Search This Blog

14.6.14

மாமாங்கத்தில் பார்ப்பன கும்மாளம்!மாமாங்கத்தின் அற்புதம்-பெரியார்
மாமாங்கத்தில் பார்ப்பன கும்மாளம்

கும்பகோண மாமாங்கம் பார்ப்பனர்கள் புரட்டு என்றும், அவர்களது விளம்பரங்களுக்கும் பெருமைக்கும், லாபத்துக்கும் ஆதாரம் என்றும் நாம் சொன்னோம். இப்போது அது சரியா? இல்லையா? பாருங்கள். “தோழர்கள் ரங்கசாமி ஐயங்கார் பொருட்காட்சியை திறந்தார். சி. ஆர். சீனிவாசய்யங்கார் சங்கீத மகாநாட்டைத் திறந்தார், விசாலாட்சி பாடினார். முத்தையா பாகவதர் கதை செய்தார். டி.பி. கல்யாணராம சாஸ்திரிகள் வரவேற்பு தலைவர். ராமசாமி அய்யர், டைகர் வரதாச்சாரியார், கணபதி சாஸ்திரி, அலமேலு ஜெயராமய்யர், மற்றும் குமரய்யர், சுப்பைய்யர், ராமசாமி சாஸ்திரி, ரங்காச்சாரி, சுந்தரகனபாடி, சிங்கார கனபாடி, ஆச்சாரிய ஸ்வாமிகள் என்றெல்லாம் பார்ப்பன நபர்களே எங்கும் தோன்றுவதும் ஏதோ இரண்டொரு பார்ப்பனரல்லா முண்டங்கள் இவர்களுக்கு வால்பிடிப்பதுமாய் இருப்பதை அவர்களது (பார்ப்பனர்களது) பத்திரிகைகளிலேயே காணலாம். ஆகவே மாமாங்கம் பார்ப்பனர் சூட்சி என்றும், அவர்களது வாழ்வுக்கே ஏற்பட்டதென்றும் சொல்லுவதில் என்ன பிழை இருக்கிறது. இதை பார்ப்பனரல்லாத சோணகிரிகள் உணர வேண்டாமா?

 ----------------------குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 19.02.1933
 ************************************************************************************
 
“மாமாங்கத்தின் அற்புதம்”
- சித்திரபுத்திரன்

புராணமரியாதைக்காரன் கேள்வி:- ஐயா, சுயமரியாதைக்காரரே கும்ப கோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம்.

சுயமரியாதைக்காரன் பதில்:- என்ன அற்புதமய்யா?

பு-ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேராய் இருந்தபோதிலும், கூழாயிருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை. இதற்கு பதில் சொல் பார்ப்போம்.


சு-ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான். இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவுசெய்து கேள்க்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும். அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேரு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிரமாக ஆகிவிடும். குளிக்கிர ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த் தவம்தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண்பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.


பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டுவிட்டுப்போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?


சு-ம:- இதுவும் நல்ல கேள்விதான், பதில் சொல்லுகிறேன். மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில் மறைவே இருக்காது. ஒரு மனிதன் வீட்டைவிட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்து கொள்ளவேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆகவேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார் கள். குளத்தில் இரங்கி துணியை நனைத்துக்கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டரக்கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.


பு-ம:- அந்தப்படி அந்தக் குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?


சு-ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும், தீர்த்தத்தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டிருக் கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும் குளம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால் முனிசிபாலிட் டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப்பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.


                   ------------------- ”குடி அரசு” - 26.02.1933 இதழில்  சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய உரையாடல்

32 comments:

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை அரிச்சுவடி


1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சு மாறிகள் பேச்சு

2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி

3. இதிகாசம் என்பது - மதிமோச விளக்கம்

4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே.

5. ஊழ்வினை என்பது - ஊக்கத்தை கெடுப்பது.

6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம்

7. கல்லை தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம்

8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது

9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம்

10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல்

11. சூத்திரன் என்றால் - ஆத்திரங் கொண்டடி

12. திதி கொடுப்பது - நிதியைக் கெடுப்பது

13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்கு கேடு

14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க

15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற் கொள்ளைக்காரர்கள்

16. புராணங்கள் - பொய் களஞ்சியங்கள்

17. பேதமென்பது - வேதியருக் கணிகலம்

18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்

19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள்

20. மதக்குறி என்பது - மடையர்க்கறிகுறி

21. முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே

22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது

23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது

24. ஜாதி வேறுபாடு - ஜன சமூகத்திற்குக் கேடு

25. க்ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு

- குடிஅரசு 23.2.1930

Read more: http://viduthalai.in/page-7/82104.html#ixzz34ZTNEPXz

தமிழ் ஓவியா said...


பைபிள் படிப்பவர்கள் பதில் கூறுவார்களா?


ஆதியிலே தேவன் வானத்தையும்; பூமியையும் இன்னும் பலவற்றையும் படைத்து முடிவில் ஆதாம் - ஏவாள் எனும் இரண்டு பேரைப் படைத்தார்; (என்ன கஞ்சத்தனம் பாருங்கள்?) அவர்களுக்குக் காயீன், ஆபேல் எனும் இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்; இருவரும் கர்த்தருக்குப் பூஜை செய்தார்கள். ஆபேலின் பூஜையை கர்த்தர் ஏற்றுக் கொண்டார்; பொறாமை அடைந்த காயீன் ஆபேலைக் கொன்று விட்டான்.

கோபமடைந்த கர்த்தர் காயீனை நாடு கடத்தினார்; பிதாவே! அங்கிருப்பவர்கள் என்னைக் கொன்று விடு வார்களே என்றான் காயீன்.

காயீனை கொல்லும் எவர்பேரிலும், ஏழு பழிசுமக்கக் கடவது என்று கர்த்தர் அருளினார், இது பைபிள் சொல்கிற கதை; முதலில் கர்த்தர் படைத்தது ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர், அவர்களின் பிள்ளைகள் இருவர்; ஆக மொத்தம் நாலே பேர்; அதிலும் ஒருவன் இறந்து விட்டான்; பாக்கி இருப்பது மூன்றே பேர்; அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? ஒரு வேளை இந்துக்கள் இருந்தார்களா? கிறிஸ்தவர்களை மட்டும்தான் படைத் தாரா? அல்லது படிப்பவர்கள் தான் மடையர்களா?

தகவல்: ச.ராமசாமி, சென்னை-18

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZTeraAY

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZTnKDBn

தமிழ் ஓவியா said...


இந்துமதம் - சங்கரமடங்கள் பற்றி ஜெயப்பிரகாஷ் நாராயண்


ஒரு இந்துவை இனம் குறிப்பது வேதாந்தம் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ரஷ்யர் அல்லது ஒரு ஜெர்மானியர் வேதாந்தியாக இருக்கலாம். ஆனால், அவர்களை இந்துக்கள் என்று யாரும் கருதுவது இல்லை.

ஜாதியும், தீண்டாமையும் மட்டுமே ஒரு இந்துவை இனம் காட்டுபவை அல்ல. ஆனால், வழக்கங்கள், சடங்கு கள், அனுஷ்டானங்கள். கற்களை, மரங்களை, மிருகங் களை நாம் வழிபடுவது, கர்ம காண்டம் என்பது - ஆகியவைகளே ஒரு இந்துவை இனம் காட்டுகின்றன.

படு பயங்கரமான சிக்கலாகக் சிக்கிக் கிடக்கும் இந்த வலைதான் இந்து சமுதாயத்தை பிணைத்து வைத் திருப்பது. அத்துடன் இந்து சமுதாயத்தின் தார்மீக, பொரு ளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருப்பது இதுவே ஆகும்.

இந்தநாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பரந்து பட்டுக் கிடக்கும் எண்ணற்ற சங்கர மடங்களைப் பாருங்கள். அவை குருட்டுப் பழைமை வாதத்தின் குகைகளாக மட்டுமா இருக்கின் றன? பச்சையான சுரண்டல்களாக வும் அல்லவா இருக்கின்றன?

இந்து மதத்தின் உச்சக்கட்ட உறைவிடங்களான சங்கர பீடங் களையே எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கே பதவி வகித்துக் கொண்டிருப்பவர்களில் குறைந்த பட்சம் ஒரு சங்கராச்சாரியாவது (பூரி) குருட்டுப் பழைமை வாதத்துக்கும், வெறிபிடித்த ஆச்சாரத்துக்கும் முன் மாதிரியாக விளங்கவில்லையா? இந்த டில்லிப் பட்டணத்தையே சில ஆண்டுகளுக்கு முன்னால் அவமானத்துக் குள்ளாக்கிய பசுவதைத் தடை போராட்டத்துக்குப் பின்னால் இருந்து தூண்டிவிட்ட சக்திகளில் இவரும் ஒருவர் என்பது நினைவில் கொள் ளத்தக்கது. நம்முள்ளே நாம் திறந்த உள்ளத்துடன் இருப்போம்.

நமது சமுதாயம் சீரழிந்து கொண் டிருக்கும் ஒரு சமுதாயம். நமது சமுதாயத்தைப் பிடித்துக் கொண் டிருக்கும் ஒட்டடைகளிலிருந்து அதை விடுவிக்கவும், அதை சுத்தப் படுத்தவும் ஒரு புதிய புத்தனே தேவைப்படுகிறான் என்பதை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுவோம்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ், 20.9.1972)

Read more: http://viduthalai.in/page-7/82102.html#ixzz34ZTyauQb

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

தீண்டாமை விலக்கு என்றால் தீண்டாத வனைத் தொடுவதும் அவனை மோட்சத் திற்கு அனுப்ப என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும் தானா என்று கேட்கிறேன். ஒரு மனிதனுக்குச் சாப்பாடும், உடையும், இடமும் கல்வியும் வேண்டுமா? மனிதனைத் தொடுவதும், செத்தபிறகு அனுபவிப்பதான மோட்சமும் வேண்டுமா என்று கேட்கிறேன்.

