Search This Blog

3.6.14

கலைஞரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி


(தி.மு.க. தலைவர் கலைஞரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி  ”தமிழ் ஓவியா” வலைப்பூ  பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது
)


தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சி, அண்ணா அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி கொள்கை வழி நடந்து வருகிறேன்


தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சி,  அண்ணா அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி கொள்கை வழி நடந்து வருகிறேன்
தேர்தல் முடிவுகளுக்குப்பின் தோழர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வார்களாக!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி
சென்னை, ஜூன் 2- நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. தோழர்களின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி தோழர்கள் தங்களைக் கூர் தீட்டிக் கொள்ளவும்; செம்மைப்படுத்திக் கொள் ளவும், தங்களைத் தாங் களே சுயபரிசோதனை செய்து கொள்ளவும் கேட் டுக் கொள்கிறேன் - இதுவே எனது 91ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

காலமும்,  அலையும்  யாருக்காகவும் காத்திருப் பதில்லை  என்பது முது மொழி.


தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90ஆவது வயதைக் கொண் டாடி ஏழையெளியோ ருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக் கிறது.


அதற்குள்  எனக்கு  91ஆவது  பிறந்த நாளாம்!   இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று  நான் எவ்வளவோ சொல்லியும்,  கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும்,  பொரு ளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போ தும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும்  கேட்கவில்லை.     பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்துள்ள வற் றாத பாசத்தினால், இந்த 92 வயதிலும்,   இரண்டு முறை எனது  வீட்டிற்கே வந்து விட்டார்;  நான் ஒப்புதல் அளித்த பிறகு தான் விட்டார்.
மேலும், என்னுடைய பிறந்த நாளை எப்படி யெல்லாம் கொண்டாட வேண்டுமென்று   முர சொலியில்  நீண்ட விளக்க அறிக்கையும் வெளியிட் டுள்ளார்.


தமிழகத்திற்கும்,  மைசூருக்கும் இடையே  காவிரி நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்ட அதே 1924ஆம் ஆண்டில் பிறந்து,  1938இல் கரங்களில்  புலி, வில், கயல் பொறித்த தமிழ்க்கொடி ஏந்தி,  வாருங்கள் எல்லோ ரும் மொழிப் போருக்குச் சென்றிடுவோம்!  என்று  பரணி பாடிக் கொண்டே பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.   நீண்ட, நெடிய என்னுடைய பொது வாழ்க்கையில்  தமி ழகத்தில்  நான் செல்லாத ஊரில்லை;  பார்க்காத  தமிழ் மக்கள் இல்லை;  பேசாத மேடையில்லை என்று சொல் லும் அளவுக்கு,  கழகத்தை நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் கொண்டு செல்ல முதுகொடியப் பயணம் செய்திருக்கிறேன்.   தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்


தந்தை பெரியார் அவர் களால் செதுக்கப்பட்டு,  பேரறிஞர் அண்ணா அவர் களால்  செம்மைப்படுத்தப் பட்ட நான், அரசியல் வாழ்க்கையின்  அத்தனை பரிமாணங்களையும்  பார்த்து விட்டேன்.   கழகம் எனக்கு  தாய் -  தந்தைக்கு இணையானது.   முரசொலி  எனது மூத்த பிள்ளை!    நான் தென்றலைத் தீண்டிய தில்லை;  தீயைத் தாண் டியிருக்கிறேன் என்பது  திரைப் படத்திற்காக என் னால் எழுதப்பட்ட வெறும் வசனம் அல்ல:   அது தான் என் வாழ்க்கைச் சுருக்கம்!


தமிழக அளவில் மூதறி ஞர் ராஜாஜி, பெருந் தலைவர் காமராஜர், பசும்பொன் தேவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்,  பெரியவர் பக்தவத்சலம்,  பொது வுடைமை வீரர் ஜீவா,  பி. ராமமூர்த்தி,  அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.,  மணலி கந்தசாமி என இன்னும் பலரோடு அர சியல் செய்திருக்கிறேன்.
அகில இந்திய அளவில், அண்ணல் ஜெயப்பிரகாஷ் நாராயண்,  திருமதி இந்திரா காந்தி அம்மையார்,  பாபு ஜெகஜீவன் ராம், காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா,  மொரார்ஜி தேசாய்,  இளந் தலைவர் ராஜீவ் காந்தி,  சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்,  அய்.கே. குஜ்ரால்,  வாஜ்பாய், திருமதி சோனியா காந்தி, டாக்டர் மன்மோகன் சிங்,  என்.டி. ராமராவ், நம்பூதிரிபாத்,   ஹர்கிஷன் சிங் சுர்ஜித்,  சுர்ஜித் பர்னாலா, ராம் விலாஸ் பஸ்வான்  என இன்னும்  தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரோடு  இணைந்தும், எதிர்த்தும்  அரசியல் பணி யாற்றியிருக்கிறேன்.


இன்னும் சொல்லப் போனால், கல்லால்  இதயம் வைத்து,  கடும் விஷத்தால் கண் அமைத்து,  கணக்கில்லாப் பொய் களுக்குக்  காரணமாய் நாக்கு அமைத்து,  கள்ள உரு அமைத்து, கன்னக் கோல் கை அமைத்து,  நல்லவர் என்றே சிலரை - உலகம் நடமாட விட்ட தடா!   என்ற  பட்டுக் கோட்டை கல்யாணசுந் தரம் அவர்களின் பாடல் வரிகளுக்கு உருவகமான சிலரை எதிர்த்தும், அரசி யல் செய்திட வேண்டிய  நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும்,  தமிழ் மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக,  அதை நான் தட்டிக் கழித்ததில்லை. 1957ஆம் ஆண்டு  என்னுடைய  33ஆவது வயதில்,  அறிஞர் அண்ணா அவர் களின் ஆணைப்படி,  முதல் முறையாக குளித்தலை சட்டமன்றத்  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.  2011ஆம் ஆண்டு 87ஆவது வயதில்,  திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.   இதுவரையில் சட்டப் பேரவைத் தேர்தலில்  ஒரு முறை கூடத் தோற்காமல், பன்னிரண்டு முறை வெற்றி பெற்றிருக் கிறேன். இடையில்  1984 முதல்  1986  வரையில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக வும் பணியாற்றியிருக்கிறேன்.   பேரறிஞர் அண்ணா அவர்கள்  1967ஆம் ஆண்டு  தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது  1969 வரை இரண்டாண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும்,  பின்னர் அய்ந்து முறை மொத்தம் 19 ஆண்டுகள் முதலமைச்சராகவும்  பணியாற்றியிருக்கிறேன்.
அய்ந்து முறை முதலமைச்சராகவும் 12 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறேன்


இவ்வாறு  அய்ந்து முறை  தமிழகத்தின் முதலமைச் சராகவும்,  பன்னிரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும்  பணியாற்றிய போதிலும், என்னு டைய எளிய வாழ்க்கை முறைகளை நான் எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை என்பதை தமிழகம் நன்கறியும்.   திரையுலகில் ஈடுபட்ட போது,  குறைந்த விலைக்கு வாங்கி நான் தற்போது வசிக்கும் தெரு வீட்டைக் கூட,  என் வாழ்நாளுக்குப் பிறகு ஏழை யெளியோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மருத்துவ மனையாக இயங்க எழுதிக் கொடுத்து விட்டேன்.
இதுவரை என் வாழ்க்கை நிகழ்வுகளை  நெஞ்சுக்கு நீதி என்ற தொகுப்பாக ஆறு பாகங்கள் -  சுமார்  4,600 பக்கங்கள்  -  எழுதி நுலாக வெளியிட்டிருக்கிறேன்.  இதுதவிர  சட்டமன்றத்தில் நான்  ஆற்றிய உரைகள் 6000 பக்கங்கள் கொண்ட நுல்களாக  வெளி வந்துள்ளன.   மேலும் ரோமாபுரிப் பாண்டியன் ,  கவிதை மழை,   தென்பாண்டிச் சிங்கம் ,  முத்துக்குளியல்  இரண்டு பாகங்கள்,   புதையல்,  சங்கத் தமிழ்,  பொன்னர்-சங்கர்,  பாயும் புலி பண்டாரக வன்னியன்,  குறளோவியம்,  குறள் உரை,  தொல்காப்பியப் பூங்கா  என நுற்றுக்கும் மேலான என்னுடைய நூல்கள் வெளி வந்துள்ளன.  சுமார்  75 திரைப் படங்களுக்கு  கதை வசனம் தீட்டியிருக்கிறேன்.   மொத்தத்தில்  இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் நான் எழுதியவை நுல்களாக வெளி வந்துள்ளன.  இவற்றை யெல்லாம் நான் என்னுடைய  பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதற்காகக் கூறவில்லை.   வாழ் நாளை வீணாகக் கழிக்காமல் இயன்ற வரை உழைத்திருக்கிறேன்


