Search This Blog

2.6.14

தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள் - பெரியார்

 
தோழர்களே! சாகத் துணிவு கொள்ளுங்கள் 

இந்தத் திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்து தலைமை முன்னுரை நிகழ்த்துவது என்கின்ற சம்பிரதாய நிகழ்ச்சிப்படி நான் ஏதாவது பேசவேண்டும். அப்படிப் பேசுவதில் திராவிடர் என்பதுபற்றியும், நீங்கள் பெரிதும் இளைஞர்கள் ஆனதால் நானும் முதியோனாய் இருப்பதால் உங்களுக்குச் சிறிது அறிவுரை வழங்குவது என்கின்ற தன்மையிலும் சில வாக்கியங்கள் சொல்வது பொருந்துமெனக் கருதுகிறேன்.

நாம் திராவிடர்

நாம் நம்மைத் திராவிடர் என்று ஏன் சொல்லுகிறோம்?
இந்த நாடு திராவிட நாடு, நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந்நாட்டில் மேன்மையாய் நாகரிகத்தில் சிறந்து மானிகளாய் வீரர்களாய் வாழ்ந்த வர்கள், வீரத் திராவிடர்கள் என்ற பெய ரைச் சரித்திர காலத்திற்கு முன்னிருந்து உடைத்ததாய் இருந்தவர்கள், ஆதலால் திராவிடர்கள் என்கிறோம், இதை நானாக அல்லது நானே சொல்லவில்லை. இது இன்று மாத்திரம் சொல்லப்படவில்லை.

இந்த நாட்டுச் சரித்திரம் , ஏன்? உலகச் சரித்திரம் தெரிந்த காலம் முதலாய் ஆராய்ச்சி நிபுணர்களான பல அறி வாளிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை யும் இன்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கும் சரித்திர நூல்கள் முதல் புராணங்களில் குறிப்பிட்டு இருக்கும் கற்பனை, பழிச்சொற்கள் என்பவைகள் வரையில் காணப்படும் சேதிகளுமாகும்.

பழமைகள், பழமை சம்பவங்கள், காட்சி சாலைகளுக்கும், நேரப் போக்குப் பரிகாசத் துக்கும் சென்று கொண்டிருக்கும் இந்தப் புத்துலகில் பழங்காலச் சரித்திரத்தையும் பரிகசிக்கும் புராணத்தைப் பற்றியும் கூட ஏன் சொல்லுகிறேன் என்று கேட்பீர்கள். அந்தமாதிரி அதாவது, நம்மைப் பற்றி நம் முன்னைய நிலையைப் பற்றி மேலே நான் சொன்னமாதிரியாய் இருந்து நாம் இன்று எந்தமாதிரியில் இருக்கிறோம்?

பழமை நிலைமையும் இயற்கையும் முற்போக்கில் மாற்றப்பட்டு இருக்கிறதா பிற்போக்கில் பின்னும் மோசமான நிலைமையில் கொண்டுபோய்த் தள்ளி இருக்கிறதா என்பதைச் சிந்திக்கவும், நாம் அதைவிடச் சிறிதாவது மேன்மையும், மனிதத்தன்மையும் அடைந்திருக்கிறோமா அல்லது கீழ்மையும், இழிநிலையும், மானமற்ற தன்மையும் அடைந்திருக்கிறோமா என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து மேலால் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்ப தற்கும் ஆகவேயாகும்.

நாம் சூத்திரர்களா?

நாம் பிறவியிலோ தன்மையிலோ தகுதியிலோ சூத்திரர்களாக இருந்தவர்கள் அல்ல; உண்மையில் அல்ல. பின்நாம் யார்? என்றால் வீரத்திராவிடர்கள் ஆவோம். எப்பொழுது முதல் என்றால் முன் நான் சொன்னபடி உலக சரித்திரம் மனிதநூல் ஆகியவை எட்டியகாலம் முதல் என்பேன். இவை வெறும் வார்த்தையால் மாத்திரம் அல்ல. நாடு, இனம், பண்பு, நடைமுறை ஆகியவைகளால் இயற்கையைத் தழுவி திராவிடர்களானவர்கள்.
நமது இந்த முடிவு இதுவரை யாராலும் மறுக்கப்படவில்லை, நம் எதிரிகளாலும் மறுக்கப்படவில்லை. இந்த உணர்ச்சி நமக்குக் கூடாது என்று சொல்லும் சுயநல சமயசஞ்சீவிகளாலும் கூட மறுக்கப்படவில்லை ஆனால் நாம் தான் நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ள, நம்நாடு திராவிடம் என்று சொல்லிக்கொள்ள, நாம் சூத்திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள வெட்கப் படுகிறோம்.

எப்படி மானமும் சுதந்திர உணர்ச்சியும் அற்ற ஒரு பெண் மற்றொரு ஆண் மகனைக் கண்ணால் பார்ப்பதால் கற்புப் போய்விடுமென்று கருதிப் பயப்படு கிறாளோ, பார்க்க வெட்கப்படுகிறாளோ அதுபோல் நாம் திராவிடர் என்று சொல் லிக்கொண்டால் நமது மதம் போய்விடும், தேசியம் போய்விடும், செல்வாக்குப் போய்விடும் என்று பயப்படுகிறோம், வெட்கப்படுகிறோம்.

எந்தக் காரணத் தாலேயோ நாம் சூத்திரர்கள் என்பதாக ஆக்கப்பட்டிருந்தாலும் இன்றும் சூத்திரர் களாக அதுவும் நாம் மாத்திரமல்லாமல் நம் இன்றைய ராஜாக்களும், மகாராஜாக்களும், பண்டார சன்னதிகளும், ஜமீன்தாரர்களும், ஆயிரக்கணக்கான வேலி நிலமுள்ள மிராசுதாரர்களும், பல கோடி ரூபாய் செல்வமுள்ள ராஜா, சர் முதலியவர்களும் சூத்திரர்களாக இருக்கவும் நடத்தப்படவும் இதுதான் (நாம் திராவிடர் என்று உணராத தும், உணர்ந்தாலும் சொல்லிக்கொள்ளப் பயப்படுவதும்) காரணமாகும்.

ஆனால் இந்த இழிவு அவர்களுக்கு (அப்படிப்பட்ட பெரியவர்களுக்கு) மிக சகஜமாகிவிட்டது. எப்படியோ அவர்களை அவர்களது ஆசா பாசம் அவர்களுக்குச் சகிப்புத்தன்மையை உண்டாக்கிவிட்டது. நமக்குப் பட்டம் இல்லை, பதவி இல்லை, செல்வம் இல்லை இவை பற்றிய மானமற்ற பேராசை இல்லை. எனவே நாம் ஏன் திராவிடன் என்பதை மறந்து மறைத்துக்கொண்டு நம்மைச் சூத்திரன் என்பதாகக் காரியத்தில் ஆதாரத் தில் ஒப்புக்கொள்ள வேண்டும்?

சூத்திரன் என்றால் என்ன?

சூத்திரன் என்பது தாசிமகன், ஆரியர் களின் அடிமை; ஆரியநலத்துக்கு ஆக, ஆரியர்களின் மேன்மை வாழ்வுக்காக இருப்பவன், இருக்க வேண்டியவன், இருந் தும் வருகிறவன் என்பதாகும். இதுதான் அந்த வார்த்தையின் அருத்தம். சாஸ்திரம் கடவுள் என்பவற்றின் வாக்குமாகும். ஆனால் உண்மையில் நாம் அப்படிப்பட்ட வர்கள் அல்லாதவர்களாக இருக்கும்போது அந்தப் பெயரை ஏன் நமக்கு இருக்க விடவேண்டும்? என்று கேட்கிறேன்.

தோழர்களே, இக்காலத்தில் உண்மை யான ஒரு தாசிமகனையே பாருங்கள். தனது தாய் தாசி என்றும், தனது வீடு வாசல் செல்வம் தாசித்தனத்தால் வந்ததென்றும் தெரிந்தவன்கூட அவனது சுயமரியாதைக் கொதிப்பால் தாசியே உலகில் இருக்கக் கூடாது சட்டத்தில் இருக்கக் கூடாது, தன் தாய் வீட்டிற்குள்ளும் வேறொரு பயல் அவன் ஜமீன்தாரரானாலும், அவன் குருவானாலும், ஆச்சாரியானாலும், கோடீஸ்வரன் ஆனாலும் வரக்கூடாது என்று தன் தாயைச் சகோதரியைக் கண்டிக்கிறான். வருகிறவனையும், ஏன்? வந்து கொண்டிருக்கிறவனையும் விரட்டி அடிக்கிறான், அநேகமாய் அடித்துத் துரத்தியே விட்டான்.

இத்தனைக்கும் அவர்களுக்குத் தேவ அடியார்கள், தேவதாசிகள் என்று பெயர் இருந்தும்கூட. ஆனால் நம் சுயமரியாதை என்ன என்று பாருங்கள், நாம் வேசி மக்கள், அடிமை (சூத்திரர்) என்று அழைக்கப்படுகிறோம். அப்படி நம்மை அழைப்பவர்களைச் சாமி என்கிறோம். அப்படிப்பட்டவர்களை நம்மிலும் மேலானவர்களாகக் கருதி வைதிகக் கருமங்களை (முட்டாள்தனமான, இழிவுதரும்படியான காரியங்களை) அவர் களைக்கொண்டு செய்வித்துக் கொள் கிறோம்.

