Search This Blog

29.6.14

பா.ஜ.க., பார்ப்பனர் கட்சியா?

அங்கும் ஆரியர் - திராவிடர்பாரதீய ஜனதா கட்சி என்றாலே எடுத்த எடுப்பிலேயே அது பார்ப்பனர் கட்சிதான் என்று சொன்னால் பலரும் வழக்கமாகக் கூறுவது: இந்தத் தி.க.காரர்களுக்கு இதுதான் வேலை; எதைச் சொன்னாலும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பார்வைதான்! என்று  பரந்து விரிந்த மனப்பான்மையினர் போல பசப்புவார்கள்.

உண்மையைச் சொன்னால் பலருக்கு உடல் எல்லாம் பற்றிக் கொண்டு வரும்.
ஆனால், அங்கு நடப்பது என்ன? தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த   பொன் - இராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய அமைச்சர் ஆகி விட்டார் இந்த நிலையில் தமிழகப் பா.ஜ.க.வுக்குப் புதிய தலைவர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்துக்கு யார்? என்பதில் அவர்களுக்குள் போட்டா போட்டி! ஆணா, பெண்ணா என்ற அலசல்... இதில் துக்ளக் இதழுக்கு அடங்கா ஆர்வம்.. இருக்காதா... அக்ரகாரத்தின் அதிகாரப் பூர்வமற்ற - அதிகாரப் பூர்வப் பிரதிநிதியாய் நின்று சலாம் வரிசை ஆடிக் காட்டுபவராயிற்றே திருவாளர் சோ ராமசாமி.

கடந்த வார துக்ளக்கில் (25.6.2014) எழுதினார்.

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றதால் மாற்றி அமைக்கப்படும் மாநிலத் தலைமை ஹெச். ராஜாவின் கீழ் வரும் என்று தகவல்கள் வருகின்றன (பக்.27) - என்று குறிப்பாக எழுதி இருந்தார்.

இந்த வாரம் வெளி வந்த துக்ளக்கில் அதனையொட்டியே ஒரு பெட்டிச் செய்தி.
தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் யார்?

தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில பா.ஜ.க. தலைவர் பதவியைப் பிடிக்க பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஹெச்.ராஜா, மோகன் ராஜுலு, வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இந்த ரேஸில் முன்னணியில் இருப்பவர்கள். ஹெச். ராஜாவை, மூத்த தலைவர் இல. கணேசன் ஆதரிப்பதாகவும், மோகன் ராஜுலு அல்லது வானதி என்பது பொன். ராதாகிருஷ்ணனின் சாய்ஸ் என்றும் கூறப்படுகிறது.

இவர்களில் மோகன் ராஜுலு ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து கட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் பூர்த்தி அடையாததால், கட்சி விதிப்படி அவரை நியமிக்க முடியாது என்று சிலர் கூறுகிறார்கள்.

ஹெச். ராஜாவுக்கு கட்சியின் நிர்வாகி கள் பலரிடையே ஆதரவு உள்ளது. நல்ல பேச்சாளர், மீடியா விவாதங்களில் சோபிப்பவர் என்பது இவரது பலம்.
முன்னாள் தலைவரான கே.என். லட்சுமணனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படலாம் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இல. கணேசனுக்கு, வேறு மாநிலத்தில் இருந்து  ராஜ்யசபா உறுப்பினர் பதவி தந்து, மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக பா.ஜ.க. வினர் மத்தியில் உள்ளது.  -------- துக்ளக் 2.7.2014 பக்.19


ஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது - ஹெச் ராஜாவை முன்மொழிவது திருவாளர் இல. கணேசன். வானதியை முன்மொழிவது பொன். ராதாகிருஷ்ணன்.

இதற்குப் பெரிய விளக்கம் தேவைப் படாது. இதற்குள் அடங்கி இருக்கும் நிறம் ஆரியர் திராவிடர் - புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம்!

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் கடந்த கால வரலாற்று ஏடுகளைப் புரட்டினால் நாம் கூறுவது உண்மையான உண்மை என்பது எளிதிற் புரிந்து விடும்.
தமிழக பிஜேபி தலைவராக டாக்டர் கிருபாநிதி நியமிக்கப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் எந்த வகைகளில் எல்லாம் அவ மதிக்கப்பட்டார். சிறுமைக்கு உள்ளாக்கப் பட்டார் என்பதை நாம் எடுத்துரைக்கத் தேவையில்லை. அவரே மனம் வெதும்பி வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழா தமிழா (ஏப்ரல் 2003) ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டி.

கேள்வி: இந்தூரில் என்ன நடந்தது?

டாக்டர் கிருபாநிதி பதில்: தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக  போர்டிகோ அருகில் காத்திருந்தேன். அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழித்திடுவேன் என்று பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.

நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா, அவர் எதையும் கேட்கிற நிலையில இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார் கிட்டப் பேசுறோம், என்ன பேசுறோம்னு உணருகிற நிலையில் - நிலைமையில இல்லை. ஒரு கட்டத்தில் என் கையைப் பிடிச்சி முறுக்கி அடிச்சிட்டார்.

கேள்வி: இல கணேசன் உங்கள்மீது அவ்வளவுக் கோபமாவதற்கு என்ன காரணம்?

டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது அதற்கு முன் கட்சி கணக்கு வழக்குகளை சரி பார்த்து ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல குளறு படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசியச் செயலாளராக ஆன பிறகும் மாநில கட்சி நிதியை கையாண்டு கொண்டி ருந்தார். இதை நான் தடுத்ததால் ஆத்திரப் பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய் விட்டார்.


கேள்வி: நீங்கள் தமிழக தலைவராக பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங் களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?

 டாக்டர் கிருபாநிதி: ஆமாம், தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப் படை வசதிகள்கூட செஞ்சு தரலை ஃபேக்ஸ் மிஷன் நானே சொந்தமாக வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து  அடிச்சிக்கிட்டேன். இப்படி கட்சிப் பணிகளுக்குச் சொந்த பணத்தை செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமையகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களை இயக்கும் சூத்ரதாரி இல. கணேசன்தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.

கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வு தலைவிரித்து ஆடுகிறது என்று பலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்ப தால்தான் அவமானப்படுத்துகிறார்களா? 


 (சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால ஜீரணிக்க முடியல என்று கூறினார்.

இதற்குப் பதவுரை - பொழிப்புரை தேவைப்படாது - பச்சையாக பார்ப்பனர் பார்வையும் ஆதிக்கமும் தமிழக பிஜேபிக் குள் தலை விரி கோலமாய் ஆட்டம் போடுகிறது. இந்த நிலையில் தான் இல. கணேசன் அய்யர்வாள் - எச். ராஜா அய்யர்வாளை ஆதரிக்கிறார்.

பாவம் வானதி சீனிவாசன்களும் - டாக்டர் தமிழிசைகளும் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போக தங்களைச் சார்ந்த பா.ஜ.க.வுக்காக வறட்டுத்தனமாகக் கத்து கிறார்கள்.

பலன் என்ன? தேர்தலில்  நிற்கக்கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த அணி யிலேயே அதிகாரப் பூர்வமாக ஒரே ஒரு பெண்ணுக்குக் கூட தேர்தலில் போட்டி யிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. 

 இப்பொழுது நடக்கும் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்? பொன் இராதாகிருஷ்ணனா? இல.கணேசனா? அதாவது ஹெச். ராஜாவா? வானதி சீனிவாசனா?

ஆரியர் - திராவிடர் போராட்டம் - எங்கெங்கும் என்கிறபோது அங்கு மட்டும் நடக்காதா என்ன?பா.ஜ.க., பார்ப்பனர் கட்சியாகி விட்டது உமாபாரதி பகிரங்கக் குற்றச்சாட்டுவட இந்தியாவில் ராமன் கோயில் பிரச்சினைக்காக  தீவிர பிரச்சாரம் செய்தவர் உமாபாரதி. இவரது பேச்சுக்களை டேப்மூலம் ஒலிபரப்பித்தான் 1990 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

இப்போது அந்த உமாபாரதியே பா.ஜ.க. தலைமையின் மேல் ஜாதி ஆதிக்கத்தைப் பகிரங்கமாக எதிர்த்து இருக்கிறார்.


ராமன் கோயில் பிரச்சினையை வைத்துக் கொண்டு ஓட்டு வாங்கி விடலாம் என்று பா.ஜ.க., தலைமை நினைத்தது. ஆனால், மக்கள் ராமன் கோயிலை மட்டுமே பார்க்க மாட்டார்கள். பா.ஜ.க., ஆட்சி எப்படி இருந்தது என்றும் பார்ப்பார்கள் என்று உமாபாரதி கூறியிருக்கிறார்.


உமாபாரதி மேலும் கூறியிருப்பதாவது: பா.ஜ.க., ஆட்சியை இழந்ததுமே எங்கள் தொண்டர்கள் சோர்ந்து விட்டார்கள். தலைவர்களுக்குள்ளேயோ கடும் கோஷ்டிச் சண்டை. எனது மாநிலமான மத்திய பிரதேசத்தில் சுந்தர் லால் பட்வா, சக்லேச்சா, கைலார் ஜோஷி. வீரேந்திர குமார் என்று தலைவர்கள் ஆளுக்கொரு கோஷ்டி, மற்ற கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களைத் தலைவர்கள் பாதுகாப்பார்கள். ஆனால், எங்கள் கட்சியிலோ தொண்டர்கள் அனாதையாக நிற்கிறார்கள்.


பா.ஜ.க. வெறும் உணர்ச்சி அரசியல் ந;டத்துகிறதே தவிர, சமூகப் பிரச்சினைகளைப் பார்ப்பதில்லை.

எங்கள் கட்சியை மக்கள் பார்ப்பனர் கட்சியாகத்தான் பார்க்கிறார்கள். கல்யாண்சிங், வினய் கத்தியார், நான் எல்லோருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான். ஆனால், எங்களையும் மக்கள் பார்ப்பனர்களாகத்தான் பார்க்கிறார் கள். பா.ஜ. கட்சியே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வுக்குள் அடிமட்டத் தொண்டராக இருந்தாலும் கூட, ஒதுக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிட பிற்படுத்தப்பட்டோருக்கு டிக்கெட் கொடுப்பதே இல்லை.
இந்த அநீதியை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் நான் போராடினேன்.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தேர் தலில் நிறுத்தும்படி கூறினேன். ஆனால் அது எடுபட வில்லை. இந்து மதம் என்று நாங்கள் பேசினாலே அது பார்ப்பன ஆதிக்கம் என்றுதான் மக்கள் கருது கிறார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க., பார்ப்பனர் கட்சியாகி விட்டது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினருக்காக பி.டி. சர்மா போராடினார். அவரை பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத் காரர்கள் போட்டு உதைத்தார்கள். இந்த ஒரே சம்பவத்தால் ம.பி.யில் 40 தொகுதிகளை நாங்கள் இழந்தோம்.


தோல்வி அடைந்த பிறகும்கூட ஜாதி ஆதிக்கம் போகவில்லை. ம.பி. சட்டமன்ற பா.ஜ.க., தலைவராக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விக்ரம் வர்மாவைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்காமல் ம.பி. மக்கள் ஆதரவே பறி போகக் காரணமாக இருந்த சுந்தர்லால் பட்வாரியையே கட்சித் தலைவராக்க முயற்சி நடந்தது. அவர் வேண்டாம் என்று மறுத்த பிறகுதான் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடமளிக்க வேண்டும் என்று 1996-லேயே நான் போராடினேன். பிற்படுத்தப்பட்டவர் சொன்னால் அம்பலம் ஏறுமா?
இவ்வாறு உமாபாரதி வருத்தத்துடன் கூறினார்.


உமாபாரதியின் இந்தப் பகிரங்கப் போர்க் கொடியும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கடும் எதிர்ப்பும் பா.ஜ.க. தலைமைக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை எப்படியா கிலும் கவர என்ன செய்வது என்று முழிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கான திட்டங்களை கட்சியின் முக்கிய திட்டமாக அறிவிக்கலாம் என்ற சிந்தனை கட்சித் தலைமைக்கு வந்துள்ளது.


அதே சமயம் இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மேல் ஜாதியினரான பார்ப்பனர், தாக்கூர்கள், பனியாக்கள் ஆகியோரின் ஆதரவு போய் விடுமே என்றும் பயப்படுகிறார்கள். இதை பகிரங்கமாகவே பா.ஜ.க.வின் முக்கியத் தலைவரான சுந்தர்சிங் பண்டாரி கூறியிருக்கிறார்.


கன்ஷிராம் போல தாழ்த்தப்பட்டோர் பிரச்சினையை நாங்கள் எடுக்க முடியாது; அப்படி எடுத்தால் மேல் ஜாதி ஆதரவை இழந்து விடுவோம். எனவே, மேல் ஜாதி - கீழ் ஜாதி இரண்டுக்கும் சமமான கொள்கையைப் பின்பற்று வோம் என்றார். இனி என்ன திட்டத்தை அறிவித்தாலும் கூட தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்று நந்தி என்ற பா.ஜ.க. தலைவர் கூறினார்.
 
-   (விடுதலை 30.12.1993)


 ---------------- மின்சாரம் அவர்கள் 28-06-2014 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

41 comments:

தமிழ் ஓவியா said...