என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமல்,  தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பயன்படத் தக்க வகையில்  என்னால் இயன்ற வரை உழைத்திருக்கிறேன் என்பதை விளக்குவதற்காகவே குறிப்பிட்டுள்ளேன். 1969ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் கழகத்தை நம்முடைய கரங்களிலே ஒப்படைத்து விட்டு மறைந்தார்.   கடந்த 45 ஆண்டுகளாக கழகத்தின் தலை மைப் பொறுப்பு என்னுடைய தோள்களிலே  ஏற்றப் பட்டுள்ளது.   இந்த  45 ஆண்டுகளில் நம்முடைய  கழகத்தில்   எத்தனையோ பிரச்சினைகள், துரோகங்கள், தூற்றல்கள்,  எள்ளல் ஏகடியங்கள், சச்சரவுகள் - ஆர்ப்பரித்து வந்த அத்தனையையும்  சாதுர்யமாக அடக்கிச் சமாளித்துத் தான் கழகம் அமைதியாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது.  கழகத்தை உடைத்து விட்டேன் என்று  கர்ச்சனை செய்தவர்கள்,  அண்ணா அறிவாலயத்தையும்,  அண்ணா தந்த இரு வண்ணக் கொடியையும் கைப்பற்றிச் சொந்தம் கொண்டாடத் துடித்தவர்கள்,  தீக்குண்டத்தில் கிடத்தப்பட்ட போது, அதன் மீது  பெட்ரோலை ஊற்றத் துணிந்தவர்கள் என உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்ற எத்தனையோ அதிசய மனிதர்களின் சதிகளையும், தந்திரோபாயங்களையும் தவிடு பொடியாக்கி, இரட் டிப்பு எழுச்சியோடு ஏற்றம் பெற்று  கழகம் வளர்ந் திருக்கிறது.

தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சி அண்ணா கற்றுத் தந்த வழிமுறைகள்

என்னைப் பொறுத்தவரையில்,  தந்தை பெரியார் அவர்களிடம் பெற்ற பயிற்சியைக் கருத்தில் தேக்கி,  அறிஞர் அண்ணா அவர்கள் கற்றுத் தந்த வழிமுறை களிலிருந்து  கிஞ்சிற்றும் பிறழாமல்;  சுயமரியாதையும், பகுத்தறிவும் பெற்ற சாதிமதப் பேதமற்றதும்,  சோஷலிச அடிப்படையில் ஆனதுமான சமுதாயம் - சமத்துவம் - சமூக நீதி - தமிழ் மொழியின் முதன்மை -  தமிழர் மேம்பாடு என;  இவற்றுக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவன்;  தோல்வியாயினும்,  வெற்றியா யினும்  துவளாமல் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவன் நான்.
அடித்தாலும், அணைத்தாலும்  நான் உந்தன் பிள்ளை   என்பதற்கொப்ப,  எந்த நிலையிலும் நான் நாட்டிற்காகவும், மொழிக் காகவும் ஆற்ற வேண்டிய பணியை தள்ளி வைத்ததும் இல்லை;   தமிழ் மக்களிடமிருந்து  என்றைக்கும் விலகி நின்றதும் இல்லை.


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் பெரும் தோல்வி கண்டுள்ளது.   இது போன்ற தோல்விகளை  கடந்த காலத்தில்  கழகம் பெற்று, மீண்டெழுந்து வெற்றி முகட்டை எட்டிப் பிடித்திருக் கிறது.   எனினும் இப்போதைய தோல்விக்குப் பலராலும்  பல்வேறு காரணங்கள் விமர்சனமாக வைக்கப்படு கின்றன.

கழகச் செயல்வீரர்கள் சிலர் அவர்கள் வழக்கமாக ஆற்றிட வேண்டிய தேர்தல் பணிகளைப் புறக்கணித்து முடங்கி விட்டனர்;  அல்லது அவர்களது நடவடிக்கைகள் வாக்காளர்களின்  வெறுப்பையும், வருத்தத்தையும் வரவழைத்துள்ளன;  என்பதும் ஒரு காரணமாக முன் வைக்கப்படுகின்றது.

சுயபரிசீலனை செய்தால் வெற்றிக்கு அச்சாரமாக அமையும்

அண்ணா அவர்கள் ஒரு முறை, தம்பீ!  உன்னை யாராலும் அழித்திட முடியாது;  உன்னை நீயே அழித்துக் கொண்டால் தவிர! என்று சொன்னார்கள்.   தீதும் நன்றும் பிறர் தர வாரா  என்பது  புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்ற னாரின் வாக்கு!   அதாவது  நன்மைகள் வந்தாலும்,  தீமைகள் வந்தாலும், அவற்றுக் கெல்லாம் காரணம் நாம் தானே தவிர,  பிறர் அல்ல.


எனவே  அந்த அரிய கருத்துகளை யெல்லாம்  எண்ணிப் பார்த்து  இந்தத் தேர்தல் முடிவினை உடன் பிறப்புகள்  தம்மை கூர் தீட்டிக் கொள்ளவும்,  செம்மைப்படுத்திக் கொள்ளவும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்;  ஒவ்வொருவரும்  சுய பரிசீலனை (Self-Introspection)    செய்து நாம் எங்கிருக்கிறோம் - என்ன செய்கிறோம்  -  அதன் விளைவுகள் என்ன  -  நமது பயணமும், பாதையும்,  கட்சியின் இலட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் முழுவதுமாய் இயைந்த வகையில்  இருந்திட  எப்படிப்பட்ட சிந்தையும் செயலும்  வேண்டுமென்று  உணர்ந்து கொள்ள வேண்டும்.   அதுவே நாம் அடுத்து பெறப் போகும்     வெற்றிக்கு  அச்சாரமாக அமையும்.   இதுவே என் இனிய உடன் பிறப்புகளுக்கு  நான் வழங்கும்  பிறந்த நாள் செய்தி!

                                 ---------------------------”விடுதலை” 2-6-2014

18 comments:

தமிழ் ஓவியா said...


பலே, மணப்பெண்!


தொட்டிலை ஆட் டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.

இதன் பொருள் - பெண் என்றால் பிள் ளையைப் பெத்துப் போட்டு வெறுமனே தாலாட்டிக் கொண்டு இருப்பதல்ல; - அந்தப் பெண்ணுக்குள்ளும் ஆளுமைத் திறன் உண்டு என்பதாகும்.

ஆனாலும் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று எதுகை மோனையில் பேசிக் கொண்டுதான் திரிகிறார்கள்.

ஆண் என்றால் சாட்டை - பெண்ணென் றால் அடிக்கப்படும் முதுகு என்ற நிலை நிலவி வந்தது உண்மைதான்.

பெண்கள் படிக்க ஆரம் பித்தனர் - ஆண்களை விஞ்சி கல்வியில் சாதிக்க ஆரம்பித்தனர் - ஆண் களை முதுகு காட்டச் செய்து விட்டனர்.

காதலிப்பது - கொஞ்ச நாட்கள் ஜாலியாக சுற்றித் திரிவது - அதன் பின் கை விட்டு இன் னொரு பெண்ணைக் கட்டிக் கொள்வது என் கின்ற எஜமானத் திமிர் கொண்ட ஆண்கள் சிலர் உண்டு.

அத்தகைய ஆண் வர்க்கத்தின் முகத்தில் அறைந்தது போல், முதுகுத் தோலை உரித் ததுபோல ஒரு நிகழ்வு!

மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வந்த சரவணன் என்ற பொறியியல் பட்டதாரி, தான் பணியாற்றும் நிறு வனத்தில் பணியாற்றிய ரம்யா என்ற பெண்ணை நான்கு ஆண்டுக் கால மாகக் காதலித்து வந்தான்.

காதலித்த பெண்ணைக் கைவிட்டு - வீட்டார் நிச்சயித்த பெண்ணுக்குத்தாலி கட்டத் திட்டமிட்டான்.

ரம்யாவுக்கு உண்மை தெரிய வந்தது; அடங்கிக் கிடந்த அந்தப் பெண் புலி சீறி எழுந்தது!

