Search This Blog

3.6.14

கலைஞர் பிறந்த நாள்- ஜூன் 3 -சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?


சொர்க்கலோகத்தில்... சோலை, விருந்து!

இவை எதையுமே கவனிக்காமல் புல் தரையில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அந்தக் கூட்டத்தினரின் தோள்பட்டையில் ஒரு மஞ்சள் நிறத் துண்டுத் துணி தொங்கிற்று. அதில் நீல வர்ணத்தில் குடியேறியவர் என்று குறிக்கப்பட்டிருந்தது. முகங்களைப் பார்க்கும்போது பூலோகவாசிகளே என்பது நன்றாகத் தெரிந்தது. ஆமாம்.... பூலோகவாசிகள்தான்! கண்ணப்ப நாயனார், காரைக்கால் அம்மையார், நந்தனார், சிறுத்தொண்டர்... இன்னும் எல்லோரும் இருந்தனர். அவர்கள் பேச்சு பெரிய விவாதமாக அமையவில்லை. ஆளுக்கு ஒரு வார்த்தை பேசினார்கள். அது அவர்கள் சொர்க்க லோகத்துக்கு வந்த விதத்தைப் பற்றி!

என்னுடைய இரண்டு கண்களையும் குத்திக் கொண்ட பிறகுதான் கடவுள் கருணை கிடைத்தது - கண்ணப்ப நாயனார்

என் குழந்தையைத் துண்டு போட்டுக் கறி சமைத்து, அதன் தலையை நானும் என் மனைவியுமே இடித்து துவையல் அரைத்து அன்னமிட்டேன். அதற்குப் பிறகுதான் சிவபெருமான் சித்தமிரங்கி என்னை ஆட்கொண்டார்

                               -------------------------------- சிறுத்தொண்டர்

அக்கினியிலே முழுகி தீட்டையெல்லாம் பொசுக்கிக் கொன்றுவிட்டு பொன்மேனியோடு வா என்று தீக்ஷிதர் கனவிலே தீனதயாபரன் சொல்லிவிட்டார். அந்தத் தியாகத்தை நான் செய்த பிறகுதான் தில்லையப்பனின் திருப்பாத தரிசனம் கிடைத்தது.

                                                        ------------------------------------------- நந்தனார்
உடலில் உள்ள சதைகளையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, ரத்தத்தை வடித்துவிட்டு, எலும்பு உருவமாக _ பேய் மாதிரி தலைகீழாக நடந்து வரச் சொன்னார் பீடுடைய பெருமான்! அந்தக் கஷ்டத்திற்கு ஆளான பிறகுதான் கைலாசபதி கடாக்ஷம் பாலித்தார்
              --------------------------------------------------------- காரைக்கால் அம்மையார்

ஆலயங்களில் புல் செதுக்கினேன்; அந்தணராம் திருஞான சம்பந்தரின் பல்லக்குத் தூக்கினேன். அதையெல்லாம் செய்த பிறகுதான் அமரர் உலகம் வர அனுமதி கிடைத்தது, எனக்கு ! 
                     ------------------------------------------------------- அப்பர்

மனிதனுக்கு மானம் பெரிது; அந்த மானத்தை அடகுவைத்து, என் மனைவியை பரமசிவனோடு பள்ளியறைக்கு அனுப்பி வைத்தேன், அந்தத் தியாகத்தின் பரிசாகத்தான் இந்தப் பரமண்டல வாசத்தைப் பரமன் எனக்கு அளித்தார்

                                      --------------------------------- இயற்பகை நாயனார்

என் முழங்கையைச் சந்தனக் கட்டைக்குப் பதிலாக தேய்த்து பகவத் பூசை பண்ணினேன். அதன் பலன்தான் எனக்குச் சொர்க்கலோகம்

                                         ------------------------------------ மூர்த்திநாயனார்

அப்பப்பா! இந்த லோகத்திற்கு வர எத்தனை பேரைக் கொலை செய்திருக்கிறேன் தெரியுமா? சிவனைத் தூஷித்தவர்களையெல்லாம் மழுவால் வதைத்துக் கொன்று போட்டேன். அந்தப் பிணங்களையெல்லாம் பிறை சூடும் பித்தரிடம் காட்டிய பிறகுதான் இந்தப் பேறு கிட்டியது! 

                                      ------------------------------- எறிபத்த நாயனார்

சிவனுக்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைப் பஞ்ச காலத்தில் சாப்பிட்டார்கள் என்பதற்காக.... பக்தியின் காரணமாக என் தாய், தந்தை, என் ஆசை மனைவி மற்றும்... நெல்லைத் தின்ற தாயின் பாலைக் குடித்திருக்கும் என்பதற்காக... என் அன்புக் குழந்தை ஆகியோரைக் கொடுவாளால் வீசிக் கொலைபுரிந்தேன். அதன் பிறகுதான் என் குற்றத்தை மன்னித்து கொன்றையணி செஞ்சடையார் காட்சியளித்தார்

                                                    ----------------------------- கோட்புலி நாயனார்

இப்படிப் பக்தர்கள் தங்கள் தியாகங்களைக் கூறிப் பெருமிதங்கொண்டனர். பெருமூச்சு விட்டனர்.