Read more: http://viduthalai.in/page-7/82102.html#ixzz34ZU6yKLJ

தமிழ் ஓவியா said...


பால்ய விவாகம்!


குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார்கள்?

தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி. அதை ராத்திரி அறுத்தாய்விட்டது.

குழந்தை: எனக்குத் தெரியவில்லையே!

தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை.

குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?

தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!

குழந்தை: அவன் போனால் போகட்டுமே! வேறு யாரை யாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்? அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன் ஊ! ஊ!! ஊ!!!

குடிஅரசு, 1-4-1928

Read more: http://viduthalai.in/page-7/82103.html#ixzz34ZUFejKP

தமிழ் ஓவியா said...

பாதிரி காட்டிய படங்கள்

பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப்பட்டி ருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.

ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக்கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார்.

அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கையில்லாதவர்கள், ஆண்டவனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.

Read more: http://viduthalai.in/page-7/82103.html#ixzz34ZUOOw5F

தமிழ் ஓவியா said...

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் தமிழுறவுகளுடன் தமிழர் தலைவர்

படம் 1: ஓமானைப்பற்றி, என்.அரவிந்தன் அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள நூலை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரிடம் வழங்கினார். உடன் பஹ்வான் எக்செல் எல்.எல்.சி. வணிக வளர்ச்சி மேலாளர் வி.வெங்கடேஷ் உள்ளார்.

படம் 2: மஸ்கட் தமிழ்ச்சங்க செயலாளரும், ஓமான் ரெஃபரெஷன்மென்ட் நிறுவன தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு மேலாளருமான பஷீர் மொகமது அவர்கள் எழுதிய பாலைப்பூக்கள் நூலினை வேந்தரிடம் வழங்கினார். உடன் டிஎச்எல் க்ளோபல் ஃபார்வேர்டிங் மற்றும் நிறுவன எல்.எல்.சியின் நாட்டின் விற்பனை மற்றும் சந்தை மேலாளர் கார்த்திக் ஹரிபாபு, ஓமான் எண்ணெய் நிறுவன செயல் திட்ட இயக்குநர் டாக்டர். சண்முகம் பாலாஜி, சன் லாஜிஸ்டிக்ஸ் இன்டர்நேஷனல் இயக்குதல் மேலாளர் எம்.எஃப்.கமீல் தாஹிர் கனி, மாதிர் எல்.எல்.சி. பொது மேலாளர் என்.அரவிந்தன், பஹ்வான் எக்செல் எல்.எல்.சி வணிக வளர்ச்சி மேலாளர் வி.வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர்

தமிழ் ஓவியா said...

படம் 1: மஸ்கட் தமிழ்ச்சங்க செயலாளரும், ஓமான் ரெஃபரெஷன்மென்ட் நிறுவன தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு மேலாளருமான பஷீர் மொகமது அவர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரைப்பற்றிய எழுதிய கவிதைப் பாராட்டுப் பத்திரத்தை வழங்கினார். உடன் டிஎச்எல் க்ளோபல் ஃபார்வேர்டிங் மற்றும் நிறுவன எல்.எல்.சியின் நாட்டின் விற்பனை மற்றும் சந்தை மேலாளர் கார்த்திக் ஹரிபாபு, ஓமான் எண்ணெய் நிறுவன செயல் திட்ட இயக்குநர் டாக்டர். சண்முகம் பாலாஜி, சன் லாஜிஸ்டிக்ஸ் இன்டர்நேஷனல் இயக்குதல் மேலாளர் எம்.எஃப்.கமீல் தாஹிர் கனி, மாதிர் எல்.எல்.சி. பொது மேலாளர் என்.அரவிந்தன், பஹ்வான் எக்செல் எல்.எல்.சி வணிக வளர்ச்சி மேலாளர் வி.வெங்கடேஷ் மற்றும் அவர் குடும்பத்தினர் உள்ளனர்.

படம் 2: பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில், மஸ்கட் தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.கே.ஜானகிராமன் அவர்களுக்கு, அய்யா உருவம் பொறித்த, தஞ்சாவூர் தட்டும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக கையேடுகள், குறுந்தகடுகள் அடங்கிய தகவல் குறிப்புகளை வழங்கினார் பல்கலைக் கழக வேந்தர் அவர்கள். உடன் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் நல்.இராமச்சந்திரன் உள்ளார்.

ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழகம், ஆகென் பல் கலைக்கழக நிகழ்ச்சி களை முடித்துக் கொண்டு 7-ஆம் தேதி இரவு 12.30 மணியளவில் ஓமான் விமானம் மூலம் ஓமான் நாட்டின் தலை நகர் மஸ்கட் வந்த டைந்த தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி மற்றும் பேராசிரியர் முனைவர் நல்.இராமச் சந்திரன் ஆகியோரை நமது இயக்க ஆர்வலர் திருவாளர் வீ.வெங்க டேஷ் மற்றும் அவர் வாழ்விணையர் திருமதி வெ.சாமுண்டீஸ்வரி ஆகிய நண்பர்கள் விமான நிலையம் வந்து வரவேற்று தங்கள் இல் லத்திற்கு அழைத்துச் சென்றனர். ஜெர்மனி_- பிராங்க் பர்ட்டிலிருந்து வரும் வழியில் டாக்டர் சண் முகம் பாலாஜி என்ற ஒரு வேதிப் பொறிஞர் தற்போது ஓமான் எண்ணெய் நிறுவனம், மஸ்கட்டில் இயக்குநராக பணியாற்றுபவர்.

தன்னை அறிமுகம் செய்து கொண்டு நான் சீர்காழியைச் சார்ந்தவன். அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியல் படித்து பின்னாளில் முதுநிலை, டாக்டர் பட் டங்கள் எல்லாம் பெற்று இங்கு வந்து பணியாற்று கிறேன் என்று அறி முகப்படுத்தியதோடு மட் டுமல்லாமல், நாங்க ளெல்லாம் இந்த அள விற்கு வருவதற்கு கார ணமானது, தந்தை பெரி யாரின் சமூகச் சீர்திருத் தங்களும் அவர் தம் கொள்கைகளும்தான் என்று மிக உணர்ச்சி பொங்க தெரிவித்து, நாளை நான் மற்ற நண்பர்களோடு தங்களை சந்திக்கிறேன் எனக்கூறி விடை பெற்றார்.

தமிழ் ஓவியா said...


அது மட்டுமல்லாமல் பெரி யார் மணியம்மை பல் கலைக் கழகத்திற்கு உரிய உதவிகளையும் அளிக்கி றேன் என்ற தன் எண் ணத்தையும் வெளிப்படுத் தினார்.

மிகச் சிறிய அரபு நாடு

ஓமான் நாட்டைப் பொறுத்தவரை மிகச் சிறிய அரபு நாடாகும். மக்கள் தொகை சுமார் 40 லட்சம். 12 மொழி களைக் கொண்ட நாடாக இருந்தாலும் அரபியும், ஆங்கிலமும் அதிகமாக பேசப்படு கிறது. உலக நாடுகளில் பெட்ரோலியம் உற்பத்தி யில் 25 ஆவது மிகப் பெரிய நாடாகவும், இயற்கை எரிவாயு வளத் தில் 28 ஆவது இடத்தை யும் வகிக்கிறது.

மன்னராட்சி...

இந்நாடு ஒரு சிறிய அளவிலே இருந்தாலும், நல்ல வளமான நாடாக வும் அமைதியான நிலை யிலும் பல்வேறு முன் னேற்றங்களைப் பெற்று மேதகு. கியுபூஸ் பின் சேட் அல் சேட் என்ற மன்னர் 1970_லிருந்து ஆட்சி செய்து வருகி றார். என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

இவ்வளவு சிறப்பு களுக்குரிய இந்த நாட் டில் அங்கு வசிக்கும் தமிழர்களான திருவா ளர்கள் வீ.வெங்கடேஷ் மற்றும் என்.அரவிந்தன் ஆகியோர் 8 ஆம் தேதி காலை மஸ்கட்டில் அமைந்திருக்கும் ஓமான் நாட்டின் சில முக்கிய இடங்களான அருங் காட்சியகம், அரண் மனை, அமைச்சகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களை பார் வையிட தமிழர் தலை வரையும், துணை வேந் தரையும் அழைத்துச் சென்று பல்வேறு முக்கிய கருத்துகளை விளக்கி அந்நாட்டின் பெருமை களையெல்லாம் எடுத்துக் கூறினார்கள்.

மாலை 5.30 மணியளவில் திரு வாளர் வெங்கடேஷ் இல்லத்தில் ஓமான் நாட்டு இந்திய சமூக அமைப்பில் இயங்கி வரும் மஸ்கட் தமிழ்ச் சங்கத் தலைவர், செய லாளர் மற்றும் அதன் அலுவலக பொறுப்பா ளர்களோடு தமிழர் தலைவர் சந்தித்து கலந் துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.

சந்திப்பில் மஸ்கட் தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.கே.ஜான கிராமன் செயலாளர் பஷீர் மொகமது மற்றும் சங்க உறுப்பினர்கள் திரு வாளர்கள் எம்.எப்.கமில் தாஹிர் கனி, என்.அர விந்தன், டாக்டர் சண் முகம் பாலாஜி, வி.வெங் கடேஷ் மற்றும் கார்த்திக் ஹரிபாபு ஆகியோர் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடக்கத்தில் தந்தை பெரியார், அவர் தொடங் கிய பணிகள் தற்போது நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை தமிழர் தலைவர் அவர் கள் விளக்கிக் கூறினார் கள்.
பவர் பாய்ண்ட் விளக்கங்களோடு...