நண்பர்கள், உறவினர்கள் 10 பேர்களை அழைத்துக் கொண்டு திருமண மண் டபத்திற்குள் நுழைந்தார். ஆங்கே ஒரே ஆட்டம் பாட்டம்!

ரம்யாவைக் கண்ட சரவணன் ஆடிப் போனான்; அதிர்ச்சி அடைந்தான்.

மணப்பெண்ணிடம் உண்மையைக் கூறினார் ரம்யா! அவ்வளவுதான். ஆவேசப் புயலாகச் சீறி எழுந்தாள் மணப்பெண்! சரவணனின் சட்டையை இழுத்துக் குலுக்கி நான்கு கேள்விகளை நறுக் கென்று கேட்டதோடு நிற்கவில்லை;

தன் கால் செருப்பைக் கழற்றி மண மகனை நாலு சாத்தும் சாத்தினாள்.

காவல்துறையும் வந் தது. திருமணம் நின்றது!

நாலு இடத்தில் இப்படி நடந்தால்தான் நாசகாரர்கள் திருந்துவார்கள்!

பலே ரம்யா!

பலே மணமகள்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/81424.html#ixzz33XGDwPhX

தமிழ் ஓவியா said...


80 ஆம் ஆண்டில் ‘விடுதலை’ சந்தாக்களைக் குவிப்பீர்


கழகக் குடும்பத்தவர்களே, தமிழ் இன உணர் வாளர்களே,

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் தந்த அருட்கொடையான அறிவாயுதம் விடுதலை நாளேடு.

இந்த நாளேடு 80ஆம் ஆண்டை அடைகிறது. தமிழில் ஒரு நாளேடு 80 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறுவது என்பதும் - அதிலும் கொள்கை லட்சிய நெறியோடு - வெறியாளர்களை எதிர்த்து, வீறு கொண்டு வேக நடை போடுவது என்பதும் எளிதான செயலா? எண்ணிப் பாருங்கள்.

அக்காலத்துப் பிரபலமான நாளேடுகள் - அதுவும் அரசு ஆதரவு, விளம்பர வருவாய் போன்ற பல்வேறு சலுகைகளைப் பெற்று நடந்த நாளேடுகள்கூட 80 ஆண்டைத் தொடவில்லை.

கொள்கை இல்லாமல், வெறும் சர்க்குலேஷன் என்ற எண்ணிக்கையை எப்படிப் பரப்புவது என்பதையே குறியாகக் கொண்டு, அரை நிர்வாணம், சினிமா, ஜோதிட மூடநம்பிக்கை, ஆன்மீகம் என்ற பெயரில் அதிகமான புராணக் குப்பைக் கதைகளைப் பரப்புதல் போன்ற பாமரத்தனத்தின் பசிக்கு இரை போட்டு தங்கள் வயிறுகளை வளர்த்துக் கொள்ளும் மலிவுச் சுவையால் கொழுத்துக் கொண்டுள்ள ஏடுகள் ஏராளம் உண்டு.

மேற்காட்டிய ஜனரஞ்சகம் என்ற ஏமாற்று வேலைகளாலும், ஆட்சியை அனுசரித்தால் போதும் அமோகமாய் பக்க பக்கமாக விளம்பரங்கள் என்ற நிலவரம் ஒருபுறம்.

இவைகளை ஒதுக்கி மனிதர்களை பகுத்தறிவுவாதிகளாகவும், சமூக நீதிக்கு, எதிரான சக்திகளுக்கு எதிராக சங்கநாதம் செய்யும் பணியை, எந்நிலையிலும் நிறுத்த மாட்டோம் என்ற சூளுரையோடு சுயமரியாதை உலகு சமைக்க, பயணம் செய்யும் இந்த ஏடு, ஒரு தனித் தன்மையான லட்சிய ஏடு!

இதனைப் பரப்ப, நமது தோழர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டாமா?

எனது 50 ஆண்டு ஆசிரியப் பணியை ஊக்குவிக்கும் வகையில், 50ஆயிரம் சந்தாக்களை தந்தீர்கள் - மகிழ்ந்தோம்.

நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினீர்கள். அந்த அரும்பணிக்கு உங்களை அர்ப்பணித்துக் கிளம்புங்கள் தோழர்களே, தோழியர்களே!

தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறினாரே, தமிழன் இல்லம் என்பதற்கான அடையாளம் விடுதலை நாளேடு அங்கு இருப்பதே என்று.

அது கல்லில் செதுக்கப்பட்ட உண்மை என்று காட்டிடும் வகையில், சந்தாக்களை சேர்க்க தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குங்கள் தோழர்களே!

ஒருவர் இரு ஆண்டு சந்தாக்கள் என்ற ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டு உழைத்தால் உடனே 50 ஆயிரத்திற்கு மேல் சந்தாக்கள் கிடைக்காதா என்ன?

திருமணங்களுக்கு சந்தாக்களை அன்பளிப்பாகத் தரும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!

மாணவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் பரிசுகள் தரும்போது, நம் ஏடுகளின் சந்தாவைத் தந்து படிக்கப் பழக்குங்கள் -உங்கள் செயல் திறனில், நமக்குள்ள நம்பிக்கை ஒரு போதும் வீண் போனதில்லை.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/81429.html#ixzz33XGMmFZf

தமிழ் ஓவியா said...


போகாதே!


அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்கு மானமில்லையா? ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!

- விடுதலை, 20.11.1969

Read more: http://viduthalai.in/page-2/81431.html#ixzz33XGYyLxb

தமிழ் ஓவியா said...


விடுதலைக்கு 12 ஆயிரம்!


கழகத் தோழர்களே! நமது விடுதலை ஏடு 80ஆம் ஆண்டில் எடுத்தடி வைத்து விட்டது. விடுதலையின் பெருமைகளையோ, சாதனைகளையோ புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்களின் மூச்சுக் காற்று அது.

விடுதலை வெள்ளி விழா வேண்டுகோள் ஒன்றைப் பகுத்தறிவுப் பகலவன் வெளியிட்டார் (விடுதலை 6.6.1964).

அதில் அய்யா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை!

ஒழுக்கக் கேடானதும்; மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும் தமிழ் மக்களுக்குச் சமுதாயத் திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடளிக்கக் கூடியதான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை விடுதலை.

விடுதலை பத்திரிகை இல்லா திருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும்.

முதலாவது விடுதலையில் வரும் செய்திகளை நமது தமிழ்நாட்டு அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளும் நல்ல வண்ணம் கவனித்து ஒரு அளவுக்காவது பரிகாரம் செய்து வந்திருப்பதுடன், கவனம் செலுத்தும்படியான நிலையும் ஏற்பட்டு வந்திருக்கிறது. மற்றும் விடுதலை பத்திரிகையானது மற்ற பத்திரிகைக்காரர்கள் யாரும் இருட்டடிக்கும் செய்திகளையும், வெளியிடப் பயப்படும் செய்திகளையும் தைரியமாய் வெளியாக்கி, மக்கள் கவனத்தையும், அரசாங்கத்தின் கவனத்தையும் திருப்பும் படியாய் செய்து வந்திருக்கிறது.

இதையெல்லாம்விட விடுதலை பத்திரிகையானது பார்ப்பன ஆதிக்கத்தையும் அவர்களது அட்டூழியங் களையும் வளர விடாமல் செய்வதற்கு நல்ல பாது காப்பாய் இருந்து வந்திருக்கிறது என்று துல்லியமாக, தெளிவுபடுத்தி இருக்கிறார் தந்தை பெரியார்.

அதன் காரணமாகத் தான், மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், பெரியார் திடலில் விடுதலை பணிமனையைத் திறந்து வைத்தபோது மிக அழகாகவே அவருக்கே உரித்தான முறையில் சொன்னார்கள்.

தமிழர்கள் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் விடுதலை தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். (விடுதலை 2.11.1965) என்றார். உலகில் நாத்திக ஏடு ஒன்று இத்தனை ஆண்டுக் காலம் நடைபெற்று வருகிறது என்பது சாதாரண மானதல்ல! அந்த வகையில் உலகில் உள்ள கோடானுகோடி பகுத்தறிவாளர்கள், நாத்திகர்களின் மதிப்பிற்குரிய அறிவாயுதமாக ஒளிர்கிறது.

ஜாதியால் பிரிந்து கிடந்த தமிழர்களை ஒன்று திரட்டிய சாதனையும், அந்த ஜாதியின் காரணமாக மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தந்ததிலும், மூடநம்பிக்கைகளின் முதுகெலும்பைப் பிளந்து பகுத்தறிவு வெளிச்சம் தந்ததிலும், பெண்ணடிமை ஒழித்த திசையிலும், கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்குச் சட்டப்படியாக உரிமை களைப் பெற்றுத் தந்ததிலும் விடுதலைக்கு நிகர் விடுதலையே!

