzz34ZVhwyyD

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது.
(விடுதலை,5.4.1961)

Read more: http://viduthalai.in/page-2/82067.html#ixzz34ZW3Glge