அப்போது ஒரு திடீர்க் குரல் கேட்டு பேச வாயெடுத்த கண்ணப்பர் நிறுத்திவிட்டார். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். ஒரு வாலிபம் மறைந்த மங்கையின் தோளில் கைபோட்டபடி, ஒரு பூணூல்கார அய்யர் நின்றார். எல்லா பக்த சிரோன்மணிகளும் அவர் வாயைப் பார்த்தபடி இருந்தனர். அந்த அய்யர் பேசினார்; நீங்கள் எல்லாம் மோட்ச லோகம் வர பெரிய பெரிய தியாகம் செய்ததாகப் பெருமையடித்துக் கொள்கிறீர்களே, அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.

சொர்க்கலோகம் வர, சொல்ல முடியாத தொல்லைகள் அனுபவித்ததாகச் சொல்கிறீர்களே. இதோ பாருங்கள், நான் எந்தவிதமான சிரமமும் இன்றி சிவலோகம் வந்திருக்கிறேன். (பக்தர்கள் ஆச்சரியத்தால் திகைத்து விட்டார்கள்)
ஆச்சரியப்படாதீர்கள் அன்பர்களே! இதோ என் மேல் சாய்ந்து கொண்டிருப்பது என் தாய்.
(கோட்புலி நாயனார் குறுக்கிட்டு) உமது தாயாரா?
ஆமாம் என் தாய்! என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், அழகுத் தொட்டிலில் இட்டு ஆராரோ பாடிய தாய். இந்தத் தாயாரை நான் என் தாரமாகக் கொண்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல; பூலோகத்திலேயே இந்த அன்னை என் ஆசை நாயகியாக இருந்தாள். இவள் என்னைத் தொட்டிலில் போட்டு ஆட்டினாள். நான் இவளுக்குக் கட்டிலில் இன்பமூட்டினேன். மாதாவை மனைவி யாக்குவது மகாபாபமல்லவா என்பீர்கள். இதைவிட மகாபாபமாக எங்களை மஞ்சத்தில் கண்டுவிட்ட என் தகப்பனாரை உடனே கொன்று போட்டேன். உனக்கா சொர்க்கவாசல் திறந்தது என்று கேட்கிறீர்களா? ஆமாம்; எனக்குத்தான் சொர்க்கம் சுலபத்தில் வழிவிட்டது. அரகரமகாதேவா என்றேன். அம்மையை அணைத்தபடி அப்பன் ரிடபவாகன ரூபராய் அருள் மழை பொழிந்தான். ஆனந்தமாக சொர்க்க பூமிக்கு வந்துவிட்டேன்.
நாயன்மார்கள் ஸ்தம்பித்து விட்டார்கள். காரைக்கால் அம்மை, இது உண்மையா? என்றார்.

சந்தேகம் வேறா? அய்யமிருந்தால் திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலத்தைப் பாருங்கள் என்றார் அய்யர்.

பாபியாகிய உமக்கு மாத்திரம் இவ்வளவு சுலபத்தில் சொர்க்கலோக வாழ்வு கிடைக்கக் காரணம் என்ன? என்று கேட்டார் சிறுத்தொண்டர்.

இதுதான் காரணம் என்று தன் பூணூலை உருவிக் காட்டினார்


-----------------------------கலைஞரின் குட்டிக்கதைகள் என்னும் நூலிலிருந்து

12 comments:

தமிழ் ஓவியா said...


வாழ்க கலைஞர் பல்லாண்டு-பல்லாண்டு!


மானமிகு சுயமரியாதைக்காரன் என்று என்றும் பெருமையுடன் அழைத்துக் கொள்ளும் பெம்மான், பெரியாரின் குருகுலச் சீடர், அண்ணாவின் அருமைத் தம்பி, லட்சோப லட்சம் உடன்பிறப்புக்களை உயிரினும் மேலாகக் கருதும் பாசமிகு நம் இனத் தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (3.6.2014) 91ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்; அவரது சலியாத உழைப்பு என்ற சரித்திரப் பேரேட்டில் 19 வயது இளைஞரின் போர்க் குணத்தைப் பெறுகிறார் என்று பொருள்.

வெற்றி - தோல்விகள் அந்த லட்சியத் தலைவரைப் பெரிதும் பாதித்ததில்லை.