தமிழ்நாட்டில் ஆசிரியர் என்று சொன்னாலே அது விடுதலை ஆசிரியரைத்தான் குறிக்கும் என்ற நிலை என்றால் அதன் பொருள் என்ன? ஒட்டு மொத்த தமிழி னத்திற்கே நல்லாசானாக அது விளங்கி வருவதால்தான் அந்தச் சிறப்பினைத் தமிழர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

80 ஆண்டு விடுதலை வரலாற்றில் நமது தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்

52 ஆண்டுக் காலம் ஆசிரியராக இருந்து புதிய சாதனை படைத் துள்ளார்கள்.

50 ஆண்டு விடுதலையின் ஆசிரியராக இருந்த நிலையில், அவர்களின் பிறந்த நாளில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டித் தந்தோம். அது புதிய தலை முறையினரைச் சந்தித்துப் புத்தியைக் கூர் தீட்டியிருக்கிறது. இப்பொழுது 80 ஆண்டு வயதை விடுதலை எட்டியிருக்கும் இந்தக் கால கட்டத்தில் மேலும் 12 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டிட முடிவு செய்துள்ளோம்.

இந்த ஒரு மாதத்துக்குள் கழகத் தோழர்களே, பொறுப்பாளர்களே, உங்கள் வீட்டுத் திருமணப் பணிக்கு ஓடியாடிப் பணியாற்றுவதுபோல, இன்னும் சொன்னால் அதற்கும் ஒரு படி மேலாகப் பாடுபட்டு இலக்கை முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விடுதலைக்குச் சந்தா சேர்ப்பது விடுதலைக்காக அல்ல; தமிழரினத்தின் விடுதலைக்காகத்தான் இந்தச் சந்தா சேர்க்கும் பணியாகும்.

அதுவும் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இந்தச் சந்தா சேர்ப்புப் பணியினைத் தொடங்கியிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

மதவாதம் அதிகாரத்திற்கு வந்து இருக்கிறது. ஜாதீயவாதப் பேர் வழிகள் மக்கள் மத்தியில் கொம்பு சீவும் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

இந்தச் சக்திகளை முறியடிக்கும் போர் ஆயுதம் தந்தை பெரியார் நமக்குத் தந்த விடுதலை யல்லவா!

எனவே, கழகத் தோழர்களே, களத்தில் இறங்குவீர்!

தமிழர் இல்லமெல்லாம் சென்று விடுதலையின் அவசியத்தை எடுத்துச் சொல்லுவீர்.

ஒவ்வொரு கழகத் தோழரும் இரு சந்தா சேர்ப்பது என்ற முடிவுடன் வீதியில் இறங்குங்கள். கண் மூடிக் கண் திறப்பதற்குள் இலக்கை எட்டி விடலாமே!

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்பதைச் செயலில் காட்ட களத்தில் இறங்குவீர் கருஞ்சட்டைத் தோழர்களே!

Read more: http://viduthalai.in/page-2/81432.html#ixzz33XGhzB4F

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

பா.ஜ.க அரசு, கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

16-ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியின் மீதுள்ள கோபமும், பொருளா தார நெருக்கடியும், காங்கிரசுக்கு மாற்றாக சரியான ஒரு மூன்றாவது அணி அமை யாததாலும், இது பா.ஜ.க வுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால், தான்தோன்றித்தனமாக நடக்காமல், தன்னடக்கத்தோடு மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்பதே நடுநிலையா ளர்களின் கருத்து.

இந்திராகாந்தி ஆட்சி காலத்திலே, இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப் பட்ட கச்சத்தீவை, ஒப்பந்தங்களை மீறி நடக்கும் ராஜபக்சேவின் சர்வாதிகார அரசி டமிருந்து, திராணியுள்ளதாகச் சொல்லும் பா.ஜ.க அரசு கச்சத்தீவை மீட்டெடுக்குமா?

தமிழக மீனவர்களைப் படாதபாடு படுத்தும் சுண்டைக்காய் நாடான இலங் கையின் தலையிலே ஒரு தட்டுத்தட்டி அடக்கி வைக்குமா?

பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம், காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்டு, மாண்புமிகு ஜெயலலிதா அரசின் (ஈகோ) தன் முனைப்பால் முடக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி - சென்னை இடையிலான கப்பல் போக்குவரத்து பயண நேரம் 32 மணி மிச்சமாகும் என்கிற நிலையிலே - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - பா.ஜ.க அரசு நிறைவேற்றுமா?

இந்தியர்களின் கறுப்புப்பண வங்கிக் கணக்கை, இந்தியாவின் இரட்டை வரிக் கொள்கையை காரணங்காட்டி வெளியிட மறுக்கும், சுவிஸ் வங்கியிடமிருந்து பட் டியலை வாங்கி பா.ஜ.க அரசு கறுப்புப் பணத்தை வெளிக்கொணருமா?

நீராதாரப் பிரச்சினை:- ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய தென் மாநிலங்களில் அணைகளில் 16 பில்லியன் கனமீட்டர் மட்டும் சேமித்து வைக்கப் படுகிறது. ஆனால் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளில் ஆண்டுக்கு 2000 முதல் 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக் கிறது. தென் மாநிலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை நீர்வழிச்சாலை திட்டம் வழியாக இணைத்து அனைத்து மாநிலங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று வெ.பொன்ராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திட்டச்செலவு ரூ. 50,000 கோடி ஆகுமாம்.

பா.ஜ.க அரசு, நீர் வழிச்சாலைத் திட் டத்தை நிறைவேற்றி நாட்டின் பொருளா தாரத்தை உயர்த்துமா?

ஆட்சி அமைக்க, தமிழ்நாட்டின் (அதிமுக 37 இடங்கள்) தயவு தேவையில்லை என்கின்ற நிலையிலே தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நியாயமான நிதியினை பா.ஜ.க அரசு வழங்குமா?

தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட தென்மாநில ரயில் கொள்ளையில் ஈடுபடும் உத்தரபிரதேச மாநில கொள்ளையர்களை, பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்துமா?

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்றாலும்கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு 5 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. சீனாவில் கூட மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8 சதவீதம் ஆகும். உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியராம். இந்த நிலையை மாற்றியமைக்க நரேந்திரமோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்குமா?

சாதாரண காய்கறி முதல் பெட்ரோல், டீசல் விலை வரை உயர்ந்து கொண்டே போகிறது. இதை தடுத்து நிறுத்தி பெட்ரோல், டீசல் விலையை, பா.ஜ.க அரசு குறைக்குமா?

வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் நீடிக்கிறது, படித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை பா.ஜ,க அரசு உருவாக்குமா?

உற்பத்திச் செலவுக்கும் கீழாக, மஞ்சள் விலை விற்பதால், விவசாயிகள் பெருத்த நட்டத்தில் இருக்கிறார்கள், உற்பத்திச் செலவையாவது கணக்கிட்டு, பா.ஜ.க அரசு மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்ய லாமே?

பா.ஜ.க மிகப்பெரிய சக்தியாக உருவெ டுத்திருக்கும் நிலையிலே பா.ஜ.க வில் நிறுத் தப்பட்ட 5 முஸ்லீம்களும் தோல்வியடைந் தது எப்படி? இதற்கான காரணங்களை பா.ஜ.க கண்டறியுமா?

இப்படி ஏராளமான எதிர்பார்ப்பு களோடு, இந்தியத் திருநாட்டின் குடி மகன்கள், ஏக்கப்பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றாமல் புதிய ஏற்றம் தருமா? நல்ல மாற்றம் தருமா? வாழுமா, ஜனநாயகம்! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- கா.நா.பாலு, மேடடூர் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-2/81437.html#ixzz33XGrAPDr

தமிழ் ஓவியா said...


உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்


இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. புதுபுது நோய்களால் ஏராளமானோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டு உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய். முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம்.

மனிதன் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண் களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இவை பெண் களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம் வரை இருக்கும். மேலும் இந்தியர்கள் மற்றும் ஆசியர் களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை. குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவை.

அறிகுறிகள்: மாரடைப்பின் அறிகுறிகளை அடை யாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம்.

நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம். மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம். எனவே நீரிழிவு நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/81408.html#ixzz33XHPpdbQ

தமிழ் ஓவியா said...


நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை


பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய இலைகளையும் சேர்த்து தான் நமக்கு நினைவு வரவேண்டும். அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

கொய்யா இலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல., பல அற்புதமான குணாதிசயங்களை கொண் டுள்ளது. காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யா இலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்து விடும் சிறந்த உணவாகும். இதயநோய், புற்றுநோய், அல் சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களி லிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுவவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

கொய்யா இலையின் பயன்பாடுகள்

நீரிழிவை கட்டுப்படுத்தும்: கொய்யாஇலை ஆரோக் கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப் படுத்தியுள்ளது. இது நீரிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சும் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத் தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளன.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட் கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு தன்மையை கொண் டுள்ளது.

மேலும் இந்த கொய்யா இலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

Read more: http://viduthalai.in/page-7/81409.html#ixzz33XHiLve1

தமிழ் ஓவியா said...


வாழ்க கலைஞர் பல்லாண்டு-பல்லாண்டு!


மானமிகு சுயமரியாதைக்காரன் என்று என்றும் பெருமையுடன் அழைத்துக் கொள்ளும் பெம்மான், பெரியாரின் குருகுலச் சீடர், அண்ணாவின் அருமைத் தம்பி, லட்சோப லட்சம் உடன்பிறப்புக்களை உயிரினும் மேலாகக் கருதும் பாசமிகு நம் இனத் தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (3.6.2014) 91ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்; அவரது சலியாத உழைப்பு என்ற சரித்திரப் பேரேட்டில் 19 வயது இளைஞரின் போர்க் குணத்தைப் பெறுகிறார் என்று பொருள்.

வெற்றி - தோல்விகள் அந்த லட்சியத் தலைவரைப் பெரிதும் பாதித்ததில்லை.

வயது ஏற ஏற அவரது உழைப்புப் பெருகி, ஓய்வு சுருங்கி, லட்சியப் பயணம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அவரை உருவாக்கிய அறிவு ஆசான் தந்தை பெரியாரும் சரி, அறிஞர் அண்ணாவும் சரி, நீதிக்கட்சிக் காலத்திலிருந்தே, பல தோல்விகளை தேர்தலில் கண்டவர்கள்; ஆனால் லட்சியப் பாதையில் அவர்கள் வெற்றியே கண்டிருக்கிறார்கள்.

மதவாத, ஜாதி வெறி சக்திகள் புதுப் பாய்ச்சலுடன் விடுக்கும் அறைகூவலை ஏற்று, களங்காண ஆயத்தமாக வேண்டிய கால கட்டத்தில்,

கலைஞரின் புத்தாக்கம் தி.மு.க.விற்கு மட்டுமல்ல; திராவிடர் சமுதாயத்திற்கே தேவை என்பதால், நம் கலைஞர் அவர்கள் நூறாண்டுக்கு மேலாக, நல்ல உடல் நலத்தோடு வாழ்ந்து, என்றும் நம் சமுதாயக் கலங்கரை விளக்க வெளிச்சமாகி, தொண்டறப் பணிகளைத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறது அவர் தம் தாய்க் கழகம்.

வாழ்க கலைஞர் பல்லாண்டு - பல்லாண்டு!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

முகாம்: கொலோன் பல்கலைக் கழகம் கொலோன் நகர் ஜெர்மனி

நாள்: 3.6.2014

Read more: http://viduthalai.in/headline/81450-2014-06-03-07-39-04.html#ixzz33aQ0zoDl

தமிழ் ஓவியா said...


ஜூன் 3

இந்நாள் - திராவிடர் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ்நாட் டின் வரலாற்றிலும் ஒரு முக்கிய கல்வெட்டைப் பிரசவித்த பொன்னாள்! கலைஞர் பிறந்த நாள் (1924) என்றாலும் அந்நாள் எத்தகையது!

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜாதிகளைக் கடந்து சமயங்களைப் புறந்தள்ளி, மொழி உணர் வால் ஓரினம் என்ற தமிழினக் கோட்பாட்டை உணர்ச்சிப் பொங்க உரு வாக்கிய ஒரு போராட் டம் உண்டு என்றால் அது 1938 இந்தி எதிர்ப் புப் போராட்டமாகும்.

சக்ரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோது, பள்ளிகளில் இந்தித் திணிப்பை அறிவிப்பு செய்தார் (10.8.1937).

தந்தை பெரியார் தலைமையில் தமிழினம் பொங்கி எழுந்தது. சமஸ் கிருதத்தைப் படிப் படியாகப் புகுத்தவே இந்தியைக் கொண்டு வருகிறேன் என்று பச்சையாக சென்னை இலயோலா கல்லூரியில் பேசினாரே!

ஆம், பூனைக்குட்டி வெளியில் வந்தது - சும்மா இருப்பாரா சுய மரியாதைச் சூரியன் தந்தை பெரியார்?

தோள் கட்டி, தொடை தட்டி போர்க் குரல் எழுப் பினார் அதன் விளைவு இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களுக்காக சிறைச் சாலை கதவு முதன் முதல் திறந்த நாள் தான் இந் நாள் (1938).

இந்நாளில்தான் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு - தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில்.

இந்தி ஒழிய வேண் டும் அல்லது நான் ஒழிந்து போக வேண்டும் என்று பல்லடம் பொன்னு சாமி என்ற தோழர் பிரதம அமைச்சர் ஆச்சாரியா ரின் வீட்டு முன் பட்டி னிப் போராட்டம் நடத் தினார். அந்தக் காரணத் துக்காகவும் இன்றுதான் (ஜூன் 3 -1938) சிறைக் கொட்டடியில் தள்ளப் பட்டார்.

மறைமலை அடிகள் தலைமையில் கோடம் பாக்கம் மாநாட்டுக்கு இந்தத் தகவல் கிடைத் தது தான் தாமதம், மாநாடு - ஊர்வலமாக உருப் பெற்றது.

பிரதமர் ராஜாஜி வீட்டுமுன் களம் அமைக் கப்பட்டது முழங்கினர் தலைவர்கள் சி.டி. நாய கம் (இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரி) காஞ்சி மணிமொழியார் சாமி சண்முகானந்தா ஆகியோர் இரவு 12 மணி வரை முழங்கினர். முடி வில் அவர்களும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இந்தி எதிர்ப்புக்காக அன்று திறந்த சிறைச் சாலை 21.2.1940 இல் தான் முற்றுப் பெற்றது. இந்த நாளை மறக்கத்தான் முடியுமோ!

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/81456.html#ixzz33d3hUvFk

தமிழ் ஓவியா said...


கலைஞர் பிறந்த நாள் சிந்தனை எது?

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ் நாடெங்கும் இன்று கொண்டாடப்படு கின்றது. அந்த வாழ்த்துக்களோடு நாமும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார்கள். குறிப்பாக நடந்து முடிந்த 16ஆம் மக்களவைத் தேர்தல் குறித்தும், சிறப்பாக தேர்தல் குறித்தும், முக்கியமாக தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்தது குறித்தும் கருத்துக்களும், தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

நடந்து முடிந்த தேர்தலில் மாநில அரசின் அத்துமீறல்கள், தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்புப் போக்கு, ஊடகங்களின் நடு நிலை பிறழ்ச்சி, வாக்குகள் விலைப் பேசப்பட்டது பற்றியெல்லாம் பலரும் பேசியுள்ளனர்.

கலைஞர் பிறந்த நாள் விழா நாடு தழுவிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதில் காணப்படும் மக்கள் திரள் இளைஞர்கள் எழுச்சி - தேர்தல் முடிவுகளால் திமுக துவண்டுப் போய் விடவில்லை என்பதை வெளிப்படுத்தியிருப்பது நல்லதோர் அறிகுறியாகும்.

இதற்கு முன்பும் கூட திமுக இத்தகைய தோல்வி களைச் சந்தித்ததுண்டு. அதற்குப் பிறகு புதுச்சேரி யையும் சேர்த்து 40க்கு 40 இடங்கள் வெற்றி பெற்றி ருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தேர்தல் தோல்வியையே அறியாதவர் என்று கணிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் அ.இ.அ.தி.மு.க. 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் தோற்று இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதுண்டு.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே அடிக் கட்டுமானமுள்ள கட்சி அமைப்பைக் கொண்டதாகும். அதன் காரணமாகத்தான் 13 ஆண்டுகள் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இழந்த நிலையில் மீண்டும் ஆட்சி லகானைப் பிடித்தது.