பின்னர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கேட்ட அய்யப்பாடுகளுக்கும் பதில் தந்து அய்யாவின் உலகம் போற்றும் பணி களை விளக்கிச் சொன் னார். பின்னர் பெரியார் கல்வி நிறுவனங்கள் பற்றியும், பெரியார் மணி யம்மைப் பல்கலைக்கழ கத்தை பற்றியும் பேரா சிரியர் முனைவர் நல். இராமச்சந்திரன் அவர் கள் பட விளக்கங்க ளோடு (POWER POINT) எடுத்துரைத்தார்.

இறுதியில் தமிழ்ச் சங்கத் தலைவர், செய லாளர் மற்றும் உறுப் பினர்கள் இவ்வளவு சிறப்பாக நடந்துவரும் பெரியார் சமூகப்பணி களையும் வெகுவாகப் பாராட்டினர். மேலும் எதிர்காலத்தில் தமிழ கத்தில் நடைபெறும் பணிகளை, ஜெர்மனியில் எல்லாம் எடுத்து செல் கின்ற அய்யா அவர்கள் மஸ்கட்டிலும் செய்ய வேண்டும் என்ற வேண்டு கோளையும் வைத்தார் கள்.

அதற்கு தமிழர் தலை வர் அவர்கள் ஊருக்குச் சென்றபின் மற்ற பொறுப்பாளர்களோடு கலந்து ஆவன செய்வ தாகக் கூறினார்கள். அவ்வாறு இங்கு நடக் கக்கூடிய பணிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று கூறிட நிகழ்வு முடிந்தது.

பாலைப்பூக்கள்

நிகழ்ச்சியின் முத் தாய்ப்பாக மஸ்கட் தமிழ்ச்சங்க செயலாளர் பஷீர் மொகமது அவர் கள் தான் எழுதிய பாலைப்பூக்கள் என்ற புத்தகத்தையும், தமிழர் தலைவரைப் பற்றிய அற்புதமான கவிதைப் பாராட்டு பத்திரத்தை வாசித்து வழங்கினார்கள். திருவாளர் என்.அரவிந் தன் ஓமானைப்பற்றிய ஆங்கில நூலையும் அளித்து சிறப்பித்தார்.

நம் பல்கலைக்கழகத் தின் சார்பில், சங்கத் தலைவருக்கு அய்யா உருவம் பொறித்த, தஞ் சாவூர் தட்டும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக கையேடுகள், சிடிக் கள் அடங்கிய தகவல் குறிப்புகளை வழங்கி சிறப்புச் செய்யப்பட்டு சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக முடிவுற்றது.

இறுதியாக திருவா ளர்கள் வெங்கடேஷ் - சாமுண்டீஸ்வரி அவர் களின் அன்பான ஏற் பாடுகளோடும், நல்ல உபசரிப்புகளோடும் பிரியா விடை பெற்று தமிழர் தலைவர் நாடு திரும்பினார்.

Read more: http://viduthalai.in/page-8/82090.html#ixzz34ZUfVwGB

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZVD44QV

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? விநாயகரின் சிறப்புத் தலங்கள்பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் விநாயகர் முதற் கடவுளாக இருப்பார். ஆனால் விநாயகர் வழிபாட்டுக்கு என்றே அமைந்த சிறப்பு வாய்ந்த தலங்கள் சில தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

கற்பக விநாயகர் கோயில் - பிள்ளையார் பட்டி, பிரளயம் காத்த விநாயகர் - திருப்புறம் பயம், பொல்லாப்பிள்ளை யார் - திருநாரையூர், முக்குறுணி விநாயகர் - மதுரை, ராஜகணபதி - சேலம், ஈச்சநாரி விநாயகர் - பொள்ளாச்சி, மணக்குள விநாயகர் - புதுச்சேரி, இரட்டை விநாயகர் - தாடிக்கொம்பு, லட்சுமி கணபதி - குன்றக்குடி முருகன் கோவில் என் கிறது ஓர் ஆன்மீக இதழ். கடவுள் உருவமற்றவர் - வழி பாட்டுக்காகத்தான் உருவச்சிலைகள் என்று சமாதானம் கூறும் ஆன்மீகச் சிரோன்மணிகள், இப்படி சில ஊர்களின் பெயர்களைச் சொல்லி அந்த ஊர்களில் உள்ள உருவச்சிலைதான் (கடவுள்தான்) பிரசித்தம் என்பது முரண்பாடு அல்லவா?

Read more: http://viduthalai.in/e-paper/82066.html#ixzz34ZVQR0Lm

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


கடவுள் சக்தி இவ்வளவுதான்!
சாமி கும்பிடுவதற்காக வந்த 4 பேர் பலி

தலைவாசல், ஜூன்.13- சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே உள்ள ஆறகளூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் அம்பாயிர அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடு வதற்காக கோவை பி.என்.புதூரை சேர்ந்த சமையல் காண்டிராக்டர் மாதேஸ் என்பவர் தனது உறவினர்களுடன் 2 வேன் களில் நேற்று ஆறகளூர் வந்தார்.

காலையில் அவர்கள் கோவிலில் பொங்கல் வைத்து அங்கேயே சாப் பிட்டனர். இவர்களுடன் வந்த ராஜி என்பவரின் மகன் சஞ்சய் (வயது 13), சேகர் என்பவரின் மகன் செந்தில் (16) ஆகிய 2 பேரும் பி.என்.புதூரில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 9-ஆம் வகுப்பும், பிளஸ் 1-ம் படித்து வந் தனர். முருகன் என்ப வரின் மகன் விவேக் (19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். மதியம் 2 மணியளவில் இவர்கள் 3 பேரும் விளை யாடுவதற்காக வசிஷ்ட நதிக்கு சென்றனர்.

கடந்த சில நாட் களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வசிஷ்ட நதியில் நீர்வரத்து ஏற் பட்டு ஆங்காங்கே தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதைப் பார்த்த 3 பேருக்கும் அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினார் கள். சிறிது நேரத்தில் 3 பேரும் ஆழமான பகு திக்கு சென்று விட்டதாக தெரிகிறது. நீச்சல் தெரி யாததால் அவர்கள் தண் ணீரில் மூழ்கினார்கள்.

தண்ணீரில் தத்தளித்த படி உயிருக்கு போராடி னார்கள். இதைப்பார்த்த செந்திலின் தந்தை சேகர் தண்ணீரில் இறங்கி அவர் களை காப்பாற்ற முயன் றார். ஆனால், அவரால் முடியவில்லை. மாறாக அவரும் ஆழமான பகு திக்கு சென்றதால் தண் ணீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரி ழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு உடல் பரிசோத னைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82065.html#ixzz34ZVYzpXA

தமிழ் ஓவியா said...


பெண்களை அர்ச்சகராக்க அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் பந்தர்பூர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம்பூனா.ஜுன்.13-_ 900 ஆண்டு கால பழமை வாய்ந்த பந்தர்பூர் வித்தல் ருக்மணி கோயிலில் அர்ச் சகர் பணியில் பார்ப் பனர்களே இருந்துவந்துள் ளனர். அந்தக் கோயி லுக்கான வித்தல்-ருக்மணி கோயில் அறக்கட்டளை நிர்வாகம் பார்ப்பனர்கள் அல்லாத மற்றவர்களையும், குறிப்பாக பெண்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்தது. அதன்படியே விளம் பரங்கள் அளிக்கப்பட்டன. அர்ச்சகர்கள் பணிவாய்ப்பு கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 16பெண்கள் உட்பட 129பேர் நேர் காணலுக்கு அழைக்கப் பட்டனர். உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பு கடந்த சனவரியில் வழங்கப்பட்டு அதன்படியே இரு (பார்ப்பனக்) குடும்பத்தவர் களின் ஆதிக்கத்திலிருந்து அர்ச்சகர்பணி விடுவிக்கப் பட்டு அறக்கட்டளை நிர்வாகம் நேர்காணலை நடத்தி உள்ளது குறிப் பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் பக்தர்கள் திரளும் அந்தக் கோயிலுக்கு வர்காரி பிரி வைச் சேர்ந்த பக்தர் களேஅதிக அளவில் பக்தர்களாக உள்ளனர்.

இதனிடையே அறக் கட்டளை நிர்வாகத்தை எதிர்த்து வர்காரி அமைப் பினர் போராட்டம் நடத்தி உள்ளனர். வர்காரி சாகித்ய பரிஷத் என்கிற அமைப்பின் சார்பில் விட்டல் பாடீல் என்பவர் கூறும்போது: பார்ப்பனர் அல்லாதவர்களையும், பெண்களையும் அர்ச்சக ராக நியமிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே போல் நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. எல்லோ ரையும் சமமாக மதிக் கிறோம். பழமையான விஷ யங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது வர்காரி பிரிவினரையும் கலந்தா லோசிக்க வேண்டும். கோயிலின் அறக்கட்டளை நிர்வாகத்தில் வர்காரி பிரி வினருக்கு இடமளிக்கும வகையில் அறக்கட்டளை நிர்வாகம் மாற்றி அமைக் கப்பட வேண்டும் என்று கோருகிறோம் என்று கூறினார்.