வயது ஏற ஏற அவரது உழைப்புப் பெருகி, ஓய்வு சுருங்கி, லட்சியப் பயணம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அவரை உருவாக்கிய அறிவு ஆசான் தந்தை பெரியாரும் சரி, அறிஞர் அண்ணாவும் சரி, நீதிக்கட்சிக் காலத்திலிருந்தே, பல தோல்விகளை தேர்தலில் கண்டவர்கள்; ஆனால் லட்சியப் பாதையில் அவர்கள் வெற்றியே கண்டிருக்கிறார்கள்.

மதவாத, ஜாதி வெறி சக்திகள் புதுப் பாய்ச்சலுடன் விடுக்கும் அறைகூவலை ஏற்று, களங்காண ஆயத்தமாக வேண்டிய கால கட்டத்தில்,

கலைஞரின் புத்தாக்கம் தி.மு.க.விற்கு மட்டுமல்ல; திராவிடர் சமுதாயத்திற்கே தேவை என்பதால், நம் கலைஞர் அவர்கள் நூறாண்டுக்கு மேலாக, நல்ல உடல் நலத்தோடு வாழ்ந்து, என்றும் நம் சமுதாயக் கலங்கரை விளக்க வெளிச்சமாகி, தொண்டறப் பணிகளைத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறது அவர் தம் தாய்க் கழகம்.

வாழ்க கலைஞர் பல்லாண்டு - பல்லாண்டு!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

முகாம்: கொலோன் பல்கலைக் கழகம் கொலோன் நகர் ஜெர்மனி

நாள்: 3.6.2014

Read more: http://viduthalai.in/headline/81450-2014-06-03-07-39-04.html#ixzz33aQ0zoDl

தமிழ் ஓவியா said...


ஜூன் 3

இந்நாள் - திராவிடர் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ்நாட் டின் வரலாற்றிலும் ஒரு முக்கிய கல்வெட்டைப் பிரசவித்த பொன்னாள்! கலைஞர் பிறந்த நாள் (1924) என்றாலும் அந்நாள் எத்தகையது!

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜாதிகளைக் கடந்து சமயங்களைப் புறந்தள்ளி, மொழி உணர் வால் ஓரினம் என்ற தமிழினக் கோட்பாட்டை உணர்ச்சிப் பொங்க உரு வாக்கிய ஒரு போராட் டம் உண்டு என்றால் அது 1938 இந்தி எதிர்ப் புப் போராட்டமாகும்.

சக்ரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோது, பள்ளிகளில் இந்தித் திணிப்பை அறிவிப்பு செய்தார் (10.8.1937).

தந்தை பெரியார் தலைமையில் தமிழினம் பொங்கி எழுந்தது. சமஸ் கிருதத்தைப் படிப் படியாகப் புகுத்தவே இந்தியைக் கொண்டு வருகிறேன் என்று பச்சையாக சென்னை இலயோலா கல்லூரியில் பேசினாரே!

ஆம், பூனைக்குட்டி வெளியில் வந்தது - சும்மா இருப்பாரா சுய மரியாதைச் சூரியன் தந்தை பெரியார்?

தோள் கட்டி, தொடை தட்டி போர்க் குரல் எழுப் பினார் அதன் விளைவு இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களுக்காக சிறைச் சாலை கதவு முதன் முதல் திறந்த நாள் தான் இந் நாள் (1938).

இந்நாளில்தான் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு - தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில்.

இந்தி ஒழிய வேண் டும் அல்லது நான் ஒழிந்து போக வேண்டும் என்று பல்லடம் பொன்னு சாமி என்ற தோழர் பிரதம அமைச்சர் ஆச்சாரியா ரின் வீட்டு முன் பட்டி னிப் போராட்டம் நடத் தினார். அந்தக் காரணத் துக்காகவும் இன்றுதான் (ஜூன் 3 -1938) சிறைக் கொட்டடியில் தள்ளப் பட்டார்.

மறைமலை அடிகள் தலைமையில் கோடம் பாக்கம் மாநாட்டுக்கு இந்தத் தகவல் கிடைத் தது தான் தாமதம், மாநாடு - ஊர்வலமாக உருப் பெற்றது.

பிரதமர் ராஜாஜி வீட்டுமுன் களம் அமைக் கப்பட்டது முழங்கினர் தலைவர்கள் சி.டி. நாய கம் (இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரி) காஞ்சி மணிமொழியார் சாமி சண்முகானந்தா ஆகியோர் இரவு 12 மணி வரை முழங்கினர். முடி வில் அவர்களும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இந்தி எதிர்ப்புக்காக அன்று திறந்த சிறைச் சாலை 21.2.1940 இல் தான் முற்றுப் பெற்றது. இந்த நாளை மறக்கத்தான் முடியுமோ!

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/81456.html#ixzz33d3hUvFk

தமிழ் ஓவியா said...