அதே நேரத்தில் 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப் பீடத்துக்கு வர முடியவில்லை. தி.மு.க. நிலையோ முற்றிலும் வேறானது.

இந்த நேரத்தில் முக்கியமாக எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்தொன்றுண்டு. திமுக ஆட்சிக்கும், மற்ற கட்சி ஆட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாலைகள் போடுவார்கள்; தெரு விளக்குகளைப் போடுவார்கள் - பாலங்களைக் கட்டத்தான் செய்வார்கள்.

இவற்றையெல்லாம் கூட வேறு எந்த ஆட்சியிலும் நடக்காத அளவுக்குப் பெரிய அளவில் சாதித்துக் காட்டிய தி.மு.க ஆட்சி - வேறு எந்த அரசியல் கட்சிக் கும் இல்லாத தந்தை பெரியார் அவர்களின் சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகள் கொண்டதால் இந்தியா விலேயே வேறு எங்கும் சாதிக்கப்படாதவற்றைத் தனித் தன்மையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களை எடுத்துக் கொள்ளலாம்; ஜாதி மதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று கருதி, பொருத்தமாக தந்தை பெரியார் பெயரை அதற்குச் சூட்டிய பெரு மகன்தான் மானமிகு கலைஞர்அவர்கள். தமிழுக்குச் செம்மொழித் தகுதி, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, சமூக சீர்திருத்தத்துறை - என்ற வரிசையில் சீர் தூக்கிப் பார்க்கட்டும்; கலைஞர் அவர்களின் பக்கத்தில் வந்து நிற்கும் தகுதிகூட வேறு யாருக்கும் கிடையாதே!

இன்னும் சொல்லப் போனால் இது போன்ற சிந்தனை இல்லாததோடு மட்டுமல்ல; கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டங்களை பலவீனப்படுத்தும் மனப்போக்கும் அத்திட்டங்களை மேலே வளர்க்கும் மனமற்ற போக்கும்தான் இன்றைய மாநில ஆட்சியில் பச்சையாகத் தெரிகின்றன.

நியாயமாக இப்படி நடந்து கொண்டதற்காக அ.இ.அ.தி.மு.க.வுக்கு நடந்து முடிந்த தேர்தலில் நாட்டு மக்கள் சரியான பாடத்தைப் போதித்திருக்க வேண்டும்;

தமிழ் ஓவியா said...


நடந்து இருப்பதோ தலை கீழ்!

இந்த நேரத்தில் இதுபற்றிதான் சிந்திக்க வேண்டும்.

கலைஞர் ஆட்சியின் தனித்தன்மையான சாதனைகள் மக்களைச் சென்றடையவில்லையா அல்லது கலைஞர் ஆட்சியின் சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்களை முடக்கிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் பிற்போக்கான நடவடிக்கைகள் மக்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா? என்பது தான் முக்கியமான வினாவாக இருக்க முடியும்.

இதில் ஊடகங்களின் நடுநிலை தவறிய ஒரு சார்புக்கு முக்கிய இடம் உண்டு. இன்னொரு காரியத் தையும் இந்த ஊடகஙங்கள் செய்தன. தேர்தல் நெருங்க நெருங்க - திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு வளர்ந்து வருகிறது என்ற தொனியில் செய்திகளைக் கசிய விட்டதுகூட ஆளுங் கட்சிகளை மறைமுகமாக விழிப்படையச் செய்யும் தந்திரமே!

நிலையைப் புரிந்து கொண்ட ஆளும் கட்சியோ தேர்தல் ஆணையத்தைக் கையில் போட்டுக் கொண்டு வாக்குகளை விலை பொருளாக்கி விட்டது.

வாக்குகள் வாங்கப்பட்டன. பணப் பட்டுவாடா நடைபெற்றதைத் தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையமே வெட்கமின்றி ஒப்புக் கொண்டதே.

முத்தமிழ் அறிஞர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டி ருக்கும் அதே வேளையில், ஆக்க ரீதியான சிந்தனை கள், செயல் திட்டங்களுக்கு அடுத்தடுத்துத் தேவைப் படுகிறார்.

கலைஞர். - அவர்களின் பிறந்த நாள் விழாவின் சிறப்பு என்பது இதில் நாம் பெறும் வெற்றியைப் பொறுத்ததாகும்.

Read more: http://www.viduthalai.in/page-2/81468.html#ixzz33d4357m6

தமிழ் ஓவியா said...


தமிழர்கள் தன்மானம் உள்ள தமிழர்களாக வாழவேண்டும்! - கலைஞர் பேட்டி -


சென்னை, ஜூன் 4- தமி ழர்கள் தன்மானம் உள்ள வர்களாக வாழவேண்டும் - இதுதான் தனது பிறந்த நாள் செய்தி என்றார் கலைஞர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், தமது பிறந்தநாளில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் நினைவிடங் களுக்குச் சென்று மரி யாதை செலுத்திய பின்னர், அண்ணா அறிவாலயத்திற் குப் புறப்பட்டார்.

அப்போது செய்தியா ளர்களுக்கு தி.மு.க. தலை வர் கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:- பிறந்தநாள் செய்தி

செய்தியாளர்: 91 ஆவது பிறந்தநாள் காணும் தாங்கள், தங்கள் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியாக தெரி விக்க விரும்புவது என்ன? கலைஞர்: தமிழர்கள் தன்மானம் உள்ளவர் களாக, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதே தமிழர்களுக்கு நான் வழங்கு கின்ற பிறந்தநாள் செய்தி.

இன்னும் தொடர்கிறது

செய்தியாளர்: 91 ஆவது வயதில் இன்று நீங்கள் அடியெ டுத்து வைக்கிறீர்கள். உங்களுடைய கனவு, நீங்கள் கண்ட கனவு, அரசியல் வாழ்க்கையில் நிறைவேறியதாக நினைக்கிறீர்களா?
கலைஞர்: என்னுடைய கனவு என்பது, இன்னும் தொடர்கிறது.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81519.html#ixzz33ilWtQaw

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பார்த்தால் முருகன் முகம் பார்க்கவேண்டும் - அவன் பாராத போதும் மெல்லப் பார்க்கவேண்டும்.

- ஒரு சினிமா பாடல் முருகன்தான் ஆறு முகன் ஆயிற்றே!
எந்த முகத்தைப் பார்ப்பதுவோ

Read more: http://www.viduthalai.in/e-paper/81518.html#ixzz33ilguBdv

தமிழ் ஓவியா said...


இது நாடா? காடா? பெண் நீதிபதிமீதே பாலியல் வன்முறை

லக்னோ, ஜூன் 4- உ.பி. யில் பொதுமக்களுக்குத் தான் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமாறி நீதிபதி களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதி கரித்துள்ளன.

படானில் இரண்டு தாழ்த் தப்பட்ட சிறுமி கொடூர கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு மரத் தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்விவகாரம் நாடு முழு வதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாலியல் வன் முறை சம்பவங்கள் நடை பெற்ற வண்ணம் உள்ளன. இந்நிலையில் அலிகாரில் பங்கஜ் குப்தா, கோபால் குப்தா ஆகிய இருவர், பெண் நீதிபதியை பாலியல் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவரைக் கடுமையாக தாக்கிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ள னர் என்று காவல்துறை யினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். பெண் நீதிபதி தனது அரசு வீட்டில் கடந்த திங்கள் கிழமை அன்று நினைவின்றி பலத்த காயத்துடன் காணப்பட் டுள்ளார்.

இது தொடர்பாக அம் மாநில காவல்துறை அதி காரி நிதின் திவாரி செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில், பாதிக்கப் பட்ட பெண் நீதிபதியின் சகோதரர் கொடுத்த புகா ரின்படி பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது வரையில் எந்த மருத்துவப் பரிசோதனையும் நடத்தப் படவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்ட பெண் ணின் சாட்சியத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதி அங்குள்ள மருத் துவமனையில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்ற வாளிகளை தேடும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81520.html#ixzz33ilqLKNC

தமிழ் ஓவியா said...


பிரதமர் மோடி அலுவலக இணைய தளமா? ஆர்.எஸ்.எஸ். வரலாற்றுப் பெட்டகமா?

பிசினஸ் லைன் ஏடு அம்பலப்படுத்துகிறது

புதுடில்லி, ஜூன் 4- பிரத மர் நரேந்திர மோடி அலு வலகத்தில் இயங்கும் இணைய தளத்தில் ஆர்.எஸ்.எஸ். வரலாறு விரி வாக வெளியிடப்பட்டுள் ளது.