அறக்கட்டளைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமாகிய அன்னா டாங்கே (இவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பாகிய தன்கர் வகுப்பைச் சேர்ந்தவர்) கூறும்போது, வேகமான முன்னேற்றத்துக்கிடையே விரும்பத்தகாத நிலையில் அரசின் இடையூறு உள் ளது. அரசே மீண்டும் நிர் வாகத்தின் நடவடிக்கைக்கு மீண்டும் உறுதியை அளிக் கும் என்று எதிர்பார்க் கிறோம் என்று டாங்கே கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82061.html#ixzz34ZVhwyyD

தமிழ் ஓவியா said...


உத்தரப் பிரதேசத்தில் காவல் நிலையத்தில் பெண் பாலியல் வன்முறை

காவல் ஆய்வாளர் கைது இருவர் தலைமறைவு

லக்னோ,ஜுன்13-_- உத்தரப்பிரதேசத்தில் நள்ளிரவில் கணவனை மீட்கச் சென்ற பெண் காவல்நிலைய வளாகத் திலேயே காவல்துறை யினரால் பாலியல் வன் முறைக்கு ஆளானார்.

ஹமீர்பூர் மாவட் டத்தில் சுமெர்பூர் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்துள்ளதாகக் கூறி ஒருவர் கடந்த 9ஆம் தேதி அன்று விசாரணைக்கு காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட் டார். காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட கணவன் மறுநாளிலும் இரவுவரையிலும் எதிர் பார்த்து காத்திருந்து வீடு திரும்பாததால், கணவர் மீது உள்ள வழக்கு குறித்து அறிந்துகொள்ளவும், தன் கணவரை மீட்பதற்காகவும் காவல்நிலையத்துக்கு அவரது மனைவி சென் றுள்ளார். 10ஆம் தேதி அன்று நள்ளிரவில் சுமார் 20 நிமிடங்களாகக் காக்கவைக்கப்பட்டார். அதன்பிறகு காவல்நிலைய வளாகத்திலேயே காவல் நிலையத்தின் தலைமை அதிகாரியான காவல் ஆய்வாளர் மற்றும் காவ லர்கள் கூட்டாக சேர்ந்து அந்த பெண்ணை பாலி யல் வன்முறைக்கு ஆளாக் கினார்கள். இரண்டு மணிநேர பாலியல் வன் முறைக்குப்பிறகு, அதி காலை மூன்று மணிவரை யிலும் அவர்களுக்கு இரையாகி, பின்னர் தன் கணவரை மீட்டு சென் றுள்ளார். அவருடைய கணவர்மீது வழக்கு எது வும் பதிவு செய்யப்பட வில்லை. பாலியல் வன் முறை குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும், சொன்னால் அவர் கணவர்மீது வழக்குபதிவு செய்வதாகவும் மிரட்டி உள்ளனர்.

ஆனால், அந்தப்பெண் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத் தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு, காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரும் தலை மறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீரேந்திர ஷேகர் கூறும் போது, சுமர்பூர் காவல் நிலையத்தில் பாலியல் வன்முறைகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தப்பி ஓடியுள்ள மற்றவர்களையும் பிடிப் பதற்கு அனைத்து முயற்சி களும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/82063.html#ixzz34ZVrSKsT

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது.
(விடுதலை,5.4.1961)

Read more: http://viduthalai.in/page-2/82067.html#ixzz34ZW3Glge

தமிழ் ஓவியா said...


கருநாடகத்தில் ஒரு சேரன்மாதேவி!உடுப்பி கிருஷ்ண மடத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி சாப்பிடும் இடமும், பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு சாப்பிடும் இடமும் இடம் பெறுகின்றன. இதற்குப் பங்கி பேதா என்று பெயராம்!

இந்தப் பிறவி வருணாசிரமக் கொடுமையை எதிர்த்து மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி போராட்டங்களை நடத்தியுள்ளதானது - பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

இதுகுறித்து அக்கட்சியின் கருநாடக மாநில செயலாளர் ஜி.வி. ராம (ரெட்டி) கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யவும் வேண்டும் - மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர் கள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பிராமணரல்லாத வர்கள் படுத்தும் புரளும் மடஸ்நானா என்னும் இழிவான நடைமுறைக்கு கருநாடக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.

பார்ப்பனர்களாவது, சூத்திரர்களாவது - எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? அதெல்லாம் முடிந்து பல காலம் ஆகி விட்டது என்று பேசும் மேதாவிகள் நாட்டில் உண்டு.

அத்தகையவர்கள் இந்த யதார்த்த நடப்புகளை கவனிக்க வேண்டும்; கவலைப்படுவதோடு நின்று விடக்கூடாது; அவற்றின்மீது ஆழமான சிந்தனையைச் செலுத்த வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த போதே 1924இல் சேரன் மாதேவியில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத மாணவர்களையும் தனித் தனியாக அமர வைத்து உணவுப் பரிமாறப்பட்டதை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கினார்.

டாக்டர் பி. வரதராஜலு நாயுடு திருவிக போன்றவர்கள் தந்தை பெரியார் தலைமையில் அந்த வேறுபாட்டை ஒதுக்கவில்லையா? கடைசியில் அந்தக் குருகுலமே இழுத்து மூடப்பட்டதே.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மன்னர் கல்லூரியில்கூட பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று மாணவர்கள் மத்தியில் வேறுபாடு காட்டப் பட்டதை ஒழித்தது நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்த - அன்றைய மாவட்டக் கழகத் தலைவர் (District Board president)சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அல்லவா!

வைக்கம் கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை கடை வீதிகளில் இலை ஒன்று அரையணாவுக்கு விற்கப்பட்டதுண்டு.

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் சாப்பிட்டால் வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கிய மாகி விடும் என்றும் சந்தானம் இல்லாதவர்களுக்கு (குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு)ச் சந்தான விருத் தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாதாருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, ரூ.500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டி, பூசை செய்து அந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாவம் போய் விடும் என்று நம்பும் படியாக செய்கிறதைவிடப் பெரிய மோசடியல்ல (குடிஅரசு 9.8.1925).

என்று தந்தை பெரியார் குடிஅரசில் குறிப்பிட் டிருந்தது உண்மைதான் என்றாலும், இன்று அத்தகைய காட்சிகள் தமிழ்நாட்டில் காண்பது அரிது - அந்த அளவுக்கு தந்தை பெரியாரின் இயக்கம் விழிப் புணர்வை ஏற்படுத்தி விட்டது.

கருநாடக மாநிலத்தில் அந்தக் கொடுமைகள் இன்றும் தலை விரித்தாடுகின்றன என்றால் அது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டே ஆக வேண்டும் அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா பகுத்தறிவு சிந்தனையாளர் சாம்ராட் நகருக்குச் சென்று வந்தால் அந்த முதலமைச்சர் பதவி விலகுவார் என்று நம்பிக்கை உண்டு. அதனை முறியடித்த முதல் அமைச்சர்தான் சித்தாராமையா.

இந்த நிலையில் பங்கி பேதாக்களையும் மடஸ் நானாக்களையும் அவர் கண்டிப்பாக முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்ப்பார்க்கிறோம் - முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/82068.html#ixzz34ZWC1LKB

தமிழ் ஓவியா said...


பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் வேதனைப்பட்ட குடிமக்களின் கதறல்!

ஜெய்ப்பூரில் சவாய் சிங் என்ப வரைத் தலைவராகக் கொண்டு சமக்ரா சேவா சங்கம் என்கிற நிறுவனம் காந்திய வழியில் செயல்பட்டு வருவ தாகும். இந்த நிறுவனம் தொடக்கத்தில் சைன்புரா பகுதியில் இயங்கி வந்துள்ளது. 1959ஆம் ஆண்டில் ஒரு விவசாயியிடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்கி, ராஜஸ்தான் சமக்ரா சேவா சங்கம் பெயரில் பதிவு செய்யப்பட்டது.

ராஜஸ்தான் அரசின் சார்பில் 1984ஆம் ஆண்டில் விமான நிலையம் கட்டுவ தற்காக நிலஆர்ஜிதம் நடைபெற்றது. அப்போது, இந்த நிறுவன வளாகம் உள்ள நிலப்பகுதியையும் அரசு எடுத்துக்கொண்டது. அரசின் பழைய மற்றும் புதிய விதிகளின்படி, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை 5ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள வில்லாமல் இருந்தால் மீண்டும அந்த நிலம் உரியவருக்கே சென்று விடும் என்று சட்டத்தின் பிரிவுகள் சொல் லுகின்றன. அதன்படி அந்த நிலப்பகுதி மீண்டும் சங்கத்தின் உரிமைக்குரிய தானது. இதுகுறித்த 2001இல் நீதிமன்றத்தில் அரசால் அளிக்கப்பட்ட நிலம் என்று கூறி விதிமுறைகளை மீறிவிட்டதாகவும், வழக்கு தொடுக்கப் பட்டது. சங்கத்துக்கான வழக்குரைஞர் குழுவினர் அரசு சார்பில் ஒதுக்கீடு என் பதை தொடக்கத்திலேயே நிராகரித்தனர். அரசு தரப்பிலான குற்றச்சாட்டாக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை நிபந்தனைகளை மீறி, வணிக நோக்கில் பயன்படுத்துவதாகவும், குடியிருப்பதாகவும் மேலும் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியிருந்தது. ஆனால், நீதிமன்ற அறிவிப்பு பெற்ற பிறகு நவம்பர் 2013 மற்றும் பிப்ரவரி 2014இல் நீதிமன்றத்தில் உரிய விளக் கங்களை பதிலாக அளித்தபிறகு, வழக்கில் சங்கத்தின் தரப்புக்கு ஒரு முறைகூட நீதிமன்றத்திலிருந்து அழைப்பு இல்லை.