கலைஞர் பிறந்த நாள் சிந்தனை எது?

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ் நாடெங்கும் இன்று கொண்டாடப்படு கின்றது. அந்த வாழ்த்துக்களோடு நாமும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார்கள். குறிப்பாக நடந்து முடிந்த 16ஆம் மக்களவைத் தேர்தல் குறித்தும், சிறப்பாக தேர்தல் குறித்தும், முக்கியமாக தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்தது குறித்தும் கருத்துக்களும், தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

நடந்து முடிந்த தேர்தலில் மாநில அரசின் அத்துமீறல்கள், தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்புப் போக்கு, ஊடகங்களின் நடு நிலை பிறழ்ச்சி, வாக்குகள் விலைப் பேசப்பட்டது பற்றியெல்லாம் பலரும் பேசியுள்ளனர்.

கலைஞர் பிறந்த நாள் விழா நாடு தழுவிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதில் காணப்படும் மக்கள் திரள் இளைஞர்கள் எழுச்சி - தேர்தல் முடிவுகளால் திமுக துவண்டுப் போய் விடவில்லை என்பதை வெளிப்படுத்தியிருப்பது நல்லதோர் அறிகுறியாகும்.

இதற்கு முன்பும் கூட திமுக இத்தகைய தோல்வி களைச் சந்தித்ததுண்டு. அதற்குப் பிறகு புதுச்சேரி யையும் சேர்த்து 40க்கு 40 இடங்கள் வெற்றி பெற்றி ருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தேர்தல் தோல்வியையே அறியாதவர் என்று கணிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் அ.இ.அ.தி.மு.க. 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் தோற்று இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதுண்டு.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே அடிக் கட்டுமானமுள்ள கட்சி அமைப்பைக் கொண்டதாகும். அதன் காரணமாகத்தான் 13 ஆண்டுகள் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இழந்த நிலையில் மீண்டும் ஆட்சி லகானைப் பிடித்தது.

அதே நேரத்தில் 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப் பீடத்துக்கு வர முடியவில்லை. தி.மு.க. நிலையோ முற்றிலும் வேறானது.

இந்த நேரத்தில் முக்கியமாக எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்தொன்றுண்டு. திமுக ஆட்சிக்கும், மற்ற கட்சி ஆட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாலைகள் போடுவார்கள்; தெரு விளக்குகளைப் போடுவார்கள் - பாலங்களைக் கட்டத்தான் செய்வார்கள்.


தமிழ் ஓவியா said...

இவற்றையெல்லாம் கூட வேறு எந்த ஆட்சியிலும் நடக்காத அளவுக்குப் பெரிய அளவில் சாதித்துக் காட்டிய தி.மு.க ஆட்சி - வேறு எந்த அரசியல் கட்சிக் கும் இல்லாத தந்தை பெரியார் அவர்களின் சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகள் கொண்டதால் இந்தியா விலேயே வேறு எங்கும் சாதிக்கப்படாதவற்றைத் தனித் தன்மையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களை எடுத்துக் கொள்ளலாம்; ஜாதி மதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று கருதி, பொருத்தமாக தந்தை பெரியார் பெயரை அதற்குச் சூட்டிய பெரு மகன்தான் மானமிகு கலைஞர்அவர்கள். தமிழுக்குச் செம்மொழித் தகுதி, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, சமூக சீர்திருத்தத்துறை - என்ற வரிசையில் சீர் தூக்கிப் பார்க்கட்டும்; கலைஞர் அவர்களின் பக்கத்தில் வந்து நிற்கும் தகுதிகூட வேறு யாருக்கும் கிடையாதே!

இன்னும் சொல்லப் போனால் இது போன்ற சிந்தனை இல்லாததோடு மட்டுமல்ல; கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டங்களை பலவீனப்படுத்தும் மனப்போக்கும் அத்திட்டங்களை மேலே வளர்க்கும் மனமற்ற போக்கும்தான் இன்றைய மாநில ஆட்சியில் பச்சையாகத் தெரிகின்றன.

நியாயமாக இப்படி நடந்து கொண்டதற்காக அ.இ.அ.தி.மு.க.வுக்கு நடந்து முடிந்த தேர்தலில் நாட்டு மக்கள் சரியான பாடத்தைப் போதித்திருக்க வேண்டும்;

நடந்து இருப்பதோ தலை கீழ்!

இந்த நேரத்தில் இதுபற்றிதான் சிந்திக்க வேண்டும்.

கலைஞர் ஆட்சியின் தனித்தன்மையான சாதனைகள் மக்களைச் சென்றடையவில்லையா அல்லது கலைஞர் ஆட்சியின் சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்களை முடக்கிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் பிற்போக்கான நடவடிக்கைகள் மக்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா? என்பது தான் முக்கியமான வினாவாக இருக்க முடியும்.