இதுகுறித்து பிசினஸ் லைன் (மே 30) ஏட்டில் வெளிவந்த செய்தி வருமாறு:

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தின் பிரதான மய்யங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்கம் நுழைய துவங்கி விட்டது. புதிய பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தை புதுப்பித்து http://pmindia.nic.in என்ற முகவரியுடன் கூடிய தளம் உருவாக்கப்பட்டுள் ளது. அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி எழுதப் பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவில் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பணி யாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக - கலாச்சார அமைப்பு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவர் பணி யாற்றினார் என்பதை விரிவாக சொல்கிற அந்தக் குறிப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பைபற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி புகழ்பாடி எழுதப் பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த பிரதமர், இந்திய அரச மைப்புச் சட்டத்தின் சோச லிச, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக இயல்பை உயர்த் திப் பிடிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார் என்பது தான்.

ஆனால், பிரதமர் அலு வலக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு நேர்மாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னைப் பற்றி, தனது சொந்த இணைய தளத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகள் முற்றிலும் முரண்பட்டவை. அந்த இணையதளத்தில் தனது சித்தாந்தம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இவ்வாறு எழுதியுள்ளது: சங் அமைப்பின் சித் தாந்தம் என்பது, ஒட்டு மொத்த சமூகத்தையும் அணிதிரட்டுவதன் மூல மாகவும், இந்து தர்மத்தை பாதுகாப்பதை உறுதி செய் வதன் மூலமாகவும் இந்த தேசத்தின் புகழ் மங்காமல் இருக்கச் செய்ய பணியாற் றுவதே. இந்த இலக்கை குறிக்கோளாகக் கொண்டு, தனது திட்டத்துடன் பணி யாற்றுவதற்கான வழி முறைகளை சங் அமைப்பு உருவாக்கியிருக்கிறது.

பிரதமர் அலுவல கத்தில் புதிய இணைய தளத் தில், முன்பு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தது உள்பட நரேந்திரமோடி வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. தனது 17 வயதில் மோடி வீட்டை விட்டு, வெளியேறினார் என்றும், மீண்டும் திரும்பி வந்து ஆர்எஸ்எஸ் அமைப் பில் இணைந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள் ளது.

கடந்த காலங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்புட னான தனிப்பட்ட நபர் களின் பிணைப்பு என்பது பெயரளவிற்கே அரசு நிகழ் வுகளில் குறிப்பிடப்பட்டு வந்தது.

அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்த நடைமுறை பின் பற்றப்பட்டு வந்தது. உதா ரணத்திற்கு, 2001 ஆகஸ்ட் டில் ஆர்எஸ்எஸ் அமைப் பின் மறைந்த தலைவர் லெட்சுமண் ராவ் இனாம் தாரைப் பற்றி அப்போது பாஜகவின் பொதுச்செய லாளர்களில் ஒருவராக இருந்த நரேந்திரமோடி எழுதிய நூல் ஒன்றை, தனது அரசு இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டார். அந்நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சன் அழைக் கப்பட்டிருந்தார். அது பிரதமர் நடத்திய ஒரு தனிப் பட்ட நிகழ்ச்சி என்ற அளவி லேயே இருந்தது. அந்த நிகழ்ச்சி தொடர் பாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த தலை வர் இனாம்தார் தொடர் பாகவும் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு தக வலும் உண்டு. இனாம் தாரை, வழக்குரைஞர் சாகேப் என்றும் குறிப்பிடு வார்கள்.

அவரைப்பற்றி விழாவில் வாஜ்பாய் பேசும்போது, (சுபாஷ் சந்திரபோஸின்) இந்திய தேசிய ராணுவத்தின் கதா நாயகர்களுக்கு ஆதரவாக வாதாடினார் என்று குறிப் பிட்டார். ஆனால் அதே நேரத்தில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அது தொடர்பு டைய ஆர்எஸ்எஸ் ஊழியர் களை பாதுகாப்பதற்கும் இதே வழக்குரைஞர் சாகேப் தான் வாதாடினார் என்பது தனிக் கதை.

நன்றி: தீக்கதிர், 31.5.2014

Read more: http://www.viduthalai.in/e-paper/81515.html#ixzz33im29qkj

தமிழ் ஓவியா said...

பிறந்த நாளா? புத்துணர்வு பிறந்த நாளா?

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை - இலட்சக்கணக்கானவர்கள் நிரம்பி வழிய நடைபெற்றது.

தேர்தலில் கடுந்தோல்வியைச் சந்தித்த ஒரு கட்சி, அக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளை மய்யப்படுத்திக் கிளர்ந்து எழுந்திருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்தப் பிறந்த நாள் விழா அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். இயல்பாக வேறு எங்கும் காண முடியாத அதிசயம்தான் இது.

வெறும் அரசியல் கட்சியாக மட்டுமே தி.மு.க. இருந்திருந்தால், அரசியல் லாபம் கிடைக்கும் கட்சிகளின் மடிகளில் போய் விழுந்திருப்பார்கள். காற்றடிக்கும் பக்கம் பறந்தே போயிருப்பார்கள்.

தி.மு.க.வில் ஏனிந்த நிலை ஏற்படவில்லை என்பதற்கு தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகனார் அவர்கள் அக்கூட்டத்தில் சொன்ன அந்தக் கருத்துத்தான் சரியானதாக இருக்க வேண்டும்.

வெறும் அரசியல் கட்சி என்பதையும் கடந்து சமுதாய கொள்கைகள் இதற்கு இருப்பதே காரணமாக இருக்க முடியும்; தானும், கலைஞர் அவர்களும் சிறு வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கொள்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால், அவற்றில் இந்த வயதிலும் உறுதியாக இருக்கிறோம்; அந்தத் தத்துவம் மேலும் தேவை என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று இனமானப் பேராசிரியர் அவர்கள் அழுத்தமாகத் தெரிவித்ததும், அதனை வழிமொழிகின்ற வகையில் கலைஞர் அவர்கள் மேலும் அழுத்தம் கொடுத்துப் பேசியதும் இராயப்பேட்டைக் கூட்டத்தின் தனி முத்திரையாகும். இலட்சக்கணக்கான அளவில் கூடிய அந்தக் கூட்டத் தில் இளைஞர்களுக்குப் பஞ்சமில்லை. இரு தலைவர் களும் எடுத்து வைத்த அந்தக் கருத்துகள், அந்த இளை ஞர்களைப் பெரிய அளவில் பாதித்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

தி.மு.க. நடத்தும் எந்தப் பொதுக்கூட்டத்திலும் இந்த அடிப்படை இலட்சியக் கோட்பாடுகள் எடுத்துச் சொல்ல சொல்லத்தான் தி.மு.க.வுக்கு அப்பாற்பட்ட தமிழின இளைஞர்களைப் பெரிதும் ஈர்க்கும்.

இன்றுள்ள சிக்கலோ இந்த அடிப்படை கருத்துகள் சமூகநீதித் தகவல்கள் இளைஞர்களிடத்தில் போதிய அளவில் போய்ச் சேரவில்லை என்பதுதான்.

சமூகநீதிச் சித்தாந்தத்தின் அடிநீரோட்டத்தை அவர்கள் தெரிந்திருந்தால், நீயா, நானா? நிகழ்ச்சிகளில், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முதலில் ஒழியவேண்டும்? என்று பேசுவார்களா?

தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சி ஒரு சட்டம் கொண்டு வருகிறது; அந்த ஆட்சி தோற்கடிக்கப்படுகிறது; அந்தச் சட்டத்தை ரத்து செய்து மீண்டும் புராண மூடத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் வருஷங்களை அனுமதிக்கிறது அ.தி.மு.க. அரசு; இதுபற்றிய சரியான புரிதல் நம் இன மக்களுக்கு, இளைஞர்களுக்கு இருந்திருக்குமேயானால், எவ்வளவுப் பெரிய போராட்டம் வெடித்துக் கிளம்பி இருக்கவேண்டும்? பார்ப்பனீய சிந்தனையோடு ரத்து செய்த ஆட்சிக்கு வாக்குச் சீட்டுமூலம் பாடம் கற்பித் திருக்கவேண்டுமே! அது நடக்கவில்லை என்கிறபோது, திராவிடர் இயக்கத்தின் பகுத்தறிவு, இனமானக் கருத்துகள் இந்தப் புதிய வரவு வாக்காளர்களுக்குக் கொண்டு செல்லுவதுபற்றித்தானே சிந்திப்பது சரியாக இருக்க முடியும்!