அதேபோன்று லோக்ஆயுக்தாவில் மனு செய்திருந்தும் அங்கிருந்தும் ஒருமுறைகூட அழைப்பு இல்லை. 2004ஆம் ஆண்டில் நீதிமன் றத்தின் சார்பில் அரசுக்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து அமலில் இருந்தது.

கட்டடம் அமைந்துள்ள வளாகம் சர்வோதயா மற்றும் காந்தியத்துக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளன. அந்நிறுவ னத்தில் பணிபுரிவர்களுக்காக சமையற் கூடம் உள்ளது. மேலும், அங்கு பணி யாற்றுபவர்களின் இல்லத் திரு மணவிழா இரண்டிலிருந்து மூன்று வரை நடைபெற்றுள்ளது. அங்கு வசித்துவந்தவர்களில் 80 வயது முதியவர்மீது ஈவுஇரக்கமின்றி (ஜிஓஆர்) அரசின் ஊரக வளர்ச்சித் துறை தாக்குதலை நடத்தியது. மேலும் குழந்தைப் பேறு பெற்ற தாய் என்றும் பாராமல் வீட்டிலிருந்து வெளியேற்றி கடும் வெயிலில் வாட்டிய கொடுமை நடந்துள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் நிழலில் கொடுக்கக்கூட அனுமதியாமல் தாக்கிய சம்பவத்தால் ராஜஸ்தான் மக்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மிகுந்த ஆத்திரமடைந்துள்ளனர். காந்தீய நிறுவனத்தில் புகுந்து தாக்கிய சம்பவத்தைக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

அதே வளாகத்தில் ஜெய்ப்பூர் பகுதியில் ஜெயபிரகாஷ் நாராயணன் நிறுவிய புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரராகிய கோகுல்பாய் பட் நினைவிடம் உள்ளது. அந்த நினை விடத்தின் வாயிலையும் அடைத்துவிட்டு பூட்டிவிட்டனர். அந்த நினைவிடம் அமைப்பதற்கு அரசு சார்பில் ரூபாய் 40 இலட்சங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2001ஆம் ஆண்டி லிருந்தே கொடுக்காமல் அரசு அலுவ லர்கள் இழுத்தடித்து கடைசிவரை கொடுக்கவில்லை.

ஜெய்ப்பூர் வளர்ச்சி அதிகாரிகள் ஜுன் மாதம் ஆறாம் தேதி அன்று வட்டார வளர்ச்சி செயலாளர் ஷிகார் அகர்வால் அளித்த ஆக்கிரமிப்பு அகற்றும் ஆணையுடன் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஏழாம் தேதி அன்று நண்பகல் ஒரு மணி யளவில் வளாகத்துக்குள் நுழைந்து மிக மோசமாக நடந்துகொண்டனர்.

நிறுவனம் சார்பில் பொதுமக்கள் மற்றும் நிறுவனத்தைச் சார்ந்த தொண் டர்களுக்கு மாதந்தோறும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதை தடுக்கும் நோக்கிலேயே இதுபோன்ற அடாவடி செயல்களில் அரசே ஈடுபட்டுள்ளது.

அரசின் கோரப்பற்கள், நகங்கள் காந்திய நிறுவனத்தை நோக்கி திரும் பியதன் காரணம் நில விற்பனைத் திமிங் கலங்களிடம் நிலத்தை


தமிழ் ஓவியா said...

பறித்துக் கொடுப்பதுதான் என்று சங்கத்தினர் ஆவேசத்துடன் குமுறுகின்றனர்.
இதுபோன்று காந்தியக் கொள் கைகள், காந்திய நிறுவனங்கள்மீது தாக்குதல் சம்பவம் என்று இதுவரை எப்போதும் நடைபெற்றதே இல்லை. ஆகவே அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும்வகையில் பொதுமக்கள் சார்பில் வாழ்வுரிமை கோரும் மனுவாக ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜேவிடம் எங்கள் வேதனைகளை எடுத்துக்கூறும் மனுவாக அளிக்கிறோம் என்று 51பேர் கையொப்பமிட்டு அளித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-2/82070.html#ixzz34ZWM75Ca

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......

பார்ப்பனத்தனம்

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். ஆனால் இன்னம்பர் என்ற திருத்தலத்தில் இறைவனே எழுத்தறிவிக்கிறான். திருநாவுக்கரசர், தனது பதிகத்தில் எண்ணும் எழுத்தும் கொல் ஆனாய் போற்றி என்று ஈசனை போற்றுகிறார்.

தமிழ் இலக்கணத்தில் சிறப்புற்று திகழ்ந்தவர் குறுமுனி அகத்தியர். ஆனால் அந்த அகத்தியருக்கே தமிழ் இலக்கணத்தை எடுத் துரைத்தவர் திரு இன்னம் பரில் எழுந்தருளியிருக்கும் ஈசனாம்.

அகத்தியர் கதை இருக் கட்டும்; அந்த அகத்திய ருக்கே தமிழ் இலக்க ணத்தைச் சொல்லிக் கொடுத்தவர். இன்னம் பரில் வீற்றிருக்கும் ஈசன் என்பது உண்மையானால் தமிழில் அர்ச்சனை செய் தால் அந்த ஈசன் தீட்டுப் பட்டுப் போய்விடுவான் என்பது அசல் பார்ப்பனத் தனம் தானே?

Read more: http://viduthalai.in/e-paper/82132.html#ixzz34fHFT35x

தமிழ் ஓவியா said...


எடுத்துக்காட்டாகிய புனே மக்கள்


பூனா தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் பூனா தொழில்நுட்பப் பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார். பலியான மொசின்மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சமூகவலைதளமான முகநூலில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது பூனா நகரில் பதற்றத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, முகநூலில் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கினர். இந்நிலையில் பூனாவில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது.

ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லீம் வாலிபர் மொசின் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார். கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் பாதுகாப்பை மிகவும் உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அப்பகுதி மக்கள் மதங்களைக் கடந்து அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உண்மையிலேயே இது ஓர் எடுத்துக்காட்டான முயற்சியாகும். இந்த வகையில் மற்ற மற்ற பகுதிகளுக்கும் பூனா வழிகாட்டுகிறது. மனிதனை இணைக்கத்தான் ஏற்பாடுகள் தேவையே தவிர பிரிப்பதற்கும், பிளப்பதற்கும் அல்ல.

புனே பகுதியில் முஸ்லிம் பெரு மக்கள் மேற்கொண்ட அணுகுமுறை அதற்கு ஒத்துழைத்த அனைத்துக் கட்சிப் பொது மக்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே!

தழைக்கட்டும் மனித தர்மம்! தகரட்டும் - மனுதர்மம்

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/82136.html#ixzz34fHgYdFk

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.

- (விடுதலை,20.9.1964)

Read more: http://viduthalai.in/page-2/82133.html#ixzz34fHt5rhj

தமிழ் ஓவியா said...


மணம் பரப்பும் பாலைப்பூக்கள்!

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று ஒரு நாள் - இடைவெளியில் - தங்கி, சென்னை திரும்பினோம் ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் (8.6.2014) ஓமான் கடலை நினைத்தால் இன்னமும் மறக்கவே முடியாத வேதனை எம் நெஞ்சத்தில்!

அதுவென்னவென்று கேட் கிறீர்களா? (இளம் நண்பர்களுக் காக) 1940-இல் இலண்டன் பெரும் பொறுப்பு - பதவியேற்கச் சென்ற திராவிடர் தளபதி என்று தந்தை பெரியார் அவர்களால் அன் பொழுக அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் ஹனி பால் என்ற விமானத்தில் சென்ற போது அதனையே விழுங்கிய கடல் ஓமான் கடல் என்பதே அந்த மறக்க முடியாத வேதனை!

ஆனால் சிறிய அழகான, இயற்கை எழில் கொஞ்சும் நாடு, நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதி), குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி), பாலையும் மூன்றும் இணைந்த இயற்கைத்தாயின் முக்கூட்டு நாடு அது!

அதன் இயற்கை அழகைக் கண்டு வியந்தோம் அங்கு நமது குடும்ப நண்பர் அதிகாரியாக பணி புரியும் தி.வெங்கடேஷ் - அவரது வாழ்விணையர் சாமுண்டேசுவரி அவர்களும் எங்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அன்பு உபசரிப்பால் திணற வைத்த அவர்கள், அங்குள்ள தமிழ் உறவுகளில் முக்கிய பொறுப்பாளராகவும், பல்வேறு துறை ஆற்றலாளராகவும், உள்ளவர் களையும் அவர்களது இல்லத்திற்கு அழைத்து ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தினார்கள்.

பல நூற்றுக்கணக்கான இளம் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ்ச் சொல்லித்தரும் பள்ளிப்பணி முதல் தமிழ்ச் சங்கம் வரை மிக அருமையாக அந்தந்த தமிழர்கள் தொண்டறம் புரிகிறார்கள்.

நம் தமிழர்கள் பலரும் பல்வேறு தொழிலதிபர் களாகவும், அதி காரிகளாகவும், பொறியாளர்களாக வும், மேலாண்மை பொறுப்பாளர் களும் உள்ளனர் என்பது நமது காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது!

அங்கு தமிழ்ச்சங்கத்தை மிகவும் திறம்பட நடத்திவரும் ஜானகி ராமன் தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து தவறாமல் சந்தித்து நடத்தி வரும் (குமரி மாவட்டம்) பஷீர் அவர்கள் தலைசிறந்த கவிஞர் இலக்கியப் படைப்பாளியாக உள்ளார் என்பது அவர் தந்த பாலைப்பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் உலகிற்கே பறை சாற்றுகிறது!

தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் என்பது தமிழ்த் தொண்டை விட மிகச்சிறப்பானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் மண்ணை மறக்காதது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தமிழர்களை கட்சி, ஜாதி, மத பேதமின்றி வரவேற்று வாழ்த்திடவும் தவறாததே. இலக்கிய தமிழ்ப்பண்ணையையும் அங்கே உருவாக்கி, ஒற்றுமை உழைப்பு என்கிற உரமிட்டு உழவாரப் பணிகளையும் செய்திட முன்னணியில் உள்ளனர்.

பாலைவனத்தில் கூட தமிழ்ப்பூக்கள் - பாக்கள் - பூத்துக்குலுங்கும் - புதுமணம் பரப்பும் - புகழ்முடி சேர்க்கும் என்பதற்கு பாகவி பஷீர் அவர்களின் பாலைப்பூக்களே சான்று பகருவதாக உள்ளன. படித்தேன், சுவைத்தேன், கீழே வைக்காமல் படித்து முடித்தேன், எல்லாம் தெவிட்டாத தேன் தான்.

இதோ ஒரு சில பூக்கள் அந்த பூங்கொத்தி லிருந்து - சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன.

கருப்பு நிறம் கொண்ட காகத்தைப்பற்றிய கவிதை வரிகள் சில

காகம் கரைகிறது; கேட்போமா? (பக்கம் 18-19) (ஒரு பகுதி)

...என் மேனியின்
வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்
தப்பேதான்!
இங்கே!
வர்ணங்களால் பிரிப்பது
வாடிக்கைதானே!
அடுத்து வரம் தருவாய் என்ற தலைப்பில் (பக்கம் 38)

தேய்கின்ற நிலவுக்கு சேதாரம் அகற்று - தருவாய்
பௌர்ணமியில் புல்வெளியில்
பாயிரம் பாடக் காற்று!
வீதியினில் திரிகின்ற
மதயானைகள் மதிபெறட்டும்-அது
வெறி கொண்டால் இரும்புத்
தளை கொண்டு அடங்கட்டும்!
சாதியின் பிரிவினையை
சம்மட்டியால் உடை - அருள்
சோதியின் வடிவே மனிதன் என்போரை
உபசரிக்கட்டும் வாசல் நடை!

இதுபோன்ற கருத்தாழம் மிக்க கவிதை வரிகளில் நல்ல மனித நேயம் மலர்ந்த பாலைப்பூக்கள் என்ற கரு பசுஞ்சோலைப்பாக்கள்! படித்துப் பயன் பெறுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/82139.html#ixzz34fI9hDPx

தமிழ் ஓவியா said...


தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்


தஞ்சை ஜில்லாபோர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறக்கூடும் என்று தெரிய வருகின்றது. அத்தேர்தலில் நமது நண்பரும் சுயமரியாதை இயக்க சங்கத்தின் உபதலைவருமான ராவ்பகதூர் உயர்திரு. ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களே அநேகமாய் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றே எதிர்பார்க் கின்றோம்.

ஆயினும் அவரது வெற்றிக்கு விரோதமாய் ஒரு உணர்ச்சிமிக்க முயற்சியாய் வேலை செய்து வருவதாயும் தெரியவருகின்றது. திரு. செல்வம் அவர்கள் வெற்றிக்கு விரோதமாய் வேலை செய்கின்ற உணர்ச்சிக்கு நியாயமான தகுந்த காரணங்கள் ஏதாவது இருந்தாலும் இருக்கலாம். ஆயினும் நாம் திரு. செல்வம் அவர்கள் வெற்றியையே மன, மொழி, மெய்களால் கோர வேண்டியவர்களாகவே இருக் கின்றோம்.

ஏனெனில், பொதுவாக தஞ்சை ஜில்லா பொது மக்களைப் பொறுத்த வரையிலும் குறிப்பாக பார்ப்பனரல் லாதார் நன்மை யைப் பொறுத்த வரையிலும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத் தின் நன்மையைப் பொறுத்த வரையிலும் திரு ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களே தஞ்சை ஜில்லாபோர்டுக்கு இதுசமயம் மறு படியும் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட வேண்டியது அவசியமான தென்பதே நமது அபிப்பிராய மாகும்.

அன்றியும், இந்த அபிப்பிராயத்தையே தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுகொண்ட சில செல்வந்தர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கொண்டுள்ளார்கள்.

தவிர, பார்ப்பனரல்லாத சமுகப் பிரமுகர்களில் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட பொறுப்பும் நாணயமும் அற்ற சிலர் தங்கள் சுயநலம் காரணமாக ஒருவரை ஒருவர் கெடுக்க எண்ணியதும் அதனால் ஒருவருக்கொருவர் தற்காப்பிற்குப் பத்திரங்கள் தேடிக்கொள்ள ஏற்பட்டதுமான காரியங்களால் இனி தென்னாட்டில் நடந்தேறும் ஒவ்வொரு தேர்தல்களிலும் நியமனங் களிலும் இவ்விதமான எதிர்ப்புகளையும் தொல்லைகளையும் எதிர்பார்த்துத் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதைக் குறித்து நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை.

அன்றியும் இந்நிலைமை காரணமாக பார்ப்பன ஆதிக்கத்தை மறுபடியும் வளர்க்க ஒருவருக் கொருவர் போட்டி போடுவதைப் பார்த்து நாம் வெட்கப்படாம லிருக்கவும் முடியவில்லை.

நெல்லூர் மகாநாடானது எப்படியோ நமக்கு இந்நிலை மையை அளித்து விட்டது. நம்மைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாத சமுகத்திற்குள் ஜஸ்டிஸ் கட்சி என்பவர்களிட மிருந்தாவது, அதற்குள் ஏற்பட்ட உள்கட்சியாகிய ஒழுங்கு முறைக்கு உட்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் என்பவரிடமிருந்தாவது,

மந்திரி கட்சியாரிடமிருந்தாவது மற்றும் இவைகளின் சார்புக் கட்சியாரிட மிருந்தாவது அவரவர்கள் கட்சிக் கொள்கைகள் முழுமையுமோ, அல்லது, அதிலுள்ளவர்களின் நடத் தைகள் முழுவதையுமோ அடி யோடு ஒப்புக்கொண்டு நாம் அதில் கலந்திருக்கவில்லை என்பதையும் அல்லது வேறு எந்த விதமான சுயநல லட்சியத்தைக் கொண்டோ அல்லது யாருக்காவது பயந்தோ நாம் அவற்றை ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆனால், நமது சுயமரியாதைக் கொள்கைகளுக்கு மற்ற கட்சியார் மற்ற ஸ்தாபனங்கள் ஆகியவைகளை விட இவைகள் எத்தனையோ மடங்கு மேலானது என்பதாகவும், வசதியுள்ளது என்பதாகவும் கருதி நமது இயக்கத்தின் நன்மையை உத்தேசித்தே நாம் அவற்றில் களங்கமறக் கலந்திருந்ததுடன் கூடுமானவரை ஒத்துழைத்தும் வந்தோம்.

எனவே, இந்த முறையில்தான் தஞ்சை ஜில்லாபோர்டு தலைமைப் பதவியானது திரு பன்னீர் செல்வம் கையை விட்டுப் போக நேருமானால் கண்டிப்பாய் அது பார்ப்பன ஆதிக்கத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுமே அல்லாமல் மற்றப்படி அதற்கு இடையில் வேறு இடமில்லை என்று கருதுவதுடன் திரு. பன்னீர் செல்வம் தோல்வியானது பார்ப்பனரல்லாத மக்கள் தோல்வியாகுமென்றும் கருது கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 19.01.1930

Read more: http://viduthalai.in/page-7/82159.html#ixzz34fJvgDxl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக் கின்றது. ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள்.

ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம் தான். அத்தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண் டிருக்கிறான்.

Read more: http://viduthalai.in/page-7/82159.html#ixzz34fK4WdgS

தமிழ் ஓவியா said...


புகைந்து போவீர்கள்


புகையிலையினால் அரசிற்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.32,500 கோடி. பெரிய வருமானம் தான். அதற்கு அரசு அளிக்கும் விலை ஆண்டிற்கு 9 லட்சம் மக்களின் உயிர்.

மத்திய அரசு, புகையிலை சீர் கேடுகளை சரி செய்வதற்காக (மனித னுக்கு ஏற்படும் சீர்கேடுகள் மற்றும், நாட்டின் சுகாதார சீர்கேடுகளை சீர்படுத்த) செலவிடும் தொகை ரூ.37,500 கோடி. அதாவது ரூ.5,000 கோடி புகையிலை வருமானத்தைவிட ஏற்படும் அதிக செலவு. தவிர இந்த உயிர்க்கொல்லி புகையிலையை பயிரிடுவதற்காக அரசால் அழிக்கப்படும் உயர் பெருங்காடுகளின் பரப்பளவு, இரண்டு லட்சம் ஹெக்டேர்.

புகையிலையில் 3,000 வகை நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன. பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகைக்கும் புகையிலையில் 4,000 நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன.