அதையே வலியுறுத்தும் மார்க்கத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை சொல்லிக்கொள்ளுகிறோம் வாயால் சொல்லிக்கொள்ளுவது மாத்திரமல்லாமல் மற்றவர்களுக்கும் தெரியும்படியான குறி களையும் (ஏதாவது ஒரு அடையாளத்தை யும்) அணிந்துகொள்ளுகிறோம். இந்த பேதத்தையும், இழிவையும் மானமற்ற உணர்ச்சியையும் நிலைநிறுத்துவதும், பெருக்கிக் கொள்வதுமான காரியங்களை நமது ஆத்மீக, லவுகீக காரியமாய்க் கருதிச் செய்து வருகிறோம். இது நியாயமா? நமக்கு இது தகுதியா? அதுவும் இந்த 20ஆம் நூற்றாண்டில் தகுமா? இதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாமா? என்று யோசித்துப் பாருங்கள்.

உன் சொந்த இழிவை ஈனத்தை நீக்கிக் கொள்ளாத நீ, நாட்டுக்குச் சுதந்திரம், மனித சமுதாயத்திற்கு விடுதலை ஏழைகளுக்குச் செல்வம், உண்டாக்கப் பாடுபடுகிறேன் என்றால் உன்னைவிட மடையனோ அல்லாவிட்டால் அயோக்கியனோ அல்லா விட்டால் பித்தலாட்டக்காரனோ வேறு யார் இருக்கமுடியும்? திராவிடனுடைய சரித் திரத்தில் இந்த இழி தன்மை என்றும் இருந்ததாகக் காணப்படவில்லையே!

எது தேசியம்? எது விடுதலை?

ஆயிரக்கணக்கான எச்சிலிலை கழியும் ஓட்டலுக்குள் சென்று சமமாய் இருக்க அனுமதியில்லை. நீ பத்து லட்சக்கணக்காக செலவழித்துக் கட்டி வருஷம் லட்சக்கணக் கான செலவு செய்து பூஜை உற்சவம் செய்துவரும் கோவிலுக்குள் சென்று பிச்சை எடுத்துப் பிழைக்கும் உச்சிக்குடுமி மக்களுடன் சரிசமமாய் நின்று பிரார்த்திக்க உரிமை இல்லை என்பதாக இருந்துவரும், நடத்தப்பட்டு வரும் மக்களுக்குத் தேசியமா? சுயராஜ்ஜியமா?
உண்மைத் திராவிடன் இப்படிப்பட்ட எச்சிலிலை மண்டபங்களையும், கோவில் களையும் நிர்துளியாக்குவதையல்லவா தேசியம் சுயராஜ்ஜியம் என்று எண்ண வேண்டும்?

இன்றைய தினம் இந்த நிலையைப் பொறுத்துக்கொண்டு, இதை மாற்ற வேலை செய்பவர்களையும் எதிர்த்துத் தொல்லை விளைவித்துக்கொண்டு தேசியம், சுய ராஜ்ஜியம், விடுதலை, சுதந்திரம் பேசும் திராவிடன் எவனானாலும், தம்மைச் சிறிதாவது திராவிட ரத்தம் ஊசலாடும் திராவிடன் என்று கருதுகிற எவனானாலும் அவன் எல்லாம் நம் எதிரிகளின், அதாவது வெள்ளை ஆரியர், தவிட்டு நிற ஆரியர் ஆகிய இரு கூட்டத்தினரின் லைசென்சு பெற்ற அடிமைகள் அல்லது நம்மைக் காட் டிக்கொடுக்கும் ஒற்றர்கள் என்று தூக்கு மேடையில் இருந்துகொண்டு கூறுவேன்.

எது பொதுவுடைமை இன்றைய பொது உடைமைக்காரர்கள் என்பவர்களின் யோக் கியதைதான் என்ன? வெங்கடாசலபதிக்கு (ஒரு கருங்கல் பொம்மைக்கு) பத்து லட்ச (10,00,000) ரூபாயில் கிரீடமா? மற்றும் பல குழவிக்கல், தாமிர பொம்மை ஆகியவை களின் பேரால் நடக்கும் அட்டூழியங்களைப் பாருங்கள். ஊர்தோறும் கோவில், மணி தோறும் பூஜை, மாதந்தோறும் உற்சவம், வருஷந்தோறும் சாமி திருமணமா? இவைகளுக்குப் பண்டு எவ்வளவு? பண்டம் எவ்வளவு? பூசாரி பண்டார சன்னதி எவ்வளவு?

எனவே நம் நாட்டு, இனத்தின் அறிவு, செல்வம், முயற்சி எதில் மண்டிக் கிடக்கின்றன? நம்மவர்களே ஆன கிருபானந்தவாரிகள், திருநாவுக்கரசுகள் ஆகியவர்கள் காலட்சேபமும், இசை அரசுகள் சங்கீதங்களும், நாடக மணிகள் நாடகங்களும், சினிமாக்களும், பண்டித மணிகள் வித்துவத் தன்மைகளும் இன்று எதற்காகப் பயன்படுகின்றன? இவைகள் பொதுவுடைமையின் எதிரிகள் அல்லவா?

இவர்கள் எல்லோரும் தனி உடைமைக் காரர்களின் நிபந்தனை இல்லாத அடி மைகள் அல்லவா? இவைகளை அச்சுக் குலையாமல் அசைய விடாமல் காப்பாற்ற இடம் கொடுத்துக்கொண்டு பணக்காரனைப் பார்த்து ஆத்திரப்பட்டால், குரைத்தால், பாமரத் தொழிலாளிகளை ஏமாற்றினால் பொது உடைமை ஆகிவிடுமா?

காங்கிரஸ்

காங்கிரஸ், தேசிய விடுதலைக்காரன் யோக்கியதைதான் என்ன இதைவிட மேலானதாகிவிட்டது. எந்தத் தேசியவாதி இந்தப்பக்கம் திரும்பினான், எந்தப் பொதுஉடைமை மாநாட்டில் எந்தத் தேசிய மாநாட்டில் இந்தத் தன்மைகளைப் பொசுக் கிப் பொங்கல் வைக்கவேண்டுமென்று பேசப்பட்டது? தீர்மானங்கள் செய்யப்பட் டது? நினைக்கப்பட்டது?

இந்த மகா உத்த மர்கள் எங்களைக் குறை சொல்லுவ தெதற்கு? அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவதெதற்கு? அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறதா? அல்லது இவைகளைப் பற்றிப் பேசுவது ராஜத்துரோகமா? காப்பிக் கடைக்குள், கோவிலுக்குள் முன் மண்டபத்தில் பறை யனை, சூத்திரனை விடக்கூடாது என்று எந்த அந்நிய ஆட்சி சட்டம் செலுத்தியது?

கோவிலுக்குக் கூத்தியை வைக்கச் சொல்லி, கடவுளைத் தாசிவீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லி, கல்லுக்குத் தங்கத்தில் கவசம் போட்டு வைரத்தில் கிரீடம் வைக்கச் சொல்லி எந்த அடக்குமுறை சுரண்டல் அந்நிய ஆட்சி சொல்லிற்று?

எங்கள் கோபம்

இன்று எது ஒழிய வேண்டும்,யார் வெளியேற வேண்டும், எது மாற வேண்டும்? இவை அறியாத மக்களும், சுயநலவாதிகளும், சமயசஞ்சீவிகளும், வயிற்றுப்பிழைப்பு, பொதுஉடைமை, தேசபக்தர் குழாங்களும் எங்களை ஏன் கடிய வேண்டும். எங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது கோபம்? எந்தக் கடவுள் மீது கோபம்? எந்தத் தலைவன் மீது கோபம்? எந்த ஜாதி மீது கோபம்? எந்த வெள்ளையனிடம் அன்பு? தோழர்களே! பித்தலாட்டத்தின் மீது கோபம், முட்டாள் தனத்தின் மீது கோபம், ஏமாற்றுகிறதன்மை மீது கோபம், எங்களை இழிவுபடுத்தியும், முன்னேற வொட்டாமலும் செய்து வைத்து இருக்கும் சகலத்தின் மீதும் கோபம், இவைகளுக்கு ஆதரவளிப்பதால் வெள் ளையன் மீதும் கோபம்.

ஆகவே, எங்களை காங்கிரஸ்காரர் களும், பொதுஉடைமைக்காரர்களும் மற்றவர்களும் ஏன் கோபிக்க வேண்டும். ஏன் தொல்லை கொடுக்க வேண்டும்?

எங்களைத் தொல்லை கொடுப்பவர்கள் சுரண்டல்கார எங்கள் எதிரிகள் அல்லது அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகள் என்பவர்கள் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?

இளைஞர்களே! நடப்பது நடக்கட்டும் என்று நீங்கள் எதற்கும் துணிவு பெற்றுத் தொண்டாற்றவேண்டிய காலம் இது.

நீங்கள் அடிபட வேண்டும். காயப்பட வேண்டும். கும்பல் கும்பலாகச் சிறைப்பட நேரிட்டாலும் மனம் கலங்காமல் நிற்கும் துணிவு பெற வேண்டும். இதற்குத்தான் திராவிட இளைஞர் கழகம் இருக்க வேண்டும்.

நாடானது விடுதலை, சமதர்மம், முன்னேற்றம், சீர்திருத்தம், கலை, கல்வி, தேசியம் என்னும் பேர்களால் மிக்க அடிமைத்தனத்திற்கும், காட்டுமிராண்டி தனத்துக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. வேசிக்கும் விபசாரிக்கும் தேவர் அடியாள் என்று பெயர் இருப்பதுபோல் நாட்டின் மனித சமுதாயத்தின் இழிவுக்கும், கீழ் மைக்கும், ஏழ்மைக்கும், அடிமைக்கும் அயோக்கியர்கள் ஆதிக்கத்திற்கும் மேற் கண்ட விடுதலை முதலிய பெயர்கள், ஸ்தாபனங்கள் இருந்து வருகின்றன.

தோழர்களே! துணிவு கொள் ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக் குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.

உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று.

உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு.