னடா பள்ளிகளில் பாலினங்களைக் குறிப்பிடுவதில் மாற்றம்


கனடாவில் உள்ள பள்ளிகளில் ஆண், பெண் பாலினத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக He/She என்பதற்குக்குப் பதிலாக Xe என்கிற பாலின பொதுச் சொல்லைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கனடியன் சிட்டி பள்ளியின் நிர்வாகம் இந்த மாற்றத்தை அங்கீகரித்து உள்ளது. புதிய மாற்றத்தின்படி He/She என்பதற்குப் பதிலாக ‘Xe’, என்றும், him/her என்பதற்குப் பதிலாக ‘xem’, என்றும், his/her என்பதற்குப் பதிலாக ‘xyr’ என்றும் புதிதாக மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது பள்ளி நிர்வாகம். குழந்தைகளிடையே கழிப்பிடங்களைப் பயன்படுத்தும்போது குழப்பங்கள் இல்லாமல், பாலின வேறுபாடுகள் இன்றி (unisex) கழிப்பிடங்கள் இருக்கவேண்டும் என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர் மைக் லோம்பர்டி கூறும்போது, நாங்கள் குழந்தைகளுக்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். பள்ளியில் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லாவற்றுக்காகவுமே இந்த நடவடிக்கை என்று கூறினார். பெற்றோர்கள் இந்த மாற்றங்கள்குறித்து கேட்கும்போது, ஆறு வயதுள்ள குழந்தைகள் மத்தியில் பாலின அடையாளங்கள் பெரிதாக புரிவதில்லை. அவர்கள் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதில் அவர்களாகவே முடிவெடுக்க வேண்டி உள்ளதால் குழப்பங்களை அடைகிறார்கள். இந்த மாற்றத்துக்கான கொள்கை முடிவு எடுக்கும்முன்பாக விவாதங்களுக்கான கூட்டங்கள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் காரசாரமாகவே நடைபெற்றது. கோபத்துடன் உள்ள பெற்றோர்கள் தரப்பில் செரில் சாங் என்பவர் குற்றச்சாட்டாகக் கூறும் போது, விவாதக்கூட்டத்துக்கு பெற்றோர்கள், உளவியல் நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்கள் என்று யாரையுமே அழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறும்போது, இந்த விவாதம் பொருளற்றது. பிரிக்கும் அரசியலாகி உள்ளது. இதனால், மக்கள் கோபத்துடனும், நிலைகுலைந்தும் உள்ளனர் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/83019.html#ixzz35z6RHjfV

தமிழ் ஓவியா said...

காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு


ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள 370 ஆவது பிரிவை நீக்கும் நோக்கத்தோடு மோடி ஆட்சி விவாதங்களைத் தொடங்கியிருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளு மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள ஜிதேந்திரசிங் பிரதமர் அலுவலக இணையமைச்சராக்கப்பட் டுள்ளார். பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த விவாதத்தை அவர் தொடங்கிய நிலையில், 370 உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனால், அது எப்படி இந்தி யாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறியமாட் டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற போது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா வுடன் இணைந்துவிட்டன.

தமிழ் ஓவியா said...


இணைய மறுத்த அய்தராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார்

அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ் தானத்தை இந்து மன்னரான ஹரி சிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானு டன் இணைவதா என்ற குழப்பநிலை நீடித்தது. பாகிஸ்தானுடன் இணைந்தால் தனி சமஸ்தானத் தகுதியுடன் நீடிக்கலாம் என்றும், இந்தியாவுடன் இணைந்தால் ஏற்கனவே உள்ள மாநிலங்களில் ஒன்றாகி, தனித் தன்மையை இழக்க வேண்டி வரும் என்றும், மன்னர் ஹரி சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, தனது பூர்வீகமான காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என விரும்பினார்.

இதனை கவுரவப் பிரச்சனையாகக் கருதினார். காஷ்மீரைத் தன்னுடன் இணைப்பதில் விருப்பம் காட்டிய பாகிஸ்தான் தனது இராணுவத்தை நிலைநிறுத்தியது. இந்தியாவின் உதவியை நாடினார் மன்னர் ஹரி சிங். இந்திய எல்லையி லிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு இராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர் ) என்று பாகிஸ்தான் கூறுகிறது. அதனை ஆக்கிரமிப்பு காஷ்மீர் (றிணீளீவீணீஸீ ளிநீநீஜீவீமீபீ ரிணீலீனீவீக்ஷீ-றிளிரி) என்று இந் தியா கூறுகிறது. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக, எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. காஷ்மீர் மீதான உரிமைக்கு இருநாடுகளும் போட்டியிட் டன. இந்த விவகாரம் 1948-ல் அய்க்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21.4.1948 அன்று தீர்மானம் (எண்.47) நிறை வேறியது. இதன்படி இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஊடுருவிய பகுதியிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். ஆனால், இது நிறை வேறவில்லை. இந்தியாவும், பாகிஸ் தானும் தனது செயலைச் சட்டப்பூர்வ மானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக அய்.நா. சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும், பாகிஸ்தானும், மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அய்.நா. அவையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம். காஷ்மீர் இந்தியாவுடன் முழு மையாக இணைய வேண்டும் என்கிற நேருவின் கருத்துக்கு ஆதரவாக இருந் தார் மாநில முதல்வரான (அப்போது அதற்கு பிரதமர் பதவி எனப் பெயர்) ஷேக் அப்துல்லா. அவருக்கு அய்.நா. சபையின் தலையீடு பிடிக்கவில்லை.

தமிழ் ஓவியா said...


பொது வாக்கெடுப்பிலும் ஆர்வமில்லை. நேரு தலைமையிலான இந்திய அரசாங் கமோ பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தை வெளியேற்றினால்தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியா கூறியது. நேருவுடன் ஷேக் அப்துல்லா நட்பு பாராட்டுவதாலும், இந்திய இராணுவம் நிலை கொண்டி ருப்பதாலும் காஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என பாகிஸ்தான் கூறியது. உலக நாடுகளின் தலையீட்டில் இருதரப்பு இராணு வத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது. காஷ்மீர் பிரச் சனையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை எனக் கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொது வாக்கெடுப்பு என்கிற அய்.நா. ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கை கழுவியது. அதே நேரத்தில் காஷ்மீரைத் தக்க வைத்துக் கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. அதன் விளைவுதான், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி தரும் 370 ஆவது அரசியல் சட்டப் பிரிவின் உருவாக்கம். இந்த சிறப்புத் தகுதியைப் பெறுவதன் மூலம் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கலாம் என நினைத்தார் ஷேக் அப்துல்லா.

பொது வாக்கெடுப்பைத் தவிர்க்க இது நல்ல வழி என நினைத்தது நேரு அரசாங்கம். இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத் திற்கு தற்காலிகமாக சிறப்புத்தகுதியை அளிக்கிறது. இந்த சிறப்புத் தகுதியின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் மாநில ஆட்சிக் காலம் 6 ஆண்டுகளாகும். காஷ்மீர் மக்கள் தங்களுக்கு என்று சிறப்புச் சட்டங்கள் இயற்றி அதன் கீழ் வாழ்கிறார்கள். இதில் குடியுரிமை, சொத்துரிமை, அடிப்படை உரிமைகள் போன்றவை அடங்கும். இந்தச் சிறப்பு சட்ட பாதுகாப்பு காஷ்மீருக்கு மட்டுமல்லாமல், இமா சலபிரதேசம், அருணா சலபிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, நாகா லாந்து உள்ளிட்ட பகுதி களில் வசிக்கிற பழங் குடியினருக்கும் உண்டு. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய நாடாளுமன் றத்தில் இராணுவம், தகவல்தொடர்பு, வெளி யுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற் றப்படும் எந்தச் சட்டமும் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

தமிழ் ஓவியா said...

பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரிய வரும் அவரது அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த வரும், காஷ்மீர் மகாராஜாவான ஹரி சிங்கின் முன்னாள் திவானுமான தமிழகத்தைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார்தான் இச்சட்டப்பிரிவை வடிவமைப்பதில் முன்னின்றார். உள்துறை அமைச்சர் பட்டேலின் ஒத்துழைப்பையும் கோபால்சாமி அய்யங்கார் பெற்றார். இதன் காரணமாக, 370 ஆவது சட்டப் பிரிவு நிறைவேறியது. மேலும், இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பதுபோல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு, அதன்படி காஷ்மீ ருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டு, 17.11.1956-ல் நிறைவேற் றப்பட்டது.

தமிழ் ஓவியா said...

இது, 26.1.1957-ல் இந்தியாவின் 8 ஆவது குடியரசு நாளில் நடைமுறைக்கு வந்தது. காஷ்மீருக்கெனத் தனி தேசியக் கொடியும் அமைத்துக் கொள்ள சட்டம் அனுமதித்தது. அதன்படி, காஷ்மீர் தேசியக் கொடியும் உருவானது. பொது வாக்கெடுப்பு நடத்தாமல் காஷ்மீரைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய இந்தியா, எக்காரணம் கொண்டும் காஷ்மீரை இழந்துவிடக் கூடாது என நினைத்த தால்தான் சிறப்புத் தகுதி வழங்கும் 370 ஆவது பிரிவுக்கு வழி வகுத்தது. 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட இந்திரா காந்தி -ஷேக்அப்துல்லா ஒப்பந்தத்திலும் (சிம்லா ஒப்பந்தம்) அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவின்படி ஜம்மு-காஷ்மீரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதனை மாற்று வழிகளில் அடிக்கடி மீற முயற்சிப்பது இந்தியத் தரப்பின் வழக்கமாக இருக்கிறது. பாது காப்பு என்ற பெயரில் அளவுக்கதிகமாக இராணுவத்தைக் குவிப்பது, மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பது, தீவிர வாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் இளைஞர்களை வேட்டையாடுவது, பெண்களை பாலியல் கொடுமைகளுக் குள்ளாக்குவது என 370 ஆவது பிரிவுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் காஷ்மீரில் அதிகம். காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய உரிமைகளை அவ்வப்போது இந்திய அரசு பறித்தே வந்துள்ளது. இது குறித்து எல்.கே.அத்வானி, தனது சுயசரிதையில் இந்த அதிகாரப் பறிப்புகளை பெருமையுடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

தமிழ் ஓவியா said...


ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் எதையும் செய்ய வேண்டும் என்ற வெறுக்கக்கூடிய முறையை இந்திய அரசு நீக்கியது. அம் மாநிலத்தில் இந்திய குடியரசின் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையம், தலைமை தணிக்கை அதிகாரியின் அதிகாரம், காஷ்மீருக்கு விரிவாக்கப்பட்டது. அம்மாநில முதல் வரை பிரதமர் என்று அழைக்கப்படும் முறை ஒழிக்கப்பட்டது என்று எழுதியுள்ளார். சிறப்புத் தகுதியை வழங்கும் 370 ஆவது பிரிவினால் காஷ்மீர் மக்களுக்கு நேரடிப் பலன் தரும் அம்சங்கள் சில மட்டுமே. அவற்றில் முக்கியமானது, காஷ்மீரிகளைத் தவிர வேறு யாரும் அங்குள்ள நிலங்களை வாங்க முடியாது என்பதாகும். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் நிலத்தை தாரை வார்க்கும் புதிய பொருளாதாரக் கொள்கையின் முயற்சி அங்கு பலிக்கவில்லை. அதே நேரத்தில், காஷ்மீரில் நிரந் தரமாக வாழ்பவர்களுக்கே நிலம் உரிமை என்பதால், வெளி மாநிலத்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் காஷ்மீர் பெண்களுக்கு நிலம் தொடர்பான சொத்துகளில் உரிமை இல்லை என மறுக்கப்பட்டது. எனினும், வெளி மாநிலப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் காஷ்மீர் ஆண்களுக்கு நிலமும் அதனைச் சார்ந்த சொத்துகளும் உரிமையுடையனவாக இருந்தன.

இந்தப் பாலின பாகுபாட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், 2002 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு வழங்கிய தீர்ப்பின் மூலம், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டாலும், காஷ்மீர் பெண்களுக்கான சொத்துரிமை நீடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் ஏன் இந்த சிறப்புத்தகுதி என்று பொதுவாகக் கேட்கப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் சிலவற்றுக்கும் அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற்ப இது போல சிறப்புத் தகுதி அளிக்கப்பட்டுள் ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 371 ஆவது பிரிவின்படி மகாராஷ்டிராவின் விதர்பா, மரட்வாடா, குஜராத்தின் சவு ராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்கும் வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள் ளன. 371ஏ பிரிவு நாகலாந்திலுள்ள ஒரு மாவட்டத்திற்கும், 371ஜே பிரிவு அய்தராபாத்துக்கும் சிறப்புத் தகுதிகளை வழங்குகிறது. நமது அரசியல் சாசனத் தின் தொடக்கத்திலேயே, இந்தியா, அதாவது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் குறிப்பிடப்பட் டுள்ளது. மாநிலத்தின் மொழி, இனம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை இவற்றின் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் காக்கப்பட சில சிறப்பு சட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள் ளன. இந்துத்வா என்கிற நெ(வெ)றியைத் தவிர வேறெதுவும் இந்த மண்ணில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படும் பா.ஜ.க.வும், அதன் மூளையான ஆர்.எஸ்.எஸ்சும் காஷ்மீர் மாநிலத்திற்குத் தரப்பட்டுள்ள சிறப்புத் தகுதியை நீக்குவதற்கான முதற்கட்ட முயற்சிகளை இத்தகைய விவாதங்கள் மூலம் தொடங்கியுள்ளன. பதவியேற்ற இரண்டாம் நாளிலேயே தேசிய அளவிலான இத்தகைய சர்ச்சை உருவாகியிருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிப்படவில்லை.