தேர்தல் தோல்விக்கான காரணங்களில் இத்திசைக் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை.

இராயப்பேட்டைக் கூட்டத்தில் விழா நாயகர் கலைஞர் அவர்கள் நமது நாட்டு ஊடகங்கள்பற்றி எடுத்துச் சொன்ன கருத்துகள் முக்கியமானவை.

ஏடுகள் ஒரு சார்பு நிலையை ஏன் எடுக்கவேண்டும்? வெளிப்படுத்தவேண்டிய தகவல்களை ஏன் இருட்டடிக்கவேண்டும்? என்ற நியாயமான வினாவை ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் கேட்கிறேன் என்று கலைஞர் கேட்டாரே - இதற்கு நேர்மையான பதில் அளிக்கும் அறிவு நாணயம் நம் நாட்டு ஊடகங் களில் கிடையாது என்பது வெட்கக்கேடே!

தமிழ் ஓவியா said...

ஆட்சி அதிகாரத்திற்கு அஞ்சுவது, விளம்பர வருமானத்திற்குத் தாள் பணிவது என்று ஆகிவிட்டால், பத்திரிகைகளின் நோக்கம் என்பதே - அதன் ஆளுமை என்பதே அறவே அறுபட்டு விழுந்த பட்டமாகிவிட்டது என்றே பொருள்!

மூன்றாவதாக தி.மு.க. தலைவர் என்ற முறையில் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்ன கருத்து கட்சி அமைப்பு முறையில் மாற்றங்கள் வரும் - கூர்தீட்டப்படும் - புதுப் பொலிவோடு புதுப் புனலாகப் பொங்கி வரும் என்பதாகும்.

எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிப்பு, சீரமைப்பு, தேவைப்பட்டால் களை எடுப்பு என்பதெல்லாம் - வேளாண்மையில் கடைப்பிடிக்கும் யுக்தி போன்றவையே!

சுருக்கமாகச் சொன்னால், மக்களவைத் தேர்தல் தோல்வி என்பது தி.மு.க. தீரத்துடன் போர் வீரனாக முகிழ்த்து எழுவதற்குக் காரணமாகிவிட்டது என்று கருத இடம் இருக்கிறது.

இதற்குக் கட்சித் தலைவர் அவர்களின் பிறந்த நாள் அமைந்தது - வேறு எந்த கட்சியிலும் நினைத்துப் பார்க்க முடியாதே!
தொடரட்டும் நன்முயற்சிகள்!

Read more: http://www.viduthalai.in/page-2/81523.html#ixzz33imSMIHc

தமிழ் ஓவியா said...


சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல் எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?


ஈழத்தில் வாழும் எம் உறவுகளின் வாழ்வு, வளம், எதிர்காலம் எல்லாமே எமது இறுதிப் போராட்டமான அரசியல் போரில்தான் தங்கியிருக்கிறது. ஆனால். அய்ந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த எமது அரசியல் போரை அதன் அந்தத்திற்கு எடுத்துச் செல்ல வல்ல பலர் எம்மிடையே இருந்தும், தேவைக்கும் அதிகமான ஆதாரங்களை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருந் தும், சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல், எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?

சிங்கள அரசின் அடிதடிகளுக்கு மத்தியிலே, காலிமுகாம் திடலிலே, காந்தி தேசமே பெருமைப்படும் விதத்தில் சத்தியாக்கிரகத்தை நடத்தி அறவழிப் போராட்டத்தின் மகிமையை எடுத்துக் காட்டினோம். வீரம் நிறைந்த செயல் களால், தீரம் செழிந்த பங்களிப்பால் போருக்கு அர்த்தத்தையும், போர் முனைக்கு இலக்கணத்தையும் கொடுத் தோம். ஆனால், ஆண்டுகள் பல சென்றும், எமது அரசியல் போர் செயலிழந்து நிற்பதற்கு யாரப்பா காரணம்?

இன அழிப்பை கொள்கையாகவும், மகாவம்சத்தை மார்க்கமாகவும் கொண்டு ஜனநாயகம் என்ற போர்வையிலே சர் வாதிகார ஆட்சி புரியும் சிங்கள அரசின் மத்தியிலே எமக்காகப் போராடும் தமிழர் கூட்டமைப்பின் தேவைகளை நாம்தானே நிவர்த்தி செய்யவேண்டும். இதனால் தானே, சிங்கள அரசின் கைகளில் தமிழீழம் இருக்கும் வரை அரசியல் போரை அங்கு நடத்துவது சாத்தியமற்றது என உணர்ந்த, தேசிய தலைவர் அதனை வாய்ப்பும், வசதியும் மிக்க புலம்பெயர் மக்களிடம் ஒப்படைத்தார். எமது அரசியல் போரை முன்னெ டுக்க, அதனை முன்னெடுக்கும் அணிக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை. இல்லை யேல், அவர்கள் ஆதரவை, பங்களிப்பை எப்படி எம்மால் பெறமுடியும்? அய்ந்து ஆண்டுகளாகியும், எந்த ஒரு புலம்பெயர் அணியாலும் அந்த அங்கீ காரத்தைப் பெற முடியாதது, சர்வதேசத் தில் இந்த அணிகளுக்குள்ள மதிப்பை யும், அதிலும் மேலாக இவர்கள் திறமை யையும் எமக்கு எடுத்துக் காட்ட வில்லையா? இந்த அங்கீகாரம்; பேரம்பேசி பெறும் உரிமையல்ல, தகுதி வாய்ந்த அணிக்கு சர்வதேசம் வழங்கும் சலுகை, சன்மானம்.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன், அந்த கொடிய நாள்களில், எம் உறவுகளுக்காக; கொட்டும் பனியிலும், ஒரு கையில் பிள்ளையும் மறுகையில் கொடியுமாக இலட்சக்கணக்கில் உலகெலாம் நாம் திரண்டெழுந்தபோது எமக்கு இருந்த, தேச மீட்புக்கான உணர்வும், எம் உறவுகள் மீது நாம் கொண்ட அன்பும், பாசமும் என்றும் மாறாது என்பது உண்மையா னால், வலிமைமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தை மய்யமாகக் கொண்டு, தேசிய தலைவரின் இலட்சியப் பாதை யில் பயணிக்கவல்ல ஓர் அணி, தகுதி வாய்ந்த உறவுகளால், மாற்றாரும் மதிக் கும் விதத்தில், உருவாக்கப்படவேண்டும்.

ஆண்டுக்கு ஓர் மாநாடும், ஒரு இராப் போசனமும் நடத்துவதை இலட்சியமாகக் கொண்டு, அய்.நா. மனித உரிமை சபை மாநாட்டிற்கு பார்வையாளர்கள் செல் வதை தேசமீட்பின் உச்க்கட்டமென ஜாலம் புரியும் இப்புலம் பெயர் அணிகள்; எமது போராட்டத்தின் திசையை மாற்றி சிங்கள அரசின் விருப்பைப் பூர்த்தி செய் வதை நிறுத்தி, திறமைக்கும் விசுவாசத் துக்கும் முதலிடம் கொடுக்கும் புனிதம் நிறைந்த புது அணியில் இணைவதே மேல். தமிழர் கூட்டணியை (TULF) ஆனந்த சங்கரி அபகரித்து தமிழரைத் தலைகுனிய வைக்க முயன்றபோது கலங்கிய தமிழி னம்; தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) உருவாக்கி வானில் வட்டமிடவில் லையா? அறவழிப்போராட்டத்தை வழிநடத்தி உள்நாட்டு மோதலை இலங்கை- இந்திய பிரச்சினையாக்கிய தந்தை செல்வாவின் சிறந்த தலைமை போல், ஆயுதப்போரை அதன் அந்ததுக்கு கொண்டு சென்று இலங்கை- இந்தியப் பிரச்சனையை சர்வதேச விவ காரமாக்கிய எம் காவியத்தின் நாயகன் தேசியத் த்லைவரைப் போல், எமது இறுதிப் போரை முன்னெடுத்து எம் தேசத்தை மீட்க வல்ல ஓர் திறமைமிக்க தலைமையும் எமக்கு வேண்டும்.

எம் இனத்தின் வெற்றியும் தோல்வி யும், எமது எதிரியான சிங்கள அரசின் கையிலல்ல, எம் உறவுகளான உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது. அமைப்புகள், சங்கங்கள், தனியார் அழைக்க தொ.இ: கனடா 416 829 1362.

sivalingham@sympatico.ca

Read more: http://www.viduthalai.in/page-2/81524.html#ixzz33imrKoeW