இதில் ஊடகங்களின் நடுநிலை தவறிய ஒரு சார்புக்கு முக்கிய இடம் உண்டு. இன்னொரு காரியத் தையும் இந்த ஊடகஙங்கள் செய்தன. தேர்தல் நெருங்க நெருங்க - திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு வளர்ந்து வருகிறது என்ற தொனியில் செய்திகளைக் கசிய விட்டதுகூட ஆளுங் கட்சிகளை மறைமுகமாக விழிப்படையச் செய்யும் தந்திரமே!

நிலையைப் புரிந்து கொண்ட ஆளும் கட்சியோ தேர்தல் ஆணையத்தைக் கையில் போட்டுக் கொண்டு வாக்குகளை விலை பொருளாக்கி விட்டது.

வாக்குகள் வாங்கப்பட்டன. பணப் பட்டுவாடா நடைபெற்றதைத் தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையமே வெட்கமின்றி ஒப்புக் கொண்டதே.

முத்தமிழ் அறிஞர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டி ருக்கும் அதே வேளையில், ஆக்க ரீதியான சிந்தனை கள், செயல் திட்டங்களுக்கு அடுத்தடுத்துத் தேவைப் படுகிறார்.

கலைஞர். - அவர்களின் பிறந்த நாள் விழாவின் சிறப்பு என்பது இதில் நாம் பெறும் வெற்றியைப் பொறுத்ததாகும்.

Read more: http://www.viduthalai.in/page-2/81468.html#ixzz33d4357m6

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

பொன்னார் மேனி யன் (சுந்தரர்)

சுடலைப் பொடி நிறத் தவன் (சம்பந்தர்)

பவளம் போல் மேனி யன் (அப்பர்)

- சிவனைப் பற்றி அடி யார்கள் இப்படிப் பாடி வைத்துள்ளார்களே - ஒரு ஆசாமி எப்படி இத்தனை நிறம் உடைய வனாக இருக்க முடியும்? பச்சோந்தியோ!

Read more: http://www.viduthalai.in/e-paper/81463.html#ixzz33d4lTMKZ

தமிழ் ஓவியா said...


தமிழர்கள் தன்மானம் உள்ள தமிழர்களாக வாழவேண்டும்! - கலைஞர் பேட்டி -


சென்னை, ஜூன் 4- தமி ழர்கள் தன்மானம் உள்ள வர்களாக வாழவேண்டும் - இதுதான் தனது பிறந்த நாள் செய்தி என்றார் கலைஞர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், தமது பிறந்தநாளில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் நினைவிடங் களுக்குச் சென்று மரி யாதை செலுத்திய பின்னர், அண்ணா அறிவாலயத்திற் குப் புறப்பட்டார்.

அப்போது செய்தியா ளர்களுக்கு தி.மு.க. தலை வர் கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:- பிறந்தநாள் செய்தி

செய்தியாளர்: 91 ஆவது பிறந்தநாள் காணும் தாங்கள், தங்கள் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியாக தெரி விக்க விரும்புவது என்ன? கலைஞர்: தமிழர்கள் தன்மானம் உள்ளவர் களாக, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதே தமிழர்களுக்கு நான் வழங்கு கின்ற பிறந்தநாள் செய்தி.

இன்னும் தொடர்கிறது

செய்தியாளர்: 91 ஆவது வயதில் இன்று நீங்கள் அடியெ டுத்து வைக்கிறீர்கள். உங்களுடைய கனவு, நீங்கள் கண்ட கனவு, அரசியல் வாழ்க்கையில் நிறைவேறியதாக நினைக்கிறீர்களா?
கலைஞர்: என்னுடைய கனவு என்பது, இன்னும் தொடர்கிறது.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81519.html#ixzz33ilWtQaw

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பார்த்தால் முருகன் முகம் பார்க்கவேண்டும் - அவன் பாராத போதும் மெல்லப் பார்க்கவேண்டும்.

- ஒரு சினிமா பாடல் முருகன்தான் ஆறு முகன் ஆயிற்றே!
எந்த முகத்தைப் பார்ப்பதுவோ

Read more: http://www.viduthalai.in/e-paper/81518.html#ixzz33ilguBdv

தமிழ் ஓவியா said...


இது நாடா? காடா? பெண் நீதிபதிமீதே பாலியல் வன்முறை

லக்னோ, ஜூன் 4- உ.பி. யில் பொதுமக்களுக்குத் தான் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமாறி நீதிபதி களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதி கரித்துள்ளன.