நன்றி:- கோவி. லெனின்

-தமிழ்.வெப்துனியா.காம் 12_-6_-2014

Read more: http://viduthalai.in/page2/83018.html#ixzz35z6jidLv

தமிழ் ஓவியா said...


Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?Paypal – இந்த வார்த்தையை அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புதல் போன்றவற்றை மிகப் பாதுகாப்பான முறையில் செய்யும் இது இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
நிறைய தளங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை Check அல்லது Paypal மூலம் தருகின்றன. இன்னும் பல Paypal வழியாக மட்டுமே பணம் செலுத்தும். எனவே Paypal Account Create செய்வது கட்டாயம் ஆகிறது.

இந்த பதிவில் Paypal Account உருவாக்குதல், Bank Account சேர்த்தல், Bank Account க்கு பணத்தை பெறுதல் போன்றவற்றை காண்போம்.

1. முதலில் Payapal.com என்ற முகவரிக்கு செல்லவும்.

2. அதில் Sign Up என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் முதலில் உங்கள் நாடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும், அடுத்து என்ன மாதிரி கணக்கு தொடங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு Personal என்பதை தெரிவு செய்யவும். பின்னர் Upgrade செய்து கொள்ளலாம். [நிறுவனங்கள் பெயரில் என்றால் மூன்றாவதை தெரிவு செய்ய வேண்டும்]

3. அடுத்த பக்கத்தில் உங்கள் தகவல்களை நீங்கள் தர வேண்டும். இதில் உங்கள் First Name என்பதில் உங்கள் பெயரை தரவும், Last Name என்பதில் Initial தரவும். இதில் உங்கள் உண்மைப் பெயரை பயன்படுத்தவும். தவறு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் முடித்த பின் Agree & Create Account -ஐ கிளிக் செய்யுங்கள்.

4. அடுத்த பக்கத்தில் My Account என்பதை கிளிக் செய்யுங்கள்.

5. இப்போது வரும் பக்கத்தில் உங்கள் Bank Account கேட்கப்படும். அதில் Add bank என்பதை கிளிக் செய்யவும்.


தமிழ் ஓவியா said...

6. அதில் உங்கள் அக்கௌன்ட் பெயர், பேபால் கணக்கோடு ஒத்துப் போக வேண்டும். அடுத்து உள்ள கட்டங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பவும். NEFT/IFSC Code அறிய நீங்கள் உங்கள் பேங்க் பெயர் மற்றும் ஊர் போன்றவற்றை இங்கே கொடுத்து தேடலாம்.

7. இந்த தகவல்களை நிரப்பிய பின்னர் Continue கொடுக்கவும்.

8. அடுத்த பக்கத்தில் Save என்பதை கொடுத்து விடவும்.

9. இப்போது Paypal உங்கள் வங்கிக் கணக்கில் 4 முதல் 5 நாட்களுக்குள் கொஞ்சம் பணம் போடும். [இந்திய ரூபாயில் இரண்டு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.] Two Deposits ஆக போட்டு இருக்கும். அதை செக் செய்து அதை உங்கள் Paypal கணக்கில் நுழைந்து Account Overview பகுதியில் “Confirm Bank Account” என்பதை கிளிக் செய்து தர வேண்டும்.

இது சரியாக இருந்தால் உங்கள் Paypal கணக்கு Verify செய்யப்பட்டு விடும். இனி Paypal கணக்கில் நீங்கள் பணங்களை பெற இயலும். அதை எளிதாக உங்கள் வங்கிக கணக்குக்கு Transfer செய்யவும் இயலும்.

Personal Acount களுக்கு Fees எதுவும் கமிஷன் ஆக பெறப்படுவது இல்லை. அதனால் அதைப் பற்றிய கவலை வேண்டாம்.நன்றி: பிரபுகிருஷ்ணா
(கற்போம்)

Read more: http://viduthalai.in/page3/83022.html#ixzz35z7HySrZ

தமிழ் ஓவியா said...


வேற்று கிரகவாசிகளைக் கண்டறிய நாசா நிறுவும் மிகப்பெரிய தொலைநோக்கி


ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரகவாசிகளைக் கண்டறிவதற்கு, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கியை, விண்வெளியில் நிறுவ, நாசா திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனின், போர்ட்ஸ்மவுத் நகரில் நடந்த தேசிய வானவியல் கூட்டத்தில், ராயல் வானவியல் கழகத்தின் தலைவர் மார்ட்டின் பார்ஸ்தோ, இத்திட்டம் குறித்து கூறியதாவது: இதற்காக, பூமியில் இருந்து, 10 லட்சம் மைல்கள் தொலைவில், 52 அடி விட்டமுள்ள லென்சுடன் கூடிய, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிலை நிறுத்தப்படுகிறது. மேம்பட்ட நுண்துளை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த தொலைநோக்கி, 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கோள்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. ஏற்கனவே விண்வெளியில் நாசா நிறுவியுள்ள, 44 அடி நீள, 'ஹபல்' தொலைநோக்கியை விட, நான்கு மடங்கு பெரிதான, இந்த தொலைநோக்கியின் உதவியால், விண்வெளியில், கண்ணுக்குத் தெரியாத பகுதிகளில் விசித்திரமான ஜீவன்கள் இருக்கிறதா, இல்லையா என்பதையும், 60 புதிய கோள்களையும் எளிதில் கண்டறிய முடியும். மேலும், வேற்று கோள்களில், உயிர்வளி (ஆக்சிஜன்) மற்றும் இதர வாயுக்களின் நிலையையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், இவ்வளவு பெரிய தொலைநோக்கியை, பூமியில் தயாரித்து, ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்வது சாத்தியமல்ல என்பதால், இதற்கு தேவையான பொருட்களை விண்ணுக்கு கொண்டு சென்று, அங்கு, தொலைநோக்கியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு, விரைவில் அனுப்பப்படுகின்றனர். வரும், 2030ஆம் ஆண்டுக்குள், தொலைநோக்கியை உருவாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் இவ்வாறு, மார்ட்டின் பார்ஸ்தோ கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/83021.html#ixzz35z8PQVML

தமிழ் ஓவியா said...


ஒரு நாட்டுக்கு 37 அலுவலக மொழிகள்


193 நாடுகள் நாடுகளாக அங்கீ கரிக்கப்பட்டவையாகும். 178 நாடு களில் தேசிய அளவில் அலுவலக மொழிகள் உள்ளன. அவற்றில் 51 நாடுகள் பொதுவான அலுவலக மொழியாக ஆங்கிலம் உள்ளது. 28 நாடுகளில் பிரெஞ்சு உள்ளது. 19 நாடுகளில் அரபு மொழியும், 19 நாடுகளில் ஸ்பானிஷ் மொழியும் அலுவலக மொழியாக உள்ளன. 8 போர்த்துகீசிய நாடுகள் மற்றும் மகாவா நாட்டில் போர்த்துகீசிய மொழி அலுவலக மொழியாக உள்ளது. 7 நாடுகளில் எந்த மொழியுமே அலுவலக மொழியாக இல்லாமல் உள்ளன.

27 மொழிகளை அலுவலக மொழிகளாக இரண்டு நாடுகள் கொண்டுள்ளன. அதில் தேசிய மொழி களும் அடக்கம். இவை மாற்றங் களுக்கு உட்படாதவை ஆகும்.

உலகில் அதிக எண்ணிக்கையில் பேசக்கூடிய, 1.2 பில்லியன் மக்கள் தாய்மொழியாகக்கொண்டு பேசக் கூடிய சீன மொழி இரண்டு நாடுகளில் அலுவலக மொழியாக உள்ளது.

சுவாஹிலி மொழி 8 இலட்சம் மக்கள் மட்டுமே தாய்மொழியாகக் கொண்டு, 4 நாடுகளில் அலுவலக மொழியாக உள்ளது. 84 மில்லியன் மக்கள் தாய் மொழியாகக் கொண் டுள்ள ஜாவனீஸ் எந்த நாட்டிலும் அலுவலக மொழியாக இல்லை.

சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எரித்ரியா, தி ஹோலி சி, லக்சம்பெர்க், சான் மரீனோ, சுவீடன், துவாலு, அய்க்கியப் பேரரசு(யூ.கே), அய்க்கிய நாடுகள்(யு.எஸ்) உருகுவே, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் அலுவலக மொழி என்று ஏதும் கிடையாது. அமெரிக்க ஆங்கிலம் மட்டுமே நிறுவனங்களின் மொழியாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில் 23 மொழிகள் அலு வலக மொழிகளாக உள்ளன.பல்வேறு தேசியங்களைக்கொண்டுள்ள பொலிவியாவில் 37 மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளன. முதல் மொழி ஸ்பானிஷ் அல்லது காஸ்டெலினா மற்றும் அந்தப் பகுதி தாய் மொழி.

Read more: http://viduthalai.in/page5/83025.html#ixzz35z8kEHk1

தமிழ் ஓவியா said...


மூன்றாம் இடத்தில்.... செபிர் நிறுவனத்தின் கணிப்பு


இன்னும் 15 ஆண்டுகளில், பொருளாதார வலிமையில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என லண்டனைச் சேர்ந்த ஆலோசனை சேவை நிறுவனமான செபிர் தெரிவித்துள்ளது. செபிர் நிறுவனத்தின் மதிப்பீடு களின்படி 2028 இல் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இருக்கும். தற்போது மூன்றாவது இடத்தில் இருந்து வரும் ஜப்பான் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும். அந்த ஆண்டில் மெக்சிகோ ஒன்பதாவது இடத்திலும், கனடா பத்தாவது இடத்திலும் இருக்கும்.

செபிர் நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டு உலக பொருளாதார அட்டவணைப்படி இந்தியா தற்போது 11ஆவது பெரிய நாடாக உள்ளது. 2018இல் நம் நாடு 9ஆவது இடத்திற்கு முன்னேறும். 2023இல் மேலும் முன்னேறி 4ஆம் இடத்தை பிடிக்கும். 2028இல் 3வது இடத்தை பிடிக்கும். அப்போது இந்தியாவின் பொருளாதார பலம் 6.56 லட்சம் கோடி டாலராக இருக்கும் என செபிர் கணித்துள்ளது. தற்போது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1,75,800 கோடி டாலராக உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றம் நன்றாக உள்ளது. இந்நாடுகளின் வளர்ச்சி வேகம் இதே அளவில் நீடிக்கும்பட்சத்தில், 2018ஆம் ஆண்டில் இரஷ்யா 6ஆம் இடத்தில் இருக்கும். இந்தியா 9ஆம் இடத்திலும், மெக்சிகோ 12வது இடத்திலும், கொரியா 13ஆவது இடத்திலும்,துருக்கி 17வது இடத்திலும் இருக்கும் என செபிர் கணித்துள்ளது. காமன்வெல்த் நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது. நிதிப் பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
(வளர்தொழில் ஜூன் 2014 பக்.32)

Read more: http://viduthalai.in/page5/83024.html#ixzz35z9DXpiI

தமிழ் ஓவியா said...


இங்கர்சாலின் பொன்மொழிகள்

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து எடுத்து விடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளைத் தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

####

அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங்குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.

Read more: http://viduthalai.in/page6/83028.html#ixzz35z9nQFXv

தமிழ் ஓவியா said...

இதுதான் ஹிந்துத்துவாகலாச்சார, மத மற்றும் அரசியல் இலக்குகளையே ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இந்து தர்மம் எனும் இந்து மதம், இந்து சன்ஸ்கிருதி எனும் இந்து கலாச்சாரம், இந்து ராஷ்டிரா எனும் இந்து தேசம் ஆகியவற்றின் உயர்வுக்காக சேவை செய்வதே தனது கடமையாகக் கொண்டு சங்கம் செயலாற்றி வந்தது.

சங்கத்தின் முன்னாள் தொண் டரால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மீது விதிக்கப் பட்ட அரசின் தடையை விலக்கிக் கொள்வதற்கு, குறைந்த அளவு பொது மக்களின் கண்களுக்குத் தோன்றும்படி யாவது, அரசியல் கோணத்திலான தனது செயல்பாடுகளை சங்கம் கை விடவேண்டுமென்று 1948 ஜனவரியில் சங்கத்திற்கு படேலினால் நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது.

அதன்படி சங்கத்தின் மறைமுகமான செயல் திட்டத்திலிருந்து ஹிந்து ராஷ்டிரா என்ற சொல்லை நீக்கிய சங்கம் தாங்கள் முழுமையான ஒரு கலா சார அமைப்பாகவே செயல்படுவோம் என்று அரசுக்கு உறுதியளித்தது. (பக்கம் 13-_14)

ஹிந்து மதத்தின்பால் தான் கொண் டிருந்த பாசமிகுதியின் காரணமாக சாவர்க்கர் தான் எழுதிய ஹிந்துத்வா என்ற பெயர் கொண்ட நூலில் தான் உருவாக்கி முன்னிலைப்படுத்திய ஆற்றல் நிறைந்த, வலிமை வாய்ந்த செயல்முறையான ஹிந்துத்வா என்ற சொல்லில் தங்கள் நோக்கங்கள் நிறை வேற்றப்படுவதற்கான நல்வாய்ப்புகள் இருப்பதை சங்கம் கண்டுகொண்டது. சாவர்க்கரைப் பொறுத்தவரை ஹிந் துத்துவா என்பது ஒரு மதம் என்ற சாதாரணமான கருத்தைக் கொண்டது அல்ல. அவரைப் பொறுத்தவரை இந்திய தேசத்தின் ஹிந்துக்கள்

(1) ஒரு பொதுவான கலாச்சாரத் தினால் கட்டுண்டிருப்பவர்கள்;

(2) பொதுவான ஒரு வரலாற்றினைப் பெற்றிருப்பவர்கள்;
(3) தங்களுக்கென ஒரு பொது மொழியினைப் பெற்றிருப்பவர்கள்;
(4) தங்களுடையது என்ற இந்திய தேசத்தைப் பெற்றிருப்பவர்கள்;
(5) தங்களுடையது என இந்து என்ற ஒரு தனி மதத்தினைப் பெற்றிருப்ப வர்கள் ஆவர்.

ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர் என்ற முழக் கங்கள் சங்பரிவாரத்தின் அடிப்படை யான, ஆதிக்கம் செலுத்தும் முழக்கங் களாக ஆயின.
ஹிந்துத்துவ அமைப்பின் மறைமுக மான செயல்திட்டம்:

தமிழ் ஓவியா said...


வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து

ஹிந்து என்றழைக்கப்படும் ஒருவன் யார்? சிந்து நதியிலிருந்து தெற்கே கடல் வரை பரவியிருக்கும் பாரதவர்ஷமாகிய இந்த தேசத்தை தனது தந்தையர் நாடாகவும், புனித நாடாகவும், தனது மதம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டி லாகவும் கருதி பாவிக்கும் ஒருவன்தான் ஹிந்து என்பவன்.

வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 38-_39)

சிந்து என்ற சொல்லின் வளர்ச் சியைத் தேடும் நமது முயற்சியில், சன்ஸ் கிருதி என்ற சொல்லையே இதுவரை நாம் சார்ந்து, நம்பி வந்துள்ளோம். தற்போதுள்ள வேறு எந்த சொற் களையும் விட சிந்துஸ்தான் என்ற சொல்லே இந்திய தேசம் என்ற வளர்ந்து வரும் கோட்பாட்டை மேலான முறையில் விவரிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நிலையில் நமது தேடுதல் என்னும் நூலின் நுனியை நாம் விட்டுவிட்டோம். குறுகிய மனப்பான்மையும், பழமைவாத மும் கொண்ட ஆர்யவர்த்தா என்னும் சொல்லின் முக்கியத்துவத்தை சிந்துஸ் தான் என்ற இந்த சொல்லுக்கு அளிக் கப்பட இயன்ற வாய்ப்பினை முறியடிப் பதற்கான அதே நோக்கத்துடன்தான், ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் தொடர்பு ஏதுமில்லாத முறையிலும், கட்சி வண்ணம் பூசப்படாமலும் இந்த சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

எடுத்துக் காட்டாக, ஒரு வல்லுநரின் கூற்றுப்படி, ஆர்யவர்த்தா என்பது

(நான்கு வர்ணங்கள் நடைமுறை இல்லாத ஒரு நாடு உண்மையிலேயே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது மிலேச்சர் நாடு என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆர்யவர்த் தாவோ அதனையும் தாண்டி வெகு தொலைவில் இருப்பதாகும்.)

ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 115)

அதனால், எட்டப்பட்ட முடிவு களைத் தொகுத்துக் கூறும்போது, இந்து எனப்படும் ஒருவன் சிந்து முதல் சிந்து வரை - அதாவது சிந்து நதியிலிருந்து கடல்கள் வரை உள்ள நிலத்தை தனது தந்தையர் (பித்ரு) நாடாகக் காண்பவனாகவும், அந்த இனத்தின் ரத்தத்தின் வழி வந்த வனாகவும், அவனது நுண்ணறி விற்கான முதல் ஆதாரத்தை வேதகால அய்ந்து சிந்துநதிகளில் தேடிக் காணத் தக்கவனாகவும், தொடர்ந்த தனது முன்னேற்றப்பாதையில் தான் எவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அந் நாட்டுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ப வனாகவும் இருக்கும் ஒருவனே இந்து என அறியப்படுபவன்ஆவான்; பொது வான அவர்களது செம்மொழியான சமஸ்கிருதத்தில் விவரிக்கப்பட்டுள்ள அந்த இனத்தின் கலாச்சாரத்தை பாரம்பரியமாகப் பெற்று வந்து அதனையே தனது கலாச்சாரமாகக் காண்பவன் ஆவான்; ஒரு பொதுவான வரலாறு, பொதுவான இலக்கியம், கலை, கட்டடக் கலை, சட்டம் மற்றும் நீதி பரிபாலனம், சடங்குகள், சம்பிரதா யங்கள், விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்குபவன் ஆவான்; அனைத்துக்கும் மேலாக, இந்த சிந்துஸ்தான் என்னும் நாட்டினை புண்ணிய பூமியாக (புனித தேசமாக), தனது மதத் தலைவர்கள் மற்றும் தேவதூதர்கள், குருக்கள், கடவுள் மனிதர்கள் வாழும் தேசமாக வும், வழிபாட்டிற்காக தலயாத்திரை செய்யும் புண்ணிய பூமியாகவும் கருதுபவன் ஆவான்.

ஹிந்துத்துவாவிற்கு மிகமிக முக்கிய மானவையாவன:
ஒரு பொதுவான நாடு (ராஷ்டிரா),
ஒரு பொதுவான இனம் (ஜாதி)
ஒரு பொதுவான கலாச்சாரம் (சன்ஸ்திரி)

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இவற்றை எல்லாம் சிறந்த முறையில் ஒன்றுதிரட்டி மிகச் சுருக்கமா இவ் வாறு கூறலாம்:

எவன் ஒருவனுக்கு சிந்துஸ்தான் ஒரு பித்ரு பூமியாக மட்டுமல்லாமல் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ அவனே ஹிந்து எனப்படுபவன்.

ஹிந்துத்வாவின் முதல் இரு முக்கிய தேவைகளான தேசம் மற்றும் ஜாதி ஆகியவை மிகமிகத் தெளிவாக பித்ரு பூமி என்று குறிப்பிடப்பட்டு பொருள் கொள்ளப்படுவதாகும். அதே நேரத்தில் மூன்றாவது முக்கியத் தேவையான சன்ஸ்திரி (கலாச்சாரம்) மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த முறையில் புண்ணியபூமி என்ற சொல்லால் குறிப் பிடப்படுகிறது. இந்த சன்ஸ்திரி என்பதில் புண்ணிய பூமி எனப்படும் புனித பூமியைக் குறிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள், கொண் டாட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.

- அ. பாலகிருஷ்ணன்

Read more: http://viduthalai.in/page6/83029.html#ixzz35zA2hr5w

தமிழ் ஓவியா said...


திராட்சைப் பழத்தின் நன்மைகள்


திராட்சைப் பழம்: எல்லா வகையான திராட்சையிலும் பொது வாக வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப் படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப் பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

வயிற்றில் இரைப்பை, குடல் களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டு மானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும்.

தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண் டும். இவ்வாறு இரண்டு துண்டு களையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப் பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத் தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவு கள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வராது.

Read more: http://viduthalai.in/page6/83030.html#ixzz35zAbnJyS

தமிழ் ஓவியா said...


காவித் தலைவருக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதையாம்!


சிருங்கேரி மடாதிபதி பாரதி தீர்த்த சாமிகள் என்னும் சிருங்கேரி சங்கராச் சாரி காலடியில் உள்ள கோயில்களுக்கு செல்லும்போது பயணியர் விடுதியில் அவருக்கு காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட் டுள்ளது.

ஆதிசங்கரர் பிறந்த இடமாகிய பெரியாறு ஆற்றங்கரைப்பகுதியை ஒட்டியுள்ள காலடியில் ஆதிசங்கரரின் நூற்றாண்டு விழா மற்றும் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.

15ஆண்டுகளுக்குப்பின்னர் 2010ஆம் ஆண்டில் சிருங்கேரி சங்கராச்சாரி கால டிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அரசின் சிறப்பு விருந்தினராக இருக்கிறார். விசாக சுக்ல பஞ்சமியில் ஆதிசங்கரர் பிறந்த நாளை மே 18இல் தத்துவவாதியின் நாளாக மாநில அரசு கொண்டாடுகிறது. மே 7ஆம் தேதி 2010 அன்று சிருங்கேரி சங்கராச்சாரி வருகையின்போது கேரள மாநில தொழிலாளர்துறை அமைச்சராக இருந்தவரான ஜோஸ் தெட்டாயில், தேவஸ்வ அமைச்சர் இராமச்சந்திரன், கடன்னபள்ளி மற்றும் திருவாங்கூர் அரச பரம்பரையின் தலைவரான உத்ரோதம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

ஆதிசங்கரர் மற்றும் சாரதாம்பாள் கோயில் வளாகத்தின் கிழக்கு நுழை வாயில் பழமையான கேரளா பாணி யில் மறுசீரமைக்கப்பட்டு கட்டப்பட் டது. சிருங்கேரி சங்கராச்சாரி கோயிலைப் பார்வையிட்டபின் கூறும்போது, காலடி தீர்த்த ஷேத்திர மாக உள்ளது. சிருங்கேரி மடத்தின் பிரதிநிதியாக வருகைதரும் சிருங்கேரி சங்கராச் சாரிக்கும் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள பி.என்.கோபாலகிருஷ்ணன் கூறும் போது, 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் சங்கரரின் பிறந்த இடம் அறியாமல் இருந்துவந்தது. 33 ஆம் சிருங்கேரி சங்கராச்சாரி சச்சிதானந்தா ஷிவபினவா நரசிம்ம பாரதி சாமி மற்றும் திருவாங்கூர் மகாராஜா சிறீமூலம் திருநாள் ராமவர்மா ஆகியோர் சேர்ந்து ஆதி சங்கரரின் பிறந்த இடத்தைக் காலடி என்று கண்டறிந்தனர்.சிருங்கேரி மற்றும் சங்கராச்சாரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள இடமாக காலடி உள்ளது என்றார்.

1910ஆம் ஆண்டில் மகா சுக்ல துவாதசியில் இரண்டு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மே 14இல் தொடங்கி ஆதிசங்கரரின் பிறந்தநாள் விழாக் கொண்டாட் டங்கள் மே 31 வரை நடைபெற்றுள்ளது. பூர்ணஹத்தியின் ஆதி ருத்ர மகாயாகம் சிருங்கேரி மடாதிபதியின் முன்னிலை யில் நடைபெற்றுள்ளது. விழாவை யொட்டி வித்வத் சபாக்களில் வேதங்கள் ஓதப்படுகின்றனவாம். மே 18ஆம் தேதி அன்று சிருங்கேரி சங்கராச்சாரியால் சிறப்புப் பூசை செய்யப்படுகிறதாம். அப் போது, வேதங்கள் பயின்ற வித்துவான் கள் விருதுகள், சான்றுகள் அளித்துப் பாராட்டப்படுகின்றனர். தி இந்து ஆங்கில நாளிதழ், 14-.5.-2010

Read more: http://viduthalai.in/page6/83032.html#ixzz35zAs7p4J

தமிழ் ஓவியா said...

இந்தியைத் திணித்தால் ஆகஸ்டு 1-ஆம் தேதி ரயில் நிலையங்களில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம்!

கீழப்பாவூர் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

- நமது சிறப்புச் செய்தியாளர்

கீழப்பாவூர், ஜூன் 28- தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் தந்தை பெரியார் வழிகாட்டியிருந்தபடி ஆகஸ்டு முதல் தேதி ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

கீழப்பாவூரில் நேற்று (27.6.2014) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது கூறியதாவது:

இங்குப் பேசிய மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் பி.ஆர்.கே. அருண் அவர்கள் இந்தப் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதநேயத் தொண்டறப் பணிகளை விவரித்தார்.

இதுவரை 2125 யூனிட் குருதி கொடுக்கப்பட்டுள்ளது. 15 ஜோடி கண்கள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு உடல் கொடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்தக் கீழப்பாவூர் நாட்டுக்கே நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசுகிறது. (பலத்த கரஒலி!).

1989இல் தொடங்கப்பட்ட இந்தப் பணி 25 ஆண்டுகளாகத் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கென்றே ஒரு விழா ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மகிழ்ச்சியோடு அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இந்தத் தொண்டறப் பணி இன்னொரு விளைவுக்கும் காரணமாகிறது. ஜாதிக்கு அடையாளம் இல்லை என்பது போலவே குருதிக்கும் எந்தவித ஜாதியும் இல்லை. அய்யங்காருக்கென்று தனி ரத்தமோ, முதலியாருக்கு என்று ஒரு வகை ரத்தமோ தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட ரத்தமோ கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் ரத்தத்திற்கோ, உடலுறுப்பு களுக்கோ, கண்களுக்கோகூட ஜாதி அடையாளம் கிடையாது. எந்த ஜாதிக்காரனுக்கும் எந்த ஜாதிக்காரன் ரத்தத்தையும் அளித்து உயிர்ப் பிழைக்க வைக்கலாம்.

ஜாதி ஒழிப்புக்கு இந்தக் குருதிக் கொடை, கண்கள் கொடை, உடலுறுப்புகள் மிகவும் பயன்படுகின்றன. ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகம் மேற்கொள்ளும் இந்தத் தொண்டறப் பணியிலும் ஜாதி ஒழிப்புச் சித்தாந்தம் முக்கியமாக இருக்கவே செய்கிறது.

ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பித் திருமணம் செய்து கொண்டால் அதில் தனது ஜாதிக் கவுரவம் கெட்டுப் போகிறது என்று சொந்த சகோதரனே பெண்ணை வெட்டிக் கொல்லுகிறான். அதற்குப் பெயர் கவுரவக் கொலையாம்!

இந்த நிலையில்தான் தந்தை பெரியார் தேவைப்படு கிறார் ஜாதி மனித ஒற்றுமைக்கு எதிரானது. ஒருஜாதி படிக்க வேண்டும் இன்னொரு ஜாதி படிக்கக் கூடாது என்ற வருணாசிரம அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்.

இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் நாம் எவ்வளவோ காலமாக சரஸ்வதி பூஜை கொண்டாடிக் கொண்டு தானிருக்கிறோம். கல்விக் கடவுள் தானே சரஸ்வதி/ சரஸ்வதியைக் கும்பிடும் நமக்கு ஏன் கல்வியில்லை? சரஸ்வதி உயர் ஜாதி பார்ப்பனர்களின் நாக்கில் மட்டும் தான் எழுதினாளா? என்று கேட்டவர் தந்தை பெரியார்.

அப்படிக் கேட்டு தந்தை பெரியார் போராடியதால் தான் இன்றைக்கு நம் மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். நம் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த சுயமரியா தைச் சுடரொளி தூத்துக்குடி சிவனணைந்த பெருமாள் அவர்களின் பெயரன் முகிலன் பல நாடுகள் பங்கு பெற்ற பொது அறிவுப் போட்டியில் தங்கம் வென்றான் - திராவிடர் கழகக் குடும்பத்திற்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது. (பலத்த கரஒலி).கீழப்பாவூர் கழகக் குடும்பங்கள் சங்கமம்!

கீழப்பாவூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற கழகத் தலைவர் அவர்களை கீழப்பாவூர் கழகக் குடும்பத்தினர் அனைவரும் வரவேற்று பெரியார் திடலுக்கு (வழக்குரைஞர் பாண்டிவளவன் வளாகம்) கொள்கை முழக்கத்துடன் அழைத்துச் சென்றனர். பெரியார் திடலில் உள்ள பாண்டி வளவன் படிப்பகம், வீர விளையாட்டுக் கூடம், பெரியார் சிலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு சிறப்பாகப் பராமரிப்பதற்காகப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் கழகத் தலைவர். கழகத் தலைவருடன் கழகக் குடும்பத்தினர் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் இல. திருப்பதி அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம், மண்டலத் தலைவர் பொறியாளர் மனோகரன், கழகத் தலைவரின் இணையர் வீ. மோகனா மற்றும் திருச்சி சி. தங்காத்தாள் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பாடுபட்டதன் பலனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்தத் தலைவர் பெரியாருக்குத் தான் சிறுகனூரில் 95 அடி உயரத்தில் சிலை எழுப்பிட இருக்கிறோம். நம் மக்கள் நன்றி உணர்வோடு வழங்கி வருகிறார்கள். இங்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்கள்.

சங்கரன் கோவிலைச் சேர்ந்த அய்யா ஷாஜகான் அவர்கள் பெரியார் உலகத்திற்காக ரூ50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். அத்துடன் ஒரு வேண்டுகோளை யும் வைத்தார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள் தஞ்சை, திருச்சி பக்கம்தான் வளர்ந்து வருகின்றன. தென் பகுதியில் சட்டக் கல்லூரி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் அதற்கு எங்களைப் போன்றவர்கள் முடிந்த உதவியைச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். அதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், சட்டக் கல்லூரி என்றால் எல்லோருக்கும் அச்சம்தான். கட்டுப்பாடு குலைகின்ற இடமாக சட்டக் கல்லூரிகள் இருக்கின்றன என்ற நிலை உண்டு. என்றாலும் பெரியார் நிறுவனம் நடத்துகிறது என்கிற போது அதில் கட்டுப்பாட்டுக்குக் கண்டிப்பாய் இடம் இருக்கும் என்பதில் அய்யமில்லை.

தந்தை பெரியார் நம்மக்களுக்கு மானமும், அறிவும் ஊட்டப் பாடுபட்டார் திராவிட சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றுகிறேன் என்று தம் தொண்டைப் பற்றி கூறுகிறார் தந்தை பெரியார்.

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? யானை பெரிய மிருகம்தான். ஆனால் நிர்வாண மாகத்தானே போகிறது. மனிதன் அப்படிப் போக முடியுமா? காரணம் மனிதனுக்குள்ள அறிவும், மானமும்தான்.

அந்த மான உணர்ச்சி மற்ற இடங்களிலும் இருக்க வேண்டாமா? தமிழன் கட்டிய கோவிலுக்குள் கருவறைக்குள் தமிழன் போக முடிகிறதா? தமிழன் சூத்திரன் என்பதால் அந்த உரிமை மறுக்கப்படும் பொழுது மான உணர்வு பொங்கி எழ வேண்டாமா? அறிவு வேலை செய்ய வேண்டாமா?

தமிழர்கள் ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார்கள். இந்தியைப் புகுத்த போராட்டம் நடத்துவோம் என்று கூறவும் ஆரம்பித் துள்ளார்கள்.

எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் இருக்கின்றன; விலைவாசிப் பிரச்சினை முற்றி வெடிக்கிறது.

தமிழ் ஓவியா said...

கிடந்தது எல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல இந்தியைப் புகுத்த முயற்சிக் கிறார்கள். அதிகாரம் கையில் கிடைத்து விட்டது என்பதற் காக எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

இந்தக் கீழப்பாவூர் கூட்டத்தின் வாயிலாக அறிவித்துக் கொள்கிறேன். இந்தி ஒரு மொழி மட்டுமல்ல - அது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு என்பதை மறக்காதவர்கள் நாங்கள்.

தந்தை பெரியார் கொடுத்த தார்சட்டி இருக்கிறது. புரூசும் இருக்கிறது. இந்தியைத் திணிப்பதில் மத்திய அரசு மும்முரம் காட்டுமேயானால் தந்தை பெரியார் வழக்கமாகப் போராட்டம் நடத்தும் நாளான ஆகஸ்டு முதல் தேதியன்று (2014) ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் நடைபெறும் என்று இந்தக் கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சி

பெரியார் பேருருவச்சிலைக்கு நிதியளிப்பு மற்றும் விடுதலை சந்தா வழங்கும் விழா பொதுக் கூட்டம் 27.6.2014 வெள்ளி மாலை 7.30 மணிக்கு தென்காசி வட்டம் கீழப்பாவூர் பாண்டியனார் திடலில், தென்காசி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டேவிட் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் கழக செயலாளர் அய். இராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். நெல்லை மண்டல திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் சி. மனோகரன் நகர திராவிடர் கழக அமைப்பாளர் ந. இராமச்சந்திரன், நகரக் கழகத் தலைவர் பி. பொன்ராஜ், நகர கழகச் செயலாளர் த. தமிழ்தாசன், எல்.ஆர். பால்துரை (பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக இலக்கிய அணி செயலாளர் கூ.சு.இராமச்சந்திரன் நலிவுற்றோர் நலச்சங்கப் பொறுப்பாளர் பாவூர் நாவலர், அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் பி.ஆர்.கே.அருண், திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் ஆகியோர் உரையாற்றியதற்குப் பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார்.

மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் இல. அறிவழகன் நன்றி கூறிட கூட்டம் இரவு 9.45 மணிக்கு நிறைவுபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மைதானமே வழியும் அளவிற்குக்கூடி மகிழ்ந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83052.html#ixzz35zCFTXzI

தமிழ் ஓவியா said...


நாத்திக அறிஞர் தபோல்கருக்கு அம்பேத்கர் விருது


பூனா, ஜூன் 28-_ பூனாவில் பாலகந்தர்வா அரங்கில் நடைபெற்ற விழாவில் மறைந்த நாத்திக அறிஞர் டாக்டர் நரேந்திர தபோல்கருக்கு 2013-2014ஆம் ஆண்டுக்குரிய பாரத் ரத்னா டாக்டர் பாபாசாஹெப் அம் பேத்கர் விருது அவர் மகள் முக்தாவிடம் அளிக் கப்பட்டது. நாத்திக அறிஞர் நரேந்திர தபோல் கர் ஆதிக்க சக்திகளை எதிர்ப்பதிலும், போதை களிலிருந்து விடுவிக்கும் இயக்கத்தின்மூலமும் சமுதாயத்துக்கு தம்முடைய பங்களிப்பை வழங்கியதால் அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்படுவதாக விழாவில் தெரிவிக்கப்பட் டது.

மகாராட்டிர மாநிலத் துணை முதல்வர் அஜீத் பவார் விழாவில் கலந்துகொண்டு இவ் விருதை தபோல்கர் மகள் முக்தாவிடம் வழங்கினார். விருதுடன் ரூபாய் 1,11,111 தொகையும் வழங்கப்பட் டது. விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதை வழங்கிய மகா ராட்டி மாநிலத் துணை முதல்வர் பேசும்போது, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதிக்குள் சிசிடிவி கேம ராக்களை பூனா மற்றும் பிம்பிரி-சின்ச்வாட் உள் ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பொருத்த உள்ளதாகத் தெரிவித்தார். பூனா மாநகராட்சி கார்பொரேஷன் சார்பில் அதன் தலைவர் சுபாஷ் ஜக்தப், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் அம் பேத்கர் விருது தேர்வுக் குழுத் தலைவருமாகிய டாக்டர் சித்தார்த் தேண்டே ஆகியோர் இணைந்து கடந்த ஆண்டு அம்பேத்கர் விருதுக்கு டாக்டர் நரேந்திர தபோல் கரைத் தேர்வு செய்துள்ள தாகச் செய்தியாளர் களிடம் அறிவிப்பை வெளியிட்டனர்.

சமுதாயப் பணியில் ஈடுபட்டுள்ளவர் களும், எழுத்தாளர்களுமா கிய ராவ்சாஹெப் காஸ்பெ மற்றும் ராம்நாத் சவன் அம்பேத்கர் விருதுக்குரிய வர்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்வதில் இறுதி முடிவெடுத்தனர். அதன்படி நாத்திக அறிஞர் டாக்டர் நரேந்திர தபோல் கர் தேர்வு செய்யப்பட்டார். 2013ஆம் ஆண்டில் ஆகஸ்ட்டு மாதம் 19ஆம் தேதி அன்று ஆதிக்க வெறியர்களால் சுடப்பட் டுக் கொல்லப்பட்டார்.

அவருடைய சமுதாயப் பணிகளை நினைவுகூர்ந்து அவருக்கு 22-6-2014 அன்று வழங்கப்பட்ட அம்பேத்கர் விருதை அவர் மகள் முக்தா பெற்றுக்கொண்டார். விழாவில் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத வாலே, மேயர் சன்சலா கோத்ரே, டாக்டர் பாபா அதவ், நிலைக்குழுவின் தலைவர் பாபு கார்னே, பூனா மாநகராட்சி ஆணையர் விகாஸ் தேஷ்முக், தேசியவாதக் காங்கிரசுக் கட்சியின் பேச்சாளர் அன்குஷ்காகடே, ராம்நாத் சவான் மற்றும் பலரும் விழாவில் பங் கேற்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83041.html#ixzz35zCTGurf

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்


தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்ற வனாக ஆகிவிடுகின்றான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/83046.html#ixzz35zCwuW3d

தமிழ் ஓவியா said...


பாலாறா? பாழாறா?தமிழ்நாட்டுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் தொல்லைகள் தலை தூக்குகின்றன. கருநாடகத்தி லிருந்து காவிரிக்குத் தொல்லை என்றால் கேரளாவி லிருந்து முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் முட்டுக்கட்டை!

இப்பொழுது ஆந்திராவிலிருந்து அறைகூவல் இவ்வாற்றின் பிறப்பிடம் கருநாடகம் என்றாலும் 60 மைல் அம்மாநிலத்தில் ஓடி ஆந்திர மாநிலம் குப்பத்தில் கால் பதிக்கிறது. குப்பம் மாவட்டத்தில் 30 மைல் பயணமாகி தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே புல்லூரில் புகுகிறது. வேலூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வழியாக வழிந்தோடி கல்பாக்கம் அருகே கடலில் சங்கமமாகிறது. தமிழ்நாட்டில் இதன் ஓட்டம் 140 மைலாகும்.

இந்தப் பாலாறு வேலூர் மாவட்ட மக்களுக்குப் பால் வார்க்கும் நதியாகும் அம்மாவட்டத்தில் 49 ஆயிரம் ஏக்கர் நிலம் பாலாற்றால் பயன் அடைகிறது. 300 ஏரி குளங்களுக்கான பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாலாற்றங் கரையில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகியவை முக்கிய பயிர்களாகும்.

பாலாற்றின் நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டும் வருகின்றன.

மைசூர் மாநிலத்திற்கும், சென்னை மாநிலத்திற்கும் இடையில் எப்படி காவிரி நீர்ப் பிரச்சினையில் ஒப்பந்தம் போடப்பட்டதோ அதுபோலவே பாலாற்றுப் பிரச் சினையிலும் ஓர் ஒப்பந்தம் 1892இல் போடப்பட்டது.

அதன்படி பாலாற்றில் புதிய அணைகளைக் கட்டக் கூடாது; அணைகளின் உயரத்தையும் நீட்டக் கூடாது.

காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநிலம் எப்படி ஒப்பந்தத்தை எல்லாம் உடைத்துத் தானடித்த மூப்பாக கருநாடகம் நடந்து கொண்டு வந்துள்ளதோ, அதே புத்தியில் பாலாற்றுப் பிரச்சினையிலும் கருநாடகம் நடந்து கொண்டது. ஆனால், பேந்த மங்கலம் என்னும் இடத்தில் ஏற்கனவே இருந்து வந்த அணையை ஒப்பந்தத்தை மீறி 15 அடியிலிருந்து 30 அடியாக உயர்த்திக் கொண்டது மட்டுமல்லாமல் பாலாற்றின் குறுக்கே ராமாசாகர் என்ற புதிய அணையையும் கட்டிக் கொண்டது.

கருநாடக அரசு தன் பங்குக்கு ஒப்பந்தத்தை உடைத்தது என்றால் ஆந்திர அரசு தன் பங்குக்கு ஏதாவது தமிழ்நாட்டுக்குக் கெடுதல் செய்ய வேண்டாமா?

1892 ஒப்பந்தத்தை மீறி குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 20 அடி உயரம் உள்ள 22 தடுப்பு அணைகளை 30 மைலுக்குள் கட்டி முடித்துக் கொண்டது.

இதனால் இயற்கையாகப் பாலாற்றின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீர் செயற்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. அணைகள் நிரம்பி வழியும் தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் வந்து சேர முடியும்.

இதன் காரணமாகவே பாலாறு பாழாறாகிப் போய் விட்டது. 1892 ஒப்பந்தப்படி பாலாற்று நீர் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திர மாநிலங்களில் சம அளவில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இதில் பழி வாங்கப்பட்டது தமிழ்நாடு மட்டுமே.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர்ப் பாசனமும், பாசன நீர்ப் பாசனமும் முற்றாக முடக்கப்பட்டு விட்டது.

இதற்கிடையில் குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்த கதையாக ஆந்திர மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திருவாளர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டின், வடக்கு மாவட்டங்களின் தலையில் பாறாங் கல்லைத் தூக்கிப் போடுவது போல ஒன்றை அறிவித்துள்ளார்.

குப்பத்தில் பாலாற்றில் புதிய அணை ஒன்றைக் கட்டி, ஒரு துளி நீரும் வீண் போகாமல், ஆந்திர விவசாயிகளின் நன்மைக்காகத் திட்டங்கள் தீட்டுவேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சரும் தமிழ்நாட்டு உரிமையை மீட்பேன் என்று கூறியுள்ளார்.

இதில் முன்னாள் முதல்வர் கலைஞரை இந்நாள் முதல்வர் ஜெயலலிதா சீண்டியுள்ளது தேவையற்ற ஒன்று.

ஒரு முதலமைச்சராக இருக்கக் கூடியவர் இது போன்ற தமிழ்நாட்டு நலனைச் சேர்ந்த பொதுப் பிரச்சினையில், கிடைக்கக் கூடிய ஆதரவை வளர்த்துக் கொள்ளாமல், பொதுப் பிரச்சினையில்கூட நாங்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டோம் என்று காட்டிக் கொள்வது முதல் அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வட மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு போராடினால் போதிய பயன் கிடைக்க வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/page-2/83047.html#ixzz35zD5DagJ

தமிழ் ஓவியா said...


புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு


செப். 19 முதல் 21ஆம் தேதி முடிய
புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு
புதுவை முதல்வர் ந.ரங்கசாமி தொடங்கி வைக்கின்றார்!

புதுச்சேரியில் 13 ஆம் ஆண்டு உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகைதர உள்ளனர். உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு உலகின் பல பாகங்களிலும் அரசுடனும் பல்கலைக்கழகத்துடனும் இணைந்து தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு புதுவை அரசின் ஆதரவுடன் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டின் தொடக்க விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்கின்றார். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்சு, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க்கணினி வல்லுநர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் கட்டுரை படிக்கின்றனர். சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள் கணினி, இணையம், கையடக்கக் கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு குறித்து சிறப்புச் சொற் பொழிவுகள் செய்ய உள்ளனர். தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவில் கணினி வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கம் நடைபெறும். இரண்டாவது பிரிவில் பொது மக்களுக்குப் பயன்படும் மென்பொருள்கள் (சாப்டுவேர்கள்), இணையம், கணினி குறித்த நூல்கள், கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்துகொள்ளும் கண்காட்சி அரங்கு இடம்பெறும். மூன்றாவது பிரிவில் பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கணினி, இணையம், கையடக்கக் கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கம் தரும் தன்னார்வத் தொண்டர்கள் நிறைந்த மக்கள் அரங்கம் இருக்கும்.


தமிழ் ஓவியா said...

தமிழ் இணைய மாநாடு இதுவரை தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் பன்னிரண்டு முறை நடந்துள்ளது. புதுச்சேரியில் இப் பொழுதுதான் முதல்முறையாக நடை பெறுகின்றது. இந்த மாநாட்டை நடத்துவதில் புதுவை அரசு பெரும்பங்கு வகிக்கின்றது. புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்கு முன்வந்துள்ளார். புதுவையைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பலவும் தமிழ், கணினி ஆர்வலர்கள் பலரும் இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்ய உள்ளனர்.

உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டுப் பொதுமக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன. சிறந்த வலைப்பூ உருவாக்கும் போட்டி, தமிழ்த்தட்டச்சுப் போட்டி, தமிழ் இணையத்திற்குப் பங்களிப்பு செய்தவர்களை ஊக்குவிக்கும் போட்டிகள் நடைபெற உள்ளன.

வலைப்பூ உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், உத்தமம் அமைப்புக்கு மின்னஞ்சல் வழியாக எந்தப் பெயரில் வலைப்பூ(பிளாக்) உருவாக்க உள்ளோம் என்பதை ஜூலை 1 முதல் ஆகஸ்டு 31 க்குள் தெரிவிக்க வேண்டும். தமிழ் மொழி, இனம், நாடு, மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம், தொழில்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை, கலைகள் சார்ந்த பொருண் மைகளில் உள்ளடக்கம் கொண்ட வலைப்பூக்களை உருவாக்க வேண்டும். குறைந்த அளவு பத்து பதிவுகள் ஒவ்வொரு வலைப்பூவிலும் இடம்பெறவேண்டும். வலைப்பூ உருவாக்கம் குறித்த விதிமுறைகள் உத்தமம் இணையதளத்தில் வெளியிடப்படும். சிறந்த வலைப்பூ உருவாக்கும் போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறும். பொதுமக்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், பள்ளி மாணவர் களுக்கான பிரிவில்(10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம்) மூன்று பரிசு களும் வழங்கப்படும். பரிசு பெறாத மற்ற சிறந்த வலைப்பூ உருவாக்கும் வலைப் பதிவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

பொதுமக்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்குப் புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி விருதும், பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் பரிசாக வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே அய்ந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் என வழங்கப்படும்.

கல்லூரி நிலையிலான வலைப்பூ உரு வாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்குக் கணிஞர் ஆண்டோபீட்டர் நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் முதல் பரிசும் வழங்கப்படும். இரண்டாம் மூன்றாம் பரிசுகள் முறையே அய்ந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் சிறந்த வலைப்பூ உருவாக்கி முதல்பரிசு பெறுவோருக்குச் சிங்கப்பூர் ந. கோவிந்தசாமி நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே அய்ந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.

கணினி, இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு இவற்றின் வழியாகத் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் சிறந்த செயல்பாட் டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வல்லுநர் குழு ஒன்று அய்ந்து செயற்பாட்டா ளர்களை உலக அளவில் தேர்வு செய்து அவர்களின் பெயரை மாநாட்டுக் குழுவிற்கு வழங்கும். அதன் அடிப்படையில் அய்ந்துபேர் புதுவைத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அழைக்கப்பெற்று சிறப்பிக்கப்படுவார்கள். தமிழ் இணையச் செயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி இதுவாகும், ஆண்டுதோறும் தக்கவர்களை அடையாளம் கண்டு உத்தமம் அமைப்பு தொடர்ந்து இதுபோல் பாராட்டும்.

உத்தமம் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படிக்க விரும்புவோரும், பேராளராகக் கலந்துகொண்டு பங்குபெற விரும்புவோரும் உத்தமம் (ஷ்ஷ்ஷ்.வீஸீயீவீ.ஷீக்ஷீரீ) இணையதளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துகொண்டு பங்கேற்கலாம். இதற்கான கடைசி தேதி 2014, ஜூலை 15 ஆகும். மாநாடு குறித்த மேலும் விவரங்களை உத்தமம் அமைப்பின் இணையதளத்தில் சென்று பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம். புதுச்சேரியில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப் பும் தேவை என்று முதலமைச்சர் வலி யுறுத்தினார்.

உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பில் உத்தமம் அமைப்பின் தலைவர் வாசு ரெங்கநாதன்(பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா), உத்தமம் அமைப்பின் முன்னாள் செயல் இயக்குநர் சிங்கப்பூர் மணியம், உத்தமம் மலேசியக் கிளையின் தலைவர் இளந்தமிழ், உலகத் தமிழ் இணைய மாநாட்டின் புதுச்சேரிப் பொறுப்பாளர் முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/83082.html#ixzz35zDTQbnM

தமிழ் ஓவியா said...


ஊழலைப்பற்றி ஏன் பேசவில்லை?


கேள்விக்குப் பதில்

ஊழலைப்பற்றி தாங்கள் பேசவில்லையே, ஊழலைப்பற்றி தங்களின் கருத்தென்ன? என்று பொதுக்கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுதி அனுப்பினார்.

அதற்குப் பதில் அளிக்கும் முறையில் தமிழர் தலைவர் கூறியது: ஊழல் ஒழிக்கப்பட வேண்டியது தான். அதே நேரத்தில் இந்தத் தேர்தல் முறையில் மாற்றம் வராதவரை ஊழலை ஒழிக்க முடியுமா என்பது முக்கிய கேள்வியாகும். 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் மன நிலையில் மக்கள் இருக்கும் நாட்டில் லஞ்சம் ஒழியுமா? (பலத்த கரஒலி!)

இப்படி லஞ்சம் வழங்கியதை எங்களால் தடுக்கவே முடியவில்லை என்று தேர்தல் கமிஷனே சொல்லும் நாட்டில் ஊழல் சுலபத்தில் அழியுமா? உண்மையைச் சொல்லப்போனால் லஞ்சம் எங்கே ஆரம்பிக்கிறது? பூஜை அறையில் இருந்துதானே ஆரம்பிக்கிறது. பிரார்த்தனை என்பது என்ன? ஒன்றைக் காணிக்கைச் கொடுப்பது என்பது என்ன? கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதுதானே?

இந்த லஞ்சத்தைப்பற்றி யாரும் பேசுவதில்லையே ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் வினா எழுப்பியபோது பலத்த கரஒலி!

- கீழப்பாவூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் (27.6.2014)

Read more: http://viduthalai.in/page-4/83067.html#ixzz35zDwEjIG

தமிழ் ஓவியா said...


72-ஆம் ஆண்டாக மேடையேறிய தமிழர் தலைவருக்கு பலத்த கரவொலி மூலம் பாராட்டு


நேற்று (ஜூன் 27) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 71 ஆண்டுகளுக்கு முன் 1943-இல் இதே நாளில் தான் கடலூர் பழையப்பட்டினம் செட்டிக்கோயில் திடலில் மாலை நடைபெற்ற தமிழர் கூட்டம் என்ற பொதுக்கூட்டத்தில், அன்று பத்துவயது கூட நிரம்பாத சிறுவனாக இருந்த கி.வீரமணி மேடை யேறி உரையாற்றினார்.

தோழர் மா.பீட்டர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் புராணங் களையும், புராண ஆபா சங்களையும் கிழி கிழி என்று கிழித்து சிறுவன் வீரமணி அவர்கள் ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்தது. மேடையை நோக்கி வந்த அறிஞர் அண்ணா அவர் கள் சிறுவன் வீரமணியின் உரையினால் பெரிதும் கவ ரப்பட்டார். இக்கூட்டத்தில் காஞ்சி பொன்னப்பா, பூவாளூர் போட்மெயில் பொன்னம்பலனார் போன் றோர் கலந்து கொண்ட னர்.

ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு வார இத ழுக்கு வளர்ச்சி நிதியாக வசூலித்த தொகையான ரூ.103/- வழங்கப்பட்டு வழிகாட்டப்பட்டது. அன்றைய சிறுவன் வீரமணி, இன்று (ஜூன் 27, 2014) திராவிடர் கழ கத்தின் தலைவராக, அடுத்த தலைமுறை கொள்கை யாளர்களை உருவாக்கும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் உங்களுக்கு வகுப்பினை நடத்த வந்திருக்கிறார் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செய்தியை கழகப் பொதுச்செயலா ளர் முனைவர் துரை.சந் திரசேகரன் தெரிவித்த போது அரங்கத்திலிருந்த அனைவரும் பலத்த கரவொலி மூலம் தங்கள் வரவேற்பை, மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினர். தொடர்ந்து கடவுள் மறுப்பு-ஏன்? என்ற தலைப்பில் தமிழர் தலை வர் வகுப்பு நடத்தினார் என்பது எத்துணை வர லாற்றுப் பொருத்தம்!