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத்தக்க குடி மகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல்,  கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல்  தானாகவே விழுந்துவிடும் தன் இனத்திற்கு உண்மையான தொண் டாற்றுபவனுக்கு அடையாளம் என்ன வென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற்குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்து விட்டவனாக இருக்க வேண்டும்.

இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கிய மாகும்.

----------------------------23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற் பொழிவு-"குடிஅரசு" - சொற்பொழிவு - 01.09.1945

22 comments:

தமிழ் ஓவியா said...


திராவிடர் தளபதி ஏ.டி.பி.

திராவிடர் இயக் கத்தைப் பற்றி குறை சொல் வதைச்சிலர் தொழிலாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில அதிகப் பிர சங்கிகள், கேரளாவில் அதிகம் படித்து இருக் கிறார்களே. அதற்கெல்லாம் திராவிடர் இயக்கம் தானா காரணம்? என்று அதி மேதாவித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறியும் வருகின்றனர்.

ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு வகை யான சூழல் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்?

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடுக்கான ஆணைகளைப் பிறப்பித்தவர்கள் யார்? குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற முதல் அமைச்சர் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) வருணாசிரம நோக்கத்தை ஒழித்துக் கட்டிய தலைவர் யார்? இயக்கம் எது? என்று அடுக்கடுக்கான கேள்வி கள் உண்டு.

அரசு அமைந்தால் பள்ளிகளைத் திறப்பார்கள் - ஆனால் ராஜாஜி இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் 1937களில் 6000 கிராமப் பள்ளிகளையும் 1952இல் 8000 பள்ளி களையும் மூடினாரே - இது கேரளாவில் நடந்ததா? தமிழ்நாட்டில் தானே நடந் தது? அதனை எதிர்த் ததோடு - அதனைக் கொண்டு வந்த ஆச்சாரி யாரையே பதவியை விட்டு விரட்டினோமே - வரலாறு புரியாமல் உளறலாமா?

இன்று திராவிடர் தள பதி ஏ.டி. பன்னீர்செல்வம் பிறந்த நாள் (1888) அவர் தஞ்சாவூர் மாவட்டக் கழகத் தலைவராக (டிஸ் டிரிக்ட் போர்டு பிரசிடன்ட் 1924-1930) இருந்தபோது எத்தகைய கல்விச் சாத னைகளை முத்திரையாகப் பொறித்தார்?

உரத்தநாடு, இராசா மடம் ஆகிய இடங்களில் மன்னர்களால் கட்டப்பட்டு இருந்த சத்திரங்கள் முழுக்க முழக்கப் பார்ப்பன சிறு வர்களுக்குப் பயன்பட் டதை மாற்றி அமைத்தவர் அவர் தானே?.

திருவையாற்றில் ஒரு கல்லூரி - சமஸ்கிருத கல் லூரியாக மட்டும் இருந் ததை மாற்றி - தமிழ்ப் புலவர் பட்டப்படிப்புக்கும் வழி வகுத்து சமஸ்கிருதக் கல்லூரி என்றிருந்த பெயரை மாற்றி அரசர் கல்லூரி என்று புதுப் பெயர் சூட்டினாரே!

பார்ப்பனர்களுக்கு மட்டும் இருந்த விடுதியை அனைவருக்கும் பொது வானதாக மாற்றினாரே!

இதுதான் தமிழ் நாட் டுச் சூழல் - வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று உளற வேண்டாம்.

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/81385.html#ixzz33RCrfZgl

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு றீரயில் கட்டணம் உயர்கிறது ,டீசலும் விலை ஏற்றம்


பழைய கள் புதிய மொந்தை!

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு றீரயில் கட்டணம் உயர்கிறது
டீசலும் விலை ஏற்றம்

புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்

புதுடில்லி, ஜூன் 1- காங்கிரஸ் தலைமையி லான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத் தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கி விட் டது.

குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கி விட்டனவே!

25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.

இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப் போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக் குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத் தியிருந்தார் என்றும் கூறப் பட்டது.

இந்த நிலையில் மீன் பிடித் தடைக் காலம் முடிந்த பின்னர் நேற்றுதான் மீனவர்கள் கடலுக்கு சென் றனர். பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற் படை திடீரென சுற்றி வளைத்து தாக்கியது. தமி ழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து வீசி யது. மேலும் 25 மீனவர் களையும் கைது செய்து அவர்களது 6 விசைப் படகு களையும் சிறைப்பிடித்து சென்றுள்ளது ராஜபக்சே வின் கடற்படை.

ரயில் கட்டணம் உயர்வு

ரயிலில் அபாயச் சங்கிலி உண்டு - ஆபத்து காலத்தில் இழுத்து ரயிலை நிறுத்த லாம். ஆனால், ரயில் கட்டணத்தை உயர்த்தும் அபாயம் அல்லவா ஏற் பட்டு விட்டது? எதைப் பிடித்து இழுப்பது?

பிஜேபியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா - ரயில் கட்டணம் உயரும் என்று அறிவிப்புக் கொடுத்துள் ளார். பழைய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்த தவறி விட்டதாம் - அத னால் இந்த ஆட்சியில் கட்டண உயர்வாம்! ரயில் கட்டணத்தை உயர்த்தாதது பழைய ஆட்சியின் தவறாம் - எப்படி இருக்கிறது?

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு

டீசல் விலை லிட்ட ருக்கு 50 காசுகள் உயர்த் தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக் கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலங்கள் விதிக்கும் வரிகள் சேர்க்கப்படாததால் இந்த விலை உயர்வு, மாநில வாரியாக வேறுபடும். எண் ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டது.

டீசலுக்கு அளிக்கப் படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக கடந்த காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு மாதந் தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தும் திட்டத்தை 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

அந்தத் திட்டத்தின் அடிப்படையில், மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசும் இந்த விலை உயர்வை மேற் கொண்டுள்ளது. இதனால் மாதந்தோறும் டீசல் விலை உயர்வுத் திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த ஆண்டு ஜன வரி மாதம் முதல் 15 முறை டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது. அதன் மூலம் லிட்டருக்கு இதுவரை ரூ. 9.55 காசுகள் உயர்ந்துள்ளது.

Read more: http://www.viduthalai.in/e-paper/81389.html#ixzz33RD5P2U0

தமிழ் ஓவியா said...


அரசு அலுவலகங்களில் புகைப்பிடிக்க தடை கர்நாடக அரசு அறிவிப்பு


கர்நாடகத்தில் அரசு அலுவலங்கள், பேருந்து நிலையம், மருத்துவ மனை ஆகிய இடங்களில் புகைப் பிடித்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன் னிட்டு, சனிக்கிழமை பெங்கருவில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து, கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் கூறிய தாவது:

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 60 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்களால் இறக்கிறார்கள். ஒவ்வொரு 6 வினாடிக்கும் உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் பலியாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமல்லா மல் வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறு நீரகம் ஆகிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன. ரத்தக்குழாய், ரத்த நாளங் களில் ஏற்படும் பாதிப் பால் மாரடைப்பு, பக்க வாதமும் ஏற்படுகிறது. மனைவி கருவுற்றி ருக்கும் போது கணவன் அருகிலி ருந்து புகைப்பிடித்தால், வயிற்றில் இருக்கும் குழந் தையின் மனவளர்ச்சி பாதிக் கப்படும் என தெரியவந் துள்ளது.

உலக அளவில் புகை யிலை பொருட்களைப் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-ஆம் இடத்திலும் இருக் கிறது. இந்தியாவில் 57 சதவீத ஆண்களும், 11 சதவீத பெண்களும், 34.6 சதவீத இளைஞர்களும் புகையிலை பயன்படுத்து கிறார்கள். கர்நாடகா வைப் பொறுத்தவரை 45 சதவீத ஆண்களும், 5 சதவீத பெண்களும் புகையிலை பயன்படுத் துகிறார்கள்.

புகைப்பிடிப்பதைத் தடுக்கவும், புகையிலை உபயோகப்படுத்துவதைத் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை முதல் அரசு அலுவலகங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப் படுகிறது.

புகைப்பிடிப்பவருக்கு மட்டுமில்லாமல் அருகில் இருப்பவருக்கும் பிரச் சினை ஏற்படுவதால், முதல் கட்டமாக அரசு அலுவ லகங்களில் தடையை மீறி புகைப்பிடிப்ப வருக்கு நிச்சயம் தண்டனை வழங் கப்படும். மேலும் பேருந்து நிலையம், மருத்துவ மனை, அரசு அலுவலகங் கள் உள்ளிட்ட இடங்களில் புகைப்பிடிப்பவருக்கு தண் டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இதுதவிர கர்நாடகா வில் புகையிலை விளைச் சலை குறைக்குமாறு தோட் டக் கலைத் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு அருகில் நூறு மீட்டர் சுற்றளவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாட கத்தை புகையிலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81386.html#ixzz33RDGf3jP

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை கூறுவது: உலகில் மூன்றில் ஒருவர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி யுள்ளனர். 2013ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஆண்களில் 23.1 சதவீதத்தினரும், பெண்களில் 22.6 சதவீதத் தினரும் இத னால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய், கெட்ட கொழுப்பின் அளவு அதிகம் இவையே இதற்குக் காரணம் ஆகும்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81381.html#ixzz33RDhxYCo

தமிழ் ஓவியா said...


2014 - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டிற்குத்தான் நட்டம்; திமுகவுக்கு நட்டமில்லை!


பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் நடந்துமுடிந்து விட்டது. பாஜக தலைமையில் தனித்த ஆட்சி அமைந்து விட்டது. இது எதிர்பார்த்தது என்றுதான் இதில் வியப்படைய ஒன்றுமில்லை. இது காலநிலை; மாறியுள்ள அரசியல், சமூக, பொருளாதார வேதியலின் வடிவம். ஆனால், தமிழ்நாட்டின் முடிவுகள் ஏன் இப்படி ஆயின? திமுக ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லையே ஏன்? இங்குள்ள தனித்தன்மை என்னவாயிற்று? இவையெல்லாம் ஆராயப்பட வேண்டிய ஒன்று.

இதே போல முன்பு இரண்டு முறை நாடாளுமன் றத்தில் திமுக பிரிதிநிதித்துவம் இல்லாமல் இருந்து இருக்கிறது. அதிமுகவும் இரண்டு முறை நாடாளுமன்றத்தில் ஓர் இட மும் பெறமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே திமுக ஓர் இடமும் பெறாதது புதிதல்ல; ஆனால், இப்போது நிகழ்ந்திருப்பது சற்று வேறுபாடுடையது. சிந்திக்க வேண் டியதாக இருக்கிறது.

அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 44.3; திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.6 விட 20.7 சதவிகிதம் அதிக வாக்குகளை அதிமுக அதிகம் பெற்று இருக்கிறது; இது எப்படி நடந்தது? ஏன் நடந்தது?

திராவிடர் கட்சிகள் என்று திமுகவையும், அதிமுக வையும் புறக்கணித்து பாஜக அணி அமைத்தது. ஏற்கெனவே பாஜகவோடு காங்கிரஸோடு கூட்டணி இல்லை என்று திமுக தெளிவாகக் கூறிவிட்டது. தொடக்கத்திலேயே ஓர் அரைப் பார்வை பாஜகவின் மேல் அதிமுகவுக்கு இருந்தது. பின்னர் பிரதமர் கனவு ஜெயலலிதாவைத் தொற்றிக் கொண்டது. மூன்றாம் அணி அமைப்பதற்கான பதினோரு கட்சிகளின் கூட்டம் டில்லியில் நடந்தது.

இக்கூட்டங்களில் இருமுறை ஜெயலலிதா கட்சியின் பிரதிநிதி கலந்து கொண்டார். இதில் இடது சாரிகளும் இருந்தனர். இதனால் ஜெயலலிதா தமிழ் நாட்டில் இடதுசாரிகளோடு கூட்டணி பேசிக்கொண்டே கடைசியில் அவர்களைக் கழற்றிவிட்டார். தனிக்கட்சியாகத் தேர்தலில் போட்டியிட்டார். வெற்றி பெறும் எண்ணிக் கையைக் கொண்டு மத்தியில் பேரம் பேசலாம். கூட்டணி அரசில் பதவி பெறலாம் எனக்கருதியே பிரச்சாரத்தையும் முதலிலேயே தொடங்கினார்.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் கனவு பற்றிய பேச்சைக்குறைத்துக் கொண்டே வந்தார். ஜெயலலிதா எப்போது மணிமேகலை ஆகிவிடுவார் என்று சொல்ல முடியாது. இறுதியில் பிரதமர் கனவை விட்டு விட்டார். ஆனால் பாஜகவைக் கண்டு கொள்ளாமல் மயிற்பீலியால் நீவாமல் நீவினார். ஆனால் காங்கிரசையும், திமுகவையும் கடுமையாகத் தாக்கினார். இதைத் திமுக வெளிப்படுத்தவே பாஜகவையும் தாக்கத் தொடங்கினார் - ஜெயலலிதா!

எல்லாக் கட்சியினரும் பிரச்சாரத்திற்கு வாகனங்களில் சென்றனர். ஜெயலலிதாவோ எலிகேப்டரில் சென்றார். அலுங்காமல் பேசினார். கூட்டத்தின் புழுதிகூட அவர்மீது பட்டிருக்க முடியாது. நிழற்கனிந்த கனியாய் சுற்றித்திரிந்து தினமும் சென்னை இருப்பிடத்திற்கு வந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

தெண்டனிடும் ஜெயலலிதாவின் அமைச்சர் பரிவாரங்கள் - தொண்டரடிப் பொடி ஆழ்வார்கள் என்ன செய்தார்கள்? வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்து கொண்டிருந் தார்கள். தேர்தலுக்கு பணம் கொடுப்பது தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நடப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறியது. தமிழ் நாட்டில் 70 கோடி, ஆந்திராவில் 120 கோடி எனப் பிடிபட்ட பணம் அரசு கஜானாவுக்கு சென்றது. தமிழ் நாட்டில் கைப்பற்றபட்ட பணம் அதிமுகவுடையது என்பது பகிரங்க இரகசியமாயிற்று. தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது?

பாஜகவைப் போலவே முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா பறந்தே சாதித்தார். பிறகே சோதனைகள் பேருக்கு நடத்தப்பட்டன. தமிழ் நாட்டில் எப்போதும் நடத்தப்படாத - போடப்படாத ஊரடங்கு சட்டம் - 144 போடப்பட்டது. இரண்டு நாளைக்கு நடைமுறையில் இருந்தது. பிரச்சாரம் முடிந்த நிலையில் இர வு 10 மணிக்கு மேல் வீட்டில் வாக்காளர்களைச் சந்திக்க என்ற இரு நிலைப்பாடுகளும் தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்புகள் ஆகும்.


தமிழ் ஓவியா said...

திமுக பிரச்சாரத்தில் தூசுப் படையாய் பணியாற்றியது. பாஜகவும் மற்றக்கட்சி களும் களத்தில் இறங்கிப் பணியாற்றின. தேர்தல் முடிவுகள் வந்தன. அதிமுக - 37; பாஜக - 1; பாமக - 1, திமுக அணிக்கு ஓர் இடம்கூட இல்லை. பாஜகவின் வெற்றி யைப் பெரிதாகக் கொள்வதற்கு இல்லை. பாமகவின் வெற்றி குறித்தும் பெரு மைப்பட ஒன்றுமில்லை. இரண்டும் ஒரே அணி. இந்த இரண்டு வேட்பாளர்களும் வெவ்வேறு தொகுதிகளில் நின்றிருந்தால் இவர்களின் வெற்றியும் இல்லாது போயி ருக்கும். ஆனால் அவர்களின் இரு தொகு திகளுக்கென்று இருக்கும் சிறப்பம்சமே வெற்றியாக விளைந்தது என்று சொல்ல வேண்டும்.

ஆனால் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்ன?

1) 1991 - 1996, 2001 - 2006 ஆகிய கால கட்டங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்து தமிழகத்திற்கு ஆற்றிய சாதனைகளை நினைவு கூர்ந்து மக்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தார்களா?

2) தமிழ்நாட்டில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கிற முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் செய்த ஒப்பற்ற சாதனைகளுக்காக மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தார்களா?

3) தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர் வரிசைப்படுத்திக் காட்டினாரே - சுமார் 5000 கோடி அளவுக்கு ஊழல் என்று! அதற்காக அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களா? (இம் மூன்று காரணங் களுக்காகக் கண்டிப்பாக வாக்களித்து இருக்க முடியாது. பின் ஏன் வாக்களித்தார்கள்? இன்னும் ஆராய்வோம்.

ஜெயலலிதா, மம்தா, பிஜூபட்நாயக் போன்றோரின் கட்சிகள் முறையே 37, 34, 20 என இடங்களை நாடாளு மன்றத்தில் பெற்று இருக்கின்றன. பாஜக தனித்த பெரும் பான்மையில் ஆட்சியை அமைத்து விட்டது. எனவே இவர் களின் தயவு பாஜகவுக்குத் தேவைப்படாது. மேற்கு வங்கத் தில் மம்தா பெற்றுள்ள வெற்றியையோ, ஒடிசாவில் பிஜீபட் நாயக் பெற்றுள்ள வெற்றியையோ, ஜெயலலிதா பெற்றுள்ள வெற்றியோடு ஒப்பிட்டுப்பாக்க முடியுமா? முடியாது.

இம்மூவருள் பாஜகவுக்கு மம்தா ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற என்ணம் எதுவும் இல்லாதவர். நவீன் பட்நாயக்கும் ஜெயலலிதாவும் நிலைமைகளைப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தவர்கள். இப்போது முழுமையாக பாஜகவுக்கு இவர்களின் ஆதரவு தேவை இல்லை; ஆட்சியும் அமைக்கப்பட்டுவிட்டது.

ஜெயலலிதாவை மம்தாவோடோ, பிஜூபட்நாய கோடோ ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்று குறிப்பிட் டோம். அதே போல உ.பி., பீகார் மாநில முதல்வர்களோடும் ஜெயலலிதாவை ஒப்பிட முடியாது. உ.பி.யில் சமாஜ்வாடி, பீகாரில் அய்க்கிய ஜனதாதளம் தற்போது ஆளுங்கட்சிகளாக இருக்கின்றன. அவை நாடாளுமன்றத்தேர்தலில் பெருந் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன?

மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் அம்மாநில மக்கள் மத்தியில் ஆட்சி அமைப்பவர்களின் விஷயத்தில் மாநில ஆளுங்கட்சியோடு நின்றார்கள். உபியிலும், பீகா ரிலும் இன்னும் இதர சில மாநிலங்களிலும் மாநில ஆட்சி யோடு மக்கள் நிற்கவில்லை. பாஜகவோடு நின்றார்கள் ஏன்? இக்கட்சிகள் எல்லாம் மத்தியில் காங்கிரசை ஆதரித்தன. தமிழ்நாட்டில் திமுகவின் நிலைமையும் இதுதான்! இந்தியாவில் காங்கிரசோடு கூட்டணி வைத்துக்கொண்ட அத்துணை மாநிலக்கட்சிகளும் தோற்றன. திமுகவுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

காங்கிரசின் வாக்கு சதவீதமும் பெரு மளவு குறைந்துள்ளதாகப் புள்ளி விவரங் கள் தெரிவிக்கின்றன. திமுக வாக்கு சத வீதம் இந்த தேர்தலில் 23.6 வாங்கி இருக் கிறது. அதிமுக 23.6 சதவீதம் அதிகரித் துள்ளது. இப்படி குறைந்த சதவீத வாக்கு களை அதிமுகவும் பெற்று இருக்கிறது. 1996 இல் 7.84 சதவீதம் வாக்கைப் பெற்ற கட்சிதான் இன்று 44.3 சதவீதம் பெற்று இருக்கிறது. இந்திய அளவில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதத்தில் பகுஜன் சமாஜ் 4.1 சதவிகிதத்திற்கு 0 இடத்தை பெற்று இருக்கிறது. ஆனால் அதைவிட அதிமுக 3.3 சதவிகிதம் பெற்று 37 இடங் களைப் பெற்று இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஆகவே அரசியலில் தோல்வியை எதிர் கொள்வது இயல்பான ஒன்று. இதுமட்டுமன்று மத்தியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் கோளாறுகள், விரைந்து முடிவு எடுக்காமை, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புப் பற்றி கவலையின்மை, கூட்டணிக் கட்சியைக் கருவியாக்கிக் கொள்ளுவது, இரட்டை அதிகார மய்யம், அமைச்சர்களும் செய்தி தொடர்பாளர்களும் ஆளுக்கொரு கருத்தைச் சொல்லிக் குழப்புவது, சிபிஅய்யைப் பயன்படுத்தி மிரட்டுவது,

மன்மோகன் சிங்கின் அபரிமிதமான மவுனம் போன்ற குணாம்சங்கள் பாஜகவின் அரசியல் மாற்றுக்கு அதன் வளர்ச்சிக்கு இடம் கொடுத்துவிட்டன. காங்கிரசின் இந்தப்போக்கு பல மாநிலக் கட்சிகளை இந்தியாவில் பாதித்ததைப் போல திமுகவின் வாக்கு வங்கியையும் பாதித்துவிட்டது.

காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாதமூன்றாவது அணி கட்டுவதற்கு பொது அம்சம் கொண்ட திட்டம் வகுப்பதில் தலைவர்கள் யாரும் அக்கறை காட்டவில்லை. தயாராகவும் இல்லை. பிரதமர் பதவி மீதே குறியாக இருந்தனர். இடதுசாரி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களைப் போல நடந்து கொண்டார்கள். பல கருத்துக்குழப்பங்களைச் செய்தார்கள். அவற்றையெல்லாம் இங்கே பட்டியலிட விரும்பவில்லை.

ஆனால், நம்மால் ஒன்றைக்குறிப்பிடாமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் அவர்களின் அணுகு முறைகளுக்கு ஜெயலலிதாவிடம் கிடைத்த பரிசு என்ன? இடதுசாரிகளுக்கு அரசியல் நெறிக்கு ஏற்ற அணுகுமுறை இருக்கவேண்டும் என்று தெரியாதா? அப்படிப்பார்த்தால் ஜெயலலிதாவிடம் இவர்கள் வைத்த அரசியல் அளவுகோல் என்ன? இவர்கள் அணுகவே அரசியலில் அச்சப்பட வேண்டியவர் ஆயிற்றே அவர். வீரனைப் போல் களத்தில் வீழ்ந்திருக்கலாமே. வீணாகி போனீரே! இப்படித்தான் இந்தியா முழுமையும் இடதுசாரிகள் வலிமை இல்லாமல் போய்விட்டனர்.

காங்கிரஸ், மூன்றாவது அணியின் உச்ச பலவீனங்கள் பாஜகவிற்கு ஓர் அச்சமின்மையை அளித்தது. இந்த அச்ச மின்மையோடு இந்திய பெரு முதலாளிகளும் இந்துத்து வாவும் கைகோத்துக் கொண்டனர். மக்களுக்கு அவர்களின் பால் பெருமயக்கம் ஏற்பட்டுவிட்டது. எல்லாக்கட்சிகளும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் பெருமுதலாளிகளின் பின்புலத்தோடு பாஜக தனது தேர்தல் பணியைத் தொடங்கி விட்டது. சுமார் 100 நாட்கள் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் இந்தியாவைக் கலக்கின. முதல்கட்ட தேர்தல் அன்று தான் (ஏப். 7) தேர்தல் அறிக்கையை பாஜகவினர் வெளியிட்டனர். இன்று ஆட்சி பீடத்தில் பாஜக அமர்ந்துவிட்டது.

தமிழ் ஓவியா said...

இந்தத் தேர்தல் தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அல்ல; நாடாளுமன்றத் தேர்தல்! இப்போது தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு வருவோம்.

1) இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து இந்தத்தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் அவரின் சாதனைகளுக்காக கிடைத்தவை அல்ல. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அதிமுக கிடைத்தது. இது ஒரு பகுதியான கருத்து. அதாவது வாக்குகள் இப்படியும் பதிவாயின.

2) பிரதமர் கனவில் மிதந்த ஜெயலலிதா பாதியிலேயே விழித்துக் கொண்டார். அது சரி வராது என்றும் புரிந்து கொண்டார். தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் பாஜக வின் வளர்ச்சி - மக்களின் போக்கு வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதைப் பிறரைப்போல ஜெயலலிதாவும் தெரிந்து கொண்டார். தமிழ்நாட்டு கட்சிகளின் பலவீனங்கள், குறைகள் ஜெயலலிதாவுக்கு பெரிதும் கை கொடுத்தன. இதன் வழியும் வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைத்தன.

3) தேர்தல் ஆணையம் அதிமுகவை சுதந்திரமாக இயங்கவிட்டது. அதாவது விதிகளுக்கு உட்படுத்தவில்லை. பணம் பாதாளம் வரை பாய்ந்தது. இதன்வழியும் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்தன.

4) திமுகவின் வாக்கு வங்கி சரிவுக்கு காரணம் காங் கிரசோடு திமுக வைத்த உறவு. அதனால் ஏற்பட்ட பழி. அதோடு மத்தியில் பாஜகவே ஆட்சி அமைக்க வேண்டும் என்று பிற மாநில மக்களின் மனநிலையைப் போலவே தமிழ்நாட்டிலும் உருவாயிற்று. அதனால் அதை அதிமுகவின் வழி நிறைவேற்றுகிற விதத்தில் அக்கட்சிக்கே வாக்களித் தனர்.

5) மேலும் காங்கிரசு ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக அவையும் திமுகவைத் தாக்கின.

6) முன்பு இருமுறை நாடாளுமன்றத்தில் திமுக பிரதி நிதித்துவம் இல்லாமல் போனதற்கும் இதற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு. இப்போது தனித்த பெரும்பான் மையோடு பாஜக மத்தியில் ஆட்சி அமைத்து இருக்கிறது. இதை அரசியல் ரீதியாக வரவேற்பது வேறு. கொள்கை வழி பாஜக, அதிமுக இரண்டு ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டி யவர்களாக இருக்கின்றோம். இந்த ஆபத்திற்கு அதிமுகவின் வெற்றி மட்டும் காரணம் அல்ல, பிறவும் உண்டு.

தமிழ் ஓவியா said...


இந்தத் தேர்தலில் திமுகவின் பிரதிநிதித்துவம் நாடாளு மன்றத்தில் இல்லாது இருப்பது திமுகவுக்கு ஏற்பட்டுவிட்ட நட்டமல்ல; அது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுவிட்ட நட்ட மாகும்.

Read more: http://www.viduthalai.in/page-4/81376.html#ixzz33RE34OL3

தமிழ் ஓவியா said...


பலே, மணப்பெண்!


தொட்டிலை ஆட் டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.

இதன் பொருள் - பெண் என்றால் பிள் ளையைப் பெத்துப் போட்டு வெறுமனே தாலாட்டிக் கொண்டு இருப்பதல்ல; - அந்தப் பெண்ணுக்குள்ளும் ஆளுமைத் திறன் உண்டு என்பதாகும்.

ஆனாலும் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று எதுகை மோனையில் பேசிக் கொண்டுதான் திரிகிறார்கள்.

ஆண் என்றால் சாட்டை - பெண்ணென் றால் அடிக்கப்படும் முதுகு என்ற நிலை நிலவி வந்தது உண்மைதான்.

பெண்கள் படிக்க ஆரம் பித்தனர் - ஆண்களை விஞ்சி கல்வியில் சாதிக்க ஆரம்பித்தனர் - ஆண் களை முதுகு காட்டச் செய்து விட்டனர்.

காதலிப்பது - கொஞ்ச நாட்கள் ஜாலியாக சுற்றித் திரிவது - அதன் பின் கை விட்டு இன் னொரு பெண்ணைக் கட்டிக் கொள்வது என் கின்ற எஜமானத் திமிர் கொண்ட ஆண்கள் சிலர் உண்டு.

அத்தகைய ஆண் வர்க்கத்தின் முகத்தில் அறைந்தது போல், முதுகுத் தோலை உரித் ததுபோல ஒரு நிகழ்வு!

மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வந்த சரவணன் என்ற பொறியியல் பட்டதாரி, தான் பணியாற்றும் நிறு வனத்தில் பணியாற்றிய ரம்யா என்ற பெண்ணை நான்கு ஆண்டுக் கால மாகக் காதலித்து வந்தான்.

காதலித்த பெண்ணைக் கைவிட்டு - வீட்டார் நிச்சயித்த பெண்ணுக்குத்தாலி கட்டத் திட்டமிட்டான்.

ரம்யாவுக்கு உண்மை தெரிய வந்தது; அடங்கிக் கிடந்த அந்தப் பெண் புலி சீறி எழுந்தது!