படானில் இரண்டு தாழ்த் தப்பட்ட சிறுமி கொடூர கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு மரத் தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்விவகாரம் நாடு முழு வதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாலியல் வன் முறை சம்பவங்கள் நடை பெற்ற வண்ணம் உள்ளன. இந்நிலையில் அலிகாரில் பங்கஜ் குப்தா, கோபால் குப்தா ஆகிய இருவர், பெண் நீதிபதியை பாலியல் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவரைக் கடுமையாக தாக்கிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ள னர் என்று காவல்துறை யினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். பெண் நீதிபதி தனது அரசு வீட்டில் கடந்த திங்கள் கிழமை அன்று நினைவின்றி பலத்த காயத்துடன் காணப்பட் டுள்ளார்.

இது தொடர்பாக அம் மாநில காவல்துறை அதி காரி நிதின் திவாரி செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில், பாதிக்கப் பட்ட பெண் நீதிபதியின் சகோதரர் கொடுத்த புகா ரின்படி பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது வரையில் எந்த மருத்துவப் பரிசோதனையும் நடத்தப் படவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்ட பெண் ணின் சாட்சியத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதி அங்குள்ள மருத் துவமனையில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்ற வாளிகளை தேடும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81520.html#ixzz33ilqLKNC

தமிழ் ஓவியா said...


புரட்சியின் நோக்கம்


எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக. இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணரவேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும்.

_ (குடிஅரசு, 23.12.1944)

Read more: http://www.viduthalai.in/page-2/81522.html#ixzz33imFIFih

தமிழ் ஓவியா said...

பிறந்த நாளா? புத்துணர்வு பிறந்த நாளா?

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை - இலட்சக்கணக்கானவர்கள் நிரம்பி வழிய நடைபெற்றது.

தேர்தலில் கடுந்தோல்வியைச் சந்தித்த ஒரு கட்சி, அக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளை மய்யப்படுத்திக் கிளர்ந்து எழுந்திருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்தப் பிறந்த நாள் விழா அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். இயல்பாக வேறு எங்கும் காண முடியாத அதிசயம்தான் இது.

வெறும் அரசியல் கட்சியாக மட்டுமே தி.மு.க. இருந்திருந்தால், அரசியல் லாபம் கிடைக்கும் கட்சிகளின் மடிகளில் போய் விழுந்திருப்பார்கள். காற்றடிக்கும் பக்கம் பறந்தே போயிருப்பார்கள்.

தி.மு.க.வில் ஏனிந்த நிலை ஏற்படவில்லை என்பதற்கு தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகனார் அவர்கள் அக்கூட்டத்தில் சொன்ன அந்தக் கருத்துத்தான் சரியானதாக இருக்க வேண்டும்.

வெறும் அரசியல் கட்சி என்பதையும் கடந்து சமுதாய கொள்கைகள் இதற்கு இருப்பதே காரணமாக இருக்க முடியும்; தானும், கலைஞர் அவர்களும் சிறு வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கொள்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால், அவற்றில் இந்த வயதிலும் உறுதியாக இருக்கிறோம்; அந்தத் தத்துவம் மேலும் தேவை என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று இனமானப் பேராசிரியர் அவர்கள் அழுத்தமாகத் தெரிவித்ததும், அதனை வழிமொழிகின்ற வகையில் கலைஞர் அவர்கள் மேலும் அழுத்தம் கொடுத்துப் பேசியதும் இராயப்பேட்டைக் கூட்டத்தின் தனி முத்திரையாகும். இலட்சக்கணக்கான அளவில் கூடிய அந்தக் கூட்டத் தில் இளைஞர்களுக்குப் பஞ்சமில்லை. இரு தலைவர் களும் எடுத்து வைத்த அந்தக் கருத்துகள், அந்த இளை ஞர்களைப் பெரிய அளவில் பாதித்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

தி.மு.க. நடத்தும் எந்தப் பொதுக்கூட்டத்திலும் இந்த அடிப்படை இலட்சியக் கோட்பாடுகள் எடுத்துச் சொல்ல சொல்லத்தான் தி.மு.க.வுக்கு அப்பாற்பட்ட தமிழின இளைஞர்களைப் பெரிதும் ஈர்க்கும்.

இன்றுள்ள சிக்கலோ இந்த அடிப்படை கருத்துகள் சமூகநீதித் தகவல்கள் இளைஞர்களிடத்தில் போதிய அளவில் போய்ச் சேரவில்லை என்பதுதான்.

சமூகநீதிச் சித்தாந்தத்தின் அடிநீரோட்டத்தை அவர்கள் தெரிந்திருந்தால், நீயா, நானா? நிகழ்ச்சிகளில், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முதலில் ஒழியவேண்டும்? என்று பேசுவார்களா?

தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சி ஒரு சட்டம் கொண்டு வருகிறது; அந்த ஆட்சி தோற்கடிக்கப்படுகிறது; அந்தச் சட்டத்தை ரத்து செய்து மீண்டும் புராண மூடத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் வருஷங்களை அனுமதிக்கிறது அ.தி.மு.க. அரசு; இதுபற்றிய சரியான புரிதல் நம் இன மக்களுக்கு, இளைஞர்களுக்கு இருந்திருக்குமேயானால், எவ்வளவுப் பெரிய போராட்டம் வெடித்துக் கிளம்பி இருக்கவேண்டும்? பார்ப்பனீய சிந்தனையோடு ரத்து செய்த ஆட்சிக்கு வாக்குச் சீட்டுமூலம் பாடம் கற்பித் திருக்கவேண்டுமே! அது நடக்கவில்லை என்கிறபோது, திராவிடர் இயக்கத்தின் பகுத்தறிவு, இனமானக் கருத்துகள் இந்தப் புதிய வரவு வாக்காளர்களுக்குக் கொண்டு செல்லுவதுபற்றித்தானே சிந்திப்பது சரியாக இருக்க முடியும்!

தேர்தல் தோல்விக்கான காரணங்களில் இத்திசைக் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை.

தமிழ் ஓவியா said...

இராயப்பேட்டைக் கூட்டத்தில் விழா நாயகர் கலைஞர் அவர்கள் நமது நாட்டு ஊடகங்கள்பற்றி எடுத்துச் சொன்ன கருத்துகள் முக்கியமானவை.

ஏடுகள் ஒரு சார்பு நிலையை ஏன் எடுக்கவேண்டும்? வெளிப்படுத்தவேண்டிய தகவல்களை ஏன் இருட்டடிக்கவேண்டும்? என்ற நியாயமான வினாவை ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் கேட்கிறேன் என்று கலைஞர் கேட்டாரே - இதற்கு நேர்மையான பதில் அளிக்கும் அறிவு நாணயம் நம் நாட்டு ஊடகங் களில் கிடையாது என்பது வெட்கக்கேடே!

ஆட்சி அதிகாரத்திற்கு அஞ்சுவது, விளம்பர வருமானத்திற்குத் தாள் பணிவது என்று ஆகிவிட்டால், பத்திரிகைகளின் நோக்கம் என்பதே - அதன் ஆளுமை என்பதே அறவே அறுபட்டு விழுந்த பட்டமாகிவிட்டது என்றே பொருள்!

மூன்றாவதாக தி.மு.க. தலைவர் என்ற முறையில் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்ன கருத்து கட்சி அமைப்பு முறையில் மாற்றங்கள் வரும் - கூர்தீட்டப்படும் - புதுப் பொலிவோடு புதுப் புனலாகப் பொங்கி வரும் என்பதாகும்.

எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிப்பு, சீரமைப்பு, தேவைப்பட்டால் களை எடுப்பு என்பதெல்லாம் - வேளாண்மையில் கடைப்பிடிக்கும் யுக்தி போன்றவையே!

சுருக்கமாகச் சொன்னால், மக்களவைத் தேர்தல் தோல்வி என்பது தி.மு.க. தீரத்துடன் போர் வீரனாக முகிழ்த்து எழுவதற்குக் காரணமாகிவிட்டது என்று கருத இடம் இருக்கிறது.

இதற்குக் கட்சித் தலைவர் அவர்களின் பிறந்த நாள் அமைந்தது - வேறு எந்த கட்சியிலும் நினைத்துப் பார்க்க முடியாதே!
தொடரட்டும் நன்முயற்சிகள்!

Read more: http://www.viduthalai.in/page-2/81523.html#ixzz33imSMIHc

தமிழ் ஓவியா said...


சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல் எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?


ஈழத்தில் வாழும் எம் உறவுகளின் வாழ்வு, வளம், எதிர்காலம் எல்லாமே எமது இறுதிப் போராட்டமான அரசியல் போரில்தான் தங்கியிருக்கிறது. ஆனால். அய்ந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த எமது அரசியல் போரை அதன் அந்தத்திற்கு எடுத்துச் செல்ல வல்ல பலர் எம்மிடையே இருந்தும், தேவைக்கும் அதிகமான ஆதாரங்களை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருந் தும், சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல், எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?

சிங்கள அரசின் அடிதடிகளுக்கு மத்தியிலே, காலிமுகாம் திடலிலே, காந்தி தேசமே பெருமைப்படும் விதத்தில் சத்தியாக்கிரகத்தை நடத்தி அறவழிப் போராட்டத்தின் மகிமையை எடுத்துக் காட்டினோம். வீரம் நிறைந்த செயல் களால், தீரம் செழிந்த பங்களிப்பால் போருக்கு அர்த்தத்தையும், போர் முனைக்கு இலக்கணத்தையும் கொடுத் தோம். ஆனால், ஆண்டுகள் பல சென்றும், எமது அரசியல் போர் செயலிழந்து நிற்பதற்கு யாரப்பா காரணம்?