Read more: http://viduthalai.in/page-4/83068.html#ixzz35zEjmOlL

தமிழ் ஓவியா said...


கடைசிப் போரின் முதல் பலன்


திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் கடைசிப் போரினால் இந்தியாவுக்கு அரசியல் துறையிலும், சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப் பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ருஜுவு ஏற்பட்டுவிட்டது.

அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்தி போரில் மிக்க அக்கறை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.

உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின்வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரார் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.

உப்பு சத்தியாக்கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதிகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்விதக் கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும்கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும்.

ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசிய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்குச் சரியான பதிலாகும். ஆனாலும், இது விஷயத்தில் இது உண்மையாயிருக்கு மானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக்கின்றோம்.

கண்டிக்கின்றோமென்பது போலி தேசிய வீரர்களைப் போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உணராமல் சாரதாச் சட்டத்தை சர்க்கார் திருத்துவார் களேயானால், வைதிகக் கூச்சலுக்குப் பயப்படுவார் களேயானால் அது கடைசிப்போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதிகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக்கொள்ள மாட்டோம்.

இது மாத்திரமல்லாமல் கடைசிப்போர் முடிவு பெறுவதற்குள் இதுபோல் இன்னும் அநேகக் கெடுதிகள் ஏற்படப்போவதையும் எதிர்ப்பார்த்துதான் ஆகவேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 13.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83064.html#ixzz35zFCGk5l

தமிழ் ஓவியா said...


இரட்டை வெற்றி

பன்னீர்செல்வம் உயர் திருவாளர் ராவ் பகதூர் ஏ. டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந் தெடுக்கப் பட்டவிஷயம் முன்னமேயே வாசகர் களுக்குத் தெரிவித்திருக்கிறோம்.

ஆனால், அந்த தேர்தலின் மேல் சில சட்ட சம்பந்த மான ஆட்சேபணைகளைக் கிளப்பி எதிர் அபேட்சகர்கள் அரசாங்கத்திற்கு செய்து கொண்ட விண்ணப்பத்தால் இரண்டு மாதகாலம் அந்தத் தேர்தல் முடிவை கிரமப்படி அரசாங்கத்தார் ஒப்புக் கொண்டு கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் காலம்கடத்தி வந்தார்கள்.

ஆனாலும் முடிவாக தேர்தல் செல்லுபடியானதை சென்ற வாரத்தில் பிரசுரம் செய்து விட்ட சேதி யாவருக்கும் மகிழ்ச்சி யைத் தரும். இதனால் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உத்தியோகக் காலம் மற்றும் சிறிது காலம் வளர்வதற்கு இடமுண்டாகி இரட்டை வெற்றி ஏற்பட்டதே தவிர வேறொரு கெடுதியும் ஏற்பட்டுவிட வில்லை.

ஆனால் மேற்படி தேர்தலின் மீது அது செல்லத் தக்கதல்ல வென்று எதிர் அபேட்சகர் கோர்ட்டில் ஒரு வியாஜியம் தொடுத்து இருக்கின் றார்கள். அதன் தீர்ப்பு அனேகமாய் முடிவில் இப்படியே தான் ஆகி மூன்று வெற்றி ஏற்படக் கூடுமென்று இப்போதே முடிவுகட்டி விடலாம்.

எலக்ஷன்கள் நடந்ததும் எதிர் அபேட்சகர் தனது திருப்திக்கும் தனது கட்சியார்களின் திருப்திக்கும் இம்மாதிரி ஆட்சேபங்கள் கிளம்புவதும் அநேகமாய் எங்கும் இயற் கையாகவே இருந்து வருகின்றது. ஆனால் 100-க்கு தொண்ணூற்றுக்கு மேற்பட்ட தேர்தல் ஆட்சேபங்கள் தோல்வி அடைந்தே வருவதும் சகஜமாகவும் இயற்கை யாகவுமே இருந்து வருகின்றது.

எனினும் இம் மாதிரி சம்பவங்கள் வெற்றி பெற்றவர் களுக்கு வெற்றி மகிழ்ச்சியடைய இரண்டு சந்தர்ப் பங்களையும் தோல்வி அடைந்த வர்கள் ஏமாற்றம் அடைய இரண்டு சந்தர்ப்பங்களையும் அளித்து வரு வதும் அனுபவத்தில் கண்டதேயாகும். சுகமும் துக்கமும் மாறி மாறியும் தொடர்ந்து தொடர்ந்தும் வருவது இயற்கையேயாகு மன்றோ!

எம்.கே.ரெட்டி

உயர் திருவாளர் திவான் பகதூர் எம். கே. ரெட்டியவர்களும் செங்கல் பட்டு ஜில்லாபோர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப் பட்டார் என்கின்ற சேதியை கேட்க வாசகர்கள் மிகுதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள்.

திரு. எம். கே. ரெட்டி அவர்களின் ஜில்லாபோர்டு நிருவாகமும் திரு. பன்னீர் செல்வத்தின் நிருவாக மும் பார்ப்பனரல்லாதார் சமூக நன்மை யையும் சுயமரியாதைக் கொள்கை யையுமே பெரிதும் தழுவி நடந்துவந்த காரணமே அவ்விரு போர்டு தலைவர் தேர்தலுக்கும் சற்று எதிர்ப்பும் சூழ்ச்சியும் பலமாய் இருக்க நேரிட்டது. ஆனாலும் அவ்விரு போர்டு தலைவர்களும் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் பட்டதானது நமது இயக்கத்திற்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 06.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFKi2ZL

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

திராவிடன் என்றால் என்ன மொழி என்று சிலர் கேட்கிறார்கள். என்ன வார்த்தையாகத்தான் இருக்கட்டுமே. இந்தக் கருத்து இருக்க வேண்டும். இழிவுள்ள சகல மக்களும் ஒன்று சேர அவ்வார்த்தையில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

நாம் எல்லோரும் காப்பி சாப்பிடுகிறோம். அது என்ன மொழி என்று நாம் சிந்திக்கிறோமோ? வாய்க்குள்ளே செலுத்தும் காப்பி என்ன மொழி என்று நீ சிந்திப்பதில்லை. நீ போற்றும் இந்து மதம் என்ன மொழி என்று நீ சிந்திப்பதாகக் காணோம். திராவிடன் என்ற சொல்லைக் கேட்கத்தானா உன் காது கூசுகிறது?

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFX1J94

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இன்று ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு இதுவரை இருந்து வந்த சக்கரவர்த்திப் பட்டத்தை எடுத்துவிட்டார்களா இல்லையா? அரசர் கடவுளின் பிரதிநிதி என்ற பழைய கொள்ளை இன்று என்னவாயிற்று? கோவணம் கட்டத் தெரியாத குழந்தைப் பிள்ளைகளெல்லாம் இன்று அவன் ஏன் பணக்காரன்? இவன் ஏன் மிராசுதாரன்?

என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களா இல்லையா? அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் - நாம் எதனில் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று. அப்போது தெரியும் - நாம் தாழ்த்தப்பட்டிருக்கக் காரணம் நாம் தழுவி நிற்கும் இந்து மதம்தான் என்று. எவனும் தன்னை ஓர் இந்து என்றே கூறிக்கொள்ளக் கூடாது.

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFeqWbm

தமிழ் ஓவியா said...

அகில இந்திய அளவில் தனியார் துறைகளில் முழுமையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பேட்டி

குற்றாலம், ஜூன் 29- அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக்கோரி திராவிடர் கழகம் விரைவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித் துள்ளார். குற்றாலத்தில் இன்று (29.6.2014) செய்தியாளர் களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும்

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்கவில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசுக் கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு

மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளையும் திராவிடர் கழகம் கடைப் பிடிக்கும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்!

அதற்காக திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இப்புதிய பயணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து தனியார்மயமாவதை கண்டிப்போம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படுவதை திராவிடர் கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் தந்தை பெரியார் வழிகாட்டியிருந்தபடி ஆகஸ்டு முதல் தேதி ரயில் நிலை யங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும்.

மோடி ஆட்சி பழைய கள் புதிய மொந்தை

கடந்த ஒரு மாத பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசின் மோடி ஆட்சி, பழைய கள் புதிய மொந்தை என்ற நிலையில் தான் உள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை, பழைய நிலையைவிட மோசமான நிலையில் இருக்கிறது. விலைவாசியை பொறுத்தளவில் கடந்த ஆட்சியை விட தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் அதிக அளவில் விலையேற்றம் அதிகரித்துள்ளது.

ரயில்வே கட்டணங்கள் உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்

ரயில்வே கட்டணங்கள் உயர்வு ஏழை - எளிய நடுத்தர வகுப்பு மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரயில்வே சரக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்கு முன்பே இவ்வளவு உயர்வு என்றால், பின்னர் வரி விதிப்புகள் மூலம் மக்களை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவை எதிர் விளைவுகளை உண்டாக்கும் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/83140.html#ixzz365EdNmJf

தமிழ் ஓவியா said...

ஆவியோ - ஆவி!


விழுப்புரம் ரயில்வே காவலதுறையினர் இப்பொழுது ரயில் நிலையத்திற்குள் தங்குவதில்லையாம்; படபடத்துப் போயிருக் கிறார்களாம். பயத்தால் ரத்தம் உறைந்து போய்க் கிடக்கிறார்களாம்.

அப்படி என்ன நடந்து விட்டதாம்? ரயில்வே போலீசார் புத்தக வியா பாரி ஜெயவேல் என்பவர் மரணம் தொடர்பாக போலீசார் விசார ணையை மேற்கொண் டனர். இரவு நேரத்தில் ஜெயவேலுவின் ஆவி மிரட்டுவதாகச் சிலர் பீதியைக் கிளப்பி விட்ட னராம். இதன் காரணமாக போலீசார் யாரும் காவல் நிலையத்துக்குள் தங்கு வதில்லையாம்.

இதற்கு ஏதாவது பரிகாரம் வேண்டாமா? இப்படியெல்லாம் சொல் லுவதற்கென்றே சில ஆசாமிகள் இருப்பார்கள் அல்லவா! ஆவியை விரட்ட சில சடங்கு களைச் செய்ய வேண் டும்; சுத்திகரிக்க வேண் டும் என்று சொல்லவே, அச்சத்தின் பிடியில் கிடந்த போலீசார் அதற் கான ஆட்களை அழைத்து கணபதி பூஜை நடத்தப் பட்டு, பூஜை புனஷ் காரங்களும் சாங்கோ பாங்கமாக நடத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டதாம்!

சரி. இந்த முட்டாள் தனத்தோடாவது ஆவி பயம் தொலைந்திருக்க வேண்டும் அல்லவா!

அதுதான் இல்லை மறைந்த ஜெயவேலின் ஆவிக்குப் பயந்து இன் னும் காவல் நிலையத்திற் குள் தங்கிட அஞ்சி, வெளியில் காற்றாட இரவுப் பணியாளர்கள் படுத்து கிடக்கிறார்களாம்.

எப்படி இருக்கிறது? காவல்துறையினருக்கு உடல் பயிற்சிகள் எல் லாம் அவ்வப்போது கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. உடல் பலமாக இருந்து என்ன பயன்?

மனபலம், அறிவுப் பலம் இல்லையே! ஆவி என்றால் என்ன? மனிதன் இறந்து விட்டான் அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆவி என்றோ, உயிர் என்றோ தனியாக இருக் கிறதா! மனிதர் சத்துப் போய் செத்துப் போய் விட்டான் என்றால் அவ்வளவுதான்!

ஆத்மா, மோட்சம், நரகம், பிதுர்லோகம், மறுபிறப்பு ஆகியவற் றைக் கற்பித்தவன் அயோக் கியன் நம்புகிறவன் மூடன்; இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை என்பது இதன் மூலம் தெற்றென விளங்க வில்லையா?

உண்மையான ஆவி யிலிருந்து இட்லியாவது சுடலாம். இதுபோன்ற முட்டாள்தனமான ஆவி யிலிருந்து மனிதனின் அறிவைச் சுட்டுப் பொசுக்கலாம்.

வெறும் உடற்பயிற் சியைவிட, பகுத்தறிவுப் பயிற்சி தான் அவசியம் என்பது இப்பொழுது விளங்கவில்லையா?

காவல்துறைக்குப் பெரியார் நூல்களைக் கொடுத்துப் படிக்க வைத்து அதில் தேர்ச்சி பெறுகிறவர்களை மட்டும் வேலையில் அமர்த்துக! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83186.html#ixzz36AhS9Uwp

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு ஒன்று - நினைவிருக்கட்டும்!


பி.ஜே.பி.யின் தமிழகப் பிரமுகர் திரு இல. கணேசன் அவர்கள் இந்தியைப் புகுத்த போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாட்டில் பேசி இருக்கிறார்.

இத்தகையவர்கள் இதுபோன்ற வகையில் பேசுவதைக்கூட ஒரு வகையில் வரவேற்கலாம் என்று தோன்றுகிறது. இத்தகைய வெளிப்படையான சாட்சியங்கள்தான் பிஜேபி என்பது என்ன? அதன் உள்ளுறைப் பொருள் என்ன? என்பதை நம் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அரிய வாய்ப்புகள் ஆகும்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டால் அதன் விளைவு என்ன என்பதற்கு இதற்கு முன் ஏராளமான எடுத்துக்காட்டுகள் தமிழ்நாட்டில் உண்டு.