நண்பர்கள், உறவினர்கள் 10 பேர்களை அழைத்துக் கொண்டு திருமண மண் டபத்திற்குள் நுழைந்தார். ஆங்கே ஒரே ஆட்டம் பாட்டம்!

ரம்யாவைக் கண்ட சரவணன் ஆடிப் போனான்; அதிர்ச்சி அடைந்தான்.

மணப்பெண்ணிடம் உண்மையைக் கூறினார் ரம்யா! அவ்வளவுதான். ஆவேசப் புயலாகச் சீறி எழுந்தாள் மணப்பெண்! சரவணனின் சட்டையை இழுத்துக் குலுக்கி நான்கு கேள்விகளை நறுக் கென்று கேட்டதோடு நிற்கவில்லை;

தன் கால் செருப்பைக் கழற்றி மண மகனை நாலு சாத்தும் சாத்தினாள்.

காவல்துறையும் வந் தது. திருமணம் நின்றது!

நாலு இடத்தில் இப்படி நடந்தால்தான் நாசகாரர்கள் திருந்துவார்கள்!

பலே ரம்யா!

பலே மணமகள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/81424.html#ixzz33XGDwPhX

தமிழ் ஓவியா said...


போகாதே!


அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்கு மானமில்லையா? ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!

- விடுதலை, 20.11.1969

Read more: http://viduthalai.in/page-2/81431.html#ixzz33XGYyLxb

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

16-ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள கோபமும், பொருளா தார நெருக்கடியும், காங்கிரசுக்கு மாற்றாக சரியான ஒரு மூன்றாவது அணி அமை யாததாலும், இது பா.ஜ.க வுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால், தான்தோன்றித்தனமாக நடக்காமல், தன்னடக்கத்தோடு மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்பதே நடுநிலையா ளர்களின் கருத்து.

இந்திராகாந்தி ஆட்சி காலத்திலே, இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப் பட்ட கச்சத்தீவை, ஒப்பந்தங்களை மீறி நடக்கும் ராஜபக்சேவின் சர்வாதிகார அரசி டமிருந்து, திராணியுள்ளதாகச் சொல்லும் பா.ஜ.க அரசு கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

தமிழக மீனவர்களைப் படாதபாடு படுத்தும் சுண்டைக்காய் நாடான இலங் கையின் தலையிலே ஒரு தட்டுத்தட்டி அடக்கி வைக்குமா?

பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம், காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்டு, மாண்புமிகு ஜெயலலிதா அரசின் (ஈகோ) தன் முனைப்பால் முடக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி - சென்னை இடையிலான கப்பல் போக்குவரத்து பயண நேரம் 32 மணி மிச்சமாகும் என்கிற நிலையிலே - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - பா.ஜ.க அரசு நிறைவேற்றுமா?

இந்தியர்களின் கறுப்புப்பண வங்கிக் கணக்கை, இந்தியாவின் இரட்டை வரிக் கொள்கையை காரணங்காட்டி வெளியிட மறுக்கும், சுவிஸ் வங்கியிடமிருந்து பட் டியலை வாங்கி பா.ஜ.க அரசு கறுப்புப் பணத்தை வெளிக்கொணருமா?

நீராதாரப் பிரச்சினை:- ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய தென் மாநிலங்களில் அணைகளில் 16 பில்லியன் கனமீட்டர் மட்டும் சேமித்து வைக்கப் படுகிறது. ஆனால் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளில் ஆண்டுக்கு 2000 முதல் 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக் கிறது. தென் மாநிலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை நீர்வழிச்சாலை திட்டம் வழியாக இணைத்து அனைத்து மாநிலங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று வெ.பொன்ராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திட்டச்செலவு ரூ. 50,000 கோடி ஆகுமாம்.

பா.ஜ.க அரசு, நீர் வழிச்சாலைத் திட் டத்தை நிறைவேற்றி நாட்டின் பொருளா தாரத்தை உயர்த்துமா?

ஆட்சி அமைக்க, தமிழ்நாட்டின் (அதிமுக 37 இடங்கள்) தயவு தேவையில்லை என்கின்ற நிலையிலே தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நியாயமான நிதியினை பா.ஜ.க அரசு வழங்குமா?

தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட தென்மாநில ரயில் கொள்ளையில் ஈடுபடும் உத்தரபிரதேச மாநில கொள்ளையர்களை, பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்துமா?

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்றாலும்கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு 5 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. சீனாவில் கூட மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8 சதவீதம் ஆகும். உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியராம். இந்த நிலையை மாற்றியமைக்க நரேந்திரமோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்குமா?

சாதாரண காய்கறி முதல் பெட்ரோல், டீசல் விலை வரை உயர்ந்து கொண்டே போகிறது. இதை தடுத்து நிறுத்தி பெட்ரோல், டீசல் விலையை, பா.ஜ.க அரசு குறைக்குமா?

வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் நீடிக்கிறது, படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை பா.ஜ,க அரசு உருவாக்குமா?

உற்பத்திச் செலவுக்கும் கீழாக, மஞ்சள் விலை விற்பதால், விவசாயிகள் பெருத்த நட்டத்தில் இருக்கிறார்கள், உற்பத்திச் செலவையாவது கணக்கிட்டு, பா.ஜ.க அரசு மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்ய லாமே?

பா.ஜ.க மிகப்பெரிய சக்தியாக உருவெ டுத்திருக்கும் நிலையிலே பா.ஜ.க வில் நிறுத் தப்பட்ட 5 முஸ்லீம்களும் தோல்வியடைந் தது எப்படி? இதற்கான காரணங்களை பா.ஜ.க கண்டறியுமா?

இப்படி ஏராளமான எதிர்பார்ப்பு களோடு, இந்தியத் திருநாட்டின் குடி மகன்கள், ஏக்கப்பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றாமல் புதிய ஏற்றம் தருமா? நல்ல மாற்றம் தருமா? வாழுமா, ஜனநாயகம்! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- கா.நா.பாலு, மேடடூர் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-2/81437.html#ixzz33XGrAPDr

தமிழ் ஓவியா said...


கவிவேந்தர் கா. வேழவேந்தனின் கவிதைத் தேன் - சுவைப்போம்!

புரட்சிக் கவிஞர் அவர்களது பாரதிதாசனின் பரம்பரையைச் சார்ந்த பெருமைக்குரிய கவிஞர்கள் வரிசையில் வரும் கவிவேந்தர் தோழர் கா.வேழவேந் தன் திமுக வின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவர்.

கொள்கையில் மாறாத குணக்கவிஞர் மிசா காலத்தில் எங்களுடன் தொல்லைகளை ஏற்ற தோழர்.

பெரியார் - அண்ணா - கலைஞர் தம் கொள்கை வாழ்க்கை நெறிகளை கவிதைத்தேனில் குழைத்து தெவிட்டாத தேன் பாகாய் ஆக்கித்தரும் பகுத்தறிவுக் கவிஞர்.

நாடறிந்தோர் வாழ்வில் என்ற தலைப்பில், உலகறித்த தலைவர்கள், சிந்தனையாளர், அறிவியல் மேதைகள் வாழ்வில் நிகழ்ந்த சரித்திர சுவை நிகழ்வு களின் சங்கமக் கவிதைத் தொகுதி ஒன்றினை 30.5.2014 மாலை பெரியார் திடல் நிகழ்ச்சி ஒன்றில் நேரில் அளித்தார்.

உடன் படித்தேன்; சுவைத்தேன்; முடித்தேன் ஆம் அத்தனையும் கொம்புத்தேன்! அண்ணாவின் எளிமையும் ஈரமும்! (பக்கம் 97)

எளிமைக்கே இலக்கியமாய்த் திகழ்ந்த அண்ணா
ஈடில்லாப் பேருழைப்பால் முதல்வர் ஆனார்!
பளபளக்கும் மாளிகையும் வேண்டாம்; என்றன்
பழைமைமிகு சிறுவீடே போதும்! என்றார்!

அளவினிலே படகைப்போல் வடிவம் கொண்ட
ஆடம்ப ரக்காரும் வேண்டாம்! என்றார்!
மிளகுக்கே உளபெருமை தோற்றத் தாலா?
மேன்மைமிகு பயனால்தான்! என்றே சொன்னார்!
அன்றைக்கு வெளியூரின் நிகழ்ச்சி ஒன்றை
அவர் முடித்துத் தமதில்லம் நுழைந்தார்; வீட்டில்
என்றைக்கு மில்லாமல் புதுநாற் காலி
எழில்சோஃபா குவிந்திருக்கக் கண்ட அண்ணா,
இன்றைக்குப் பதவியிலே இருப்ப தாலே
இவைகுவியும்; இப்பதவி போன பின்னால் அன்றைக்கே கொண்டுவந்தோர் அள்ளிப் போவார்;

அதனாலே இவற்றையெலாம் அனுப்பு என்றார்.

அவ்வரலாற்று நிகழ்வுகளை தலைவர்களைப் பற்றியவை மிகச்சுருக்கமான முறையில் ஒரே பக்கத்தில் வேழத்தின் பிளிறலாக, வேங்கையின் பாய்ச்சலாக - சிற்சில வற்றில் குயிலின் இசையாகப் பாடியுள்ளார்.

படித்தால் உலகத் தலைவர்களின் அரிய பண்பு, வாழ்க்கை நிகழ்வுகளை, நம் முன் விதைக்கிறார் வேழவேந்தன் என்பது புரியும்.