இன அழிப்பை கொள்கையாகவும், மகாவம்சத்தை மார்க்கமாகவும் கொண்டு ஜனநாயகம் என்ற போர்வையிலே சர் வாதிகார ஆட்சி புரியும் சிங்கள அரசின் மத்தியிலே எமக்காகப் போராடும் தமிழர் கூட்டமைப்பின் தேவைகளை நாம்தானே நிவர்த்தி செய்யவேண்டும். இதனால் தானே, சிங்கள அரசின் கைகளில் தமிழீழம் இருக்கும் வரை அரசியல் போரை அங்கு நடத்துவது சாத்தியமற்றது என உணர்ந்த, தேசிய தலைவர் அதனை வாய்ப்பும், வசதியும் மிக்க புலம்பெயர் மக்களிடம் ஒப்படைத்தார். எமது அரசியல் போரை முன்னெ டுக்க, அதனை முன்னெடுக்கும் அணிக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை. இல்லை யேல், அவர்கள் ஆதரவை, பங்களிப்பை எப்படி எம்மால் பெறமுடியும்? அய்ந்து ஆண்டுகளாகியும், எந்த ஒரு புலம்பெயர் அணியாலும் அந்த அங்கீ காரத்தைப் பெற முடியாதது, சர்வதேசத் தில் இந்த அணிகளுக்குள்ள மதிப்பை யும், அதிலும் மேலாக இவர்கள் திறமை யையும் எமக்கு எடுத்துக் காட்ட வில்லையா? இந்த அங்கீகாரம்; பேரம்பேசி பெறும் உரிமையல்ல, தகுதி வாய்ந்த அணிக்கு சர்வதேசம் வழங்கும் சலுகை, சன்மானம்.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன், அந்த கொடிய நாள்களில், எம் உறவுகளுக்காக; கொட்டும் பனியிலும், ஒரு கையில் பிள்ளையும் மறுகையில் கொடியுமாக இலட்சக்கணக்கில் உலகெலாம் நாம் திரண்டெழுந்தபோது எமக்கு இருந்த, தேச மீட்புக்கான உணர்வும், எம் உறவுகள் மீது நாம் கொண்ட அன்பும், பாசமும் என்றும் மாறாது என்பது உண்மையா னால், வலிமைமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தை மய்யமாகக் கொண்டு, தேசிய தலைவரின் இலட்சியப் பாதை யில் பயணிக்கவல்ல ஓர் அணி, தகுதி வாய்ந்த உறவுகளால், மாற்றாரும் மதிக் கும் விதத்தில், உருவாக்கப்படவேண்டும்.

ஆண்டுக்கு ஓர் மாநாடும், ஒரு இராப் போசனமும் நடத்துவதை இலட்சியமாகக் கொண்டு, அய்.நா. மனித உரிமை சபை மாநாட்டிற்கு பார்வையாளர்கள் செல் வதை தேசமீட்பின் உச்க்கட்டமென ஜாலம் புரியும் இப்புலம் பெயர் அணிகள்; எமது போராட்டத்தின் திசையை மாற்றி சிங்கள அரசின் விருப்பைப் பூர்த்தி செய் வதை நிறுத்தி, திறமைக்கும் விசுவாசத் துக்கும் முதலிடம் கொடுக்கும் புனிதம் நிறைந்த புது அணியில் இணைவதே மேல். தமிழர் கூட்டணியை (TULF) ஆனந்த சங்கரி அபகரித்து தமிழரைத் தலைகுனிய வைக்க முயன்றபோது கலங்கிய தமிழி னம்; தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) உருவாக்கி வானில் வட்டமிடவில் லையா? அறவழிப்போராட்டத்தை வழிநடத்தி உள்நாட்டு மோதலை இலங்கை- இந்திய பிரச்சினையாக்கிய தந்தை செல்வாவின் சிறந்த தலைமை போல், ஆயுதப்போரை அதன் அந்ததுக்கு கொண்டு சென்று இலங்கை- இந்தியப் பிரச்சனையை சர்வதேச விவ காரமாக்கிய எம் காவியத்தின் நாயகன் தேசியத் த்லைவரைப் போல், எமது இறுதிப் போரை முன்னெடுத்து எம் தேசத்தை மீட்க வல்ல ஓர் திறமைமிக்க தலைமையும் எமக்கு வேண்டும்.

எம் இனத்தின் வெற்றியும் தோல்வி யும், எமது எதிரியான சிங்கள அரசின் கையிலல்ல, எம் உறவுகளான உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது. அமைப்புகள், சங்கங்கள், தனியார் அழைக்க தொ.இ: கனடா 416 829 1362.

sivalingham@sympatico.ca

Read more: http://www.viduthalai.in/page-2/81524.html#ixzz33imrKoeW