இந்த நச்சுப் பொருட்களில் புற்றுநோயைக் கட்டாயம் ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் மட்டும் 200 வகை. நச்சுப் பொருட்களில் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஹெக்சாமின் - தீப்பெட்டியின் உரசும் பகுதி
எத்தனால் - ஆல்கஹால் வினைல் குளோரைடு - ப்ளாஸ்டிக் பை தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்.
நைட்ரோ பென்சின் - பெட்ரோலில் உள்ள நச்சுப் பொருள்
மீத்தேன் - பெட்ரோலியம் வாயு
காட்சியம் - கார் பேட்டரியில் பயன்படுத்தும் திரவம்
அசட்டோன் - நகப்பூச்சு சுத்தப்படுத்தும் திரவம்
நாப்தலின் - பூச்சிக்கொல்லி மருந்து
ஸ்டிரிக் அமிலம் - மெழுகு தயாரிக்கப்படும் அமிலம்
டிடிடி - டியோட்ரான் பூச்சிக்கொல்லி மருந்து
கார்பன் மோனாக்ஸைடு - வாகனத்திலிருந்து வெளிவரும் நச்சுப் புகை
ஆர்காலிக் ஹைட்ரஜன் - சைனைடு நச்சுப் பொருள்
நிக்கோடின் - அடிமைப்படுத்தும்பொருள்
அமோனியா - கழிவறையை சுத்தப்படுத்தும் ஆசிட்
பினாயில் - பூச்சிக்கொல்லி

Read more: http://viduthalai.in/page4/82181.html#ixzz34fLaMuug

தமிழ் ஓவியா said...


வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்


தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் எஸ்சி/எஸ்டி சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்கள் எனப்படும் பட்டிய லினத்தவருக்கு எதிரான கொடுமை களைத் தடுப்பதற்காகவும், அச் சமூகத்தினருக்கு எதிரான கொடு மைகள், வன்முறைகள், துன்புறுத் தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடி யுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியின மக்களுக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு குழுவை நாடாளுமன்றம் அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 1989இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995இல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட் டத்தைக் காவல்துறையினர் தங் களுக்கு எதிரானதாகவே நினைத் தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page4/82179.html#ixzz34fLoArhU

தமிழ் ஓவியா said...


பொய்ம்மையும் வாய்மை இடத்து


ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். இந்தியர்களுக்குப் பெரியம்மை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது (1804). ஆனால், அன்றைய மக்கள் அதனை ஏற்கவில்லை. அவர்களைச் சரிக்கட்ட எல்லீசு துரை ஒரு புனித மோசடி செய்தார். அம்மை குத்திக் கொள்வதன் அவசியம் பற்றி வடமொழியில் அவர் தானே ஒரு கவிதை இயற்றி, அதனை ஒரு பழைய தாளில் எழுதிப் பழம் பாடல் என நம்ப வைத்தார். அம்மருந்து புனிதப் பசுவிலிருந்து பெறப்பட்டது என அப்பாடலில் குறிப்பிட்டார். எனவே, மக்கள் அம்மருந்தை ஏற்றனர்.

பி.கு. எல்லீசு துரை திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அதனால் பொய்ம்மையும் வாய்மை இடத்து புரை தீர்த்த, நன்னை பயக்கும் மெனின் என்ற திருக்குறள் அவர் நினைவுக்கு வந்திருக்கலாம்.

Read more: http://viduthalai.in/page6/82184.html#ixzz34fNMgnUC

தமிழ் ஓவியா said...


சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) என்று கூறி குழந்தைகளிடையே மூடத்தனத்தை வளர்ப்பதா?


செல்டென்ஹாம் அறிவியல் திருவிழாவில் நாத்திகத் தலைவரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் பங்கேற்றார். அவர் பேசும்போது, இயற்கையை மீறிய சக்தியால் (கடவுளால்) உலகம் இயக்கப்பட்டுவருவதாக கூறுவதன்மூலம் குழந்தைகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதுபோலவே சாந்தாகிளாஸ் (கிறிஸ் துமஸ் தாத்தா) என்கிற கதையால், இல் லாத ஒன்றை இருப்பதாக குழந்தைகளை நம்பவைக்கலாமா? என்று டாக்கின்ஸ் கேட்டார். மதக்கருத்துக்களை குழந்தை களிடம் திணிப்பதுகூட குழந்தைகள் மீதான வன்முறையாகும் என்றார். தற்காலத்தில் நிகழ்ந்துவரும் குழந்தை கள்மீதான அளவுகடந்த பாலியல் வன்முறைகள்குறித்த குற்றச்சாட்டுகள் பரவிவருவதற்கு காரணமாகவும் உள்ளன.

விளையாட்டாக புனையப்படும் கதைகள், கிறிஸ்துமஸை நம்புகின்ற பெற்றோர் களால் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மாறுபட்ட கருத்து களைக் கொண்டுள்ளவரும், உயிரியல் வல்லுநராகிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் அறிவியல் விழாவில் பங்கேற்ற பார்வை யாளர்களைநோக்கி, குழந்தைகளிடம் மூடத்தனமான நம்பிக்கைகளை உண்டாக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இயற்கையை மீறிய சக்தி (கடவுள்) யால்தான் உலகம் இயக்கப் பட்டு வருகிறது என்று குழந்தைகளிடம் கூறுவதன்மூலம் அவர்களுக்கு கடும்தீங்கிழைக்கிறார்கள் என்று தீப்பிழம்பாகி எச்சரிக்கிறார். விளையாட் டான, பழங்கதைகளை மதத்தின்பேரால் குழந்தைகளிடம் கூறி அவர்களை நம்பவைப்பது என்பது நாம் நினைப் பதைக் காட்டிலும் அவர்களுக்கே அதிகத் தீங்கு நேர்ந்துவிடும். இல்லாத கிறிஸ் துமஸ் தாத்தா இருப்பதாகக் கூறி, நம்பவைக்கலாமா? என்றும் கேட்கிறார். விண்வெளி வண்ணமயமானது என்று யார் அறிவார்கள்? 10 ஆண்டு களில் 10ஆயிரம் அதிசயித்தக்க படங் களை தொலைநோக்கிமூலம் பெற்று பார்க்கிறோம்.


தமிழ் ஓவியா said...

குழந்தைகள் முகநூலைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர்கள் 13 வயதுக்குமேல் சமூக வலைதளங்களைப் பார்க்கட்டும் என்று திட்டமிடுகிறார்கள். இது சரியே. குழந்தைகளின் புதுமையான விருப்பங்களைப் புரிந்து இணைந்து இருப்பதுபோல், குழந்தைகளிடம் (கடவுள் நம்பிக்கையில்/நம்பிக்கையின் மையில்) உண்மை அறியும் அறிவை, சிந்தனையை அவர்கள் விருப்பத்துக்கு வளரவிடுகிறோமா? என்று ரிச்சர்ட் டாக்கின்ஸ் பார்வையாளர்களிடம் கேள்வியை எழுப்பினார். தன்னுடைய அனுபவமாகக் கூறும்போது, ஆப்பிரிக் காவில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தன்னுடைய எட்டு வயதில் கதைகளில் வரும் மாயாஜாலங்களை நம்பி, அதுபோன்ற அதிசயங்களைக் காண முயன்று தேடி யதாகவும் கூறினார்.

நாம் நினைப்பது போலன்றி கதைகளாகக் குழந்தைகளிடம் கூறப்படுவது, அவர்களிடம் கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். கிறிஸ் துவின் தந்தை, கிறிஸ்துமஸ் என்று எல் லாவற்றையும் குழந்தைகள் நம்புவதற்கு விடலாமா? கடவுள் என்கிற கருத்தை சிறிதுசிறிதாக குழந்தைகளிடம் திணிப்பது குழந்தைகளுக்கு தீங்கிழைப்பது ஆகாதா?

விவிலியத்தில் குழந்தைகளின் அறிவை வலிமையாகவே கெடுக்கும்படியாகத்தான் உள்ளது. எதையாவது குழந்தைகளிடம் சொல்லி அதைப் பின்பற்றாவிட்டால், நரகத்தில் வறுக்கப்படுவார்கள் என்பதும் கூட ஒரு வழியில் குழந்தைகளைக் கெடுப்பதுதான். மதத்தைத் திணிப்பது என்பது குழந்தைகளிடம் அதிக அளவில் கெடுதலை விளைவிக்கக் கூடியதாகும். எந்தவிதத்திலும் கேள்வி கேட்கக்கூடாது என்று மதத்தைத் திணிப்பதைவிட மோசமான செயல் வேறில்லை.

சிந்திப் பதற்கு இடமின்றி மதத்தை புகுத்துவது என்பது மூளைக்கு வேலை கொடுக்காமல் அப்படியே ஏற்க வலியுறுத்துவதாகும். கடவுள்தான் படைப்பதாக சொல்லுவது பகுத்தறிவுக்கு முரணானது. சமுதாயத் துக்கு கேடானதுமாகும் என்று டாக் கின்ஸ் கூறுகிறார். கத்தாரிலிருந்து ஒளி பரப்பாகிவரும் அல்-ஜசீரா தொலைக் காட்சியில் ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஒரு பெண் தன்னுடைய நண்பன் இறந்தபின் நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவான் என்று தன்னிடம் பாதிரியார் ஒருவர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறியதால் அதிர்ச்சிக்குள்ளானார் என்றார். மேலும் அவர், பாலியல் வன்முறை என்பது கொடுமையானது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. கத்தோலிக் கனாக(மதவாதியாக) ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது உளவியல்ரீதியாக காலம்முழுவதும் மதத்துக்கு அடிமை யாக்குதுவது என்பது அதைவிட கொடுமையானதாகும் என்று கூறினார். அவரே 1976இல் எழுதிய நூலில் பல்வேறு நம்பிக்கைகள் வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் கடவுள் ஒரு பொய்க்கதை நூலை எழுதியுள்ளார். பள்ளிப்பருவத்தில் வெற்றுக் கூச்சலிடு பவர்களையும், எதையும் கவனத்தில் கொள்ளாத பொறுப்பற்றவர்களையும், காயங்கள் ஏற்படும்படியாக தாக்கிக் கொள்பவர்களையும் கண்டுள்ளதாக கூறுகிறார். மதவாதிகள் என்பவர்கள் அனுபவத்தில் மிக மோசமானவர் களாகவே இருந்துள்ளார்கள் என்றும் டாக்கின்ஸ் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது,மதத்தால்எந்தவிதத்திலும் நன்மை கிடையாது என்று பள்ளிப் பருவத்தில் கூறியபோது, பிரம்படி வாங்கினேன். பெரிதாக இல்லை என் றாலும், நாகரிகக் குறைவு உள்ள மக்க ளாக வாழ்ந்து கொண்டு புண்படுத்திய மோசமான நிலையை அனுபவத்தில் கண்டுள்ளேன் என்றார்.