எடுத்துக்காட்டாக, இரண்டு, மூன்று கவிதைகள் இதோ
பெரியாரின் அறிவுக்கூர்மை (பக்கம் 63) என்ற தலைப்பிலான கவிதையில்
பொதுவுடைமைப் பூஞ்சோலை ரஷ்ய நாட்டைப்
போய்ப்பார்த்துத் திரும்பியபின் குழந்தைக்கெல்லாம்
புதுமையுடன் பெயர்சூட்டி, ரஷ்யா என்றும்
புகழ் மாஸ்கோ என்றெல்லாம் அழைக்கச் சொன்னார்!
இதுவென்ன? மண்பெயரா மழலை கட்கே?

எப்படித்தான் ஏற்ப தென்றார் சிலரோ! அய்யா, சிதம்பரத்தைப் பழனியினை, மதுரை தன்னைத்திருப்பதியை ஏற்பதுபோல் ஏற்பீர்! என்றார்!

எளிமைக்கே இலக்கியமான காமராசர்! (பக்கம் 115)

என்ற கவிதையில் இரண்டாம் பத்தியில் உள்ள ஒரு செய்தி கவிதை வரிகளில்
கோட்டைவிட்டு வீட்டுக்கே வந்த தோன்றல்
குழுமிநின்ற பொதுமக்கள் குறைகள் கேட்டார்;
கூட்டத்துள் இருந்த ஒரு பழைய தொண்டர்
கும்பிட்டார்; கொண்டுவந்த ஓர் அழைப்பை
நீட்டி, மகள் மணத்தை வந்து வாழ்த்த வேண்டும்;
நெடுங்கால ஊழியன்நான்! எனநெ ளிந்தார்.
கேட்டவுடன் வரஇயலா தென்னால்; சென்றே
கிளைசூழ நடத்துங்கள்! முதல்வர் சொன்னார்.
அன்றைக்குத் திருமணநாள்; அந்தத் தொண்டர்

அதிர்ச்சிபெற எதிர்பாரா வகையில் ஆங்கே சென்றடைந்தார் பெருந்தலைவர்! வருகை நல்கும்

செய்தியை ஏன் கூறவில்லை? கேட்டார் அன்பர்.
அன்றைக்கே வருவதை நான் சொன்னால், நீங்கள்
ஆர்ப்பாட்ட வரவேற்புச் செலவு செய்வீர்
என்பதனால் கூறவில்லை! என்றார் செம்மல்!
இருவிழிகள் குளமாக நெகிழ்ந்தார் தொண்டர்!
கலைஞரின் சொல்விளையாட்டு (பக்கம் 141)
அன்றைக்கு விழாஒன்றில் பங்கு கொள்ள
அவசரமாய்ச் சாலைவழிப் பயண மானார்;
சென்னையினைத் தாண்டியபின் சிற்றூர் ஒன்றன்
சீர்ஊராட் சித்தலைவர் வழிம றித்தே
அன்போடு நிறுத்தியபின் மாலை யிட்டார்;
அடுக்கடுக்காய்க் கோரிக்கை தொடுத்துச் சொன்னார்;

தன்பெயரில் கருணையையும் நிதியும் வைத்த தாராள முதல்வர்நிதி தருவார்! என்றார்.
பலலட்சம் ஒரே ஊர்க்குக் கேட்ட வர்க்குப் பக்குவமாய் நம் கலைஞர் பதிலாய்ச் சொன்னார்;

இலங்குகின்ற என் பெயரில் கருணை என்னும்

எழிற்சொற்கோ மூன்றெழுத்து; நிதி என் றீங்கே
சொலும்போதோ இரண்டெழுத்தே தேறும்! என்றால்
சுடர்க்கருணை மிக அளிப்பேன் இன்று; பின்னர்
நிலவுகின்ற நிதி நிலைமை ஆய்ந்தளிப்பேன்;
நேரமிங்கே கடக்கிறதே! என்றார்; சென்றார்!

அன்புடனும், உரிமையுடனும் இந்த கவிவேந்தருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்டுதல் நமது கசப்பான கடமை யாகும்.

எமன் போன்ற கவிதை உவமைக்காகக்கூட கருத்துக்கள் - மூடநம்பிக்கையை புதுப்பிக்கும் வகையி ருப்பதால் கையாளாமல் தவிர்க்க வேண்டும்.

பகுத்தறிவாளர்களும் நம் கவிஞர்கள் தானே; இப்படிப்பட்டவைகளை தவிர்த்திட புதிய படைப்பாளி களுக்கு புது உலகம் காட்ட வேண்டாமா?

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/81433.html#ixzz33XGzJEcA

தமிழ் ஓவியா said...


உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்


இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. புதுபுது நோய்களால் ஏராளமானோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டு உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய். முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம்.

மனிதன் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண் களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இவை பெண் களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம் வரை இருக்கும். மேலும் இந்தியர்கள் மற்றும் ஆசியர் களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை. குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவை.

அறிகுறிகள்: மாரடைப்பின் அறிகுறிகளை அடை யாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம்.

நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம். மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம். எனவே நீரிழிவு நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/81408.html#ixzz33XHPpdbQ

தமிழ் ஓவியா said...

மூட்டு வலியும்.. இதயமும்.. சில ஆலோசனைகள்

எலும்புகளை மட்டுமல்ல... இதயத்தையும் பாதிக்கும் மூட்டுவலி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான உடல் வலி...ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான வலி... ஆக, நாமும் சரி, நம்மைச் சுற்றியிருப்போரும் சரி, வலியின்றி வாழ்ந்த நாட்களை எண்ணிவிடலாம்.

சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு வலியின் தீவிரம் எல்லை மீறும் போதுதான் அதை நாம் கவனிப்போம். ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டீர்கள்? என்று ஆரம்பிக்கிற மருத்துவர், வலியின் தொடக்கத்தில் நாம் உணர்ந்து, அலட்சியம் செய்த அறிகுறிகளைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். அப்போது காலம் கடந்திருக்கலாம்.

சின்ன அறிகுறியுடன் உங்களை சீண்டிப் பார்க்கிற வலிகளை சீக்கிரமே அடையாளம் கண்டு கொண்டால், அதன் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் வலி நிர்வாக மருத்துவர் குமார். அந்த வகையில் பரவலாக எல்லோ ரையும் பாதிக்கிற மூட்டுவலிகளைப் பற்றி அவர் கூறியதாவது:-

மூட்டுவலி என்பது பொதுவான பெயர். இதில் ருமட்டா யிட் ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த் ரைட்டிஸ், ஆங்கிலோசிங் ஆர்த்ரைட்டிஸ், கவுட் ஆர்த்ரைட்டிஸ் எனப் பல வகைகள் உள்ளன. எலும்பு மூட்டுகளைப் பாதிக்கும் நோய்கள் இவை எல்லாம்.

மூட்டுவலிக்கு பொதுவான சில ஆலோசனைகள்:

அறிகுறிகள் சின்னதாக இருந்தாலும் அலட்சியப்படுத் தாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகவும். ஆரம்பக் கட்ட பரிசோதனையின் மூலம் நோய் தீவிரமடைவதைத் தவிர்த்து, வலியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்ட காலத் துக்கு, குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும். சுய மருத்துவம் ஆபத்தானது. உடற்பயிற்சிகள் மிக முக்கியம்.

அவற்றின் மூலம்தான் மூட்டுகளில் வலி வராமல் காக்க முடியும்.நோய் வந்த பிறகு பயிற்சி என்பதைத் தவிர்த்து, பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்துப் பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு பயனளிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/81408.html#ixzz33XHXlVfg

தமிழ் ஓவியா said...


நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை


பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய இலைகளையும் சேர்த்து தான் நமக்கு நினைவு வரவேண்டும். அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

கொய்யா இலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல., பல அற்புதமான குணாதிசயங்களை கொண் டுள்ளது. காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யா இலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்து விடும் சிறந்த உணவாகும். இதயநோய், புற்றுநோய், அல் சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களி லிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுவவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

கொய்யா இலையின் பயன்பாடுகள்

நீரிழிவை கட்டுப்படுத்தும்: கொய்யாஇலை ஆரோக் கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப் படுத்தியுள்ளது. இது நீரிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சும் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத் தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளன.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட் கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு தன்மையை கொண் டுள்ளது.

மேலும் இந்த கொய்யா இலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

Read more: http://viduthalai.in/page-7/81409.html#ixzz33XHiLve1

தமிழ் ஓவியா said...

தேங்காயில் புதைந்துள்ள சத்துகள்

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப் படுகிறது.

தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கி யுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.

மனிதனுக்கு அழகும் ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அருந்திய உடனேயே புத்துணர்ச்சியை அளிக்கக் கூடியது, இளநீர். அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காயை சாப்பிட வேண்டும். ஏனெனில், தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் ஈ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது.

சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந் துள்ளது.

100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண் டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.

புதிய இளநீரில் உள்ள நீரானது நீரிழிவு நோயை போக்க கூடியது. தாய்ப்பாலுக்கு இணையானது. தேங்காய் எண்ணெய் உடலை குளிர்ச்சியுடன் பாதுகாக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு புத்துயிர் ஊட்டுவதில் தேங்காய்க்கு நிகர் தேங்காய் தான். தேங்காய் பாலை மலமிளக்கியாகவும் சிறுநீர் கோளாறுகளுக்கும் எலும் புருக்கி நோய்க்கும் பயன்படுத்துகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-7/81409.html#ixzz33XHvdrwh

தமிழ் ஓவியா said...


ஜூன் 3

இந்நாள் - திராவிடர் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ்நாட் டின் வரலாற்றிலும் ஒரு முக்கிய கல்வெட்டைப் பிரசவித்த பொன்னாள்! கலைஞர் பிறந்த நாள் (1924) என்றாலும் அந்நாள் எத்தகையது!