1937இல் சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த ஆச்சாரியார் (ராஜாஜி) இந்தியைப் புகுத்தினார்; தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. ஆயிரக்கணக்கானோர் சிறை ஏகினர்; பெண்கள் கைக் குழந்தைகளுடன் சிறைக்குச் சென்றனர்.

இந்தி எதிர்ப்புப் பிரச்சார வழி நடைப்படையை கால்நடைகள் (விலங்குகள்) என்றும், கூலிக்கு குழந்தைகளை வாங்கிக் கொண்டு பெண்கள் சிறை சென்றார்கள் என்றும் தினமணி அன்று எழுதியது.

தமிழ் ஓவியா said...


சிறைச்சாலையில் நடராசன் என்ற தாழ்த்தப்பட்ட தோழர் முதல் களப்பலியானபோது படிப்பறிவில்லாத ஹரிஜனன் என்று மரணம் அடைந்த நிலையிலும்கூட அந்தத் தோழரை சட்டசபையிலேயே எள்ளி நகையாடினார். பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

இந்தியை இரண்டு பேர்தான் எதிர்க்கிறார்கள். ஒருவர் ராமசாமி நாயக்கர், இன்னொருவர் புலவர் (நாவலர் சோமசுந்தர பாரதியார்) என்றார் பிரதமரான ராஜாஜி. அதற்குச் சட்டசபையிலேயே பதிலடி கொடுத்தார் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா!

ஆமாம் - இந்தியை எதிர்ப்பவர்கள் இருவர் - ஆதரிப்பவரோ நீங்கள் ஒரே ஒருவர்தானே? என்று பளிச்சென்று அறைந்தார்.

இறுதி வெற்றி யாருக்கு? இந்தி எதிர்ப்பவர்களுக்கு தான். அந்த இந்தித் திணிப்பு தான் கட்சிகளை, ஜாதிகளை மதங்களை, ஆத்திகம் - நாத்திகம் என்பவற்றையெல்லாம் கடந்து தமிழர்களை ஓரினம் என்ற உணர்வில் ஒன்று சேர வைத்தது! இந்தித் திணிப்பு தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.

இந்தித் திணிப்பு தான் தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசை விரட்டியது. இந்த வரலாறு எல்லாம் புரியாமல் இல. கணேசன்கள் பூணூல்களை முறுக்கிக் காட்ட வேண்டாம்; காட்டினால் புலியை இடறிய கதையாகத்தான் முடியும்.

இந்திக்காக வக்காலத்து வாங்கும் இந்த பிஜேபி வகையறாக்கள் தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பட்டம் பெறலாம் என்ற நிலை இருக்கிறதே -தமிழ்நாட்டில் நடைபெறும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் கேந்திரா வித்யாலயங்களிலும் தமிழ் அறவே கற்றுக் கொடுப்பதில்லையே அதுபற்றிக் குரல் கொடுத்தது உண்டா?

தமிழை வெறுக்கும் ஒரு கூட்டம் இந்த நாட்டில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அத்தகையவர்கள் எப்பொழுதும் இந்திக்காக நலுங்கு வைப்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.

அண்மையில் மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி, கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல சமூக வலைத் தளங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்றது.

இந்தி பேசாத பகுதிகளிலும் இந்தியை மறைமுக மாகப் புகுத்தும் வேலையில் இறங்கியுள்ளது பிஜேபி அரசு.

இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் எல்லாம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 27.6.2014 தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், மத்திய அரசு இந்த முடிவைக் கைவிடா விட்டால் தந்தை பெரியார் வழக்கமாக போராட்டம் அறிவிக்கும் நாளான ஆகஸ்டு முதல் தேதியன்று (1.8.2014) இரயில்வே நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் திராவிடர் கழகம் குதிக்கும் என்று அறிவித்துள்ளார்.

பி.ஜே.பி.யின் கொள்கை - ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்பது சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதே. ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் இதனைத் திட்டவட்டமாகவே தெரிவித்துள்ளார்.

இந்தியை பள்ளிகளில் நான் புகுத்துவதன் நோக்கம் படிப்படியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்கே என்று சென்னை இலயோலா கல்லூரியில் பிரதமர் ராஜாஜி அவர்கள் பேசியதை (24.7.1937) இங்குப் பொருத்தமாக நினைவு கூரலாம்.

மத்திய அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் சமஸ் கிருதத்திலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டதை யும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

இவ்வளவுக்கும் 127 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சமஸ்கிருதம் பேசும் மக்களின் எண்ணிக்கை வெறும் 14135 தான். சதவீத கணக்கில்கூட கூற முடியாத எண்ணிக்கை இது.

செத்த மொழியைச் சிங்காரிக்க இந்தியை முன் னோட்டமாக விட்டுப் பார்க்கிறார்கள்!

தமிழ்நாடு இதனை அனுமதியாது - இந்தி பேசாத அனைத்து மக்களின் உரிமைக் குரலாகத் தமிழகம் பொங்கி எழும்!

தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற தார் சட்டியும் புருசும் தயாராகவே உள்ளது - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/83192.html#ixzz36AhjEYVN

தமிழ் ஓவியா said...

செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.

(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page-2/83197.html#ixzz36AiWzAK4

தமிழ் ஓவியா said...

ஜூன் 30: வகுப்புரிமை நாள்


ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப் பட்ட அனைவரும் இன்று நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டிய,நினைவு கூர வேண்டிய நாள் (30 ஜுன்). சென்னை மாகாணத்தில் வகுப்புரிமை ஆணையை நடைமுறைப்படுத்திய முத்தையா(முதலியார்) அவர்கள் மறைவுற்ற நாள்.

பானகல் அரசர் சென்னை மாகாண முதலைமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டவுடன் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் எல்லாச் சமூகத்தினர்க்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அரசாணையப் பிறப்பித்தார்.

இதற்குப்பலத்த எதிர்ப்பு சட்டமன்றத்தில் எழுந்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனாலும் அதன்பிறகு அவ் ஆணையை நடைமுறைப்படுத்தாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டனர்.

1926 தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவோடு அமைக்கப்பட்ட டாக்டர் சுப்ப ராயனைத் தவிர மற்ற மந்திரிகள் ராஜினாமா செய்து விடவே சுயேச் சைக் கட்சியினராக இருந்த திரு. முத்தையா (முதலியார்) அவர்கள் இரண்டாவது அமைச்சராகவும், திரு.சேதுரத்தினமய்யர் மூன்றாவது அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

திரு.முத்தையா (முதலியார்) அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்ற பின்னர்தான் நீதிக்கட்சியின் சமூக லட்சியமான, பார்ப்பனரல்லா தாரின் உரிமைச் சாசனமான வகுப் புரிமை எளிதில் நிறைவேறிய 'கம் யூனல் ஜி.ஓ' ஆக சட்டப்படி மலர்ந்தது. அமைச்சர் முத்தையா (முதலியார்) அவர்களின் மதிநுட்பம்,சமூக நீதி

உணர்வு ,இவைகளால் தான் வகுப் புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது( என்கிறார்தமிழர் தலைவர்)
1928 முதல் அப்பயன் அனை வருக்கும் கிடைத்தது.அந்த இட ஒதுக் கீட்டை செயல்படுத்திய முறை. அரசாங்க நியமனம் செய்ய 12 இடங்கள் உள்ளன என்றால் அவற்றை

இந்து - பார்ப்பனரல்லாதவர்களுக்கு 5

பார்ப்பனர்களுக்கு 2

இஸ்லாமியர்களுக்கு 2

கிருத்துவர்களுக்கு 2

ஆதி திராவிடர் 1

மொத்தம் 12

திரு. முத்தையா (முதலியார்) அவர்களால் தான் வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது, அதன் தொடர்ச்சி- மீட்சி தான் இன்று தமிழர் தலைவரால் சட்டம் உருவாக்கி அதனை மாநில,மத்திய அரசுகள் ஏற்று 9 ஆவது அட்டவனையில் பாதுகாப்பாக இருக்கும் 69/ சதவிகித இடஒதுக்கீடு. இவற்றால் பயன்பெற்ற அனைவரும் இதற்கு அடித் தளமிட்ட திரு.முத்தையா அவர்களின் நினைவு நாளான ஜுன் 30 நன்றியோடு நினைவு(வகுப்புரிமை நாள்) கூர்வோம்.

இதை 'வகுப்பு வாதம்' என்று பார்ப்பனர்கள் கூறி விசமப் பிரச்சாரம் செய்தபோது,தந்தை பெரியார் அவர்கள் 'அத்துனை எதிர்ப்புகளையும் அடித்து வீழ்த்தி முறியடித்து, முத்தையா (முதலி யார்) வாழ்க .என்று வாழ்த்தினார்.

ஈரோடு. த. சண்முகம்

Read more: http://viduthalai.in/page-2/83194.html#ixzz36AikitqP

தமிழ் ஓவியா said...

அதிகத் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல்பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.

எனவே, உடல் எடையை குறைக்க பகீரத முயற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி, பட்டினி போன்றவை மூலம் உடலை வருத்திக் கொள்கின்றனர்.

ஆனால், உடல் பருமனை தடுக்க இதுபோன்று கஷ்டப்பட தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார துறை பேராசிரியர் சூசன் செப் தலைமையிலான நிபுணர்கள் உடல் பருமனை தடுப்பது குறித்து பலவித ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அதன்படி பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஜூஸ்கள் மற்றும் நுரை ததும்பும் மது உள்ளிட்ட பானங்கள் அருந்துவதை தடுக்க வேண்டும். மாறாக அவர்களுக்கு அதிக அளவில் குடிநீர் வழங்க வேண்டும்.

இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்பருமன் ஆவதை தடுக்க முடியும். ஏனெனில் ஜூஸ்கள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. அதுவே உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகிறது.

சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் அது போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று பேராசிரியர் சூசன் செப் தெரிவித்துள்ளார். இந்த மிகவும் எளிமையான அறிவுரையை குழந்தை களுக்கு பெற்றோர் தெரிவிக்கலாம்.

இதன் மூலம் உடல் பருமன் ஏற்படுவதை குழந்தை பருவத்தில் இருந்தே தடுக்க முடியும். வளரும் குழந்தைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப் பழங் களை சாப்பிடுவது நல்லது.

சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில் கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.

Read more: http://viduthalai.in/page-7/83152.html#ixzz36AjJqbo9

தமிழ் ஓவியா said...

திக்குவாயை குணப்படுத்தும் வல்லாரை


வல்லாரை தரையில் படர்ந்து வளரும் இயல் புடையது. இதன் சிறுநீரக வடிவ இலைகள் கீரையாக பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன.

வல்லாரை மூளைக்கான உணவு என அழைக்கப்படுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும், காயங்களை குணப்படுத்தும். பெங்கால் புலிகளுக்கு ஒரு பழக்கம் உள்ளது.

அவை காயமடைந்தால் வல்லாரை வளர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்று வல்லாரை இலைகளை கடித்து விட்டு நாக்கால் காயத்தின் மீது நக்குமாம். அப்போது அதன் காயம் விரைவில் குணமடைந்து விடுமாம். இதனால் வல்லாரைக்கு புலிப்புல் என்ற பெயரும் உண்டு. லெப்ரசி, யானைக்கால் நோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆயின்மெண்ட்களிலும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

காய்ச்சலுக்கு: வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

சிறுநீர் பெருக்கி: சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல் படுகிறது. ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

நினைவாற்றல் பெருக: பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்ச்சி தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பல், ஈறு பாதுகாப்புக்கு: வல்லாரை இலைகள், மா இலைகள், கொய்யா இலைகள், கிராம்பு, நல்லமிளகு, உப்பு சேர்த்து செய்யப்படும் பற்பொடி பல், ஈறுகளை பாதுகாக்கும்.

திக்குவாய் குணமாக: தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும். திக்குவாய் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/83155.html#ixzz36Ajh13Ix

தமிழ் ஓவியா said...

கருப்புப் பண விவகாரம் சுவிஸ் வங்கிக்கு இந்தியா கடிதம்


புதுடில்லி, ஜூன் 30- கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்போரின் விவரங் களை தருமாறு மத்திய நிதி அமைச்சகம், சுவிஸ் வங்கிக்கு அதிகாரப்பூர்வமான புதிய கடிதத்தை எழுதியுள்ளது.

வெளிநாடுகளில் இந்தியர் கள் பதுக்கி வைக்கப்பட்டி ருக்கும் கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் கருப்புப் பணம் வைத்திருப்போர் என சந்தேகப்படுபவர்களின் பட்டி யலை, எந்த வித நிபந்தனை யும் இன்றி மத்திய அரசுக்கு அளிக்க தயார் என்று, சுவிஸ் அரசு சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து சுவிஸ் வங் கிக்கு மத்திய நிதி அமைச்சகம் புதிய கடிதத்தை எழுதியுள் ளது.

இது குறித்து நிதித்துறை யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கருப்புப் பணம் வைத் திருப்போர் பட்டியலை அளிக்குமாறு சுவிஸ் வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

சுவிஸ் வங்கி நமக்கு இந்த தகவலை அளிப் பதற்கு, இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள ராஜ ரீதியிலான ஒழுங்குமுறை ஆகியவை பயன்படுத்தப்படும். கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக் கைகள் தொடரும் என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.

கருப்புப் பண விவ காரத்தில் புதிதாக அமைந் துள்ள மத்திய அரசுடன் இணைந்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுப் போம் என சுவிஸ் அரசின் சர்வதேச நிதி விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/83161.html#ixzz36AjwXU14