_- -டெய்லி மெயில், இலண்டன், 4-_6_-2014

Read more: http://viduthalai.in/page8/82188.html#ixzz34fPHTAMO

தமிழ் ஓவியா said...


மனித கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலை தடுக்க அம்பேத்கரின் சாதி ஒழிப்பு பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூல்களை பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்


சென்னை பல்கலை. இதழியல் துறைத் தலைவர் பேச்சு

சென்னை, ஜூன் 15- மனித கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலைத் தடை செய்ய அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்ற நூலும் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை பல்கலைக் கழக இதழியல் துறைத் தலைவர் ரவீந்திரன் கூறினார். "கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ் வுக்கான சட்டம் 2013 மற்றும் அதற்கான விதிகள்' என்ற தலைப்பிலான பயி லரங்கம் சென்னை பல் கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை நடை பெற்றது.

இதில் ஆர். தாண்டவன் பேசியதாவது:

நாட்டில் பல்வேறு சட் டங்களும், மசோதாக்களும் தொடர்ந்து நிறைவேற்றப் பட்டு வருகின்றன. ஆனால், அவை குறித்தும், இயற்றப் படும் சட்டங்களில் உள்ள சரத்துக்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட மக்கள் அறிவதில்லை. இதனால் சட்டம் இயற்றப்பட்டதின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது.

இது குறித்து பல் கலைக்கழகத்தின் பொருளா தார கல்விக்கான டாக்டர் அம்பேத்கர் மய்யமும், இளைஞர் மேம்பாட்டுக் கான ராஜீவ்காந்தி தேசிய நிறுவனம் மற்றும் சமூக அமைப்புகள் மேற் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

புதுடில்லி சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் அமைப்பின் தேசிய ஒருங் கிணைப்பாளர் பெஸ் வாடா வில்சன்: கழிவு களை அகற்றும் தொழி லில் ஈடுபடும் சமூகத்தின ரின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ. 4,500 கோடி திட்ட நிதியை ஒதுக் கியுள்ளது. மேலும், வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் கழிவுகளை கையால் அள்ளும் சூழலே இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வரு கிறது.

மேலும் அண்மையில் இயற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தில், கழிவுகளை கையால் அகற்றும் தொழி லில் ஈடுபடுபவர்களின் மறுவாழ்வுக்காகவும், இந்த தொழிலில் ஊழியர்களை கட்டாயமாக ஈடுபடுத்து பவர்களுக்கான தண்டனை களும் இடம் பெற்றுள்ளன. தேசிய குற்றப் பதிவு அமைப்பில், நாடு முழு வதும் நடைபெறும் வாகன விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவ ரம் உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் குறித்த புள்ளி விவரங்கள் பதிவு செய் யப்பட்டிருக்கும் நிலையில், சாக்கடை மற்றும் கழிவு களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தவர்கள் குறித்த விவ ரங்கள் இடம் பெறவில்லை.

எனவே, முதலில் நாம் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் எத்தனை பேர் இறந்துள்ளனர், இந்தத் தொழிலில் எவ்வளவு பேர் இப்போது ஈடுபட்டு வரு கின்றனர் என்பது குறித்த முழுமையான தகவலை முறைப்படி சேகரிக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த புள்ளி விவரத்தைத் தயாரித்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் ரவீந் திரன் கூறியதாவது: கழிவு களை கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமை யாகத் தடை கொண்டுவர வேண்டுமானால், முதலில் ஜாதியற்ற சமூகம் உரு வாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே, இந்த தொழில் தொடருவதற்கு காரணமாகக் கருதப்படு கிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், சட்ட மேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும், தந்தை பெரியா ரின் பெண் ஏன் அடிமை யானாள் என்ற நூலும் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும், பல் கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித் துறை மற்றும் புத்தர் கல்வித் துறை என்ற இரண்டு புதிய துறைகள் உருவாக்கப் பட வேண்டும்.

இந்த இரு கருத்துகளை யும் ஏற்றுக்கொண்ட பல் கலைக்கழக துணைவேந் தர், விரைவில் இந்த இரு கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார் என்றார்.

பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணைச் செயலர் சஞ்சீவ் குமார், 1993-இல் இயற்றப் பட்ட சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் இயற்றப்பட் டது ஏன் என்பது குறித்து விளக்கிக் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82233.html#ixzz34l7XnVyj

தமிழ் ஓவியா said...


இப்போது இருக்கக் கூடிய சூழ்நிலையைப் பார்த்தால் காந்தியாரை கொன்ற கோட்சேவிற்கு பாரத ரத்னா விருது கிடைத்துவிடும் போலிருக்கிறது நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி கர்ஜனை


புதுடில்லி, ஜூன் 15-_முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முஸ் லிம்கள் அறிஞர்கள் தங் களது சொற்பொழிவு களில் பேசி வந்த கர் ஜனைகளை அய்தராபாத் எம்.பி அசத்துன் உவைசி அவர்கள் (11.6.2014) அன்று நாடாளுமன்றத் தில் மோடி மற்றும் நூற் றுக்கணக்கான பா.ஜ.க எம்பிக்களுக்கு முன்னால் பேசி நாடாளுமன்றத் தையே ஆச்சரிப்பட வைத்துவிட்டார்.

அவர் கேட்கும் ஒவ் வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத பி.ஜே.பி எம்.பிக்கள் இடையில் அவரை மறித்து கூச்சலிட்டனர். இருந்த போதிலும் அவர் களைச் சமாளித்து அசத்து உவைசி பேசியது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் பி.ஜே.பி எம்.பி ஒருவர் அவரது பேச்சை நிறுத்தச் சொல்லும் போது உன் தம்பிக்கு போய் சொல் லிக்கொடு என்ன பேசனும் ன்னு; எனக்கு நீ சொல்லாதே; எதுவா இருந்தாலும் சபாநாயகர் கிட்ட சொல்லு; எனக்கு நான் என்ன பேசுறேன்னு தெரியும் என்றார்.

அவர் பேசிய உரையின் சுருக்கம் வருமாறு: இந் தியாவில் நான்கு சம் பவங்கள், இந்த நாட்டின் அடித்தளத்தை ஆட்டும் அளவிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. முத லாவது காந்தியார் படு கொலை, இரண்டாவது சீக்கியர்கள் படுகொலை, மூன்றாவது பாபர் மசூதி இடிப்பு, நான்காவது குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு. இந்த சம்பவங் களையும், இதற்கு காரணமானவர்களையும், மனிதத்தன்மை இருக்கும் வரை யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.

இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையைப் பார்த்தால், காந்தியை கொன்ற கோட் சேவிற்கு பாரத ரத்னா அல்லது வீர் சக்ர விருது கிடைத்து விடும் போலி ருக்கிறது. மோடியின் வெற்றி ஒரு சோககரமான வெற்றி. இந்திய அரசி யலமைப்பை காப்பாற்ற உறுதியெடுத்து, நாட்டு மக்களின் மேம்பாடு பற்றி அனைத்து எம்.பி க்களும் பேசுகின்றார்கள். நாட்டு மக்கள் என்பது அனைவரையும், அனைத்து சமுதாயத்தை யும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

உங் களது (மோடியை பார்த்து) அமைச்சர் முதல் நாளிலேயே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை, பார்சிகள் மட் டும்தான் சிறுபான்மை யினர் என்கிறார், என்பதா யிரம் பார்சிகளுக்காகவா ஒரு மத்திய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீக்கியர்கள், புத்தர்கள், கிறிஸ்துவர்களின் நிலை என்ன? நாலரை சதவிகித இட ஒதுக்கீட்டில் இந்த அரசின் நிலை என்ன? பிரதமர் மோடி சமபங்கு, சம உரிமை என பேசு கிறார்.

அக்ஷாதம் விஷ யத்தில், உச்சநீதிமன்றம் தற்போதைய பிரதமரும், அன்று குஜராத்தின் முதல்வருமாக இருந்த மோடி அமைச்சகத்தை விமர்சித்துள்ளது. இதற்கு இந்த மோடி அரசு மன்னிப்பு கேட்குமா? நான் இங்கு பாதிக்கப் பட்டவர்களின் சொந் தக்காரனாக, பேச முடி யாதவர்களின் குரலாக கேட்கிறேன், அநீதி இழைக்கப்பட்டோருக் கும், குஜராத்தில் படு கொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.

மோடி அரசு வந்ததும் இந்த நாட்டில் என்ன நடக்கிறது? புனே உட் பட நாட்டில் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படு கிறது. இதற்கு காரண மான இயக்கங்களையும், அபினவ் பாரத் உட்பட அனைத்து இயக்கங்களை யும் தடை செய்ய வேண் டும் என்று கர்ஜித்த குர லில், பல இடைமறியல் களுக்கு மத்தியில் சலிக்கா மல் சமாளித்து பதில் கொடுத்து நாடாளுமன் றத்தில் பேசியுள்ளார் அசத்துன் உவைசி!

Read more: http://viduthalai.in/page-2/82230.html#ixzz34l7rJtnW