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜாதிகளைக் கடந்து சமயங்களைப் புறந்தள்ளி, மொழி உணர் வால் ஓரினம் என்ற தமிழினக் கோட்பாட்டை உணர்ச்சிப் பொங்க உரு வாக்கிய ஒரு போராட் டம் உண்டு என்றால் அது 1938 இந்தி எதிர்ப் புப் போராட்டமாகும்.

சக்ரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோது, பள்ளிகளில் இந்தித் திணிப்பை அறிவிப்பு செய்தார் (10.8.1937).

தந்தை பெரியார் தலைமையில் தமிழினம் பொங்கி எழுந்தது. சமஸ் கிருதத்தைப் படிப் படியாகப் புகுத்தவே இந்தியைக் கொண்டு வருகிறேன் என்று பச்சையாக சென்னை இலயோலா கல்லூரியில் பேசினாரே!

ஆம், பூனைக்குட்டி வெளியில் வந்தது - சும்மா இருப்பாரா சுய மரியாதைச் சூரியன் தந்தை பெரியார்?

தோள் கட்டி, தொடை தட்டி போர்க் குரல் எழுப் பினார் அதன் விளைவு இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களுக்காக சிறைச் சாலை கதவு முதன் முதல் திறந்த நாள் தான் இந் நாள் (1938).

இந்நாளில்தான் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு - தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில்.

இந்தி ஒழிய வேண் டும் அல்லது நான் ஒழிந்து போக வேண்டும் என்று பல்லடம் பொன்னு சாமி என்ற தோழர் பிரதம அமைச்சர் ஆச்சாரியா ரின் வீட்டு முன் பட்டி னிப் போராட்டம் நடத் தினார். அந்தக் காரணத் துக்காகவும் இன்றுதான் (ஜூன் 3 -1938) சிறைக் கொட்டடியில் தள்ளப் பட்டார்.

மறைமலை அடிகள் தலைமையில் கோடம் பாக்கம் மாநாட்டுக்கு இந்தத் தகவல் கிடைத் தது தான் தாமதம், மாநாடு - ஊர்வலமாக உருப் பெற்றது.

பிரதமர் ராஜாஜி வீட்டுமுன் களம் அமைக் கப்பட்டது முழங்கினர் தலைவர்கள் சி.டி. நாய கம் (இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரி) காஞ்சி மணிமொழியார் சாமி சண்முகானந்தா ஆகியோர் இரவு 12 மணி வரை முழங்கினர். முடி வில் அவர்களும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இந்தி எதிர்ப்புக்காக அன்று திறந்த சிறைச் சாலை 21.2.1940 இல் தான் முற்றுப் பெற்றது. இந்த நாளை மறக்கத்தான் முடியுமோ!

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/81456.html#ixzz33d3hUvFk

தமிழ் ஓவியா said...


கலைஞர் பிறந்த நாள் சிந்தனை எது?

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ் நாடெங்கும் இன்று கொண்டாடப்படு கின்றது. அந்த வாழ்த்துக்களோடு நாமும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார்கள். குறிப்பாக நடந்து முடிந்த 16ஆம் மக்களவைத் தேர்தல் குறித்தும், சிறப்பாக தேர்தல் குறித்தும், முக்கியமாக தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்தது குறித்தும் கருத்துக்களும், தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

நடந்து முடிந்த தேர்தலில் மாநில அரசின் அத்துமீறல்கள், தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்புப் போக்கு, ஊடகங்களின் நடு நிலை பிறழ்ச்சி, வாக்குகள் விலைப் பேசப்பட்டது பற்றியெல்லாம் பலரும் பேசியுள்ளனர்.

கலைஞர் பிறந்த நாள் விழா நாடு தழுவிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதில் காணப்படும் மக்கள் திரள் இளைஞர்கள் எழுச்சி - தேர்தல் முடிவுகளால் திமுக துவண்டுப் போய் விடவில்லை என்பதை வெளிப்படுத்தியிருப்பது நல்லதோர் அறிகுறியாகும்.

இதற்கு முன்பும் கூட திமுக இத்தகைய தோல்வி களைச் சந்தித்ததுண்டு. அதற்குப் பிறகு புதுச்சேரி யையும் சேர்த்து 40க்கு 40 இடங்கள் வெற்றி பெற்றி ருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தேர்தல் தோல்வியையே அறியாதவர் என்று கணிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் அ.இ.அ.தி.மு.க. 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் தோற்று இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதுண்டு.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே அடிக் கட்டுமானமுள்ள கட்சி அமைப்பைக் கொண்டதாகும். அதன் காரணமாகத்தான் 13 ஆண்டுகள் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இழந்த நிலையில் மீண்டும் ஆட்சி லகானைப் பிடித்தது.

அதே நேரத்தில் 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப் பீடத்துக்கு வர முடியவில்லை. தி.மு.க. நிலையோ முற்றிலும் வேறானது.

இந்த நேரத்தில் முக்கியமாக எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்தொன்றுண்டு. திமுக ஆட்சிக்கும், மற்ற கட்சி ஆட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாலைகள் போடுவார்கள்; தெரு விளக்குகளைப் போடுவார்கள் - பாலங்களைக் கட்டத்தான் செய்வார்கள்.


தமிழ் ஓவியா said...

இவற்றையெல்லாம் கூட வேறு எந்த ஆட்சியிலும் நடக்காத அளவுக்குப் பெரிய அளவில் சாதித்துக் காட்டிய தி.மு.க ஆட்சி - வேறு எந்த அரசியல் கட்சிக் கும் இல்லாத தந்தை பெரியார் அவர்களின் சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகள் கொண்டதால் இந்தியா விலேயே வேறு எங்கும் சாதிக்கப்படாதவற்றைத் தனித் தன்மையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களை எடுத்துக் கொள்ளலாம்; ஜாதி மதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று கருதி, பொருத்தமாக தந்தை பெரியார் பெயரை அதற்குச் சூட்டிய பெரு மகன்தான் மானமிகு கலைஞர்அவர்கள். தமிழுக்குச் செம்மொழித் தகுதி, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, சமூக சீர்திருத்தத்துறை - என்ற வரிசையில் சீர் தூக்கிப் பார்க்கட்டும்; கலைஞர் அவர்களின் பக்கத்தில் வந்து நிற்கும் தகுதிகூட வேறு யாருக்கும் கிடையாதே!

இன்னும் சொல்லப் போனால் இது போன்ற சிந்தனை இல்லாததோடு மட்டுமல்ல; கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டங்களை பலவீனப்படுத்தும் மனப்போக்கும் அத்திட்டங்களை மேலே வளர்க்கும் மனமற்ற போக்கும்தான் இன்றைய மாநில ஆட்சியில் பச்சையாகத் தெரிகின்றன.

நியாயமாக இப்படி நடந்து கொண்டதற்காக அ.இ.அ.தி.மு.க.வுக்கு நடந்து முடிந்த தேர்தலில் நாட்டு மக்கள் சரியான பாடத்தைப் போதித்திருக்க வேண்டும்;

நடந்து இருப்பதோ தலை கீழ்!

இந்த நேரத்தில் இதுபற்றிதான் சிந்திக்க வேண்டும்.

கலைஞர் ஆட்சியின் தனித்தன்மையான சாதனைகள் மக்களைச் சென்றடையவில்லையா அல்லது கலைஞர் ஆட்சியின் சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்களை முடக்கிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் பிற்போக்கான நடவடிக்கைகள் மக்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா? என்பது தான் முக்கியமான வினாவாக இருக்க முடியும்.

இதில் ஊடகங்களின் நடுநிலை தவறிய ஒரு சார்புக்கு முக்கிய இடம் உண்டு. இன்னொரு காரியத் தையும் இந்த ஊடகஙங்கள் செய்தன. தேர்தல் நெருங்க நெருங்க - திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு வளர்ந்து வருகிறது என்ற தொனியில் செய்திகளைக் கசிய விட்டதுகூட ஆளுங் கட்சிகளை மறைமுகமாக விழிப்படையச் செய்யும் தந்திரமே!

நிலையைப் புரிந்து கொண்ட ஆளும் கட்சியோ தேர்தல் ஆணையத்தைக் கையில் போட்டுக் கொண்டு வாக்குகளை விலை பொருளாக்கி விட்டது.

வாக்குகள் வாங்கப்பட்டன. பணப் பட்டுவாடா நடைபெற்றதைத் தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையமே வெட்கமின்றி ஒப்புக் கொண்டதே.

முத்தமிழ் அறிஞர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டி ருக்கும் அதே வேளையில், ஆக்க ரீதியான சிந்தனை கள், செயல் திட்டங்களுக்கு அடுத்தடுத்துத் தேவைப் படுகிறார்.

கலைஞர். - அவர்களின் பிறந்த நாள் விழாவின் சிறப்பு என்பது இதில் நாம் பெறும் வெற்றியைப் பொறுத்ததாகும்.

Read more: http://www.viduthalai.in/page-2/81468.html#ixzz33d4357m6

தமிழ் ஓவியா said...


முன்னேற்றம்


தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை; பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே! - (விடுதலை, 21.6.1939)

Read more: http://www.viduthalai.in/page-2/81467.html#ixzz33d4XU5fd

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

பொன்னார் மேனி யன் (சுந்தரர்)

சுடலைப் பொடி நிறத் தவன் (சம்பந்தர்)

பவளம் போல் மேனி யன் (அப்பர்)

- சிவனைப் பற்றி அடி யார்கள் இப்படிப் பாடி வைத்துள்ளார்களே - ஒரு ஆசாமி எப்படி இத்தனை நிறம் உடைய வனாக இருக்க முடியும்? பச்சோந்தியோ!

Read more: http://www.viduthalai.in/e-paper/81463.html#ixzz33d4lTMKZ